இலக்கியச்சோலை: அவன் கல்லென்றால் நீ மரம்!
”கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்' என்று பாடினான் ஸ்ரீரங்கத்துக் கவிஞன்.
”மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிச்சோலை மரமாவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்” என்று பாடல்
எழுதினான் இன்னொரு கவிஞன்
ஆனால் நமது கவியரசர், கடவுளைக் கல்லென்று சொல்பவர்களைச் சாடிச் சொல்கிறார்:
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!
அதோடு விட்டாரா? அதற்கும் மேலே சொல்கின்றார்:
”பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!”
முழுக்கவிதையையும் நீங்கள் அறியத் தந்துள்ளேன்
--------------------------------------------------------
கடவுளை நம்புக கடவுளைப் பற்றிய
கவிதைக ளெல்லாம் கற்றுத் தேறுக!
நடமிடும் தெய்வம் ராமனின் காதை
நற்பா ரதத்து நன்னெறி யாவும்
ஆய்ந்து படித்து அறிக பொருள்களை!
சாத்திரம் வேதம் தர்மம் தத்துவம்
தமிழன் முருகன் தனைப்புகழ் புராணம்
அனைத்தும் அறிக! அறிந்தபின் னாலே
எடுபே னாவை; எழுதுக கவிதை!
ஊற்றுக் கேணியின் உட்புறம் சுரக்கும்
ஆற்றுச் சுவைநீர் ஆமதன் பெருக்கம்!
நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!
நாலாபுரமும் நற்கரம் விரித்து
மேலும் கீழும் விண்ணையும் மண்ணையும்
ஆழ அளந்து அள்ளித் தெளித்து
ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!
நீண்ட இழைகளில் நெய்யும் சேலைபோல்
ஆண்டவன் தத்துவம் ஆயிரம் எழுதலாம்!
கடவுள் என்பது கல்லே யானால்
மனிதன் என்பவன் மரமே யாவான்!
மரத்தின் பேனா மைசுரக் காது!
மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை
பலபொருள் தேடுக; பலவகை பாடுக!
பகுத்தறி வென்பது பகுத்துப் பகுத்து
முடிவில் காண்பது மூலப் பொருளையே!
செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும் வரைநீ தெய்வத்தை நம்பு!
நம்பிக்கைதான் நற்பொருள் வளர்க்கும்
நம்பு கடவுளை நல்ல கவிஞன்நீ!
பல்பொருள் அறிந்த பாவலர் சில்லோர்
சில்பொருள் மட்டுமே தேறிய தெதனால்?
அளவிற் கவிதை அதிகமா காமல்
குறைவே யான குறைபா டெதனால்?
நாத்திக சிறையை நம்பிக் கிடந்ததால்
அகவே எனது அருமைத் தோழனே
கடவுளை நம்புக! கவிஞன் நீயே!
தலைப்பு: கடவுளை நம்பினால் கவிஞன் ஆகலாம்
ஆக்கம்: கவியரசர் கண்ணதாசன்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
Good morning sir. Very good info. Kadavulai nambuka. Really. Trust on almighty. Thank you very much sir.
ReplyDeleteAnd this is reg. Your yesterday lesson. For me arudra star and for my wife aswini star. Based on which aspect our astrologer put match for us. Is this based on ragu kethu combination(arudra-rag, aswini-kethu). Please explain sir.
By
Sathishkumar GS
"செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
ReplyDeleteதெரியும் வரை தெய்வத்தை நம்பு நீ!"
நெஞ்சில் ஆழப் பதிந்த வரிகள். பவித்திரமான பாரம்பரியத்தில் வந்த கவிஞன் இடையில் சிலகாலம் 'வனவாசம்' சென்ற பாவத்தைப் போக்க, முழுக்க முழுக்க ஆன்மிகச் சிந்தனையில் தோய்ந்து வாழ்ந்த காலத்தில் எழுந்த கவிதை இது. கவிஞனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' கட்டுரைகளை மட்டும் படித்தால் போதும் அத்தனை ஆன்மிக நூல்களையும் படிப்பதற்குச் சமம். நம் காலத்தில் வாழ்ந்து மறைந்து போன அந்த மகாகவியை நாம் மறக்க முடியுமா?
