JL 49.கையில் காசு தங்குமா? தங்காதா?
இரண்டாம் வீட்டின் பலன்
இரண்டாம் வீட்டிற்கு தனஸ்தானம் (House of Finance), குடும்ப ஸ்தானம்
(House of family life), வாக்கு ஸ்தானம் (House of speech) ஆகிய
வேலைகள் உண்டு. ஜாதகத்தில் இரண்டாம் வீட்டிற்கு அதிபதி, அவர்
அமர்ந்த இடம், அந்த வீட்டில் வந்து அமர்ந்த கிரகம், அந்த வீட்டின்
மேல் விழும் நல்ல மற்றும் தீய கிரகங்களின் பார்வை, அம்சத்தில்
இரண்டாம் வீட்டு அதிபதியின் நிலை ஆகிய காரணங்களால் வெவ்வேறு
விதமான பலன்கள் உண்டாகும்.
இரண்டில் சனி இருந்தால் கையில் காசு தங்காது. உத்தியோக ஸ்தானம்
நன்றாக இருந்து நல்ல ஆறு டிஜிட் சம்பளம் வந்தாலும் கையில் காசு
தங்காது (Expense oriented horosocope)
அதேபோல இரண்டில் சனி இருந்தால், குடும்ப வாழ்க்கை அமையாது.
சில அரசியல் தலைவர்களின் ஜாதகத்தைப் பார்த்தால் அது தெரிய வரும்.
அப்படியே எழாம் வீட்டின் காரணமாக நல்ல மனைவி கிடைத்திருந்தாலும்,
அவளை இங்கே விட்டு விட்டு அவன் பொருள் ஈட்ட துபாய் போன்ற
நாடுகளுக்குப் போய்விடுவான். வருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு
இருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று
சொல்ல முடியும்?
அதேபோல இரண்டில் சனி இருந்தால், வாயைத் திறந்தால் சண்டைதான்.
தர்க்கம்தான். அவன் பேசுவது நியாயமாக இருந்தாலும் எப்போதுமே தர்க்கம்
செய்யும் குணத்தால் மற்றவர்கள் அவனை விரும்ப மாட்டார்கள்.
ராகு அல்லது கேது இருந்தாலும் அதே பலன்தான்.
இரண்டாம் வீட்டில் குரு அல்லது சந்திரன் அல்லது சுக்கிரன் போன்ற சுபக்
கிரகங்கள் இருந்தால் மேற்கூறியவற்றிற்கு எதிரான பலன்கள் நடக்கும். கையில்
காசு தங்கும், நல்ல குடும்ப வாழ்க்கை அமையும், நல்ல சொல்வாக்குக்குப்
பெற்றுத் திகழ்வான்.
எல்லாம் பொதுப் பலன்களே - அவரவர் ஜாதகத்தில் வேறு கிரக அமைப்புக்கள்,
பார்வைகள், சேர்க்கைகள் காரணமாக சிலருக்கு பலன்கள் வேறுபடலாம்.
1. இரண்டில் சூரியன் அமர்ந்திருந்தால் - பொருள் சேதம்.
2. இரண்டில் சந்திரன் இருந்தால் - இளம் வயதிலேயே திருமணமாகிவிடும்.
பணக்காரனாக இருப்பான், புத்திசாலித்தனம், செல்வாக்கு இருக்கும்.பெண்களு
டனான கேளிக்கைகளில் நாட்டம் உள்லவனாக இருப்பான்
3. இரண்டில் செவ்வாய் இருந்தால் - கோபக்காரன், வாக்குவாதம் செய்பவன்,
வீணாக செலவு செய்பவன். பூமி லாபம் உண்டு. கண் நோய் உண்டாகும்
4. இரண்டில் புதனிருந்தால் - நல்ல படிப்பாளி, எடுத்த காரியத்தை முடிக்கும்
ஆற்றல் இருக்கும். பணம் சம்பாதிக்கக்கூடியவன். சேர்த்துவைக்கக் கூடியவன்
.
5. இரண்டில் குரு இருந்தால் பணம் வந்து கொண்டே இருக்கும். தர்மங்கள்
செய்பவன். சுகமாக வாழக்கூடியவன்.
6. இரண்டில் சுக்கிரன் இருந்தால் சுகமாக வாழ்பவன். அதிகமான உறவுகளைக்
கொண்டவன். நல்ல மனைவி அமைவாள். வித்தைகள் தெரிந்தவன்.
பெண்களிடம் வசப்பட்டுவிடுபவன்.
