மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

20.8.19

மிகச் சிறந்த பரிகாரம் எது?


மிகச் சிறந்த பரிகாரம் எது?

பரிகாரங்களில் மிகச் சிறந்தது கோவிலில் சுத்தமான நெய் தீபம் ஏற்றுவதே....
பொய் விளக்கு வேண்டாம்:-

(நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் – ஆலயங்களில் நடக்கும் நெய்தீப ஊழல்)

தர்ம சாஸ்திரங்கள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள், விரதங்கள், பிரார்த்தனைகள், வேண்டுதல்கள், பரிகார பூஜைகள் எல்லாம் காலம் காலமாக தொன்றுதொட்டு நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயங்களாகும். பரிகாரம் என்பது கஷ்ட நஷ்டங்கள், இடையூறுகள், தடைகளை அகற்றி நல்வழி காட்டுமாறு கடவுளிடத்தில் வேண்டிக் கொள்வதாகும்.

திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.

மிக கடுமையான பிரச்சனைகளுக்கு நல்ல சுத்தமான நெய்யை, இறைவனின் கருவறையில் சுடர்விட்டு பிரகாசிக்கும் தூங்கா விளக்கில் சேர்த்து வந்தால் போதும். இப்படி தூங்கா விளக்கினை நெய்யால் மூன்று வேளைகளில் தொடர்ந்து தீபம் ஏற்றி வர நாம் எண்ணிய காரியம் நிறைவேறும்.

இத்தகைய தீபம் உடலில் இருந்து பிரிய போகும் ஒரு ஜீவனின் நேரத்தையே தள்ளிப்போடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது ஆகும். ஆகவே பல ஆயிரம் செலவு செய்து பரிகாரங்கள் பண்ணுவதைவிட ஒரு நெய்தீபம் ஏற்றுவது சிறந்தது.

              இருப்பினும்.....

ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவு இது …

இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:

அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி, மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து, கோடிக்கணக்கில் கொள்ளை அடிக்கின்றார்கள் …

முதலில் இந்த கடைகளில் உள்ள நெய்விளக்குகளை ஒருநாளாவது முகர்ந்து பார்த்து இருக்கின்றீர்களா? ஒரு நெய் விளக்கு” 3 ரூபாயில்” ஏற்ற முடியுமா?

இன்றைய நாளில், ஒரு கிலோ “தூய பசு நெய்யின்” விலை 1 கிலோ, 450 முதல் 550 ரூபாய் வரை. ஒரு கிலோ பசு நெய்யில், அதிகபட்சமாக 75 விளக்குகளை ஏற்றுவதாக வைத்துக் கொண்டாலும் ,விளக்கு மற்றும் திரி உள்பட குறைந்தது 6.50 ரூபாய் செலவாகும். ஆனால் 10 ரூபாய்க்கு 3 நெய் விளக்கு எப்படி,ஆலயங்களில் இவர்களால் விற்கப்படுகிறது?

உண்மையான பசு நெய் கொண்டு ,ஏற்றப்படும் விளக்கின் ஒளி,ஒரே சீராக வெள்ளை ஒளியாக, நறுமணத்தோடு இருக்கும் .அந்த ஒளி வெள்ளத்தில், அந்த இடத்தில் உள்ள காற்று தூய்மையாகி, பிராண வாயு சுத்தமாக கிடைக்கும்.

ஆனால் இந்தமாதிரி,தரமற்ற “பசை விளக்குகள்” சரிவர எறிவதும் இல்லை, அதோடு ஒருவித நாற்றமும் அடிக்கிறது, வருடம் முழுவதும் கொளுத்தும் 100 டிகிரி வெய்யிலில் ,நமது உடம்பே உருகி விடும்போல் இருக்கின்ற நிலையில், இந்த “பசை விளக்குகள்” அக்னி வெய்யிலில் கூட உருகாமல், கல்லுமாதிரி இருப்பதை கவனியுங்கள்.

