மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

4.11.11

Astrology வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

----------------------------------------------------------------------------------------
Astrology வைத்தீஸ்வரன் என்ற "God of medicine"

ஆன்மிகம் cum ஜோதிடக் கட்டுரை!
---------------------------------------------------------
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. ஒருவித துணிச்சல் உண்டு.

பணம் வைத்திருப்பவன் பணம் நம்மைக் காப்பாற்றும் என்று எதற்கும் கவலைப் படாமல் தெனாவெட்டாக இருப்பான். பணம் இல்லாதவன் நம்மைப் படைத்தவன் இருக்கிறான். அவன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கை யோடு துணிச்சலாக இருப்பான். மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்பான்.

அதெல்லாம் பொது நம்பிக்கை. மனித குணம்.

ஆனால் ஜாதகப்படி நேரம் சரியில்லாத போது எது நடக்கும் எப்படி நடக்கும் என்றே சொல்ல முடியாது.

நீங்கள் நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது, உங்களுடைய வாகனத்தை, எதிரில் வரும் டிப்பர் லாரிக்காரன் முத்தமிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? யோசித்துப் பாருங்கள். கண நேரத்தில் உங்கள் உதட்டைச் சிவக்க வைத்து விடுவான்.

‘spot out' என்றால் பிரச்சினை இல்லை. சிவலோகம் அல்லது வைகுண்டம் போய்விடலாம். குற்றுயிரும் குளை உயிருமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டால் என்ன செய்ய முடியும்?

இன்றையத் தேதியில் சாதாரண சிகிச்சை என்றால், வங்கி இருப்பை வழித்துக் கொடுக்க வேண்டும். சீரியசான சிகிச்சை என்றால் சொத்தை எழுதிக் கொடுக்க வேண்டும்!

அதிர்ஷ்டம் வாசல் வழியாகத்தான் வரும். ஆனால் துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வளியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.

“அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.

அதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.

தீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகமே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது.

ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள். தினமும் இறைவனை வழிபடுங்கள். குறிப்பாக விநாயகப் பெருமானை வழிபடுங்கள். அவர்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் - குளக்கரை, அரசமரத்தடி என்று எங்கும் இருக்கிறார்.

27 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் ஜன்ம நட்சத்திர நாள் அன்று சிவன் கோவிலுக்குச் சென்று சிவபெருமானை அர்ச்சித்து வழிபடுங்கள். நம்பிக்கையோடு மனம் உருக வழிபடுங்கள்.

அந்த நம்பிக்கைதான் வழிபாட்டில் முக்கியம்!
----------------------------------------------------------------------
சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் என்னும் சிவஸ்தலம், இரண்டு விதங்களில் முக்கியமானது.

பார்த்தால் அசரவைக்ககூடிய பிரம்மாண்டமான கோவில் உள்ளது.

அங்கே உறைகின்ற சிவனாருக்கு, வைத்தியநாதர் என்று பெயர். நோயால் அவதிப்பட்டு, தன்னிடம் அடைக்கலமாக வரும் பக்தர்களுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியர் அவர்! Fees எதுவும் வாங்காத மருத்துவர் அவர். இந்திய மருத்துவக் கழகத்தின் (Medical Council of India) அனுமதியைப் பற்றிக் கவலைப் படாமல் வைத்தியம் பார்க்கின்றவர். Blood Test, Urine Test, ECG Test, CT Scan என்று நம்மிடம் பணம் பிடுங்கும் மருத்துவ பரிசோதனைகளுக்கெல்லாம் அவரிடம் வேலை இல்லை!

நம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.

இரண்டு அந்த ஊரில் உறையும் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உண்டு. அங்கார தோஷம் உள்ளவர்கள் அங்கே சென்று வழிபட வேண்டும்.

முருகப்பெருமான் முத்துக்குமாரசாமி என்ற பெயரில் அங்கே இருக்கிறார். அவரை வழிபட்டால் கிரகக் கோளாறுகளை எல்லாம் அவர் நீக்குவார்!

வைத்தீஸ்வரன் கோவில் எங்கே உள்ளது? எத்தனை தூரத்தில் உள்ளது? அதன் தலபுராணம் என்ன? அதன் முழுச் சிறப்பு என்ன? என்று தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களுக்கான பக்கம் இணையத்தில் உள்ளது. அதன் சுட்டியைக் கொடுத்துள்ளேன். இங்கே க்ளிக்கிப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

112 comments:

  1. அப்ப தன்வந்திரி என்பவர் யார் ? அவரும் மருத்துவக் கடவுள் என்கிரார்களே.

    எதையாவது நீங்கள் பொதுப்படுத்தும் முன் அவை வேறெங்கிலும் வேறுமாதிரி சொல்லப்பட்டிருக்கிறதா என்கிற ஆராய்ச்சியெல்லாம் செய்ததுண்டா ?
    :)

    ReplyDelete
  2. ///...துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வழியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.....///

    அந்த செக்யூரிட்டியாலேயும் வரும். இந்திரா காந்திக்கு அவரது செக்யூரிட்டியாலேயே துன்பம் வந்தது.....


    ////ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.////


    ஹையோ...இத என்னன்னு சொல்றது. நானே சனி தசை எப்ப முடியும்னு பார்த்துகிட்டு இருக்கேன். எனக்கு ஆறாவது வீட்டு அதிபதி புதனாச்சே. சனி தசை முடிந்தால் புதன் திசை ஆரம்பிக்குமே. அது முடியும்போது 70 வயது ஆகிவிடும். பிழைச்சி கிடந்தால் அதற்கடுத்து கேது திசை வரும். சுத்தம். :)


    நல்ல பதிவிற்கு நன்றி ஐயா, நான் வைதீஸ்வரன் கோயில் இருமுறை சென்றுள்ளேன் பள்ளியில் அழைத்துச் சென்றார்கள், ஒன்றும் விபரம் புரியாத வயசு எதுவும் நினைவில் இல்லை.

    ReplyDelete
  3. தங்களின் ஆன்மீகப் பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. நன்றி

    ReplyDelete
  4. அருமை..
    அற்புதம்..

    முருகா என இருமுறை அழை
    மூன்றாம் முறை அழைத்தால் ஓடி

    வருவான் குகன் என
    வாரியார் சுவாமிகள் சொல்வதை

    நினைவூட்டி வந்தது இன்றைய வகுப்பு
    நிகழ்ச்சி பதிவும் படமும்..

    இத்திருத்தலத்தில் நவகிரகங்கள்
    இன்றும் ஒரே வரிசையில் இருப்பதாக

    தகவல்.. அறிந்தவர்கள் மேல்அதிக
    தகவல் தரலாம்மாணவ நன்மணிகளுக்கு

    இன்பமே எந்நாளும் துன்பமில்லை என
    இன்றைய நாளிலும் வீரமுழக்கம் தரும்

    அப்பர் தேவாரத்தை உங்களுடன்
    அப்படியே பகிர்ந்து கொள்கிறோம்

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை அல்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
    "இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை"
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே

    ReplyDelete
  5. மிக்க நன்றி. ஆறாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டு அதிபதியாகவும் இருந்தால், அந்த அதிபதியின் பலன் எப்படி இருக்கும் ?

    ReplyDelete
  6. வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சிலமாதங்கள் முன்பு சென்றுவந்தேன் அன்னையும் அப்பனும் நம்மை அப்படி ஈர்க்கிறார்கள். அந்த விபூதியே போதும் சகல நோய்களையும் அடித்துவிரட்டுகிறது.

    //அதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.

    தீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகமே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது.

    ////

    சரியாக சொன்னீர்கள்.

    //நம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்.

    ....///கண்டிப்பாக..

    ஈசன் சிவனைப்பற்றிய பதிவு என்னையும் இங்கெ இழுத்துவந்துவிட்டது நீண்டநாளைக்குப்பிறகு...வாசிக்க கொடுத்துவச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. செய்த வினையிருக்க தெய்வத்தை நொந்தக்கால்
    எனும் வெண்பாவும் நினைவுக்கு வருகிறது.

    இருப்பினும் வைதீஸ்வரன் மீது நமது பக்தி நமது துன்பங்களை பொறுத்துக் கொள்ளும்
    மன நிலை தருகிறது என்பது வெள்ளிடை மலை.

    வைதீஸ்வரன் கோவில் நாயகி தையல் நாயகி போற்றி எனும்
    பாடல் தமிழ் வலைக் கவிதாயினி கவி நயா எழுதியிருக்கும்
    போற்றி பாடலைக் கேளுங்கள்.
    http://youtu.be/fZKCvJz242E

    மீனாட்சி

    ReplyDelete
  8. Guru Vanakkam,

    Thanks for the post. This kindled my childhood memories. Every year for summer holidays until my College days, I used to be in my village near Vaitheeswaran koil and use to visit this temple often. The bullock cart ride(Koondu Vandi) from my village to this place is alwyas in memory and longing for this. mmm...good old days.

    Ramadu.

    ReplyDelete
  9. //////Blogger கோவி.கண்ணன் said...
    அப்ப தன்வந்திரி என்பவர் யார் ? அவரும் மருத்துவக் கடவுள் என்கிரார்களே.
    எதையாவது நீங்கள் பொதுப்படுத்தும் முன் அவை வேறெங்கிலும் வேறுமாதிரி சொல்லப்பட்டிருக்கிறதா என்கிற ஆராய்ச்சியெல்லாம் செய்ததுண்டா ? :)//////

    விஜய், சூர்யாவைப் பற்றி எழுதினால் நீங்கள் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் பற்றிக் கேட்கிறீர்கள். கனியைப் பற்றி எழுதினால் நீங்கள் கல்மாடியைப் பற்றிக் கேட்கிறீர்கள். கார் பயணத்தைப் பற்றி எழுதினால், நீங்கள் விமானப் பயனத்தின் மேன்மையைக் கேட்கிறீர்கள். உங்களின் அறிவு பிரமிக்க வைக்கிறது!

    சிவன் டாக்டர் ரங்காச்சாரி மாதிரி அலோபதி மருத்துவர். தன்வந்திரி விஷ்ணுவின் அவதாரம். அவர் ஆயுர்வேத மருத்துவர். கேரளா மக்களுக்கு அவர் அருள் பாலிக்கின்றார். சிங்கைக்குக் கூப்பிட்டாலும் அவர் வருவார்.

    (Dhanvantari (Sanskrit: धन्वंतरि; also Dhanvanthari) is an Avatar of Vishnu from the Hindu tradition. He appears in the Vedas and Puranas as the physician of the gods (devas), and the god of Ayurvedic medicine. It is common practice in Hinduism for worshipers to pray to Dhanvantari seeking his blessings for sound health for themselves and/or others.)
    -------------------------------------------------------------------------
    பொதுப்படுத்து முன்பு எதையும் நான் ஆராய்வதில்லை! அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை. ஆட்கள் லாப்கள் எல்லாம் வைத்துச் செய்யலாம். அதற்குப் பணம், வேண்டும். இந்திய அரசு அல்லது சிங்கை அரசு மானியம் கொடுத்தால் செய்யலாம். நீங்கள் முயன்று வாங்கிக்கொடுங்கள். நாகையின் நுழைவாயிலில் உங்களுக்கு சிலை ஒன்று வைக்க ஏற்பாடு செய்கிறேன்!

    ReplyDelete
  10. Blogger தேமொழி said...
    ///...துன்பம் எப்படி வேண்டுமென்றாலும் வரும். கதவைச் சாத்தி வைத்திருந்தாலும், கதவு இடுக்கின் வழியாக வரும். சாவித் துவாரத்தின் வழியாக வரும். சாரளத்தின் வழியாக வரும். எப்படி வேண்டுமென்றாலும் வரும். எப்படி செக்யூரிட்டி போட்டிருந்தாலும் வரும். செக்யூரிட்டியைத் தட்டிப் படுக்க வைத்துவிட்டு வரும்.....///
    அந்த செக்யூரிட்டியாலேயும் வரும். இந்திரா காந்திக்கு அவரது செக்யூரிட்டியாலேயே துன்பம் வந்தது.....
    ////ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள்.////
    ஹையோ...இத என்னன்னு சொல்றது. நானே சனி தசை எப்ப முடியும்னு பார்த்துகிட்டு இருக்கேன். எனக்கு ஆறாவது வீட்டு அதிபதி புதனாச்சே. சனி தசை முடிந்தால் புதன் திசை ஆரம்பிக்குமே. அது முடியும்போது 70 வயது ஆகிவிடும். பிழைச்சி கிடந்தால் அதற்கடுத்து கேது திசை வரும். சுத்தம். :)
    நல்ல பதிவிற்கு நன்றி ஐயா, நான் வைதீஸ்வரன் கோயில் இருமுறை சென்றுள்ளேன் பள்ளியில் அழைத்துச் சென்றார்கள், ஒன்றும் விபரம் புரியாத வயசு எதுவும் நினைவில் இல்லை./////////

    அதெற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். நஷ்ட ஈடு வழங்கப்பெற்றிருக்கும். அது என்னவென்று பாருங்கள்!