சாத்திரமும் சரித்திரமும் படிப்பாய்!
ReplyDeleteநாத்திகமும் அதன்விளை ஆத்திரமும்
பாத்திறம் வளர்க்க பயன்படா!
ஆத்திகம் போற்று ஆகவே
அரும் நான்மறை ஓத்து
தருமத்தோடு தவத்தினை நோக்கு
கருமத்தோடு காட்சிப்பிழை போக்கு
நம்பிக்கை கொள் தும்பிக்கையான்
கற்பக மலர னையோன்
பொற்பதம் போற்று அதனை
நற்தமிழ் கவிதையாலே சாற்று!...
கடவுளைப் போற்றுக் கவிஞனாவாய்!
கடந்து வுள்போ காட்சிக்காண்பாயென
அற்புத வழியதை அறியச்செய்த
சொற்ப்பொருட் நிறை கவிக்கோவே!
வாழிநின் புகழ் வாழியவே!!!
கவியரசரின் சத்தியக் கவிதையை போற்ற வார்த்தைகளே இல்லை!!!.
ReplyDelete///நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!////
////மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை/////
பொட்டில் அறைந்தாற்போன்ற வரிகள். கவியரசர் ஆணித்தரமாக ஒவ்வொரு வார்த்தையையும் செதுக்கியிருக்கிறார்.
////ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!/////
எடுக்க எடுக்க குறையாத நவரத்தினச் சுரங்கம் இந்த வரிகள். எவ்வளவு ஆழமான பொருள்!. மிக அருமையான அற்புதக் கவிதையைப் படிக்கத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
குருவிற்கு வணக்கம்
ReplyDeleteகடவுளை நம்பினால் கவிஞ்ன் ஆகலாம்
கவியரசர் கண்ணதாசன். அற்புதமன
இலக்கிய் சோலை.
நன்றி
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
ReplyDeleteஎத்தனையோ சித்தருங்க சொல்லியாச்சு
திரைப்பாடல் ஒன்று இப்படி
தெரு முழக்கம் செய்தது
கவிஞர் காலத்து சனங்களே அவர்
கருத்துக்களை ஏத்துக்கலே
பகுத்து அறிவை அறியாமையினால்
செகுத்து பார்க்காத பாசறைகள்
கருவரையில் இருக்கும் கடவுளை விட கல்றையில் உள்ள பிணங்கள் மீது
நம்பிக்கை வைக்கும் போது
நாம் மட்டும் என்னத்த சொல்வது
இந்தியாவின் பிறபகுதியில் வசிக்கும்
இவ்வகுப்பறை தோழர் மைனருக்கு
மரம் தான் மரம் தான் மறந்தான் என
மரத்தை பற்றிய தன் கவிதையில்
வைரமுத்து மனிதனை மரம் என்றதால்
வள்ளுரையே முறைத்து கேட்பார்
இந்த பதிவினை dedicate செய்கிறோம்
இன்முகத்துடன் அவரும் ஏற்றுக் கொள்ள
கடவுள் சிலையை கல் என்பவர்
கடற்கரை சிலையை காப்பிய சின்னம்
என சொல்வது வேடிக்கைதான் இது
எல்லாம் அங்கு சக"ஜமா"?
