===============================================
காதலிக்க நேரமில்லை! காதலிப்பார் யாருமில்லை!
ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 31
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்'
என்ற கவியரசரின் பாடல் மிகவும் பிரசித்தமானது.
என்னதான் காதல் என்றாலும் , கத்திரிக்காய என்றாலும்,
Love Marriage அல்லது Arranged Marriage என்றாலும்
அது ஜாதகப்படிதான் நடக்கும். ஜாதகத்தில் குறிப்பிட்டுள்ள
காலத்தில்தான் நடக்கும்.
காதல் திருமணம் உயர்ந்ததா? அல்லது பெற்றோர்
பார்த்து நடத்தி வைக்கும் திருமணம் உயர்ந்ததா?
என்று விவாதித்தால் அதற்கு உடன்பட்ட கருத்து
ஏற்படுவது கடினம்.
இரண்டிலுமே நன்மை, தீமைகள் உள்ளன. ஆனால்
இரண்டின் நோக்கமும் ஒன்றுதான்
காதலிப்பது எதற்காக....? திருமணம் செய்துகொண்டு
இன்பமாக வாழ்வதற்குத்தானே!
ஆகவே திருமண வாழ்வு இன்பமானதாக இருக்குமா
என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?
மேலை நாட்டுக்காரர்களுக்கு அதைப் பற்றி எல்லாம்
கவலையில்லை. மணவாழக்கை பிடிக்கவில்லையென்றால்
ஜஸ்ட் லைக் தட்' என்று செய்த விவாகத்தை ரத்து
செய்வதற்கோ அல்லது மீண்டும் திருமணம் செய்து
கொளவதற்கோ அங்கே எந்தவித சமூக / கலாச்சார
இடையூறுகளும் இல்லை!
ஒரு ஆணோ அல்லது பெண்ணோ எத்தனை முறைகள்
வேண்டுமென்றாலும் திருமணம் செய்துகொள்ளலாம்
அங்கே! திருமணம் செய்து கொள்ளாமலேயே தாம்பத்திய
வாழக்கையையும் மேற்கொள்ளலாம்.
கேள்வி கேட்க ஆளில்லை அங்கே!
அவர்களுடைய குடும்ப உறவுமுறைகளைப் பற்றி ஒரு
வேடிக்கையான தகவலும் உண்டு. ஒருமுறை ஒரு
கணவன் தன் மனைவியைக் கேட்டானாம், " எங்கே
நம் குழந்தைகள்? (Where are our children?)
உடனே அவள் பதில் சொன்னாளாம்," உங்கள் குழந்தை
களும், என் குழந்தைகளும், நமது குழந்தைகளுடன்
விளையாடிக்கொண்டிருக்கின்றன! (Your children
and my children are playing with our children!)
அதாவது உன்னைத் திருமணம் செய்துகொள்ளும்
முன்பாக நான் பெற்றெடுத்த பிள்ளைகளும், என்னைத்
திருமணம் செய்து கொள்வதற்கு முன்பாக உனக்குப்
பிறந்த குழந்தைகளும், நாம் இருவரும் மணம் செய்து
கொண்டபிறகு நம் இருவருக்கும் பிறந்த குழந்தை
களும் ஒன்றாக விளையாடிக்கொண்டிருக்கின்றன
என்றாளாம்!
இதுதான் அவர்களுடைய கலாச்சாரம் மற்றும் ந்டை
முறை வாழ்க்கை. நம் நாட்டில் இதுவரை
அதற்கெல்லாம வழியில்லை!
சென்னை போன்ற பெரு நகரங்களில், இலை மறைவு
காய் மறைவாக இரண்டொன்று நடக்கத்தான் செய்கிறது.
நகரவாசிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுவார்கள்.
ஆனால் மற்ற இடங்களில், குறிப்பாகக் கிராமப்
புறங்களில் அனுமதிக்க மாட்டார்கள்.
நமக்கென்று ஒரு பாரம்பரியம் உண்டு. நம் மண
வாழ்க்கை அதற்குத் தகுந்த மாதிரி இருப்பது அவசியம்!
