மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.4.07

நிமித்தக்காரன் (Soothsayer) ஜோதிடம் பகுதி 25



================================================
நிமித்தக்காரன் (Soothsayer) ஜோதிடம் பகுதி 25

எதிர்காலத்தைக் கணித்துச் சொல்பவர்களை
நிமித்தக்காரர்கள் (Fortune Teller) என்பார்கள்

சில சரித்திரக்கதைகளில் படித்திருக்கிறேன்

இந்த நிமித்தக்காரர்கள் தங்களுடைய ESP
சக்தியால் நடக்க இருப்பதை உணர்ந்து
சம்பந்தப்பட்டவர்களை வரப்போகும் கேடு
குறித்துக் குறிப்பால் எசசரிப்பார்கள்.

அவர்கள் எச்சரிப்பதால் நடக்க இருப்பது
நடக்காமல் இருக்காது. அதுதான் விதி என்பது

கவியரசர் கண்ணதாசன் அவர்கள்கூடச்
சொல்வார்," எது உன்னைக் கேட்டு நடப்ப
தில்லையோ அதன் பெயர்தான் விதி.
ஆகவே விதிக்கப்பட்டது நடந்தே தீரும்.
அது உன் கையை மீறிய செயல் என்னும்
போது அதைப் பற்றி நீ கவலைப்பட்டு என்ன
பயன்? ஆகவே கவலையை விட்டொழி."

ஆனால் நம் பாழாய்ப்போன மனசு சும்மா
இருக்கிறதா?

தேவையில்லாத விஷயத்திற்குகூட
கவலைப் பட்டுக்கொண்டே இருக்கும்

அதுபோல நிமித்தக்காரன் ஒருவன்
BC 44ம் ஆண்டில் இருந்தான்.

அந்த நிமித்தக்காரனுக்கு தன் நாட்டு
மன்னர் ஜூலியஸ் சீசரின் வாழ்வில்
ஒரு மாதத்திற்குள் நடக்க இருக்கும்
அசம்பாவிதம் மனத்திரையில் தெரிந்தது.

ஜூலியஸ் சீசரைப் பற்றித் தெரியாதவர்கள்
இருக்கமுடியுமா என்ன?

சீசர் தான் வாழந்த காலத்தில் ரோமாபுரியைப்
பேரரசாக மாற்றியவர் அதாவது வல்லரசு
நாடாக மாற்றியவர். அவரின் புகழ் நாளுக்கு
நாள் பெருகியது.

எப்பொழுதுமே கால வித்தியாசங்கள் இன்றி,
பொறாமை, போட்டி ,நயவஞ்சகம், துரோகம்
என்று பல கீழ்த்தரமான வேலைகளைச்
செய்வதற்கு என்று ஒரு கூட்டம் காத்துக்
கொண்டு இருக்குமே - அப்படியொரு கூட்டம்,
சீசருக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டியது.

சீசரைப் போட்டுதள்ளுவது என்று முடிவு
செய்து அதற்குரிய இடத்தையும், நாளையும்
முடிவு செய்தது அந்தக் கூட்டம்.

அவர்கள் தேர்வு செய்தது நாட்டின்
பாராளுமன்ற வளாகம் (Senate) தேதி 15.3.44 BC

(44 years before the birth of Jujus Christ)

இதுவும் அந்த நிமித்தக்காரனின் மனத்திரையில்
அந்த பாதகச்செயல் நடக்குமுன்பே தெரிந்தது.

அது குறித்து சீசரிடம் எச்சரிக்கை செய்வது
என்று முடிவு செய்தான்.

அவனோ செருப்புத்தைக்கும் கூலித் தொழிலாளி.
சீசரின் மாளிகைக்கோ அல்லது செனேட்
வளாகத்திற்கோ சென்று அவன் எப்படி
அவரைப் பார்க்க முடியும்?

அதனால் சீசர் தினமும் செனேட்டிற்குக்
குதிரையில் செல்லும் வழியில் தன்னுடைய
சிறு கடையை விரித்து உட்கார்ந்து கொண்டான்

அன்று சீசர் எதிர்பட்டவுடன், ஓங்கிய குரலில்
அவரைப் பார்த்துக் கத்தினான்,
" மை டியர் சீசர்...!"

