எத்தனை முடிச்சு (Twist) இந்தக் கதையில்!
ஒரு ஊரில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவன் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று திரும்பிய போது அவனது அழகான பெரிய பண்ணை வீடு தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த ஊரிலேயே மிகவும் அழகான வீடு அவனுடையது தான். அந்த வீட்டை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்க பலரும் தயாராக இருந்தனர். ஆனால் இவன் விற்கவில்லை. இப்போது அந்த வீடு அவன் கண் முன்னே எரிந்துகொண்டிருந்தது. ஆயிரம் நபர்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தார்கள். தீ முழுவதுமாக பரவிவிட்டதால் அதை அணைத்தும் பிரயோஜனம் இல்லை என்று எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வணிகனோ செய்வதறியாமல் கண்ணில் நீரோடு புலம்பிகொண்டிருந்தான். ஐயோ என் வீடு..!!! என் வீடு...!! என்று அலறினான்.
அப்போது அவனின் மூத்த மகன் ஓடிவந்து ஒரு விஷயத்தை சொல்கிறான் “தந்தையே ஏன் அழுகிறீர்கள்? இந்த வீட்டை நான் நேற்றே மூன்று மடங்கு லாபத்திற்கு விற்றுவிட்டேன். இதனால் நமக்கு நஷ்டம் இல்லை என்று கூறினான். இதை கேட்ட வணிகனுக்கு ஏக மகிழ்ச்சி. அவனது சோகம் அனைத்தும் மறைந்து மகிழ்ச்சி உண்டானது. இப்போது வணிகனும் கூடி இருந்த கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான். அதே வீடு தான், அதே நெருப்பு தான் ஆனால் சில வினாடிகளுக்கு முன் இருந்த தவிப்பும் சோகமும் இப்போது அவனிடம் இல்லை.
சிறிது நேரத்தில் வணிகனின் இரண்டாவது மகன் ஓடி வந்து “தந்தையே ஏன் இப்படி கவலையில்லாமல் சிரிக்கிறீர்கள்? நாங்கள் விற்ற இந்த வீட்டிற்கு முன்பணம் மட்டுமே வாங்கியுள்ளோம். முழு தொகை இன்னும் வரவில்லை. வீட்டை வாங்கியவன் இப்போது மீதி பணத்தை தருவானா என்பது சந்தேகமே” என்றான். இதை கேட்ட வணிகன் அதிர்ச்சி அடைந்தான். மீண்டும் சோகத்தில் ஆழ்ந்தான். கண்ணீரோடு மீண்டும் புலம்ப ஆரம்பித்தான். தனது உடமை எரிகிறதே என்ற எண்ணம் மீண்டும் அவனை வாட்டியது.
சில மணித்துளிகள் பின்பு வணிகனின் மூன்றாவது மகன் ஓடி வருகிறான். “தந்தையே கவலை வேண்டாம். இந்த வீட்டை வாங்கிய மனிதன் மிகவும் நல்லவன் போலும். இந்த வீட்டை வாங்க அவன் முடிவு செய்தபோது வீடு தீ பிடிக்கும் என்று உங்களுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது. ஆகையால் நான் பேசியபடி முழு தொகையை கொடுப்பது தான் நியாயம் என்று என்னிடம் இப்போது தான் சொல்லி அனுப்பினான்” என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தான். இதை கேட்ட வணிகனுக்கோ ஏக சந்தோஷம். கடவுளுக்கு நன்றி சொல்லி ஆடிப்பாடி மகிழ்ந்தான். கண்ணீரும் சோகமும் மீண்டும் காணாமல் போய்விட்டது. மீண்டும் கூட்டத்தில் ஒருவனாக நின்று வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
இங்கு எதுவுமே மாறவில்லை. அதே வீடு, அதே நெருப்பு, அதே இழப்பு. இது என்னுடையது என்று நினைக்கும் போது அந்த இழப்பு உங்களை சோகத்தில் ஆழ்த்துகிறது. இது என்னுடையது அல்ல என்று நினைக்கும் போது உங்களை சோகம் தாக்குவது இல்லை. நான், என்னுடையது, எனக்கு சொந்தமானது என்ற எண்ணம் தான் பற்று. உலகில் எதுவுமே நிரந்தரமானது இல்லை. ஒருவனுக்கு மட்டுமே சொந்தமானது இல்லை. அனைத்துமே அழிய கூடியது. நான் உட்பட எல்லாமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அழியக்கூடியது அல்லது வேறு ஒருவனுக்கு சொந்தமாக கூடியது என்பதை நாம் நினைவில் நிறுத்தினாலே போதும்.
மனவளக் கதை
===========================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
வணக்கம் குருவே!
ReplyDeleteசிறப்புப் பகிர்வு!
மிக அருமை ...
ReplyDeleteEnjoyed the moral story. Thank you Sir.
ReplyDeleteவருகை பதிவு
ReplyDeleteவாத்தியார் அவர்கட்கு,
ReplyDeleteஎனது மரியாதைகள்.
இக்கதை ஆகச்சிறந்த உண்மையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் உரைக்கவைத்தது.
நன்றி!!
இப்படிக்கு ,
மோ.ராம்சுதர்சன்.
/////Blogger வரதராஜன் said...
ReplyDeleteவணக்கம் குருவே!
சிறப்புப் பகிர்வு!//////
நல்லது. நன்றி வரதராஜன்!
//////Blogger Srimalaiyappanb sriram said...
ReplyDeleteமிக அருமை ...//////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
Respected Sir,
ReplyDeleteHappy morning... Superb.