இந்த வாத்தியாரின் பாடலினை
இன்று வலமாக சுழல விடுகிறோம்
கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே
கொடுமையைக் கண்டவன் கண்ணையிழந்தான் - அதைக்
கோபித்துத் தடுத்தவன் சொல்லையிழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னையிழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னையிழந்தான்
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி - அது
நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
- மக்கள்
அரங்கத்தில் வராது அவன் சாட்சி
சதிச் செயல் செய்தவன் புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையைச் சொல்பவன் சதிகாரன்
இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -
சாத்திரமும் சரித்திரமும் படிப்பாய்!
ReplyDeleteநாத்திகமும் அதன்விளை ஆத்திரமும்
பாத்திறம் வளர்க்க பயன்படா!
ஆத்திகம் போற்று ஆகவே
அரும் நான்மறை ஓதுவித்து
தருமத்தோடு தவத்தினை நோக்கு
கருமத்தோடு காட்சிப்பிழை போக்கு
நம்பிக்கை கொள் தும்பிக்கையான்
கற்பக மலர னையோன்
பொற்பதம் போற்று அதனை
நற்தமிழ் கவிதையாலே சாற்று!...
கடவுளைப் போற்றுக் கவிஞனாவாய்!
கடந்து வுள்போ காட்சிக்காண்பாயென
அற்புத வழியதை அறியச்செய்த
சொற்பொருட் நிறை கவிக்கோவே!
வாழி நின்புகழ் வாழியவே!!!
இலக்கிய சோலை தரும் சுகந்தத்திற்கு நன்றிகள் ஐயா!
டியர் சார்
ReplyDeleteகுட் மோர்னிங் .
////Blogger KJ said...
ReplyDeleteGood morning sir. Very good info. Kadavulai nambuka. Really. Trust on almighty. Thank you very much sir.
And this is reg. Your yesterday lesson. For me arudra star and for my wife aswini star. Based on which aspect our astrologer put match for us. Is this based on ragu kethu combination(arudra-rag, aswini-kethu). Please explain sir.////
திருவாதிரைக்கும், அஸ்விணிக்கும் ரஜ்ஜு பொருத்தம் உள்ளது. ரஜ்ஜு பொருத்தம் இருந்தால் போதும் அதனால் அவர் ஓக்கே சொல்லியிருப்பார். அதுதான் நடந்து முடிந்துவிட்டதே. நடந்ததைப்போய் நோண்டிக்கோடிருக்காதீர்கள். வேறு உருப்படியான வேலையைப் பாருங்கள்! சொந்த ஜாதகத்தை வைத்துப் பின்னூட்டத்தில் கேள்வி கேட்பதை முதலில் நிறுத்துங்கள். கோடி நமஸ்காரம்!
////Blogger Thanjavooraan said...
ReplyDelete"செத்தபின் உயிர்கள் சேர்வது எங்கே?
தெரியும் வரை தெய்வத்தை நம்பு நீ!"
நெஞ்சில் ஆழப் பதிந்த வரிகள். பவித்திரமான பாரம்பரியத்தில் வந்த கவிஞன் இடையில் சிலகாலம் 'வனவாசம்' சென்ற பாவத்தைப் போக்க, முழுக்க முழுக்க ஆன்மிகச் சிந்தனையில் தோய்ந்து வாழ்ந்த காலத்தில் எழுந்த கவிதை இது. கவிஞனின் 'அர்த்தமுள்ள இந்து மதம்' கட்டுரைகளை மட்டும் படித்தால் போதும் அத்தனை ஆன்மிக நூல்களையும் படிப்பதற்குச் சமம். நம் காலத்தில் வாழ்ந்து மறைந்து போன அந்த மகாகவியை நாம் மறக்க முடியுமா?/////
உண்மைதான் கோபாலன் சார்! அர்த்தமுள்ள இந்து மதம்' கட்டுரைகளில் எல்லாவற்றையும் எழுதியுள்ளார். உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி!
////Blogger ஜி ஆலாசியம் said...
ReplyDeleteசாத்திரமும் சரித்திரமும் படிப்பாய்!
நாத்திகமும் அதன்விளை ஆத்திரமும்
பாத்திறம் வளர்க்க பயன்படா!
