Astrology: quiz 58: Answer: கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல...!
''கையில வாங்கினேன் பையில போடல... காசு போன இடம் தெரியல...'' மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டையாரின் பாடல் இது...
திருச்சி லோகநாதன் அவர்கள் தன் இனிய குரலில் இப்பாடலை
மிகவும் அருமையாக பாடியிருப்பார்..!இப்பாடல் இடம் பெற்ற படம்:
இரும்புத் திரை, இசையமைப்பாளர்: எஸ்.வி. வெங்கட்ராமன், படம் வெளிவந்த ஆண்டு: 1960
--------------------------------------
நேற்றையப் பதிவில், அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அதை அலசி, ஒரே ஒரு கேள்விக்கான பதிலை எழுதும்படி கேட்டிருந்தேன்.
கேள்வி இதுதான்:
ஜாதகரின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது? பணக்காரரா அல்லது ஏழையா? பணக்காரர் என்றால் பிறவிப் பணக்காரரா? அல்லது சுய சம்பாத்தியத்தில் பணக்காரர் ஆனவரா? இல்லை ஏழ்மை நிறைந்தவரா? அதாவது கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை நடத்துபவரா? ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
சரியான பதில் என்ன என்பதை முதலில் பார்ப்போம்.
ஜாதகர் நல்ல குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் கையில் காசு
தங்கவில்லை. துவக்கத்தில் செய்த சொந்தத் தொழிலைத்
தொடர்ந்து செய்ய முடியவில்லை. தொழிலுக்கு முடிவு
கட்டிவிட்டு வேலைக்குச் சென்றார். நிரந்தரமான வேலையும் கிடைக்கவில்லை.பல இடங்கள். பல வேலைகள். வரவிற்கும்
செலவிற்கும் சரியாக இருந்தது. கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை.
கடன் இல்லாத வாழ்க்கை. சிக்கனமாக வாழ்ந்தார்.
குடும்ப வாழ்க்கை நன்றாக இருந்தது. அது ஒன்றுதான்
ஆறுதலான விஷயம்
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம். வாருங்கள் அலசிப்பார்ப்போம்!
1. லக்கினாதிபதி குரு பகவான் 3ல். மாந்தியுடன் கூட்டணி.
2. ஐந்தாம் இடத்துக்காரன் (பூர்வ புண்ணியாதிபதி) சந்திரன் நீசம்.
3. சூரியன், சுக்கிரன், செவ்வாய், சனி ஆகிய 4 கிரகங்களும், அஸ்தமனம், மற்றும் கிரகயுத்தத்தில்
4. முக்கியமான 7 கிரகங்களில் புதன் மட்டும்தான் தப்பித்தார். அவர் 4 & 7ற்கு உரியவர். அவர் 11ல் அமர்ந்ததால் நல்ல மனைவி அமைந்தார்.
5. 2ல் ராகு. நிதியில் ராகு இருந்தால் ஓட்டை அண்டா. 11ற்கு உரிய சனி அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். பைப்பும் அடைபட்டிருக்கிறது.
2 & 11 கெட்டால் பணம் எப்படி வரும்? செல்வம் எப்படி சேரும். ஆகவேதான் கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை.
6. பத்தாம் வீட்டுக்காரன் அந்த வீட்டிற்கு ஆறில். அதனால்தான் நல்ல வேலை கிடைக்கவில்லை. அமையவில்லை.
7. முக்கியவில்லன்களான 6ஆம் வீட்டுக்காரன் சூரியனும், எட்டாம் அதிபதி சுக்கிரனும் 10ல் சென்று அடிதடி சண்டையில் ஈடு பட்டிருக்கிறார்கள்.
அவர்களுடன் பாக்கியாதிபதி செவ்வாயும், தொழில்காரகன் சனீஷ்வரனும் சேர்ந்து சண்டையில் கலந்து கொண்டிருக்கிறார்கள். கிரகயுத்தம்
மோசமானது. அது பத்தாம் வீட்டில் அமைந்ததால் ஜாதகருக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை.
8. சுபக்கிரகங்கள் 3ல் ஒன்றுகூட தப்பிக்காமல் கெட்டுப் போயிருக்கின்றன. சுபக்கிரகங்கள் நன்றாக இருந்தால்தான் வாழ்க்கை
ஒளிமயமாகஇருக்கும்
கடன் இல்லாத வாழ்க்கை. சிக்கனமாக வாழ்ந்தார். குடும்ப வாழ்க்கை நன்றாக இருந்தது. அது ஒன்றுதான் ஆறுதலான விஷயம்
அலசல் போதுமா?
போட்டியில் 24 பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். அவர்களில் 15 பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்.
அந்த 15 பேர்களிலும் பொட்டில் அடித்ததுபோல் ”நிரந்தரமான வேலையும் கிடைக்கவில்லை.பல இடங்கள். பல வேலைகள். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருந்தது. கைக்கும் வாய்க்குமான வாழ்க்கை.” என்பதை எழுதியவர்கள் 6 பேர்கள். அவர்களின் பெயருக்கு முன்னால்
********ஸ்டார்களைக் கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
சரியான பதிலை ஒட்டி எழுதியவர்கள் 9 பேர்கள். அவர்களின் பெயரும் பின்னூட்டமும் கீழே உள்ளது. அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த நன்றி. மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். Better luck for them next time!
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
1
**********////Blogger Dallas Kannan said...
Respected Sir
2nd Place: Rahu is there. 2nd lord Mars is in 9th place from it (10th house). But With 6th, 3rd/8th and 11/12th lords with giraha utham. Laknathipathi and Guru is in 3rd place in Enemy house and vakram. So he is not Rich.
9th place: 5th lord Moon is there. But it is neecham. Guru's look is there. But 9th lord Mars is in 10th house with 6th, 8th ans 12th lord.
10th house: All villans are there. 10th lord also in 6th place from 10th place. Will not have stable job.
