Astrology: Popcorn Post: கேடு செய்யும் கேது மகா திசை!
Popcorn Post 51
ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.
மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.
மற்ற மகா திசைகளை விட, சனி, ராகு & கேது ஆகிய இயற்கையான தீய கிரகங்களின் மகா திசை மோசமானதாக இருக்கும். சனி 19 ஆண்டுகளும் ராகு 18 ஆண்டுகளும் தீயதாக இருக்கும் என்றாலும் அவற்றைவிட குறைந்த காலமே, அதாவது 7 ஆண்டுகளே உள்ள கேதுவின் திசை அதி மோசமானதாகும். 7 ஆண்டுகளில் போட்டுப் பார்த்துவிடுவார். எச்சரிக்கயாக இருக்க வேண்டும். தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.
கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்குக் கேது மகாதிசை அநேகமாக வராது. சுமார் 93 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.
அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் கேது புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 2,520 நாட்கள் (7 ஆண்டுகள்) வரும். கணக்கு சரியாக இருக்கும்.
சரி கேது திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் சுக்கிர புத்தி, குரு புத்தி, புதன் புத்தி (மொத்தம் 3 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!
கேது மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!
உதாரணத்திற்கு கேது மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கான பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்
ஆமென்ற கேது திசை வருஷம் ஏழு
அதனுடைய புத்தி நாள் நூற்றி நாற்பத்தியேழு
போமென்ற அதன் பலனை புகழக் கேளு
புகழான அரசர்படை ஆய்தத்தால் பீடை
தாமென்ற சத்துருவால் வியாதி காணும்
தனச் சேதம் உடல் சேதம் தானே உண்டாம்
நாமென்ற நகரத்தில் சூனியங்கள் உண்டாம்
நாடெல்லாம் தீதாகும் நன்மையில்லாப் பகையே!
நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!
அன்புடன்,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================
இது.. (வா)
ReplyDeleteகேது.. என கேட்டபடியே
பலரும்
பயப்படலாம்..
உயிர்கள் சிரமபடக் கூடாதென
உத்தம கருணையினால்
கடவுடள் இந்த
கிரகத்து ஏழாண்டுகளே தந்துள்ளார்
நன்றிகள் கடவுளுக்கு சொல்லுங்க
நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்
நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள்
ReplyDeleteஎன்னும் உண்மையை உஅரக்கச்சொல்லி சிந்திக்கவைக்கும் பகிர்வுகள் பயனுள்ளவை.. பாராட்டுக்கள்.1
மதிப்பிற்குரிய அய்யா, கேது 11ஆம் இடத்தில விருச்சிக ராசியில் இருந்தால் பெரிய கேடு இல்லை என்று சொல்வார்களே.உங்கள் கருத்து என்ன அய்யா ?ஏனென்றால் கேது விருச்சிகத்தில் உச்சம் அல்லவா.பணவரவு நன்றாக இருக்கும் என்றும் சொல்வார்கள்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
ReplyDeleteதாழ்மையுடன் ,
S . ரகுநாதன்
good morning sir,
ReplyDeletenice popcornpost sir. THanks for that.
வணக்கம் சார்....
ReplyDeleteகேது திசையில் 7 வருடம்
சிவனேன்னு இருக்கனும்!
சாமியார் மாதிரி இருக்கனும்.
(கில்மா சாமியார் அள்ள
கோவில்குளம் போய்வரலாம்.
அமைதியாக இருக்கலாம்.
பேராசை கூடவே கூடாது !!
தானுண்டு தன்வேலையுண்டு !
இப்படி இல்லை என்றாள்
கட்டிதொங்கவிட்டு அடிப்பான்.....
bye.. KS
கேது வந்தால் துன்பம் வரும் .நன்றி ஐயா
ReplyDeletenellai padmanaban
ReplyDeleteI am fit person for the above kethu Dasa example.During the kethu Dasa I was brought to street from Top Position. Even though it has been placed in 11th position .
so salute to sir for this article about kethu dasa.
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஇது.. (வா)
கேது.. என கேட்டபடியே
பலரும்
பயப்படலாம்..
