Astrology: Quiz: புதிர்: காலம் வெல்லும் வென்றபின்னே வாங்கையா வாங்க!
ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. பரணி நட்சத்திரக்காரர். கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டார். சொந்தத் தொழில் துவங்கி நஷ்டப்பட்டு அதையும் ஊற்றி மூடிவிட்டு வந்துவிட்டார்,
பிறகு அரபு தேசத்தில் ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தவர்,
அதையும் உதறித்தள்ளி விட்டு ஊருக்குத் திரும்பி விட்டார், எல்லாம் அவருடைய 28 வயதிற்குள் அரங்கேறியவை.
கேள்விகள் இதுதான்:
1, அவருக்கு ஏன் இந்த நிலைமை?
2.நிரந்தமான வேலை எப்போது கிடைக்கும்?
ஜாதகத்தை அலசி இவற்றிற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!
சரியான விடை 17-11-2019 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:
======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteஜாதகர் 26 ஜன்வரி 1969 அன்று மாலை 3 மணி 18 நிமிடங்களுக்குப் பிறந்தவர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.
ReplyDeleteஜாதகருக்கு 8ம் இடத்துக்காரனான சனி 10ம் இடமான வேலைக்கான இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அவரோடு கூட ராகுவும் சேர்ந்துள்ளார்.10 இடத்துக்கான குரு பகவான் கேதுவுடன் கூட்டணி.
எனவே அடிக்கடி வேலை மாற்றம். நிலையான வேலை சந்தேகம்.
லக்கினாதிபதி 8ல் மறைந்து வக்கிரம் அடைந்து சூரியனால் எரிக்கப்பட்டார்.லக்கினத்திலேயே மாந்தி.
படிப்புக்கான இடம் 4ன் அதிபதியும் கல்விக்கான காரகன் புதன் 8ல் மறந்து வக்கிரம் அடைந்து சூரியனால் எரிக்கப்பட்டதால் படிப்பு பாதியில் நின்றது
சுய தொழில் வியாபாரத்திற்கான 3ம் இடத்துக்காரன் சூரியன் 8ல் மறைந்து தன் வீட்டிற்கு 6ல் நின்றார். எனவே சுய தொழில் நட்டம் ஏற்பட்டது.
செவ்வாயும் சனியும் 6 8 ஆக நின்றது. பாக்கிய ஸ்தனமான 9ம் இடம் சனி ராகு, சூரியன் ஆகியவர்களால் சூழப்பட்டு 12ம் அதிபதியால் நிறந்துள்ளது. எனவே மிகவும் பாக்கியக்குறைவு.
ராகு தசா ராகு புக்தி நவ்ம்பர் 1997 வரை,,28 வயதுவரை, நீடித்தது.அதுவரை சிரமமதான். ராகு 10ல் நின்றதால் அதன் பின்னர் சிறிது சிறிதாக முன்னேற்றம் கண்டார். குரு தசா 2013ல் வந்தபோது 44 வயதில் நல்லபடியாக வாழ ஆரம்பித்தார்.
kmrk1949@gmail.com
ஐயா கேள்விக்கான பதில்
ReplyDelete1 .லக்கினாதிபதி எட்டில்
2 .பத்தாம் வீட்டில் சனியும் ராகுவும்
3 .புதன் எட்டில் அமர்ந்ததால் படிப்பை பாதியில் விட்டுஇருக்கிறார்
4 தன 19 வயதில் 2ஆம் வீடு அதிபதி சந்திரனின் தொழில் துவங்கியவர் ஆறாம் அதிபதி செவ்வாயின் parvayal தொழிலை கைவிட்டுருக்கிறார் அடுத்து வந்த செவ்வாய் திசை சுக்கிர புத்தியில் வெளிநாடு சென்ரிய்ந்தாலும் 6-ம் இடத்தானின்திசை பலன் அளிக்க வில்லை
அடுத்துவரும் ராகு திசை குரு புத்தியில் அவருக்கு நல்ல வேலை கிடைத்து அமோக இருப்பார் ஏனனில் பத்தாம் அதிபதி குரு சண்டாள யோகத்துடன் பத்தாம் வீட்டையும் எட்டாம் வீட்டையும் தன பார்வையில் வைத்துள்ளார்
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
வணக்கம்
ReplyDeleteதாங்கள் கேட்ட கேள்விக்கான பதில்
மிதுன லக்கினம் , பரணி நக்ஷத்திரம் மேஷ ராசி ஜாதகர் வேளையில் பிரச்சினை ஏற்பட்டதிற்கான காரணங்கள்
1 பொதுவாக வேலை பற்றிய நிலை அறிய பத்தாம் இடத்தையும் பத்தாம் இடத்தின் அதிபதி நிலையையும் , பத்தாம் இடத்து மீது உள்ள கிரகங்களின் பார்வையையும் பார்க்க வேண்டும்.
2 இந்த ஜாதகருக்கு பத்தாம் இடத்தில் சனியுடன் ராகு சேர்ந்து நிலையை மோசமடைய செய்தது. மேலும் பத்தாம் இடத்தின் மேல் கேதுவின் பார்வை வரும் நிலைமை மோசமடைய காரணமாகும்.
