மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.10.15

இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம் என்று எதற்காகச் சொன்னார் அவர்?


இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம்  என்று எதற்காகச் சொன்னார் அவர்?

திருமண் (திருநாமம்) வைணவர்களால் இட்டுக்கொள்ளப்படும் புனிதமான வைணவ மதச் சின்னம். இதை திருமண் காப்பு தரித்தல் என்று வைணவர்கள் கூறுகிறார்கள்.

வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் நாராயணனின் பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும். திருமண்ணை ஸ்ரீ சுர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீ சுர்ணம் மகாலட்சுமியின் அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறது. வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.

 வடகலை திருமண் காப்பு


தென்கலை திருமண் காப்பு
வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை
வைணவ சம்பிரதாயத்தில் வடகலை தென்கலை என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிதைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.
திருமண் இட்டுக் கொள்வதில் இரண்டு யோக முறைகள் உண்டு:

தென்கலை திருமண்
பாதம் வைத்துப் போடும் தென்கலை நாமம் (நெற்றியில் பட்டை அடிப்பது parallel lines),


வடகலை திருமண்
வடகலை திருமண்காப்பு: பாதம் இல்லாமல் போடும் வடகலை நாமம் (நெற்றியில் நேர்கோடு போடுவது - நாமம்)

நாராயணனின் பனிரெண்டு நாமாக்களை குறிக்கும் வகையில் பனிரெண்டு இடங்களில் திருமண் காப்பு இட்டுக்கொள்வது இவர்கள் சம்பிரதாயம்.
1. நெற்றி
2. நடு வயிறு (நாபி)
3. நடு மார்பு (மார்பு)
4. நடுகழுத்து (நெஞ்சு)
5. வலது மார்பு
6. வலது கை
7. வலது தோள்
8. இடது மார்பு
9. இடது கை
10. இடது தோள்
11. பின்புறம் அடிமுதுகு
12. பின்புறம் பிடரி
இவ்வாறு திருமண் காப்பும் ஸ்ரீசூர்ணமும் தரிக்கும்போது சொல்ல வேண்டிய பெருமாள் நாமங்கள் இவை:
கேசவாய நம என்று நெற்றியிலும்
நாராயணாய நம என்று நாபியிலும்
மாதவாய நம என்று மார்பிலும்
கோவிந்தாய நம என்று நெஞ்சிலும்
விஷ்ணவே நம என்று வலது மார்பிலும்
மதுஸூதனாய நம என்று வலது புயத்திலும்
த்ரிவிக்ரமாய நம என்று வலது தோளிலும்
வாமனாய நம என்று இடது நாபியிலும்
ஸ்ரீதராய நம என்று இடது புயத்திலும்
ஹ்ருஷீகேசாய நம என்று இடது தோளிலும்
பத்மநாபாய நம என்று அடிமுதுகிலும்
தாமோதராய நம என்று பிடரியிலும்
திருமண் தரித்துக் கொள்ள வேண்டும்.
========================================
தொண்டரடிப்பொடியாழ்வார் எழுதிய  பாடல் தொகுப்பில் உள்ள ஒரு முத்தான பாடல்:

பச்சைமா மலைபோல்மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திர லோக மாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகரு ளானே.

