மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.11.15

Week end Posts: அடப் பாவிகளா...... வாழைப்பழத்தை இப்படியா பழுக்க வைக்கிறீர்கள்?

Week end Posts: அடப் பாவிகளா...... வாழைப்பழத்தை இப்படியா பழுக்க வைக்கிறீர்கள்?

எத்தனால் என்ற இராசயனக் கலவையை 50 மில்லி லிட்டர் அளவில்
20 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் பழுக்காமல் சந்தைக்கு வந்த வாழைக்காய் சீப்புக்களை முக்கி எடுத்து வைத்து விடுவார்களாம்.
15 நாட்களில் பழுக்க வேண்டிய காய்கள் ஒரே நாளில் பழுத்து விடுமாம். எங்கே நடக்கிறது இந்த அக்கிரமம் ? கர்நாடகாவில் உள்ள குல்பர்கா
நகரிலாம். செய்தி வடிவில் ஆதாரத்துடன் காணொளி உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

இந்த அவலம் நம் ஊர்களிலும் பரவ எத்தனை நாள் ஆகும்? அதையும் யோசித்துப் பாருங்கள்!

-----------------------------------------------------------
2

கள்ளின் மறுபக்கம்

கள் குடிப்பதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள்! கள்ளின் வேறு உபயோகம்
 என்ன தெரியுமா - தெரிந்து கொள்ளுங்கள். காணொளி உள்ளது.
ஆமாம் எண்ணெய்க்குப் பதிலாக கள்ளை ஊற்றிச் சமைக்கிறார்கள்.

புதிது புதிதாக என்னென்ன செய்கிறார்கள் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

  1. வாழைப்பழம்: இது வெளிநாட்டு பாணி. பலதரப்பட்ட பழங்களுக்கும் இது தான் கதி.

    கள்: இதுவும் வெளிநாட்டில் சகஜம். அங்கிருந்து தான் காபி அடித்தார்களா தெரியவில்லை.
    அவர்கள் உணவில் wine பயன்படுத்துவது சகஜம். அவர்களின் ரிச் கேக் alcohol பயன்படுத்தியே
    தயாரிக்கப்படுவது (wine/Rum என்பது மறந்து விட்டது). liquid vanilla essence இல் 50% alcohol.

    சில கஞ்சா வகைகள் மிகச் சிறிய அளவில் மருந்தாக பாவிக்கப்படலாம் என்பது பலரின் கருத்து.
    உண்மையாக இருக்கலாம். வலியம் போல். அது போல் குறைந்த அளவில் சில மது வர்க்கங்கள் உடலுக்கு நன்மை பயக்கலாம் என்பதும் உண்மையாக இருக்கலாம். (எமது புளித்த தயிர், ஊற வைத்த பழைய சாதங்கள் போல்).
    ஆனால் இவையெல்லாம் வேறு பல விடயங்களால் பிரபலமாகி விட்டதால், கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை மக்களிடம் எதிர்பார்ப்பது என்பது கேள்விக்குறியானது.

    ReplyDelete
  2. இலால்குடிதான் திருச்சி மாவட்டத்தின் வாழை சாகுபடியில் முன்னால் நிற்கிறது.
    இங்கே இதுவரை காயைப் பழுக்க வைக்க கம்ப்யூடெர் சாம்பிராணிப் புகைதான் உபயோகம் செய்கிறார்கள்.இந்த காணொளியைப் பார்த்துவிட்டால் நிச்சயம் எதனாலை இங்கும் பயன் படுத்துவார்கள். நல்ல வேளையாக வாழைப்பழத்தில் மேல் தோல் தூக்கி வீசப்படுகிறது.இப்போது எல்லா காய்கனிகளிலும் தோல் நீக்கம் செய்ய அறிவுறுத்த‌ப்படுகிறது.காரணம் இது போன்ற இரசாயனப் பயன் பாடுதான்.

    கள்ளில் தயாராகும் சிக்கன் பற்றி எந்த அபிப்பிராயமும் எனக்கு இல்லை.சிக்கன் உண்டு பழக்கப்பட்டவர்களுக்கு அது உகந்ததாக இருக்கலாம்.

    ReplyDelete
  3. அப்பம் ஊற வைப்பதற்கு, சிறிது கள்ளும் சேர்த்தால்; நன்றாகவும் வரும் சுவையும் அதிகம் என்பது
    சில ஊர்ப் பழையவர்களின் பொதுவான கருத்து.

    ReplyDelete
  4. அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    இது கலிகாலம்!. எது நடந்தாலும், என்ன நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  5. வாழை பழ கதை ஏற்கனவே
    வாழ்ந்து கொண்டிருக்கிறது தமிழ் நாட்டில்.

    இது போல தேங்காய் எண்ணையில்
    இவர்கள் பெட்ரோல் ஆயிலை கலக்கிறார்கள்

    ஊசி போட்ட ப்ராயிளர் கோழிகள் - பிரிட்ஜில்
    ஊசி போன சாம்பாரை விட தேவலை என

    மக்கள் மாறி விட்டார்கள்..
    மயக்கத்தில் இல்லை. தெரிந்தே

    குடிக்கிறார்கள் இந்திய
    குடிமகன்கள்...

    இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு,
    இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!

    சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்,
    சத்தியமா அப்படி ஒரு வாய்ப்பு நிச்சயம் இருக்காது !

