......................................................................................................
Doubt: எவையெல்லாம் மாயமாகப் போகும்?
Doubts: கேள்வி பதில் பகுதி ஐந்து!
நீங்களும் உங்கள் சந்தேகங்களும் - பாடம் ஐந்து!
Question & answer session
கேள்வி பதில் வகுப்பு
-------------------------------------------------------
email No.19
சஞ்சனா
Ayya,
Nantri intha kelvi pathil sessionku.Ithu varai nadantha padangal
thavira matravatril irunthu doubts ketkalama?
வந்துள்ள நோய்களுக்கு (சந்தேகங்களுக்கு) மட்டும் இப்போது மருந்து கேளுங்கள். வரப்போகும் நோய்களைப் பின்னால் (அவைகள் வரும்போது) பார்த்துக் கொள்வோம்!
En Kelvikal
1. Lagna Suya Paral -in artham enna?
லக்கினம், மற்றும் ஏழு கிரகங்களுக்கு உரிய சுயபரல் அட்டவணைகளைத் (மொத்தம் 56) தயார் செய்து, கூட்டினால்தான் மொத்த அஷ்டகவர்க்கப்பரல்கள் கிடைக்கும். அதற்காகத் தயாரிக்கப்படும் அட்டவணைகளில் லக்கின சுய வர்க்கப்பரல் அட்டவணையும் ஒன்று. அதற்குத் தனியாகப் (லக்கின சுய வர்க்கப்பரல்களுக்கு) பலன் எதுவும் கிடையாது!
2.Sani(saturn) suya Paral kammiyaga irunthal enna palan?
Thangal athai padathil kura villai.Athu "0" aga irunthal ayul balam kuraiva?
En ketkiren enral Gandhiyin sani suya paral "0".Obama vin Jathagathilum
athu "0"...Neengal athu patri elai marai kaiyaga kuriyathu pol ennaku
patathu...
சனி தன்னுடைய சுயவர்க்கத்தில் 0 பரல்களுடன் இருந்தால், ஜாதகன் வேலைக்குச் செல்லமாட்டான்.அல்லது அவன் விரும்பும் வேலை கிடைக்காது. அத்துடன் கோள்சாரச் சனி சுற்றிவரும்போது, அதன் பலனைத் துல்லியமாகப் பார்க்க இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை உதவும். அத்துடன் சனி ஆயுள் காரகன் என்பதால் எட்டாம் வீட்டிற்கு இந்தச் சனியின் சுயவர்க்க அட்டவணை பெரிதும் உதவியாக இருக்கும். அது பற்றி எட்டாம் வீட்டைப் பற்றிய பாடம் நடத்தும்போது தெரிந்துகொள்ளுங்கள்.
3.Suriyanal Asthamanam(combust) ana grahamgal weak agi vidum endru
padithen..Avai "Ucham" , Moola Trikonam" allathu Varkotham adainthu
irunthalum weaka thaan consider seiya venduma?
நீங்கள் நினைக்கும் கிரகம் அம்சத்தில் அஸ்தமனம் ஆகாமல் இருந்தால் பலன் உண்டு. அங்கேயும் ஆகியிருந்தால், பலன் இல்லை. அல்லது வேறு அமைப்புக்களை வைத்து, அடி வாங்கியும் (அதாவது அஸ்தமனம் ஆகியும்) எழுந்து உட்கார்ந்திருந்தால், (குறைவான) பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.
-----------------------------------------------------
email No.20
பாலகுமாரன்.ஏ.ஜி
Dear Sir,
Can
you clarify my doubt please. If a padagathipathi or a normal planet is
conjuncted with lagnathipathi or Yogakaraka then the particular planet
will also act as yogakaraka or not?
Thanks in advance.
Regards,
Balakumaran A G
பெருங்காய டப்பாவிற்குள் போட்டு வைக்கும் பொருள் எப்படிப் பெருங்காயமாகும்? பெருங்காயத்தின் வாசம் மட்டும்தானே அதனுடன் சேரும். அது பெருங்காயம் ஆகாதல்லவா? அதுபோல யோககாரனுடன் சேர்ந்ததற்காக, சேரும் கிரகம் யோககாரகனுடைய வேலைகளைச் செய்யாது.
