மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.7.13

Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்!

 

Astrology கிடைப்பதும் கிடைக்காமல் போவதும்!

ஜோதிடத் தொடர் பாடம் - பகுதி ஒன்று

நம்ம சூப்பர் ஸ்டார் படங்களில், ஒவ்வொரு படத்திலும் ஒரு முத்தான வசனம் இருக்கும். உங்கள் மொழியில் சொன்னால் ஒரு பஞ்ச் டயலாக் இருக்கும். அது போன்று அவர் உதிர்த்த முத்தான் வசனம் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன். படத்தின் பெயர் நினைவில் இல்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.

”கிடைக்கிறது கிடைக்காம இருக்காது: கிடைக்காம இருக்கிறது கிடைக்காது!”

உண்மைதான். நமக்குக் கிடைக்க வேண்டியது உரிய நேரத்தில் தானாகவே கிடைக்கும். அதுபோல நமக்கு மறுக்கப்பட்டதை எத்தனை முயன்றாலும் பெறமுடியாது. அதாவது அது கிடைக்காது. ஒவ்வொரு மனிதனும் தன் அனுபவங்களின் மூலம்தான் அதை உணர முடியும்.

நல்ல பெற்றோர்கள், நல்ல கல்வி, நல்ல வேலை, நல்ல மனைவி, நல்ல பிள்ளைகள், நல்ல வீடு, நல்ல வாகனம் என்று வாழ்க்கையின் ஒவ்வொரு நல்ல அம்சமும் நமக்கு, நம் விருப்பப்படி கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அது தானாகவே அமைய வேண்டும். தேடிப் பிடித்தெல்லாம் பெற முடியாது.

ஜோதிடத்தில் அதை ஜாதக அமைப்பு என்று சொல்வோம். எளிமையாகச் சொன்னால் வாங்கி வந்த வரம் என்போம்.

இன்று மனைவி அமைவது எப்படி என்று பார்ப்போம். அதை மட்டும் பார்ப்போம். அதற்கான அம்சங்களைப் பார்ப்போம். திருமணம் ஆகி குப்பை  கொட்டிக்கொண்டிருப்பவர்கள் ’இனிப் பார்த்து என்ன ஆகப்போகிறது?’ என்று கேட்கலாம். அது உங்களுக்கு உதவிகரமாக இல்லாவிட்டாலும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கு உங்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு அல்லது உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உதவும் அல்லவா? ஆகவே முகத்தைச் சுளிக்காமல் மேலே படியுங்கள்!
------------------------------------------------------------------------------------------------------
திருமணத்தை எதிர் நோக்கி இருக்கும் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் நிலை என்ன?

முன்பு வந்த பத்திரிக்கைச் செய்தி ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்.


(நன்றி: தினமலர் நாளிதழ்)

ஆய்வு ஒன்றின் மூலம், இன்றையப் பெண்கள், அதிக சம்பளம் பெறும் ஆண்களையும், ஆண்கள் அழகான பெண்களையும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. நாட்டு நடப்பும் அதுதான்.

முன்பெல்லாம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் என்பது பெரிய தொகை. இன்று நகரங்களில் உள்ள வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவு, உணவுப் பொருட்களின் விலைவாசி என்று பார்த்தால், முப்பதாயிரத்திற்குக் குறையாமல் சம்பளம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் சமாளிக்க முடியும். ஐம்பதாயிரம் என்பது ஓரளவிற்குக் கவர்ச்சியான சம்பளம்.

சரி, வருமானத்தை மட்டும் பார்த்தால் போதுமா? ஆசாமியின் தோற்றம், அறிவு (Smartness) குடும்பச் சூழ்நிலை, தனித்தன்மை (குணம்) எல்லாம் முக்கியமில்லையா?

நல்ல குணம் என்பதுதான் அதிக முக்கியமானது. தீய பழக்கங்கள் எதுவும் இல்லாததுதான் முக்கியமானது. ‘கட்டிங்’ அடிக்கிற பையனாக, ஸ்த்ரீ லோலனாக இருந்தால் என்ன செய்வார்களாம்?