11th house: 11th lord is in 12th place from it. But 4th and 7th lord subha buthan is there. That is the consolation for him. Will be better off after marriage.
Wednesday, June 18, 2014 7:59:00 AM//////
----------------------------------------------------------
2
**********Blogger Chandrasekaran Suryanarayana said...
வணக்கம்.
நல்ல நிதி நிலமைக்கு குரு, சந்திரன், சுக்கிரன் ஆகிய சுபக்கிரகங்கள் வலுவாக இருக்கவேண்டும். ஆனால் இந்த ஜாதகத்தில் மூன்று கிரகங்களும் வலுவாக இல்லை.
ஜாதகன் வசதியாக இருக்க வாய்ப்பில்லை. எழ்மையான ஜாதகம். உழைத்து சம்பாதிக்கும் நிலமை.
லக்கினத்தின் மீது செவ்வாயின் 4ம் பார்வை.
லக்கினத்தில் 34 பரல்கள் உள்ளது. லக்கினம் பலமாக இருப்பதற்க்கு அடையாளம்.
இந்த ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு (5 பரல்) 3ம் வீட்டில் மாந்தியுடன் கூட்டு. அதுவும் ரிஷப ராசியில் பகை வீட்டில்.
சந்திரன் (3 பரல்) 9ம் வீட்டில் விருச்சிக ராசியில் நீசம். மேலும் பாபகர்த்தாரி தோஷம். நிதி மேலான்மைக்கு இது இடைஞ்சல்.
சுக்கிரன் (3 பரல்) 10ம் வீட்டில் 6ம் வீட்டு அதிபதி வில்லன் சூரியனுடன் கூட்டு.மேலும் அதே வீட்டில் சனி, செவ்வாயுடன் கூட்டு.கிரகயுத்தம்.
2ம் வீடு தன வீடாகும் (25 பரல்). 2ல் ராகு சிறுவயதில் கஷ்டங்களை அனுபவிக்க கூடிய சுழ்நிலை. 2ம் வீட்டு அதிபதி செவ்வாய் (3 பரல்) 6ம் வீட்டு
அதிபதி வில்லன் சூரியனுடன் கூட்டு.9ம் வீட்டிற்க்கும் அவனே அதிபதி. கேதுவின் 7ம் பார்வை 2ம் வீட்டின்மீது.
ஆகையினால், 2ம் வீடு படு சுத்தமாக கெட்டு போய்யிருக்கிறது.
9ம் வீட்டு அதிபதி 10ல்.அதாவது 9ம்வீடு 10ம் வீட்டிற்க்கு 12ல்.
10ம் வீடு கிரக யுத்ததில் உள்ளது. எந்த வேலையிலும் நிரந்திரமாக இருக்க வாய்ப்பில்லை. 6ம் வீட்டு அதிபதி வில்லன் 10ல் இருந்தால் வேலைக்கு
போராட்டந்தான்.
11ம் வீட்டு அதிபதி 10ம் வீட்டில் அதாவது 12ல். தன நஷ்ட்டம்.4ம் வீட்டு அதிபதி புதன் (5 பரல்) 11ம் வீட்டில் இருப்பதால், தன்னுடைய
புத்திசாலிதனத்தினால் ஒரளவு பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மேலும் நவாம்சத்திலும் புதன் மகர ராசியில் இருப்பதால் புதன் வர்கோத்தமம் அடைந்துள்ளது. வர்கோத்தம் அடைந்த கிரகம் உச்ச அடைந்த
கிரகத்திற்க்கு சமானம்
As per Kalyana varma, the four planet SUN-MARS-VENUS-SATURN ,
One, who has these four planets together at birth, will be deformed, mean in conduct, obliquesighted, will hate his relatives and will always be insulted.
சந்திரசேகரன் சூரியநாராயணன்.
Wednesday, June 18, 2014 8:41:00 AM//////
----------------------------------------------------------
3
////Blogger seethalrajan said...
அய்யா வணக்கம்! இவரின் நிதி நிலமை மோசமாக உள்ளது ஏன் ஏனில் 2,9ம் அதிபதி செவ்வாய் 6,8ம் அதிபதிகளான சூரியன், சுக்ரன் உடன்
சேர்கை மற்றும் 12ம் அதிபதி சனி சேர்கை, போதுவாக 11ம் அதிபதி 10ல் அமர்தாலே லாபம் அனைத்தும் உழைப்பாக மாறிவிடும், பயன் சுத்தமாக
இருக்காது. பிறவியில் எதொ நல்ல நிலமை இருந்து இருக்கும், போததற்கு 2ல் ராகு, குரு பகை விட்டில். புதன் மீன லக்னதிர்கு முதல் தர பாதகதிபதி அவர், அகவே அவரும் நல்லது செய்ய வாய்ப்பு இல்லை, சூரியன் 6ம் அதிபதி 10ல் பலமாக அமர்ந்ததால் காவல்துறை, ரானுவம் போன்ற
வேலை கிடைத்துருக்கும்.
நன்றி, பிழை இருப்பின் மன்னிகவும்
Wednesday, June 18, 2014 10:06:00 AM/////
---------------------------------------------------------
4
**********/////Blogger murali krishna g said...
ஜாதகர் கைக்கும் வாய்க்குமாக வாழ்க்கை நடத்துகிறவர். வாழ்க்கையின்
பெரும் பகுதி போராட்டமாகவே இருக்கும். சிலசமயங்களில் மட்டுமே காசு புரண்டு இருக்கும்.
(1) 2-ம் வீடு - இரண்டாம் அதிபதியும் ஒன்பதாம் அதிபதியும் செவாய்யாக இருந்து அவர் 10-ல் இருந்தாலும் அஸ்தமனம் ஆகி இருக்கிறார்.
இரண்டாம் வீட்டில் ராகு. பரல்கள் 25 மட்டுமே. இது சுமாராகவே உள்ளது.