உயிர்கள் சிரமபடக் கூடாதென
உத்தம கருணையினால்
கடவுடள் இந்த
கிரகத்து ஏழாண்டுகளே தந்துள்ளார்
நன்றிகள் கடவுளுக்கு சொல்லுங்க
நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம்////
நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி வேப்பிலையாரே!
////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteநன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள்
என்னும் உண்மையை உரக்கச்சொல்லி சிந்திக்கவைக்கும் பகிர்வுகள் பயனுள்ளவை.. பாராட்டுக்கள்.//////
நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி சகோதரி!
////Blogger Regunathan Srinivasan said...
ReplyDeleteமதிப்பிற்குரிய அய்யா, கேது 11ஆம் இடத்தில விருச்சிக ராசியில் இருந்தால் பெரிய கேடு இல்லை என்று சொல்வார்களே.உங்கள் கருத்து என்ன அய்யா ?ஏனென்றால் கேது விருச்சிகத்தில் உச்சம் அல்லவா.பணவரவு நன்றாக இருக்கும் என்றும் சொல்வார்கள்.நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
தாழ்மையுடன் ,
S . ரகுநாதன்/////
விருச்சிக ராசியில் கேது உச்சம். ஆகவே சிலருக்கு கேது பலத்த நன்மைகளையும் செய்யும். இங்கே எழுதுவதெல்லாம் பொது விதிகள். அதை மனதில் வையுங்கள்!
Nandri ayya
Delete/////Blogger sundari said...
ReplyDeletegood morning sir,
nice popcornpost sir. THanks for that./////
நல்லது. நன்றி சகோதரி!
/////Blogger Sakthivel K said...
ReplyDeleteவணக்கம் சார்....
கேது திசையில் 7 வருடம்
சிவனேன்னு இருக்கனும்!
சாமியார் மாதிரி இருக்கனும்.
(கில்மா சாமியார் அள்ள
கோவில்குளம் போய்வரலாம்.
அமைதியாக இருக்கலாம்.
பேராசை கூடவே கூடாது !!
தானுண்டு தன்வேலையுண்டு !
இப்படி இல்லை என்றாள்
கட்டிதொங்கவிட்டு அடிப்பான்.....
bye.. KS//////
உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!
/////Blogger lrk said...
ReplyDeleteகேது வந்தால் துன்பம் வரும் .நன்றி ஐயா////
உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி!
//////Blogger Barathi GP said...
ReplyDeletenellai padmanaban
I am fit person for the above kethu Dasa example.During the kethu Dasa I was brought to street from Top Position. Even though it has been placed in 11th position .
so salute to sir for this article about kethu dasa./////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
அருமையான பதிவு!நன்றி.
ReplyDeleteகேது தசை 7 வருடங்கள்தான் என்று மகிழ முடியாது. சனி 19 வருடங்கள், ராகு 18 வருடங்கள் கொடுப்பதை விடவும் கேது அதிகமாக ஏழே வருடத்தில் கொடுத்து விடுவார்.
ReplyDeleteகேது குருவின் 5,9ம் பார்வையில் இருந்தால் மிகுந்த நன்மைகள் செய்வார் என்று கூறப்படுகிறது.
”தார்செறி மகரங்கன்னி தனிற் பிறந்தோர்கட்கெல்லாம்
பார்செறி மகாதிசையின் பலன்களைப் பார்க்கும் போது
சீர்பெறு கேதுவான திசை வரும்போது செல்வம்
ஊர்திசார் அரசரால் சன்மானமுண்டாங் கண்டீரே”
இந்த பழைய பாடல்படி கன்னி, மீன லக்கினகாரர்களுக்கு கேது தசையில் (அல்லது புத்தியில்) அரச சன்மானம் அல்லது அதற்கு இணையான பணம் கிடைக்கும். எனக்கு மேலே சொன்ன இரண்டு அமைப்புகளும் இருக்கின்றன. சனி தசை கேது புத்தியில் அரசாங்க இழப்பீடாக பெரும் தொகை கிடைத்தது.
