Astrology: ஜோதிடம்: 27-12-2021 ம் தேதி புதிருக்கான விடை!
ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்து, ஆசாமி பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை. அதற்குப் பிறகு படிக்கவில்லை. ஏராளமான நண்பர்கள். அவர்களுடன் சேர்ந்து ஊரைச் சுற்றிக் . கொண்டிருக்கிறார். பெற்றவர்களுக்கு ஒரே கவலை. பையன் உருப்படுவானா அல்லது மாட்டானா என்ற கவலை. இருக்காதா பின்னே? ஜாதகத்தை அலசி நீங்கள் பதில் சொல்லுங்கள் பையனுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறதா? அல்லது இல்லையா?” என்று கேட்டிருந்தேன்.
சரியான விடை: லக்கினத்தில் விரையாதிபதி (12th Lord) செவ்வாயின் ஆதிக்கம். அத்துடன் லக்கினாதிபதி குருவின் மேலும் அவருடைய பார்வை உள்ளது.
ஆறு வயது வரை கேது திசை..அதற்குப் பிறகு சுக்கிர திசை. குட்டிச் சுக்கிரன் கூடிக் கெடுக்கும். இவை எல்லாம் சேர்ந்து பையனின் இளம் வயது வாழ்க்கையைக் கெடுத்தன.
ஆனால் லக்கினாதிபதி குரு பகவான் உச்சம் பெற்று வலுவாக இருப்பதாலும், பத்தாம் வீட்டுக்காரன் புதனின் மேல் பார்வையைச் செலுத்துவதாலும், பின் வாழ்க்கை சரியானது. புதன் வர்கோத்தமம் பெற்றிருப்பதைப் பாருங்கள். பையனின் வாழ்க்கை ஒளி மயமானது, தாமதமாக ஒளி கிடைத்தது. out door activities களில் பையன் முனைப்பாக இருந்ததால் யோகா வாத்தியாராக மாறி நன்கு சம்பாதிக்கத்துவங்கினான்.
அடுத்தவாரம் மீண்டும் வேறு ஒரு புதிருடன் நாம் சந்திப்போம்!!!!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------.
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com