வருந்த வைக்கும் உண்மைகள்!
நாட்டில் நடக்கும் சில விஷயங்களைப் பார்த்தால் வருத்தத்திற்கு ஆளாக நேரிடும். வருந்துவதைத் தவிர நம்மால் வேறு ஒன்றும் செய்ய முடியாது. அதுதான் உண்மை! அதுதான் நிலைமை!
சில செய்திகளைக் கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள்:
1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!
2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!
3.வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம். ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்!!
4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட அம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!
5.ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!
6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன. ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதை கடைகளில் விற்கப்படுகின்றன..!!
7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான இரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!
8.மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
9.கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு. கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!
10.பிரபலமாக வேண்டும் என்ற அபிலாசைகள் அனைவருக்கும் உண்டு. ஆனால் பிரபலமாவதற்கு உரிய உண்மையான வழியில் செல்ல மட்டும் ஒருவருக்கும் விருப்பம் இல்லை..!!!
11.குழந்தைத் தொழிலாளர்களை ஒழிக்க வேண்டும் என்போம். ஆனால் தேநீர்க்கடைகளில் வேலை பார்க்கும் சிறுவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் டீயை மட்டும் சுவாரசியமாக உறிஞ்சிக்குடிப்போம்...!!!
வாட்ஸப்பில் படித்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
மனசாட்சியுள்ளவர்கள் சிந்திக்க வேண்ட்ய கருத்துக்கள்.
ReplyDeleteஇது மிக நீண்ட நாட்களாக சுற்றில் உள்ளது.பொதுவினியோக அரிசி இலவசமாகி பல வருடங்கள் ஆகிறது. இப்போது ஒருரூபாய் என்று குறிப்பிடப்படுவதால் இது சுமார் 5 ஆண்டுகளாக சுற்றில் உள்ளது என்று கொள்ளலாம்.
ஐயா,
ReplyDeleteஇதர்க்கு என்னதான் தீர்வு.... Anniyan திரைபடத்தில் சொல்வது போல எல்லாரும் மாற வேண்டும்..
All the points are really true.
ReplyDelete8th and 10th points are hard but realistic truth.
hummm. உணமை தான்,
ReplyDeleteஇதில் வருந்து வதற்கு ஒன்றுமில்லை
ReplyDeleteஇது தான் ஏதார்த்தம்
No regrets.. just lesson
No worries.. Just acceptance
No expectation just gratitude
Life is Short .. live happily
சிம் கார்டை (மட்டும்) இலவசமாகக் கொடுத்து விட்டு மாதக் கட்டணம், சேவைக் கட்டணம் இப்படி வித விதமாக கசை பிடுங்கிக் கொள்கிறார்களே. There is no such thing as free lunch in this world.
ReplyDelete//சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.//
இதற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியில்தான் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் நதி மூலத்தை ஆராய்ந்தால் தெரியும். அடுத்து ஜேப்பியார். இதற்கு மேல் எழுதினால் வாத்தியாருக்குதான் பிரச்சினை. கடல் கடந்து யார் என்னைத் தேடி வரப் போகிறர்கள் என்ற எண்ணம் (எகத்தாளம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்) எனக்கு.
Yes Sir!
ReplyDelete/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமனசாட்சியுள்ளவர்கள் சிந்திக்க வேண்டிய கருத்துக்கள்.
இது மிக நீண்ட நாட்களாக சுற்றில் உள்ளது.பொதுவினியோக அரிசி இலவசமாகி பல வருடங்கள் ஆகிறது. இப்போது ஒருரூபாய் என்று குறிப்பிடப்படுவதால் இது சுமார் 5 ஆண்டுகளாக சுற்றில் உள்ளது என்று கொள்ளலாம்./////
ஆமாம். அது சுற்றில்தான் உள்ளது. தீர்விற்கான இடத்திற்கு வரவில்லை. நன்றி கிருஷ்ணன் சார்!
/////Blogger Kamban said...
ReplyDeleteஐயா,
இதற்கு என்னதான் தீர்வு.... Anniyan திரைபடத்தில் சொல்வது போல எல்லாரும் மாற வேண்டும்.. /////
இல்லை. நம் மக்களின் சகிப்புத்தன்மை உலகப் பிரசித்தி பெற்றது. இப்போது போலவே எல்லோரும் சகித்துக் கொண்டே இருந்துவிடுவார்கள்!
////Blogger S Balaji said...
ReplyDeleteAll the points are really true.
8th and 10th points are hard but realistic truth.////
நல்லது. நன்றி நண்பரே!
////Blogger வடுவூர் குமார் said...
ReplyDeletehummm. உணமை தான்,/////
அடடே வடுவூராரா? வாங்க சாமி வாங்க!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஇதில் வருந்து வதற்கு ஒன்றுமில்லை
இது தான் யதார்த்தம்
No regrets.. just lesson
No worries.. Just acceptance
No expectation just gratitude
Life is Short .. live happily////
உங்களுக்கு எல்லாமே யதார்த்தம்தான். காரணம் நீங்கள் மேல்தட்டுக் குடிமகன்!
/////Blogger Kirupanandan A said...
ReplyDeleteசிம் கார்டை (மட்டும்) இலவசமாகக் கொடுத்து விட்டு மாதக் கட்டணம், சேவைக் கட்டணம் இப்படி வித விதமாக காசைப் பிடுங்கிக் கொள்கிறார்களே. There is no such thing as free lunch in this world.
//சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.//
இதற்கு எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியில்தான் பிள்ளையார் சுழி போடப்பட்டது. ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் நதி மூலத்தை ஆராய்ந்தால் தெரியும். அடுத்து ஜேப்பியார். இதற்கு மேல் எழுதினால் வாத்தியாருக்குதான் பிரச்சினை. கடல் கடந்து யார் என்னைத் தேடி வரப் போகிறர்கள் என்ற எண்ணம் (எகத்தாளம் என்று கூட வைத்துக் கொள்ளலாம்) எனக்கு./////
வாத்தியாரின் மேல் நீங்கள் கொண்டுள்ள அக்கறை வாழ்க! நன்றி கிருபானந்தன்!
////Blogger kanna said...
ReplyDeleteYes Sir!////
Yes kanna!
///உங்களுக்கு எல்லாமே யதார்த்தம்தான். காரணம் நீங்கள் மேல்தட்டுக் குடிமகன்!///
ReplyDeleteமேல் தட்டு என்று எந்த பொருளில்
மேற்கோளிட்டீகள் என தெரியாது
ஆனால்..
இந்த பதிவின் "மேல்"
இதை "தட்டிய" ஆங்கில வாசகங்களை
குறித்து தான் தாங்கள் இதை
குறிப்பிட்டதாக எடுத்துக் கொள்ளவா