இந்தியாவின் மிகப்பெரிய கோயில் எது தெரியுமா?
தெரிந்து கொள்வோம்‼
33 ஏக்கர் (14 லட்சம் சதுரடி) நிலப்பரப்பில் திருவாரூரில் அமைந்துள்ள, தியாகராஜர் கோயில்தான் இந்தியாவின் மிகப் பெரிய கோயிலாகும்!
🏵 9 ராஜ கோபுரங்கள்,
🏵 80 விமானங்கள்,
🏵 12 பெரிய மதில்கள்,
🏵 13 மிகப்பெரிய மண்டபங்கள்,
🏵 15 தீர்த்தக்கிணறுகள்,
🏵 3 நந்தவனங்கள்,
🏵3 பெரிய பிரகாரங்கள்,
🏵 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்),
🏵 100க்கும் மேற்பட்ட சன்னதிகள்,
🏵 86 விநாயகர் சிலைகள்,
🏵 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் என 33 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக விளங்குகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
சோழர்கள் கட்டிய கோவில் இது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலை சிறப்பாக நிர்வகித்துள்ளனர்.
*திருவாரூர் கோவிலுக்கு அழகு தருவது சுமார் 120 அடி உயரமுள்ள அதன் ராஜகோபுரமாகும்.*
தெற்கு வடக்காக 656 அடி அகலமும்,
கிழக்கு மேற்காக 846 அடி நீளமும்,
சுமார் 30 அடி உயரமுள்ள மதிற்சுவரை
நான்கு புறமும் கொண்டுள்ள நிலப்பரப்பில் ஆலயம் அமைந்துள்ளது.❗
நான்கு புறமும் கோபுரங்களையும், தேர் ஓடும் வீதியையும் சேர்த்து ஐந்து பிராகாரங்களுடனும் இவ்வாலயம் அமைந்துள்ளது.🙏
ஸ்வாமியின் நடனம் அஜபா நடனம்.
ஸ்வாமி திருமேனி தரிசனம் கிடையாது. மார்கழி திருவாதிரை ஒரு பாதமும், பங்குனி உத்திரம் மற்றொறு பாதமும் தரிசனம் கிடைக்கும்.🙏
திருமேனியை யாரும் பார்த்தது கிடையாது. பார்த்தால் கண் குருடாகிவிடும் என்பதால் யாருக்கும் தரிசனமும் கிடையாது❗
அர்ச்சகர்களும் பார்த்தது கிடையாது.
கிழக்கு கோபுரத்தின் உள்புறம் உள்ள 1000 கல்தூண்கள், முன்காலத்தில், திருவிழாக்காலங்களில் பந்தல் போடுவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் கோவில், அதன் முன்புறமுள்ள கமலாலயம் குளம், கோவிலைச் சார்ந்த தோட்டம் ஆகியவை ஒவ்வொன்றும் 5 வேலி நிலப்பரப்பில் அமைந்துள்ளதான சிறப்பு இத்தலத்திற்கு உண்டு.
*கோயில் ஐந்து வேலி,*
*குளம் ஐந்து வேலி,*
*செங்கழுநீர் ஓடை ஐந்து வேலி*
என்ற பழமொழி மூலம் இதன் சிறப்பை உணரலாம். (ஐந்து வேலி என்பது 1000 அடி நீளம் 700 அடி அகலம்).
கோவிலின் மொத்த பரப்பளவு 33 ஏக்கர் ஆகும். அதாவது பதினாலு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து நானுற்று என்பது
(1437480 ) சதுர அடியாகும்
இவ்வளவு பிரமாண்டமான ஆலயத்தை முழுமையாக தரிசனம் செய்து முடிக்க வேண்டுமானால் ஒரு நாள் முழுவதும் செலவிட்டால் தான் முடியும்.
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
--------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
yes Sir. I had visited several times.
ReplyDeleteNice Info sir .
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteநீங்கள் எழுதி இருந்தது சரி தான் ... ஆனால் இந்தியாவின் மிக பெரிய கோவில் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவில் தான் , இந்த கோவில் 156 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteyes Sir. I had visited several times.////
நல்லது நன்றி கிருஷ்ணன் சார்!!!!
//////Blogger Shanmugasundaram said...
ReplyDeleteGood morning sir very useful information thanks sir vazhga valamudan/////
நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!
////Blogger atamilan@gmail.com said...
ReplyDeleteNice Info sir ./////
நல்லது. நன்றி நண்பரே!!!!
/////Blogger P. CHANDRASEKARA AZAD said...
ReplyDeleteவணக்கம்
நீங்கள் எழுதி இருந்தது சரி தான் ... ஆனால் இந்தியாவின் மிக பெரிய கோவில் ஸ்ரீரங்கநாத ஸ்வாமி கோவில் தான் , இந்த கோவில் 156 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்./////
நல்லது. தகவலுக்கு நன்றி நண்பரே!!!!