Astrology - வம்பும், வழக்கும்!
வம்பு, வழக்கு என்றால் யாருக்குத்தான் பிடிக்கும்? வம்பு, வழக்கு என்று எதுவும் இல்லாத நிலைதான் நம்மதியான நிலை!
ஆனால் விதி விடுமா? சிலரை அவர்கள் விரும்பாவிட்டாலும் தேவையில்லாத விவகாரங்களில் சிக்க வைத்துவிடும். மனிதர் நீதிமன்றத்திற்கு அலைய நேரிடும்.
பெரும்பாலான வீடுகளில் சொத்துத் தகராறு இருக்கும். சொத்து என்றாலே சிக்கல்தான் என்கிறீர்களா? நம் பெயரில் இருக்கும் சொத்துக்களில் நாம் இருக்கும்வரை சிக்கல் இல்லை. ஆனால் முன்னோர்கள் வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் என்றால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. உடன் பிறப்புக்கள், உறவினர்கள் என்று யார் மூலமாக வேண்டுமென்றாலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புண்டு. வம்பு, வழக்கு ஏற்படலாம்.
ஜாதகப்படி அதற்கு என்ன அமைப்பு - அதாவது வம்பு வழக்குகள் ஏற்பட என்ன அமைப்பு என்றும், ஒருவேளை அப்படி ஏற்பட்டால் அதில் நமக்கு வெற்றி கிடைக்க வழியுண்டா என்பதையும் இன்று பார்ப்போம்!
----------------------------------------------------------------------------------------
1. ஆறாம் வீடுதான் பிரச்சினைகளுக்கு உரிய வீடு
2. ஏழாம் வீடு (லக்கினத்திற்கு ஏழுதான்) எதிர்ப்பையும், முரண்பாடுகளையும் உண்டாக்கும்
3. எட்டாம் வீடுதான் சட்டச் சிக்கல்களால் நமக்கு ஏற்படும் மன உளைச்சல்களை அதிகப்படுத்தும். வருத்தங்களையும், அவமரியாதைகளையும் ஏற்படுத்தும்.
4. பன்னிரெண்டாம் வீடுதான் நமக்கு மேற்பட்ட சிக்கல்களால் ஏற்படும் நஷ்டங்களையும், விரையங்களையும் உண்டாக்கும்
ஆக அவைகள் உண்டாகட்டும். அதிலிருந்து நாம் மீண்டு வருவோமா அல்லது வெற்றி பெற்று எல்லாவற்றையும் தூளாக்குவோமா என்பதை பதினொன்றாம் வீடுதான் முடிவு செய்யும்.
பதினொன்றாம் வீடு ஆறிலிருந்து ஆறாம் வீடு. பன்னிரெண்டில் இருந்து பன்னிரெண்டாம் வீடு. இந்தப் பதினொன்றாம் வீடு அல்லது பதினொன்றாம் அதிபதி வலிமையாக இருந்தால், வழக்குகள் நம்மை ஒன்றும் செய்யாது. நம்மைக் காப்பாற்றும். நமக்கு வெற்றியைத் தேடித் தரும். அதை மனதில் கொள்க!
கிரகங்களில் செவ்வாயும், சனியும் வம்பு, வழக்கு ஏற்படும் காலங்களில் நமக்கு பாதகங்களை உண்டாக்கும் கிரகங்களாகும். புதன், சுக்கிரன், குரு ஆகிய கிரகங்கள் நமக்கு அந்நேரங்களில் கை கொடுக்கும் கிரகங்களாகும். அவைகளின் தசாபுத்திகள் அந்த நேரத்தில் நடக்கும் காலமென்றால் வழக்குகள் நமக்கு சாதகமாக முடியும்.
இவைகள் எல்லாம் பொது விதிகள் அதையும் மனதில் கொள்க!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com