அப்படியொரு வாழ்க்கை - மண வாழ்க்கை அமைவ
தற்கு ஜாதகம் எப்படி இருக்க வேண்டுமென்று பார்ப்போம்!
ந்ல்ல திருமண வாழ்க்கைக்கு லக்கினாதிபதி, இரண்டாம்
வீட்டிற்குரியவன், 7ம் வீட்டிற்குரியவன் ஆக மூவரும்
பலமாக இருக்க வேண்டும். பெண்களென்றால் அவர்க
ளுடன் குருவும், சூரியனும் கூட பலமாக இருக்க வேண்டும்.
பலம் என்பது என்ன என்பதை இந்தத் தொடரில் பல
முறை சொல்லியிருக்கிறேன். அதாவது ஒரு கிரகம்
தன்னுடைய உச்சவீடு அல்லது, சொந்தவீடு அல்லது
நட்புவீடு அல்லது திரிகோண் வீடுகள், கேந்திர
வீடுகளில் இருப்ப்து முக்கியம். அதுவே அதற்கு
இயற்கையான பலத்தைத் தரும்!
இளம் வயதில் அனைவரின் மனதிலுமே கலர்க் கலராக
கனவுகள் உண்டாகும். திருமண வயதில் பலவிதமான
எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்கள், தவிப்புக்கள் உண்டாகும்.
அதற்கு ஆண் என்ற பெண் என்ற பேதங்கள் எதுவும்
இல்லை.
எல்லா இளைஞர்களுமே, ஒரு சிம்ரனோ, அல்லது ஒரு
நயன்தாராவோ, அல்லது ஒரு திரிஷாவோ தனக்காகக்
காத்துக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டு கொண்டிருப்பான்.
ஆனால் கடைசியில் ஒரு காந்திமதியோ அல்லது சுந்தரி
பாயோ வந்து அவன் கரம் பிடிப்பாள்.
அதுபோல பல இளம் பெண்கள், ஒரு விஷாலோ அல்லது
ஒரு அஜீத்தோ அல்லது ஒரு விஜய்யோ வந்து தன்னை
ஆட்கொள்ளப்போவதாகக் கனவு கண்டு கொண்டிருப்பாள்.
கடைசியில் ஒரு பிரகாஷ் ராஜோ அல்லது ஓமக்குச்சி
நரசிம்மனோ வந்து அவளைத் திருமணம் செய்து கொள்வான்.
அதுதான் வாழ்க்கை!
கொஞ்ச நாள் கழித்து அவர்களே தங்கள் மனதைச்
சமாதானப் படுத்திக் கொண்டு, முழு மனதோடு அல்லது
அரை மனதோடு குடும்பம் நடத்தத் துவங்கி விடுவார்கள்.
நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை'
என்று தத்துவார்த்தம் வேறு அவர்களைப் பிடித்துக்
கொண்டுவிடும்.
அவனே தன் நண்பனிடம் சொல்வான்." அழகாடா முக்கியம்?
குணம்தானடா முக்கியம்! என் மனைவி குணத்தில் தங்கம்டா,
ரியலி ஐ'யாம் லக்கி!" என்பான்
"கோடி ஒரு வெள்ளை: குமரி ஒரு பிள்ளை "
(அதாவது புதுத் துணி ஒரு சலவை வரைக்கும் தான்.
அதுபோல ஒரு பெண்ணின் அழகும் - அவளுக்கு ஒரு
குழந்தை பிறக்கும்வரைதான்) என்று சகட்டுமேனிக்குப்
பல பொன் மொழிகளைச் சொல்லி நண்பனுக்கும் புத்தி
சொல்ல ஆரம்பித்து விடுவான்.