மதிப்பிற்குரிய ஆசிரியர்க்கு. சனி தசா கேது புத்தியில பட்ட பாடுலதான் நான் ஜோதிடம் படிக்க Google ல எதையோ search பண்ணி பொக்கிசமான ஆசிரியரின் Class room க்கு வந்தேன்.வாக்கியத்தை காட்டிலும் திருக்கணிதப்படி கணக்கிடும் தசா புத்தி என் வாழ்க்கையோடு மிகச் சரியா பொருந்தி வருது. தசாபுத்தியில் இரண்டு முறைகளுக்கிடையில் நிறைய நாட்கள் வித்யாசம் வருது. எனக்கு சரியா வருவதை நான் பயன்படுத்துவது சரி. ஆனால் இதான் சரினு எதாவது ஒன்னுதானே இருக்கனும். இது எனது நெருடல்.(நீங்க பழைய பாடங்களில் சரியான ஜாதகத்திற்கு வாக்கியப்படியும், சரியான கணிதத்திற்கு திருக்கணிதமும் சரினு சொல்லியிருக்கீங்க).
ReplyDeleteஉத்திரத்தில் பிறந்தால் இளவயதில் ராகு தசா, முதுமையில் சனி தசா வந்துடுதே.+ அவ்வப்போது வரும் கேது புத்தி வேறு.சூப்பர் தான்.
ReplyDeleteகேது தசையில் தான் எனக்கு கேடு நிகழ்ந்தது. எனக்கு கேது இடபத்தில் நீசம். தர்ம அடி விழுந்தது. இப்போது சுக்கிர தசை நடந்து வருகிறது. ஆனால் கேது தசை சுக்கிர புத்திக்கு பிறகு எனக்கு விழுந்த அடியில் இருந்து இன்னும் முழுவதுமாக நான் எழுந்திருக்கவில்லை. ஆனால் இந்த கேது தசையில் இராகு புத்தியில் சிறு சிறு நல்லது நடக்கத்தான் செய்தது. இதன் முந்தைய புதன் தசை இராகு புத்தியிலும் சில நல்லது நடந்தது. இதற்கு காரணம் இராகு விருச்சிகத்தில் உச்சமாக இருப்பதினால் என கொள்ளலாமா?
ReplyDeleteஅன்புள்ள வாத்தியாருக்கு,
ReplyDeleteஎனக்கு 8ல் விருச்சிக ராசியில் குருவுடன் கேது உள்ளார், தற்போது கேது திசை வேறு நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இரண்டு கைகளையும் முடக்கினார்(dislocation between 6months, Ist left, II right hand. டாக்டர்களே எனது கை இறங்கி போனதை நம்பவில்லை. ஒரே நாள் இரவில் 9000 பீஸ் வாங்கினார்கள்). பைக்கில் ஸ்லோ ஸ்பீடில் சென்றபோதும்(30KM) குறுக்கே பாய்ந்த சைக்கிள் காரனால் மாறுகால் மாறுகையில் ரத்தக்காயம் கொடுத்தார். ஒரு மாதம் நொண்டி அடித்தேன்.
தற்போது உடல் ஆரோக்கியத்தை கொடுத்துவிட்டார். எப்போதும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என கூறிக் கொண்டுள்ளேன்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்
தூத்துக்குடி
மகர லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் புதன் வீட்டில் கேது திசை ஆரம்பிக்க உள்ளது....
ReplyDeleteபெரும் பிரச்னை தானா ஐயா?
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ReplyDeleteஆறுதலான ஒரு பதிவிற்க்கு நன்றிகள் அய்யா.கேடு செய்யும் கேது மகா திசை என்னவெல்லாம் செய்யும் என்பதை நடைமுறையில் அனுபவித்துக் கொண்டுள்ளோம். அதிலும் விதியின் கொடுமை, வீட்டில் எங்கள் இருவருக்குமே கேது தசை நடப்பு.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
////Blogger Sridhar Sridhar said...
ReplyDeleteஅருமையான பதிவு!நன்றி./////
உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!
////Blogger Kirupanandan A said...
ReplyDeleteகேது தசை 7 வருடங்கள்தான் என்று மகிழ முடியாது. சனி 19 வருடங்கள், ராகு 18 வருடங்கள் கொடுப்பதை விடவும் கேது அதிகமாக ஏழே வருடத்தில் கொடுத்து விடுவார்.