(2) 9-ம் வீடு - மேற்கூறியபடி செவ்வாய் அஸ்தமனம். 9-ம் வீட்டில் இருக்கும் சந்திரன் தேய்பிறை சந்திரன். கடுமையான பாபாகத்ரி யோகத்தில்
மாட்டி கொண்டிருக்கிறார். சந்திரன் கெட்டால் வாழ்க்கையே கெட்டது போல். அதுவும் பாக்யா ஸ்தான சந்திரன் கெடக்கூடாது !. சுய வர்கத்தில் 3
பரல்கள் மட்டுமே.குரு பார்வை காப்பாற்றினாலும் வக்ர குரு மாந்தியுடன் இருப்பதால் பலன் இல்லை.
(3) 10-ம் வீடு - மேலும் பத்தாம் வீட்டில் நாலு கிரகங்கள். சூரியன், சுக்ரன், சனி மற்றும் செவ்வாய். எல்லாமே பலமுள்ள கிரகங்கள் ஆனால்
கடுமையான கிரக யுத்தத்தில். சூரியனோடு அஸ்தமனம் வேறு. சூரியனும் இந்த கிரகங்களால் முழு பலனை தர முடியாமல் போகிறார். சில
சமயங்களில் அரசு வழியில் ஆதாயம் உண்டு. கர்மகாரகன் சனி கர்ம ஸ்தானத்தில் இருப்பது நல்லது என்றாலும் கடும் பகைவனான சூரியனிடம்
அஸ்தமனம். சுக்கிரனும் அவ்வாறே. மொத்தத்தில் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒன்றும் இல்லாமல் பண்ணி விட்டது. பத்தாம் அதிபதியும் லக்னாதிபதியும்
குருவாக இருந்தாலும் அவர் மூன்றாம் ஸ்தானத்தில் வக்கிரமாகி மாந்தியோடு கூட்டணி வைத்துள்ளார். மேலும் லக்னாதிபதியே மரண காரக
ஸ்தானத்தில் இருப்பது பயனை தராது ! அடிக்கடி வேலை மாற்றம் !. ups and downs நிறைய உண்டு !
(4) 11-ம் வீட்டில் புதன் தனித்து இருந்தாலும் அவர் நட்சதிராதிபதியாக இருப்பதால் அவர் தசை பிறந்தவுடன் ஆரம்பித்து சிறு வயதிலே
முடிவடைகிறது!. அவர் தன் புக்திகளில் மட்டுமே பலனை தர கூடியவர், ஆனால் அவரும் பலம் பெறவில்லை.11-ம் அதிபதி சனி அதற்கு 12-ல் (10-ம்
வீட்டில்) அஸ்தமனம். கிரக யுத்தம் ! பிரயோஜனமில்லை !. ஆக 11-ம் வீடும் out !. பரல்கள் 30 இருப்பதால் மேற்கூறியபடி சில சமயங்களில் காசு
புரண்டு இருக்கும் !
Wednesday, June 18, 2014 10:36:00 AM//////
-------------------------------------------------
5
***********////Blogger Chandrasekharan said...
Respected Sir,
Lagnadhipathy Guru 3-il Vakkiram + Maandhi.
2-il Raagu and 9-il Neecham petra chandran. 2&9-m adhipathy Chevvai 10-il sooriyanukku 12 degree-il Asthangam.
10-m adhipathy Guru 3-il. 11-m adhipathy Sani 10-il(Avar veetirku 12-il).
Budhan dhasa piragu Kethu dhasa then Sukra Dhasa. 13 vayadhu mudhal 33 vayadhu varai Sukhra dhasa. Sukran 3 & 8-ku adhipathy avar 10-il. Kadinamana kaalamaga irundhirukkum.
33-39 vayadhu varai Soorya dhasa. Sooriyan 6-m adhipathy. 39-49 chandra dhasa. Chandran 5-m adhipathy 9-il Neecham petru amarvu.
Nalla dhasavum illai and jadhagathil nalla amippum illai.
10-m adhipathy Vakkiram petru 3-il amarvu and 10-il 4 gragangal amarvu idhanal jadhagar sila tholilgalai seithu adhil tholviyai thaluvi iruppar.
Kaikkum Vaaikkumana Nilai. Selvandhar Illai.
Thank You.
Wednesday, June 18, 2014 11:04:00 AM/////
---------------------------------------------------------
6
//////Blogger GOWDA PONNUSAMY said...
Ayya vanakkam.
In this horoscope,the Lagan lord guru in 3rd house.He is thana kaarakan also.Disappeared from Lagna.(2).Second house lord in 10th house, but Ragu sitting in second house will make him as poor.(3).Fifth house lord Chandra in 9th house in neecham but having ascending of Dhanakaaakan Guru and also made Gajakesari yogham.
(4). 10th house is not in good shape as this house is associated with suriyan(6th lord) sukkiran(3&8),sevvay(2&9) and Sani(11&12).10th house is suffered by 3,6,8and 12th lords.
The native IS POOR.
SOME WEALTH BENIFITED AFTER 39 YRS BECAUSE OF CHANDA DASA, AND PLACEMENT O BUDHAN IN 11TH HOUSE.
Wednesday, June 18, 2014 11:49:00 AM/////
-------------------------------------------------
7
/////Blogger SIVA said...