    ReplyDelete
  11. ///////Blogger Srinivasa Rajulu.M said...
    தங்களின் ஆன்மீகப் பணி மிகவும் போற்றுதலுக்கு உரியது. நன்றி//////

    நல்லது. உங்களின் பாராட்டிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. //////Blogger iyer said...
    அருமை..
    அற்புதம்..
    முருகா என இருமுறை அழை
    மூன்றாம் முறை அழைத்தால் ஓடி
    வருவான் குகன் என
    வாரியார் சுவாமிகள் சொல்வதை
    நினைவூட்டி வந்தது இன்றைய வகுப்பு
    நிகழ்ச்சி பதிவும் படமும்..
    இத்திருத்தலத்தில் நவகிரகங்கள்
    இன்றும் ஒரே வரிசையில் இருப்பதாக
    தகவல்.. அறிந்தவர்கள் மேல்அதிக
    தகவல் தரலாம்மாணவ நன்மணிகளுக்கு
    இன்பமே எந்நாளும் துன்பமில்லை என
    இன்றைய நாளிலும் வீரமுழக்கம் தரும்
    அப்பர் தேவாரத்தை உங்களுடன்
    அப்படியே பகிர்ந்து கொள்கிறோம்
    நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை அல்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
    "இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை"
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகினோமே//////

    பரவசத்துடன் எழுதப்பெற்றுள்ள உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  13. Good Morning Sir !! ..
    Sorry tamil fontla type panna mudile ..
    Naan unga classla most silent member but regular student thaan ..
    Couldn't stop myself from this comment ..
    Enakku ippo exalted 6th lord saturn's bhukthi start aayirku ..
    Thanks
    Sowmya

    ReplyDelete
  14. வைத்தீஸ்வரன் கோவிலும் அவர் தாம் அருளும் அறிய தந்தமைக்க் நன்றிகள் ஐயா!
    செவ்வாய் நாதனும் அங்கே இருப்பதால் அவசியம் அடுத்த முறை ஊருக்கு வரும் போது
    சென்று தரிஷனம் செய்யணும்... செவ்வாய் திசை நடப்பும் கூட..

    பதிவின் பத்திக்கு பத்தி அனுபவப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

    பதிவிற்கு நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  15. //////Blogger Shyam Prasad said...
    மிக்க நன்றி. ஆறாம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டு அதிபதியாகவும் இருந்தால், அந்த அதிபதியின் பலன் எப்படி இருக்கும் ?//////

    ஓட்டுனரே (Driver) நடத்துனராக (Conductor) இருந்தால் என்ன ஆகும்? அவரே சீட்டையும் (Ticket) வழங்கி வண்டியையும் ஓட்ட வேண்டும்
    அதேபோல இரண்டு காரகத்துவங்களுக்கு ஒரு கிரகம் அதிபதியானால், இரண்டையுமே அவர் செய்வார். பலன்கள் கலக்கலாக இருக்கும்
    கலக்கல் என்றால் Mixed என்று பொருள் கொள்க!

    ReplyDelete
  16. (அனுபவம் தான் வேறொன்றும் இல்லை)

    ஆறாம் வீட்டுக் காரன் திசை சுக்கிரன் முடியும் நேரத்தில் விமானத்தில் ஏற்றி நாடுகடத்தினான் அதுவும் நன்மைக்கே!
    எட்டாம் வீட்டுக் காரன் திசை ஆரம்பம் சுமாராக இருந்தாலும் பிற்பாதி அருமையாவே சென்றது... எட்டுக்குரியவன் அமர்ந்த இடம் ஐந்தில்...பெரும் பார்வை... குரு, சுக்கிரன்... ஐந்திற்குரிய செவ்வாய்... (வளர்பிறைச் சந்திரன்) அதனால் என்று நினைக்கிறேன்.. இருந்தும் சந்திர திசை செவ்வாய் புத்தியில் அம்மாவை சிவலோகம் அனுப்பி விட்டான்.

    இப்போது உச்ச செவ்வாய்... ஐந்திற்கு குரியவன், சனியோடு பரிவர்த்தனை, குருவும் சுக்கிரனும், சந்திரனும் செவ்வாய்க்கு கேந்திரத்தில்... திசை நன்றாக இருக்குமா? ஏனென்றால் அவனே பன்னிரெண்டிற்கும் உரியவன். இதற்கு இடையில் கோள்சார சனி பகவான்.. ஏழுக்கு (ஜாதகத்தில் 11 ம் இடம்..) செல்கிறான்...

    இப்போதே சிம்டம் தெரிகிறது... தாங்களும் வைத்தீஸ்வரனை பார்க்க சொல்லி விட்டீர்கள்.. செல்கிறோம்!
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  17. ////////Blogger ஷைலஜா said...
    வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சிலமாதங்கள் முன்பு சென்றுவந்தேன் அன்னையும் அப்பனும் நம்மை அப்படி ஈர்க்கிறார்கள். அந்த விபூதியே போதும் சகல நோய்களையும் அடித்துவிரட்டுகிறது.
    //அதுதான் கிரகங்களின் விளையாட்டு. சனி, ராகுவெல்லாம் பெளலிங் போட்டால் ‘மிடில் ஸ்டம்ப்’ பறக்கும். இரண்டாக ஒடிந்து பதினைந்தடி தூரத்தில் இருக்கும் விக்கெட் கீப்பரின் கைக்குப் போய்ச் சேரும்.
    தீய கிரகங்கள் என்றில்லை. நல்ல கிரகமே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது. ////
    சரியாக சொன்னீர்கள்.
    //நம்பிக்கையுடன் அவரைப் பார்த்து, மனம் உருகப் பிரார்த்தனை செய்தால் போதும். நோய்கள் ஓடிவிடும்..///கண்டிப்பாக..
    ஈசன் சிவனைப்பற்றிய பதிவு என்னையும் இங்கெ இழுத்துவந்துவிட்டது நீண்டநாளைக்குப்பிறகு...வாசிக்க கொடுத்துவச்சிருக்கேன்னு நினைக்கிறேன்.///////

    ஆகா, வாருங்கள் அன்புச் சகோதரி! ரெம்ப நாளாயிற்று, உங்களைப் பார்த்து. உங்களை அடிக்கடி வரவழைக்க சிவனைப் பற்றி எழுதினால் போதுமென்று தெரிந்து கொண்டேன். நன்றி!

    ReplyDelete
  18. //சிவன் டாக்டர் ரங்காச்சாரி மாதிரி அலோபதி மருத்துவர். தன்வந்திரி விஷ்ணுவின் அவதாரம். அவர் ஆயுர்வேத மருத்துவர். //

    //விஜய், சூர்யாவைப் பற்றி எழுதினால் நீங்கள் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் பற்றிக் கேட்கிறீர்கள்.//

    விஜய்தான் வரும்கால சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் சொன்னால் சூர்யா வரமாட்டாரான்னு கேட்பதில் தவறு இல்லை :)

    "God of medicine" என்று பொதுப்படுத்தியதால் தான் நான் அவ்வாறு கூறினேன். வைத்தியநாதன் 'சித்த(ர்)' வைத்தியர் என்று நீங்கள் கூறவில்லையே :)

    ReplyDelete
  19. /////Blogger sury said...
    செய்த வினையிருக்க தெய்வத்தை நொந்தக்கால்
    எனும் வெண்பாவும் நினைவுக்கு வருகிறது.
    இருப்பினும் வைதீஸ்வரன் மீது நமது பக்தி நமது துன்பங்களை பொறுத்துக் கொள்ளும்
    மன நிலை தருகிறது என்பது வெள்ளிடை மலை.
    வைதீஸ்வரன் கோவில் நாயகி தையல் நாயகி போற்றி எனும்
    பாடல் தமிழ் வலைக் கவிதாயினி கவி நயா எழுதியிருக்கும்
    போற்றி பாடலைக் கேளுங்கள்.
    http://youtu.be/fZKCvJz242E
    மீனாட்சி//////

    மேலதிகத் தகவலுக்கு நன்றி சகோதரி!

    ReplyDelete
  20. //நாகையின் நுழைவாயிலில் உங்களுக்கு சிலை ஒன்று வைக்க ஏற்பாடு செய்கிறேன்!//

    ஏற்கனவே இருக்கும் மறைமலை அடிகளார் சிலைக்கே மாலைவாங்கிப் போட ஆள் இல்லை

    ReplyDelete
  21. // உங்களின் அறிவு பிரமிக்க வைக்கிறது!//

    இதைச் சாடலாகவே கொள்கிறேன், ஆனாலும் உங்களிடம் வருத்தம் வராது
    :)

    இப்ப இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் படிப்பவர்கல் இரண்டு மருத்துவக் கடவுள் பற்றி அறிந்து கொள்வார்களா இல்லையா என்று மட்டும் சொல்லுங்க.

    ReplyDelete
  22. ///அப்ப தன்வந்திரி என்பவர் யார் ? அவரும் மருத்துவக் கடவுள் ///

    வணக்கம் கோவியாரே..
    வளமோடு நலம் பெறுக..

    முன்னரே ஒரு பதிவில் நாம் சிலமுறை
    முன்னரே உரையாடினோம்..

    அதில் சொன்னதை திரும்பவும்
    அப்படியே சொல்கிறோம்..

    கடவுள் வேறு..
    தெய்வம் வேறு..
    இறைவன் வேறு..

    முப்பாலை உணர்த்தும்
    முழு நுலில் இம்மூன்றும் இல்லை

    சைவத்திலே உயர்ந்ததாக கொள்ளும்
    சிவஞான போதத்தில் கடவுள் என்ற

    சொல் ஒரு முறை மட்டும் உண்டு
    சொல் ஒரு கல் அதனை

    சரியாக பயன்படுத்தினால்
    சங்கடங்கள் இல்லை

    அதனால் யாருக்குமில்லை
    ஆபத்து.. அந்த வேறுபாட்டில் தான்

    தன்வந்திரியும்..
    தரணிகாக்கும் ஈசனாரும்..

    ReplyDelete
  23. //////Blogger RAMADU Family said...
    Guru Vanakkam,
    Thanks for the post. This kindled my childhood memories. Every year for summer holidays until my College days, I used to be in my village near Vaitheeswaran koil and use to visit this temple often. The bullock cart ride(Koondu Vandi) from my village to this place is alwyas in memory and longing for this. mmm...good old days.
    Ramadu.///////

    நல்லது. நன்றி! எங்கள் காரைக்குடி பகுதி மக்களிடையே வைத்தியநாத சுவாமி மிகவும் பிரபலம். வருடம் ஒருமுறை குழந்தைகளை அங்கே அழைத்துச் சென்று அவர்களுக்கு மொட்டை போட்டுவிடுவார்கள். சளி, காய்ச்சல் போன்ற சிறு வியாதிகளுக்குக் கூட ‘வைத்திய நாதா’ என்று சொல்லி நெற்றி நிறைய விபூதியைப் பூசிவிடுவார்கள்

    ReplyDelete
  24. ///////Blogger Sowmya said...
    Good Morning Sir !! ..
    Sorry tamil fontla type panna mudile ..
    Naan unga classla most silent member but regular student thaan ..
    Couldn't stop myself from this comment ..
    Enakku ippo exalted 6th lord saturn's bhukthi start aayirku ..
    Thanks
    Sowmya//////

    சனீஷ்வரனைப் பிரார்த்தனை செய்யுங்கள். நல்வழி காட்டுவார்!

    ReplyDelete
  25. Blogger தமிழ் விரும்பி said...
    வைத்தீஸ்வரன் கோவிலும் அவர் தாம் அருளும் அறிய தந்தமைக்க் நன்றிகள் ஐயா!
    செவ்வாய் நாதனும் அங்கே இருப்பதால் அவசியம் அடுத்த முறை ஊருக்கு வரும் போது
    சென்று தரிஷனம் செய்யணும்... செவ்வாய் திசை நடப்பும் கூட..
    பதிவின் பத்திக்கு பத்தி அனுபவப் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.
    பதிவிற்கு நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.///////

    நல்லது. நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  26. Blogger தமிழ் விரும்பி said...
    (அனுபவம் தான் வேறொன்றும் இல்லை)
    ஆறாம் வீட்டுக் காரன் திசை சுக்கிரன் முடியும் நேரத்தில் விமானத்தில் ஏற்றி நாடுகடத்தினான் அதுவும் நன்மைக்கே!
    எட்டாம் வீட்டுக் காரன் திசை ஆரம்பம் சுமாராக இருந்தாலும் பிற்பாதி அருமையாவே சென்றது... எட்டுக்குரியவன் அமர்ந்த இடம் ஐந்தில்...பெரும் பார்வை... குரு, சுக்கிரன்... ஐந்திற்குரிய செவ்வாய்... (வளர்பிறைச் சந்திரன்) அதனால் என்று நினைக்கிறேன்.. இருந்தும் சந்திர திசை செவ்வாய் புத்தியில் அம்மாவை சிவலோகம் அனுப்பி விட்டான்.
    இப்போது உச்ச செவ்வாய்... ஐந்திற்கு குரியவன், சனியோடு பரிவர்த்தனை, குருவும் சுக்கிரனும், சந்திரனும் செவ்வாய்க்கு கேந்திரத்தில்... திசை நன்றாக இருக்குமா? ஏனென்றால் அவனே பன்னிரெண்டிற்கும் உரியவன். இதற்கு இடையில் கோள்சார சனி பகவான்.. ஏழுக்கு (ஜாதகத்தில் 11 ம் இடம்..) செல்கிறான்...
    இப்போதே சிம்டம் தெரிகிறது... தாங்களும் வைத்தீஸ்வரனை பார்க்க சொல்லி விட்டீர்கள்.. செல்கிறோம்!
    நன்றிகள் ஐயா!
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    ஆகா, சென்று வாருங்கள் ஆலாசியம். முத்துக்குமாரசாமி துணைவருவார்!