7. இரண்டில் சனி இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள்
அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன். கையில் காசு
தங்காது. சம்பளத்திற்கு மேல் செலவாகும். எல்லாத் தீமைகளும் இவனுக்குப்
பெண்களாலேயே உண்டாகும்.
8. இரண்டில் ராகு அல்லது கேது இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது
இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடைய
வன். தயவு தாட்சண்யம் பார்க்க மட்டான். சோம்பல் உடனிருக்கும். மன
சஞ்சலம் உடையவன். சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிப்பான். வயதான
காலத்தில் செளகரியமாக இருப்பான், வாயைத் திறந்தால் சண்டைதான்.
9. இரண்டில் சுபக்கிரகங்கள் சேர்ந்து நின்றால் - பெரும் பணக்காரனாக
இருப்பான். சகல வித்தைகள் தெரிந்தவனாக இருப்பான்.
10. இரண்டில் சுபக்கிரகங்களுடன் - சூரியனும் கூடி நின்றால் - பொருள்
நாசம். கையில் காசு தங்காது.
11. இரண்டில் சுபக்கிரகங்களுடன்- செவ்வாய் கூடி நின்றால் ஞானமும்
(அறிவும்) செல்வமும் உண்டு
12. இரண்டில் சூரியனும், சனியும் கூடி நின்றால், அவன் சம்பதித்தது
மட்டுமல்ல, பரம்பரைச் சொத்தும் சேர்ந்து கரைந்துவிடும்
13. இரண்டில் சுக்கிரனும், குருவும் கூடி நின்றால் நல்ல மனைவி, மக்கள்,
செல்வம் எல்லாம் கூடி வரும்
14. இரண்டாம் இடத்தில் குரு இருந்து அந்த வீட்டிற்கு ஏழில் புதன்
அமர்ந்திருந்தால் பொருள் விரையம் அல்லது நாசம் ஆகும்
15. இரண்டில் சந்திரன் நிற்க உடன், சனி அல்லது ராகு அல்லது கேது
சேர்ந்து நின்றால் தரித்திரம். கையில் காசு தங்காது (Everything will be
drained out)
16. If the second lord is associated with rahu or ketu, the native
will be weak
17. இரண்டிற்கதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்தால்(If the second lord is
placed in the sixth house) அவனுடைய சொத்துக்களைப் பகைவர்கள் -
அவனுடைய எதிரிகள் கைக்கொண்டு விடுவார்கள்.
18. அதற்கு நேர்மாறாக ஆறாம் அதிபதி இரண்டாம் வீட்டில் வந்து
அமர்ந்திருந்தால், எதிரிகளுடைய சொத்துக்கள் இவனுக்கு வந்து சேரும்.
19. கடக லக்கினத்தில் பிறந்தவனுக்கு, சூரியனும், சந்திரனும், சுக்கிரனும்
ஒன்றாகக்கூடி பாவ வீட்டில் இருந்தால் அவன் பிறவிக் குருடனாய்
இருப்பான்.
20. இரண்டாம் வீட்டுக்காரன் சுக்கிரனாகி, அவன் லக்கினாதிபதியுடன்
கூடி மூன்றில் இருந்தால் ஜாதகனுக்குக் கண் நோய் உண்டாகும்
21. இரண்டாம் அதிபனும், புதனும் கூடி ஆறாம் இடத்தில் வலுவாக
அமர்ந்தால் ஜாதகன் ஊமையாக இருப்பான்.
22. இரண்டம் அதிபனும், புதனும் கூடி எட்டிலோ அல்லது பன்னி
ரெண்டிலோ இருந்தாலும் ஜாதகன் ஊமையாகிவிடுவான்
23. இரண்டாம் அதிபதியும், குருவும், சுக்கிரனும் உச்சமடைந்திருந்தால்
ஜாதகன் அதி புத்திசாலியாக இருப்பான்
24. இரண்டிற்குடையவனும், புதனும் உச்சம் பெற்றிருக்க, லக்கினத்தில்
குருவும், எட்டில் சனியும் இருந்தால் ஜாதகன் பெரிய மேதையாக விளங்குவான்.
25. மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்
நின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரிய
செல்வந்தனாக இருப்பான்.
பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை கருதியும் இன்று இத்துடன்
வகுப்பறை நிறைவு பெறுகிறது
(தொடரும்)

Present Sir!
ReplyDeleteNeed to read it again....