கேது குருவின் 5,9ம் பார்வையில் இருந்தால் மிகுந்த நன்மைகள் செய்வார் என்று கூறப்படுகிறது.
”தார்செறி மகரங்கன்னி தனிற் பிறந்தோர்கட்கெல்லாம்
பார்செறி மகாதிசையின் பலன்களைப் பார்க்கும் போது
சீர்பெறு கேதுவான திசை வரும்போது செல்வம்
ஊர்திசார் அரசரால் சன்மானமுண்டாங் கண்டீரே”
இந்த பழைய பாடல்படி கன்னி, மீன லக்கினகாரர்களுக்கு கேது தசையில் (அல்லது புத்தியில்) அரச சன்மானம் அல்லது அதற்கு இணையான பணம் கிடைக்கும். எனக்கு மேலே சொன்ன இரண்டு அமைப்புகளும் இருக்கின்றன. சனி தசை கேது புத்தியில் அரசாங்க இழப்பீடாக பெரும் தொகை கிடைத்தது./////
பழைய பாடல் நன்றாக உள்ளது. எழுதியது யார்? நூலின் பெயர் என்ன? அதைப் பின்னூட்டத்தில் அறியத்தாருங்கள் சுவாமி. பலருக்கும் பயன்படும் அல்லவா? உங்களின் கருத்து மற்றும் அனுபவப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!
///Blogger Parthiban Vellaichamy said...
ReplyDeleteமதிப்பிற்குரிய ஆசிரியர்க்கு. சனி தசா கேது புத்தியில பட்ட பாடுலதான் நான் ஜோதிடம் படிக்க Google ல எதையோ search பண்ணி பொக்கிசமான ஆசிரியரின் Class room க்கு வந்தேன்.வாக்கியத்தை காட்டிலும் திருக்கணிதப்படி கணக்கிடும் தசா புத்தி என் வாழ்க்கையோடு மிகச் சரியா பொருந்தி வருது. தசாபுத்தியில் இரண்டு முறைகளுக்கிடையில் நிறைய நாட்கள் வித்யாசம் வருது. எனக்கு சரியா வருவதை நான் பயன்படுத்துவது சரி. ஆனால் இதான் சரினு எதாவது ஒன்னுதானே இருக்கனும். இது எனது நெருடல்.(நீங்க பழைய பாடங்களில் சரியான ஜாதகத்திற்கு வாக்கியப்படியும், சரியான கணிதத்திற்கு திருக்கணிதமும் சரினு சொல்லியிருக்கீங்க).////
உங்கள் தந்தையார் அந்தக் காலத்தில் கணித்து வைத்துள்ளதை (எழுதிவைத்துள்ளதை) கைக்கொள்ளுங்கள். அது சரியாக இருக்கும்!
////Blogger அமுதா கிருஷ்ணா said...
ReplyDeleteஉத்திரத்தில் பிறந்தால் இளவயதில் ராகு தசா, முதுமையில் சனி தசா வந்துடுதே.+ அவ்வப்போது வரும் கேது புத்தி வேறு.சூப்பர் தான்./////
”ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!” என்று கவியரசர் எழுதியுள்ளதை நினைத்து மன உறுதியோடு (தைரியத்தோடு) இருங்கள். எல்லாம் வசப்படும் சகோதரி!
/////Blogger Regunathan Srinivasan said...
ReplyDeleteNandri ayya////
எதற்கு நன்றி சுவாமி? வழக்கமாகப் பதிவிடும் கட்டுரைகளில் ஒன்றுதானே இது!
////Blogger thozhar pandian said...
ReplyDeleteகேது தசையில் தான் எனக்கு கேடு நிகழ்ந்தது. எனக்கு கேது இடபத்தில் நீசம். தர்ம அடி விழுந்தது. இப்போது சுக்கிர தசை நடந்து வருகிறது. ஆனால் கேது தசை சுக்கிர புத்திக்கு பிறகு எனக்கு விழுந்த அடியில் இருந்து இன்னும் முழுவதுமாக நான் எழுந்திருக்கவில்லை. ஆனால் இந்த கேது தசையில் இராகு புத்தியில் சிறு சிறு நல்லது நடக்கத்தான் செய்தது. இதன் முந்தைய புதன் தசை இராகு புத்தியிலும் சில நல்லது நடந்தது. இதற்கு காரணம் இராகு விருச்சிகத்தில் உச்சமாக இருப்பதினால் என கொள்ளலாமா?////
ஆமாம். விருச்சிகத்தில் ராகு உச்சம் பெறுகிறார் அல்லவா? அதனால்தான். நன்றி!