வணக்கம் அய்யா.,
ஜாதகரின் பிறப்பு : 29/december/1929
நேரம் :- 11:45 am,
கேட்டை நட்சத்திரம் ,
பூர்விகஸ்தானம் , புண்ணியஸ்தானம் குறைந்தபரல்களுடன் உள்ளன அதன் அதிபதிகளும் குறைந்த சுய பரல்கள்., தேய்பிறை சந்திரன் நீசம்,
மேலும் பாபகர்த்தாரி யோகத்தில், சூரியன், சுக்கிரன் , சனி , செவ்வாய், சேர்க்கையால்
தாய் தந்தை சொத்துக்கள் இல்லை, அல்லது அதனால் பயன் கிடைக்காது, இருந்தால் இவர் அதை அழிப்பார்
கஜகேசரி யோகத்தில் இவருக்கு வெற்றிக்கு உரிய இடத்தில குரு ,
குரு மற்றும் சுக்கிரன் பரிவர்த்தனை .,
இவர்கள் இருவரும் சுபதன்மை பெற்று சுபர்கள் ஆகிவிட்டார்கள்., மேலும் தொழில்கரகணின சேர்க்கை சுக்கிரன் பெற்றிருக்கிறார்
பத்தாமிடம் சுபகர்தாரி யோகத்தில் .,
புத்தினாதன் புதனும் குரு பார்வையுடன் சுபராக உள்ளார் 11 ம் அதிபதி பத்தாம் இடத்தில இருப்பதால் பிறரிடத்தில் லாபம் வருவது உறுதி .,
புதன் மற்றும் குரு வர்க்கோத்தமம் அடைகிறார்கள்., மேலும் குருவுடன் சுக்கிரன் நவாம்ஷாத்தில் பத்தாமிடத்தில் ஆட்சியாகி இணைகிறார் .,
நவாம்ஷ லக்கினத்தில் லக்கினாதிபதி ஆட்சி எனவே இவர் தனது சுய சம்பாத்தியம் ,
தனகாரகன் குரு வக்கிரம் ., ஆறாமிடம், எட்டு, மற்றும் பன்னிரண்டாம் அதிபதிகளின் சேர்க்கை பெற்று 10 ல், மற்றும் இரண்டமிடத்தில் உள்ள
ராகு.. 10 மற்றும் இரண்டாமிடத்திற்கு சுபர் பார்வை இல்லாத காரணத்தினால் வரவுக்கு செலவு சரியாக இருக்கும்
தங்கள் பதிவிட்டுள்ள நவாம்சம் சரியானதா என்பதில் எனக்கு ஐயப்பாடு உள்ளது
Wednesday, June 18, 2014 12:04:00 PM////
------------------------------------------------
8
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
The given horoscope person is poor person. He did not earn money. He did not save money.
7th lord is in 11th. Hence he got money through his wife. but he spent all the money which he earned.
2nd place rahu, 2nd lord is in 10th with sani. 10th lord is with mandhi. Sani 11th lord is in 10th, which is 12th place to that position.
Thanking you sir.
C.Jeevanantham.
Wednesday, June 18, 2014 2:37:00 PM/////
-------------------------------------------
9
///Blogger amuthavel murugesan said...
He is running his life as hand to mouth.Due to
1. 11th lord in 10th place.
2. 10th lord in enemy place.
3. 2nd lord also joint with suriyan,sani(papa graga)
But he is living as comfortable.
Thanking you,
With best regards,
M.Santhi
Wednesday, June 18, 2014 5:32:00 PM//////
-----------------------------------------------------
10
/////Blogger Raja Murugan said...
ஆசிரியருக்கு வணக்கம், ஜாதகத்தில் லாபதிபதியும், தொழில் காரகனும், விரையதிபதியுமாகன சனி 10 ல், உடன் 6 ம் அதிபதி சூரியன், மேலும் 2
மற்றும் 9 ம் அதிபதி செவ்வாய், 3 மற்றும் 8 ம் அதிபதியும் உடன் உள்ளார்கள். தனகரகன் குரு 3 ல் மாந்தியுடன். எனவே ஜாதருக்கு 10 ல் உள்ள சனி
வேலை வாய்ப்பை கொடுப்பார். மேலும் செவ்வாய் சம்பாதிக்கும் ஆற்றலையும், திறமையையும் கொடுப்பார். ஆனால் 6 ம் வீட்டு அதிபதி சூரியன் உடன் இருப்பதாலும், சனி 3 ம் பார்வையாக விரைய ஸ்தானத்தை பார்ப்பதாலும் மிக பெரிய செல்வந்தராக இருக்கமுடியாது.
Wednesday, June 18, 2014 8:04:00 PM//////
-----------------------------------------------------
11
/////Blogger Kirupanandan A said...
ஜாதகர் ஏழ்மை நிறைந்தவர். காரணம் இரண்டில் பாப கிரகமான ராகு இருக்கிறார். இரண்டாம், ஒன்பதாம் அதிபதி செவ்வாய் 3,8க்குரிய
சுக்கிரனுடன் 10ல் இருக்கிறார். உடன் 6க்குரிய சூரியனும் இருப்பது நிலைமையை இன்னும் மோசமாக்கும். லக்கினாதிபதி 3ல் மாந்தியுடன் மறைவு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற புதன் 11ல் இருப்பதும் பாதகம் செய்யும் அமைப்புதான். அத்துடன் 5ம் அதிபதி சந்திரன் 9ல் நீசம்.
Wednesday, June 18, 2014 8:34:00 PM//////
------------------------------------------------------
12
**********/////Blogger venkatesh r said...
கொடுக்கப்பட்ட புதிர் எண் :59க்கான விடை
1) ஜாதகர் ஏழையாகப் பிறந்தவர்.
2) ஏழ்மையில் வாழ்பவர். அதாவது கைக்கும் வாய்க்குமாக வாழ்பவர்.
அதற்கான காரணங்கள்:
மீன லக்னம், விருச்சிக ராசி ஜாதகர்.
1)லக்னாதிபதி, 10மிட அதிபதி மற்றும் தன காரகன் குரு 3ல் மாந்தியுடன் வக்கிர கதியில் உள்ளார்.
2)தனஸ்தானமான 2ல் ராகு குடியுள்ளார். அதன் அதிபதியும் 9மிட பாக்யாதிபதியுமான செவ்வாய் 10ல் அஸ்தங்கமாகி விட்டார்.
3)11மிடமான லாபஸ்தானத்தில் புதன் அமர்ந்துள்ளார். லாபாதிபதி சனி 11மிடத்திற்கு 12மிடமான பத்தில் அமர்ந்துவிட்டார்.
