மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

15.11.17

உதவிக்கரம் நீட்டுங்கள்!

உதவிக்கரம் நீட்டுங்கள்!

நம் வகுப்பறையின் மூத்த மாணவர்.கே.முத்துராமகிருஷ்ணன் (KMRK) லால்குட, அவர்களின் சமூகசேவை.

அவர் பல ஆண்டுகளாக சமூக சேவை செய்து வருகிறார். அதுபற்றி முன்பு வெளியான கட்டுரையின் சுட்டியைக் கொடுத்துள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள்:

http://classroom2007.blogspot.in/2011/04/blog-post_11.html

அவரைப் பல ஆண்டுகளாக நான் நன்கு அறிவேன்’

தற்சமயம் தனக்குச் சொந்தமான 4000 சதுர அடி பிளாட் ஒன்றினை சேவாலயா(www.sevalaya.org) என்ற தொண்டு நிறுவனத்திற்கு தானமாக அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனைக்கட்டில் அவர்கள் அவருடைய தந்தையாரின் பெயர் (காந்தி ஆசிரமம் கிருஷ்ணன்) சூட்டி ஒரு முதியோர் இல்லம் கட்டிடம் கட்டி நிர்வகிக்க வேண்டும் என்பது அவருடைய வேண்டுகோள்.அதனை அவர்கள் ஏற்று ஆயத்தப் பணிகள் நடந்து வருகின்றன.

அதற்காக நன்கொடை வேண்டி பலரையும் அணுகியுள்ளார்கள். கட்டிடப் பணிகளுக்கு ஒரு சதுர அடிக்கு ரூ2000/‍ தேவைப்படுகிறது.  அது போல 2000 சதுர அடி கட்ட ரூ 40 லட்சம் போல வேண்டியுள்ளது.

அதற்கான வேண்டுகோள் மடல் ஒன்றை எழுதியுள்ளார். நம் வகுப்பறையில் வெளியிடவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சேவாலயா நிறுவனத்தைப் பற்றிய தகவல்கள் கீழே உள்ளன.

மேல் அதிகத் தகவல்களுக்கு அவருடைய மின் அஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

சேவாலயாவின் வங்கிக் கணக்கு விபரங்களை அவர் உங்களுக்கு அனுப்பி வைப்பார்.

K.Muthuramakrishnan
email ID:  kmrk1949@gmail.com
mobile number : 9047516699

நல்ல மனம் வாழ்க!!!!
நாடு போற்ற வாழ்க!!!

உங்கள் ஆதரவைத் தெரிவிப்பதன் மூலம் ஒரு நல்ல சமூக சேவையில் பங்கு கொள்ள அனைவரையும் வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15 comments:

  1. பெருமதிப்பிற்க்கும், அன்பிற்கும் உரிய ஐயா !

    என்னுடைய வேண்டுகோளை ஏற்று வகுப்பறையில் செய்தியை வெளியிட்டதற்காக மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதனைக் கண்ணுறும் வகுப்பறை மாண‌வர்கள் இதனைத் தாண்டிச் சென்றுவிடாமல்,சிறிது நேரம் கொடுத்து, சிந்தித்து, ஒரு சதுர‌டி கட்டுமானத்திற்கு ரூ.2000/‍ அல்ல‌து அதன் மடங்கில் கொடுத்து உதவ வேண்டுகிறேன். இத்தொகையைத் தனியாகக் கொடுத்து உதவ இயலாதவர்கள் நண்பர்களிடம் சிறு தொகை வசூல் செய்து ஒரே தொகையாக அனுப்பலாம்.நம் வகுப்பறைக்கு தினமும் 4000 முதல் 5000 வரை வந்து செல்கிறீர்கள்.நீங்கள் மட்டும் மனம் வைத்தால் முழுக் கட்டுமானமும் வகுப்பறையே செய்து கொடுத்தது என்று கல்வெட்டில் பொறித்து வைப்போம்.

    சிறு துளி பெரு வெள்ளம். யார் தர்மத்தினைக் காக்கிறாரோ அவரை அந்தத் தர்மமே காப்பாற்றும்.

    ந்ன்கொடை அளிப்பவர் விரும்பினால் அவ்வப்போது அவருடைய பெயர் இங்கே பின்னூட்டத்தில் வெளியிடுகிறேன்.