    ReplyDelete
  27. ////Blogger கோவி.கண்ணன் said...
    //சிவன் டாக்டர் ரங்காச்சாரி மாதிரி அலோபதி மருத்துவர். தன்வந்திரி விஷ்ணுவின் அவதாரம். அவர் ஆயுர்வேத மருத்துவர். //
    //விஜய், சூர்யாவைப் பற்றி எழுதினால் நீங்கள் ஷாருக்கான், ஹிருத்திக் ரோஷன் பற்றிக் கேட்கிறீர்கள்.//
    விஜய்தான் வரும்கால சூப்பர் ஸ்டார் என்று நீங்கள் சொன்னால் சூர்யா வரமாட்டாரான்னு கேட்பதில் தவறு இல்லை :)
    "God of medicine" என்று பொதுப்படுத்தியதால் தான் நான் அவ்வாறு கூறினேன். வைத்தியநாதன் 'சித்த(ர்)' வைத்தியர் என்று நீங்கள் கூறவில்லையே :)//////

    சித்தர் என்றால் பல பொருள் உண்டு. சித்த வைத்தியர் என்று சொன்னால் நீங்கள் முண்டாசு கட்டிய உங்கள் கிராமத்து வைத்தியரை நினைத்துக் கொண்டு விடப்போகிறீர்கள் என்பதற்காகச் சொல்லவில்லை!

    ReplyDelete
  28. Blogger கோவி.கண்ணன் said...
    //நாகையின் நுழைவாயிலில் உங்களுக்கு சிலை ஒன்று வைக்க ஏற்பாடு செய்கிறேன்!//
    ஏற்கனவே இருக்கும் மறைமலை அடிகளார் சிலைக்கே மாலைவாங்கிப் போட ஆள் இல்லை//////

    மானியப் பணத்தில் அதற்கும் ஏற்பாடு செய்துவிடுகிறேன்!

    ReplyDelete
  29. வைத்திஸ்வரன் கோயில் எனது ஊர் சிதம்பரத்திற்கு பக்கதிலேயே இருக்கிறது. எனக்கு ஜோதிடத்தின் மீது ஆர்வம் வந்த பிறகு நானும் ஒரு முறை சென்று உள்ளேன். கடவுள் பெயர் கொண்ட(பெயர் வேண்டாம்) ஒரு நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்தேன்.ஜாதகம் இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் இல்லை என்று பொய் சொன்னேன் .ஓலைகளை வைத்துகொண்டு பல கேள்விகளை கேட்டார்கள் . பின் ஜாதகம் குறித்து கொடுத்து பலனும் சொன்னார்கள் . பார்த்தல் உண்மையான ஜாதகத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை .

    இதை நான் குற்றமாக சொல்ல வில்லை . சின்ன குறையாகவே சொல்கிறேன் . ஏமாற்றுபவர்களும் அங்கே இருக்கிறார்கள் என்று நினைக்கிறன். அங்கே செல்பவர்கள் நன்கு விசாரித்து தெரிந்து கொண்டு நல்ல நிலையத்திற்கு செல்வது நல்லது .

    கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் அணைத்து மதத்திலும் இருக்கிறார்கள். .

    ReplyDelete
  30. ////Blogger கோவி.கண்ணன் said...
    // உங்களின் அறிவு பிரமிக்க வைக்கிறது!//
    இதைச் சாடலாகவே கொள்கிறேன், ஆனாலும் உங்களிடம் வருத்தம் வராது :)/////

    எனக்கும் வராது!
    >>>>>>>>>>>>>>
    /////இப்ப இந்தப் பதிவையும் பின்னூட்டங்களையும் படிப்பவர்கள் இரண்டு மருத்துவக் கடவுள் பற்றி அறிந்து கொள்வார்களா இல்லையா என்று மட்டும் சொல்லுங்க./////

    அது உண்மைதான். தமிழ்நாட்டில் எனக்குத் தெரிந்து தன்வந்திரிக்குக் கோவில், இங்கே (கோவையில்) கேரள ஆர்யவைத்திய சாலை வளாகத்தில் மட்டுமே உள்ளது. வேறு இடங்களில் இருந்தால், அறிந்தவர்கள் சொல்லலாம்!

    ReplyDelete
  31. Blogger iyer said...
    ///அப்ப தன்வந்திரி என்பவர் யார் ? அவரும் மருத்துவக் கடவுள் ///
    வணக்கம் கோவியாரே..
    வளமோடு நலம் பெறுக..
    முன்னரே ஒரு பதிவில் நாம் சிலமுறை
    முன்னரே உரையாடினோம்..
    அதில் சொன்னதை திரும்பவும்
    அப்படியே சொல்கிறோம்..
    கடவுள் வேறு..
    தெய்வம் வேறு..
    இறைவன் வேறு..
    முப்பாலை உணர்த்தும்
    முழு நுலில் இம்மூன்றும் இல்லை
    சைவத்திலே உயர்ந்ததாக கொள்ளும்
    சிவஞான போதத்தில் கடவுள் என்ற
    சொல் ஒரு முறை மட்டும் உண்டு
    சொல் ஒரு கல் அதனை
    சரியாக பயன்படுத்தினால்
    சங்கடங்கள் இல்லை
    அதனால் யாருக்குமில்லை
    ஆபத்து.. அந்த வேறுபாட்டில் தான்
    தன்வந்திரியும்..
    தரணிகாக்கும் ஈசனாரும்//////

    இறைவன் ஒருவன்தான். அதைக் கவியரசரும் எழுதிவைத்துவிட்டுப்போய் உள்ளார். ஆனால் அவரவர்கள் தங்களுக்குத் தெரிந்த வடிவங்களில் இறைவனை வனங்குகிறார்கள். அதில் தவறு ஒன்றுமில்லை!

    ReplyDelete
  32. Blogger thanusu said...
    வைத்திஸ்வரன் கோயில் எனது ஊர் சிதம்பரத்திற்கு பக்கதிலேயே இருக்கிறது. எனக்கு ஜோதிடத்தின் மீது ஆர்வம் வந்த பிறகு நானும் ஒரு முறை சென்று உள்ளேன். கடவுள் பெயர் கொண்ட(பெயர் வேண்டாம்) ஒரு நிலையத்தில் நாடி ஜோதிடம் பார்த்தேன்.ஜாதகம் இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் இல்லை என்று பொய் சொன்னேன் .ஓலைகளை வைத்துகொண்டு பல கேள்விகளை கேட்டார்கள் . பின் ஜாதகம் குறித்து கொடுத்து பலனும் சொன்னார்கள் . பார்த்தல் உண்மையான ஜாதகத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை .
    இதை நான் குற்றமாக சொல்ல வில்லை . சின்ன குறையாகவே சொல்கிறேன் . ஏமாற்றுபவர்களும் அங்கே இருக்கிறார்கள் என்று நினைக்கிறன். அங்கே செல்பவர்கள் நன்கு விசாரித்து தெரிந்து கொண்டு நல்ல நிலையத்திற்கு செல்வது நல்லது .
    கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்கள் அணைத்து மதத்திலும் இருக்கிறார்கள். //////

    நாடி ஜோதிடத்தைப் பற்றி நான் முன்பு எழுதியுள்ளேன். அங்கே நாடி ஜோதிடக்காரர்கள் அதிகம் உள்ளார்கள். வாரிசுச் சண்டையில் ஏடுகளையும் பங்கு வைத்துக்கொண்டுவிட்டார்கள். முழுமையான ஏட்டுச்சுவடிகள் யாரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அவர்களுக்கும் வைத்தியநாத சுவாமிக்கும் சம்பந்தம் இல்லை!

    ReplyDelete
  33. /---
    ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள்
    ----/
    ஆறாம் இடத்தான் (சந்திரன்) இரண்டில்(மீனம் உச்ச சுக்கிரனுடன் இருக்கிறான். எனக்கு சுக்கிர மகா திசை, சந்திர புக்தி நடக்கிறது. என் அம்மாவுக்கு ஒருமுறை கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. காலில் சிறிய முள் குத்தி septic ஆகி காலில் அறுவை சிகிச்சை செய்து 36 நாள் மருத்துவமனையில் கிடக்க வேண்டி வந்தது.
    சுக்கிர மகாதிசை - சந்திர புக்தி குறித்தான புலிப்பாணி பாடல்
    "ஆவானே சுக்கிரதிசை சந்திரபுத்தி
    அருளில்லாமா தமது நாலைந்தாகும்
    போவானே அதன்பலனை புகழக்கேளு
    பொன்பெறுவாள் அன்னையுமே மரணமாவாள்"

    தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது..

    நா.துரைசாமி
    எர்ணாகுளம்

    ReplyDelete
  34. ஒருவன் என்னும் ஒருவன் காண்க என மணிவாசகர் அறுதியிட்டு சொன்ன இறைவன் ஒருவன் தான் ஆனால் இறைவனும் கடவுளும் ஒன்றல்ல.

    ReplyDelete
  35. Dear sir,

    I have visited many times this temple. Out of nine planets temple, this one is the biggest.There is a practice of offering salt, pepper and jaggery to lord shiva and pray to cure their diseases. It's a nice temple to visit.
    One question sir:
    What is the importance of Lagna Ashtagavargam? How to interpret the results for the paralgal ranging from 1 to 8 in Lagnam?
    Thank you

    ReplyDelete
  36. இந்த வாரம் பக்தி மலர் பதிவு வைத்தீஸ்வரன் கோவில் பற்றி மிகச்சிறப்பக அமந்துள்ளது.மேலும் கூடுதலாக 6ஆம் அதிபதியின் தசை,புத்தி பற்றி கூறியது

    “அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.
    "நல்ல கிரகமே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது"

    6இல் வந்து அமரும் கிரகங்களின் புத்தியில் கூட சிரமம் தான் எனது ஜதகத்தில் 6இல் உச்ச சந்திரன்(8க்கு உடையவன்).ஏனென்றால் எனது தாய்க்கும் இந்த காலத்தில் தான் அட்மிட்டாகி காலில் அறுவை சிகிச்சைநடந்தது.அவர் அதற்கு முன்னர்வரை அட்மிட் ஆகும் அளவிற்கு சென்றதில்லை கடின உளைப்பாளி அவர்.

    நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  37. Ayya,

    In SriRangam, seperate Sannathi is available for Dhanvanthri God. It is available between Ranganathr and Thayar sannathi's.

    My Mom has joint pain for so many years.Ist advisable to to Vaithayanathar temple?

    Sincere Student,
    Ravi

    ReplyDelete
  38. ஆசிரியர் ஐயா வைத்தீஸ்வரன்கோயில் பற்றிய அரிய தகவல்களைக் கொடுத்திருக்கிறீகள். தஞ்சை மாவட்ட நவக்கிரகத் தலங்களில் இது செவ்வாய் தலம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறீகள். செல்வமுத்துகுமாரஸ்வாமி சந்நிதியில் கிருத்திகை தினங்களில் கூட்டம் அதிகம். சந்தன அபிஷேக தீர்த்தம் அனைவருக்கும் கிடைக்கும் விதத்தில் அவர் சந்நிதியில் நீண்ட தகர குழாய் அமைத்து அதில் பல துவாரங்களோடு இருக்கும். அதில் ஊற்றப்படும் சந்தனம் அனைவரையும் வந்தடையும். மற்றொரு தலபுராண வரலாறு. ஜடாயுவுக்கு மோட்சம் அருளிய இடமாக, இராமபிரான் ஜடாயுவுக்கு அந்திமக் கடன்களைச் செய்ததாக இவ்விடம் போற்றப்படுகிறது. செவ்வாய் சந்நிதிக்கு அருகில் ஓரிடத்தில் திருநீற்றுக் குவியல் ஒன்று காணப்படும். அந்த இடம்தான். மேலும் நவக்கிரகம் ஒரே திசையில் இருக்கும் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். அதுபோல நவக்கிரகம் ஒரே திசையில் அமைந்த ஆலயங்களில் திருவையாறும் ஒன்று. திருவையாற்றில் நவக்கிரகம் அமைந்துள்ள மண்டபம் தியான மண்டபம் என்று பெயர். தியாகராஜ சுவாமிகள் தனது பல கீர்த்தனைகளை இங்குதான் இயற்றினாராம். கோபாலகிருஷ்ண பாரதியார் தன்னுடைய ஆபோகி ராகக் கீர்த்தனையான "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" எனும் கீர்த்தனையையும் இவ்விடத்தில்தான் எழுதினாராம்.

    ReplyDelete
  39. குருவே. அருமையான பதிவு. கிரகங்களும், கிரக அமைப்புகளுக்கும் மனித உடலில் ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஒரு பதிவு எழுதுங்கள் அய்யா.

    ReplyDelete
  40. //Blogger கோவி.கண்ணன் said...

    அப்ப தன்வந்திரி என்பவர் யார் ? அவரும் மருத்துவக் கடவுள் என்கிரார்களே//

    வயது முதிர்ந்த பெண்களை நாம் அம்மா என்று சொல்வதுண்டு. இவர்கள் அம்மா என்றால் வீட்டில் உன்னை பெற்றவர் இருக்கிறாரே, அவர் யார், அவரை என்னவென்று கூப்பிடுவீர்கள் என்று நண்பர் கேட்பார் போலும்.

