ஆகா, இதல்லவா பாதை!
பனிப்பாறைகளுக்கு நடுவில் பாதை எப்படி உள்ளது பாருங்கள்.
பனிப்பாறைகளுக்கு நடுவில் பாதை எப்படி உள்ளது பாருங்கள்.
எந்த நாடு என்று சொல்ல முடியுமா? க்ளூ தரட்டுமா?
நம்து வகுப்பறை மாணவர் ஞானப்பிரகாசம்
அந்த நாட்டில்தான் இருக்கிறார்.
இப்போது சொல்லுங்கள்
அது எந்த நாடு?
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1. யாருக்குத்தான் ஆசை இல்லை!
நம்ம ஆசாமி ஒருவன் படகில் மீன் பிடிக்கச்சென்றான். பக்கத்தில் பார்த்தான். ஒரு நீண்ட தண்ணீர்ப் பாம்பு ஒரு தவளையைக் கவ்விப் பிடித்தவாறு மெதுவாக நீந்திக் கொண்டிருந்தது.
தவளையின் மேல் இரக்கம் கொண்டவன், சட்டென்று பாம்பைப் பிடித்து தவளையை விடுவித்துக் காப்பாற்றினான். தொடர்ந்து பாம்பின் மீதும் இரக்கம் வர, அதற்குக் கொடுக்க உணவு ஏதும் இல்லை.
கைவசம் இருந்த விஸ்கி பாட்டிலைத் திறந்து, இரண்டு லார்ஜ் அளவிற்கு விஸ்கியை பாம்பின் வாயில் ஊற்றி அதை அனுப்பிவைத்தான். பாம்பும் மகிழ்ச்சியோடு தவ்விக் குதித்தவாறு சென்றது.
பத்து நிமிடம் செயல் மறந்து, அந்த இடத்திலேயே படகில் இருந்தவன், தனக்கும் ஒரு லார்ஜ் ஊற்றிக் குடித்துவிட்டு, மகிழ்ச்சிச் கடலில் ஆழ்ந்தான்.
அப்போதுதான் அது நடந்தது.
தன் படகின் அருகில் சத்தமும், சலசலப்பும் கேட்க, பக்கவாட்டில் எட்டிப்பார்த்தான்.
பார்த்தவன் அதிர்ந்து போய்விட்டான்.
பாம்பு மீண்டும் வந்து அவன் பார்வைக்காகக் காத்திருந்தது. இந்தமுறை அதன் வாயில் இரண்டு தவளைகள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2. அம்மாவிற்கு மட்டும் அது எப்படி சாத்தியப்பட்டது?
வீட்டின் போர்ட்டிகோவில் இருந்து கேட்வரை செல்லும் பாதையில் பந்தை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பையனின் காண்டாக்ட் லென்ஸ் கழன்று விழுந்து விட்டது. தேடு தேடென்று தேடினான். கிடைக்கவில்லை.
வீட்டிற்குள் சென்று தன் அன்னையிடம் தகவலைச் சொன்னான்.
வெளியே வந்த அன்னை ஐந்தே நிமிடத்தில் அதைத் தேடி எடுத்துவிட்டாள்
பையனுக்கு செமை ஆச்சரியம். அம்மாவிடம் கேட்டான். “ உனக்கு மட்டும் எப்படியம்மா இது சாத்தியப்பட்டது?”
“நீ ப்ளாஸ்டிக்கால் ஆன சிறு துண்டைத் தேடினாய்; நான் 150 டாலரைத் தேடினேன்”
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மூன்றுமே சொந்த சரக்கல்ல; மின்னஞ்சலில் வந்தது. மொழியாக்கம் மட்டும் அடியேனுடையது
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
Nice pictures and Jokes.
ReplyDeleteநம்ம மைனர்வாள் பயணிக்கும் பாதை என்று சொல்லுங்கள்.. அருமை.
ReplyDeleteஆணென்ன, பெண்ணென்ன அரவம் கூட அடிமையாகும் போல மதுவுக்கு...
அதிலும் இந்த முறை இரண்டு முடக்கு வேண்டும் போலும்....
இரண்டு சிரிப்பும் அருமை... நன்றி! நன்றி!!
"மங்கையராய் பிறப்பதற்கே மாதவம்
ReplyDeleteசெய்திருக்க வேண்டுமம்மா!" - மஹாகவி.
ஆவதும் அழிவதும்; வாழ்வதும் தாழ்வதும்;
எல்லாம் உன்னாலே என்பதெல்லாம் வெறும்
வெத்துப் பொய்தானே பெண்ணே! உன்னை
காட்சிக்கும் கவர்ச்சிக்கும் விலை பொருளாக்கும்
சூட்சியை தகர்ப்பாயே பெண்ணே - உன்
மாட்சிமை அறிவாயோ? பெண்ணே!
அலங்காரப் பொருள்களில் அகப்பட்டு அழிந்ததுபோதும்
பொன்னுக்கும் பூவிற்கும் கூரைப்புடவைக்கும் உன்னை நீ
அடகுவைத்தது போதும்; இனியும் ஏமாறாதே! பொங்கிஎழு
பூவையே நீயின்றி இனியும் இந்த உலகமுய்யாது!
கல்விகொள்; கேள்விகேள்; விடுதலை வேள்விமூட்டு
பெண்ணென்றால் அடிமை என்ற பேதைமை அகற்று
எழுச்சியும் மீட்சியும் இரட்டையாய் பெற்றெடு; இனி
தாழ்ச்சியில்லை வீழ்ச்சியில்லை மண்ணில் - உன்
மாட்சிமை அறிவாய் பெண்ணே!
உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் மங்கையர் தின வாழ்த்துக்கள்...
