✴️✴️✴️✴️✴️
Star Lessons
Lesson no 69
Date 29-9-2022
New Lessons
பாடம் எண் 69
யோகத்தைத் தெரிந்து கொள்ளும் முன் அதன் பெயர் விளக்கத்தைத் தெரிந்துகொள்வோம். ஆர என்னும் வட மொழிச் சொல்லிற்கு நேரடி விளக்கம் இல்லை. ஆரண்யம் (காடு) என்பதன் சுருக்கம் என்கிறது ஒரு நூல்.
செளரி என்பதற்கு சனி என்று பொருளாம்.
சரி எப்படி எடுத்துக்கொள்வது?
எதெது எங்கே இருக்க வேண்டுமோ, அங்கே இருப்பது நல்லது. நம்மைக் கொண்டுபோய்க் காட்டில் விட்டால் என்ன ஆகும்? கிறுக்குப் பிடித்துவிடாதா?
அதுபோல காட்டில் இருக்க வேண்டிய ஒரு சிறுத்தையை வீட்டில் கொண்டு வந்து விட்டால் என்ன ஆகும்? சும்மா விடாமல் ஒரு கரடியுடன் சேர்த்துவிட்டால் என்ன ஆகும்?
அது போன்ற நிலைமைதான் ஆகும்போல உள்ளது, இந்த யோகத்தால்.
----------------------------------------------------------------
சனி மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் அல்லது கூட்டணியால் எற்படுவதுதான் இந்த ஆர செளரி யோகம்!
பலன்: சொல்லும்படியாக இல்லை. ஜாதகனுக்குப் பலவிதமான கேடுகள் ஏற்படும்.
Planetary combination between Saturn
and Mars. It produces serious afflictions.
-----------------------------------------------------------------
என்னவிதமான கேடுகள்?
சனி இரண்டு வீடுகளுக்கு உரியவன், செவ்வாயும் இரண்டு வீடுகளுக்கு உரியவன். இருவரும் மூன்று காரகத்துவங்களுக்கு அதிபதி (authorities for different fortfolios). அவை அத்தனையும் கெடும்.
என்னென்ன கெடும்? இது மேல் நிலைப் பாடம். ஆகவே அதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
எல்லோருக்குமா?
இல்லை!
வழக்கம்போல, அவர்கள் மீது விழும் சுபக்கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை, அதோடு அவர்களின் சுயவர்க்கப்பரல்கள், இருக்கும் இடத்தின் மொத்த வர்க்கப் பரல்கள் ஆகியவற்றை வைத்து ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேறுபடும்.
உதாரணம்?
இது off the record உதாரணம். படித்துவிட்டு மறந்து விடுங்கள்.
ஐந்து அல்லது ஆறு லார்ஜ் விஸ்கியைக் கல்ப்’பாக அடிப்பதற்கும், தண்ணீர் அல்லது சோடா கலந்து அடிப்பதற்கும் உள்ள வித்தியாசம். அல்லது விஸ்கியை ரம் அல்லது பிராந்தியுடன் கலந்து அடிப்பதைப் போன்றது. விஸ்கி எப்படியும் கேடு செய்யும். கலக்காமல் அடித்தால் அதிகக்கேட்டைச் செய்யாதா?
உங்களுக்கு உங்கள் மொழியில் சொன்னால் புரியும் என்பதனால் இதை எழுதியுள்ளேன். மற்றபடி எனக்கு அந்தப் பழக்கம் கிடையாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்:-))))
இந்த அமைப்பு உள்ளவர்கள் கவலைப்பட வேண்டாம். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். ஏனென்றால் ஆண்டி முதல் அரசன் வரை அல்லது ஆட்சியாளர்கள்வரை அனைவருக்கும் 337தான் மதிப்பெண். அதை நினைவில் வையுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com