4)2மிடத்திற்கு எந்த சுபரின் பார்வையுமில்லை.
எனவே ஜாதகர் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர்.
ஜாதகருக்கு தொழில் ஸ்தானமான 10மிடத்தில் 4 கிரகங்கள் கிரக யுத்தத்திலுள்ளன.
1) கர்மகாரகனான சனி 10ல் அமர்ந்து காரகோ பாவ நாசாய: என்று ஒரு நிரந்தர வேலை கிடைக்காமல் கெடுத்துவிட்டார்.
2) கர்மாதிபதி குரு 10க்கு 6மிடத்தில் மாந்தியுடன் மறைந்துவிட்டார். தவிர கஹல பரிவர்த்தனையில் சுக்கிரனுடன் சேர்ந்து ப்லமிழந்துவிட்டார்.
3) 10மிடத்தில் ஜாதக வில்லன் 6மிட அதிபதி சூரியன் அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார்.
இவையெல்லாம் சேர்ந்து ஜாதகருக்கு நிரந்தர வேலையில்லாமல் செய்து விட்டன. தவிர, ஜாதகருக்கு அடுத்தடுத்த வந்த தசா புக்திகள் புதன் 6
வருடம் + கேது 7 வருடம் + சுக்கிரன் 20 வருடம் + சூரியன் 6 வருடம் என கிட்டத்தட்ட 39 வருடங்கள் படுத்தி விட்டன. அதற்கு அடுத்த வந்த
பாக்யாதிபதி நீச சந்திர தசை 10 வருடமும் அவருக்கு உதவவில்லை. 9மிடம் பாபகர்த்தாரியில் இருப்பதை கவனிக்கவும்.
ஆக ஜாதகர் வாழ்நாள் முழுவதும் வறுமையில் உழன்று கைக்கும் வாய்க்குமாக சிரமப்பட் டுள்ளார் என்றே சொல்லலாம். தங்களின் திறமையான அலசலுக்காக காத்திருக்கிறேன்.
Wednesday, June 18, 2014 9:15:00 PM/////
----------------------------------------------------
13
**********/////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 29 12 1929ல் காலை 11 45 அளவில் பிறந்தவர்.
லக்கினாதிபதி குரு ராகு மாந்தியால் சூழப்பட்டுள்ளார்.குரு வக்கிரமாகவும் உள்ளார்.
இரண்டாம் இடத்தில் ராகுவும்,இரண்டாம் வீட்டு அதிபதியும் ஒன்பது பாக்கிய வீட்டு ஸ்தானதிபதியும் ஆன செவ்வாய் பத்தில் அமர்ந்தாலும் 6ம்
அதிபதியான சூரியனால் அஸ்தங்கம் ஆனதால் தனம்(2) பாக்கிய ஸ்தானம்(9) பலன் இல்லாமல் போனது.
5ம் அதிபனான சந்திரன் ஒன்பதில் அமர்ந்தாலும் நீசம் ஆனதும், பல தீய கிரஹங்களால் சூழப்பட்டதும் சிறப்பல்ல.
பத்தாம் அதிபதியும் குருவேதான்.அவர் தன் வீட்டூக்கு ஆறிலும்,மூன்றிலுமாக நின்றது அவரால் உத்தியோகத்திற்குப் பலன் இல்லாமல் போனது.
மேலும் பத்தாம் இடத்தில் ஆறாம் அதிபதியும், எட்டாம் அதிபதியும் பன்னிரணடாம் அதிபதியும் அமர்ந்தது சரியான நிரந்தர வேலை
கிடைக்காததைக் குறிகிறது.
ஒன்பதாம் வீடு கேது, சூரியன்,செவ்வாய், சனி ஆகியவர்களல சூழ்ந்ததால் 9ம் இடத்திற்குண்டான பாக்கியங்கள் கிடைத்தது குறைவு.
கர்மகாரனும், 11, 12க்குண்டான சனி பத்தில் அமர்ந்தாலும் சூரியனால் அஸ்தங்கம்.
14 வயது வரை, கேது தசா முடியும் வரை கஷ்ட ஜீவனம்தான்.
சுக்கிர தசாவில் எட்டாம் அதிபதி தசா ஆனதால் பெரிய லாபமில்லை. அதன்பின்னர் சூரிய தசா ஆறாம் அதிபதி தசாவும் சரியில்லை.
40 வயதிற்குப்பின்னர் சந்திர தசாவில் சிறிது தலைதூக்கினார்.சுய தொழில் செய்து 57 வயதுவரை பொருள் ஈட்டினார்.4,7 வீட்டுக்கு உரிய புதன்
11ல் அமர்ந்ததால் சுய தொழிலில் தன்னை சமாளிக்கும் அளவு முன்னேறியிருப்பார்.
சூரியன் 10ல் அமர்ந்ததால் அரசின் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு; அல்லது அரசியல் வாதியாக நல்ல புகழ். வசதிக்குறைவான
வாழ்க்கைதான்.
Wednesday, June 18, 2014 9:39:00 PM/////
----------------------------------------------------------
14
////Blogger valli rajan said...
Answer to Quiz 59:
Guruji my first try to answer your question.
1.2,9,11 lords are in war
2.Moon in 9th house and it is neecha but guru aspect will reduce evil effect.
3.10th lord with maandi.
4.Exchange of 3 and 10 lord will benefit business.
5. Mercury in 11 place with Jupiter aspect - good position.
6. Rahu in second place bad.
Answer: He is not rich by Birth.
Earning will be sufficient for his survival.
Wednesday, June 18, 2014 9:56:00 PM/////
-----------------------------------------------------------------
15
//////Blogger ravichandran said...
Respected Sir,
My answer for our today's Quiz No.59:
The Native of the given horoscope was not born with silver spoon.
He struggled upto 39 years thereafter he came up in his life.
Reasons:
1. Lagna lord is in Third place (enemy house) along with Mandi. It's bad.
2. It has kala sarpa dosa.
3. 7 1/2 Saturn (transit) during his 25 to 33 age.
