Life Lessons: ரிடையர் ஆகி வீட்டில் இருக்கும் ஆசாமிகளின் "routine" என்ன?
1) பேரன்/ பேத்திகளை ஸ்கூலுக்கு அனுப்புவது, அழைத்து வருவது.
2) TV/mobile ல்ல பாலிடிக்ஸ், sports, வம்பு.
3) கிச்சன்ல எடுபிடி வேலை.
4) துணி உலர்த்துவது/காய்ந்த பின் எடுத்து வருவது.சில சமயம் மடித்து வைப்பது.
5) வீட்டுல repair செய்யும் ஆட்கள்,Gas, courier வரும்போது வீட்டில் இருப்பது.
6)தான் உண்டு.தன் வேலை உண்டு என்று இருப்பது.
7) என்ன செஞ்சாலும் பொண்டாட்டியிடம் திட்டு வாங்குறது.
8) அத்தனை பேர் வீட்டில் இருந்தாலும் கால்பெல் அடித்தால் நாம் தான் போய் திறந்து விடுவது.
9) வாக்கிங் போகிறேன் என்ற பெயர் வழியில் நைசாக பஜ்ஜி போண்டா சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு ஏதாவது சாமான் வாங்கி வருவது.
10) பாத்ரூம் போனால் லைட் மற்றும் ஃபேன் உபயோகித்தால் அணைக்காமல் வந்து மனைவியிடம் திட்டு வாங்குவது.
11) பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது,
12) மனைவியிடம் மற்றும் குழந்தைகளிடமும் நல்லபடியாக வைத்துக் கொள்ள இறைவனிடம் பூஜை செய்வது.
13) பேங்க், போஸ்ட் ஆபீஸ் தபால் கரணை போல் வேலை பார்ப்பது.
14) அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில் அம்பயரின் வேலை பார்ப்பது.
உங்களுக்குத் தெரிந்து வேறு ஏதாவது இருந்ந்தால் கமென்டில் எழுதுங்கள்
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com