Thanks & Regards,
Ravi-avn
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteEnjoyed the moral story. Thank you Sir./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteவருகை பதிவு////
வருகைப் பதிவிற்கு நன்றி வேப்பிலையாரே!
/////Blogger M RAMSUDARSAN said...
ReplyDeleteவாத்தியார் அவர்கட்கு,
எனது மரியாதைகள்.
இக்கதை ஆகச்சிறந்த உண்மையை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் உரைக்கவைத்தது.
நன்றி!!
இப்படிக்கு ,
மோ.ராம்சுதர்சன்./////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
AYYA VANAKKAM Arumaiyana sirukathai ,Mutthaippana kautthukkal. mighavum aalzhamahappathinthu vittathu nantri ayya,
ReplyDeleteஅன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஆசிரியரே!,
ReplyDeleteவணக்கம். நல்ல பதிவு.
பற்றுதல் இல்லாமல், கடவுள் நினைவில் வாழ்ந்தால் மிக எளிமையாகவும், நம் கடமைகளை திறம்பட செய்தும், மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாகவும் வாழலாம்.
முடிந்தவரை பற்றுதல் இல்லாமல் வாழ முயற்சி செய்து வருகிறேன்.! வயது இப்போது 40. இதன் பிறகு, எனக்கு இரண்டு முக்கியமான லட்சியம்தான். 1. சமுதாயத்திற்கு என்னால் முடிந்த வரை நல்லதை செய்ய வேண்டும். 2. இயற்கையை காக்க (வளர்க்க) வேண்டும். முக்கியமாக மனிதர்களிடமிருந்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மனிதர்கள் தான் இந்த இயற்கைக்கு மிக பெரும் அபாயத்தை உருவாக்கிறார்கள்.
உங்களின் இது போன்ற பதிவுகள் உற்சாகத்தை அளிக்கிறது!
நன்றி!! பன்னீர்செல்வம்.
அருமை அருமை ஐயா
ReplyDeleteஎது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்?
எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.
- பகவத்கீதை
கீதாசாரம் போல் தேனாமிர்தம் ஐயா.
மிக்க நன்றி...
அன்புடன்
விகனசாயி.
====================================
வணக்கம் ஐயா,மனவளத்திற்க்கு சூத்திரம் கேட்டிருந்தேன்.மறக்காமல் எளிய கதை சொல்லி புரிய வைத்துள்ளீர்கள்.மிகவும் நன்றி.
ReplyDeleteநன்றி மிகமிக அருமை
ReplyDeleteSuper kuruji..
ReplyDelete////Blogger kittuswamy palaniappan said...
ReplyDeleteAYYA VANAKKAM Arumaiyana sirukathai ,Mutthaippana kautthukkal. mighavum aalzhamahappathinthu vittathu nantri ayya,/////
பதிந்தால் சரிதான். நன்றி கிட்டுசாமி!
/////Blogger Selvam R said...
ReplyDeleteஅன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஆசிரியரே!,
வணக்கம். நல்ல பதிவு.
பற்றுதல் இல்லாமல், கடவுள் நினைவில் வாழ்ந்தால் மிக எளிமையாகவும், நம் கடமைகளை திறம்பட செய்தும், மற்றவர்களுக்கும் பயன் உள்ளதாகவும் வாழலாம்.
முடிந்தவரை பற்றுதல் இல்லாமல் வாழ முயற்சி செய்து வருகிறேன்.! வயது இப்போது 40. இதன் பிறகு, எனக்கு இரண்டு முக்கியமான லட்சியம்தான். 1. சமுதாயத்திற்கு என்னால் முடிந்த வரை நல்லதை செய்ய வேண்டும். 2. இயற்கையை காக்க (வளர்க்க) வேண்டும். முக்கியமாக மனிதர்களிடமிருந்து இயற்கையை பாதுகாக்க வேண்டும். மனிதர்கள் தான் இந்த இயற்கைக்கு மிக பெரும் அபாயத்தை உருவாக்கிறார்கள்.
உங்களின் இது போன்ற பதிவுகள் உற்சாகத்தை அளிக்கிறது!
நன்றி!! பன்னீர்செல்வம்./////
ஆஹா... அப்படியே எப்போதும் உற்சாகமாக இருங்கள் பன்னீரசெல்வம்!
/////Blogger Vicknaa Sai said...
ReplyDeleteஅருமை அருமை ஐயா
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்?
எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.
- பகவத்கீதை
கீதாசாரம் போல் தேனாமிர்தம் ஐயா.
மிக்க நன்றி...
அன்புடன்
விகனசாயி./////
நல்லது.உங்களின் பாராட்டிற்கு நன்றி விக்னசாமி!
/////Blogger adithan said...
ReplyDeleteவணக்கம் ஐயா,மனவளத்திற்க்கு சூத்திரம் கேட்டிருந்தேன்.மறக்காமல் எளிய கதை சொல்லி புரிய வைத்துள்ளீர்கள்.மிகவும் நன்றி./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்!
////Blogger k.k. kumar said...
ReplyDeleteநன்றி மிகமிக அருமை/////
நல்லது. நன்றி குமார்!
////Blogger C.P. Venkat said...
ReplyDeleteSuper kuruji../////
நல்லது. நன்றி வெங்கட்!
Miga arumai iyya
ReplyDelete/////Blogger Subathra Suba said...
ReplyDeleteMiga arumai iyya/////
நல்லது. நன்றி சகோதரி!
ReplyDeleteவணக்கம் ஐயா
மிகவும் அருமை....
இதை விட எளிதாக இந்த தத்துவத்தை யாராலும் விளக்க முடியாது என நினைக்கிறேன். அற்புதம்! மிக்க நன்றி
ReplyDelete