இறக்குமுன்பு என்ன சொன்னார் இராவணன்?
ராமாயணப் போரின் இறுதிக் கட்டம்.
போர்களம் எங்கும் இரத்த ஆறு
பெறுக்கடுத்து ஓடுகிறது.
போரில் தோல்வி அடைந்த
ராவணன் மரண அவஸ்தையில் மரண
தேவதையின் வரவுக்காக காத்திருக்கிறான். இந்நிலையில் ஸ்ரீ ராமபிரான் தம்பி
லக்ஷ்மணனை கூப்பிடுகிறார்.
"என்ன வேலையாக கூப்பிட்டீர்கள்
அண்ணா?
தம்பி..உனக்கு ஒரு
முக்கியமான வேலை கொடுக்கிறேன்.ராவணன்
என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும்
அவன் ஒரு சக்கரவர்த்தி. சிறந்த
சிவ பக்தன்.பாடகன்.வேதங்களை
நன்கு அறிந்தவன். நேர்மையாளன். அதனால் நீ அவனிடம்
சென்று அவன் உயிர் பிரிவதற்குள்
ஏதாவது நல்லதை கற்று கொண்டு
வா! என்று சொல்லவும் தமையன்
சொல் தவறாத தம்பியும் கிளம்பி
சென்றான்.
ராவணன் தலைமாட்டுகருகில் நின்றான்.காலடிஓசையை கேட்ட ராவணன விழிகளைத்
திறந்து பார்த்தான் ஒன்றும் பேச வில்லை.
ஏதாவது சொல்லக்கூடும் என்று
எதிர் பார்த்து காத்திருந்து அலுத்துப்போன லக்ஷ்மணன் ராமரிடம் வந்து முறையிட்டான்.எல்லா
விவரங்களையும் அறிந்து கொண்ட எம்பிரான்
மெல்ல பொருள் பொதிந்த புன்னகையொன்றை
வீசினார்.
"தம்பி...உபதேசம் அறிவுறை
போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி
அருகில் நின்று கொண்டு கேட்பது
தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து
கொள்" என்று அறிவுறை சொல்லி
அனுப்பினார்.
இந்த முறை தன்
கால்களுக்கருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணனை
ஏமாற்ற வில்லை ராவணன். அந்த
வேதனையையும் மீறி அவன் முகத்தில்
மலரந்தது ஒரு பாசப்புன்னகை.
"தம்பி லக்குமணா..சிறிது
என்னருகில் உன் காதைக்கொண்டு வா.
எனக்குத்தெரிந்த வாழ்க்கைக்கு முக்கியமான நான்கு
விஷயங்களைப் பற்றி கூறுகிறேன்."
1. வாட்ஸ்ப்புக்குள் போகாதே.
2. முகநூலைத் தப்பி தவறிக் கூட
உபயோகபடுத்தாதே.
3. வாகனம் ஓட்டும் போது
கைபேசியை கையில் வைத்துக்கொள்ளாதே".
4. வலைப் பதிவுகள் பக்கம் தலையைக்கூட வைத்துப்
படுக்காதே. குறிப்பாக வாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே!
என்பதுதான் ராவணன் கூறிய அறிவுரைகள் ஆகும்!
எப்படி உள்ளது அறிவுரைகள்?
அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
Respected Sir
ReplyDeleteLOL... 4th is super :)
Nice Sir... :-)
ReplyDeleteவணக்கம் குரு,
ReplyDeleteநீங்கள் எந்த தலைப்புகளில் பதிவேற்றினாலும் நன்றாக உள்ளது. அதை நாங்கள் ரசிக்குறோம். இருபினும் நமது வகுப்பறையில் ஆன்மிக பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது. தயவு செய்து ஆன்மீக பதிவுகள் அதிகம் நமது வகுப்பறையில் பதிவேற்றுங்கள்.
தவறாக நினைக்காதீர்கள் மன்னிக்கவும்.
நன்றி
செல்வம்
என்ன இப்படி திருப்பிப் போட்டு அடித்து விட்டீர்கள்!...
ReplyDeleteஇருந்தாலும் -
இலங்காதிபதி என்னதான் சொன்னான் - இளையபெருமாளிடம்!..
வாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே!....
ReplyDeleteஇந்த கருத்தை நான் எதிர்க்கிறேன்.... எங்களுக்குன்னு ஒரு வாத்தியார் கிடைச்சிருக்கார்... அவரையும் விட்டுடோம்ன்னா எங்களுக்கு எளிதில் ஜோதிட அறிவே கிடைக்காமல் போய்விடும்...
கதம்! கதம்! ராவணா!!!
ஆஹா, பிரமாதமான நகைச்சுவை.
ReplyDeleteஇராவணன் என்றதும் கொஞ்சம் சீரியசாகவே படித்தேன். நல்ல நகைச்சுவை. சிரித்து விட்டேன்!
ReplyDeleteGood afternoon sir,
ReplyDelete/குறிப்பாக வாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே!/ lol n rofl :) :)
ReplyDeleteஅப்படினா, ராவணன் உங்க blog க்கு வந்திருக்கார் போல :)
Ravanan is also having account in Whatsapp, FB etc?
ReplyDeleteரொம்ம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு. அது சரி ராவணனே இதெல்லாம் செய்யாதே னு சொன்னப்புறம் நாம செய்யறது மாகா பாவமாச்சே....
ReplyDeletewelcome
ReplyDeleteSani peyarchi palangal plzzz......
ReplyDeleteமுதல் மூன்று அறிவுரைகள் சரிதான். நான்காவது அறிவுரை ஏற்க முடியாது.
ReplyDeleteராவணன் கூறியதால் மட்டும் அல்ல. ஸ்ரீ ராமரே கூறினாலும் அதுதான் பதில்.
////Blogger Dallas Kannan said...
ReplyDeleteRespected Sir
LOL... 4th is super :)//////
4ம் அறிவுரைதான் எனக்கும் பிடித்ததாகும் கண்ணன். என்ன ஒற்றுமை பார்த்தீர்களா - நம்மிருவருக்கும்!!
////Blogger Balamurugan Jaganathan said...
ReplyDeleteNice Sir... :-)////
நல்லது. நன்றி நண்பரே!
///Blogger selvam velusamy said...
ReplyDeleteவணக்கம் குரு,
நீங்கள் எந்த தலைப்புகளில் பதிவேற்றினாலும் நன்றாக உள்ளது. அதை நாங்கள் ரசிக்குறோம். இருபினும் நமது வகுப்பறையில் ஆன்மிக பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது. தயவு செய்து ஆன்மீக பதிவுகள் அதிகம் நமது வகுப்பறையில் பதிவேற்றுங்கள்.
தவறாக நினைக்காதீர்கள் மன்னிக்கவும்.
நன்றி
செல்வம்/////
மாணவர்களின் வேண்டுகோள்கள் எப்படித் தவறாகும். எழுதுகிறேன். உங்கள் பரிந்துரைக்கு நன்றி நண்பரே!
//////Blogger துரை செல்வராஜூ said...
ReplyDeleteஎன்ன இப்படி திருப்பிப் போட்டு அடித்து விட்டீர்கள்!...
இருந்தாலும் -
இலங்காதிபதி என்னதான் சொன்னான் - இளையபெருமாளிடம்!../////
கலியுகத்தில் மக்கள் எல்லாம் அதி புத்திசாலிகளாக இருப்பார்கள். தொழில் நுட்பம் அசுர வளர்ச்சி பெறும். தொழில் நுட்ப வசதிகளை அனைத்து மக்களும் பயன் படுத்துவார்கள். ஆனால் பொதுவாக ஒருவர் கூட உட்கார நேரமில்லாமல் பணத்துக்காக, பணத்தைத் தேடி அலைந்து கொண்டிருப்பார்கள். உன்னையும்,என்னையும், ஏன் ஸ்ரீராமனையும் நினைக்கக்கூட நேரமின்றி தங்கள் தேடலில் கண்ணாக இருப்பார்கள் என்று இறக்கும் தருவாயில், ராவணன் இளையபெருமாளிடம் சொன்னாராம்.
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
ReplyDeleteவாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே!....
இந்த கருத்தை நான் எதிர்க்கிறேன்.... எங்களுக்குன்னு ஒரு வாத்தியார் கிடைச்சிருக்கார்... அவரையும் விட்டுடோம்ன்னா எங்களுக்கு எளிதில் ஜோதிட அறிவே கிடைக்காமல் போய்விடும்...
கதம்! கதம்! ராவணா!!!/////
ராவணன் சொல்லியதைப் பொதுக் கருத்தாக்கிப் பாருங்கள் நண்பரே! உண்மை பிடிபடும்.
////Blogger பழனி. கந்தசாமி said...
ReplyDeleteஆஹா, பிரமாதமான நகைச்சுவை.////
அண்ணா, வாருங்கள். உங்கள் எழுத்துக்களைப் படித்திருக்கிறேன். உங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. உங்களின் பாராட்டு அதைவிட மகிழ்ச்சியைத் தருகிறது. நன்றி!
பாராட்டுவதற்கும் ஒரு மனசு வேண்டுமே!
நல்ல மனம் வாழ்க!
நாடு போற்ற வாழக!
////Blogger தி.தமிழ் இளங்கோ said...
ReplyDeleteஇராவணன் என்றதும் கொஞ்சம் சீரியசாகவே படித்தேன். நல்ல நகைச்சுவை. சிரித்து விட்டேன்!////
தெரியும். நானும் அதைத்தான் எதிர்பார்த்தேன். உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger sundari said...
ReplyDeleteGood afternoon sir,////
நன்றி சகோதரி!
/////Blogger Sanjai said...
ReplyDelete/குறிப்பாக வாத்தியாரின் வகுப்பறைப் பக்கம் போகாதே!/ lol n rofl :) :)
அப்படினா, ராவணன் உங்க blog க்கு வந்திருக்கார் போல :)////
வந்ததினால்தானே அப்படிச் சொல்லியிருக்கிறார் நண்பரே!
/////Blogger PS said...
ReplyDeleteRavanan is also having account in Whatsapp, FB etc?////
இருந்திருக்கும். அதனால்தானே தன் கஷ்டங்களை வைத்து அப்படியொரு அறிவுரையை அவரால் வழங்க முடிந்திருக்கிஅது!
/////Blogger sumathi said...
ReplyDeleteரொம்ம்ம்ம்ம்ப நல்லாயிருக்கு. அது சரி ராவணனே இதெல்லாம் செய்யாதே னு சொன்னப்புறம் நாம செய்யறது மாகா பாவமாச்சே....////
அதனால் என்ன சகோதரி? பத்தோடு பதினொன்று; அத்தோடு இதுவும் ஒன்று!
////Blogger Saravanan V said...
ReplyDeletewelcome////
நல்லது. நன்றி!
//////Blogger Ajmal Faizal said...
ReplyDeleteSani peyarchi palangal plzzz....../////
டிசம்பர் ஒன்றாம் தேதி எழுதிப் பதிவிட்டிருக்கிறேன் சாமி. அதைப் படியுங்கள்!
இராவணன் சொன்னதைக் கேட்டு சிரித்தேன். ஆனால் உங்கள் வகுப்பறையை மட்டும் விடவே மாட்டோம்.
ReplyDeleteநல்ல நகைச்சுவை ஐயா
ReplyDeleteநன்றி
ராவணனோட மொத மூணு அறிவுரைகளும்,ஓ.கே!நாலாவது.............ஹி!ஹி!!ஹீ!!!
ReplyDelete//////Blogger Kamala said...
