Astrology: அலசுஙல் 15 புதிருக்கான விடை!!!!
ஒன்றிற்கு இரண்டு ஏன்?
அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, ”ஜாதகருக்கு இரண்டு முறை திருமணம் (That is more than one marriage) 25 வயதில் முதல் திருமணம். 37வது வயதில் மனைவி இறந்து விட்டார். 40 வது வயதில் 2வது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஜாதகப்படி இருதார மனத்திற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள்!” என்று கேட்டிருந்தேன்.
சரியான விடை:
கன்னி லக்கினம். லக்கினாதிபதி நீசம். அத்த்துடன் எட்டாம் அதிபதியுடன் சேர்க்கை. மேலும் 7ம் அதிபதியும் எட்டாம் அதியும் பரிவர்த்தனை. அது நன்மையான பரிவர்த்தனை அல்ல! 2ல் சனி. குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை. 7ம் அதிபதி 8ல் அது மனைவிக்கு கேடானது.
ஜாதகருக்கு துவக்கத்தில் சுமார் 11 ஆண்டுகள் சனி மகா திசை. பிறகு 17 ஆண்டுகள் புதன் மகா திசை (லக்கினாதிபதியின் திசை) அதில் திருமணம் நடந்தது. பிறகு வந்த கேது மகா திசையில் மனைவி நோய் வாய் பட்டு இறந்து விட்டார். பிறகு சுக்கிர மகாதிசை குரு புத்தியில் இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com