    சென்னையில்,சென்னைக்கு அருகாமையில் இருக்கும் அனபர்கள் சேவாலயாவிற்கு ஒருமுறை சென்று பார்க்க வேண்டுகிறேன்.வரவேற்கிறேன்.
    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பெரியபாளையம் சாலையில் கசுவா என்ற கிராமத்தில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் சேவாலயா கடந்த 30 ஆண்டுகளாக‌ இயங்குகிறது. 2100 பிள்ளைகள் படிக்கும் இலவசப்பள்ளி, 80 முதியவர்கள் வசிக்கும் இலவச இல்லம், 75 மாடுகள் உள்ள கோசாலை, 12 படுக்கை கொண்ட மருத்துவமனை, இரண்டுநடமாடும் மருத்துவ மனை, ஆம்புலென்ஸ், தொழிற்பயிற்சி அளிக்க ஆறு வெவ்வேறு இடங்களில் சமுதாயக் கல்லூரிகள்,
    200 அனாதைச் சிறார்களுக்கான விடுதி, நூலகம் மற்றும் நடமாடும் நூலகம், ஆகியவை நடை பெறுகின்ற்ன.வெள்ளம், புயல் ,கடல் சீற்றம் சுனாமி போன்ற சமயங்களில் பேரிடர் மேலாண்மை ,இயற்கை விவசாயம் மற்றும் அதற்கான வகுப்புகள், மரக்கன்று நடுதல், காந்திஜி, பாரதியார், விவேகானந்தர் கொள்கைகளைப் பரப்புரை செய்தல் .... பட்டியல் முடியவில்லை.

    இவ்வளவு அனுபவம் மிக்க நிறுவனமே தஞ்சையில் முதியோர் இல்லம் கட்டுகிறார்கள்.உங்கள் நன்கொடைக்கு 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.

    கட்டாயம் உதவ உங்களை இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    கே.முத்துராமகிருஷ்னன்
    kmrk1949@gmail.com
    cell no., 90475 16699

    ReplyDelete
  2. Good morning sir, what a great news to hear about social activities from Krishnan sir, definitely i will contact him sir thanks for posting sir vazhga valamudan

    ReplyDelete
  3. Thanks for your social responsibility Krishnan sir,i will come to your mail id sir

    ReplyDelete
  4. Respected Sir,

    Happy morning... Great salute for Shri KMR. Great service.

    We do something our best.

    Have a great day.

    With kind regards,
    Ravi-avn

    ReplyDelete
  5. இப்பதிவினைப் பார்த்துவிட்டு ஒரே ஒரு நண்பர் விவரம் கேட்டு மின் அஞ்சல் அனுப்பியுளார். அவருக்கு நன்றி. ஒன்று பத்தாகவும், பத்து நூறாகவும், நூறு ஆயிரமாகவும் ஆண்டவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  6. Thank you KP Shanmugam Sundaram and Ravichandran May God bless you.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Dear sir, Just now I sended an amount of RS.2000 as donation for Sevalaya trust,i requested my friends and relatives to participate in this fruitful activities definitely it will be done it,and also i request our classroom viewers to take part in Kmr.krishnan sirs dream on Old age home thanks for giving me an opportunity to take part me in social activities thanks sir vazhga valamudan

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    பெருமதிப்பிற்க்கும், அன்பிற்கும் உரிய ஐயா !
    என்னுடைய வேண்டுகோளை ஏற்று வகுப்பறையில் செய்தியை வெளியிட்டதற்காக மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    இதனைக் கண்ணுறும் வகுப்பறை மாண‌வர்கள் இதனைத் தாண்டிச் சென்றுவிடாமல்,சிறிது நேரம் கொடுத்து, சிந்தித்து, ஒரு சதுர‌டி கட்டுமானத்திற்கு ரூ.2000/‍ அல்ல‌து அதன் மடங்கில் கொடுத்து உதவ வேண்டுகிறேன். இத்தொகையைத் தனியாகக் கொடுத்து உதவ இயலாதவர்கள் நண்பர்களிடம் சிறு தொகை வசூல் செய்து ஒரே தொகையாக அனுப்பலாம்.நம் வகுப்பறைக்கு தினமும் 4000 முதல் 5000 வரை வந்து செல்கிறீர்கள்.நீங்கள் மட்டும் மனம் வைத்தால் முழுக் கட்டுமானமும் வகுப்பறையே செய்து கொடுத்தது என்று கல்வெட்டில் பொறித்து வைப்போம்.
    சிறு துளி பெரு வெள்ளம். யார் தர்மத்தினைக் காக்கிறாரோ அவரை அந்தத் தர்மமே காப்பாற்றும்.
    ந்ன்கொடை அளிப்பவர் விரும்பினால் அவ்வப்போது அவருடைய பெயர் இங்கே பின்னூட்டத்தில் வெளியிடுகிறேன்.
    சென்னையில்,சென்னைக்கு அருகாமையில் இருக்கும் அனபர்கள் சேவாலயாவிற்கு ஒருமுறை சென்று பார்க்க வேண்டுகிறேன்.வரவேற்கிறேன்.
    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பெரியபாளையம் சாலையில் கசுவா என்ற கிராமத்தில் 18 ஏக்கர் நிலப்பரப்பில் சேவாலயா கடந்த 30 ஆண்டுகளாக‌ இயங்குகிறது. 2100 பிள்ளைகள் படிக்கும் இலவசப்பள்ளி, 80 முதியவர்கள் வசிக்கும் இலவச இல்லம், 75 மாடுகள் உள்ள கோசாலை, 12 படுக்கை கொண்ட மருத்துவமனை, இரண்டுநடமாடும் மருத்துவ மனை, ஆம்புலென்ஸ், தொழிற்பயிற்சி அளிக்க ஆறு வெவ்வேறு இடங்களில் சமுதாயக் கல்லூரிகள்,
    200 அனாதைச் சிறார்களுக்கான விடுதி, நூலகம் மற்றும் நடமாடும் நூலகம், ஆகியவை நடை பெறுகின்ற்ன.வெள்ளம், புயல் ,கடல் சீற்றம் சுனாமி போன்ற சமயங்களில் பேரிடர் மேலாண்மை ,இயற்கை விவசாயம் மற்றும் அதற்கான வகுப்புகள், மரக்கன்று நடுதல், காந்திஜி, பாரதியார், விவேகானந்தர் கொள்கைகளைப் பரப்புரை செய்தல் .... பட்டியல் முடியவில்லை.
    இவ்வளவு அனுபவம் மிக்க நிறுவனமே தஞ்சையில் முதியோர் இல்லம் கட்டுகிறார்கள்.உங்கள் நன்கொடைக்கு 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
    கட்டாயம் உதவ உங்களை இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    கே.முத்துராமகிருஷ்னன்
    kmrk1949@gmail.com
    cell no., 90475 16699/////

    மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete

  10. ////Blogger ravichandran said...
    Respected Sir,
    Happy morning... Great salute for Shri KMR. Great service.
    We do something our best.
    Have a great day.
    With kind regards,
    Ravi-avn/////

    நல்லது. நன்றி. உங்களால் முடிந்த தொகையை அனுப்பி வையுங்கள் அவனாசி ரவி!!!!

    ReplyDelete

  11. ////Blogger kmr.krishnan said...
    இப்பதிவினைப் பார்த்துவிட்டு ஒரே ஒரு நண்பர் விவரம் கேட்டு மின் அஞ்சல் அனுப்பியுளார். அவருக்கு நன்றி. ஒன்று பத்தாகவும், பத்து நூறாகவும், நூறு ஆயிரமாகவும் ஆண்டவனை வேண்டுகிறேன்./////

    உங்களின் பிரார்த்தனை நிறைவேறும்!!!

    ReplyDelete
  12. /////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Dear sir, Just now I sended an amount of RS.2000 as donation for Sevalaya trust,i requested my friends and relatives to participate in this fruitful activities definitely it will be done it,and also i request our classroom viewers to take part in Kmr.krishnan sirs dream on Old age home thanks for giving me an opportunity to take part me in social activities thanks sir vazhga valamudan//////

    உங்களின் தர்ம சிந்தனைக்கும் பணம் அனுப்பியமைக்கும் வாழ்த்துக்கள்!
    நல்ல மனம் வாழ்க!
    நாடு போற்ற வாழ்க!!

    ReplyDelete
  13. வணக்கம் ஐயா,திரு.கிருஷ்ணன் அவர்களின் தொண்டுள்ளம் வாழ்க.ஆண்டவன் அன்பர்கள் வடிவில் அருள் பாலிக்கட்டும்.நன்றி.

    ReplyDelete
  14. என் வேண்டுகோளை ஏற்று தர்மபுரியில் இருந்து உயர்திரு கே பி ஷண்முக சுந்தரம் அவர்கள், அவருடை நண்பர் உயர்திரு வெங்கடேசன் அவர்கள், நமது வாத்தியார் உயர்திரு சுப்பையா அவர்கள், அவருடைய நண்பர் உயர்திரு பொன்னார் அவர்கள் ஆகியோர் தலா ரூபாய் 2000/‍= அனுப்பிக் கொடுத்துள்ளனர்.

    அவர்கள் அனைவருக்கும் சேவாலயாவின் சார்பிலும்,என் சொந்த முறையிலும் மனமார்ந்த‌ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்கள் பல்லாண்டு நலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இதைப்போல நண்பர்கள் அனைவரும் முன் வந்து இப்பணி சிறக்க உதவிட‌ வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete
  15. உயர்திரு ஷண்முகசுந்த‌ரம் மீண்டும் தனது நண்பர் உயர்திரு.சரவணன் அவர்களிடமிருந்து ரூ2000/‍ நன்கொடை பெற்று அனுப்பியுள்ளார்.அவர்கள் இருவருக்கும் சேவாலயாவின் சார்பிலும்,என் சொந்த முறையிலும் மனமார்ந்த‌ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்கள் பல்லாண்டு நலம் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இதைப்போல நண்பர்கள் அனைவரும் முன் வந்து இப்பணி சிறக்க உதவிட‌ வேண்டிக் கொள்கிறேன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com