பச்சை மா மலை போல் மேனி  = பசுமை நிறமுள்ள பெரிய மலை போன்ற திருமேனியையும்
பவளம் வாய் = பவளம் போன்ற சிவந்த திருவாயையும்
செம் கமலம் கண் = செந்தாமரை மலர்போன்ற திருக்கண்களையுமுடைய
அச்சுதா = அச்சுதனே!
அமரர்ஏறே = நித்யஸுரிகளுக்குத் தலைவனே!
ஆயர்தம் கொழுந்தே = இடையர் குலத்தில் தோன்றிய இளக்குமாரனே
என்னும் = என்று (எனது) வாயினாற் சொல்லுவதனால் (எனக்கு) உண்டாகின்ற
இச்சுவை = இந்த அநுபவ ருசியை
தவிர = விட்டுவிடும்படி
யான்போய் = யான் (இவ்வுலகத்தினின்றும் நீங்கிப் பரமபதத்திற்குச்) சென்று
இந்திர லோகம் ஆளும் = (அந்தப்) பரமபதத்தை ஆளுகின்ற
அச்சுவை = அந்த அநுபவருசியை
பெறினும் = அடைவதாயிருந்தாலும்
வேண்டேன் = (அதனை) விரும்பமாட்டேன்.
==================================================
இந்திரலோகமே கிடைத்தாலும் வேண்டாம்  என்று எதற்காகச் சொன்னார் பெரியாழ்வார் ?
அரங்கநாதா, அனுதினமும் உன்னை தரித்து கிடைக்கின்ற மகிழ்ச்சியை விடப் பெரியது என்ன இருக்கிறது? ஆகவே எனக்கு இந்திர லோகத்தை ஆளுகின்ற பதவி கிடைத்தாலும் அது எனக்கு வேண்டாம். இதுவே (உன்னைத் தரிசித்து மகிழ்கின்ற பாக்கியம்) போதும் என்றார் பெரியாழ்வார்
-----------------------------
நேற்றைய பின்னூட்டத்தில் வாசகர் ஒருவர் வேண்டுகோள்
விடுத்திஒருந்தார். அதற்காக உடனடியாக இந்தப் பதிவு

/////Blogger R VASSUDEVAN said...
it is very good and also inspiring. pray that you come out like this on Vaishnavism
also.it will be a great service to the present generation.
R Vassudevan/////

உங்களின் விருப்பம் நாளையே நிறைவேற்றப்படும். ஆமாம். நாளை திருமண்ணின் சிறப்புப் பற்றிய கட்டுரை!///////


எப்படி இருக்கிறது சாமி பதிவு?. இந்திரலோகம் கிடைத்தால் நாம் வேண்டாம் என்று சொல்வோமா? ஒரு வார்த்தை சொல்லிவிட்டுச் செல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
===================================================
 வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17 comments:

  1. Please write like this basic details. From my view no one knows much about it. Many of them does not know or can identify which Gragha in Navagragha group

    ReplyDelete
  2. அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    வைணவ சம்பரதயம் ,திருமண் பற்றிய விளக்கம் அருமை..
    நன்றி

    ReplyDelete
  3. அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
    நேற்றைய பின்னூட்ட வேண்டுகோளின் நிறைவேற்றத்தை உடனேயே பதிவேற்றிய தங்களின் கருணைக்கு மனமுவந்த நன்றிகள்!.
    சைவ,வைணவ வித்தியாசம் - சிவன் உடனே வரம் தந்துவிடுவாராம், பக்ததர்களுக்கு - தங்களைப்போலவே. பின்னர் சோதனைகளை தந்து பக்தனை ஆட்கொள்ளுவாராம்.
    ஆனால், அந்த பரமனோ பக்தனை சோதனைக்குள்ளாக்கி பின் ஆட்கொள்ளுவாராம்.
    பக்தன் ஆரம்பத்தில் குரங்கு குட்டி போல (தாய்குரங்கை விடாமல் பிடித்துக்கொள்ளவேண்டும்)பக்தி செலுத்தினால் இறுதியில் பரமன் நம்மை பூனை தன் குட்டியை விடாமல் தூக்கி செல்வதைப் போல நம்மை காப்பாற்றுவாராம்.
    அதெல்லாம் சரிதான் குருவே! - அந்த பரம்பொருளான இறைவன் சைவனா? அல்லது வைணவனா? அப்போ அபிராமி தாயார் எந்த வகையில் சேருவார்?
    திருநீறு,திருமண்,கிறிஸ்தவர்களின் சிலுவை,இஸ்லாமியர்களின் வெட்டவெளி எல்லாமே ஒரு தீப ஒளி அல்லது சந்திரனின் பிறை வடிவ ஒளியில்தானே அடங்குகின்றது.
    உண்மையான ஒரு இறையருள் பெற்ற மகான்கள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்வதில்லையாம்.
    இது அதிகபிரசங்கித்தனமான வாதமென்பதால் மன்னிக்க வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  4. வணக்கம் வாத்தியாரே!!!

