Short
Cut Astrology Part 13
குறுக்கு வழி
ஜோதிடம்
மகா திசைகளின் உட்பிரிவுகள் புத்தி காலங்கள் (Sub Priods)எனப்படும்.
ஒவ்வொரு மகா
திசையும் 9 புத்தி காலங்களாக பிரிக்கப்படும்.
உதாரணமாக, கேது மகா திசையின் புத்தி காலங்கள்:
1. கேது - கேது சுய புத்தி (7 மாதங்கள்)
2. கேது -
சுக்கிரன் (1 வருடம் 4 மாதங்கள்)
3. கேது -
சூரியன் (6 மாதங்கள்)
4. கேது -
சந்திரன் (10 மாதங்கள்)
5. கேது -
செவ்வாய் (7 மாதங்கள்)
6. கேது - ராகு (1 வருடம் 3 மாதங்கள்)
7. கேது - குரு (1 வருடம் 1 மாதம்)
8. கேது - சனி (1 வருடம் 4 மாதங்கள்)
9. கேது - புதன்
(1 வருடம் 2 மாதங்கள்)
இதேபோல், மற்ற மகா திசைகளுக்கும் புத்தி காலங்கள் அமையும்.
கேது மகா திசை பலன்கள்
கேது மகா திசையில், மனிதர்களுக்கு கலக்கமும், துன்பமும் ஏற்படும். இந்த கேது திசை 7 ஆண்டுகள் நீடிக்கும். இந்த காலகட்டத்தில்,
- சத்துரு பயமும், அக்கினி பயமும் ஏற்படும்.
- உடல் நல
பாதிப்பும் ஏற்படும் .
- அதிகமான
சுரத்தல் ஜன்னி காணுதலும் ஏற்படும்.
- மதுவினால்
மயக்கமடைதலும் நேரிடும்.
இவை கேது மகா திசையின் பொதுவான பலன்கள். லக்ன நிலை
மற்றும் கிரக
வலிமையை பொருத்து பலன்கள் மாறுபடும்.
அடுத்து இன்னொரு மகாதிசையைப் பற்றி நாளை விரிவாகப் பார்ப்போம்
அன்புடன்
வாத்தியார்
---------------------------
Short Cut Astrology Part 14
குறுக்கு வழி ஜோதிடம் - 14
நேற்றைய பதிவில் மகாதிசையில் முதலில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு
கேது திசை வரும் என்று கூறியதோடு
அதன் உட்பிரிவிற்கான காலங்களைக்
குறிப்பிட்டிருந்தேன் அதில்,தவறு
இருந்தது. எனது கணினியில் இருந்த பழைய
குறிப்பை எடுத்து
எழுதியதில் தவறு நேர்ந்துவிட்டது.
கவனப் பிசகு
நமது வகுப்பறை மாணவர் கதிரேசன் அவர்கள் அதைக் குறிப்பிட்டிருதார்
அவருக்கு நன்றி தெரிவித்ததோடு சரியான
காலங்களை பதிவிட்டிருந்நேன்
அதை மீண்டும் ஒருமுறை உங்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்
கேது மகா திசையில் முதலில்
அதன் சுய புத்தி - - 4 மாதங்கள் & 27 நாட்கள்
கேது - சுக்கிர புத்தி 14 மாதங்கள்
கேது - சூரிய புத்தி 4 மாதங்கள் & 6 நாட்கள்
கேது - சந்திர புத்தி - 7
மாதங்கள்
கேது - செவ்வாய் புத்தி - 4 மாதங்கள் & 27 நாட்கள்
கேது - ராகு புத்தி - 12 மாதங்கள் & 18 நாட்கள்
கேது - குரு புத்தி 11 மாதங்கள் 6 நாட்கள்
கேது - சனி புத்தி 13 மாதங்கள் & 9 நாட்கள்
கேது - புதன் புத்தி 11மாதங்கள்
& 27 நாட்கள்
-------------------------------------------
கூட்டல் = 80
மாதங்கள் & 120 நாட்கள் = 84 மாதங்கள்
அதாவது 7 ஆண்டுகள்
இதேபோல், மற்ற மகா திசைகளுக்கும் புத்தி காலங்கள் அமையும்.
கேது மகா திசை பலன்கள்
கேது மகா திசையில், மனிதர்களுக்கு கலக்கமும், துன்பமும் ஏற்படும். இந்த கேது திசை 7 ஆண்டுகள் நீடிக்கும். இந்த காலகட்டத்தில்,
- சத்துரு பயமும், அக்கினி பயமும் ஏற்படும்.
- உடல் நல பாதிப்பும் ஏற்படும் .