    ReplyDelete
  41. வணக்கம் ஐயா,
    இன்றைய பதிவு நல்ல தகவல்களால் நிறைந்திருந்தது.ஐயா,தன்வந்திரி கோவில் வேலூர் அருகே உள்ள வாலாஜாபாத்தில் தனிக்கோவிலாக அமைய பெற்றிருக்கிறது.பண்ருட்டி அருகேயும் ஒரு கோவில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
    ஐயா,இன்று தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1026வது பிறந்தநாள் என செய்தியில் கேட்டேன்.சிவாலயங்கள் பல நமக்கு அளித்த சோழ மன்னர்களில் ஒருவரான மாமன்னனின் சதய விழாவை காண வெளிநாட்டினர் எல்லாம் தஞ்சையில் கூடுகின்றனராம்,ஆனால் நம் நாட்டில் பலருக்கு அதைப் பற்றி தெரியவில்லை என்பது தான் வேதனை.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
  43. @thanusu..

    எனக்கு நாடி சோதிடம் பார்த்த அனுபவம் இருக்கிறது. எல்லாம் சொல்படியே நடந்தது.

    இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவை அவர்களது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்றபதிலோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளவேண்டும்.

    எனக்கு ஒலை எடுக்க மிக சிரமப்பட்டார்கள் ஒரு நாள் கடந்த பின்னரே கிடைத்தது. நான் கொடுத்தது வெறும் கட்டைவிரல் ரேகை மட்டும்தான்.

    பார்த்து நெடுங்காலமாயிற்று . அப்படியே நடந்தன.

    ReplyDelete
  44. இன்னிக்கு பின்னூட்ட பக்திப் பரவசத்தில் எல்லோரும் திகழ்த்திருக்க அந்த வைத்தியர் அருள் புரிந்திருக்கிறார்..

    அப்படியே ஆகட்டும்..

    நான் ப்ரெசென்ட் போட்டுட்டு அப்படியே அப்சென்ட்டும் ஆகிடுறேன்..

    ReplyDelete
  45. /*குருவே. அருமையான பதிவு. கிரகங்களும், கிரக அமைப்புகளுக்கும் மனித உடலில் ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஒரு பதிவு எழுதுங்கள் அய்யா*/

    எனது ஆசையும் அதுவே ஐயா!

    ReplyDelete
  46. தன்வந்த்ரிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் தனிச்ப்சன்னதி உள்ளது.

    'புள்ளிருக்கு வேளூர்' என்ற பெயரும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு உண்டு.

    அருமையான பதிவு.நன்றி அய்யா!

    ReplyDelete
  47. சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உள்ளே வாசல் அருகில் வைத்தியநாத சுவாமிக்கும், தையல்நாயகி அம்மனுக்கும் வைத்தீஸ்வரன் கோவில் போன்ற அமைப்பிலேயே சன்னிதிகள் அமைத்துள்ளனர். நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர் பலர் இக்கோவிலில் வணங்கி மனபலம் பெறுகின்றனர்.

    ReplyDelete
  48. மைனர்வாள் இன்றைய படத்தில் அசத்திறேல் போங்க...
    இது படம்... இவ்வளவு அழகானப் படத்தை வைத்துக்கொண்டு
    பயமுறுத்த வேண்டுமென்றே செய்து இருக்கிரீங்கத் தானே.

    ReplyDelete
  49. நண்பர் ஒருவர் தன் வாழ்க்கையில் நடந்ததை விவரிக்கும் போது, தனக்கு 8, 9க்குரிய சனி தசையில் குரு புத்தியின் போது நடமாட முடியாமல் முடங்கிப் போனதாகவும் வேலை போனதோடு வேறு சில இழப்பும் ஏற்பட்டதாகவும் சொல்லியிருந்தார். தன் துன்பங்கள் எப்போது தீரும் என்று கேட்டிருந்தார். சனி தசையில் 9ம் இடத்திற்குரிய பலன் நிச்சயம் நடந்திருக்கும். ஓஹோவென்று இருந்திருப்பீர்கள். என்றேன். ஆமாம் என்று ஒத்துக் கொண்டார். ஒரு கிரகம் 2 ஸ்தான ஆதிபத்தியம் பெற்றிருந்தால் எந்த ஸ்தானத்திற்கான பலனை எப்போது செய்யும் என்று அனுமானிப்பது கடினம். நல்லது செய்யும்போது ஆணவத்தில் ஆடாமல் நம்மால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்து வந்தால் கெட்ட காலம் வரும் போது நம்மை பாதிக்காத வண்ணம் வரும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இப்போது ஒன்றும் இல்லாமல் அல்லது ஒன்றுக்கும் உதவாமல் இருக்கும் சிலரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

    ReplyDelete
  50. ///////Blogger கைகாட்டி said...ஆறாம் இடத்தானின் (அவன்தான் ஜாதகத்தின் நம்பர் ஒன் வில்லன்) மகாதிசை அல்லது வேறு திசையில் அவனுடைய புத்தி உங்களுக்கு நடந்தால் எச்சரிக்கையாக இருங்கள்////////
    ஆறாம் இடத்தான் (சந்திரன்) இரண்டில்(மீனம் உச்ச சுக்கிரனுடன் இருக்கிறான். எனக்கு சுக்கிர மகா திசை, சந்திர புக்தி நடக்கிறது. என் அம்மாவுக்கு ஒருமுறை கண்ணில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது. காலில் சிறிய முள் குத்தி septic ஆகி காலில் அறுவை சிகிச்சை செய்து 36 நாள் மருத்துவமனையில் கிடக்க வேண்டி வந்தது.
    சுக்கிர மகாதிசை - சந்திர புக்தி குறித்தான புலிப்பாணி பாடல்
    "ஆவானே சுக்கிரதிசை சந்திரபுத்தி
    அருளில்லாமா தமது நாலைந்தாகும்
    போவானே அதன்பலனை புகழக்கேளு
    பொன்பெறுவாள் அன்னையுமே மரணமாவாள்"
    தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது..
    நா.துரைசாமி
    எர்ணாகுளம்/////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி மீசைக்காரரே!!

    ReplyDelete
  51. //////Blogger iyer said...
    ஒருவன் என்னும் ஒருவன் காண்க என மணிவாசகர் அறுதியிட்டு சொன்ன இறைவன் ஒருவன் தான் ஆனால் இறைவனும் கடவுளும் ஒன்றல்ல.//////

    கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர். இறைவன் என்றால் எல்லாவற்றையும் இன்னும் கடக்காதவரா? என்ன சொல்ல வருகிறீர்கள் சுவாமி?

    ReplyDelete
  52. ///////Blogger dhilse said...
    Dear sir,
    I have visited many times this temple. Out of nine planets temple, this one is the biggest.There is a practice of offering salt, pepper and jaggery to lord shiva and pray to cure their diseases. It's a nice temple to visit.
    One question sir:
    What is the importance of Lagna Ashtagavargam? How to interpret the results for the paralgal ranging from 1 to 8 in Lagnam?
    Thank you//////

    லக்கினத்திற்கு அஷ்டகவர்க்கக் கணக்குக் கிடையாது. கிரகங்களுக்கு மட்டுமே - அதுவும் 7 கிரகங்களுக்கு மட்டுமே அஷ்டகவர்க்கக் கணக்கு!
    ராகு & கேதுவை அஷ்டகவர்க்க ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வதில்லை!

    ReplyDelete
  53. //////Blogger முருகராஜன் said...
    இந்த வாரம் பக்தி மலர் பதிவு வைத்தீஸ்வரன் கோவில் பற்றி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது.மேலும் கூடுதலாக 6ஆம் அதிபதியின் தசை,புத்தி பற்றி கூறியது
    “அதிர்ஷ்டம் தபாலில் வரும். தரித்திரம் தந்தியில் வரும்” என்று என் தந்தையார் சொல்வார்.
    "நல்ல கிரகமே ஒரு ஜாதகத்தின் ஆறாம் அதிபதியாக இருக்கும்போது, தன்னுடைய தசா புத்தியில் ஜாதகனைப் போட்டுப் பார்த்துவிடுவான். புரட்டி எடுத்துவிடுவான். அதற்கு யாரும் விதிவிலக்காக முடியாது"
    6இல் வந்து அமரும் கிரகங்களின் புத்தியில் கூட சிரமம் தான் எனது ஜதகத்தில் 6இல் உச்ச சந்திரன்(8க்கு உடையவன்).ஏனென்றால் எனது தாய்க்கும் இந்த காலத்தில் தான் அட்மிட்டாகி காலில் அறுவை சிகிச்சைநடந்தது.அவர் அதற்கு முன்னர்வரை அட்மிட் ஆகும் அளவிற்கு சென்றதில்லை கடின உழைப்பாளி அவர்.
    நன்றிகள் ஐயா.//////

    உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி முருகராஜன்!!

    ReplyDelete
  54. //////Blogger Ravichandran said...
    Ayya,
    In SriRangam, seperate Sannathi is available for Dhanvanthri God. It is available between Ranganathr and Thayar sannathi's.
    My Mom has joint pain for so many years.Ist advisable to to Vaithayanathar temple?
    Sincere Student,
    Ravi//////

    எதற்குப் பாவம் அவர்களை அலைய விடுகிறீர்கள். திருச்சியில் உள்ள தன்வந்த்ரி சன்னதியில் வணங்கச்சொல்லுங்கள்

    ReplyDelete
  55. //////Blogger Thanjavooraan said...
    ஆசிரியர் ஐயா வைத்தீஸ்வரன்கோயில் பற்றிய அரிய தகவல்களைக் கொடுத்திருக்கிறீகள். தஞ்சை மாவட்ட நவக்கிரகத் தலங்களில் இது செவ்வாய் தலம் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறீகள். செல்வமுத்துகுமாரஸ்வாமி சந்நிதியில் கிருத்திகை தினங்களில் கூட்டம் அதிகம். சந்தன அபிஷேக தீர்த்தம் அனைவருக்கும் கிடைக்கும் விதத்தில் அவர் சந்நிதியில் நீண்ட தகர குழாய் அமைத்து அதில் பல துவாரங்களோடு இருக்கும். அதில் ஊற்றப்படும் சந்தனம் அனைவரையும் வந்தடையும். மற்றொரு தலபுராண வரலாறு. ஜடாயுவுக்கு மோட்சம் அருளிய இடமாக, இராமபிரான் ஜடாயுவுக்கு அந்திமக் கடன்களைச் செய்ததாக இவ்விடம் போற்றப்படுகிறது. செவ்வாய் சந்நிதிக்கு அருகில் ஓரிடத்தில் திருநீற்றுக் குவியல் ஒன்று காணப்படும். அந்த இடம்தான். மேலும் நவக்கிரகம் ஒரே திசையில் இருக்கும் என்று ஒருவர் எழுதியிருக்கிறார். அதுபோல நவக்கிரகம் ஒரே திசையில் அமைந்த ஆலயங்களில் திருவையாறும் ஒன்று. திருவையாற்றில் நவக்கிரகம் அமைந்துள்ள மண்டபம் தியான மண்டபம் என்று பெயர். தியாகராஜ சுவாமிகள் தனது பல கீர்த்தனைகளை இங்குதான் இயற்றினாராம். கோபாலகிருஷ்ண பாரதியார் தன்னுடைய ஆபோகி ராகக் கீர்த்தனையான "சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா" எனும் கீர்த்தனையையும் இவ்விடத்தில்தான் எழுதினாராம்.//////

    உங்களின் அனுபவப் பகிர்வு மற்றும் மேலதிகத் தகவல்களுக்கு நன்றி கோபாலன் சார்!

    ReplyDelete
  56. ///////Blogger Jagannath said...
    குருவே. அருமையான பதிவு. கிரகங்களும், கிரக அமைப்புகளுக்கும் மனித உடலில் ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஒரு பதிவு எழுதுங்கள் அய்யா.///////

    ஆகா, முயற்சிக்கிறேன். நன்றி!

    ReplyDelete
  57. ///////Blogger ananth said...
    //Blogger கோவி.கண்ணன் said...
    அப்ப தன்வந்திரி என்பவர் யார் ? அவரும் மருத்துவக் கடவுள் என்கிரார்களே//
    வயது முதிர்ந்த பெண்களை நாம் அம்மா என்று சொல்வதுண்டு. இவர்கள் அம்மா என்றால் வீட்டில் உன்னை பெற்றவர் இருக்கிறாரே, அவர் யார், அவரை என்னவென்று கூப்பிடுவீர்கள் என்று நண்பர் கேட்பார் போலும்.//////

    இல்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர். சும்மா விளையாட்டிற்காக அப்படி ஏதாவது சீண்டும்படியான கேள்விகளைக் கேட்பார். நானும் அவற்றை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் பதில் சொல்வேன்! அது நடைமுறையில் உள்ள வழக்கம்! என்னுடைய முந்தைய பதிவான பல்சுவைப் பதிவின் துவக்ககால வாசகர் அவர். தொடர் வாசகர். உண்மையைச் சொன்னால் அந்தப் பதிவில் எழுதிக்கொண்டிருந்த காலத்தில் ‘வாத்தியார்’ பட்டம் தந்தவர் அவர்தான். அதன் காரணமாகத்தான் இந்த வகுப்பறை’ப் பதிவை 4 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கினேன். இதில் அதிக கவனம் செலுத்துவதால், பல்சுவைப் பதிவை முடக்கி வைத்துள்ளேன். அதில் எழுதிய 450 பதிவுகளில் முக்கியமானவற்றை புத்தகமாகக் கொண்டுவரும் எண்ணம் உள்ளது. பழநிஅப்பன் மனதுவைத்தால் அது நடக்கும்!