    பெரியாழ்வாரே சொல்லிவிட்ட பிறகு வேறொரு சாட்சி வேண்டுமா!!!
    "அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்" சுவையே ஒவ்வொரு பிறந்த உயிர்க்கும் மிகவும் வேண்டிய மற்றும் கடைநிலை தேற்றமாகும்.

    இதை உ.வே. வேளுக்குடியின் கிருஷ்ணன் அவர்களின் youtube மூலம் நான் கிடைக்க பெற்ற அற்புத அனுபவமாகும். பரிக்சித் மாஹராஜா, வியாசரின் மகன் சுகர் மூலம் ஸ்ரீமத் பாகதவம் உபன்யாசம் பெற்று உயிர் பிரியும் கண்ட நிலையில் தப்பினார்...

    அடியேனின் வாழ்விலும் உ.வே. வேளுக்குடியின் கிருஷ்ணன் அவர்களின் ஸ்ரீமத் பாகதவம் அந்த அற்புதத்தை அளித்தது. இது அணைத்து மனிதர்களும் பெரியவர் சிறியவர் பேதம் இல்லாமல் கேட்டு அனுபவிக்க வேண்டிய அற்புத மருந்து ஆகும். (yes no need of english tablets).

    வாத்தியார் ஸ்ரீமத் பாகதவம் பற்றியும், அந்த நூல் எழுதபெற்ற சூழ்நிலையை பற்றியும் எழுதாமல் உங்கள் வைணவத்தின் கட்டுரை முடியடையவில்லை என்பது எனது திண்ணமான கருத்து. வாத்தியார் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்.

    அணைத்து பகுதிகளையும் வகுப்பறை நண்பர்கள் கேட்டு அனுபவிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
    https://www.youtube.com/watch?v=zCGJ3Z5vQr0&list=PL03367FD0AAA81494



    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  5. கோவிந்தா கோவிந்தா...

    ReplyDelete
  6. This song is written by Thondaradipodi Alwar. (not Periyazhwar). Please make the correction.

    Here is the link
    http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0005_02.html

    ReplyDelete
  7. நல்ல பதிவு.

    ஸ்மார்தர்கள்(ஐயர்கள்) திருநீறு அணிந்தாலும்,சந்தியாவந்தனம்(காலை, மாலை), மாத்தியானிகம்(நண்பகல்) செய்யும் போது ஆசமனம் என்ற சடங்கில் நீங்கள் சொன்ன பன்னிரு விஷ்ணு நாமங்களைச் சொல்லி அதற்குண்டான இடங்களில் அதற்கான விரல்களால் தொட்டு வணங்க வேண்டும் என்பது முறை.

    மர்கட நியாயமென்றும் மார்ஜால நியாயம் என்றும் இரண்டு பக்தி மார்கத்தில் சொல்லப் படுகின்றது.

    மர்கடம் என்றால் குரங்கு.எப்படி குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை இறுகப் பற்றிக் கொள்கிறதோ அப்படி பக்தன் இறைவன் தாளை இருகப் பற்றிக் கொள்ள வேண்டும். மார்ஜாலம் என்றால் பூனை.பூனைக்குட்டி தாயை சும்மா அழைத்தாலே போதும். தாய்ப் பூனை ஒட்டோடி வரும். பூனைக்குட்டி செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.தாய் எங்கே கொண்டு வைக்கிறதோ அங்கே குட்டி இருந்து கொள்ள வேண்டியதுதான்.தாய் தன்னைக் காப்பாள் என்ற நம்பிக்கை பூனைக்கு இருப்பதுபோல பகதனும் பகவானிடம் பூர்ண சரணாகதி செய்து கொண்டு எதற்கும் கவலைப்படாமல், அஞ்சாமல் வாழ வேண்டியதுதான்.மரம் வைத்தவன் தண்ணீர் விட மாட்டானா என்ற நம்பிக்கை!

    ReplyDelete
  8. ஐயா,
    அற்புதம்.திருநீரின் மகிமையை ஏற்கெனவே
    மிக அழகாக விளக்கியிருந்தீர்கள். தற்போது திருமண்ணின் மகிமையை எழுதியுள்ளீர்கள். விளக்கமான விவரணங்கள். தங்களை எப்படிப் புகழ்ந்தாலும் தகும், ஐயா!