Swetha
Present Sir,
ReplyDeleteஎனது இராசி கும்பம். எனக்கு இரண்டாம் வீட்டுக்கதிபதி குரு,ஆனால் அவர் ஜாதகத்தில் சனி,சுக்கிரன்,ராகு,புதன்,சூரியன் ஆகிய ஐந்து கிரகங்களுடன் ஏழாம் வீட்டில் இருக்கிறார். என் கையில் காசு தங்குமா? தங்காதா?.
நன்றி.
உள்ளேன் ஐயா..
ReplyDeleteமேஷ லக்னத்திற்கு 2,7ம் வீட்டின் அதிபதி சுக்கிரன், தன் சொந்த வீடான 7ல் இருந்தால் பலன் எப்படி? மாரகாதிபதியாதலால் நன்மைக்குப் பதில் கெடுதல்களே விளையும் என்று சொல்கிறார்கள்..
ரெண்டாம் வீட்டுக்கு ள்ளே இவ்வளோ விஷயங்கள் இருக்கா?
ReplyDeleteஎனக்கும் கோபாலுக்கும் ஜாதகமே இல்லை. அதனாலெ எதையும் சரிபார்த்துக்க முடியாது(-:
கேக்க விட்டுப்போச்சு. இன்னொரு ச்சின்ன சந்தேகம்.
ReplyDeleteஇந்த ரெண்டாம் வீடுன்றது ஜாதகக்கட்டத்தில் 'ல' க்கு இடப்புறமா வலப்புறமா?
கோச்சுக்காதீங்க ப்ளீஸ்
//துளசி கோபால் said...
ReplyDeleteரெண்டாம் வீட்டுக்கு ள்ளே இவ்வளோ விஷயங்கள் இருக்கா?
//
துளசியம்மா...ஜோதிட கட்டத்தைத்தானே சொல்கிறீர்கள்.
:))
சுப்பையா ஐயா,
ஜோதிட பதிவு என்று தெரியாமல் தலைப்பை பார்த்து வந்துவிட்டேன்.
எனவே
"உள்ளேன் ஐயா"
:)
வருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது
ReplyDeleteஇரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு
இருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று
சொல்ல முடியும்?
என்ன ஐயா? இப்படி சொல்லிட்டீங்களே!! :-))
////Anonymous said...
ReplyDeletePresent Sir!
Need to read it again....
Swetha/////
Okay read it and come again!
/////Sellakrishna said..
ReplyDeletePresent Sir,
எனது இராசி கும்பம். எனக்கு இரண்டாம் வீட்டுக்கதிபதி குரு,ஆனால் அவர் ஜாதகத்தில் சனி,சுக்கிரன்,ராகு,புதன்,சூரியன் ஆகிய ஐந்து கிரகங்களுடன் ஏழாம் வீட்டில் இருக்கிறார். என் கையில் காசு தங்குமா? தங்காதா?.////
ராசி வேறு லக்கினம் வேறு நண்பரே! நான் இப்போது பாடம் எடுத்துக் கொண்டிருப்பது லக்கினத்திலிருந்துதான்
Thangs said..
ReplyDeleteஉள்ளேன் ஐயா..
மேஷ லக்னத்திற்கு 2,7ம் வீட்டின் அதிபதி சுக்கிரன், தன் சொந்த வீடான 7ல் இருந்தால் பலன் எப்படி? மாரகாதிபதியாதலால் நன்மைக்குப் பதில் கெடுதல்களே விளையும் என்று சொல்கிறார்கள்../////
7ல் சுக்கிரன் அமர்ந்து லக்கினத்தைப் பார்ப்பது நல்லதுதானே! மாரகம் எல்லாம் வயசான காலத்தில் பார்க்க வேண்டியது இப்போது ஏன் குழப்பிக்கொள்கிறீர்கள்?
////துளசி கோபால் said..
ReplyDeleteரெண்டாம் வீட்டுக்கு ள்ளே இவ்வளோ விஷயங்கள் இருக்கா?
எனக்கும் கோபாலுக்கும் ஜாதகமே இல்லை. அதனாலெ எதையும் சரிபார்த்துக்க முடியாது(-:///
ஜாதகம் இல்லையென்றால் என்ன? பிறந்த தேதி, நேரம், பிறந்த ஊர் இம்மூன்றும் இருந்தால் Onlineலேயே மென்பொருள்கள் உள்ளன கணித்துக் கொள்ளலாம்
/////துளசி கோபால் said...
ReplyDeleteகேக்க விட்டுப்போச்சு. இன்னொரு ச்சின்ன சந்தேகம்.