ReplyDeleteஇராவணன் சொன்னதைக் கேட்டு சிரித்தேன். ஆனால் உங்கள் வகுப்பறையை மட்டும் விடவே மாட்டோம்./////
உங்களின் மேலான அன்பிற்கு மிக்க நன்றி சகோதரி1
ReplyDelete////Blogger lrk said...
நல்ல நகைச்சுவை ஐயா
நன்றி////
நன்றி நண்பரே!
////Blogger Yoga.S. said...
ReplyDeleteராவணனோட மொத மூணு அறிவுரைகளும்,ஓ.கே!நாலாவது.............ஹி!ஹி!!ஹீ!!!/////
முதல் மூன்றும் சரிதான் எனும்போது, நான்காவதும் சரியாகத்தானே இருக்கும் ராசா!
ஐந்தாம் விஷயம்....
ReplyDelete5) அதையும் மீறி சென்றால் உன்னுடைய ஜாதகத்தின் மூலம் வாத்தியாருக்கு கேள்விகள் கேட்டு தொந்தரவு
கொடுக்காதே ........
all points superp..
ReplyDeleteராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி. சிறந்த சிவ பக்தன்.பாடகன்.வேதங்களை நன்கு அறிந்தவன். நேர்மையாளன்
ReplyDelete"தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.
ஆஹா.....!! என்ன ஒரு அற்புதுமான வரி... இந்த வரியை எனது வாழ் நாளில் மறக்க மாட்டேன் ..
அருமை ஐயா...
ReplyDelete////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமுதல் மூன்று அறிவுரைகள் சரிதான். நான்காவது அறிவுரை ஏற்க முடியாது.
ராவணன் கூறியதால் மட்டும் அல்ல. ஸ்ரீ ராமரே கூறினாலும் அதுதான் பதில்.////
தவறு. ஸ்ரீராமர் கூறியிருந்தால், அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டும். நானும் என் பதிவுகளை அத்துடன் நிறுத்தியிருப்பேன் கிருஷ்ணன் சார்!
///Blogger V.C.Arunchand said...
ReplyDeleteஐந்தாம் விஷயம்....
5) அதையும் மீறி சென்றால் உன்னுடைய ஜாதகத்தின் மூலம் வாத்தியாருக்கு கேள்விகள் கேட்டு தொந்தரவு
கொடுக்காதே ......../////
உண்மைதான். ஆனால் அதை ராவணன் சொல்லவில்லை. வகுப்பறைப் பக்கம் போகாதே என்று சொன்னதில் எல்லாம் அடங்கி விட்டதே சாமி!
/////Blogger sorna sekar said...
ReplyDeleteall points superp../////
நல்லது. நன்றி சகோதரி!
////Blogger C.Senthil said...
ReplyDeleteராவணன் என்னதான் தப்பான காரியம் செய்திருந்தாலும் அவன் ஒரு சக்கரவர்த்தி. சிறந்த சிவ பக்தன்.பாடகன்.வேதங்களை நன்கு அறிந்தவன். நேர்மையாளன்
"தம்பி...உபதேசம் அறிவுறை போன்றவை மகான்களிடமிருந்து கேட்கும் போது அவர்கள் காலடி அருகில் நின்று கொண்டு கேட்பது தான் பண்பு. அதுதான் மரியாதை.நீயும் அதன்படியே நடந்து கொள்" என்று அறிவுறை சொல்லி அனுப்பினார்.
ஆஹா.....!! என்ன ஒரு அற்புதுமான வரி... இந்த வரியை எனது வாழ் நாளில் மறக்க மாட்டேன் ../////
அப்படியா. வாழ்க உங்களது உள்ளம். அப்படியே கடைப் படியுங்கள். நன்றி!
////Blogger -'பரிவை' சே.குமார் said...
ReplyDeleteஅருமை ஐயா...////
நல்லது. பரிவை என்பது எதைக் குறிக்கிறது ராசா?