    ReplyDelete
  9. ////Blogger R Kannan said...
    Please write like this basic details. From my view no one knows much about it. Many of them does not know or can identify which Gragha in Navagragha group/////

    நல்லது. பொறுத்திருங்கள். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.

    ReplyDelete
  10. /////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யா வணக்கம்
    வைணவ சம்பரதயம் ,திருமண் பற்றிய விளக்கம் அருமை..
    நன்றி//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  11. ////Blogger siva kumar said...
    உள்ளேன் ஐயா///

    வருகைப் பதிவிற்கு நன்றி சிவகுமார்!

    ReplyDelete
  12. ///////Blogger GOWDA PONNUSAMY said...
    அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
    நேற்றைய பின்னூட்ட வேண்டுகோளின் நிறைவேற்றத்தை உடனேயே பதிவேற்றிய தங்களின் கருணைக்கு மனமுவந்த நன்றிகள்!.
    சைவ,வைணவ வித்தியாசம் - சிவன் உடனே வரம் தந்துவிடுவாராம், பக்ததர்களுக்கு - தங்களைப்போலவே. பின்னர் சோதனைகளை தந்து பக்தனை ஆட்கொள்ளுவாராம்.
    ஆனால், அந்த பரமனோ பக்தனை சோதனைக்குள்ளாக்கி பின் ஆட்கொள்ளுவாராம்.
    பக்தன் ஆரம்பத்தில் குரங்கு குட்டி போல (தாய்குரங்கை விடாமல் பிடித்துக்கொள்ளவேண்டும்)பக்தி செலுத்தினால் இறுதியில் பரமன் நம்மை பூனை தன் குட்டியை விடாமல் தூக்கி செல்வதைப் போல நம்மை காப்பாற்றுவாராம்.
    அதெல்லாம் சரிதான் குருவே! - அந்த பரம்பொருளான இறைவன் சைவனா? அல்லது வைணவனா? அப்போ அபிராமி தாயார் எந்த வகையில் சேருவார்?
    திருநீறு,திருமண்,கிறிஸ்தவர்களின் சிலுவை,இஸ்லாமியர்களின் வெட்டவெளி எல்லாமே ஒரு தீப ஒளி அல்லது சந்திரனின் பிறை வடிவ ஒளியில்தானே அடங்குகின்றது.
    உண்மையான ஒரு இறையருள் பெற்ற மகான்கள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்வதில்லையாம்.
    இது அதிகபிரசங்கித்தனமான வாதமென்பதால் மன்னிக்க வேண்டுகிறேன்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி. //////

    கவியரசர் கண்ணதாசன் சொல்வார். இறைவன் ஒருவன்தான். நாம் அவனைப் பல வடிவங்களில் வனங்குகிறோம். மதங்கள் எல்லாம் ஆறுகளைப் போன்றவை. இறைவன் கடலைப் போன்றவன். எல்லா ஆறுகளும் கடலில்தான் கலக்கின்றன!

    ReplyDelete

  13. /////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    வணக்கம் வாத்தியாரே!!!
    பெரியாழ்வாரே சொல்லிவிட்ட பிறகு வேறொரு சாட்சி வேண்டுமா!!!
    "அச்சுதா அமர ரேறே ஆயர்தம் கொழுந்தே என்னும்" சுவையே ஒவ்வொரு பிறந்த உயிர்க்கும் மிகவும் வேண்டிய மற்றும் கடைநிலை தேற்றமாகும்.
    இதை உ.வே. வேளுக்குடியின் கிருஷ்ணன் அவர்களின் youtube மூலம் நான் கிடைக்க பெற்ற அற்புத அனுபவமாகும். பரிக்சித் மாஹராஜா, வியாசரின் மகன் சுகர் மூலம் ஸ்ரீமத் பாகதவம் உபன்யாசம் பெற்று உயிர் பிரியும் கண்ட நிலையில் தப்பினார்...
    அடியேனின் வாழ்விலும் உ.வே. வேளுக்குடியின் கிருஷ்ணன் அவர்களின் ஸ்ரீமத் பாகதவம் அந்த அற்புதத்தை அளித்தது. இது அணைத்து மனிதர்களும் பெரியவர் சிறியவர் பேதம் இல்லாமல் கேட்டு அனுபவிக்க வேண்டிய அற்புத மருந்து ஆகும். (yes no need of english tablets).
    வாத்தியார் ஸ்ரீமத் பாகதவம் பற்றியும், அந்த நூல் எழுதபெற்ற சூழ்நிலையை பற்றியும் எழுதாமல் உங்கள் வைணவத்தின் கட்டுரை முடியடையவில்லை என்பது எனது திண்ணமான கருத்து. வாத்தியார் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும்.
    அணைத்து பகுதிகளையும் வகுப்பறை நண்பர்கள் கேட்டு அனுபவிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்.
    https://www.youtube.com/watch?v=zCGJ3Z5vQr0&list=PL03367FD0AAA81494
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி./////

