நமக்கு வரவேண்டியது வந்தே தீரும்
#புருசன் செத்துட்டான்
பொட்டப்புள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் நைட்டு டிபன்கடை போட்டாள் இளவயது ப்ரியா.
கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான் பர்மிசன் யார்கிட்ட கேட்ட மிட்நைட் ஆச்சு கடையைச்சாத்துன்னு
எதையாவது சொல்லிதினமும் ஓசியில வயிறுமுட்ட தின்பான்.
பணம் குடுத்து சாப்பிடுபவர்கள் இன்னும் ஒரு தோசை எக்ஸ்ட்ரா சாப்பிடமாட்டார்களா என ஏக்கமாயிருக்கும். அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறுவாள் ப்ரியா.
ஆனால் இந்த ஓசிபோலீஸ் ஒருதோசை குறைவாக சாப்பிடமாட்டானா என நினைத்தால் அவன் தான் ஆறஅமர உட்கார்ந்து நிறைய தின்னுட்டு பார்சலும் வாங்கிட்டு போவான்.
நம்ம தலைவிதி அப்படின்னு போலீசுக்கு வேண்டாவெறுப்பாக பரிமாறுவாள்.
என்ன சுவையா சமைத்தாலும் டவுனுக்குள் நாலுகடை சாத்தினபிறகுதான் நாலுசனம் வரும் ப்ரியாவின் கடைக்கு...நாலு வருசம் ஆகியும் நயாபைசா மிச்சம் பண்ணமுடியலை.
தனது கைப்பக்குவத்தின் மீது நம்பிக்கைவைத்து வாரக்கந்துக்கு பணம் வாங்கி டவுனுக்குள் கடையை பிடித்தாள்.
ஒரே வாரத்தில் ப்ரியாவுக்கு நம்பிக்கை வந்திடுச்சு அப்பாடா இனி ஓரளவுக்கு தப்பிச்சிடலாம்ப்பா கடை வாடகை, கந்துவட்டி போக நாலுகாசை கண்ணுல பார்த்திடலாம்னு நினைச்சநேரம் மறுபடியும் அதே ஓசி போலீஸ் உள்ளே வர்றான்.
வாடி வா, இன்னைக்கு உன்னை நாலுவார்த்தை நல்லா கேட்கனும். இனி உனக்கு நான் பயப்படத்தேவையில்லை
இன்னிக்கு சாப்பிட்டதுக்கு இப்பவே காசைக்குடுடான்னு சட்டமா கேட்கனும்னு நினைச்சவேளையில். இந்தாம்மா ப்ரியா இதுல ஒரு லட்சரூபாய் இருக்கு, நாலு வருசம் நான் உன் புளியமரக்கடையில் சாப்பிட்டதுக்கான பில்.
உன்புருசன் என்னோட படிச்சவன்தான், புருசன் இல்லாம அந்த நைட்டுநேரம் நீ அந்தஇடத்தில் வியாபாரம் பண்றது எவ்வளவு ரிஸ்க் எனத்தெரிஞ்சதால் உன்னோட பாதுகாப்புக்காகத்தான் நான் தினமும் அங்கே வந்தேன்.
நான் கொடுக்கும் இந்தப்பணம்தான் புளியமரத்தடிக்கடையின் லாப பணம்.வச்சிக்கோ....கையில் கொடுத்தான்
ப்ரியாவுக்கு ஒரு நிமிடம் என்னசொல்வதென்றே தெரியவில்லை, கடைசியாகச்சொன்னாள்...
வாங்க சாப்பிடுங்க!
வாழ்க்கையில நமக்கு வரவேண்டியது வந்தே தீரும் ,
#உழைப்பை
மட்டும் விட்டு விட கூடாது ....😊😊
அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
Good morning sir excellent story about destiny thanks sir vazhga valamudan
ReplyDeleteRespected Sir,
ReplyDeleteHappy morning... Touching post Ji....
Have agreat day.
With love,
Ravi-avn
அன்பின் ஐயா, வணக்கம்.....
ReplyDeleteதங்கள் சகல பதிவுகளும் தேடி தேடிக் கோர்த்த ஆணிமுத்துக்கள் என்றும் சிறந்த கருத்தான பதிவுகள் பார்த்து மனம் நிம்மதி அடைகின்றது....
தங்கள் நற்பணி என்றும் தொடரவேண்டும் என இறையிடன் வேண்டுகிறேன் ஐயா.
அன்புடன்
விக்னசாயி
======================
வணக்கம் குருவே!
ReplyDeleteநெகிழ்ந்து போனேன் வாத்தியாரையா. சிறுகதை ஆனால் அதன் சாரம் உண்மையில்
படிப்பினை!
எக்ஸலண்ட்!
.
நல்லது சண்முகசுந்தரம். உங்களின் பின்னூட்டத்த்திற்கு நன்றி!
ReplyDeleteநல்லது ரவிச்சந்திரன், மனதைத் தொடும் நிகழ்வுதான் அதனால்தான் பதிவிட்டேன். நன்றி
ReplyDeleteநல்லது விக்னசாயி உங்களின் மனம் உவந்த பின்னூட்டத்திற்கு நன்றி!
ReplyDeleteஉங்களின் மனம் நெகிழ்ந்த பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!
ReplyDeleteஉண்மையை உணரவைக்கும் உயிர்துடிப்புள்ள நிஜத்தின் எடுத்துக்காட்டு எனத் தோன்றுகிறது.
ReplyDeleteநல்லது. நன்றி விஜயராகவன்!
ReplyDeleteExcellent Sir..
ReplyDelete