/////Blogger BLAKNAR said...
ReplyDeleteஅன்புள்ள வாத்தியாருக்கு,
எனக்கு 8ல் விருச்சிக ராசியில் குருவுடன் கேது உள்ளார், தற்போது கேது திசை வேறு நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இரண்டு கைகளையும் முடக்கினார்(dislocation between 6months, Ist left, II right hand. டாக்டர்களே எனது கை இறங்கி போனதை நம்பவில்லை. ஒரே நாள் இரவில் 9000 பீஸ் வாங்கினார்கள்). பைக்கில் ஸ்லோ ஸ்பீடில் சென்றபோதும்(30KM) குறுக்கே பாய்ந்த சைக்கிள் காரனால் மாறுகால் மாறுகையில் ரத்தக்காயம் கொடுத்தார். ஒரு மாதம் நொண்டி அடித்தேன்.
தற்போது உடல் ஆரோக்கியத்தை கொடுத்துவிட்டார். எப்போதும் ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா என கூறிக் கொண்டுள்ளேன்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்
தூத்துக்குடி/////
உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் செந்திலாண்டவரை வழிபடுங்கள். அவர் நல்வழி காட்டுவார்
/////Blogger கூடுதுறை said...
ReplyDeleteமகர லக்கினத்திற்கு ஒன்பதாம் இடம் புதன் வீட்டில் கேது திசை ஆரம்பிக்க உள்ளது....
பெரும் பிரச்னை தானா ஐயா?/////
பெரும் பிரச்சினை என்று எதுவும் கிடையாது. மனதுதான் காரணம்! கேது திசை 3 ஆண்டு காலம் நன்மையளிக்கும் 4 ஆண்டு காலம் நன்மையளிக்காது என்று எழுதியுள்ளேனே. விநாயகப் பெருமானை தினமும் வழிபடுங்கள். அவர் கேதைக் கடப்பதற்கு உதவுவார்!
மேலே அன்பர் கிருபானந்தன் அவர்களின் பின்னூட்டம் உள்ளது. அதையும் படியுங்கள்!
/////Blogger GOWDA PONNUSAMY said...
ReplyDeleteஅய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
ஆறுதலான ஒரு பதிவிற்கு நன்றிகள் அய்யா.கேடு செய்யும் கேது மகா திசை என்னவெல்லாம் செய்யும் என்பதை நடைமுறையில் அனுபவித்துக் கொண்டுள்ளோம். அதிலும் விதியின் கொடுமை, வீட்டில் எங்கள் இருவருக்குமே கேது தசை நடப்பு.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.////
உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே!
Dear Sir,
ReplyDeleteNavamsa of a planer in Rasi chart can be ascertained oly by knowing which paadha of a star the planet in question is occupying. That info is not given in the rasi chart. Only the rasi is seen but not the Srat quarter. Then how can one use Navamsa as a tool for interpretation? Agreed Navamsa is an expansion of Rasi, but the viewers cannot cast the Navamsa with the given chart and info. This is what I wished to state.
Bhuvanesh
நான் மேலே குறிப்பிட்ட பாடல் 70களில் வெளிவந்த ஒரு ஜோதிட மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது. அதை என் தந்தையார் வைத்திருந்தார். கட்டுரையாளர் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் என்று அதில் குறிப்பிடவில்லை. அநேகமாக ராவண காவியம் என்ற ஜோதிட நூலில் இருந்து எடுக்கப் பட்ட பாடலாக இருக்க வேண்டும். கேது தசைக்கு இருப்பதுபோல் ராகு தசைக்கும் ஒரு பாடல் இருந்தது.
