மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.10.18

முதுமையும் தனிமையும் எல்லோருக்கும் உண்டு!!!


முதுமையும் தனிமையும் எல்லோருக்கும் உண்டு!!!

*முதுமை + தனிமை =*   *கொடுமை*

*பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!*
*வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...*

*இங்கு... 70 வயதிற்கு மேல்... வாழ்ந்த வீட்டிலேயே தனிமை...*

*இங்குதான் என் மகள் படிப்பாள்...*

*இங்குதான் விளையாடுவாள்...*

*என் மகன் கிரிக்கெட் ஆடி உடைத்த ஜன்னல் இதுதான்...*

*என்று ஏதோ ஆர்க்கியாலஜி போல அவைகளை நினைத்துப் பார்த்து....*

*என்ன சமைப்பது?...*

*என்ன சாப்பிடுவது?...*

*அரை டம்ளர் அரிசி வடித்தாலே மிச்சம்..*

*பல காய்கள் உடலுக்கு ஒத்துக் கொள்ளாது...*

*தனிமை... வெறுமை...*

*அவர்கள் இருக்கும் இடத்திற்கு போகலாம் என்றால்...*

*பயணம் ஒரு கொடுமை...*

*லோயர் பர்த் கிடைக்கவில்லை - என்றால் எல்லோரிடமும் பிச்சை எடுக்க வேண்டும்...*

*சென்னை சென்ட்ரல் - போய்ச் சேருவதே ஒரு யாத்திரை ஆகிவிட்டது...*

*ஓலாவும், ஊபரும்...*நமக்கு தேவைப்படும் நேரத்தில், *பீக் hour சார்ஜ்*போட்டு களைப்படைய செய்கின்றனர்...

*நான்கு அடி உயர பச்சை குதிரை தாண்டிய கால்கள்....*

இன்று *சென்ட்ரலில், அரை அடி படி ஏற... இறங்க... கைப்பிடி கேட்கிறது...*

*எல்கலேட்டரில் போக மனசு குதித்தாலும்...*

*வாட்ஸ்ஆப் வீடியோக்கள் மனதில் வந்து, வந்து பயமுறுத்துகின்றன!*

இவை வேண்டாமென ஒதுங்கி...

*பிள்ளையை வாட்சப்பில் பிடிப்போம்...*

*பெண்ணை வீடியோ காலில் அழைப்போம்...* என்றால்...

அந்த நேரம் அவர்கள்...

*ஏதோ ஒரு மாலில்...*

*ஏதோ ஒரு ஓட்டலில்...*

*ஏதோ ஒரு சினிமா தியேட்டரில்...*

*பிசியாக இருப்பார்கள்...*

*"ஏதாவது அர்ஜன்ட்டா? அப்புறம் கூப்பிடறேம்ப்பா..." என்பார்கள்...*

*"இல்லை" என்று ஃபோனை கட் பண்ணி விடுவோம்...*

*நாலு நாள் கழித்து...*

*"எதுக்குப்பா ஃபோன் பண்ணினே?" என்று கேட்பர்...*

நான் பாசத்தோடு வளர்த்த என் பிள்ளைகள்...

*அவர்கள் டைமிற்கு...*

*நம் தூக்க நேரம்...*

*பாசத்தை என்றும் மிஞ்சுகிறது தூக்கம்!*

*நமக்கு பேரப் பிள்ளைகளின் மேல் இருக்கும் பாசம்...,*

*அவர்களுக்கு, நம்மிடம் இருக்காது.*

*மூன்று வயது வரைதான் தாத்தா... பாட்டி... என்று அடிக்கடி ஃபோனில் கூப்பிட்டு பேசுவர்...*