3 இவருக்கு 24 வயதில் ராகு தசை வேறு வந்து வேலையையே நாசம் செய்து , ஏற்ற இறக்கமான நிலை ஏற்பட்டது.
4 பத்தாம் இடத்து அதிபதி குருவின் பார்வை பத்தாம் இடத்தின் மேல் விழுவதால் , குரு அசுப கிரகமாக இருந்தாலும் குரு தசையில் இருந்து நிலைமை சரியாகி நல்ல நிலை அடைந்தார்.
நன்றி
இப்படிக்கு
ப சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
வணக்கம் ஐயா🙏
ReplyDelete1. மிதுன இலக்கினம், மேச இராசி ஜாதகம்.
2. அவரின் இந்த நிலைமைக்கு ஆறாம் அதிபதியின் பார்வையில் உள்ள சந்திரதசை, அடுத்து வந்த ஆறாம் அதிபதியான செவ்வாயின் தசை நடந்ததே காரணம் ஆகும்.
தொழில் தானமாகிய பத்தாமிடம் ராகு கேதுவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் கர்மகாரகன் சனி மற்றும் கருமகாரகாதிபதி குரு ஆகியோர்களும் ராகு கேதுவின் பிடியில் அகப்பட்டு உள்ளார்கள். ஆகவே அவருக்கு இந்த குறிப்பிட்ட வயது வரை தொழில் நிலையில் போராட்டம் ஏற்பட்டது.
3. அதன்பின் வந்த ராகு மகா தசையில் சனி புத்தியில் அவருக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும். ஏனெனில் பத்தாமிட ராகு, பத்தாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதி சனி, இவர்கள் மேல் பத்தாமிட அதிபதி குருவின் பார்வை ஆகியவற்றால் பலன் கிடைக்கும்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
ஐயா வணக்கம், கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் 19 வயது முதல் 26 வயது வரை மிதுன லக்னத்திற்கு வரவே கூடாத செவ்வாய் தசை நடை பெற்றது அதலால் செவ்வாய் எல்லாவற்றையும் கெடுத்தார். (செவ்வாய் திரிகோணம் ஏறியது மிகவும் கேட்டது) பிறகு வந்த ராகுவும் சனியுடன் சேர்ந்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார் எனவே ராகு தசையும் அவருக்கு கைகொடுக்கவில்லை. நன்றி
ReplyDeleteஅய்யா வணக்கம்!
ReplyDeleteஜாதகர் ஜனவரி 26 1969 ல் மிதுன லக்கினத்தில் பிறந்தவர். யோகாதிபதி சுக்கிரன் தசையில் பிறநது 3 வருடங்கள் குழந்தை பருவத்துடன் முடிந்தது. நண்மைகளை அளிக்க முடியாத சூரிய தசை 6 + 10 வருட சந்திர தசை + தீமை மட்டுமே செய்யும் செவ்வாய் தசை 7 வருடம் என 26 வருடங்கள். 10ல் இருக்கும் ராகு தசை சுய புத்தி 3 வருடங்கள் என 29 வருடங்கள் கழிந்தது.10ம் அதிபதி 10ல் உள்ள தன் வீட்டை தானே பார்ப்பதாலும் தொழில் காரகன் சனி 10ல் இருப்பதாலும் லக்கினாதிபதி புதன் 8ல் அமர்ந்து 2ம் வீட்டை பார்த்ததாலும் 30 வயதிற்க்கு மேல் வந்த ராகு தசை குரு புத்தி புதன் அந்தரத்தில் வேலை கிடைத்திருக்கும். காரகன் சனி 10ல் இருந்து விரய வீட்டை பார்ப்பதாலும் ஸ்தானாதிபதி குரு(பாதகாதிபதியும் ஆகியதால்) 12ம் வீட்டை பார்ப்பதாலும் ஜாதகருக்கு நிரந்தர வேலை என்பதற்க்கு வாய்ப்பில்லை.
அன்புடன்
-பொன்னுசாமி.
வணக்கம்,
ReplyDeleteமிதுன லக்கினம், மேஷ ராசி ஜாதகர்.
அவருடைய 28 வயதிற்குள் படிப்பு ஏறவில்லை... செய்தொழிலில் நஷ்டம்... கிடைத்த வேலை வாய்ப்பிலும் நிலையாமை போன்ற ஏமாற்றங்கள்.. ஜாதகப்படி என்ன காரணம்?
1) லக்னாதிபதி புதன் 8ல் மறைவு.
2) தொழில் ஸ்தானத்தில் காரகன் சனி மற்றும் ராகுவின் கூட்டமைப்பு. காரகோ பாவ நாசய: என்பதற்கு ஏற்றாற்போல் தொழில் நிலையாமை..
3) தொழில் ஸ்தானாதிபதி குரு நாலில் கன்னியில் அமர்ந்து கேதுவுடன் கூட்டு, சனியின் நேர் பார்வையில் உள்ளார்.
மேற்கண்ட காரணங்களால் ஜாதகருக்கு இந்த நிலைமை ஏற்பட்டது.
நிரந்தர வேலை, ராகு தசை, குரு புத்தியில் அமைய வாய்ப்புள்ளது.
-இரா.வெங்கடேஷ்.