    ReplyDelete
  58. ////////Blogger R.Srishobana said...
    வணக்கம் ஐயா,
    இன்றைய பதிவு நல்ல தகவல்களால் நிறைந்திருந்தது.ஐயா,தன்வந்திரி கோவில் வேலூர் அருகே உள்ள வாலாஜாபாத்தில் தனிக்கோவிலாக அமைய பெற்றிருக்கிறது.பண்ருட்டி அருகேயும் ஒரு கோவில் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.
    ஐயா,இன்று தஞ்சை மாமன்னன் ராஜராஜ சோழனின் 1026வது பிறந்தநாள் என செய்தியில் கேட்டேன்.சிவாலயங்கள் பல நமக்கு அளித்த சோழ மன்னர்களில் ஒருவரான மாமன்னனின் சதய விழாவை காண வெளிநாட்டினர் எல்லாம் தஞ்சையில் கூடுகின்றனராம்,ஆனால் நம் நாட்டில் பலருக்கு அதைப் பற்றி தெரியவில்லை என்பது தான் வேதனை.//////

    வேதனைப் படுவதற்கு எத்தனையோ விஷ்யங்கள் உள்ளது. அதெல்லாம் படாதீர்கள். நம்மால் செய்ய முடிந்தவற்றிற்கு மட்டுமே நாம் கவலைப் பட வேண்டும். அக்கறை கொள்ள வேண்டும். செய்ய முற்படவேண்டும்!

    ReplyDelete
  59. /////Blogger தமிழ் விரும்பி said...
    நண்பர் கார்த்திகேயனை காண ஆவலாக இருக்கிறேன்...
    நேற்றைய என்னுடைய பின்னூட்டப் பதிலை
    பார்த்தீகளா என்றுத் தெரியவில்லை.
    லால்குடியில் பிறந்த கார்த்திகேயன் என்ற ஒருவரைத் தெரியும்...
    அவர் எல் & டி யில் பெங்களூரில் கட்டடப் பொறியாளராக வேலைப் பார்த்து வந்தார்..
    கோட்டையார் வீட்டு ஆர்.ராமச்சந்திர முதலியார் (எனது சித்தப்பா) அவரின் மூன்றாவது மகன் சோமசுந்தரத்தின் மைத்துனர் ஆவார்.
    அவர் தாங்களாக இருக்கலாம் என நினைக்கிறேன்.. அது தான் ஆவல்.
    எதுவானாலும் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் எனது தொலை பேசி எண் 945 99 242.
    நன்றி,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.//////

    பழநிஅப்பா அந்த கார்த்திகேயனே இந்தக் கார்த்திகேயனாக இருக்கட்டும். எங்கள் மனம் குளிரட்டும். நீயும் கார்த்திகேயந்தான் அருள் செய்க!:-))))

    ReplyDelete
  60. ///////Blogger Govindasamy said...
    @thanusu..
    எனக்கு நாடி சோதிடம் பார்த்த அனுபவம் இருக்கிறது. எல்லாம் சொல்படியே நடந்தது.
    இதில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியவை அவர்களது கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்றபதிலோடு மட்டுமே நிறுத்திக் கொள்ளவேண்டும்.
    எனக்கு ஒலை எடுக்க மிக சிரமப்பட்டார்கள் ஒரு நாள் கடந்த பின்னரே கிடைத்தது. நான் கொடுத்தது வெறும் கட்டைவிரல் ரேகை மட்டும்தான்.
    பார்த்து நெடுங்காலமாயிற்று . அப்படியே நடந்தன.///////

    எல்லாம் முன்பு நடந்தது. இப்போதைய நிலைமை சரியாக இல்லை. அதைத்தான் பலரும் சொல்கிறார்கள்!

    ReplyDelete
  61. ///////Blogger minorwall said...
    இன்னிக்கு பின்னூட்ட பக்திப் பரவசத்தில் எல்லோரும் திகழ்த்திருக்க அந்த வைத்தியர் அருள் புரிந்திருக்கிறார்..
    அப்படியே ஆகட்டும்..
    நான் ப்ரெசென்ட் போட்டுட்டு அப்படியே அப்சென்ட்டும் ஆகிடுறேன்../////

    ரைட் ரை...ட் பன்னிரெண்டு மணிக்குள் வீட்டிற்குத் திரும்பிவிடுங்கள்!

    ReplyDelete
  62. Blogger Raja said...
    /*குருவே. அருமையான பதிவு. கிரகங்களும், கிரக அமைப்புகளுக்கும் மனித உடலில் ஏற்படுத்தும் நோய்கள் குறித்து ஒரு பதிவு எழுதுங்கள் அய்யா*/
    எனது ஆசையும் அதுவே ஐயா!/////

    நல்லது. முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  63. /////Blogger kmr.krishnan said...
    தன்வந்த்ரிக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் தனிச்ப்சன்னதி உள்ளது.
    'புள்ளிருக்கு வேளூர்' என்ற பெயரும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு உண்டு.
    அருமையான பதிவு.நன்றி அய்யா!/////

    மேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  64. //////Blogger Jagannath said...
    சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை உள்ளே வாசல் அருகில் வைத்தியநாத சுவாமிக்கும், தையல்நாயகி அம்மனுக்கும் வைத்தீஸ்வரன் கோவில் போன்ற அமைப்பிலேயே சன்னிதிகள் அமைத்துள்ளனர். நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர் பலர் இக்கோவிலில் வணங்கி மனபலம் பெறுகின்றனர்./////

    வாழ்க ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம். வளர்க அவர்களின் இறை நம்பிக்கை!

    ReplyDelete
  65. ////////ananth said...
    ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இப்போது ஒன்றும் இல்லாமல் அல்லது ஒன்றுக்கும் உதவாமல் இருக்கும் சிலரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.///////

    நண்பர் ஆனந்த் வரிகள் கடுமையாக எனக்குப் படுகிறது..உண்மைதான் என்ற போதிலும் அவரிடமிருந்து இப்படி வரிகளை நான் எதிர்பார்க்கவில்லை..

    ReplyDelete
  66. மாணவி ஸ்ரீஷோபனா தஞ்சையில் நடைபெறும் சதயத்திருநாள் பற்றி குறிப்பிட்டு வெளி நாட்டார் வந்து கலந்து கொள்கிறார்கள், நம்மவர்களுக்குத் தெரியவில்லை என்பது போல வருத்தப்பட்டிருந்தார். தயவு செய்து என்னுடைய வலைப்பூவான
    www.bharathipayilagam.blogspot.com
    சென்று சதயத்திரு நாள் பற்றிய கட்டுரையைப் படிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.

    ReplyDelete
  67. ///தமிழ் விரும்பி said...
    மைனர்வாள் இன்றைய படத்தில் அசத்திறேல் போங்க...
    இது படம்... இவ்வளவு அழகானப் படத்தை வைத்துக்கொண்டு
    பயமுறுத்த வேண்டுமென்றே செய்து இருக்கிரீங்கத் தானே.//////

    சும்மா நம்ம மிரட்டல் மீசைக்காரர் கைகாட்டியுடன் உரையாடலில் இருந்து ரெண்டு நாள் பத்து வருஷத்துக்கு முன்னாளைய படங்களை (சும்மா வெச்சுப் பார்த்தது..அதுவும்) ப்ரோஃபைலில் மாற்றியிருந்தேன்..

    நேத்திக்கே நீங்க வேற சொல்லிட்டீங்க..அதான்..

    எதுக்கு இப்படிவிபரீதம் என்று சமீபத்துப் படத்துக்கே தாவிவிட்டேன்..

    கவனித்து நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ்..

    ReplyDelete
  68. இக்கோயிலில் அருள்பாலிக்கும் வைத்தியநாத சுவாமியை ஜடாயு (புள்), ,ரிக் வேதம் (இருக்கு), முருகன் (வேல்), சூரியன் (ஊர்) ஆகியோர் வழிபட்டதால் புள்ளிருக்குவேலூர் என்ற பெயரிலும் அழைகப்படுகிறது.ஆதலால் செல்லமுத்துகுமாரசுவாமியை (இம்முருகனை) புள்ளிருக்குவேலுரான் என்றும் சொல்லுவார்கள்.

    மேலும் இம்முருகன் சிதம்பரம் கோயிலில் ஆதியில் இருந்ததாகவும், அண்டைய படையப்பு காலத்தில் வைதீஸ்வரன் கோயிலுக்கு வந்ததாகவும் சொல்லுவார்கள்.

    ReplyDelete
  69. /////Thanjavooraan said...
    மாணவி ஸ்ரீஷோபனா தஞ்சையில் நடைபெறும் சதயத்திருநாள் பற்றி குறிப்பிட்டு வெளி நாட்டார் வந்து கலந்து கொள்கிறார்கள், நம்மவர்களுக்குத் தெரியவில்லை என்பது போல வருத்தப்பட்டிருந்தார். தயவு செய்து என்னுடைய வலைப்பூவான
    www.bharathipayilagam.blogspot.com
    சென்று சதயத்திரு நாள் பற்றிய கட்டுரையைப் படிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.////

    வெளிநாட்டவர் பற்றி இந்தக் கமெண்டில் சொல்லப்பட்டதால் அந்தக் காலத்திலிருந்தே இது தொடர்கிறது என்பதைக் குறித்து ஒரு செய்தி..

    சென்ற முறை நடந்த சதயத் திருவிழா படங்களை எனக்கும் அனுப்பியிருந்தார் தஞ்சாவூரார்..அதிலே தஞ்சாவூர் கோபுரத்து சிலையின் வடிவங்களில் ஒரு வெள்ளைக்காரர் சிலை இருப்பதுகுறித்தும் கீழ்கண்டவாறு
    விளக்கி அந்த போட்டோவையும் அனுப்பியிருந்தார்..
    நினைவு கூர்கிறேன்..

    கோயிலின் நுழைவாயிலில் அமைந்தது கோபுரம், மூலத்தானத்தின் மேல் அமைந்தது விமானம். தஞ்சை ராஜராஜேச்சர விமானத்தின் வடபுறம் இரண்டாம் தளத்தில் ஒரு சிற்பம் இருக்கிறது. அது கோட், தொப்பி அணிந்த ஒரு மேல்நாட்டார் ஒருவரின் உருவம். அதைப்பற்றிப் பல பொய்க்கதைகள் உலவுகின்றன. அது ரகுநாத நாயக்கர் காலத்தில் செதுக்கப்பட்ட சிற்பம். தரங்கம்பாடியில் அப்போது குடியேறியிருந்த டச்சுக்காரர் ஒருவரின் சிற்பம் அது. அவர் ரகுநாத நாயக்கனுக்கு போரில் உதவிகள் பல செய்தவர். அதன் நன்றிக்கடனாக, நாயக்க மன்னர்கள் ஆலயத்தில் பல புதிய கட்டுமானங்களைக் குறிப்பாக சுப்பிரமணிய சுவாமிக்கு ஆலயம் எழுப்பிய போது கோபுரத்தில் இந்த சிற்பத்தை வெட்டுவித்ததாக வரலாறு கூறுகிறது. அந்த புகைப்படத்தில் நடுவில் அமைந்த ஒரு சிற்பத்தைப் பாருங்கள். ஒரு வெளிநாட்டவரின் தொப்பி அணிந்த உருவத்தைப் பார்ப்பீர்கள். மீண்டும் நன்றி. தங்கள், தஞ்சை வெ.கோபாலன்

    ReplyDelete
  70. //Blogger minorwall said...

    ////////ananth said...
    ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இப்போது ஒன்றும் இல்லாமல் அல்லது ஒன்றுக்கும் உதவாமல் இருக்கும் சிலரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.///////

    நண்பர் ஆனந்த் வரிகள் கடுமையாக எனக்குப் படுகிறது..உண்மைதான் என்ற போதிலும் அவரிடமிருந்து இப்படி வரிகளை நான் எதிர்பார்க்கவில்லை..//

    நான் எப்போதும் கடுமையாக எழுத வேண்டும் என்று நினைத்ததில்லை. சில சமயங்களில் என்னையும் மீறி அப்படி நடந்து விடுகிறது. இனி இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன். சுட்டிக் கட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  71. ///கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர். இறைவன் என்றால் எல்லாவற்றையும் இன்னும் கடக்காதவரா? என்ன சொல்ல வருகிறீர்கள் சுவாமி?///

    ஆமாம் வாத்தியர் அய்யா...
    அவ்விரண்டும் வேறு தெய்வமும் வேறு

    இது தெரியாததால் தான்
    இங்கே ஆத்திகவாதிகள் பலரும்

    அங்கே நாத்திக வாதிகள் சிலரும்
    அந்த வேறுபாட்டை அப்படி பார்கின்றனர்

    நம் மொழியில் சொன்னால்
    நம் (தமிழ்) நாட்டின்

    அமைச்சர்களும் ஒன்று தான் முதல்
    அமைச்சரும் அமைச்சர் தான்..

    ஆனால்

    முதல் அமைச்சர் வேறு
    முகம் காட்டும் அமைச்சர் வேறு தானே

    முதலமைச்சர் உத்திரவின்றி
    முன்னதாக எந்த அமைச்சரும்

    பணியாற்ற முடியுமா...
    பரவாயில்லை...