----------------------------------------------------
email No.21
எஸ்பி.கருப்பையா
அய்யா வணக்கம்
இராசிக்கு 12ல் அல்லது லக்கினத்திற்கு 12ல் கேது இருந்தால் மோட்சம் என்கிறார்களே இதைபற்றி கூறவும்
இப்படிக்கு
SPK KKDI
எல்லாம் மாயை (illusion). சொத்து, சுகம், மனைவி, மக்கள், ஐ.டி கார்டு, ரேசன் கார்டு, வோட்டர்ஸ் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், வங்கி வைப்பு நிதிகள், சொத்துப் பத்திரங்கள், வாங்கிய விருதுகள் என்று அனைத்தும் ஒரு நாள் மாயமாகப் போகிறது. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு (including pending civil/property cases in the court) மனிதன் ஒரு நாள் மாயமாகப் போகிறான்.
அதைத்தான் கவியரசர் இப்படிச் சொன்னார்:
”ஆடிய ஆட்டமென்ன?
பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன?
திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால்
கூடவே வருவதென்ன…?
வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?”
சிலர் இந்த உலக அவலங்கள் வேண்டாம். அடுத்த பிறவி வேண்டாம் என்பார்கள். அடுத்த பிறவி வேண்டாம் என்றால், இறைவன் திருவடிகளைச் சென்றடைய வேண்டும். அந்த நிலையைத்தான் மோட்சமடைவது என்பார்கள். சுருக்கமாகச் சொன்னால் பிறவியில் இருந்து விடுதலை அடைவதுதான் மோட்ச நிலை
Liberation from the cycle of reincarnation and from the illusion of maya
ஜாதகத்தில் ஐந்தாம் வீடு முற்பிறவியைக் குறிக்கும். பன்னிரெண்டாம் வீடு அடுத்த பிறவியைக் குறிக்கும். அந்த வீட்டில் (அதாவது 12ல்) கேது இருந்தால் அடுத்த பிறவி இல்லையென்பார்கள். படித்திருக்கிறேன்.
ஆனால் அனுபவம் இல்லை; அனுபவித்ததில்லை.உறுதியாகச் சொல்ல முடியவில்லை:-))))
----------------------------------
email No.22
அரியப்பன் சாத்தப்பன்
வணக்கம் அய்யா,
1. வக்கிரக கிரகம் பலன் மாறுவதற்குக் காரணம் என்ன?
பாகற்காய் ஏன் கசக்கிறது? என்பதைப்போல் இருக்கிறது உங்கள் கேள்வி! ஒரு மனிதன் வக்கிரபுத்தி வந்தால் என்ன செய்கிறான். அண்ணன் தம்பி சொத்துக்களைத் தனதாக்க முயற்சிக்கிறான். அடுத்தவன் மனைவிக்கு ஆசைப்படுகிறான். அதிக வக்கிரம் பிடித்தால் பொது இடத்தில் குண்டு வைக்கிறான். அதைப்போய் ஏனென்று கேட்க முடியுமா? வக்கிரத்தின் தன்மையே அதுதான்.
அதுபோல வக்கிரம் பெற்ற கிரகங்கள், அதிகமாகத் தீமைகளைச் செய்யா
விட்டாலும், நன்மை செய்வதை நிறுத்திவிடும். தீய கிரகங்கள் வக்கிரம் பெற்றால், அதிகத் தீமைகளைச் செய்யும். சும்மா சுமப்பதை, ஜாதகன் நனைத்துச் சுமக்க வேண்டும். அறுந்த செருப்பைக் கையில் தூக்கிக் கொண்டு கொதிக்கும் வெய்யிலில் நடக்க நேரிடும்!
2. இரண்டு வீட்டிற்குச் சொந்தமான கிரகம் இரண்டும் பரிவர்த்தனை பெறும்போது,தான் இல்லாத வீட்டு பலனைத் தருமா?(இதில் நல்ல வீடும், கெட்ட வீடும் இருக்கின்றபோது)
அவர் இல்லாத வீட்டின் பலனை, அங்கே வந்து அமர்கிறவன் தருவான். கெட்டது எதுவும் மிஸ்ஸாகாது. கவலைப் படாதீர்கள்
3, இரு நீச்ச கிரகம் பரிவர்த்தனை பெற்றால் நல்ல பலன் உண்டா? அருள்கூர்ந்து எடுத்துக்காட்டுடன் விளக்கவும்.