இதையெல்லாம் மீறி சிலருக்கு மட்டும் பொருத்தமான
ஜோடி கிடைத்துவிடும். பெண் என்றால் அவள் அழகிற்கு
ஏற்பக் கண் நிறைந்த கணவனாக இருப்பான் அல்லது
ஆணாக இருந்தால் அவன் மனதை மயக்கும் அல்லது
மனதை நிறைக்கும் மனைவியாக ஒரு பெண் கிடைப்பாள்
That pair is made for each other ( வில்ஸ் ஃபில்டர்
சிகரெட் விளம்பரத்தில் ஒரு அழகான் ஜோடியைப் படமாகப்
போட்டு இந்த வாசகத்தையும் போட்டிருப்பார்கள்.
Made for each other - அதை நினைத்துக் கொள்ளுங்கள்)
என்று சொல்லும்படியான தம்பதியர் அபூர்வமாக இருப்பார்கள்.
அப்படிப்பட்ட அமைப்பு ஒரு ஐந்து அல்லது பத்து
சதவிகிதம் தான் இருக்கும்!
எல்லாம் ஜாதக பலன்.
ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் என்று சொல்லப்படு
கின்ற ஏழாம் வீடு. அதன் அதிபதி (Owner) 7ல் வந்து
அமர்ந்த கிரகங்கள், சுக்கிரன் ஆகியவற்றைப் பற்றி
விரிவாக அலசுவோம்!
-----------------------------------------------------------------------------------
முதலில் மண் வாழ்க்கை அமைவதற்குப் பல விதிகள்
இருக்கின்றன. அவற்றைக் கீழே கொடுத்துள்ளேன்.
அவற்றில் ஏதாவது ஒன்று இருந்தாலும் மண வாழ்க்கை
அமையும் என்பதில் சந்தேகமில்லை!
இந்த விதிகள் ஆண்கள், பெண்கள் என்று இரு
பிரிவினருக்கும் பொதுவானது!
2ம் வீடு (House of Family affairs) குடும்ப ஸதானம்
7ம் வீடு (House of Marriage) களத்திர ஸ்தானம்
சுப கிரகங்கள் : குரு, சுக்கிரன், சந்திரன்
பாப கிரகங்கள்: சனி, ராகு கேது, செவ்வாய்
மகரராசி, கும்பராசிக்காரர்களுக்கு சனியிடம் இருந்தும்,
மேஷராசி, விருச்சிக ராசிக்காரகளுக்குச் செவ்வாயிட
மிருந்தும் விதிவிலக்குகள் உண்டு. ஏனென்றால்
அவைகள் அந்த வீட்டின் அதிபதிகள்
1. சந்திரன், சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களும்
ஜாதகத்தில் வலுவாக இருக்க வேண்டும்.வலு என்பது
அவைகள் தங்களுடைய சொந்த, உச்ச, நட்பு, திரிகோணம்,
கேந்திரம் ஆகிய இடங்களில் இருப்பது!
2. ஏழாம் வீட்டு அதிபதி அம்சத்தில் உச்சம் பெற்றிருப்பது
3. 5, 9ற்கு அதிபதிகள் லக்கினாதிபதியோடு சேர்ந்தோ
அல்லது லக்கினாதிபதியின் பார்வை பெற்றோ இருப்பது
4.1,4,7,10ம் வீடுகளில் சுபக் கிரகங்கள் இருப்பது ந்ல்லது
5.லக்கினாதிபதி அம்சத்தில் உச்சம் பெற்று ஏழாம் வீட்டு
அதிபதியைப் பார்ப்பது
6.5ம் வீட்டு அதிபதியும், 5ற்கு 5ந்தான 9ம் வீட்டு
அதிபதியும் சுபக்கிரகங்களாக இருந்து வலுவான இடத்தில்
அமர்வது
7. சுக்கிரன் தன்னுடைய நட்புக் கிரகங்களுடன் சேர்க்கை
அத்துடன் லக்கினாதிபதியின் பார்வையையும் பெறுவது.