    ReplyDelete
  6. வணக்கம் குரு,

    என்ன செய்ய கலிகாலம். நாம்தான் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  7. //////Blogger Mrs Anpalagan N said...
    வாழைப்பழம்: இது வெளிநாட்டு பாணி. பலதரப்பட்ட பழங்களுக்கும் இது தான் கதி.
    கள்: இதுவும் வெளிநாட்டில் சகஜம். அங்கிருந்து தான் காபி அடித்தார்களா தெரியவில்லை.
    அவர்கள் உணவில் wine பயன்படுத்துவது சகஜம். அவர்களின் ரிச் கேக் alcohol பயன்படுத்தியே
    தயாரிக்கப்படுவது (wine/Rum என்பது மறந்து விட்டது). liquid vanilla essence இல் 50% alcohol.
    சில கஞ்சா வகைகள் மிகச் சிறிய அளவில் மருந்தாக பாவிக்கப்படலாம் என்பது பலரின் கருத்து.
    உண்மையாக இருக்கலாம். வலியம் போல். அது போல் குறைந்த அளவில் சில மது வர்க்கங்கள் உடலுக்கு நன்மை பயக்கலாம் என்பதும் உண்மையாக இருக்கலாம். (எமது புளித்த தயிர், ஊற வைத்த பழைய சாதங்கள் போல்).
    ஆனால் இவையெல்லாம் வேறு பல விடயங்களால் பிரபலமாகி விட்டதால், கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டை மக்களிடம் எதிர்பார்ப்பது என்பது கேள்விக்குறியானது./////

    விழிப்புணர்வை, ஏற்படுத்தினாலும், பல மக்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை. அதானால்தான் இதுபோன்ற அவலங்கள் அதிகமாகிவிட்டது. சகோதரி!

    ReplyDelete
  8. /////Blogger kmr.krishnan said...
    இலால்குடிதான் திருச்சி மாவட்டத்தின் வாழை சாகுபடியில் முன்னால் நிற்கிறது.
    இங்கே இதுவரை காயைப் பழுக்க வைக்க கம்ப்யூடெர் சாம்பிராணிப் புகைதான் உபயோகம் செய்கிறார்கள்.இந்த காணொளியைப் பார்த்துவிட்டால் நிச்சயம் எதனாலை இங்கும் பயன் படுத்துவார்கள். நல்ல வேளையாக வாழைப்பழத்தில் மேல் தோல் தூக்கி வீசப்படுகிறது.இப்போது எல்லா காய்கனிகளிலும் தோல் நீக்கம் செய்ய அறிவுறுத்த‌ப்படுகிறது.காரணம் இது போன்ற இரசாயனப் பயன் பாடுதான்.
    கள்ளில் தயாராகும் சிக்கன் பற்றி எந்த அபிப்பிராயமும் எனக்கு இல்லை.சிக்கன் உண்டு பழக்கப்பட்டவர்களுக்கு அது உகந்ததாக இருக்கலாம்.//////

    உண்மைதான். இதைக் கட்டுப்படுத்த முடியாது. எல்லா நிலையிலும் இந்த அக்கிரமங்கள் நுழைந்து காலூன்றிவிட்டது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  9. //////Blogger Mrs Anpalagan N said...
    அப்பம் ஊற வைப்பதற்கு, சிறிது கள்ளும் சேர்த்தால்; நன்றாகவும் வரும் சுவையும் அதிகம் என்பது
    சில ஊர்ப் பழையவர்களின் பொதுவான கருத்து./////

    அடடா, இது புதிய செய்தி. நன்றி சகோதரி!

    ReplyDelete
  10. /////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ள அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    இது கலிகாலம்!. எது நடந்தாலும், என்ன நடந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!!!!.
    அன்புடன்,
    -பொன்னுசாமி./////

    உண்மைதான். ஆச்சரியப்பட்டுப் பயனுமில்லை. நன்றி பொன்னுசாமி அண்ணா!

    ReplyDelete
  11. /////Blogger வேப்பிலை said...
    வாழை பழக் கதை ஏற்கனவே
    வாழ்ந்து கொண்டிருக்கிறது தமிழ் நாட்டில்.
    இது போல தேங்காய் எண்ணையில்
    இவர்கள் பெட்ரோல் ஆயிலை கலக்கிறார்கள்
    ஊசி போட்ட ப்ராயிளர் கோழிகள் - பிரிட்ஜில்
    ஊசி போன சாம்பாரை விட தேவலை என
    மக்கள் மாறி விட்டார்கள்..
    மயக்கத்தில் இல்லை. தெரிந்தே
    குடிக்கிறார்கள் இந்திய
    குடிமகன்கள்...
    இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற கவலை சிலருக்கு,
    இப்படியே இருந்துவிடுமோ என்ற கவலை சிலருக்கு!!
    சத்தம் போட்டு அழ எல்லோருக்கும் ஒரு காரணம் நிச்சயம் இருக்கும்,
    சத்தியமா அப்படி ஒரு வாய்ப்பு நிச்சயம் இருக்காது !////

    எல்லாம் நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். வேறு என்ன செய்ய முடியும் நம்மால் வேப்பிலையாரே!

    ReplyDelete
  12. /////Blogger Selvam Velusamy said...
    வணக்கம் குரு,
    என்ன செய்ய கலிகாலம். நாம்தான் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.
    நன்றி
    செல்வம்/////

    உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி செல்வம் வேலுச்சாமி!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com