இரண்டு நீச கிரகங்கள் எப்படி பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்? ஒரு நீச கிரகத்தின் எதிர்வீடு அதன் உச்ச வீடு. நீச சந்திரனுக்கு மட்டும்தான் மற்றொரு நீசனுடன் பரிவர்த்தனை செய்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. அப்படியே பரிவர்த்தனை செய்து கொண்டால் இருவரின் நீசத்தன்மையும் காணாமல் போய்விடாதா?
எடுத்துக்காட்டுடன் நீங்கள் விளக்குங்கள். முடியாவிட்டால், இந்தக் கேள்வி பதில் வகுப்பு முடியும்வரை பெஞ்சு மேல் ஏறி நில்லுங்கள்
நல்ல வாய்ப்புத் தந்தற்கு நன்றி,
அரிபாய்.
வாழ்க வளமுடன்.
இன்னும் வாய்ப்பு முடியவில்லை. பெஞ்சு மேல் ஏறி நிற்கும் வாய்ப்பு பாக்கி உள்ளது!:-)))
----------------------------------------
(தொடரும்)
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
arumayana kelvi pathilgal asiriyarukku nandri
ReplyDeleteகுரு அவர்களுக்கு வணக்கம்
ReplyDeleteநல்ல கேள்வி பதில்
12 கேது இருக்க மறுபிறவி இல்லை
கருது நன்றாக உள்ளது
வணக்கம் ஐயா,
ReplyDelete////3.Suriyanal Asthamanam(combust) ana grahamgal weak agi vidum endru padithen..Avai "Ucham" , Moola Trikonam" allathu Varkotham adainthu irunthalum weaka thaan consider seiya venduma?
நீங்கள் நினைக்கும் கிரகம் அம்சத்தில் அஸ்தமனம் ஆகாமல் இருந்தால் பலன் உண்டு. அங்கேயும் ஆகியிருந்தால், பலன் இல்லை. அல்லது வேறு அமைப்புக்களை வைத்து, அடி வாங்கியும் (அதாவது அஸ்தமனம் ஆகியும்) எழுந்து உட்கார்ந்திருந்தால், (குறைவான) பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு////
அஸ்தமனம் ஆன கிரகம் மறைந்திருந்தாலோ அல்லது கிரகயுத்தத்தில் இருந்தாலோ அக்கிரகம் மேலும் தன் பலமிழக்குமா? அல்லது எதிர்மறையாக நல்ல பலன்களை தருமா? ஐயா...
சனி 5ம் இடத்திற்கு
ReplyDelete12ல் சுக்கிரன்
சும்மா கற்பனை செய்து பார்த்தோம்...
மீள் வாசிப்பு வாய்ப்புக்கு நன்றி ஐயா!
ReplyDeleteஅருமையான மீள் பதிவை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி ஐயா.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete///அய்யர் said...
ReplyDeleteசனி 5ம் இடத்திற்கு
12ல் சுக்கிரன்
சும்மா கற்பனை செய்து பார்த்தோம்...///
"அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன் ........."
என்று பாடிக்கொண்டிருப்பார்கள்
ஒரு ஜாதகத்தில் சனி நீசமாகி சுயபரல் 0 என இருந்து அம்சத்திலும் சனி நீசமானால் .வேலையும் ஆயுளும் எப்படி இருக்கும்.
ReplyDeleteராசியுலும் அம்சத்திலும் நீசமான 0 பரல் உள்ள அதே சனியை அம்சத்தில் நீசமான சனியை அம்சத்திலேயே இன்னொரு நீச கிரகம் (சூரியன்)பார்த்தால் .நீசனை நீசன் பார்ப்பதால் நீச பங்கம் என எடுத்துக் கொள்ளலாமா அய்யா.
தேமொழி said...
ReplyDelete///அமைதியில்லாத நேரத்திலே
அந்த ஆண்டவன் என்னையே படைத்து விட்டான்
நிம்மதி இழந்து நான் அலைந்தேன் ........."
என்று பாடிக்கொண்டிருப்பார்கள்///
இது கற்பனை தானே தோழி...
இங்கும் ஜெமினி கணேசன் என்றால்
ரசிக்க வேண்டியது தானே..