ஆத்திகம் போற்று ஆகவே
அரும் நான்மறை ஓத்து
தருமத்தோடு தவத்தினை நோக்கு
கருமத்தோடு காட்சிப்பிழை போக்கு
நம்பிக்கை கொள் தும்பிக்கையான்
கற்பக மலர னையோன்
பொற்பதம் போற்று அதனை
நற்தமிழ் கவிதையாலே சாற்று!...
கடவுளைப் போற்றுக் கவிஞனாவாய்!
கடந்து வுள்போ காட்சிக்காண்பாயென
அற்புத வழியதை அறியச்செய்த
சொற்ப்பொருட் நிறை கவிக்கோவே!
வாழிநின் புகழ் வாழியவே!!!/////
கவிதை வரிகளில் திறம்பட/நயம்பட எழுதியுள்ள பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteகவியரசரின் சத்தியக் கவிதையை போற்ற வார்த்தைகளே இல்லை!!!.
///நாத்திகக் கூடு நரிக்கு மட்டுமே!////
////மானிடம், தெய்வதம் வடித்த பொன்னிழை/////
பொட்டில் அறைந்தாற்போன்ற வரிகள். கவியரசர் ஆணித்தரமாக ஒவ்வொரு வார்த்தையையும் செதுக்கியிருக்கிறார்.
////ஜனனம் பற்றிய தத்துவம் எழுதுக!
மரணம் பற்றிய மயக்கம் எழுதுக!/////
எடுக்க எடுக்க குறையாத நவரத்தினச் சுரங்கம் இந்த வரிகள். எவ்வளவு ஆழமான பொருள்!. மிக அருமையான அற்புதக் கவிதையைப் படிக்கத் தந்தமைக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.//////
மனம் திறந்த உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!
////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுருவிற்கு வணக்கம்
கடவுளை நம்பினால் கவிஞ்ன் ஆகலாம்
கவியரசர் கண்ணதாசன். அற்புதமான
இலக்கிய் சோலை.
நன்றி////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger அய்யர் said...
ReplyDeleteகத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
எத்தனையோ சித்தருங்க சொல்லியாச்சு
திரைப்பாடல் ஒன்று இப்படி
தெரு முழக்கம் செய்தது
கவிஞர் காலத்து சனங்களே அவர்
கருத்துக்களை ஏத்துக்கலே
பகுத்து அறிவை அறியாமையினால்
செகுத்து பார்க்காத பாசறைகள்
கருவரையில் இருக்கும் கடவுளை விட கல்றையில் உள்ள பிணங்கள் மீது
நம்பிக்கை வைக்கும் போது
நாம் மட்டும் என்னத்த சொல்வது
இந்தியாவின் பிறபகுதியில் வசிக்கும்
இவ்வகுப்பறை தோழர் மைனருக்கு
மரம் தான் மரம் தான் மறந்தான் என
மரத்தை பற்றிய தன் கவிதையில்
வைரமுத்து மனிதனை மரம் என்றதால்
வள்ளுரையே முறைத்து கேட்பார்
இந்த பதிவினை dedicate செய்கிறோம்
இன்முகத்துடன் அவரும் ஏற்றுக் கொள்ள
கடவுள் சிலையை கல் என்பவர்
கடற்கரை சிலையை காப்பிய சின்னம்
என சொல்வது வேடிக்கைதான் இது
எல்லாம் அங்கு சக"ஜமா"?