*பிறகு எப்போது அவர்களை ஃபோனில் அழைத்தாலும்...*

*அவன் வெளியே விளையாடறான்...*

*அவன் கம்ப்யூட்டர் கேம்சில் இருக்கான்...*

*அவன் டியூஷன் போயிருக்கான்...*

*யோகா போயிருக்கான்...*

*என்று ஏதோ ஒரு பதில் மட்டுமே கிடைக்கும்...*

*எப்போதாவது குழந்தை முகம்... ஃபோனில்... வீடியோ காலில்...*

*முகத்தைக் காட்டி... ஹாய்... என்று ஒன்றைச் சொல் சொல்லி விட்டு...*

*ஓடி விடும்...*

*என் தாடி வளர்ந்த வயதான முகம் அதற்கு நெருடலாய் இருக்குமோ?...*

*நமது பண்பாடு... கலாச்சாரம்... தாத்தா பாட்டி உறவுகள்...*

*அனைத்தையும் டெக்னாலஜி முழுங்கி விட்டது!...*

*எத்தனை நேரம்தான் டிவி பார்ப்பது...?*

*இந்த அரசியல்களும்...*

*இந்த பொய்களும் B Pயை உயர்த்துகின்றன!...*

*என் சொந்த வீடே... எனக்கு அனாதை  இல்லமாகிப் போனது...*

*ஏதோ... வாட்சப்... Facebook... இருப்பதால் பைத்தியம் பிடிக்காமல் இருக்கிறது...!*

*மகனும், மகளும் போடும் Status-தான்... என் அன்றாட சுவாரசியங்கள்...*

*"எப்படிப்பா இருக்கே?" என்று மற்றவர்கள் கேட்கும்போது...*

( விட்டுக் கொடுக்க முடியுமா... என் பிள்ளைகளை...)

*"எனக்கென்னப்பா... ஜாம் ஜாம்ன்னு... பசங்களோட..., பேரனுங்களோட... அட்டகாசமா..."*
( மனதுக்குள் *ஏதோ...*) *வாழ்கிறேன்!*

*பல குழந்தைகளின் தாத்தா, பாட்டிகளுக்கு... இது சமர்ப்பணம்!*
----------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
===================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12 comments:

  1. "பசங்களோட பேரன்களோட அட்டகாசமா இருக்கேன்...

    ஒரே நேரத்தில் பொய்யும் மெய்யும்.

    மனசளவில் வாழ்க்கை!

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா,நெஞ்சைத் தொடும் பதிவு.உண்மை கசக்கிறது.நன்றி.

    ReplyDelete
  3. Respected Sir,

    Happy morning... Nice sir...

    Thanks for sharing...

    With regards,
    Ravi-avn

    ReplyDelete
  4. கனத்த நெஞ்சு...
    கண்ணீரை மட்டுமே .......

    வார்த்தைகள் வரவில்லை
    வாழ்க்கையின் முடிவுரை

    காணல் நீரோ???!!!😭😭😭

    ReplyDelete
  5. ////Blogger ஸ்ரீராம். said...
    "பசங்களோட பேரன்களோட அட்டகாசமா இருக்கேன்...
    ஒரே நேரத்தில் பொய்யும் மெய்யும்.
    மனசளவில் வாழ்க்கை!/////

    இரண்டையும் சொல்லித்தான் ஆக வேண்டும். நன் றி நண்பரே!!!!!

    ReplyDelete
  6. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நெஞ்சைத் தொடும் பதிவு.உண்மை கசக்கிறது.நன்றி.///////

    இறைவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். நிம்மதியை அவன்தான் தரமுடியும். நன்றி ஆதித்தன்!

    ReplyDelete
  7. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Nice sir...
    Thanks for sharing...
    With regards,
    Ravi-avn///////

    நல்லது. நன்றி அவனாசி ரவி!!!!

    ReplyDelete

  8. ////Blogger kmr.krishnan said...
    good lamentation./////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!

    ReplyDelete
  9. /////Blogger J Murugan said...
    கனத்த நெஞ்சு...
    கண்ணீரை மட்டுமே .......
    வார்த்தைகள் வரவில்லை
    வாழ்க்கையின் முடிவுரை
    காணல் நீரோ???!!!😭😭😭//////

    நல்லது. நெஞ்சைத் தொடும் உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  10. ஆம். உண்மை. அவர்களின் ஆதங்களுக்கு சீக்கிரம் விடிவு கிடைக்கட்டும். இறைவன் அருள் செய்யட்டும்!

    ReplyDelete
  11. /////Blogger S.Shanmuganandam M.A.B.Ed., said...
    ஆம். உண்மை. அவர்களின் ஆதங்களுக்கு சீக்கிரம் விடிவு கிடைக்கட்டும். இறைவன் அருள் செய்யட்டும்!//////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com