    முதலமைச்சருக்கு வணக்கம் தருவோம்
    முன்பு போலவே அமைச்சர்களுக்கும்

    இந்த வேறுபாட்டினை விளக்கிச் சொல்ல
    இன்னமும் ஒரு வகுப்பறை தேவை

    மற்றவர்களுக்கு இது தேவையில்லை..
    மாற்றாக இல்லாமல் இங்கே

    விவாதமின்றி நிறைவு செய்கிறோம்
    விளக்கங்கள் இல்லாமலேயே..

    ReplyDelete
  72. prema- iyya vanakkam. indraya padhivu super.

    ReplyDelete
  73. //அதில் சொன்னதை திரும்பவும்
    அப்படியே சொல்கிறோம்..

    கடவுள் வேறு..
    தெய்வம் வேறு..
    இறைவன் வேறு..///


    விஷ்ணு இறைவன் இல்லை சாதாரண தெய்வம் என்று இதை யாராவது நாமம் போட்ட வைணவரிடம் சொல்லி

    அவர்கள் கொடுப்பது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.

    ReplyDelete
  74. //வயது முதிர்ந்த பெண்களை நாம் அம்மா என்று சொல்வதுண்டு. இவர்கள் அம்மா என்றால் வீட்டில் உன்னை பெற்றவர் இருக்கிறாரே, அவர் யார், அவரை என்னவென்று கூப்பிடுவீர்கள் என்று நண்பர் கேட்பார் போலும்.//

    தமிழ்நாட்டுக்கு ஒரே அம்மா தான் இந்தியாவுக்கு ஒரே அன்னைத்தான்,

    யார் யார் மீது பயம் வருகிறதோ அவர்களெல்லாம் அம்மா தானே :)

    மேலே ஐயருக்கு சொல்லி இருக்கிறேன், வைணவர்களைப் பொருத்த அளவில் கிருஷ்ணன் தான் முதலில் பிறகு தான் சுடுகாட்டு சாம்பலைப் பூசிக் கொள்ளும் ருத்ரன்

    ReplyDelete
  75. //இல்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்//

    வாத்தியார் ஐயா, இவ்வளவு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன், இருந்தாலும் பிடிங்க கோடி நன்றி

    ReplyDelete
  76. iyer said...
    ///நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை அல்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
    "இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை"
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகி னோமே///

    நன்றி ஐயா !!!

    ReplyDelete
  77. கைகாட்டி said...
    ///சுக்கிர மகாதிசை - சந்திர புக்தி குறித்தான புலிப்பாணி பாடல்
    "ஆவானே சுக்கிரதிசை சந்திரபுத்தி
    அருளில்லாமா தமது நாலைந்தாகும்
    போவானே அதன்பலனை புகழக்கேளு
    பொன்பெறுவாள் அன்னையுமே மரணமாவாள்" ///

    கைகாட்டி நண்பர் (மீசைக்கார நண்பா!!!) குறிப்பிட்ட சுக்கிர மகாதிசை - சந்திர புக்தி குறித்தான புலிப்பாணி பாடலில் உள்ளது போல் என் மாமாவிற்கு சுக்கிர மகாதிசை - சந்திர புக்தி நடக்கும் பொழுதுதான் அவர் அம்மா/என் மாமியார் மரணம். ஆசிரியர் பாடங்களை படிக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்கள் ஜாதகத்தை ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உள்ளது. "அட இந்த ஜோசிய காலையில் ஏதோ இருக்கிறது" என்று அதிசயித்த தருணங்களில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  78. ////Blogger தமிழ் விரும்பி said...
    மைனர்வாள் இன்றைய படத்தில் அசத்தறேல் போங்க... இது படம்... இவ்வளவு அழகான படத்தை வைத்துக்கொண்டு
    பயமுறுத்த வேண்டுமென்றே செய்து இருக்கிறீங்கதானே.////

    எது அழகு எது அழகில்லை மற்றவர்கள் சொன்னால்தானே தெரியும்!:-))))

    ReplyDelete
  79. /////Blogger ananth said...
    நண்பர் ஒருவர் தன் வாழ்க்கையில் நடந்ததை விவரிக்கும் போது, தனக்கு 8, 9க்குரிய சனி தசையில் குரு புத்தியின் போது நடமாட முடியாமல் முடங்கிப் போனதாகவும் வேலை போனதோடு வேறு சில இழப்பும் ஏற்பட்டதாகவும் சொல்லியிருந்தார். தன் துன்பங்கள் எப்போது தீரும் என்று கேட்டிருந்தார். சனி தசையில் 9ம் இடத்திற்குரிய பலன் நிச்சயம் நடந்திருக்கும். ஓஹோவென்று இருந்திருப்பீர்கள். என்றேன். ஆமாம் என்று ஒத்துக் கொண்டார். ஒரு கிரகம் 2 ஸ்தான ஆதிபத்தியம் பெற்றிருந்தால் எந்த ஸ்தானத்திற்கான பலனை எப்போது செய்யும் என்று அனுமானிப்பது கடினம். நல்லது செய்யும்போது ஆணவத்தில் ஆடாமல் நம்மால் முடிந்த நல்ல காரியங்களைச் செய்து வந்தால் கெட்ட காலம் வரும் போது நம்மை பாதிக்காத வண்ணம் வரும். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இப்போது ஒன்றும் இல்லாமல் அல்லது ஒன்றுக்கும் உதவாமல் இருக்கும் சிலரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.//////

    உண்மைதான். உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி ஆனந்த்!

    ReplyDelete
  80. //////Blogger minorwall said...
    ////////ananth said...
    ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இப்போது ஒன்றும் இல்லாமல் அல்லது ஒன்றுக்கும் உதவாமல் இருக்கும் சிலரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.///////
    நண்பர் ஆனந்த் வரிகள் கடுமையாக எனக்குப் படுகிறது..உண்மைதான் என்ற போதிலும் அவரிடமிருந்து இப்படி வரிகளை நான் எதிர்பார்க்கவில்லை..//////

    உணர்வோடு எழுதும்போது இதெல்லாம் சகஜம் சாமி!

    ReplyDelete
  81. //////Blogger Thanjavooraan said...
    மாணவி ஸ்ரீஷோபனா தஞ்சையில் நடைபெறும் சதயத்திருநாள் பற்றி குறிப்பிட்டு வெளி நாட்டார் வந்து கலந்து கொள்கிறார்கள், நம்மவர்களுக்குத் தெரியவில்லை என்பது போல வருத்தப்பட்டிருந்தார். தயவு செய்து என்னுடைய வலைப்பூவான
    www.bharathipayilagam.blogspot.com
    சென்று சதயத்திருநாள் பற்றிய கட்டுரையைப் படிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.///////

    ஆகா, அனைவரும் பார்ப்பார்கள். தகவலுக்கு நன்றி சார்!

    ReplyDelete
  82. ////////Blogger minorwall said...
    ///தமிழ் விரும்பி said...
    மைனர்வாள் இன்றைய படத்தில் அசத்திறேல் போங்க...
    இது படம்... இவ்வளவு அழகானப் படத்தை வைத்துக்கொண்டு
    பயமுறுத்த வேண்டுமென்றே செய்து இருக்கிரீங்கத் தானே.//////
    சும்மா நம்ம மிரட்டல் மீசைக்காரர் கைகாட்டியுடன் உரையாடலில் இருந்து ரெண்டு நாள் பத்து வருஷத்துக்கு முன்னாளைய படங்களை (சும்மா வெச்சுப் பார்த்தது..அதுவும்) ப்ரோஃபைலில் மாற்றியிருந்தேன்..
    நேத்திக்கே நீங்க வேற சொல்லிட்டீங்க..அதான்..
    எதுக்கு இப்படிவிபரீதம் என்று சமீபத்துப் படத்துக்கே தாவிவிட்டேன்..
    கவனித்து நல்லா இருக்குன்னு சொன்னதுக்கு தேங்க்ஸ்..///////

    அடுத்த குரு பெயர்ச்சிவரை இதை மாற்ற வேண்டாம் மைனர்!

    ReplyDelete
  83. ////Blogger Shyam Prasad said...
    இக்கோயிலில் அருள்பாலிக்கும் வைத்தியநாத சுவாமியை ஜடாயு (புள்), ,ரிக் வேதம் (இருக்கு), முருகன் (வேல்), சூரியன் (ஊர்) ஆகியோர் வழிபட்டதால் புள்ளிருக்குவேலூர் என்ற பெயரிலும் அழைகப்படுகிறது.ஆதலால் செல்லமுத்துகுமாரசுவாமியை (இம்முருகனை) புள்ளிருக்குவேலுரான் என்றும் சொல்லுவார்கள்.
    மேலும் இம்முருகன் சிதம்பரம் கோயிலில் ஆதியில் இருந்ததாகவும், அண்டைய படையப்பு காலத்தில் வைதீஸ்வரன் கோயிலுக்கு வந்ததாகவும் சொல்லுவார்கள்.//////

    இருக்கலாம். மேலதிகத்தகவல்களுக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  84. /////Blogger minorwall said...
    /////Thanjavooraan said...
    மாணவி ஸ்ரீஷோபனா தஞ்சையில் நடைபெறும் சதயத்திருநாள் பற்றி குறிப்பிட்டு வெளி நாட்டார் வந்து கலந்து கொள்கிறார்கள், நம்மவர்களுக்குத் தெரியவில்லை என்பது போல வருத்தப்பட்டிருந்தார். தயவு செய்து என்னுடைய வலைப்பூவான
    www.bharathipayilagam.blogspot.com
    சென்று சதயத்திரு நாள் பற்றிய கட்டுரையைப் படிக்குமாறு அன்போடு வேண்டுகிறேன்.////
    வெளிநாட்டவர் பற்றி இந்தக் கமெண்டில் சொல்லப்பட்டதால் அந்தக் காலத்திலிருந்தே இது தொடர்கிறது என்பதைக் குறித்து ஒரு செய்தி..
    சென்ற முறை நடந்த சதயத் திருவிழா படங்களை எனக்கும் அனுப்பியிருந்தார் தஞ்சாவூரார்..அதிலே தஞ்சாவூர் கோபுரத்து சிலையின் வடிவங்களில் ஒரு வெள்ளைக்காரர் சிலை இருப்பதுகுறித்தும் கீழ்கண்டவாறு விளக்கி அந்த போட்டோவையும் அனுப்பியிருந்தார்..
    நினைவு கூர்கிறேன்..
    கோயிலின் நுழைவாயிலில் அமைந்தது கோபுரம், மூலத்தானத்தின் மேல் அமைந்தது விமானம். தஞ்சை ராஜராஜேச்சர விமானத்தின் வடபுறம் இரண்டாம் தளத்தில் ஒரு சிற்பம் இருக்கிறது. அது கோட், தொப்பி அணிந்த ஒரு மேல்நாட்டார் ஒருவரின் உருவம். அதைப்பற்றிப் பல பொய்க்கதைகள் உலவுகின்றன. அது ரகுநாத நாயக்கர் காலத்தில் செதுக்கப்பட்ட சிற்பம். தரங்கம்பாடியில் அப்போது குடியேறியிருந்த டச்சுக்காரர் ஒருவரின் சிற்பம் அது. அவர் ரகுநாத நாயக்கனுக்கு போரில் உதவிகள் பல செய்தவர். அதன் நன்றிக்கடனாக, நாயக்க மன்னர்கள் ஆலயத்தில் பல புதிய கட்டுமானங்களைக் குறிப்பாக சுப்பிரமணிய சுவாமிக்கு ஆலயம் எழுப்பிய போது கோபுரத்தில் இந்த சிற்பத்தை வெட்டுவித்ததாக வரலாறு கூறுகிறது. அந்த புகைப்படத்தில் நடுவில் அமைந்த ஒரு சிற்பத்தைப் பாருங்கள். ஒரு வெளிநாட்டவரின் தொப்பி அணிந்த உருவத்தைப் பார்ப்பீர்கள். மீண்டும் நன்றி. தங்கள், தஞ்சை வெ.கோபாலன்//////

    ஆகா, அடுத்தமுறை அக்கோவிலுக்கு செல்லும்போது பார்க்கிறோம் மைனர்! தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  85. ///////Blogger ananth said...
    //Blogger minorwall said...
    ////////ananth said...
    ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி இப்போது ஒன்றும் இல்லாமல் அல்லது ஒன்றுக்கும் உதவாமல் இருக்கும் சிலரைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.///////
    நண்பர் ஆனந்த் வரிகள் கடுமையாக எனக்குப் படுகிறது..உண்மைதான் என்ற போதிலும் அவரிடமிருந்து இப்படி வரிகளை நான் எதிர்பார்க்கவில்லை..//
    நான் எப்போதும் கடுமையாக எழுத வேண்டும் என்று நினைத்ததில்லை. சில சமயங்களில் என்னையும் மீறி அப்படி நடந்து விடுகிறது. இனி இது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துகிறேன். சுட்டிக் கட்டியமைக்கு நன்றி./////////

    உணர்வோடு எழுதும்போது இதெல்லாம் சகஜம் ஆனந்த்!! எழுத்தில் அவற்றைத் தவிர்க்க, மீண்டும் ஒருமுறை படித்துப் பார்த்து திருத்தங்களைச் செய்யலாம்!

    ReplyDelete
  86. /////Blogger iyer said...
    ///கடவுள் என்றால் எல்லாவற்றையும் கடந்தவர். இறைவன் என்றால் எல்லாவற்றையும் இன்னும் கடக்காதவரா? என்ன சொல்ல வருகிறீர்கள் சுவாமி?///
    ஆமாம் வாத்தியர் அய்யா...
    அவ்விரண்டும் வேறு தெய்வமும் வேறு
    இது தெரியாததால் தான்
    இங்கே ஆத்திகவாதிகள் பலரும்
    அங்கே நாத்திக வாதிகள் சிலரும்
    அந்த வேறுபாட்டை அப்படி பார்கின்றனர்
    நம் மொழியில் சொன்னால்
    நம் (தமிழ்) நாட்டின்
    அமைச்சர்களும் ஒன்று தான் முதல்
    அமைச்சரும் அமைச்சர் தான்..
    ஆனால்
    முதல் அமைச்சர் வேறு
    முகம் காட்டும் அமைச்சர் வேறு தானே
    முதலமைச்சர் உத்திரவின்றி
    முன்னதாக எந்த அமைச்சரும்
    பணியாற்ற முடியுமா...
    பரவாயில்லை...
    முதலமைச்சருக்கு வணக்கம் தருவோம்
    முன்பு போலவே அமைச்சர்களுக்கும்
    இந்த வேறுபாட்டினை விளக்கிச் சொல்ல
    இன்னமும் ஒரு வகுப்பறை தேவை
    மற்றவர்களுக்கு இது தேவையில்லை..
    மாற்றாக இல்லாமல் இங்கே
    விவாதமின்றி நிறைவு செய்கிறோம்
    விளக்கங்கள் இல்லாமலேயே..///////

    இன்னும் கொஞ்சம் (எனக்கு) அறிவு வளர வேண்டும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்!

    ReplyDelete
  87. //////Blogger k.prema said...
    prema- iyya vanakkam. indraya padhivu super./////

    நல்லது. நன்றி அம்மணி!

    ReplyDelete
  88. /////Blogger கோவி.கண்ணன் said...
    //அதில் சொன்னதை திரும்பவும்
    அப்படியே சொல்கிறோம்..
    கடவுள் வேறு..
    தெய்வம் வேறு..
    இறைவன் வேறு..///
    விஷ்ணு இறைவன் இல்லை சாதாரண தெய்வம் என்று இதை யாராவது நாமம் போட்ட வைணவரிடம் சொல்லி
    அவர்கள் கொடுப்பது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.//////

    பணமாகக் கொடுப்பார்களா? அல்லது காசோலையாகக் கொடுப்பார்களா? தெரிந்தால் நானும் முயன்று பார்ப்பேன்:-))))

    ReplyDelete
  89. //////Blogger கோவி.கண்ணன் said...
    //வயது முதிர்ந்த பெண்களை நாம் அம்மா என்று சொல்வதுண்டு. இவர்கள் அம்மா என்றால் வீட்டில் உன்னை பெற்றவர் இருக்கிறாரே, அவர் யார், அவரை என்னவென்று கூப்பிடுவீர்கள் என்று நண்பர் கேட்பார் போலும்.//
    தமிழ்நாட்டுக்கு ஒரே அம்மா தான் இந்தியாவுக்கு ஒரே அன்னைத்தான்,
    யார் யார் மீது பயம் வருகிறதோ அவர்களெல்லாம் அம்மா தானே :)
    மேலே ஐயருக்கு சொல்லி இருக்கிறேன், வைணவர்களைப் பொருத்த அளவில் கிருஷ்ணன் தான் முதலில் பிறகு தான் சுடுகாட்டு சாம்பலைப் பூசிக் கொள்ளும் ருத்ரன்///////

    வைணவர்கள், சைவர்கள் மோதலைப் போலவே, உலகம் முழுவதிலும் அனைத்து மதங்களிலும் இந்த மோதல் உண்டு. கத்தோலிக், ப்ராட்டஸ்டெண்ட், அல்லேலுயா, சன்னி முஸ்லிம், சியா முஸ்லிம். என்று சொல்லச் சொல்ல அது விரிவடையும்

    ReplyDelete
  90. //////Blogger கோவி.கண்ணன் said...
    //இல்லை. அவர் என்னுடைய நெருங்கிய நண்பர்//
    வாத்தியார் ஐயா, இவ்வளவு விளக்கம் தேவை இல்லை என்று நினைக்கிறேன், இருந்தாலும் பிடிங்க கோடி நன்றி/////

    கோடியைப் பணமாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும். அறக்கட்டளை ஒன்றைத் துவங்கிவிடுவேன். வெறும் நன்றியை வைத்து எதைத் துவங்குவது?

    ReplyDelete
  91. //////Blogger தேமொழி said...
    iyer said...
    ///நாமார்க்குங் குடியல்லோம் நமனை அஞ்சோம்
    நரகத்தி லிடர்ப்படோம் நடலை அல்லோம்
    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
    "இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை"
    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
    சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற்
    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
    கொய்ம்மலர்ச்சே வடிஇணையே குறுகினோமே///
    நன்றி ஐயா !!!//////

    ஆமாம். ஆமாம். ஒரு நல்ல பாடலைத் தெரிவித்த மேன்மைக்கு நானும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன்!

    ReplyDelete
  92. ///////Blogger தேமொழி said...
    கைகாட்டி said...
    ///சுக்கிர மகாதிசை - சந்திர புக்தி குறித்தான புலிப்பாணி பாடல்
    "ஆவானே சுக்கிரதிசை சந்திரபுத்தி
    அருளில்லாமா தமது நாலைந்தாகும்
    போவானே அதன்பலனை புகழக்கேளு
    பொன்பெறுவாள் அன்னையுமே மரணமாவாள்" ///
    கைகாட்டி நண்பர் (மீசைக்கார நண்பா!!!) குறிப்பிட்ட சுக்கிர மகாதிசை - சந்திர புக்தி குறித்தான புலிப்பாணி பாடலில் உள்ளது போல் என் மாமாவிற்கு சுக்கிர மகாதிசை - சந்திர புக்தி நடக்கும் பொழுதுதான் அவர் அம்மா/என் மாமியார் மரணம். ஆசிரியர் பாடங்களை படிக்கும் பொழுது வீட்டில் உள்ளவர்கள் ஜாதகத்தை ஒப்பிட்டு பார்க்கும் வழக்கம் உள்ளது. "அட இந்த ஜோசிய காலையில் ஏதோ இருக்கிறது" என்று அதிசயித்த தருணங்களில் இதுவும் ஒன்று./////

    அதையெல்லாம் - அதிசயித்த தருணங்களை எல்லாம், கட்டுரையாக எழுதலாம் இல்லையா?

    ReplyDelete
  93. ///விஷ்ணு இறைவன் இல்லை சாதாரண தெய்வம் என்று இதை யாராவது நாமம் போட்ட வைணவரிடம் சொல்லி
    அவர்கள் கொடுப்பது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.//////

    நன்றி..

    வைணவர்களிடம் நாம் சொல்வதில்லை
    வைணவர்களையே சொல்லும்படி

    கடவுள் இறைவன் தெய்வம் இதனை
    கசடற அறிய விளக்கம் கேட்டாலே

    அவர்களே சொல்லி விடுவர்
    அதற்கு அத்தனை முயற்சி வேண்டாமே

    திவ்யபிரபந்தங்களிலிருந்து
    திரட்டிய குறிப்புகளுக்கு விளக்கம்

    கேட்டு அமைதி கொண்டால் போதும்
    கேட்டுட்டானே இவன் என அவர்கள்

    "விலகி" செல்வார்கள் அல்லது
    "விலக்கி" வைப்பார்கள்...

    கருஞ்சட்டைகாரர்களுக்கும் இப்படியே
    கருத்துக்களை அவர்களே ஏற்கும் படி

    சைவதே நமக்கு கைவந்த கலை
    பையவே மாறும், மாத்த வேண்டுவது

    நம் நோக்கமல்ல.. ஆனாலும்
    நம்மவர்கள் தெரிஞ்சுக்கணுங்கிறது தான்

    எண்ணம் அதற்கு
    எப்போதாவது தடை உண்டா என்ன?

    இந்த குறளை நினைவுக்கு தந்து
    இதனை நிறைவு செய்கிறோம்..

    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லும் சொல் இன்மை அறிந்து.

    (விரும்பினால் பிரபந்த குறிப்புகளை தருகிறேன்)

    ReplyDelete
  94. முக்கியமாக சொல்ல
    முருகன் என்ற சொற்பதம்

    திவ்ய பிரந்தத்தில் உண்டு
    திகைப்பாகவே பல இன்னும் சொன்னால்

    ராமானுஜரின் பிரம்ம சூத்திர உரையும்
    பிள்ளை பெருமாளய்யங்காரின்எழுத்தும்

    ஒருமுறை புரட்டி பார்த்து சொல்லுங்க
    ஒக்கர்ந்து பேசுவோம் அமைதியாக..

    ReplyDelete
  95. ///மேலே ஐயருக்கு சொல்லி இருக்கிறேன், வைணவர்களைப் பொருத்த அளவில் கிருஷ்ணன் தான் முதலில் பிறகு தான் சுடுகாட்டு சாம்பலைப் பூசிக் கொள்ளும் ருத்ரன்///////

    மோதல்கள் விரிவடைவதில்லை..
    முட்டி விழுவோம் என்ற பயத்தால்

    வைணவ சைவ மோதல்
    வைத்திருக்கும் முத்தி நிலையிலே

    இப்படி மற்ற முறைகளிலே உள்ள
    இவைகள் ஆணவத்தினால் வருவது

    எந்த மதப்பிரிவுகளில் எடுத்தாலும்
    அந்த அடிப்படை வேர் இங்கிருந்து தான்

    மகாயானம் ஹீனயானம் சொல்லும்
    மக்கள் மத்தியிலுள்ள பௌத்தமாகட்டும்

    திகம்பரர் ஸ்வெத்தம்பரர் என சொல்லும்
    தீர்தங்கரரை தந்த சமணமாகட்டும்

    அந்த நாலுக்குள்ளே அடங்கும்..
    அதனை கவிஞரும் இப்படி பாடினார்

    ஆற்று வெள்ளம் தானே ஓடும்
    ஆசை வெள்ளம் சொந்தம் தேடும்

    சொந்தம் ஏதும் இல்லை என்றால்
    அந்த நேரம் "நால்வர்" வேண்டும்

    இன்பத்தையே பங்கு வைத்தால்
    புன்னகை சொல்வது நன்றி

    துன்பத்திலே துணை வந்தால்
    கண்ணீர் சொல்வது நன்றி...

    'வாழும் போது வருவோர்க்கெல்லாம்
    வார்த்தையாலே நன்றி சொல்வோம்.

    வார்த்தை இன்றிப் போகும் போது...
    மௌனத்தாலே நன்றி சொல்வோம்..!

    ReplyDelete
  96. இது தான் வாழ்க்கையா? என்ற இன்றைய சுவரொட்டி சுவாரஸ்யமாக இருக்கிறது ஐயா!

    ReplyDelete
  97. "தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனின் 1026 . பிறந்த தின விழா"
    இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த மனிதனின் பிறந்த தினம் கொண்டாடப் படுகிறது என்றால் அது அவனின் அந்த சீரியச் செயலால் என்று நினைக்கும் போது உண்மையில் பெருமிதம் கொள்வோம்.
    செயற்கரிய செய்வார் பெரியர்...

    ReplyDelete
  98. /--
    அதையெல்லாம் - அதிசயித்த தருணங்களை எல்லாம், கட்டுரையாக எழுதலாம் இல்லையா?
    --/
    இது நல்ல யோசனை. நம் வாழ்க்கைச் சம்பவங்களை ஜோதிடத்துடன் பொருத்தி எழுதினால், ஜோதிடக் கருத்துக்களை இன்னும் நன்றாக மனதில் இருத்த முடியும். பள்ளி/கல்லூரியில் நாம் செய்யும் Practical Classes போல.
    என் அனுபவங்களையும் நான் எழுதி அனுப்புவேன்.
    நா.துரைசாமி
    எர்ணாகுளம்.

    ReplyDelete
  99. தமிழ் விரும்பி said...
    ///இது தான் வாழ்க்கையா? என்ற இன்றைய சுவரொட்டி சுவாரஸ்யமாக இருக்கிறது ஐயா!///

    ஆமாம் ஐயா, நானும் சகோதரர் ஆலாசியம் கூற்றை வழிமொழிகிறேன். அத்துடன், இதற்கு முன்பிருந்த மெட்ரோ ரயில், முதலை மேல் அமர்ந்து பயணம் செய்யும் நேர்த்திக் கடன் (ஹி.. ஹி.. ஹி... எப்படி, எப்படி... இப்படியெல்லாம் தலைப்பு போடத் தோன்றுகிறதோ?) படங்களும் அருமை.

    ReplyDelete
  100. Blogger iyer said...
    ///விஷ்ணு இறைவன் இல்லை சாதாரண தெய்வம் என்று இதை யாராவது நாமம் போட்ட வைணவரிடம் சொல்லி
    அவர்கள் கொடுப்பது அனைத்தையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.//////
    நன்றி..
    வைணவர்களிடம் நாம் சொல்வதில்லை
    வைணவர்களையே சொல்லும்படி
    கடவுள் இறைவன் தெய்வம் இதனை
    கசடற அறிய விளக்கம் கேட்டாலே
    அவர்களே சொல்லி விடுவர்
    அதற்கு அத்தனை முயற்சி வேண்டாமே
    திவ்யபிரபந்தங்களிலிருந்து
    திரட்டிய குறிப்புகளுக்கு விளக்கம்
    கேட்டு அமைதி கொண்டால் போதும்
    கேட்டுட்டானே இவன் என அவர்கள்
    "விலகி" செல்வார்கள் அல்லது
    "விலக்கி" வைப்பார்கள்...
    கருஞ்சட்டைகாரர்களுக்கும் இப்படியே
    கருத்துக்களை அவர்களே ஏற்கும் படி
    சைவதே நமக்கு கைவந்த கலை
    பையவே மாறும், மாத்த வேண்டுவது
    நம் நோக்கமல்ல.. ஆனாலும்
    நம்மவர்கள் தெரிஞ்சுக்கணுங்கிறது தான்
    எண்ணம் அதற்கு
    எப்போதாவது தடை உண்டா என்ன?
    இந்த குறளை நினைவுக்கு தந்து
    இதனை நிறைவு செய்கிறோம்..
    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
    வெல்லும் சொல் இன்மை அறிந்து.
    (விரும்பினால் பிரபந்த குறிப்புகளை தருகிறேன்)///////

    நாலாயிர திவயப் பிரபந்தக் குறிப்புக்களா? அம்மாடியோவ்....!

    ReplyDelete
  101. /////Blogger iyer said...
    முக்கியமாக சொல்ல
    முருகன் என்ற சொற்பதம்
    திவ்ய பிரந்தத்தில் உண்டு
    திகைப்பாகவே பல இன்னும் சொன்னால்
    ராமானுஜரின் பிரம்ம சூத்திர உரையும்
    பிள்ளை பெருமாளய்யங்காரின்எழுத்தும்
    ஒருமுறை புரட்டி பார்த்து சொல்லுங்க
    ஒக்கர்ந்து பேசுவோம் அமைதியாக../////

    ஆகா உட்கார்ந்து பேசுவோம். நீங்கள் பேசுங்கள். நாங்கள் கேட்கிறோம். யாரப்பா அங்கே? அடையார் பார்க்க்ஷெரட்டான் ஹோட்டல் Conference Hall ஐ இரண்டு நாட்களுக்குப் முன்பதிவு செய்து வை!

    ReplyDelete
  102. Blogger தமிழ் விரும்பி said...
    இது தான் வாழ்க்கையா? என்ற இன்றைய சுவரொட்டி சுவாரஸ்யமாக இருக்கிறது ஐயா!/////

    ரசித்துப் பின்னூட்டமிட்டமைக்கு நன்றி!

    ReplyDelete
  103. /////Blogger தமிழ் விரும்பி said...
    "தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனின் 1026 . பிறந்த தின விழா"
    இத்தனை வருடங்களுக்குப் பிறகும் இந்த மனிதனின் பிறந்த தினம் கொண்டாடப் படுகிறது என்றால் அது அவனின் அந்த சீரியச் செயலால் என்று நினைக்கும் போது உண்மையில் பெருமிதம் கொள்வோம்.
    செயற்கரிய செய்வார் பெரியர்...////

    விழுந்து விழுந்து பொன்னியின் செல்வன் நாவலைப் பலமுறைகள் படித்தமையால், சின்ன வயதில் இருந்து ராஜராஜ சோழனும், வந்தியத் தேவனும்தான் எனக்குப் பிடித்த நாயகர்கள்!

    ReplyDelete
  104. /////Blogger கைகாட்டி said... /--
    அதையெல்லாம் - அதிசயித்த தருணங்களை எல்லாம், கட்டுரையாக எழுதலாம் இல்லையா?--/
    இது நல்ல யோசனை. நம் வாழ்க்கைச் சம்பவங்களை ஜோதிடத்துடன் பொருத்தி எழுதினால், ஜோதிடக் கருத்துக்களை இன்னும் நன்றாக மனதில் இருத்த முடியும். பள்ளி/கல்லூரியில் நாம் செய்யும் Practical Classes போல.
    என் அனுபவங்களையும் நான் எழுதி அனுப்புவேன்.
    நா.துரைசாமி
    எர்ணாகுளம்.////

    நல்லது. துவங்கிவையுங்கள்.நன்றி!

    ReplyDelete
  105. //////Blogger தேமொழி said...
    தமிழ் விரும்பி said...
    ///இது தான் வாழ்க்கையா? என்ற இன்றைய சுவரொட்டி சுவாரஸ்யமாக இருக்கிறது ஐயா!///
    ஆமாம் ஐயா, நானும் சகோதரர் ஆலாசியம் கூற்றை வழிமொழிகிறேன். அத்துடன், இதற்கு முன்பிருந்த மெட்ரோ ரயில், முதலை மேல் அமர்ந்து பயணம் செய்யும் நேர்த்திக் கடன் (ஹி.. ஹி.. ஹி... எப்படி, எப்படி... இப்படியெல்லாம் தலைப்பு போடத் தோன்றுகிறதோ?) படங்களும் அருமை.//////

    “தலைப்பை நன்றாகப்போடு
    தானே வருவார்கள்
    எழுதுவதை நன்றாக எழுது
    எல்லோரும் படிப்பார்கள்”

    என்பதுதான் எழுத்தின் தாரகமந்திரம்!
    நன்றி சகோதரி!

    ReplyDelete
  106. when you say it is simple,
    it says not as simple as you think

    முயற்சிப்பவனுக்குதானே தெரியும் மூச்சு முட்டுவது.

    that's life
    that's correct.

    ReplyDelete
  107. கைகாட்டி said...நம் வாழ்க்கைச் சம்பவங்களை ஜோதிடத்துடன் பொருத்தி எழுதினால், ஜோதிடக் கருத்துக்களை இன்னும் நன்றாக மனதில் இருத்த முடியும். பள்ளி/கல்லூரியில் நாம் செய்யும் Practical Classes போல.

    உண்மைதான்.கைகாட்டி அவர்கள் நல்ல யோசனை சொல்லி உள்ளார்.-நன்றி.

    ஜாதக அலசலை படிக்கும் போதெல்லாம் எனக்கும்இப்படி ஒரு யோசனைவரும் சிலர் சொல்வார்கள் எனக்கும் இந்த கிரகம் இங்கு இருக்கிறது இதற்கு என்ன பலன் என்று கேட்பார்கள் , அப்போது எனக்கு தோன்றும்; நடப்பு தசையை விட்டு விட்டு இதற்கு முன்பு நடந்த தசையில் நடப்பு தேசாயின் புக்தியில் என்ன நடந்தது என்பதை யோசித்து பார்த்தல் நடக்கும் தசைக்கு ஓரளவிற்கு பலன் யூகித்து விடலாம்.இதனை வகுப்பறை நண்பர்கள் பாடமாக பகிர்ந்து கொள்ளும் போது,நண்பர் கைகாட்டிஅவர்கள் சொன்னது போல் நல்ல பயிற்சியாக அமையும்.

    ReplyDelete
  108. //இரு தரப்பாரும் மாய்ந்து மாய்ந்து பாற்கடலைக் கடைந்தார்கள். இப்படி அவர்கள் முழு மூச்சுடன் மூச்சிறைக்கக் கடைந்த சமயம் கடல் பிளந்து கொண்டது. தாமரை மலர்வது போல அது மெல்ல மெல்ல விரிந்து அதிலிருந்து தன்வந்த்ரி எனும் மருத்துவக் கடவுள் வெளிப்பட்டது. அதன் பொன்னிற மேனி முழுவதும் கடல் நீர் பொட்டுப் பொட்டாக மிளிற, கையில் ஒரு பொற் கலசத்தை ஏந்திக் கொண்டு, அதில் அமிழ்தம் மேல் மட்டம் வரை தளும்பி ஆட வெளிவந்தது.//

    மேற்கண்ட பகுதி என்னுடைய வலைப்பூவான‌ http://www.bharathipayilagam.blogspot.com அதில் கஜசம்ஹார மூர்த்தி பற்றி எழுதியுள்ள கட்டுரையில், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமிழ்தம் வேண்டி கடைய, பல பொருட்கள் தீயனவும், நல்லனவும் வெளிப்பட்டு கடைசியாக மருத்துவக் கடவுளான தன்வந்த்ரி அமிழ்த கலசம் ஏந்தி வந்ததாகப் புராணம் சொல்லுகிறது. தன்வந்த்ரி பற்றி விவரம் சிலர் வைத்தீஸ்வரன்கோயில் கட்டுரைக்கு பின்னூட்டத்தில் கேட்டிருந்தார்கள். பாற்கடலில் இருந்து அமிழ்தம் கொண்டுவந்த தேவன் இந்த தன்வந்த்ரி என்பதற்கு என்னுடைய வலைத்தளத்தைப் பாருங்கள். நன்றி.

    ReplyDelete
  109. நல்ல பதிவு ஐயா,என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு எழுத யாராலும் முடியாது என்பது எனது திடமான வாதம்.சனி,ராகு பௌலிங் போட்டால் மிடில் ஸ்டெம்ப் பறக்கும் இந்த மாதிரியெல்லாம் எழுதுவது தான் உங்கள் உரைநடையின் சிறப்பு.ஆறாம் அதிபதியின் தசை எனக்கு இப்போயில்லை.43 வயதில் தான் சாட்சாத் சனிபகவான் 6ம் அதிபதியாக(சிம்ம லக்கினம்) வரவிருக்கிறார்.அப்பொழுது பார்த்துக்கொள்வோம்.இருக்கவே இருக்கிறார் குன்றக்குடி முருகன் பயப்படத்தேவையில்லை.

    ReplyDelete
  110. அய்யா வணக்கம்!

    ஆறாம் இடத்து அதிபன் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருந்து அந்த திசாகாலத்தின் பயன் எவ்வாறு இருக்கும்?

    ReplyDelete
  111. தன்வந்திரி தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது திருமகள் (அ) லட்சுமிதேவியுடன் பிறந்தவர் (அ) வெளியில் வந்தவர். ஆகவே ஒரு விதத்தில் திருமகளின் சகோதரர் ஆவார். அப்படியிருக்க அவரை விஷ்ணுவின் அம்சம் (அ) அவதாரம் என்று கூறுவது முறையாகுமா என்று தெரியவில்லை.

    தமிழகத்தில் தன்வந்திரி சன்னதிகள் நிறைய இருந்தாலும், முதன்முதலில் அறிமுகம் ஏற்பட்டது மும்பையில் ஒரு அலோபதி டாக்டர் க்ளினிக்‍கில் தான்.

    இவரை நாம் ஆயுர்வேத டாக்டர், சிவன் அலோபதி டாக்டர் என வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டியதில்லை என்பது என் கருத்து. அலோபதி என்பது இக்காலத்திய மருத்துவ முறை. ஆனால் ஆயுர்வேதம் என நாம் வித்தியாசப்படுத்தும் பழமை மருத்துவத்தில் எல்லாமும் உள்ளடங்கி இருக்கிறது. ஆகவே மருத்துவம் என்றால் ஒரு தன்வந்திரி. எனவே மருத்துவ கடவுள் என்று இவரை அழைக்கலாம்.

    வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமார சுவாமி அதாவது முருகன் அவ்விடத்தில் விஷேசம். திருசெந்தூர் முருகன் குரு ஸ்வரூபம். வைத்தீஸ்வரன் கோயில் முத்துக்குமரன் செவ்வாய் ஸ்வரூபம்.
    வைத்தீஸ்வரன் கோயில் சத்ரு சம்ஹார த்ரிசதி பூஜை மிகவும் விசேஷமானது. இங்கு சத்ரு என்பது ஒருவருரிடத்தில் இருக்கும் பயம், பொறாமை, கோபம் போன்ற உள்ளிருக்கும் சத்ருக்கள். ஆனால் கலிகாலத்தில் அர்த்தம் அறியாமல் வெளி எதிரிகள் அழிய வேண்டும் என்று எண்ணி செய்கின்றார்கள். நோக்கமே சரியில்லாதபோது முருகன் என்ன பண்ணுவார் பாவம். "யாமிருக்க பயமேன்" என்பது இரு எழுத்து ஒன்பது வார்த்தை கொண்ட மிகவும் சக்தி வாய்ந்த மந்த்ரம். இதை நினைவில் இருத்திக்கொண்டால் நமது வாக்கும், செயலும் தாமாகவே சரியான பாதையைக் காட்டும். இரண்டாம் வீட்டின் சக்தி ஓன்பதாம் வீட்டிற்கு செல்லும் போது, தன்னால் வாழ்க்கை மேம்படும்.
    ஓம் சரவணபவாய நம.

    ReplyDelete
  112. ஐயா வணக்கம்

    /// தன்வந்திரிக்குக் கோவில், இங்கே (கோவையில்) கேரள ஆர்யவைத்திய சாலை வளாகத்தில் மட்டுமே உள்ளது. வேறு இடங்களில் இருந்தால், அறிந்தவர்கள் சொல்லலாம்///

    திண்டுக்கல் அருகே தாடிகொம்பு என்ற ஊரில் ஸ்ரீசௌந்தராஜ பெருமாள் கோயிலில் தன்வந்திரிக்கு தனியாக சந்நதி உள்ளது.
    நன்றி ஐயா.
    கண்ணன்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com