4. Poorva punniyathipathi is debilitated.
5. sixth house lord sun dasa also upto 39 years.
6. Rahu is in second house.
7. Eleventh lord is in twelfth house from its own house.
Hence, all the above reasons, He had struggled upto 39 years of his age.
Form 39 years onwards, during Moon dasa, he had come up in his life.
With kind regards,
Ravichandran M.////////
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
ஜாதகரின் பொருளாதார நிலையைப் பற்றி கேட்டதால் அதை மட்டும் சொன்னேன். அத்துடன் தொழில் நிலவரம் எப்படி என்று கேட்டிருந்தால் அதைப் பற்றியும் சொல்லியிருப்பேன். 10 இடம் இதன் அதிபதி இவற்றைப் பார்த்தாலே நன்றாகத் தெரிகிறது, என்ன மாதிரி பலன் என்று.
ReplyDeleteRespected Sir
ReplyDeleteThanks for the analysis. These kind analysis will make us better astrologers :).
I have 2 general questions and hoping for your answer.
1. If Mars is the 10th lord and it is in 3rd place, it will look at it own house (10th house) with 8th look. This does good right?
2. If Guru is in 6th place, I read in one of your question answers, that the chart owner is lazy and will not go to work. Guru looks at 10th place with its 5th look. That will not help?
எனக்கும் போட்டியில் கலந்து கொள்ள
ReplyDeleteஎவ்வளவோ விருப்பம்
ஆனால்....?!
மதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
ReplyDeleteதங்களின் மேன்மையான அலசலில் உரிய விடையினை அறிந்து கொண்டேன்.
புதிருக்கான பதிலை தங்களுக்கு அனுப்பிய பின் மறுபடியும் ஜாதகத்தை அலசியதில் நான் பதிலலித்தது தவறு என புரிந்தது.எனினும் தவறுகளை திருத்திக்கொள்ள மேலும் வாய்ப்புகளை தருவதால் என் தவறுகளை குறைத்துக் கொள்ளமுடியும்.
நனறி
ல ரகுபதி
அய்யா , முதற்கண் நன்றி ! தங்களின் அலசல்கள் பலவகையில் உபயோகமாக உள்ளது !. சந்திரனின் நீச தன்மை குறித்து எழுத மறந்து விட்டேன் !. நான் கண்ட இது போன்ற ஜாதகங்களில் பெரும்பாலும் சந்திரன் கெட்டு இருப்பது காண படுகிறது !. சந்திரனை வைத்து தான் ராசியை முடிவு செய்கிறோம் !. அதனால் சந்திரன் குறித்து ஒரு விசேஷ பாடம் நடத்துமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் !
ReplyDelete///வேப்பிலைsaid...
ReplyDeleteஎனக்கும் போட்டியில் கலந்து கொள்ள
எவ்வளவோ விருப்பம்
ஆனால்....?!////
ஆனால் என்ற வார்த்தையை தூக்கி விடுங்கள்.
விருப்பம் ஒன்றே போதும்.
தங்கள் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றேன்.
அந்த நாள் எப்பொழுதோ...
வணக்கம்.
ReplyDeleteதங்களுடைய அலசல் மிகவும் நன்றாக இருந்தது.
ஒரு சின்ன சந்தேகம். கணவன் ஜாதகம் ஓட்டை அண்டவாக இருந்து, மனைவியின் ஜாதம் மிகுந்த பலமாக இருந்தால் (2 & 11ம் வீடு), ஓட்டை அண்டாவை அடைக்கமுடியுமா.
நான்கு கிரகங்கள் சேர்ந்து ஒவ்வொரு ராசியிலும் இருக்கும் பலனை பற்றி தாங்கள் ஒரு கட்டுரை நேரம் கிடைக்கும் பொழுது எழுதினால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்.
உங்கள் எண்ணத்தின் கேள்விகள் எனக்கு நன்றாக சிந்திக்க முடிகிறது.
சில பேர் மூன்று கிரகங்கள் என்பார்கள். மற்றும் சில பேர் இரண்டு கிரகங்கள் என்பார்கள். இந்த மாதிரி தொடர்ந்து கொண்டே போனால் என்னாவது. போதாத குறைக்கு திருடர்கள் பயம்.
நன்றி
சந்திரசேகரன் சூரியநாராயணன்
//கணவன் ஜாதகம் ஓட்டை அண்டவாக இருந்து, மனைவியின் ஜாதம் மிகுந்த பலமாக இருந்தால் (2 & 11ம் வீடு), ஓட்டை அண்டாவை அடைக்கமுடியுமா.//
ReplyDeleteஇந்த நிலையில் மனைவி சேர்த்து வைத்ததையெல்லாம் கணவர் செலவு செய்து முடித்து விடுவாரோ என்னவோ. இது தவிர எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் மனைவியின் உழைப்பில் உடம்பை வளர்ப்பவர்களும் இந்த categoryயில் வருவார்கள் என்று நினைக்கிறேன்.
Chandrasekaran Suryanarayana said...
ReplyDelete///ஆனால் என்ற வார்த்தையை தூக்கி விடுங்கள்.///
ஆனாலுக்கு பின்னால்
அவ்வளவு அர்த்தம் ..(இருக்கு?)
அது அலசல் பகுதியில்
அடியேன் ஜாதகம் வந்த பின்..
//அது அலசல் பகுதியில்
ReplyDeleteஅடியேன் ஜாதகம் வந்த பின்..//
அலசலாம், ஆனால் உங்களைப் போன்ற பெரிய ஆட்கள் ஜாதகத்தில் உள்ள பெரிய பெரிய விஷயங்கள் எங்கள் சிற்றறிவிற்கு புலனாகாது. யாரையும் சிரமப்படுத்த (or bully) வேண்டாம் என்று வாத்தியாரும் விட்டு விட்டார் என்று நினைக்கிறேன்.
/////Blogger Kirupanandan A said...