இந்த ரெண்டாம் வீடுன்றது ஜாதகக்கட்டத்தில் 'ல' க்கு இடப்புறமா வலப்புறமா?///
இடப்புறம் - Clock wise direction
///கோச்சுக்காதீங்க ப்ளீஸ்///
உங்ககிட்டப் போய் கோவிச்சுக்க முடியுமா என்ன? அப்புறம் கொத்தனார் வந்து நாலு சாத்து சாத்திடமாட்டாரோ?:-)))))
////வடுவூர் குமார் said...
ReplyDeleteவருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு
இருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று
சொல்ல முடியும்?
என்ன ஐயா? இப்படி சொல்லிட்டீங்களே!! :-))////
உங்களுக்கு அதில் மாற்றுக் கருத்து உண்டா? இருந்தால் சொல்லுங்கள்
ஐயா,
ReplyDeleteசிம்ம லக்கினத்தில் இரண்டாம் வீட்டில்(கன்னி) சுக்கிரனும் ராகுவும் சேர்ந்திருப்பதற்கு என்ன பொருள். சுக்கிரன் நீசம் அடைந்திருப்பதாலும் ராகுவுடன் கூடியிருப்பதாலும் தீமையா?
மன்னிக்கவும் வாத்தியாரே! எனக்கு லக்கினமும் இராசியும்(சந்திரனும்) கும்பத்தில்தான் இருக்கிறது. இதனால் தான் எனது இராசி கும்பம் என்று குறிப்பிட்டிருந்தேன். எனது சந்தேகம் என்வென்றால் எனக்கு ஏழாம் வீட்டில் சனி,குரு,புதன்,ராகு,சுக்கிரன்,சூரியன் ஆகிய ஆறு கிரகங்களும் லக்கினத்தில் சந்திரன்,கேது ஆகிய கிரகங்களும் இருக்கின்றன். ஆகவே ஒரே வீட்டில் ஆறு கிரகங்கள் இருந்தால் எந்த கிரகத்தைக்கொண்டு பலன் கணிப்பது என்று குழப்பமாக இருக்கிறது.
ReplyDelete// If the second lord is associated with rahu or ketu, the native
ReplyDeletewill be weak//
இரண்டின் அதிபதி ராகு கேதுவுடன் இருந்தால் - இரண்டாம் வீட்டில் இருந்தாலா? அல்லதி எங்கு சேர்ந்து இருந்தாலுமா?
if nothing there in the 7th house what is effect. Both 2nd and 7th are empty then what is the effect?
ReplyDeletesorry typing it from work.
Sir,
ReplyDeleteMy Lagna is Mithunam along with Rahu. There is no planet in the 2nd house. what is the effect?
Please let me know.
Regards,
G Srinath
அவளை இங்கே விட்டு விட்டு அவன் பொருள் ஈட்ட துபாய் போன்ற
ReplyDeleteநாடுகளுக்குப் போய்விடுவான். வருடத்தில் ஐந்து நாட்கள் அல்லது
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பத்து நாட்கள் ஊருக்கு வந்து மனைவியோடு
இருந்து விட்டுப்போவான். அதை எப்படி சிறந்த குடும்ப வாழ்க்கை என்று
சொல்ல முடியும்?
இரண்டாம் முறையாக வரும் போது இதையும் சேர்க்கவேண்டியதாகிவிட்டது.இப்ப நிலமை அப்படியுள்ளது.
மாற்று கருத்தா? அப்படியெல்லாம் இல்லை.இயல்பாக இருப்பது ஒத்துப்போகிறது.அவ்வளவு தான்.
///Mr.G.Srinath said:
ReplyDeleteMy Lagna is Mithunam along with Rahu. There is no planet in the 2nd house. what is the effect?
Please let me know.
Regards,
G Srinath ///
No planet in the 2nd house is single point. There are many factors for a house to decide the outcome
Which is your lagna?
which is your second lord ?
where is he in the horoscope?
who is associated with him?
what is his position in the navamsa?
who are aspecting the second house?
whether they are benefic planets or malefic planets?
Like this so many factors are there for a house.
Please read my previous posts (So for 55 posts)
Regards
SP.VR.Subbiah
Sir,
ReplyDeleteI was reading the lesson on 2nd house. Here are 2 points that came up which are seemingly contradictory.
1. இரண்டில் சனி இருந்தால், குடும்ப வாழ்க்கை அமையாது.
2. இரண்டில் சனி இருந்தால் - இரண்டு விவாகம் அல்லது இரண்டு குடும்பங்கள் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பெண்ணுடன் தொடர்புடையவன்.