ReplyDelete”பேசுலக்கின மீனநண்டிற் பிறந்தவர் தங்கட்கெல்லாம்
பாசமாய் மகாதிசையின் பலன்களைப் பார்க்கும்போது
தேசுறு கரியபாம்பின் திசைவரிற் பாக்கியங்கள்
தூசுபொன் சோபனம் நற்சுப பலன் பெறுவர்தாமே”
கடக/மீன லக்கின ஜாதகர்களுக்கு ராகு தசையில் அல்லது புத்தியில் (பாடலில் கரிய பாம்பு என்பது ராகுவைக் குறிக்கிறது, கேதுவை செம்பாம்பு என்று குறிப்பிடுவதுண்டு) பாக்கியங்களும், ஆடை, ஆபரண, அணிகலன் மற்றும் செல்வ சேர்க்கை போன்ற சுப பலன்கள் ஏற்படும்.
கேது தசை, புத்திகளில் கன்னி/மகர லக்கினத்தார் என்று இருக்க வேண்டும்.
ஐயா, வணக்கம்!!!
ReplyDeleteName : HARIHARAN . G
பிறந்த தேதி - 15/09/1990
பிறந்த ஊர் - அருப்புக்கோட்டை, தமிழ்நாடு
எனது பிறந்த நேரம் in between காலை 10.15amக்கு மேல் 10.30க்குள் என்று எனது பெற்றோர் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட சுழ்நிலையில், லக்ன சந்திப்பும் ஏற்பட்டுள்ளது.
என்னுடைய லக்னம் என்று துலாம் அல்லது விருச்சிகம், இதில் எதை எடுத்துக் கொள்வது?
என் போன்று லக்ன சந்திப்பில் பிறந்தவர்களுக்கு, ஒரு தெளிவான விளக்கம் தாருங்கள்!
Thank you Very much!
Ungal Pathilukaaga KaathuKondi irukiren aiyaa!!
Next Dasa is Kethu for me
Enathu Jathagathil Kethu Kadagam Raasi il Theipirai Chandran & Ucha Guru udan Ullathu.....
I Don't Know it is 9th or 10th Place..... because for Thulam Lagnam it is in 10th place for Viruchagam Lagnam it is in 9th Place.....
Really Confused.... Please give correct solution aiyaa!
////Blogger பெரியவாதாசன் said...
ReplyDeleteDear Sir,
Navamsa of a planer in Rasi chart can be ascertained oly by knowing which paadha of a star the planet in question is occupying. That info is not given in the rasi chart. Only the rasi is seen but not the Srat quarter. Then how can one use Navamsa as a tool for interpretation? Agreed Navamsa is an expansion of Rasi, but the viewers cannot cast the Navamsa with the given chart and info. This is what I wished to state.
Bhuvanesh/////
பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் ஆகிய விபரங்கள் இருந்தால்தான் சரியான ஜாதகத்தை ராசி மற்றும் நவாம்சத்துடன் கணிக்க முடியும். வெறும் ராசிக்கட்டம் மட்டும் கொடுக்கப்பெற்றால், நவாம்சத்தைக் கணிக்க முடியாது. உங்களின் கருத்துப் பகிர்விர்விற்கு நன்றி புவனேஷ்!
////Blogger Kirupanandan A said...
ReplyDeleteநான் மேலே குறிப்பிட்ட பாடல் 70களில் வெளிவந்த ஒரு ஜோதிட மாத இதழில் இருந்து எடுக்கப்பட்டது. அதை என் தந்தையார் வைத்திருந்தார். கட்டுரையாளர் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்ட பாடல் என்று அதில் குறிப்பிடவில்லை. அநேகமாக ராவண காவியம் என்ற ஜோதிட நூலில் இருந்து எடுக்கப் பட்ட பாடலாக இருக்க வேண்டும். கேது தசைக்கு இருப்பதுபோல் ராகு தசைக்கும் ஒரு பாடல் இருந்தது.