ReplyDeleteஜாதகரின் பொருளாதார நிலையைப் பற்றி கேட்டதால் அதை மட்டும் சொன்னேன். அத்துடன் தொழில் நிலவரம் எப்படி என்று கேட்டிருந்தால் அதைப் பற்றியும் சொல்லியிருப்பேன். 10 இடம் இதன் அதிபதி இவற்றைப் பார்த்தாலே நன்றாகத் தெரிகிறது, என்ன மாதிரி பலன் என்று./////
அதனாலென்ன? பரவாயில்லை. எழுதியவரைக்கும் போதும் ஆனந்த்!
//////Blogger Dallas Kannan said...
ReplyDeleteRespected Sir
Thanks for the analysis. These kind analysis will make us better astrologers :).
I have 2 general questions and hoping for your answer.
1. If Mars is the 10th lord and it is in 3rd place, it will look at it own house (10th house) with 8th look. This does good right?/////
அத்துடன் அவர் தனது வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார். அதைக் கவனித்தீர்களா? அது நன்மையான அமைப்பு இல்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////2. If Guru is in 6th place, I read in one of your question answers, that the chart owner is lazy and will not go to work. Guru looks at 10th place with its 5th look. That will not help?/////
குரு ஆறில் அமர்வது நன்மையானதல்ல! ஆனால் பத்தாம் வீட்டின் மேல் அவருடைய பார்வை விழுவது நன்மையானது! That will yield mixed results!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteஎனக்கும் போட்டியில் கலந்து கொள்ள
எவ்வளவோ விருப்பம்
ஆனால்....?!//////
ஆனால், போனால் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்காமல், முதலில் உங்கள் ஜாதகத்தை நீங்களே அலசி எனக்கு அனுப்புங்கள். உங்கள் அலசல் எப்படி இருக்கிறது என்று பார்த்துச் சொல்கிறேன்.
//////Blogger raghupathi lakshman said...
ReplyDeleteமதிப்பிற்க்குரிய ஐயா வணக்கம்.
தங்களின் மேன்மையான அலசலில் உரிய விடையினை அறிந்து கொண்டேன்.
புதிருக்கான பதிலை தங்களுக்கு அனுப்பிய பின் மறுபடியும் ஜாதகத்தை அலசியதில் நான் பதிலலித்தது தவறு என புரிந்தது.எனினும் தவறுகளை திருத்திக்கொள்ள மேலும் வாய்ப்புகளை தருவதால் என் தவறுகளை குறைத்துக் கொள்ளமுடியும்.
நனறி
ல ரகுபதி/////
அப்படியே செய்யுங்கள். இது வெறும் பயிற்சி மட்டும்தான்!
//////Blogger murali krishna g said...
ReplyDeleteஅய்யா , முதற்கண் நன்றி ! தங்களின் அலசல்கள் பலவகையில் உபயோகமாக உள்ளது !. சந்திரனின் நீச தன்மை குறித்து எழுத மறந்து விட்டேன் !. நான் கண்ட இது போன்ற ஜாதகங்களில் பெரும்பாலும் சந்திரன் கெட்டு இருப்பது காண படுகிறது !. சந்திரனை வைத்து தான் ராசியை முடிவு செய்கிறோம் !. அதனால் சந்திரன் குறித்து ஒரு விசேஷ பாடம் நடத்துமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன் /////
சந்திரனை வைத்து நிறைய எழுதியுள்ளேன். வலைப் பதிவின் பழைய பாடங்களில் உள்ளது. படித்துப் பாருங்கள்!
/////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDelete///வேப்பிலைsaid...
எனக்கும் போட்டியில் கலந்து கொள்ள
எவ்வளவோ விருப்பம்
ஆனால்....?!////
ஆனால் என்ற வார்த்தையை தூக்கி விடுங்கள்.
விருப்பம் ஒன்றே போதும்.
தங்கள் வருகைக்காக காத்துக்கொண்டு இருக்கின்றேன்.
அந்த நாள் எப்பொழுதோ.../////
அதோ அந்தப் பறவை போல பாட வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
அவை இரண்டையும் செய்வதற்கு முதலில் இருக்கையை விட்டு எழுந்திருக்க வேண்டும்!
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
ReplyDeleteவணக்கம்.
தங்களுடைய அலசல் மிகவும் நன்றாக இருந்தது.
ஒரு சின்ன சந்தேகம். கணவன் ஜாதகம் ஓட்டை அண்டவாக இருந்து, மனைவியின் ஜாதம் மிகுந்த பலமாக இருந்தால் (2 & 11ம் வீடு), ஓட்டை அண்டாவை அடைக்கமுடியுமா.////
அப்படியெல்லாம் செய்ய முடியாது. செய்ய முடிந்தால், பலரின் வாழ்க்கை மாறிவிடும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///// நான்கு கிரகங்கள் சேர்ந்து ஒவ்வொரு ராசியிலும் இருக்கும் பலனை பற்றி தாங்கள் ஒரு கட்டுரை நேரம் கிடைக்கும் பொழுது எழுதினால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என்று பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன். உங்கள் எண்ணத்தின் கேள்விகள் எனக்கு நன்றாக சிந்திக்க முடிகிறது.
சில பேர் மூன்று கிரகங்கள் என்பார்கள். மற்றும் சில பேர் இரண்டு கிரகங்கள் என்பார்கள். இந்த மாதிரி தொடர்ந்து கொண்டே போனால் என்னாவது. போதாத குறைக்கு திருடர்கள் பயம்.
நன்றி
சந்திரசேகரன் சூரியநாராயணன்/////
கிரக யுத்தம் பற்றி எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது இனும் விரிவாக எழுதுகிறேன் நண்பரே! உங்களின் ஆர்வத்திற்கு நன்றி!
////Blogger Kirupanandan A said...