முன்பு எல்லாம் மக்கள் தங்களின் வீடுகளில், பசுவினை வளர்த்து, அதன் பாலில் இருந்து, தயிர், வெண்ணை, நெய் முதலானவற்றை ஆலயங்களில் உள்ள இறைவனுக்கு உபயோகப் படுத்தினார்கள். .பின்னர் கால ஓட்டத்தின் காரணமாக, கடைகளில் இருந்து “வெண்ணை” வாங்கி காய்ச்சி, உருக்கி , அதில் இருந்து நெய்யை உபயோகப்படுத்தினார்கள், பின்னர் கடைகளில் “பசு நெய்” வாங்கி விளக்கு ஏற்றினார்கள்.. நாள்பட பசு நெய் என்பது மறைந்து, பல வண்ண டப்பாக்களில், பல வித பெயர்களில் கடைகளில் விற்கப்படுகின்ற “நெய்யினைக்” கொண்டு விளக்கேற்றினார்கள். ஆனால் தற்பொழுது ,நெய் வாங்கி விளக்கு ஏற்றுவதை மறந்து, சோம்பலின் காரணமாகவும், வசதியின் பொருட்டும், தற்பொழுது ஆலயங்களில், “நெய் தீபம்” என்ற பெயரில் விற்கப்படும், “பசை விளக்குகளை.. கோயிலின் உள்ளே கடைவிரித்து ஏமாற்றுகின்ற போலி வியாபாரிகள் கொள்ளையடிக்க நெய் விளக்கு என்ற பெயரில், விலை கொடுத்து பொய் விளக்கை வாங்கி, கோயிலில் ஏற்றிவிட்டு, விளக்கு ஏற்றும்போது கைகளில் பட்டுவிட்ட, நாற்றம் பிடித்த “பசையினை” கோயில் தூண்களில் தடவி கோயிலையும் நாறடித்துவிட்டு போவது அல்ல பக்தி என்பதை நினைவில் கொள்ளுங்கள், நாம் கோயிலுக்கு செல்வதே பாவங்களை தொலைக்கத்தான். அப்படி இருக்க இந்தமாதிரி போலியான பொய் விளக்குகளை” வாங்கி, மேலும் மேலும் பாவ செயல்களை செய்ய வேண்டாம்.

                    நம்முடைய இயலாமை, சோம்பேறித்தனம், மற்றும் பணத்தினை கொண்டு அனைத்தையும் வாங்கிக் கொள்ளலாம் என்ற தவறான சிந்தனை ஒன்றே இன்று ஆலயங்களில் கூட ,அநியாயங்கள் அளவின்றி நடைபெறக் காரணமாக இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்…

மேற்கூறிய அனைத்து விவரங்களும் நல்லெண்ணெய் விளக்கேற்றுதலுக்கும் பொருந்தும்..
                பொய் விளக்கேற்றி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள் உறவுகளே!!!
                      ஏமாற்றுபவர்களுக்கும் நமக்கும் என்ன  வேறுபாடு?
     
          - சித்தர்களின் குரல்
---------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
=============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7 comments:

  1. வணக்கம் குருவே,
    நெய் விளக்கு பரிகாரம் எவ்வளவு உத்தமமானது என்பதன் விளக்கம் அருமை.
    அதன்படியே செய்கிறோம் ஆசானே

    ReplyDelete
  2. Good information guruji.. thank you so much sharing this information..

    திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.

    super sir.. one more request for this line sir பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன please explain this secrets sir.. it will helpful for us. thank you so much.

    ReplyDelete
  3. நீங்கள் நெய் தீபம் கொண்டு சென்றால் பல இடங்களில் அனுமதி இல்லை அல்லது அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாற கோவில்கள்.

    ReplyDelete
  4. //////Blogger வரதராஜன் said...
    வ/ணக்கம் குருவே,
    நெய் விளக்கு பரிகாரம் எவ்வளவு உத்தமமானது என்பதன் விளக்கம் அருமை.
    அதன்படியே செய்கிறோம் ஆசானே//////

    நல்லது. நன்றி வரதராஜன்!!!!

    ReplyDelete
  5. //////Blogger venkateshsrm@gmail.com said...
    Good information guruji.. thank you so much sharing this information..
    திருக்கோயிலில் தீபம் ஏற்றுவது மிக சக்தி வாய்ந்த பரிகாரம் ஆகும். அதுவும் அதிகாலை, நண்பகல் (உச்சிவேலை), அந்தி பொழுதில் ஏற்றப்படும் தீபங்களுக்கு மிகவும் விஷேச சக்தி உண்டு. அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன. கோவில்களில் இந்த மூன்று வேளைகளில் ஏற்றப்படும் தீபம் உடனுக்குடன் துன்ப நிவர்த்தியை தரும்.
    super sir.. one more request for this line sir பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன please explain this secrets sir.. it will helpful for us. thank you so much.//////

    நல்லது. உங்கள் கேள்விக்கான பதிலை அறிந்து கொண்டு எழுதுகிறேன். நன்றி!!!!!!

    ReplyDelete
  6. //////Blogger SELVARAJ said...
    நீங்கள் நெய் தீபம் கொண்டு சென்றால் பல இடங்களில் அனுமதி இல்லை அல்லது அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாற கோவில்கள்.//////

    நல்லது. தகவலுக்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  7. வணக்கம். குரு அவர்களுக்கு..
    இந்த பகுதி என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.. மிகவும் நன்றி..‌‌‌‌‌‌‌‌*அதில் பல சூட்சும ரகசியங்கள் அடங்கி உள்ளன* மீண்டும் மீண்டும் இந்த வரிகள் ஞாபகத்திற்கு வருகிறது..மீண்டும் படிக்கிறேன்....நன்றி..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com