10ல் - கடகத்தில் குரு
சனி துலாத்தில்
6க்குரிய செவ் 8 ல் மறைவு
அடுத்த (சீனில்...)
இப்படி ஒரு சிந்தனை
///அய்யர் said...
ReplyDeleteஇது கற்பனை தானே தோழி...///
துலா லக்கினம் ஜாதகம்....
பத்தில் ...கடகத்தில் குரு உச்சம்
(வெற்றி மீது வெற்றி வந்து என்னைச்சேரும் ...
அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் குருவைச்சேரும்)
சனி லக்கினத்தில் ....துலாத்தில் உச்சம்
(நூறாண்டு காலம் வாழ்க ...நோய் நொடியில்லாமல் வளர்க...
ஊராண்ட மன்னர் புகழ் போலே..உலகாண்ட புலவர் தமிழ் போலே)
ஆறுக்குரிய செவ்வாய்???? எட்டில் மறைவு?????
ஆறுக்குரியவர் குரு இல்லையா?
ஏழுக்குரியவர்தானே செவ்வாய்!!!
கேள்வி கேட்க ஆவலாக உள்ளது!!ஒரு நாளைக்கு குறைத்தது ஒரு நாலு கேள்வியாவது,யாரையாவது கேட்காவிட்டால் நமக்கு வேலையே ஓடாது!?
ReplyDeleteநான் பார்த்த ஒரு ஜாதகத்தில் புதன் "நீசம்,வக்கிரம்,அஸ்தமனம்" எப்படி இது சாத்தியம்?அதோடு "இரண்டு நீசபங்க ராஜயோகம்"
நபர் ஓகோ!!!முடிந்தால் பதில் கூறுங்கள்.
நமக்கு சூரியன் (ஒன்பதாம் இடம் ) நீசம். சுக்ரன் எட்டாம் இடம் நீசம். புதன் ஒன்பதில் வக்கிரம். செவ்வாய் பத்தில் ஆட்சி. பன்னிரெண்டில் கேது. மறு ஜென்மம் இல்லை என்பது உண்மையானால் , எல்லாம் ஜென்ம பாவங்களையும் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். முன் ஜென்மத்துக்கு ஐந்தில் சந்திரன். கும்ப லக்ன சனி குருவுடன் புதன் வீட்டில் , நீசமைடந்த சுக்ரனோடு. எப்படி நம்ம ஜாதகம்?! சனி ஆயுளை கொடுத்தால் , கேது ஞானத்தை கொடுப்பார். முப்பது வயதில் அறுபது வயது ஞானம். 337 டானிக் இப்போதெல்லாம் மூன்று வேலையும் மூன்று பாட்டில் குடித்து வருகிறேன். அம்சமாவது கொஞ்சம் பராவயில்லை என்றால் அங்கேயும் லக்னத்தில் ராகு , ஏழில் கேது. ஏதோ இரண்டாம் இடம் சுக்ரனும் , ஐந்தாம் இடத்து உச்சம் பெற்ற சந்திரனும் கொஞ்சம் காப்பர்றுகிரார்கள். என்னோவோ போங்க , கணவர்தான் சொல்வார் , எதுக்கு classroom lessons நைட்டு எல்லாம் சாப்பிடனும் , அப்புறம் 337 tonic கை பகலெல்லாம் மடக்கு மடக்குனு குடிக்கணும் என்று. ஆர்வம் யாரை விட்டது. கேது தான் இதை கொடுத்தவர் போல தெரிகிறது.
ReplyDelete/////Blogger arul said...
ReplyDeletearumayana kelvi pathilgal asiriyarukku nandri////
நல்லது. நன்றி நண்பரே!
//////Blogger Udhaya Kumar said...
ReplyDeleteகுரு அவர்களுக்கு வணக்கம்
நல்ல கேள்வி பதில்
12 கேது இருக்க மறுபிறவி இல்லை
கருத்து நன்றாக உள்ளது/////
உண்மை எப்போதும் நன்றாகத்தான் இருக்கும்!
//////Blogger R.Srishobana said...
ReplyDeleteவணக்கம் ஐயா,
////3.Suriyanal Asthamanam(combust) ana grahamgal weak agi vidum endru padithen..Avai "Ucham" , Moola Trikonam" allathu Varkotham adainthu irunthalum
weaka thaan consider seiya venduma?