ReplyDelete//கணவன் ஜாதகம் ஓட்டை அண்டவாக இருந்து, மனைவியின் ஜாதம் மிகுந்த பலமாக இருந்தால் (2 & 11ம் வீடு), ஓட்டை அண்டாவை அடைக்கமுடியுமா.//
இந்த நிலையில் மனைவி சேர்த்து வைத்ததையெல்லாம் கணவர் செலவு செய்து முடித்து விடுவாரோ என்னவோ. இது தவிர எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் மனைவியின் உழைப்பில் உடம்பை வளர்ப்பவர்களும் இந்த categoryயில் வருவார்கள் என்று நினைக்கிறேன்.//////
ஆமாம், அப்படித்தான் வருவார்கள். தமிழில் அதற்குப் பெயர்: சுகஜீவனம்!
/////Blogger வேப்பிலை said...
ReplyDeleteChandrasekaran Suryanarayana said...
///ஆனால் என்ற வார்த்தையை தூக்கி விடுங்கள்.///
ஆனாலுக்கு பின்னால்
அவ்வளவு அர்த்தம் ..(இருக்கு?)
அது அலசல் பகுதியில்
அடியேன் ஜாதகம் வந்த பின்../////
வராமலா போய்விடும்? பொறுத்திருங்கள். அதற்கு உரிய காலம் கணியட்டும்
///////Blogger Kirupanandan A said...
ReplyDelete//அது அலசல் பகுதியில்
அடியேன் ஜாதகம் வந்த பின்..//
அலசலாம், ஆனால் உங்களைப் போன்ற பெரிய ஆட்கள் ஜாதகத்தில் உள்ள பெரிய பெரிய விஷயங்கள் எங்கள் சிற்றறிவிற்கு புலனாகாது. யாரையும் சிரமப்படுத்த (or bully) வேண்டாம் என்று வாத்தியாரும் விட்டு விட்டார் என்று நினைக்கிறேன்.//////
ஆமாம். அதுவும் உண்மைதான். Note this point Veppilaiyaare!
பி எஸ் என் எல் தரை வழி இணையத் தொடர்பு பல நாட்களாகச் சோதனை மேல் சோதனை செய்துவிட்டது.அதனால் என் வழக்கமான இணையச் சேவையைத் தீவிரமாக ஆற்ற முடியவில்லை. இப்போது ரிலையன்ஸ் தொடர்பினை வாங்கி
ReplyDeleteஉள்ளேன். பார்ப்போம். எவ்வளவு நாள் ஓடுகிறது என்று.
என் பதிலும் நட்சத்திர அந்தஸ்து பெற்றது மிக்க மகிழ்ச்சி ஐயா!மிக்க நன்றி!
பலரும் வாசித்துப் பயன் பெறுகிறார்கள் என்பது என்னை தனிப்பட்ட முறையில் மின் அஞ்சல் அனுப்பிப் பாராட்டுபவர்கள் மூலம் தெரிகிறது.கூடவே அறைகுறைத் தகவல் அனுப்பிப் பலன் கேட்பவர்களும் அதிகரித்து விட்டார்கள்.முடிந்தவரைத் தெரிந்ததை, கூடியவரை எதிர்மறை தவிர்த்து பக்குவமாகச் சொல்லி வருகிறேன்.
எல்லாம் பழனியப்பன் அருள். சரியோ தவறோ அவர் பார்த்துக் கொள்வார்.
kmrk1949@gmail.com
/////Blogger kmr.krishnan said...
ReplyDeleteபி எஸ் என் எல் தரை வழி இணையத் தொடர்பு பல நாட்களாகச் சோதனை மேல் சோதனை செய்துவிட்டது.அதனால் என் வழக்கமான இணையச் சேவையைத் தீவிரமாக ஆற்ற முடியவில்லை. இப்போது ரிலையன்ஸ் தொடர்பினை வாங்கி
உள்ளேன். பார்ப்போம். எவ்வளவு நாள் ஓடுகிறது என்று.
என் பதிலும் நட்சத்திர அந்தஸ்து பெற்றது மிக்க மகிழ்ச்சி ஐயா!மிக்க நன்றி!
பலரும் வாசித்துப் பயன் பெறுகிறார்கள் என்பது என்னை தனிப்பட்ட முறையில் மின் அஞ்சல் அனுப்பிப் பாராட்டுபவர்கள் மூலம் தெரிகிறது.கூடவே அறைகுறைத் தகவல் அனுப்பிப் பலன் கேட்பவர்களும் அதிகரித்து விட்டார்கள்.முடிந்தவரைத் தெரிந்ததை, கூடியவரை எதிர்மறை தவிர்த்து பக்குவமாகச் சொல்லி வருகிறேன்.
எல்லாம் பழனியப்பன் அருள். சரியோ தவறோ அவர் பார்த்துக் கொள்வார்.
kmrk1949@gmail.com/////
நல்லது. அந்தப் பணியினைதொடர்ந்து செய்யுங்கள்! எனக்கு நேரமில்லை. ஆகவே அதை நான் செய்வதில்லை!
Respected Vaathiyar,
ReplyDeleteGood Morning, Very good story about searching of Five fools. Finally, palced an atom bomb on the reader of the story. Really good story.
Thank q
Regards.
Visvanathan N
///kmr.krishnan said...
ReplyDeleteபி எஸ் என் எல் தரை வழி இணையத் தொடர்பு பல நாட்களாகச் சோதனை மேல் சோதனை செய்துவிட்டது.///
ஆச்சரியமாக இருக்கிறது
அதிவேகமான இணைப்பு BSNL தான்
இருபது வருடத்திற்கு மேலாக
இந்த BSNL சேவையில் நாங்கள்
ஒரு பிரச்சனையும் இல்லை
ஒரு முறையும் இல்லை..
இடர்பாடுகள் இருப்பினும்
இவர்கள் உடனே கவணிக்கின்றனர்
மற்ற தனியார் இணைப்புக்கு
மாற எண்ணியது கூட கிடையாது
அவரவர் அனுபவம்
அவரவர் வினை வழி