இந்த வாத்தியாரின் பாடலினை
இன்று வலமாக சுழல விடுகிறோம்
கடவுள் ஏன் கல்லானான்? மனம்
கல்லாய்ப் போன மனிதர்களாலே
கொடுமையைக் கண்டவன் கண்ணையிழந்தான் - அதைக்
கோபித்துத் தடுத்தவன் சொல்லையிழந்தான்
இரக்கத்தை நினைத்தவன் பொன்னையிழந்தான்
எல்லோர்க்கும் நல்லவன் தன்னையிழந்தான்
நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி - அது
நீதி தேவனின் அரசாட்சி
அத்தனை உண்மைக்கும் அவன் சாட்சி
- மக்கள் அரங்கத்தில் வராது அவன் சாட்சி
சதிச் செயல் செய்தவன் புத்திசாலி - அதை
சகித்துக் கொண்டிருந்தவன் குற்றவாளி
உண்மையைச் சொல்பவன் சதிகாரன் இது
உலகத்தில் ஆண்டவன் அதிகாரம் -///////
பதிவிற்கு சம்பந்தமானதை மட்டும் சொல்லலாமே! இடையில் மைனர், வைரமுத்து என்று எதற்கு எல்லோரையும் வம்பிற்கு இழுக்கிறீர்கள்? உங்களால் தொடர்ந்து சும்மாவே இருக்க முடிவதில்லை. சுழல விடுவதும், சுற்ற விடுவதும் வாடிக்கையாய் போய்விட்டது!:-))))
Sir, pl excuse for asking questions. without asking questions , we can't be clarified. We r asking questions in some eager. I hope you understand.
ReplyDelete/////Blogger KJ said...
ReplyDeleteSir, pl excuse for asking questions. without asking questions , we can't be clarified. We r asking questions in some eager. I hope you understand./////
சந்தேகம் என்ற பெயரில் உங்கள் ஜாதகத்தை வைத்தே தினமும் கேளிவி கேட்டுக்கொண்டிருந்தால், எப்படி?
வகுப்பறைக்கு தினமும் 4,000 பேர்கள் வந்து செல்கிறார்கள்,
தினமும் 50 மின்னஞ்சல்கள் வருகின்றன
அததனை பேர்களுக்கும் ஜாதகம் பார்த்துப் பலன்களை எழுதுவதற்கோ அல்லது அவர்கள் தங்களுடைய ஜாதகத்தை வைத்துக் கேட்கும் கேள்விகளுக்கு (Doubts) பதில் சொல்வதற்கோ தற்சமயம் எனக்கு நேரமில்லை!
பாடங்களைக் கவனமாகப் படியுங்கள்
உங்கள் ஜாதகத்தை அலசும் திறமை உங்களுக்கே வரும்!
அல்லது கேள்வி பதில் பகுதியை முன்பு ஒருமுறை நடத்தி 100 பேர்களின் கேள்விகளுக்கு (மொத்தம் 400 ற்கும் மேற்பட்ட கேள்விகள்) பதில் சொன்னேன். அதை எல்லாம் படியுங்கள். உங்கள் சந்தேகங்கள் தீர்ந்து விடும். அல்லது அதுபோன்று இன்னொரு கேள்வி பதில் செஷன் பின்னால் வரும் அப்போது உங்கள் கேள்விகளைக் கேளுங்கள். தினமும் மின்னஞ்சல்கள் மூலமாகவும், பின்னூட்டங்கள் மூலகமாகவும் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்!!!!!
அன்புடன்
வாத்தியார்
///இடையில் மைனர், வைரமுத்து என்று எதற்கு எல்லோரையும் வம்பிற்கு இழுக்கிறீர்கள்? ///
ReplyDeleteவம்புக்கு இழுக்க வில்லை
வகுப்பிற்கு(ள்) இ(ரு)ழுக்கின்றேன்
///உங்களால் தொடர்ந்து சும்மாவே இருக்க முடிவதில்லை. சுழல விடுவதும், சுற்ற விடுவதும் வாடிக்கையாய் போய்விட்டது!///
வாடிக்கையாய் மட்டும் போகவில்லை
வாடி... "கை" போனது. அதனாலே
சுழல விடுகிறோம் பாடலினை(உலகம்)
சுழலாமல் ஒலி வராது தானே