மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.9.16

கலக்கமில்லாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?



கலக்கமில்லாமல் இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

*"மனம் கலங்காதிருக்க..."*

❗தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் *ப்ரஹ்லாதன்* மனம் கலங்கவில்லை...

❗சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கிய போதும் *ராஜா அரிச்சந்திரன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் *கைகேயி* மனம் கலங்கவில்லை...

❗உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் *விதுரர்* மனம் கலங்கவில்லை...

❗அம்புப்படுக்கையில் வீழ்ந்த போதிலும் *பீஷ்மர்* மனம் கலங்கவில்லை...

❗இளம் விதவையான சமயத்திலும் *குந்திதேவி* மனம் கலங்கவில்லை...

❗தரித்ரனாக வாழ்ந்த சமயத்திலும் *குசேலர்* மனம் கலங்கவில்லை...

❗ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் *கூர்மதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗பிறவிக் குருடனாக இருந்தபோதிலும் *சூர்தாஸர்* மனம் கலங்கவில்லை...

❗மனைவி அவமானப்படுத்திய போதிலும் *சந்த் துகாராம்* மனம் கலங்கவில்லை...

❗கணவன் கஷ்டப்படுத்திய போதும் *குணவதிபாய்* மனம் கலங்கவில்லை...

❗இருகைகளையும் வெட்டிய நிலையிலும் *சாருகாதாஸர்* மனம் கலங்கவில்லை...

❗கைகால்களை வெட்டிப் பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் *ஜயதேவர்* மனம் கலங்கவில்லை...

❗மஹா பாபியினிடத்தில் வேலை செய்த போதும் *சஞ்சயன்* மனம் கலங்கவில்லை...

❗பெற்ற பிள்ளையை பறிகொடுத்த போதும் *பூந்தானம்* மனம் கலங்கவில்லை...

❗கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்தியபோதும் *தியாகராஜர்* மனம் கலங்கவில்லை...

❗நரசிம்மர் சன்னிதியில் விஷ தீர்த்தம் தந்த போதும் *மஹாராஜா ஸ்வாதித் திருநாள்* மனம் கலங்கவில்லை...

❗சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்த பின்பும் *கூரத்தாழ்வான்* மனம் கலங்கவில்லை...

*எப்படி முடிந்தது இவர்களால்..?*

ரகசியம்...

*தங்களோடு இறைவன் எப்பொழுதும் இருக்கின்றான் என்று உணர்ந்ததால்...*🙏

கடவுள் எப்பொழுதும் கூடவே இருக்கிறான் என்று உணர வழி?

*ஆழ்ந்த நம்பிக்கை...*

அந்த நம்பிக்கை ஏற்பட வழி..?

*முதல் வழி...* (சொல்லறிவு)

அறிஞர்கள், ஞானிகள் மற்றும்  சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்...

*இரண்டாம் வழி...* (சுய அறிவு)

மன அமைதியுடன்,  நடுநிலை உணர்வுடன், ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து, உண்மை விளங்கும் போது மனம் தெளிவடைந்து... அப்போது ஏற்படுவது...

நம்பிக்கை ஏற்பட்ட பின்...

மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று, உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக...

தொடந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்...

அந்த பிரார்த்தனைகள்...

எந்த மதம் சார்ந்ததாகவும் இருக்கலாம்

*மந்திரமாக இருக்கலாம்...*

*ஜபமாக இருக்கலாம்...*

*தொழுகையாக இருக்கலாம்...*

*கீர்த்தனைகளாக இருக்கலாம்...*

மேலும், அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் *"அன்பும், அறநெறியும், உண்மையும், சத்தியமும், நியாய தர்மங்களை காக்கும் பண்புகளாகவும்..."* இருக்கலாம்.

இவற்றை மாறாமல் கடைபிடித்தால்... வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்...

என்ன நடத்தாலும், எதை இழந்தாலும், *"ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தை தரும்..."*

அந்த ஆத்ம பலமே... எதையும் தாங்கும் சக்தி...

ஆதலால் ... *திடமாக பகவானை வழிபடுவோம்...*

*அன்பே கடவுள் என போற்றுவோம்...*

*உறுதியுடன் உண்மையாக இருப்போம்...*

இதனால் பெற்றிடுவோம்... மனஅமைதியும், அர்த்தமுள்ள வாழ்க்கையையும்
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

  1. வணக்கம் குருவே!
    விடியற்காலையில் படிக்கக் கிடைத்த புதையல்! மனதில் உறுதி கிடைக்கத் தூண்டும் உத்வேகம் நிறைந்த பதிவு.
    படிக்கப் படிக்க மனம் இறையுணர்வுக்குத் தாவியோடும் தாபம் உள்ள எழுத்துக்கள்! நான் தேடிக் கொண்டிருந்தது கிடைத்தது! நன்றி, வாத்தியாரையா!!

