மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

16.10.14

Quiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!


Quiz.no.69 Answer: நாளைப் பொழுதை இறைவனுக்களித்து நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு!

புதிர் எண் 69ற்கான விடை

16.10.2014
--------------------------------------
நேற்றையப் பதிவில், அம்மணி ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, ஒரு கேள்விகளுக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.

கேட்கப்பெற்றிருந்த கேள்வி:

”ஜாதகியின் 7ஆம் வீட்டை அலசிப் பதில் எழுதுங்கள். அவருக்கு திருமணம் நடைபெற்றதா? அல்லது திருமணமாகவில்லையா? திருமணம் நடைபெற்றது என்றால் எப்போது நடைபெற்றது? திருமணமே ஆகவில்லை என்றால், ஏன் ஆகவில்லை என்பதை அலசி பதிலை எழுதி அனுப்புங்கள். கேள்விக்கு உரிய பதிலை மட்டும் எழுதுங்கள்.” என்று கூறியிருந்தேன்.

சரியான பதில்:

1.  ஜாதகிக்குத் திருமணம் ஆனது.
2. அதீதத் தாமதத்துடன் அவருடைய 37வது வயதில் அவருக்குத் திருமணம் நடைபெற்றது.
3. சனி திசை, குரு புத்தியில் ஜாதகிக்குத் திருமணம் நடைபெற்றது.

மிகச் சரியான பதிலை ஒருவரும் எழுதவில்லை. ஆனால் ஒட்டிய பதிலை,  தங்களுடைய அலசலை எழுதியவர்கள் மொத்தம் 10 பேர்கள். அவர்களின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

எந்த வயது என்பதை ஒருவரும் எழுதவில்லை. அத்துடன் எழுதியவர்கள் சனி திசை என்று குறிப்பிட்டுள்ளார்கள். சனி திசை குரு புத்தி என்று குறிப்பிடவில்லை. ஆகவே யாருக்கும் 100 மதிப்பெண்கள் இல்லை. அந்தப் பத்துபேர்களுக்கும் 60 மதிப்பெண்கள் (பொதுவாகக் கொடுத்துள்ளேன்)

தசா/தசா புத்திகள்தான் பலனை அளிக்கக்கூடியவை. அளிக்க வல்லவை!
இந்த ஜாதகியின் திருமணம் அதீத தாமதம் ஆனதற்குக் காரணம் அடுத்தடுத்து வந்த மகா திசைகள்தான்!

1. ஏழாம் அதிபதி குரு நீசம். அத்துடன் வக்கிரமாகியும் உள்ளார். நீசபங்கமும் ஆகியுள்ளார்
2. அவர், அதாவது குரு பகவான், சனியுடன் சேர்ந்துள்ளார். சனி எட்டாம் அதிபதி. அத்துடன் அவரும் வக்கிரகதியில் உள்ளார்
ஆகவே அந்த இரண்டு கிரகங்களின் திசைகளும் ஜாதகியின் திருமணத்திற்குச் சாதகமாக இல்லை.

அந்த இரண்டு கிரகங்களும் வக்கிரம் பெற்றுள்ளதைச் சுட்டிக் காட்டும் விதமாக அட்டவணை ஒன்றைக் கொடுத்திருந்தேன். அதை எத்தனை பேர்கள் கவனித்தார்கள் என்பது தெரியவில்லை!

ஜாதகியின் 37வது வயதில் சனி திசை, குரு புத்தியில்  ஜாதகிக்குத் திருமணம் நடந்தது.

சனி திசை முடிந்து, அடுத்து வந்தது புதன் மகா திசை. புதன் லக்கினாதிபதி. அவர் நல்ல நிலைமையில் லக்கினத்திலேயே உள்ளார். அத்துடன் அவர் ஏழாம் வீட்டை நேரடியாகப் பார்க்கிறார். ஆகவே அவருடைய திசையில் ஜாதகியின் வாழ்க்கை திருமண யோகத்துடன் இருக்க வேண்டும். திருமணமும் நடைபெற்றது. அதற்கு உதவும் விதமாக சனி திசையின் கடைசி புத்தியான குரு புத்தியில், அதாவது ஏழாம் வீட்டுக்காரன் குருவின் புத்தியில் (sub period) திருமணத்தைக் குரு பகவான் நடத்திவைத்தார்