சீசர் குதிரையைச் சட்டென்று நிறுத்தி அவனைப்
பார்த்து என்ன என்று வினவுவதைப்போல பார்த்தார்.

அவன் சொன்னான்." சீசர் உங்களுக்கு ஒரு
பேராபத்துக் காத்திருக்கிறது. மார்ச் பதினைந்தாம்
தேதி அன்று ஜாக்கிரதையாக இருங்கள்!"
(Caesar, Beware the Ides of March - என்று அவன்
சொன்னான். ஐடெஸ் ஆஃப் மார்ச் என்பது மார்ச்
பதினைந்தாம் தேதி என்று பொருள்படும்)

ஆனால் சீசர் அதை ஸீரியஸாக எடுத்துக்
கொள்ளவில்லை. அந்த மாவீரன் சந்திக்காத
ஆபத்துக்களா? ஒரு புன்னகையை உதிர்த்து
விட்டு அவர் சென்று விட்டார்.

அவன் அடுத்த நாளும் அவரைத் தடுத்தி
நிறுத்திச் சொன்னான், அதோடு மட்டுமல்லாமல்
மார்ச் பதினாம்காம் தேதி வரை தொடர்ந்தும்
சொன்னான். அவனுக்குத் தினமும் ஒரு
புன்னகைதான் சீசரிடமிருந்து பதிலாகக்
கிடைத்ததேயன்றி, வேறு எந்த பதிலும்
கிடைக்கவில்லை.

மார்ச் பதினைந்தாம் தேதியும் வந்தது!

அன்றைய தேதியின் காலைப்பொழுது.

வழக்கம்போல குதிரைமீது அமர்ந்து வந்த
சீசர் பழக்கம் காரணமாக அவன் இருக்கும்
இடம் வந்ததும், தன் குதிரையை நிறுத்தினார்

ஆனால் அந்த நிமித்தக்காரன் வழக்கத்திற்கு
மாறாக ஒன்றும் பேசாததோடு, தலை
குனனிந்தவாறு அம்ர்ந்து கொண்டிருந்தான்.

சீசர்தான் அவனிடம் பேச்சுக்குக் கொடுத்தார்.

"Hey Soothsayer, to-day is March 15th. It has come!
"Yes Sir, It has come!" என்று அவன் பதில் சொன்னான்!"

"What you say now?" சீசர் கேட்டார்

அவன் சொன்னான்." Yes Sir!, It has come : But not gone!"
("ஆமாம் அது வந்து விட்டது. ஆனால்
இன்னும் போகவில்லை!)
அவன் சொன்னபடியேதான் நடந்தது.
மார்ச் பதினைந்தாம் தேதி பகல் பொழுதிலேயே
சீசரை அந்தச் சதிகாரர்கள் அநியாயமாகக்
கொன்று விட்டார்கள்.

மொத்தம் அறுபது பேர்கள் சதிகாரர்கள்.
அந்த மாவீரனின் உடலில் விழுந்த கத்திக்
குத்துக்கள் மொத்தம் 23 என்று வரலாறு
சொல்கிறது!

இது பற்றி ஆங்கிலக் கவிஞர் ஷேக்ஸ்பியர்
தனது 'ஜூலியஸ் சீசர்' என்னும் கவிதை
நாடகத்தில் சிறப்பாக எழுதியுள்ளதாக ஆங்கில
இலக்கியம் படித்த என் நண்பர் ஒருவர்
விவரமாகச் சொல்வார்.

கூகுள் ஆண்டவர் சொல்வதுதான் நமக்கு
முக்கியம். அவர் சொவதையும் நீங்கள் கேட்க
சுட்டியை இங்கே கொடுத்துள்ளேன்

1. Soothsayer (Fortune Teller)
2. Story of Julius Caesar
========================================
அதுபோல நம் நாட்டிலும் ஒரு மகான் இருந்தார்.
அவர் தனது சக்தியால் நடக்கப்போவது ஒன்றைச்
சொல்லியதாகவும் அது அப்படியே நடந்ததாகவும்
படித்துள்ளேன்.