தேடுகிறேன்
ReplyDeleteஇன்னமும் கிலைடைக்கவில்லை..
அவர்களுக்கு
நான் மெத்த படித்த அறிவாலியாம்..
இவர்களுக்கு
படித்தவை போதாத பத்தாம் பசலியாம்..
தேடுங்கள் கண்டைவீர்கள்
என்றார் ஏசுபிரான்..
அந்த அம்மாக்கு கிடைத்த 150 டாலர்
அந்த பையனுக்கு மகிழ்சியை தந்தது..
அடியேனுக்கு...
super
ReplyDeletejokes and pictures are very good.
////HVL said...
ReplyDeleteNice pictures and Jokes./////
நல்லது. நன்றி ஆலாசியம்!
////Alasiam G said...
ReplyDeleteநம்ம மைனர்வாள் பயணிக்கும் பாதை என்று சொல்லுங்கள்.. அருமை.
ஆணென்ன, பெண்ணென்ன அரவம் கூட அடிமையாகும் போல மதுவுக்கு...
அதிலும் இந்த முறை இரண்டு முடக்கு வேண்டும் போலும்....
இரண்டு சிரிப்பும் அருமை... நன்றி! நன்றி!!////
உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!
//////Alasiam G said...
ReplyDelete"மங்கையராய் பிறப்பதற்கே மாதவம்
செய்திருக்க வேண்டுமம்மா!" - மஹாகவி.
ஆவதும் அழிவதும்; வாழ்வதும் தாழ்வதும்; எல்லாம் உன்னாலே என்பதெல்லாம் வெறும்
வெத்துப் பொய்தானே பெண்ணே! உன்னை காட்சிக்கும் கவர்ச்சிக்கும் விலை பொருளாக்கும்
சூட்சியை தகர்ப்பாயே பெண்ணே - உன் மாட்சிமை அறிவாயோ? பெண்ணே!
அலங்காரப் பொருள்களில் அகப்பட்டு அழிந்ததுபோதும் பொன்னுக்கும் பூவிற்கும் கூரைப்புடவைக்கும் உன்னை நீ அடகுவைத்தது போதும்; இனியும் ஏமாறாதே! பொங்கிஎழு பூவையே நீயின்றி இனியும் இந்த உலகமுய்யாது! கல்விக்கொள்; கேள்விகேள்; விடுதலை வேள்விமூட்டு பெண்ணென்றால் அடிமை என்ற பேதைமை அகற்று எழுச்சியும் மீட்சியும் இரட்டையாய் பெற்றெடு; இனி தாழ்ச்சியில்லை வீழ்ச்சியில்லை மண்ணில் - உன்
மாட்சிமை அறிவாய் பெண்ணே!
உலகில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் மங்கையர் தின வாழ்த்துக்கள்.../////
ஆகா.நல்லது. நினைவுகூர்ந்து வாழ்த்தியமைக்கு நன்றி ஆலாசியம்!
////iyer said...
ReplyDeleteதேடுகிறேன் இன்னமும் கிலைடைக்கவில்லை..
அவர்களுக்கு நான் மெத்த படித்த அறிவாளியாம்..
இவர்களுக்கு படித்தவை போதாத பத்தாம் பசலியாம்..
தேடுங்கள் கண்டடைவீர்கள் என்றார் ஏசுபிரான்..
அந்த அம்மாக்கு கிடைத்த 150 டாலர் அந்த பையனுக்கு மகிழ்சியை தந்தது..
அடியேனுக்கு.../////
உங்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்திருக்குமே விஸ்வநாதன்!
/////vprasanakumar said...
ReplyDeletesuper
jokes and pictures are very good./////
நல்லது. நன்றி பிரசன்ன குமார்!
from browsing centre
ReplyDelete------------------------
ஜப்பானில் பனிப்பாறைகளை உடைத்து சாலை அமைத்திருப்பது அவர்களுடைய
தொழில் திறன் மேன்மையைக் காட்டுகிறது.அருமையான படங்கள்.
இரண்டு ஜோக்கும் இரண்டு முறை படித்துத்தான் புரிந்து கொள்ள முடிந்தது.
அய்யா
ReplyDeleteஜப்பான் என நினைக்கிறேன்
சரியா அய்யா
ஐயா வணக்கம்.
ReplyDeleteஅட அடடா!
என்ன ஒரு அழகு
இயற்க்கை அன்னையின் சொர்க்கமோ என்று ஆச்சரிய படுத்தும் அளவீர்க்கு படத்தை பார்த்தால் என்ன தோன்றுகின்றது.
என்னத்த இருந்தாலும் மைனர்வாள் மைத்துனர் கொடுத்து வைத்தவர் தான் இயற்கையை அன்னையின் படைப்பை கண்டு அனுபவிக்க.
தஞ்சாவூர் மாமாவுக்கு வயசாகி விட்டது போல
ReplyDeleteஆமாம் ஸ்ரீராம்! 1949ல் பிறந்தவன் நான்.உன் அம்மாவை விட 4 மாதங்கள் இளையவன்.அம்மாவை மதுரையில் மார்ச் 1ம் தேதி அன்று சாரதா சஷ்டிஅப்த
ReplyDeleteபூர்த்தி கல்யாணத்தில் சந்தித்து நிறையப் பேசினோம்.நீ துபாயில் இருக்கும் விவரெமெல்லாம் தெரிந்து கொண்டேன்.நான் இப்போது தஞ்சாவூர் மாமா இல்லை.திருத்தவத்துறை மாமா.இந்த மாமாவை நினைவில் வைத்துள்ள மருமானுக்கு ஆசிகள் பல.
kmrk1949@gmail.com