8. 5, 7, 9 ஆம் வீடுகளுக்கு அதிபதிகள் லக்கினத்தில் வந்து
அமர்வது அல்லது லக்கினத்தைப் பார்ப்பது
9. 9, 10ற்கு அதிபதிகள் (அவர்களுக்கு தர்ம,கர்ம அதிபதிகள்
என்று பெயர்) ஏழாம் வீட்டில் சேர்ந்திருப்பது . அல்லது
சேர்ந்திருந்தி ஏழாம் வீட்டைப் பார்ப்பது..
10.சுக்கிரனுக்கு மற்றொரு சுபக் கிரகத்தின் கூட்டணி,
அல்லது பார்வை! அல்லது கோண வீடுகளக்கு ஆதிபத்யம்
11.சுபக்கிரகங்கள் கேந்திர, திரிகோண் ஸ்தானங்களில்
சேர்ந்திருப்பது - அத்துடன் பாவக் கிரகங்களின் பார்வை
பெறாமல் இருப்பது
12. 2, வீடு, 7ம் வீடு ஆகிய இடங்களில் சுபக்கிரகங்கள்
இருத்தல் அல்லது அந்த வீடுகளின் மேல் அவற்றின் பார்வை
13.பொதுவாக சபக்கிரகங்கள் உச்ச வீடுகளில் இருப்பது
14. கிரகங்கள் ஒன்றிற்கொன்று கேந்திரத்திலோ அல்லது
திரிகோணத்திலோ இருப்பது
15. ராசிச் சக்கரத்தில் (In Rasi Chart) சுக்கிரன், குரு
இருவரும் பலம் குறைந்திருந்தாலும், நவாம்சத்தில் உச்சம்,
ஆட்சி போன்ற அமைப்பைப் பெற்றிருத்தல்
16. 2,4,5,7,9,11 ஆகிய வீடுகளில் ஒரு வீடாவது குருவின்
பார்வையைப் பெறுவது!
17. குரு திரிகோண வீடுகளுக்கு அதிபதியாகி, கேந்திரத்தில்
இருந்து ஏழாம் இடத்தைப் பார்ப்பது.
இந்த விதிகள் எல்லாம் திரும்ணம் சிறப்பாக நடப்பதற்கு
மட்டும்தான். திருமண வாழக்கை எப்படி இருக்கும் என்பதற்கு
மேலும் பல் விதிகள் உள்ளன. அவற்றை அடுத்து வரும்
பதிவுகளில் பார்ப்போம்
---------------------------------------------------------------------------------
கோச்சாரப் பலன்களின் ஒரு பகுதி பாக்கியுள்ளது. அதை
அட்டவணையாகக் கொடுக்கலாம் என்றுள்ளேன்
அட்டவணை தயாரிப்பில் உள்ளது. அதை நாளையப்
பதிவில் சேர்த்துக் கொடுக்கிறேன்
பதிவின் நீளம் கருதியும், கடைசி பெஞ்ச் கண்மணிகளின்
பொறுமை கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்
(தொடரும்)

ஐயா,நிறைய இடங்களில் பார்வை பற்றி குறிப்பிடு வருகிறீர்கள்,ஒவ்வொரு கிரகத்தின் பார்வை பற்றி சிறு குறிப்பு தந்தீர்கள் என்றால் கொஞ்சம் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
ReplyDelete-கிச்சா.
நண்பர் கிச்சா அவர்களே,
ReplyDeleteஅனைத்து கிரகங்களுக்கும் - 1, 7 ஆகிய இடங்களின் மேல் பார்வை.
செவ்வாய் - 1, 4, 7, 8 ஆகிய இடங்களின் மேல் பார்வை.
குரு - 1, 5, 7, 9 ஆகிய இடங்களின் மேல் பார்வை.
சனி - 1, 3, 10 ஆகிய இடங்களின் மேல் பார்வை.
ராகு - 1, 3, 10 ஆகிய இடங்களின் மேல் பார்வை. (சனி பகவானைப் போல்) ???
கேது - 1, 4, 7, 8 ஆகிய இடங்களின் மேல் பார்வை (செவ்வாய் பகவானைப் போல்) ???
குருவே,
சிறிது ஆர்வக் கோளாறு. பிழை இருந்தால் மன்னிக்கவும்.
அன்புடன்
இராசகோபால்.
பார்வை
ReplyDeleteஎல்லா கிரகங்களும் தாங்கள் இருக்குமிடத்தில் இருந்து
ஏழாம் வீட்டையும், அதில் ஏதாவ்து கிரகம் இருந்தால்
அந்தக் கிரகத்தையும் பார்க்கும்
அது தவிர குரு, செவ்வாய், சனி ஆகிய மூன்று
கிரகங்களுக்கு மட்டும் விஷேசப் பார்வைகள் உண்டு
குரு விற்கு 5ம், 9ம்
செவ்வாய்க்கு 4ம், 8ம்,
சனிக்கு 3ம் 10ம் விஷேசப் பார்வைக்கான இடங்களாகும்
ஒரு சுப்க் கிரகம் மற்ரொரு ச்பக்கிரகத்தைப் பார்ப்பதும் நல்லதே!
அதே போல விஷேச பார்வையாகத் தன் வீட்டை வேறு
ஒரு இடத்தில் இருந்து பார்க்கும் கிரகம் அந்த வீட்டின்
முக்கியத்துவத்தைப் பல மடங்கு உயர்த்தும்
பார்க்கும் கிரகத்திற்கும், பார்க்கப்படும் கிரகத்திற்கும் உள்ள
உறவைப் பொறுத்தே - அந்தப் பார்வை நல்லதா அல்லது
கெட்டதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும்!
ராஜகோபால் அவர்களின்
ReplyDeleteஆர்வத்திற்குப் பாராட்டுக்கள்!
அவர் எழுதியவற்றில் - 1ம் இடப் பார்வை என்பது தவறு!
அதேபோல ராகு கேது ஆகியவற்றிற்கு விஷேசப் பார்வைகளாக எழுதியுள்ளவைகள் தவறு
குருவே,
ReplyDeleteமன்னிக்கவும். இது போன்ற பிழைகள் இனி நேராது.
அன்புடன்
இராசகோபால்
///மன்னிக்கவும். இது போன்ற பிழைகள் இனி நேராது.
ReplyDeleteஅன்புடன்
இராசகோபால்///
It is alright Mr.Rajagopal!
மன்னிப்பெல்லாம் எதற்கு?
சிறு குழந்தை நடக்க முயல்கையில் இரண்டு அல்லது மூன்று முறை விழத்தானே செய்யும். அதில் என்ன தவறு?
வணக்கம் குருவே,
ReplyDeleteசுப கிரகம் புதனும், பாப கிரகம் சூரியனும் வரிசையில் இல்லையா குருவே.
உள்ளேன் ஐயா!
ReplyDeleteகுருவே,
ReplyDelete3,6,8 மற்றும் 12 - ம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சத்தில் அமர்ந்த கிரகம் பலமான கிரகமா? அல்லது வலுவிழந்த கிரகமா? குருவே.
//////இனியவன் said...
ReplyDeleteவணக்கம் குருவே,
சுப கிரகம் புதனும், பாப கிரகம் சூரியனும் வரிசையில் இல்லையா குருவே.////
புதன் தனிப்பட்டு சுபக்கிரகம் அல்ல! (It is a neutral planet)
சுபக்கிரகத்துடன் சேர்ந்தால் சுபமான் வேலைகள்
பாபக் கிரகத்துடன் சேர்ந்தால் பாபப் பலன்கள்தான்
சூரியன் பாதி பாபக் கிரகம்.அவ்வள்வுதான்
/////நாமக்கல் சிபி said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!////
வருகை குறித்துக் கொள்ளப்பட்டது!
//////இனியவன் said...
ReplyDeleteகுருவே,
3,6,8 மற்றும் 12 - ம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சத்தில் அமர்ந்த கிரகம் பலமான கிரகமா? அல்லது வலுவிழந்த கிரகமா? குருவே./////
3, 6, 8, 12 ம் இடங்களில் அமர்ந்த கிரகங்கள் வலுவிழந்த கிரகங்கள்தான்
அறிவிப்பு:
ReplyDeleteவாத்தியார் வெளியூர் செல்வதால்
வகுப்பறைக்கு 4 தினங்கள் விடுமறை!
7.5.2007 அன்று மீண்டும் வகுப்பிற்கு
வந்தால் போதும்!
ஆனால் கடைசியில் ஒரு காந்திமதியோ அல்லது சுந்தரி
ReplyDeleteபாயோ வந்து அவன் கரம் பிடிப்பாள்//
:-)
நல்லா சொன்னீங்க ஐயா.
மனம் ரொம்ப விசித்திரம் ஆனது. முதல் பார்வையில் பிடித்துவிட்டால்
பிறகு மாறுவதில்லை.
அதற்கும் சந்திர கிரகம் காரணமா?
சலனம் ,சஞ்சலம்
இல்லாத இல்லறவாழ்க்கை எப்படி அமையும்?
நன்றி.
ஐயா, வகுப்பிற்கு கோடைகால விடுமுறையா, நீண்ட நாட்களாக பதிவே இல்லையே.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஐயா இலக்கினத்தில் சனி சந்திரன் செவ்வாய் இருந்தால் வாழக்கை ஏற்றத் தாழ்வுள்ளதாக இருக்குமா? நான் 12.12.1955 அன்று அதிகாலை 3.46 க்கு யாழ்ப்பாணத்தில் துலாம் ராசியில் பிறந்;தேன்.என்னுடைய வாழ்க்கை தொடர்ந்து ஏற்றத் தாழ்வு உடையதாக அதாவது உயர்வான நிலை 6 மாதம் என்றால் தாழ்வான் நிலை 6 மாதம் என்ற கணக்கில் இருக்கிறது.இது ஏன் என்று தங்களிடம் அறிய விரும்புகிறேன்
ReplyDeleteபல நாட்களாய்த் தங்கள் பதிவைப் படித்து வருகிறேன். ஒரே ஒருமுறை பின்னூட்டம கொடுத்த நினைவு. எனக்கு ஒரு சந்தேகம். பொதுவாய் விருச்சிக ராசிக்காரர்களை அனைவரும் தேள் கொட்டுவது போல் பேசுவதாய்ச் சொல்கிறார்கள். எனக்குத் தெரிந்து மற்ற ராசிக்காரர்கள் இன்னும் கடுமையாய்ப் பேசிப் பார்க்கிறேன். ஆனால் பொதுவாய் விருச்சிக ராசிக்கு மட்டும் ஏன் இந்த அவப் பெயர்? மேலும் இந்த ராசிக்காரர்கள் குடும்பதிற்காக எவ்வளவு பாடுபட்டாலும், உழைத்தாலும் அது கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவடகே இல்லை. மற்றவர்களால் அவர்கள் உழைப்பும் சரி, மனதும் சரி அலட்சியப் படுத்தவே படுகிறது. இன்னும் சொல்லப் போனால் பழி,பாவங்களையும் சுமக்கும் ஒரு பலி ஆடாகவே கருதப் படுகிறார்கள். உறவு மட்டுமில்லாமல் நட்பு வட்டத்திலும் இவர்களையும், செய்த உதவிகளையும் அலட்சியப் படுத்தும் பாங்கே அதிகம் இருக்கிறது. அது ஏன்? எனக்குத் தெரிந்து அனுஷம், கேட்டை இரண்டு நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் அதிகம் கஷ்டம் அனுபவிக்கிறார்கள். அது ஏன்? திறமையாகவும், அதி வேகமாயும் வேலைகள் செய்து கொடுக்கும் வரை பொறுத்து இருந்துவிட்டுப் பின் தங்கள் வேலை ஆனதும் இவர்கள் அலட்சியப் படுத்தப் படுகிறார்களே? இதற்கு ஒரு முடிவே இல்லையா? நீங்கள் ஒரு பதிவாக இட்டாலும் சரி, ஒரு தகுந்த விடையைச் சொல்லுங்கள். பலவிதமான வயதுகளில் இருக்கும் எல்லா விருச்சிக ராசிக்காரர்களுக்குமேவா ஒரே நேரத்தில் கஷ்டமான சூழ்நிலை ஏற்படும்?
ReplyDeletesir,
ReplyDeletekindly tell the books which will be helpful to know more about astrology in a easy way other than what u are hosting.
ur lessons are easy to learn.
please give more information regarding the astrolgy lessions.
ஐயா எனது பெயரில் தங்கள் வலைப் பதிவில் பின்னூட்டம் ஒன்று இடப்பட்டுள்ளதாக எனது நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள்.அதன் பின் நான் காதலிக்க நேரமில்லை என்ற தங்கள் வலைப் பதிவை பார்வையிட்ட போது அது உண்மை என்பதை தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteநான் எனது சிறு வயது முதலே ஈழ விடுதலைப் போராட்ட செயற்பாட்டில் இருப்பவன். அடிப்படையில் நான் ஒரு பொதுவுடமைவாதி.
ஏனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என்னுடைய கருத்துக்கு எதிர்கருத்து உள்ளது என்பதையும் என்னுடைய கருத்து சரியென்ற வாதிடும் நிறுவும் உரிமை எனக்கு எப்படி இருக்கிறதோ அப்படி மற்றவர்களுக்கும் தங்கள் கருத்தை சொல்லும் நிறுவும் உரிமை இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்பவன்.
என்னை கொச்சைப் படுத்த வேண்டும் என்பதற்காகவே என்னை நன்கு அறிந்த சில விசமிகள் இந்தப் பின்னூட்டத்தை தங்களுக்கு ஆனுப்பி வைத்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். தமிழ்மணத்தில் இணைப்பு கொடுத்த பின்னர் இப்படி நடப்பதாக பல நண்பர்கள் ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தர்கள்.தயவு செய்து அந்தப் பன்னூட்டத்தை நீக்கினால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.
அன்புடன்
சிவா சின்னப்பொடி
///siva sinnapodi said...
ReplyDeleteஐயா எனது பெயரில் தங்கள் வலைப் பதிவில் பின்னூட்டம் ஒன்று இடப்பட்டுள்ளதாக எனது நண்பர்கள் எனக்கு தெரிவித்தார்கள்.இணைப்பு கொடுத்த பின்னர் இப்படி நடப்பதாக பல நண்பர்கள் ஏற்கனவே என்னிடம் தெரிவித்திருந்தர்கள்.தயவு செய்து அந்தப் பன்னூட்டத்தை நீக்கினால் நான் நன்றியுடையவனாக இருப்பேன்.
அன்புடன்
சிவா சின்னப்பொடி///
உங்கள் வேண்டுகோளின்படி அந்தப் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன் நண்பரே!
ஐயா தவறான வழியில் செல்வோரை அடயாளம் கான வழி உண்டா?
ReplyDeleteஉண்டு!
ReplyDeleteHi Sir,
ReplyDeletei came across your blog yesterday.I have been reading them from the first lesson.I have a question in this lession.This is about the 16 th point where u mentioned that
"2H,4H,5H,7H,9H and 11H -if any one of the houses are aspected by jupiter" --it is one of the planetary indications that the native will marry.
my question is do u mean only the 7th aspect for this rule?Because if i include the special aspects,whichever place jupiter is placed in the horoscope,it will definetely aspect any of the above houses or will be placed on those houses indicating marriage will happen for the native.
But there are still celibates?kindly clarify
ஐயா நான் வாசித்த ஒரு புத்தகத்தில் ராகுவும் கேதுவும் 1,3,7,12 ம் இடங்களை பார்ப்பார் என்று போடபட்டிருந்தது ஐயா....!!!!!!!!
ReplyDeleteசிறிது ஆர்வக் கோளாறு.
பிழை இருந்தால் மன்னிக்கவும்.