    உங்களின் தகவல்களுக்கும் கருத்துப் பகிர்விற்கும் நன்றி லக்‌ஷ்மிநாராயணன்!!!!

    ReplyDelete
  14. /////Blogger SELVARAJ said...
    கோவிந்தா கோவிந்தா...////

    ஓம் நமோ நாராயணா!

    ReplyDelete
  15. //////Blogger Srinivaasan said...
    This song is written by Thondaradipodi Alwar. (not Periyazhwar). Please make the correction.
    Here is the link
    http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0005_02.html////

    தங்களின் செய்திக்கு நன்றி. பதிவில் திருத்திவிட்டேன் நண்பரே!

    ReplyDelete
  16. /////Blogger kmr.krishnan said...
    நல்ல பதிவு.
    ஸ்மார்தர்கள்(ஐயர்கள்) திருநீறு அணிந்தாலும்,சந்தியாவந்தனம் (காலை, மாலை), மாத்தியானிகம் (நண்பகல்) செய்யும் போது ஆசமனம் என்ற சடங்கில் நீங்கள் சொன்ன பன்னிரு விஷ்ணு நாமங்களைச் சொல்லி அதற்குண்டான இடங்களில் அதற்கான விரல்களால் தொட்டு வணங்க வேண்டும் என்பது முறை.
    மர்கட நியாயமென்றும் மார்ஜால நியாயம் என்றும் இரண்டு பக்தி மார்கத்தில் சொல்லப் படுகின்றது.
    மர்கடம் என்றால் குரங்கு.எப்படி குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை இறுகப் பற்றிக் கொள்கிறதோ அப்படி பக்தன் இறைவன் தாளை இருகப் பற்றிக் கொள்ள வேண்டும். மார்ஜாலம் என்றால் பூனை.பூனைக்குட்டி தாயை சும்மா அழைத்தாலே போதும். தாய்ப் பூனை ஒட்டோடி வரும். பூனைக்குட்டி செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை.தாய் எங்கே கொண்டு வைக்கிறதோ அங்கே குட்டி இருந்து கொள்ள வேண்டியதுதான்.தாய் தன்னைக் காப்பாள் என்ற நம்பிக்கை பூனைக்கு இருப்பதுபோல பகதனும் பகவானிடம் பூர்ண சரணாகதி செய்து கொண்டு எதற்கும் கவலைப்படாமல், அஞ்சாமல் வாழ வேண்டியதுதான்.மரம் வைத்தவன் தண்ணீர் விட மாட்டானா என்ற நம்பிக்கை!/////

    உங்களின் ஆகம விளக்கங்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  17. ////Blogger வரதராஜன் said...
    ஐயா,
    அற்புதம்.திருநீரின் மகிமையை ஏற்கெனவே
    மிக அழகாக விளக்கியிருந்தீர்கள். தற்போது திருமண்ணின் மகிமையை எழுதியுள்ளீர்கள். விளக்கமான விவரணங்கள். தங்களை எப்படிப் புகழ்ந்தாலும் தகும், ஐயா!/////

    நான் செய்வது ஆன்மீகப் பணி. அதற்கு இறைவனைப் பணிந்தால் போதும். என்னை எழுதப் பணித்திருப்பவன் பழநிஅப்பன். அவனைப் புகழ்ந்தால் போது. அவன்தாள் பணிந்தால் போதும்

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com