அவர் யார்?
அவர் யாரைப் பற்றி என்ன சொன்னார்?
அவர் அதை யாரிடம் சொன்னார்?
அதன்படி நடந்ததா?

எல்லா விவரமும் கீழே உள்ள Scanned Pageல்

உள்ளது!


அதை உங்கள் பார்வைக்காக மட்டுமே - நன்றாகக்

கவனிக்கவும் பார்வைக்காக மட்டுமே கொடுத்துள்ளேன்.

விவாதம் செய்வதற்கு அல்ல!


அந்தச் செய்தியில் சம்பந்தப்பட்டுள்ள விஷ்யம்

நாட்டின் முதல் தரக்குடிமகனாக இருந்தவர்
பற்றியது என்பதாலும், அது சம்பந்தப்பட்ட
வழக்கு இன்னும் நீதி மன்றத்தில்
நிலுவையில் இருப்பதாலும், அது குறித்து
விவாதிப்பது நல்லதல்ல!
ஆகவே நிமித்தக்காரனைப் பற்றிய உங்கள்
கருத்துக்களள மட்டும் பின்னூட்டத்தில்
இட வேண்டுகிறேன்

பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன்

முடித்துக் கொள்கிறேன்.

மற்றவை நாளை!

(தொடரும்)
------------------------------------------------------------------------------------
கதவைத் திறங்கள் - காற்று வரட்டும் என்றார்

ஒரு நண்பர்! ஆகவே கதவைத் திற்ந்து விட்டுள்ளேன்.

பதிவின் பின்னூட்டக் கதவைத் திறந்து விட்டுள்ளேன்

ஆகவே Blogger கணக்கு இல்லாதவர்கள் கூட பின்னூட்டம் இடலாம்

(Anyone can post his comments in the comment box)
பல வாசக அன்பர்கள் எனக்கு மின்னஞ்சல்

அனுப்பி சந்தேகங்களைக் கேட்கிறார்கள்.
தினமும் பத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள்
வருகின்றன. எனக்குத் தனிதனியாக அவைகள்
அனைத்திற்கும் பதில் எழுத இயலவில்லை.
நேரமின்மைதான் என்னுடைய முதல் பிரச்சினை.
ஆகவே அனைவரையும் வேண்டிக் கேட்டுக்
கொள்கிறேன். பதிவு பற்றிய உங்கள் சந்தேகங்களை
இன்று முதல் இங்கேயே கேளுங்கள்.
நன்றி, வணக்கத்துடன்
SP.VR.சுப்பையா

=============================================
படத்தின் மீது கர்சரை வைத்து வலது பக்கம்
சுட்டியை அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்!

===============================================


7 comments:

  1. குருவே,

    முக்காலமும் உணர்ந்தவர்கள் முனிவர்கள் மற்றும் மகான்கள் என்று கூறுவது சரியாகவே உள்ளது.

    நேரம் அனுமதித்தால் "CHEIRO" பற்றி எழுத வேண்டுகின்றேன்.

    ராஜா

    ReplyDelete
  2. ////நேரம் அனுமதித்தால் "CHEIRO" பற்றி எழுத வேண்டுகின்றேன்.
    ராஜா ////

    Chieroபற்றி இரண்டு அல்லது மூன்று பதிவுகள் எழுததௌள்ள்என். பின் ப்குதிகளில் வரும்!

    ReplyDelete
  3. படத்தகவல் நான் கேள்விப்படாதவை.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. ஐயா,

    நீங்கள் சொன்ன படி, நிமித்தக் காரனுக்குத் தெரிந்த பின் ஏன் அவனால் நடக்கப் போவதை தடுக்க முடியவில்லை?

    அது தான் விதின்னா ஏன் அந்த நிமித்தக் காரனுக்கு மட்டும் அது தெரியுது?

    ReplyDelete
  5. really shocking to hear these details typical e.g. for "vidhi vazhiye madhi sellum". Long back i have also read an article in tamil that in Naadi jothidam they have predicted the death of Indra Gandhi and Rajiv Gandhi. It was written in a poetrical form i remember that Rajiv's name was written as kamalam or thaamarai. But as you wrote in naadi everything what they predict about the past is almost true but about the future .... remains as a question mark. Nice article. thanks for sharing.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com