மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

5.7.17

அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?


அன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தார்?

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
1
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
2
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
3
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
4
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
5
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
6
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
7
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
8
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
9
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
10
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11 comments:

  1. Good morning sir, god is present everywhere in the form of mother,so everyone wants to take care of mother with respect and love.thanks sir vazhga valamudan sir

    ReplyDelete
  2. Respected sir,

    Good morning sir. Thank you for your message on Mother's funeral done by Swami Pattinathar. Great poet on the eve of his mother's death. Thank you once again for uploaded the message.

    regards,

    Visvanathan N

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா,முற்றும் துறந்தவர்க்கே,தாயின் இழப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பத்து பாடல்களிலும் உணர முடிகிறது.மனதில் தோன்றிய அக்னியே பச்சை மட்டைகளையும்,இலைகளையும் எரிய வைத்துள்ளது.நன்றி.

    ReplyDelete
  4. ////Blogger K.P.Shanmuga Sundaram Sundaram said...
    Good morning sir, god is present everywhere in the form of mother,so everyone wants to take care of mother with respect and love.thanks sir vazhga valamudan sir///

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  5. ////Blogger Visvanathan N said...
    Respected sir,
    Good morning sir. Thank you for your message on Mother's funeral done by Swami Pattinathar. Great poet on the eve of his mother's death. Thank you once again for uploaded the message.
    regards,
    Visvanathan N////

    நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!!

    ReplyDelete
  6. ///Blogger kmr.krishnan said...
    Nice songs Sir.///

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  7. ///Blogger adithan said...
    வணக்கம் ஐயா,முற்றும் துறந்தவர்க்கே,தாயின் இழப்பு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை பத்து பாடல்களிலும் உணர முடிகிறது.மனதில் தோன்றிய அக்னியே பச்சை மட்டைகளையும்,இலைகளையும் எரிய வைத்துள்ளது.நன்றி.////

    உண்மைதான். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!!!!!

    ReplyDelete
  8. ///Blogger RPKN said...
    Arumai////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com