நீங்கள் நினைக்கும் கிரகம் அம்சத்தில் அஸ்தமனம் ஆகாமல் இருந்தால் பலன் உண்டு. அங்கேயும் ஆகியிருந்தால், பலன் இல்லை. அல்லது வேறு அமைப்புக்களை வைத்து, அடி வாங்கியும் (அதாவது அஸ்தமனம் ஆகியும்) எழுந்து உட்கார்ந்திருந்தால், (குறைவான) பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு////
அஸ்தமனம் ஆன கிரகம் மறைந்திருந்தாலோ அல்லது கிரகயுத்தத்தில் இருந்தாலோ அக்கிரகம் மேலும் தன் பலமிழக்குமா? அல்லது எதிர்மறையாக நல்ல பலன்களை தருமா? ஐயா...////
மேலும் பலம் இல்லாமல் இருக்கும்!
/////Blogger அய்யர் said...
ReplyDeleteசனி 5ம் இடத்திற்கு
12ல் சுக்கிரன்
சும்மா கற்பனை செய்து பார்த்தோம்...////
கற்பனைக்கென்ன காசா- பண்மா? வேண்டிய மட்டும் செய்யுங்கள் விசுவநாதன்!
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteமீள் வாசிப்பு வாய்ப்புக்கு நன்றி ஐயா!////
புதுமுகங்களின் சந்தேகங்கள் தீரட்டும் என்பதற்காவே மீள்பதிவுகள்!
////Blogger Parvathy Ramachandran said...
ReplyDeleteஅருமையான மீள் பதிவை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி ஐயா./////
நல்லது. நன்றி சகோதரி!!
/////Blogger thanusu said...
ReplyDeleteஒரு ஜாதகத்தில் சனி நீசமாகி சுயபரல் 0 என இருந்து அம்சத்திலும் சனி நீசமானால் .வேலையும் ஆயுளும் எப்படி இருக்கும்./////
எட்டாம் அதிபதிக்கும், பத்தாம் அதிபதிக்கும் என்ன வேலை என்று தெரியுமா? தெரியாதா?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///// ராசியுலும் அம்சத்திலும் நீசமான 0 பரல் உள்ள அதே சனியை அம்சத்தில் நீசமான சனியை அம்சத்திலேயே இன்னொரு நீச கிரகம் (சூரியன்)பார்த்தால் .நீசனை நீசன் பார்ப்பதால் நீச பங்கம் என எடுத்துக் கொள்ளலாமா அய்யா./////
எடுத்துக்கொள்ள முடியாது?கூடாது!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
////Blogger Ananthamurugan said...
ReplyDeleteகேள்வி கேட்க ஆவலாக உள்ளது!!ஒரு நாளைக்கு குறைத்தது ஒரு நாலு கேள்வியாவது,யாரையாவது கேட்காவிட்டால் நமக்கு வேலையே ஓடாது!?
நான் பார்த்த ஒரு ஜாதகத்தில் புதன் "நீசம்,வக்கிரம்,அஸ்தமனம்" எப்படி இது சாத்தியம்?அதோடு "இரண்டு நீசபங்க ராஜயோகம்"
நபர் ஓகோ!!!முடிந்தால் பதில் கூறுங்கள்./////
அந்த நபரின் பெயர் ஆவன்னா..முனாவா?
நபர்தான் ஓகோ என்று இருக்கிறாரே? பிறகு என்ன தேவை? பாண்டியில் மிலிட்டரி சரக்கு கிடைக்குமல்லவா? அடித்துவிட்டு கேள்விகளை மறக்கச் சொல்லுங்கள்!:-)))))
////Blogger கலையரசி said...