அன்புடன்,
வாத்தியார்
=====================================================================
1
/////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்...
அம்மனிக்கு திருமணம்!!!
சனி திசையில் நடந்திருக்கும்.
அதேசனிதிசையில்
பிரிவினையும் நடந்திருக்கும்.
புதனும்,சுக்கிரனும் கைகொடுப்பார்கள்./////
-------------------------------------------------------
2
/////Blogger valli rajan said...
Dear Guruji,
1.Guru is neecham but it become neechabanga raja yogam because it is with lord eight lord. eight lord in its own house. 
2.Venus in 12 house but has jupiter aspect.
3.Strong Lagna lord and it's view on 7th house.
4.Guru view on 2nd house.
5.Guru in its own house and form gajakesari yogam in navamsa.
6.Venus is also well placed in navamsa.
Definitely there is marriage, it should have been on saturn dasa mercury sub period./////
-----------------------------------------------------
3
/////Blogger Dallas Kannan said...
Respected Sir
Here is my quick analysis.
Definitly Married: 
1. Laknathipathi Budha in laknam and looks 7th house.
2. 7th lord Guru is in 8th house and neecham, but in own house in navamsam
3. Sukra is in 12th house, but its own house.
Mariage is delayed due to Guru in 8th house with Sani and Sun looks at it. She married in the mid sani dasa, Sani dasa/Chandra Budhi/////
-------------------------------------------------------
4
/////Blogger Palani Shanmugam said...
மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
மிதுன லக்ன ஜாதகிக்கு, லக்னாதிபதி புதன் லக்னத்திலேயே ஆட்சி பெற்று இருக்கிறார். அவருக்கு தீயவர்கள் பார்வை இல்லை. குடும்ப ஸ்தான அதிபதி சந்திரன் திரிகோணத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து சனியின் 10ம் பார்வையை பெறுகிறது. அதனால் புனர்பூ தோஷம் ஏற்படுகிறது. எனவே திருமணம் தாமதமாகும்.
ஏழாம் அதிபதியான குரு நீச்சம் அடைந்திருந்தாலும் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதால் நீசபங்க ராஜ யோகமாகி விடுகிறது. இந்த அமைப்பு கஜகேசரி யோகத்தையும் ஏற்படுத்துகிறது. நவாம்சத்திலும் குரு மீனத்தில் ஆட்சி பெற்று சந்திரன் சேர்க்கை பெற்றுள்ளது.
இத்துடன் செவ்வாயும் சுக்கிரனும் 6 மற்றும் 5ம் வீடுகளுக்கு அதிபதிகளாகி பரஸ்பர கேந்திரங்களில் இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் நடைபெற்று இருக்கும். அதிலும் யோக்காரகனான சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து குருவின் பார்வையைப் பெறுகிறது. எனவே ஜாதகிக்கு 1989 ல் அவருடைய 28 வது வயதில் சனி திசை சுக்கிர புக்தியில் திருமணம் நடைபெற்று இருக்கும்.//////
---------------------------------------------------------
5
/////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
கொடுக்கப் பட்டுள்ள புதிருக்கான விடை:
ஜாதகிக்கு திருமணம் தனது 31வது வயதில் சனி தசை சூரியன் புத்தியில் நடந்திருக்க வேண்டும்.
அலசல்:
1) மிதுன லக்கினத்தில் லக்கினாதிபதியும், சுகாதிபதியுமான புதன் சுப பலத்தில் இருந்து களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டையும் பார்வை செய்கிறார். லக்கினமும்,4 மற்றும் 7ம் இடமும் சுப பலம் பெற்றுள்ளன.
2) குடும்பாதிபதி சந்திரன் பூர்வபுன்னிய ஸ்தானத்தில் அமர்வு, ஸ்தானாதிபதி சுக்கிரன் 12ல் உச்சம்.
சுக்கிரனுக்கு 12மிடம் மறைவு இல்லை என்பது ஜோதிட விதி.
3) ஏழாமதிபதி குரு எட்டில் மறைவுடன் நீச்சமடைகிறார். ஆயினும் எட்டாம் அதிபதி சனியுடன் கூட்டு ஆனதால் நீச்ச பங்க ராஜயோகம் பெற்றுள்ளார்.
சனி,குரு இருவருமே உத்திராடம் நட்சத்திரத்தில்.குடும்ப ஸ்தானத்தில் உள்ள சூரியன்,ஆட்சி பெற்ற சனியின் நட்சத்திரமான பூசத்தில்.
நட்சத்திர பரிவர்த்த்னையால் 8ம் இடம் கெடவில்லை.
ஆக, திருமணத்தை குறிப்பிடும் 2,4,7,8 மற்றும் 12ம் இடங்கள் சுப பலம் பெற்றுள்ளதால் திருமணம் கட்டாயமாக நடந்திருக்க வேண்டும்,
நன்றியுடன்,
-பொன்னுசாமி./////
--------------------------------------------------------
6
////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
புதிர் போட்டி வேண்டுகோளை நிறைவேற்றியமைக்கு முதலில் நன்றி.
ஜாதகிக்கு இருதார யோகம் அமைப்பு உள்ளது. காரணம் இரண்டில் சூரியன், எட்டில் சனி, பன்னிரண்டில் மாந்தி மற்றும் காலத்திற காரகன் சுக்கிரன். இருப்பினும் எட்டில் அமர்ந்த குரு பகவான் இரண்டாம் வீட்டையும், பனிரண்டாம் வீட்டையும் பார்வை செய்கிறார். எனவே 28 வயதில் சனி திசையில் சுக்கிர புக்தியில் கோட்சார குரு 9இல் இருந்தபோது திருமணம் நடந்திருக்கும்.
நன்றி
செல்வம்/////
--------------------------------------------------------
7
////Blogger C Jeevanantham said...
Dear Sir,
1. Lagna lord mercury in power aspects 7th place.
2. Marriage karaka venus in 12th place, but own place.
3. 2nd lord in 5th place Lakshmi sthanam.
4. Jupiter 7th lord in 8th aspects 2nd. but neecham. join with sani. 8th lord in 8th.
5. Sani made the marriage late.
The Person got married late.////
------------------------------------------------------
8
////Blogger Narayanan V said...
லக்னாதிபதி லக்னத்தில் இருந்தாலும், லக்னம் பாபகர்த்தாரி யோகத்தில் சிக்கி உள்ளது, களத்திரகாரகன் 12ம் வீட்டில், அதுவும் மாந்தியுடன். ஆயினும் லக்னாதிபதி புதன் நேராக 7ம் இடத்தை பார்பதால், அவர் புக்தியில் கல்யாணம் ஆகி இருக்கும்.
V.Narayanan, pondicherry/////
-------------------------------------------------------
9
////Blogger Radha Sridhar said...
வணக்கம். 7ம் வீட்டை லக்கினதிலேயே ஆட்சி புரியும் சுப கிரகம் புதன் பார்க்கிறார். நன்மை.
7ம் அதிபன் 8ல் நீச பங்கம் அடைந்துள்ளார். அங்கு சனி ஆட்சி அதனால். சுக்கிரன் 12ல் மாந்திஉடன் அமர்ந்தாலும், குரு பார்வை, சுக்கிரன் ரிஷபத்தில் ஆட்சி பெறுவதால் தோஷம் நிவர்த்தி.
குடும்ப ஸ்தானத்தில் சூரியன் இருந்தாலும், குரு பார்வை இருப்பதால், நிவர்த்தி.
ஆதலின் தாமதமாக திருமணம் நடக்கும். குடும்பம் அமையும்.
அன்புடன்////
-------------------------------------------------------
10
Blogger Kirupanandan A said...
தாமதமாக 30 வயதிற்கு மேல் திருமணம் ஆனவர். 7ம் அதிபதி 8ல் நீசமாகி மறைவு. ஆயினும் நீச பங்கமாகியிருக்கிறார். களத்திரகாரகன் சுக்கிரன் 12ல் மறைந்தாலும் ஆட்சியானதால் திருமணம் உண்டு. அடுத்து லக்கினாதிபதி புதன் ஆட்சியாகி 7ம் இடத்தைப் பார்க்கிறார்./////
-----------------------------------------------------
================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5 comments:

