Astrology கோள்களும் அவற்றின் சாரமும்! பகுதி 2
கோள் என்றால் கிரகம் (planet) என்று பொருள்படும். சாரம் என்றால் தாவரம், இலை, மூலிகைகள் ஆகியவற்றில் இருந்து எடுக்கப்பெறும் சாறு.essence. அதாவது எடுக்கபெற்ற சாரம்.
கட்டட வேலைகளுக்கு, உயரமான இடத்தில் இருந்து வேலை செய்ய வசதியாகச் சுவரை ஒட்டிக் கம்புகளை ஊன்றி அவற்றின் மேல் கட்டைகளைப் பரப்பிய தள அமைப்பும் சாரம் என்றுதான் சொல்லப்படும் ஆங்கிலத்தில் scaffolding என்பார்கள்.
சஞ்சாரம் என்றால் நடமாட்டம் என்று பொருள்படும். (of human beings) movement. for animals roaming
சரி, கோள்சாரம் (கோச்சாரம்) என்றால் என்ன? கோள்களைப் பிழிந்து எடுக்கும் சாறா? அல்லது சாரமா? கோள்களைப் பிழிந்து எடுப்பதா? அதெப்படி முடியும்? இங்கே அதன் பொருள் கோள்களின் நடமாட்டம் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
கோள்களின் நடமாட்டத்தை எப்படித் தெரிந்து கொள்வது? தெரிந்து கொள்வதால் என்ன பயன்? அதை சற்று விரிவாக, உங்களுக்குப் புரியும்படி சொல்லித் தருவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.
இன்றைய கோள்கள் எங்கே நடமாடிக் கொண்டிருக்கின்றன?
உங்களுக்குப்
பலமுறை சொல்லிக்கொடுத்துள்ளேன். அதன்படி எந்த நாளுக்கும், எந்த இடத்திற்கும், எந்த நேரத்திற்கும் அதைத்
தெரிந்து கொள்ளலாம்.26-8-2021 அன்று மாலை 5 :00 மணிக்கு சிங்காரச் சென்னையில் இருந்து பார்த்தால் கோள்களின்
நிலவரம் கீழே உள்ளபடி இருக்கும்
சூரியன், சிம்மத்தில் செவ்வாயும் சிம்மத்தில் சந்திரன், மீனத்தில் புதன் கன்னியில் சுக்கிரனும் கன்னியில் குரு கும்பத்தில் சனி மகரத்தில் ராகு ரிஷபத்தில் கேது விருச்சிகத்தில் உள்ளன.
என்ன பலன்? ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் மாறும். ஏன் மாறும்?
சனியை
எடுத்துக்கொள்வோம்.மகர ராசிக்காரர்களுக்கு ராசியில் சனி
கடக ராசிக்கார்ர்களுக்கு ஏழில் சனி
கும்ப ராசிக்காரகளுக்கு பன்னிரெண்டில் சனி
இப்படி பல விதமான அமைப்புக்கள். அவற்றிற்குத் தகுந்தமாதிரி கோச்சாரப் பலன்கள் மாறுபடும்
அவற்றை எல்லாம் ஒரு நாள் விரிவாகப் பார்ப்போம்
பிக் அப் அண்ட் டிராப்பிற்கு இவ்வளவுதான் பாடம்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
This comment has been removed by a blog administrator.
ReplyDelete