Star Lessons
Lesson no 62
Date 21-9-2022
New Lessons
பாடம் எண் 62
யோகங்கள்
பாடம்: பரிவர்த்தனை யோகம்
இரண்டு கிரகங்கள் இடம் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது (interchange of places) பரிவர்த்தனை யோகம் ஆகும்!
"Parivartthanai means Planet A
occupies the sign of Planet B while simultaneously Planet B occupies the sign
of Planet A.
Example: Moon occupies Jupiter's (குரு) house and Jupiter (குரு) occupies moon's house
---------------------------------------------------------------------------
இந்த யோகத்தால் இடம் மாறி அமர்ந்த
கிரகங்களின் சக்தியும், வலிமையும் அதிகமாகும். அதேபோல இடம்
மாறிய ராசிகளின் சக்தியும்,
வலிமையும்
அதிகமாகும். அந்தப் பரிவர்த்தனை
ஜாதகனின் வாழ்க்கையில் பல வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்.
Parivartthanai yoga will always increase the power of the two houses involved. It will also increase the power of the two grahas involved.
Increasing the power of the two bhavas
and the two grahas may be helpful for the success of the native.
அது பொது விதி. சில பரிவர்த்தனைகளால் தீமைகள் அதிகமாக ஏற்படும் நிலைமையும் உண்டாகும்
எப்படி?
வாருங்கள். அதையும் பார்ப்போம்.------------------------------------
அந்த மாற்றத்திற்குக் காரணமான
கிரகங்கள் தீய கிரகங்களாக இருந்தாலும், மாறிய
இடங்கள் தீய இடங்களாக (inimical
places) இருந்தாலும்,
அதாவது 6, 8, 12ஆம் வீடுகளாக இருந்தாலும், ஜாதகனுக்குத்
தீய பலன்கள்தான் அதிகமாகக் கிடைக்கும்
ஆகவே பரிவர்த்தனை யோகம் உள்ளது என்றவுடன், யாரும் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம்.-------------------------------------------------------------------------------------
பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், சுபக்கிரகங்களாக இருந்தால், (benefics) ஜாதகனுக்கு அதீத நன்மைகள் கிடைக்கும்.
பரிவத்தனைக்கு உள்ளான கிரகங்கள், அசுபக்கிரகங்களாக இருந்தால், (melefics) ஜாதகன் அதீத தீமைகளையே சந்திக்க நேரிடும்.I
++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com