    ReplyDelete
  2. அருமையான கருத்துள்ள மனவளக் கட்டுரை ஐயா! நான் படித்ததில் பிடித்த ஒரு கவிதை இதோ!

    கலங்காதிரு மனமே!
    கடமையைச் செய் மனமே!
    பலன் எதிர்பாராதே தினமே!

    கருத்துச் சொல்வோர்
    வருவார் போவார்
    வந்தும் வராதுமிருப்பார்
    மனதில் பதிந்தும்
    பதியாதிருப்பார்
    அதனால்
    கலங்காதிரு மனமே!

    தினம் தினம் மலரும் மலர்
    புன்னகைக்கின்றது
    எதனை எதிர்பார்த்து?

    கானகத்தே மலர்கையிலும்
    காண எவரின்றியும்
    கனிவாய் நகைக்கின்றது.
    அதனால்
    கடமையைச் செய் மனமே!
    பலன் எதிர்பாராதே தினமே!
    கலங்காதிரு மனமே!

    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  3. /////Blogger வரதராஜன் said...
    வணக்கம் குருவே!
    விடியற்காலையில் படிக்கக் கிடைத்த புதையல்! மனதில் உறுதி கிடைக்கத் தூண்டும் உத்வேகம் நிறைந்த பதிவு.
    படிக்கப் படிக்க மனம் இறையுணர்வுக்குத் தாவியோடும் தாபம் உள்ள எழுத்துக்கள்! நான் தேடிக் கொண்டிருந்தது கிடைத்தது! நன்றி, /////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்!

    ReplyDelete
  4. ////Blogger kmr.krishnan said...
    Very nice////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. /////Blogger R VIJAYAKUMAR GEDDY said...
    Sathyamaana Unmaigal Guruve/////

    நல்லது. நன்றி விஜயகுமார்!

    ReplyDelete
  6. /////Blogger venkatesh r said...
    அருமையான கருத்துள்ள மனவளக் கட்டுரை ஐயா! நான் படித்ததில் பிடித்த ஒரு கவிதை இதோ!
    கலங்காதிரு மனமே!
    கடமையைச் செய் மனமே!
    பலன் எதிர்பாராதே தினமே!
    கருத்துச் சொல்வோர்
    வருவார் போவார்
    வந்தும் வராதுமிருப்பார்
    மனதில் பதிந்தும்
    பதியாதிருப்பார்
    அதனால்
    கலங்காதிரு மனமே!
    தினம் தினம் மலரும் மலர்
    புன்னகைக்கின்றது
    எதனை எதிர்பார்த்து?
    கானகத்தே மலர்கையிலும்
    காண எவரின்றியும்
    கனிவாய் நகைக்கின்றது.
    அதனால்
    கடமையைச் செய் மனமே!
    பலன் எதிர்பாராதே தினமே!
    கலங்காதிரு மனமே!
    பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி!////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா,நம்பிக்கையோடு செய்யும் காரியம் நிச்சயம் பலனளிக்கும்.சில நேரங்களில் நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும்,அது ஏதோ ஒரு விதத்தில் நன்மைக்காகத்தான் என்ற மனஉறுதியையும்,மன அமைதியையும் அந்த நம்பிக்கையே நமக்கு கொடுக்கும் என்பது அனுபவத்தில் உணர்ந்தது.நன்றி.

    ReplyDelete
  8. அருமையான உபதேசம் ... நன்றிகள் பல

    ReplyDelete
  9. /////Blogger adithan said...
    வணக்கம் ஐயா,நம்பிக்கையோடு செய்யும் காரியம் நிச்சயம் பலனளிக்கும்.சில நேரங்களில் நாம் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றாலும்,அது ஏதோ ஒரு விதத்தில் நன்மைக்காகத்தான் என்ற மனஉறுதியையும்,மன அமைதியையும் அந்த நம்பிக்கையே நமக்கு கொடுக்கும் என்பது அனுபவத்தில் உணர்ந்தது.நன்றி.////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  10. ////Blogger Manikandan said...
    அருமையான உபதேசம் ... நன்றிகள் பல /////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  11. Nice post sir... I was worrying about my life... Suddenly saw this post and read and felt light ....

    ReplyDelete
  12. மனம் மிகவும் கலங்கியிருந்த நேரத்தில் இந்த பதிவு நம்பிக்கை ஊட்டியது ஐயா

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com