இந்த இரண்டும் ஒன்றுகொன்று முரணா இருக்கே?
Does this imply Sani has the power to give both characteristics? If so how?
Thanks
Diwakar
////இந்த இரண்டும் ஒன்றுகொன்று முரணா இருக்கே?
ReplyDeleteDoes this imply Sani has the power to give both characteristics? If so how?
Thanks
Diwakar////
வாலியம், காம்போஸ் போன்ற தூக்கமாத்திரைகள் ஒன்று அல்லது இரண்டு சாப்பிட்டால்
நன்றாகத் தூங்கலாம். அதே மாத்திரையை பத்து அல்லது பதினைந்தைச் சாப்பிட்டுவிட்டுப்
படுத்தால் மருத்துவமனைக் கொண்டுபோய் முதல் உதவி அளித்துத்தான் நம்மை எழுப்பமுடியும்.
அதையே ஐம்பது அல்லது அறுபது மாத்திரை சாப்பிட்டவனை யாராலும் எழுப்ப முடியாது.
மேலே போயிருப்பான்.
அதுபோலத்தான் சனியும். இரண்டாம் வீட்டில் அமரும்போது அதன் தன்மை என்ன
என்பதைப் பொறுத்துப் பலன்கள் மாறும். அந்த லக்கினத்திற்கு - அதாவது அந்த ஜாதகனுக்கு
அவன் லக்கினதிபதி என்றால் ஒரு பலன் ஆறாம் வீட்டிற்கு உரியவன் என்றால் ஒரு பலன்,
அதுவே அவன் 12ம் வீட்டிற்கு உரியவன் இரண்டில் வந்து அமர்ந்து விட்டான் என்றால்
பலன் வேறு!
விளக்கம் போதுமா?
Sir,
ReplyDeleteவிளக்கத்திற்கு நன்றி.
இந்த விளக்கப்படி பார்த்தால் பொது விதிகள் பல நேரம் வேலை செய்யாது போல் இருக்கிறதே!!!
ஒன்று மட்டும் நன்றாகப் புரிந்தது.
லக்னப் பாடத்தில் நீங்கள் சொல்லியது போல "You should not jump to any conclusion by seeing a single rule. The houses are to be judged by various factors which will be taught one by one".
Thanks again,
Diwakar
வாத்தியாரே..
ReplyDeleteசனி இரண்டாம் வீட்ல எத்தனை வருஷம் குடியிருக்கும்..?
எனக்கு 20 வருஷமா அதே வீட்ல உக்காந்திருக்கிற மாதிரி பீலிங்..
உள்ளேன்:)
ReplyDeleteபயனுள்ள பாடம்.
நன்றி சுப்பையா சார்.
///உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ReplyDeleteவாத்தியாரே..
சனி இரண்டாம் வீட்ல எத்தனை வருஷம் குடியிருக்கும்..?
எனக்கு 20 வருஷமா அதே வீட்ல உக்காந்திருக்கிற மாதிரி பீலிங்..////
Transit Saturn (கோச்சார சனி அல்லது சுற்றிவரும் சனி ஒரு வீட்டில் அல்லது ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருக்கும். ஒரு சுற்று முடிப்பதற்கு சுமார் 29 வருடங்களும் 6 மாத காலமும் பிடிக்கும். அதன் பலன்களைப் பற்றி விரிவாகப் பிறகு ஒரு பதிவு இடுகிறேன் உண்மைத்தமிழ் அன்பரே!
வல்லிசிம்ஹன் said...
ReplyDeleteஉள்ளேன்:)
பயனுள்ள பாடம்.
நன்றி சுப்பையா சார்.///
தாய்க்குலத்திற்கு வருகைப் பதிவேடு கிடையாது. சலுகை உண்டு. அவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் வகுப்பறைக்கு வந்து செல்லலாம்:-))))
//மூன்று, அறு, எட்டு, பதினொன்று ஆகிய வீடுகளில் பாவக் கிரகங்கள்
ReplyDeleteநின்று அவை லக்கினத்தைப் பார்க்காமல் இருந்தாலே ஜாதகன் பெரிய
செல்வந்தனாக இருப்பான்.
லக்னத்தை நோக்கி பார்க்கின்றது என்பது தான் எனக்கு புரியவில்லை. இப்போது தான் உங்கள் பழைய பதிவுகள் ஒவ்வொன்றாக படித்து அதில் வரும் பின்னூட்டங்களையும் படித்து வருகிறேன்