  1. வணக்கம் சார்.......

    ஆசிரியர்க்கும், மாணவர்க்கும்...

    அட்வான்ஸ் தீவாளீ வாழ்த்துக்கள்
    ***********************
    $$$$$$$$$$$$$$$$
    ############
    ++++++++
    @@@@

    ReplyDelete
  2. முதல் முறையாக புதிரில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று.மிகுந்த மன வருத்தமாக உள்ளது.

    ReplyDelete
  3. ////Blogger Sakthivel K said...
    வணக்கம் சார்.......
    ஆசிரியர்க்கும், மாணவர்க்கும்...
    அட்வான்ஸ் தீவாளீ வாழ்த்துக்கள்/////

    நன்றி. உங்களுக்கும் வகுப்பறையின் சார்பில் முன் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. /////Blogger kmr.krishnan said...
    முதல் முறையாக புதிரில் கலந்து கொள்ள முடியாமல் போயிற்று.மிகுந்த மன வருத்தமாக உள்ளது./////

    வருத்தமே கூடாது. அடுத்தமுறை கலந்துகொண்டால் போயிற்று!

    ReplyDelete
  5. Vanakkam Guru Sir,

    I posted my predictions yesterday. But I could not see it in the comments. Is there any procedure to place my predictions in your blog. If any, please let me know. Thanks Ayya.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com