அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அருமருந்து எது?
பக்தி மலர்
இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா
திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா?
முருகன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து
நல்ல அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து
அருள் மணக்கும் ... ஐயனின் திருமருந்து
நல்ல அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கும் அரும் மருந்து
அன்பு வழியில் வாழவைக்கும் பெருமருந்து
நல்ல ஆசியெல்லாம் நமக்கென்றும் தரும் மருந்து
வேலன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
கன்னியரைக் கற்பு வழியில் நடத்தும் மருந்து
இளங் காளையரைக் காலமெல்லாம் காக்கும் மருந்து
மங்கையர்க்கு மழலைச்செல்வம் கொடுக்கும் மருந்து
திருமங்கலமாய் குங்குமமும் வழங்கும் மருந்து
குமரன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
கற்பனையில் கவிதைப்பாட செய்யும் மருந்து
பெருங் கள்வரையும் திருந்தி வாழ செய்யும் மருந்து
முன்வினை தந்த நோயெல்லாம் தீர்க்கும் மருந்து
நம் வாழ்வில் நல்ல செல்வமெல்லாம் சேர்க்கும் மருந்து
கந்தன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
அதை தினம் அணிந்தால் புகழ் இருக்கு புரியுமா?
முருகன் ... திருநீறில் மருந்திருக்கு தெரியுமா?
பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்
=======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
அருமைஅயான பாடலைப் பகிர்ந்ததமைக்கு நன்றி ஐயா!
ReplyDeleteஐயா,
ReplyDeleteதிருநீரில் மருந்திருப்பதால் தான், நீரில்லா நெற்றி பாழ் என்று கூறியுள்ளார்களோ, முன்னோர்கள் !
முருகா
ReplyDeleteமுருகா
ஒலியையும் தந்திருக்கலாம்
நன்றி ஐயா. பாடல் நன்றாக உள்ளது.
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteஅருமைஅயான பாடலைப் பகிர்ந்ததமைக்கு நன்றி ஐயா!/////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!
//////Blogger bhagwan said...
ReplyDeleteஐயா,
திருநீரில் மருந்திருப்பதால் தான், நீரில்லா நெற்றி பாழ் என்று கூறியுள்ளார்களோ, முன்னோர்கள் !//////
உண்மைதான். நன்றி நண்பரே!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா
முருகா
ஒலியையும் தந்திருக்கலாம்/////
ப்ளாக்கரில் ஒலிவடிவத்தைச் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தெரிந்தவர்கள் சொல்லித்தரலாம்
////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteநன்றி ஐயா. பாடல் நன்றாக உள்ளது////
நல்லது. நன்றி நண்பரே!.