”பேசுலக்கின மீனநண்டிற் பிறந்தவர் தங்கட்கெல்லாம்
பாசமாய் மகாதிசையின் பலன்களைப் பார்க்கும்போது
தேசுறு கரியபாம்பின் திசைவரிற் பாக்கியங்கள்
தூசுபொன் சோபனம் நற்சுப பலன் பெறுவர்தாமே”
கடக/மீன லக்கின ஜாதகர்களுக்கு ராகு தசையில் அல்லது புத்தியில் (பாடலில் கரிய பாம்பு என்பது ராகுவைக் குறிக்கிறது, கேதுவை செம்பாம்பு என்று குறிப்பிடுவதுண்டு) பாக்கியங்களும், ஆடை, ஆபரண, அணிகலன் மற்றும் செல்வ சேர்க்கை போன்ற சுப பலன்கள் ஏற்படும்.
கேது தசை, புத்திகளில் கன்னி/மகர லக்கினத்தார் என்று இருக்க வேண்டும்./////
தகவலுக்கு நன்றி ஆனந்த்!
//////Blogger Hariharan G said...
ReplyDeleteஐயா, வணக்கம்!!!
Name : HARIHARAN . G
பிறந்த தேதி - 15/09/1990
பிறந்த ஊர் - அருப்புக்கோட்டை, தமிழ்நாடு
எனது பிறந்த நேரம் in between காலை 10.15amக்கு மேல் 10.30க்குள் என்று எனது பெற்றோர் சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட சுழ்நிலையில், லக்ன சந்திப்பும் ஏற்பட்டுள்ளது.
என்னுடைய லக்னம் என்று துலாம் அல்லது விருச்சிகம், இதில் எதை எடுத்துக் கொள்வது?
என் போன்று லக்ன சந்திப்பில் பிறந்தவர்களுக்கு, ஒரு தெளிவான விளக்கம் தாருங்கள்!
Thank you Very much!
Ungal Pathilukaaga KaathuKondi irukiren aiyaa!!
Next Dasa is Kethu for me
Enathu Jathagathil Kethu Kadagam Raasi il Theipirai Chandran & Ucha Guru udan Ullathu.....
I Don't Know it is 9th or 10th Place..... because for Thulam Lagnam it is in 10th place for Viruchagam Lagnam it is in 9th Place.....
Really Confused.... Please give correct solution aiyaa!/////
பிறந்த நேரம் இப்படி 15 நிமிடங்கள் வேறுபட்டால் சரியான ஜாதகம் கிடைக்காது. ஆகவே பிரந்த நேரம் சரியானதாக இருக்க வேண்டும்
Then How to Find out my Correct Birth Time & Lagnam Aiyaa ??? Is it possible to fix Correct Birth Time, Lagnam by Using Previous & Current Events ? I want to have a Correct Birth Time & Jathagam So that I can Use it in Future, Sir! Please Give Correct Way to Find that..........
ReplyDeletekethu is in 12th house(rishibam) along with sukran and 12th house is aspected by guru
ReplyDeleteand my lagna is gemini what will be result in kethu dasa
எனக்கு கேது திசை சனி புத்தி யா அல்லது சுக்கிர திசை குரு புத்தியா என்பதை கூறவும் நான் பிறந்தது 06/10/1987 இரவு 7.04. உத்திரட்டாதி நட்சத்திரம் மீன் ராசி மேஷம் லக்னம். தயவு கூர்ந்து எனக்கு இப்போது என்ன திசை புத்தி என கூறவும்
ReplyDelete/////Blogger Unknown said...
ReplyDeleteஎனக்கு கேது திசை சனி புத்தி யா அல்லது சுக்கிர திசை குரு புத்தியா என்பதை கூறவும் நான் பிறந்தது 06/10/1987 இரவு 7.04. உத்திரட்டாதி நட்சத்திரம் மீன் ராசி மேஷம் லக்னம். தயவு கூர்ந்து எனக்கு இப்போது என்ன திசை புத்தி என கூறவும்//////
இப்போது கேது மகா திசையில் சனி புத்தி 7-10-2018ம் தேதி வரை!
கேது திசை ல் புத்தி பார்ப்பது வேண்டாத வேலை என நினைக்கிறேன். எனக்கு கேது திசை ஆசை பட கூடாது அது மட்டும் நல்லா தெரியூது
ReplyDelete🙏🙏🙏🙏🙏
ReplyDelete