அதுபோல பெண்கள் சிவந்த நிறத்துடன் அழகாக இருந்தால் மட்டும் போதுமா? குணம் முக்கியமில்லையா?

மண் வளர்த்த பொறுமை எல்லாம் மனதில் வளர்த்தவளாய் 
கண் வளர்ந்த பெண்மயிலை நான் அடைந்தேன்’ 
என்ற திரைப்படப் பாடல் வரிகளுக்கேற்ப பெண் இருக்க வேண்டாமா?

எப்போதும் உற்சாகமாக, புன்னகையுடன், யாரையும் எதிர்கொள்ளும் தைரியமும், எல்லோரையும் அனுசரித்துக்கொண்டு போகின்ற மனவலிமை யும் உள்ள பெண் வேண்டாமா? அத்தான் என்று அன்புடன், பாசத்துடன் கட்டியனைக்கின்ற பெண் வேண்டாமா?

சிவப்பு என்று கட்டிக்கொண்டுவந்து தினமும் அவளிடம் செருப்படி பட்டுக்கொண்டிருக்கிறான்’ என்று மற்றவர்கள் ஏளனம் செய்யும்படியான வாழ்க்கை அமைந்தால் எப்படி இருக்கும்?

சற்று யோசித்துப் பாருங்கள்

ஆணாகட்டும், பெண்ணாகட்டும் குணம்தான் அதிக முக்கியமானதாகும்!

ஹீரோ அல்லது ஹீரோயினாக இருக்க வேண்டும். வில்லன் அல்லது வில்லியாக இருந்தால், அவதி இல்லையா?

திருமணம் என்பது மகிழ்ச்சிக்கா? அல்லது அவதிக்கா?

சரி குணத்தை எப்படித் தெரிந்து கொள்வது?

ஜாதகத்தில் லக்கினத்தை வைத்தும், சந்திர ராசியை வைத்தும், சுபக்கிரகங்களை வைத்தும் குண நலன்கள் தெரியவரும்

அதை வைத்து ஒரு தொடர் எழுதலாம் என்று உள்ளேன்.

முதல் அத்தியாயம் நாளை!

பொறுத்திருங்கள்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

23 comments:

  1. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்;

    கணவன் அமைவதெல்லாம் காசு கொடுக்கும் வரம்??!!!

    எப்போதும் போல் சுவாறச்யமாகத் துவங்கி விட்டீர்கள்.நன்றி ஐயா!

    ReplyDelete
  2. முத்து படத்தில் வரும் வசனம். அதன் காணொளி இங்கு இருக்கிறது. http://www.youtube.com/watch?v=JhNfkUg8Yso

    இறைவன் கொடுப்பதை மனிதனால் தடுக்க முடியாது. இறைவன் தடுத்ததை மனிதனால் கொடுக்க முடியாது என்று நபிகள் நாயகம் சொன்னதை சற்று மாற்றி சொல்லியிருப்பது போல் தெரிகிறது.

    ReplyDelete
  3. வணக்கம் ஐயா.... மாரத்தான் போஸ்ட் மறந்துவிட்டீர்௧ளே....

    ReplyDelete
  4. அய்யா

    அருமையான ஒரு பாடம் ஆரம்பமாகியுள்ளது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. ஐயா, வ்ணக்கம்.
    விருச்சிக லக்னத்ுக்கு செவ்வாய் மீதுனததில் இருந்தால் லக்ந அதிபதி கெட்டுவிட்டதா அல்ல, 6ஆம் அதிபதியும் ஆவதால் விபரீத ராஜயோகமா .
    Please clarify.

