மனதைப் புரட்டிப் போடக்கூடிய அற்புதமான கடிதம்
உளவியல் கடிதம். உண்மைக் கடிதம். அனைவரையும்
கடைசிவரி வரை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
-------------------------------------------------------------------
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதம்
- மகளுக்கும் கூட இது பொருந்தும்!!
(எனக்கு மின் அஞ்சலில் ஆங்கிலத்தில் வந்த கடிதத்தைத் தமிழுக்கு
மொழி மாற்றம் செய்து இங்கு கொடுத்திருக்கிறேன்.
அனைவருக்கும் பயன் உள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அனுபவ அறிவு வாய்ந்த ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய கடிதம்
நம் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்
இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒலிபரப்பாளர்
/ குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது.
இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே
நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும்.
இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள்
அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும்
தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.
-------------------------------------------------------
அன்புள்ள மகனுக்கு,
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய
அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை.
தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை.
சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்
(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில்
உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட
சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும்.
இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான
இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும்.
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை
முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ
உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே.
உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக
நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை.
உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது
உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும்.
அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு.
மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம்.
ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும்
ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது.
உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான்
என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று
அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும்.
அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல்
உண்மையான நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை.
உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை.
இந்தக் கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி
மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும்
அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ
நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை
நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது.
இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை
உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய்.
வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து
கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும்.
காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த
உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர்
உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு.
காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக்
கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ
மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில்
ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள்
இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும்
என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ
பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும்.
ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை
அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை
சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை
சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை.
அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு
நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும்
வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்;
நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது.
அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும்.
நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன்
சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக
அல்லது ஏழையாக.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால்
பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது.
நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும்
நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே.
நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை
தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன்.
ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை.
நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க
வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன்
என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும்
அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம்.
நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம்
அன்புடன்
அப்பா
============================================================
இணையத்தில் படித்த உளவியல் கட்டுரை, உண்மைக் கட்டுரை.
சிறப்பாக இருந்ததால், உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்.
அன்புடன்,
வாத்தியார்
-------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
வணக்கம் குரு
ReplyDeleteஇந்த பதிவை இரண்டாம் முறையாக படிப்பதால் நன்றாக மனதில் பதிந்துவிட்டது.
நன்றி
செல்வம்
வணக்கம் சார்.......
ReplyDeleteஉள்ளேன் ஐயா.....
ஏற்கனவே இந்தக்கடிதம் பதிவிட்டிருந்தீர்கள்!
அற்புதமான கடிதம்!
Respected Sir,
ReplyDeleteIt's another wonderful post sharing from you this week.
Guru always respectable person.
With kind regards,
Ravichandran M.
http://classroom2007.blogspot.in/2010/12/blog-post_19.html
ReplyDeleteThank you, Sir
Good afternoon sir
ReplyDeletehello subbiah sir,
ReplyDeletePlease publish saturn transit predictions soon sir, don't wait for 15/12/2014. Eagerly waiting to see such generalized predictions for 12 horoscope signs from your side.
Thank you
hari haran
முன்பே இதை தங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தீர்கள் என்று நினைக்கிறேன்...
ReplyDeleteநல்ல கடிதம்... மீண்டும் வாசித்தேன்.
/////Blogger Selvam Velusamy said...
ReplyDeleteவணக்கம் குரு
இந்த பதிவை இரண்டாம் முறையாக படிப்பதால் நன்றாக மனதில் பதிந்துவிட்டது.
நன்றி
செல்வம்/////
நினைவிலில்லை. அதனால்தான் மீள்பதிவாகி விட்டது. இரண்டாம் முறையாக படிப்பதால் நன்றாக மனதில் பதிந்துவிட்டது என்று சொன்ன மேன்மைக்கு நன்றி நண்பரே!!!!
This comment has been removed by the author.
ReplyDelete/////Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்.......
உள்ளேன் ஐயா.....
ஏற்கனவே இந்தக்கடிதம் பதிவிட்டிருந்தீர்கள்!
அற்புதமான கடிதம்!/////
நினைவிலில்லை. அதனால்தான் மீள்பதிவாகி விட்டது. சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி நண்பரே!!11
/////Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்.......
உள்ளேன் ஐயா.....
ஏற்கனவே இந்தக்கடிதம் பதிவிட்டிருந்தீர்கள்!
அற்புதமான கடிதம்!/////
நினைவிலில்லை. அதனால்தான் மீள்பதிவாகி விட்டது. சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி நண்பரே!!11
/////Blogger ravichandran said...
ReplyDeleteRespected Sir,
It's another wonderful post sharing from you this week.
Guru always respectable person.
With kind regards,
Ravichandran M./////
நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!
////Blogger kmr.krishnan said...
ReplyDeletehttp://classroom2007.blogspot.in/2010/12/blog-post_19.html
Thank you, Sir////
நினைவிலில்லை. அதனால்தான் மீள்பதிவாகி விட்டது. சுட்டிக் காட்டிய மேன்மைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!11
////Blogger sundari said...
ReplyDeleteGood afternoon sir////
உங்களுடைய வணக்கத்திற்கு நன்றி சகோதரி!
////Blogger sundari said...
ReplyDeleteGood afternoon sir////
உங்களுடைய வணக்கத்திற்கு நன்றி சகோதரி!
/////Blogger Hari Haran said...
ReplyDeletehello subbiah sir,
Please publish saturn transit predictions soon sir, don't wait for 15/12/2014. Eagerly waiting to see such generalized predictions for 12 horoscope signs from your side.
Thank you
hari haran/////
சரி, அடுத்த வாரம் செய்து விடுகிறேன்!
/////Blogger -'பரிவை' சே.குமார் said...
ReplyDeleteமுன்பே இதை தங்கள் தளத்தில் பகிர்ந்திருந்தீர்கள் என்று நினைக்கிறேன்...
நல்ல கடிதம்... மீண்டும் வாசித்தேன்./////
நினைவிலில்லை. அதனால்தான் மீள்பதிவாகி விட்டது. நல்ல கடிதம்... மீண்டும் வாசித்தேன் என்று சொன்ன மேன்மைக்கு நன்றி நண்பரே!!!
அருமையான பதிவு .
ReplyDeleteமறுபடியும் நினைவு படுத்தியதற்கு நன்றி ஐயா .
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteஇது மீள் பதிவு என்பதை விட எத்தனை முறை படித்தாலும் திகட்டாத ஒரு அருமையான பதிவு.சிறப்பம்சம் தங்களது நினைவூட்டும் பதிவுகள்.
நன்றியுடன்,
பொன்னுசாமி.