ReplyDeleteநமக்கு சூரியன் (ஒன்பதாம் இடம் ) நீசம். சுக்ரன் எட்டாம் இடம் நீசம். புதன் ஒன்பதில் வக்கிரம். செவ்வாய் பத்தில் ஆட்சி. பன்னிரெண்டில் கேது. மறு ஜென்மம் இல்லை என்பது
உண்மையானால் , எல்லாம் ஜென்ம பாவங்களையும் இந்த ஜென்மத்தில் அனுபவிக்க வேண்டும். முன் ஜென்மத்துக்கு ஐந்தில் சந்திரன். கும்ப லக்ன சனி குருவுடன் புதன் வீட்டில் , நீசமைடந்த சுக்ரனோடு. எப்படி நம்ம ஜாதகம்?! சனி ஆயுளை கொடுத்தால் , கேது ஞானத்தை கொடுப்பார். முப்பது வயதில் அறுபது வயது ஞானம். 337 டானிக் இப்போதெல்லாம்
மூன்று வேலையும் மூன்று பாட்டில் குடித்து வருகிறேன். அம்சமாவது கொஞ்சம் பராவயில்லை என்றால் அங்கேயும் லக்னத்தில் ராகு , ஏழில் கேது. ஏதோ இரண்டாம் இடம் சுக்ரனும் ,
ஐந்தாம் இடத்து உச்சம் பெற்ற சந்திரனும் கொஞ்சம் காப்பர்றுகிரார்கள். என்னோவோ போங்க , கணவர்தான் சொல்வார் , எதுக்கு classroom lessons நைட்டு எல்லாம் சாப்பிடனும் ,
அப்புறம் 337 tonic கை பகலெல்லாம் மடக்கு மடக்குனு குடிக்கணும் என்று. ஆர்வம் யாரை விட்டது. கேது தான் இதை கொடுத்தவர் போல தெரிகிறது./////
337டானிக் இலவசம்தானே? ஒரு ஃபுல் டிரக் லோடை வாங்கி வீட்டில் வைத்துக்கொள்ளூங்கள்!:-))))
SP.VR. SUBBAIYA said...
ReplyDelete//அந்த நபரின் பெயர் ஆவன்னா..முனாவா?//
கண்டிப்பாக நானில்லை.எனக்கு புதன் ஆட்சி மிதுனத்தில் சூரியனுடன்,நான் சொன்னவர் பிரபலத்துடன்,ப்ராபலத்தையும் சந்திகின்றார்.அவர் சரக்கடிக்கிற சாக்ரடிஸ் இல்லை.
Aiyya Vanakkam ,
ReplyDeleteParivarthanail 5 allathu 9 idam irunthal athanudam parivathanai agum idam namai payakkum ( Ex : 5 & 4 , soththu sugam , melpadippu ippadi ) , ithil 5 am idam 9 idam intha irandum parivarthanai aagi irunthal entha mathri nanmaigal kidaikkum ,.
///கற்பனைக்கென்ன காசா- பண்மா? வேண்டிய மட்டும் செய்யுங்கள் விசுவநாதன்///
ReplyDeleteகாசு பணம் என்றால் பரவாயில்லை
கற்பனை என்பது தான் சிரமம்...
////Blogger Ananthamurugan said...
ReplyDeleteSP.VR. SUBBAIYA said...
//அந்த நபரின் பெயர் ஆவன்னா..முனாவா?//
கண்டிப்பாக நானில்லை.எனக்கு புதன் ஆட்சி மிதுனத்தில் சூரியனுடன்,நான் சொன்னவர் பிரபலத்துடன்,ப்ராப்ளத்தையும் சந்திகின்றார்.அவர் சரக்கடிக்கிற சாக்ரடிஸ் இல்லை.////
பிராப்ளம் இல்லை என்றால் வாழ்க்கை சுவைக்காது! சஸ்பென்ஸ் இல்லை என்றால் படம் சப்பையாகிவிடும்!
////Blogger Soundarraju said...
ReplyDeleteAiyya Vanakkam ,
Parivarthanail 5 allathu 9 idam irunthal athanudam parivathanai agum idam namai payakkum ( Ex : 5 & 4 , soththu sugam , melpadippu ippadi ) , ithil 5 am idam 9 idam intha irandum parivarthanai aagi irunthal entha mathri nanmaigal kidaikkum ,.////
இரண்டு திரிகோண் இடங்களின் அதிபதிகள் பரிவர்த்தனையாகும்போது ஜாதகனுக்கு எல்லா நன்மைகளும் கிடைக்கும். எல்லாம் என்பதில் எல்லா பாக்கியங்களும் அடக்கம்!
////Blogger அய்யர் said...
ReplyDelete///கற்பனைக்கென்ன காசா- பண்மா? வேண்டிய மட்டும் செய்யுங்கள் விசுவநாதன்///
காசு பணம் என்றால் பரவாயில்லை
கற்பனை என்பது தான் சிரமம்.../////
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை!