---------------------------------------------------------------------------------------
அறிவுத்தாகம் உள்ளவர்கள் என்ன செய்தனர்?
வெள்ளி மலர்
ஒஷோ பற்றிப் பேசுவதே ஒரு அறிவுஜீவி உணர்வை கொடுத்த
காலம் ஒன்று உண்டு. அந்தக் காலகட்டத்திற்கு முந்தைய கால
கட்டத்தில் ஞானத் தேடல் உள்ளவர்கள் அனைவருடைய
உரையாடல்களிலும் தவறாமல் இடம் பிடித்தவர் ஜே கே!
ஜேகே என்றால் ஜெயகாந்தன் என்றும் பொருள்படும். ஆனால்
நாம் இங்கே பேசுவது ஜெயகாந்தன் பற்றி அல்ல.
நமது ஜேகே ஜிட்டு (JIDDU) கிருஷ்ணமூர்த்தி ஆவார்.
ஜேகே பிறந்தது ஆந்திராவில் உள்ள மதனப்பள்ளியில்! பிறந்த
தேதி 11 மே 1895.அவர் பிறந்த சமயத்தில் அன்னிபெசன்ட்
அம்மையார் தியாசாபிகல் சொசைட்டி மூலம் மேற்கையும்
கிழக்கையும் ஆன்மீகத்தில் இணைக்கமுற்பட்டிருந்தார்.
மேலும் 'ஹோம் ரூல்' இயக்கம் என்று ஆரம்பித்து ஆங்கில
அரசாங்கத்துக்கு அரசியல் சங்கடங்களையும் கொடுத்து வந்தார்.
பெசன்ட் அம்மையார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.அயர்லாந்தும் நம்மைப் போலவே இங்கிலாந்துக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது.
எனவே இந்திய விடுதலைப் போராட்டம் இயல்பாகவே ஒரு மேடை
ஆயிற்று பெசன்ட் அம்மைக்கு.
ஒருநாள் அவர் நடைப்பயணம் செல்லும் போது தெருவில்
விளையாடிக் கொண்டு இருந்த கிருஷ்ணமூர்த்தியைக் கண்டார். அந்தச்சிறுவனின் முகப்பொலிவு அவருக்கு 'இதோ நான் எதிர்
பார்த்துக் காத்திருந்த'மெஸ்ஸையா'(கடவுள் தூதர்) இவர்தான்'
என்று தோன்றிவிட்டது.பையனைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார்.'அம்மையார் என் பையனைக் கடத்திச்சென்று விட்டார்'
என்று ஜேகேயின் தந்தையார் வழக்குத்தொடர்ந்தார்.பெசன்ட்
ஜேகேயை சட்டப்படி தத்து எடுத்துக் கொண்டு வளர்த்தார்.
ஜேகேவுக்கு ஒரு தேவதூதனுக்கு உண்டானஎல்லா மரியாதைகளும்
சிறு வயதிலிருந்தே காண்பிக்கப்பட்டன.ஒரு தத்துவ மேதையை
ஒரு சிற்பியின் நுணுக்கத்துடன் பெசன்ட் வடித்து எடுத்தார்.
ஜேகேவுக்காக ஒரு அகில உலக இயக்கம் துவக்கப்பட்டது. "Order
of the Star in the East" என்று பெயரிடப்பட்டது. உலகின் எல்லா நாடுகளிலும் கிளைகள் துவங்கப்பட்டன.அவருடைய உபதேசங்
களுக்காக உலகத்தின் எல்லா நாடுகளிலும் சீடர்கள் காத்திருந்தனர்.
அப்போதுதான் அந்த எதிர்பாராத திருப்பம் நடந்தது.
ஜேகே "என்ன இதெல்லாம்?எதற்கு இந்த ஆர்பாட்டம் எல்லாம்?
மீண்டும் ஒரு புதிய மதமா? மதங்கள் சடங்குகள்,மதக்கொள்கைகள்
( dogmas) எல்லாம் எதற்காக? யாருக்காக?எனக்கு உங்கள் பதவி,
அமைப்பு எதுவும் வேண்டாம். நான் ஒரு பொதுமனிதன். எனக்கு
நாடு, மதம், வீடு, மொழி என்ற எந்தக் கூடும் கிடையாது.
நான் சுதந்திரமானவன்.என் தலைமைப் பதவியைத் துறக்கிறேன்.
என் பெயரில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் திருப்பிக்
கொடுக்கிறேன். என்னை ஒரு சிறையில் அடைக்க வேண்டாம்."
என்று கூறி அமைப்பை விட்டு வெளியேறினார்.ஒரு அரசரைப்
போன்ற வாழ்வு வேண்டாம் என்று துறந்தார்.நவீன கால புத்தர் என்று சொல்லலாம் ஜேகேயை.
உலகம் ஜேகேயைத் தழுவிக்கொண்டது. அறிவுத்தாகம் உள்ளவர்கள்
எல்லாம் ஜேகேயிடம் வந்தனர்.மனச்சோர்வு உற்றவர்களும்,
மகிழ்ச்சியை இழந்தவர் களும்,வெறுமை உணர்வு கொண்டவர்களும் ஜேகேயின் சொற்களில் ஆறுதல் கண்டனர்.அவர் கூட்டத்தில் பேசும்
போது கேட்பவர் ஒவ்வொருவருக்கும் தனக்காத்தான் தனிப்பட்ட
அறிவுரை கூறுகிறார் என்று தோன்றுமாம்.
தன் 91 வயதில் அவர் இறந்த போது (17 பிப்ரவரி 1986) அவருக்கு
உலகின் எல்லா நாடுகளிலும் அவ்ர் மேல் அன்பும் மதிப்பும்
உள்ளவர்கள் ஏராளம்.
ஜேகே தன்னை குரு என்று கூறிக் கொள்ளவில்லை.எல்லோரும்
ஆடை அணிவது போலவே அணிந்து கொண்டார்.எந்த சாமியார்த்
தனமும் அவரிடம் இல்லை.அவருக்காக உலகின் எந்த மூலையிலும்
கதவுகள் திறந்துஇருந்தன. எல்லோரும் அவருக்காகக் காத்து இருந்தனர். ஆனால் அவர் யாருக்காகவும் காத்திருக்கவில்லை.
தன்னுடைய பேச்சுக்கள் எதுவும் ஒரு பிடிவாதமான மதக் கொள்கை ஆகிவிடக்கூடாது என்பதில் ஜேகே மிகுந்த கவனமாக இருந்தார்.
எந்த ஒரு ஒற்றைப்படையான மத, தத்துவக்கொள்கையுடனும்
தன்னை அவர் இணைத்துக் கொள்ள மறுத்தார்.
ஜேகேயின் சில கருத்துக்களைக்கொடுத்துள்ளேன். மொழி
பெயர்த்தால் அவற்றின் அழகு கெட்டுவிடும். அவர் சொன்ன ஆங்கிலத்திலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். தமிழ்
ஆர்வலர்கள் மன்னிப்பார்களாக.
A consistent thinker is a thoughtless person, because he conforms to a pattern; he repeats phrases and thinks in a groove.
All ideologies are idiotic, whether religious or political, for it is conceptual thinking, the conceptual word, which has so unfortunately divided man.
I maintain that Truth is a pathless land, and you cannot approach it by any path whatsoever, by any religion, by any sect.
The end is the beginning of all things, Suppressed and hidden, Awaiting to be released through the rhythm Of pain and pleasure.
We all want to be famous people, and the moment we want to be something we are no longer free.
You must understand the whole of life, not just one little part of it. That is why you must read, that is why you must look at the skies, that is why you must sing and dance, and write poems and suffer and understand, for all that is life.
The flowering of love is meditation.
Religion is the frozen thought of man out of which they build temples.
When one loses the deep intimate relationship with nature, then temples, mosques and churches become important.
Hitler and Mussolini were only the primary spokesmen for the attitude of domination and craving for power that are in the heart of almost everyone. Until the source is cleared, there will always be confusion and hate, wars and class antagonisms.
இன்னொரு கிருஷ்ணமூர்த்தி இருக்கிறார். அவரும் ஜேகேயைப் போலவே உலகம் முழுவதும் சுற்றி அலைந்தார்.
ஜேகேவைப்போல அன்னிபெசன்ட்டின் பயிற்சி கிடைக்காதவர் அந்தக் கிருஷ்ணமூர்த்தி. ஜேகேயைவிட நமக்கு மிக அணுக்கமானவர்.மிகச் சாதாரணமானவர். அவரைப் பற்றியும் பின்னர் ஒருமுறை எழுதுகிறேன்.
வாழ்க வளமுடன்!
கே.முத்துராமகிருஷ்ணன், லால்குடி
முகாம்:இலண்டன் மாநகர்
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
5.8.11
அறிவுத்தாகம் உள்ளவர்கள் என்ன செய்தனர்?
Subscribe to:
Post Comments (Atom)
மகோன்னதமான மனிதர்கள் யாவரின் சிந்தனைகள் யாவும் ஒரே மாதிரி இருப்பதில் ஆச்சரியமில்லை... அவர்கள் உண்மையை அறிந்தவர்கள்... நூலோ, வாழ்வோ இவைகளை மூன்றாம் பார்வையில் கண்டு மெய்யுணர்வு பெற்றவர்கள். இயற்கையும், எதார்த்தத்தையும் நன்கு புரிந்தவர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்த ஒரு தத்துவ வட்டத்திற்குள்ளும் தன்னை வலையில் விழுந்த மீனைப் போல மாட்டிக் கொள்ளாதவர்கள். அதனாலே மனசாட்சியை ஒருபுறம் மூடி போட்டு மூடிவைத்து விட்டிட்டு, வரட்டுத் தனமும், விகண்டவாதமும் பேசாமல் மனித இனத்தின் தேவை, உண்மையை மட்டுமே அதிலும் எந்த பிரதிபலனும் பார்க்காமல் போகிற போக்கில் ஏனென்றால் வேறு எந்த பிரதிபலனும் எதிர் பார்க்காததால் அப்படி....உண்மையை விதைத்துக் கொண்டே இல்லை புதிதான ஒன்றல்ல; முப்போதும் உள்ளது அது ஆகவே அதற்கு உரமிட்டுப் போகிறார்கள் என்பதே சாலப் பொருந்தும்.
ReplyDeleteஇதில் முக்கிய விஷயம் என்னவென்றால்... இது போன்ற உண்மையைப் பேசுபவர்களை பாராட்டும் நாம் பலரும், உள்ளிருக்கும் உண்மையினுள் உறைவதில்லை என்பது தான் வருத்தப் படவேண்டிய ஒன்று. அவர் தம் கருத்திற்கு ஒரு ரசிகனாக மட்டுமே இருக்கிறோம் அல்லாமல் வேறு இல்லை.
அற்புதப் பதிவு,
நன்றி.
ஜே கேயைப்பற்றிய என் ஆக்கத்தை வெளியிட்டதற்கு நனறி ஐயா!
ReplyDeleteஅவரைப்பற்றிப் பல இணைய தளங்கள் உள்ளன. கூகுள் ஆண்டவர் மூலமாகப் போய் கற்றுக் கொள்ளலாம்.
first time reading about him, thanks!
ReplyDelete"J"ay...
ReplyDelete"K"ay..
okay..
அறிவுஜீவிகள் பற்றிய கட்டுரையாகிப் போனதால் கமெண்ட்டுகள் குறைந்துவிட்டனவோ என்னவோ? எனக்குக் கூட அதே சந்தேகம்தான்..
ReplyDeleteஎனக்கும் அந்தத் தயக்கம் இருந்த போதிலும் 'இப்பத்தான் ஜேகே பத்தி முதல்தடைவையாக் கேள்விப்படுறேன்'
அப்பிடிங்குற ஆளுங்க எல்லாம் கூட கமென்ட் அடிக்குறப்போ 'நாமளும் அடிச்சா என்ன?'ன்னு தோணிச்சு..அதான்..
'நாம வாழ்க்கையிலே உற்று நோக்குகிற விஷயங்களுக்கெல்லாம் வேறொரு பரிமாணமும் இருக்கிறது..அதனை நாம் மூன்றாவது பார்வையை பயன்படுத்தி பார்க்காவிட்டால் நமது கண்களுக்குப் அந்தப் பரிமாணம் புலப்படாது'
தத்துவம் எப்பிடி இருக்குது..?ஜேகே, ஜேகே பத்தி இன்னிக்கு முதல் கமென்ட் அடிச்ச தமிழ்விரும்பி கான்செப்ட்க்கு கிட்டத்தட்ட நெருங்கிட்டேன்னு நினைக்குறேன்..
ஒண்ணுமில்லே..இங்கே ஜப்பானிலே அனலாக் டெலிகாஸ்டிங் 7 ஆம் மாசம் 24 தேதியோட க்ளோஸ்..'கம்ப்ளீட் டிஜிடல் ஒன்லி'ன்னு ஆயிடுச்சு..அதுனாலே
3D டிவி வாங்க ரெடியாகிட்டு இருக்கேன்..3D கண்ணாடி வாங்கிப் போட்டுப் பார்க்கலேன்னா படம் 3D லே தெரியாது..2D யா மட்டும்தான் தெரியும்..அதான் மேலே சொன்ன தத்துவம்..
(ஜேகே..ஒகே?- இது விசு ஐய்யருக்கு..)
வர்ட்டா?
ஆஹா இப்படியெல்லாம் கமெண்ட் போட்டால் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகும்னு தெரியாம போச்சே!!
ReplyDeleteYess...he is legend...he is totally intelligent...i know the next person...he is UG Krishnamoorthi...am i correct...he is like a lion..
ReplyDeleteYes! Mr.Nattu! He is UGk! you are correct.Thank you for your interest.
ReplyDelete