- அதிகமான சுரத்தல் ஜன்னி காணுதலும்
ஏற்படும்.
- மதுவினால் மயக்கமடைதலும் நேரிடும்.
இவை கேது மகா திசையின் பொதுவான பலன்கள். லக்ன நிலை
மற்றும் கிரக வலிமையை பொருத்து பலன்கள்
மாறுபடும்.
-------------------------------------------------------------
மகா திசைகள் மற்றும் அதன் உட்
பிரிவுகள் பஞ்சாங்கத்தில் விபரமாக குறிப்பிடப் பெற்றிருக்கும்
பஞ்சாங்கத்தின் உதவியின்றி
பார்ப்பதற்கு ஒரு சூத்திரம் (Formula) உள்ளது
மகா திசையின் ஆண்டையும் புத்தியின் ஆண்டையும் பெருக்கினால் கிடைப்பதில் வரும்
எண்ணிக்கையில் முதலில் மாதமும்
கடைசியில் உள்ள எண்ணை 3 ஆல் பெருக்கி வருவது நாட்களும் ஆகும்
Formula to arrive the sub period multiply the main dasa and sub dasa
= first digit is the number of months
and last degit multiply by 3 will be the number of days
Example ketu & venus
உதாரணம்
கேது & சுக்கிரன்
7 x 20= 140 = 14 months (மாதங்கள்)
Ketu & Saturn
கேது & சனி
7x 19 = 133 = 13 months & 9 days
இந்த சூத்திரத்தை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்
இதுபோல குழ்ந்தை பாக்கியத்திற்கும்
சூத்திரம் உள்ளது
அதை அந்த பாடம் நடத்தும்போது தருகிறேன்
அடுத்து இன்னொரு மகாதிசையைப் பற்றி நாளை விரிவாகப் பார்ப்போம்
அன்புடன்
வாத்தியார்
---------------------------
Short Cut Astrology Part 15
குறுக்கு வழி ஜோதிடம் - 15
அஸ்வினிக்கு அடுத்த நட்சத்திரம் பரணி
பரணிக்கு உரிய கிரகம் சுக்கிரன்
ஆகவே இன்று சுக்கிரனைப் பற்றிப் பார்ப்போம்
சுக்கிர மகாதிசை உட்பிரிவுகள் மற்றும் பலன்கள்
சுக்கிர மகாதிசை 20 ஆண்டுகள் நீடிக்கும் அதன் பொதுவான் பலன் - வசதி, ஆடம்பரம், காதல், திருமணம், குழந்தைகள், கலை, கல்வி மற்றும் தொழில் முன்னேற்றம் போன்ற உலகியல் இன்பங்களைத் தரும்
ஆனால் சுக்கிரன் பலவீனமாக இருந்தால் அல்லது அசுப நிலையில் இருந்தால், உறவுச் சிக்கல்கள்,
அதிகப்படியான செலவு மற்றும் ஆரோக்கியப்
பிரச்சனைகள் ஏற்படலாம்
சுக்கிரனின் உட்பிரிவுகளான புத்தி, அந்தரம் ஆகியவை அந்தந்த கிரகங்களின் தன்மையைப் பொறுத்து பலன்களை மாற்றும், குறிப்பாக சுக்கிரன்-சுக்கிரன் புத்தி பெரும் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும்.
சுக்கிர மகாிசையின் உட்பிரிவுகள்
சுக்கிரனில் அதன் சுய புத்தி - 40 மாதங்கள்
சுக்கிரனில் சூரிய புத்தி - 12 மாதங்கள்
சுக்கிரனில் சந்திர புத்தி - 20 மாதங்கள்
சுக்கிரனில் செவ்வாய் புத்தி - 14 மாதங்கள்
சுக்கிரனில் ராகு புத்தி - 36
மாதங்கள்
சுக்கிரனில் குரு புத்தி - 32 மாதங்கள்
சுக்கிரனில் சனி புத்தி - 38 மாதங்கள்
சுக்கிரனில் புதன் புத்தி 34 மாதங்கள்
சுக்கிரனில் கேது புத்தி - 14 மாதங்கள்
----------------------------------------------
கூட்டினால் மொத்தம் - 240 மாதங்கள் ( 20 ஆண்டுகள்)
சுக்கிர திசைக்கான பரிகாரங்கள்:
வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர பகவானை
வழிபடுவது.
வெள்ளியில் வெள்ளி அணிவது, பெண்களுக்கு தானம் செய்வது.
மது அருந்துவதைத் தவிர்ப்பது, குறிப்பாக வெள்ளிக்கிழமை.
கோளறு திருப்பதிகம் போன்ற மந்திரங்கள்
சொல்வது.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------------------

No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com