    ReplyDelete
  6. அய்யா
    துலாம் இராசி, விசாக நட்சத்ரத்தில் பிற‌ந்தால் காதல் திருமணம் 99% உண்டு என்கிறாற்கள், உண்மையா

    ReplyDelete
  7. குருவிற்கு வணக்கம்
    அ ,ஆ புதிய பாடம் ஆரம்பம் அற்புதம்
    நன்றி

    ReplyDelete
  8. ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது, ஆவலைத் தூண்டுகிறது!. ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  9. ////Blogger kmr.krishnan said...
    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்;
    கணவன் அமைவதெல்லாம் காசு கொடுக்கும் வரம்??!!!
    எப்போதும் போல் சுவாரசியமாகத் துவங்கி விட்டீர்கள்.நன்றி ஐயா!/////

    உங்களைப் போன்று எத்தனை ஜாம்பவான்கள் பதிவிற்கு வந்து போகிறார்கள்? எழுத்தில் சுவாரசியம் இல்லாவிட்டால் என்ன ஆகும்? நானே படிக்க மாட்டேன். பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  10. ////Blogger Ak Ananth said...
    முத்து படத்தில் வரும் வசனம். அதன் காணொளி இங்கு இருக்கிறது. http://www.youtube.com/watch?v=JhNfkUg8Yso
    இறைவன் கொடுப்பதை மனிதனால் தடுக்க முடியாது. இறைவன் தடுத்ததை மனிதனால் கொடுக்க முடியாது என்று நபிகள் நாயகம் சொன்னதை சற்று மாற்றி சொல்லியிருப்பது போல் தெரிகிறது.////

    வசனத்திற்கான படத்தின் சுட்டியைத் தேடிப் பிடித்துக்கொடுத்த மேன்மைக்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  11. /////Blogger vikneshkumar said...
    வணக்கம் ஐயா.... மாரத்தான் போஸ்ட் மறந்துவிட்டீர்௧ளே....//////

    மறக்கவில்லை. நடுநடுவே அதுவும் வரும்!

    ReplyDelete
  12. ////Blogger eswari sekar said...
    vanakam sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் வணக்கத்திற்கும் நன்றி சகோதரி!

    ReplyDelete
  13. ////Blogger Kalai Rajan said...
    அய்யா
    அருமையான ஒரு பாடம் ஆரம்பமாகியுள்ளது.வாழ்த்துக்கள்////

    நல்லது.நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger DevikaArul said...
    ஐயா, வணக்கம்.
    விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய் மிதுனததில் இருந்தால் லக்னம் அதிபதி கெட்டுவிட்டதா அல்ல, 6ஆம் அதிபதியும் ஆவதால் விபரீத ராஜயோகமா . Please clarify./////

    லக்கினம் எப்படிக் கெடும்? லக்கின அதிபதிதான் இடக்கான இடத்தில் இருக்கிறார். பொதுவாக புதனின் வீடான மிதுனம் செவ்வாய்க்கு ஒத்து வராது!

    ReplyDelete
  15. ////Blogger C Jeevanantham said...
    Good morning sir,////

    உங்களின் வருகைப் பதிவிற்கும் காலை வணக்கத்திற்கும் நன்றி!

    ReplyDelete
  16. ////Blogger Kalai Rajan said...
    அய்யா
    துலாம் இராசி, விசாக நட்சத்ரத்தில் பிற‌ந்தால் காதல் திருமணம் 99% உண்டு என்கிறாற்கள், உண்மையா/////

    உங்களுக்கு இருக்கிறதா? முயற்சி செய்து பாருங்கள். மயில் கிடைத்தால் மின்னஞ்சலில் சொல்லுங்கள்!

    ReplyDelete
  17. /////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்
    அ ,ஆ புதிய பாடம் ஆரம்பம் அற்புதம்
    நன்றி////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  18. /////Blogger பார்வதி இராமச்சந்திரன். said...
    ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறது, ஆவலைத் தூண்டுகிறது!. ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.//////

    உங்களின் பாராட்டிற்கும் ஆர்வத்திற்கும் நன்றி சகோதரி! உங்கள் காத்திருப்பு வீண் போகாது!

    ReplyDelete
  19. /////Blogger Remanthi said...
    interesting articles...////

    நல்லது. நன்றி! நீங்கள் அம்மையாரா? அய்யாவா? பெயரை வைத்து ஒன்றும் கண்டு பிடிக்க முடியவில்லையே!

    ReplyDelete
  20. ஹா ஹா ஹா.... எனது பெயர் R.கோபி... நன்றி

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com