மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.6.20


Astrology: Quiz: புதிர்: 5-6-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகதைக் கொடுத்து, அவர் திருவோண நட்சத்திரம். அவருக்கு திருமணமாகி நல்ல மனைவி கிடைத்தும் நல்ல தாம்பத்திய வாழக்கை அமைந்தும் குழந்தை மட்டும் பிறக்கவில்லை. அந்த மனவருத்தம் அவருக்கு கடைசிவரை இருந்தது. அந்த நல்ல மனிதருக்கு குழந்தை பாக்கியம் ஏன் கிட்டவில்லை? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ஐந்தாம் வீடு கெட்டிருக்கிறது. கேதுவின் ஆதிக்கத்தோடு மாந்தியின் பார்வையும் உள்ளது. குழந்தைக்குக் காரகனான (Authority) குரு பகவான் நீசமாகி விட்டார். அத்துடன் 8ம் அதிபதியின் சேர்க்கையும் அவரை மேலும் வலுவிலக்கச்செய்கிறது. சந்திரனுக்கு 5ம் வீட்டுக் காரரான சுக்கிரன் நீசமாகி விட்டார். அத்துடன் அவர் பாப கர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளார் ஒரு பக்கம் ராகு மறுபக்கம் செவ்வாய் சர்வாஷ்டகவர்க்கத்திலும் பரல்கள் குறைவாக உள்ளன. (5ல் 22 பரல்கள் - குரு இருக்கும் வீட்டில் 20 பரல்கள்) ஆகவே இக்காரணங்களால் ஜாதகருக்கு குழந்தை இல்லை

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 6 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 12-6-2020 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. The given horoscope is having kethu in 5th place.
2. Saturn aspects the 5th place.
3. Jupiter is debilitated.
4. Sukran is debilitated and hemmed between malefics. (Sukran 5th lord from moon)
These are the reasons that the native could not get child in his life.
Thanking you,
Yours sincerely,
C. Jeevanantham.
Friday, June 05, 2020 4:22:00 PM  /////
----------------------------------------
2
/////Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
மீண்டும் புதிருடன் தொடங்கியதற்கு நன்றி
இந்த ஜாதகர் குழந்தை பேறு பெறாமல் போனதற்கு காரணங்கள்
தனுசு லக்கினம் , திருவோண நக்ஷத்திரம் மகர ராசி ஜாதகர் , லக்கினத்திலேயே சனி அமர்ந்ததும் லக்கின அதிபதி குரு நீசம் பங்கம் பெற்றதாலும் நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்தது
ஆனால் குழந்தை பேறு அமைய ஐந்தாம் இடத்தையும் ஒன்பதாம் இடத்தையும் பார்க்க வேண்டும். இவரின் ஐந்தாம் இடத்தில் கேது அமர்ந்ததும், ஐந்தாம் அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்தாலும் , கேது நக்ஷத்திர சாரத்தில் சிம்மத்தில் அமர்ந்து குழந்தை பேறு அமையாமல் செய்தது. மேலும் ஒன்பதாம் இடத்து அதிபதி சூரியனும் பாதகாதிபதி மற்றும் எட்டாம் இடத்து சந்திரனின் நக்ஷத்திர சாரத்தில் அமர்ந்ததால் குழந்தை பேறு அமையவில்லை.
மேலும் நவாம்சத்திலும் ஐந்தில் ராகு உள்ளதும், பாக்கிய அதிபதி பதினொன்றில் சொந்த வீட்டில் கேது வுடன் அமர்ந்து குழந்தை பேற்றினை தர இயலவில்லை
மேலும் ஐந்து மற்றும் பாக்கிய அதிபதி ஒன்பதாம் வீட்டின் மீது சுப கிரகமான குருவின் பார்வை இல்லாமல் போனது ஒரு காரணமாகும்.
நன்றி
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, June 05, 2020 4:29:00 PM /////
--------------------------------------
3
////Blogger vasanth said...
5th house is occupied by malefic planet kethu
5th house lord from moon sign is neecham
puthira karagan guru is neecham.
current dasa also neecham
Friday, June 05, 2020 9:16:00 PM//////
-----------------------------------
4
//////Blogger Jeyalaxmi said...
வணக்கம் ஐயா. புத்திரஸ்தானத்தில் கேது அமர்ந்து பாதகாதிபதி புதன் பார்வையில். குரு நீசம். லக்னத்தில் சனி பகவான் அமர்ந்து சுபன் பார்வையின்றி இருப்பது . பாக்கியாதிபதி சூரியனும் பகைவனான சுக்கிரன் இணைப்பு சனி பார்வை பெற்றது. அம்சத்தில் குரு பகவான் சுக்கிரன் வீட்டில் இருந்து வலு இழப்பு அதனால் புத்திர பாக்கியம் இல்லை. நன்றி வணக்கம்.
Saturday, June 06, 2020 8:49:00 AM///////
------------------------------------------
5
/////Blogger Ram Venkat said...
வணக்கம்.
தனுசு லக்கினம், மகர ராசி ஜாதகர்.
அவருக்கு திருமணமாகி நல்ல மனைவி கிடைத்தும் நல்ல தாம்பத்திய வாழக்கை அமைந்தும் குழந்தை மட்டும் பிறக்கவில்லை.ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்கினாதிபதியும், புத்திர காரகனுமான குரு பகவான் இரண்டாமிடத்தில் நீசமடைந்துள்ளார்.
2) புத்திர ஸ்தானமான மேசத்தில் கேது அமர்ந்துள்ளார். ஐந்தாமிடத்திற்கு ராகுவின் பார்வையுள்ளது.
3) புத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் சிம்மத்தில் கேதுவின் நட்சத்திரமான மகத்தில் அமர்ந்துள்ளார். செவ்வாய் மற்றும் குரு 6/8 நிலைப்பாட்டில் உள்ளனர்.
4) 5மிடத்திற்கும் (பரல் 22 மட்டுமே),அதன் அதிபதிக்கும் சுப கிரக‌ பார்வையில்லை.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை.
Saturday, June 06, 2020 8:17:00 PM //////
------------------------------------------------
6
/////Blogger seethalrajan said...
உங்கள் உடல் நலம் பெற்று நீண்ட நாள் வாழ ஆண்டவனை கேட்டுக்கொள்கிறேன் ஐயா.
இந்த ஜாதகத்தில் 5ல் கேது, 5ம் அதிபதி செவ்வாய் கேதுவின் சாரம், காரகன் குரு நீச்சம், 3ம் கெட்டு விட்டது, வீடு, பாவதிபதி, காரகன் மூன்றும் கெட்டு விட்டதால் குழந்தை இல்லை.
Sunday, June 07, 2020 12:46:00 AM///////
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com