நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்!
இன்றைய வாரமலரை மூத்த மாணவர் ஒருவரின் ஆக்கம் ஒன்று அலங்கரிக்கின்றது. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++நம்பினால் நம்புங்கள் - BELIEVE IT OR NOT
நான் 6 வது வகுப்பு படிக்கும் போது முதல் முதலாக மாறு வேடப் போட்டியில் கலந்து கொண்டேன்.சந்து முனையில் மாய மந்திர வித்தை காட்டும் மந்திரவாதியாக 'மானோ ஆக்டிங்' செய்து காண்பித்தேன்.
தலைமைஆசிரியரைப் பார்த்து "ரத்தம் கக்கி சாவாய்"என்றெல்லாம்
'பீலா' விiட்டதில் சக மாணவர்கள் எல்லோரும் 'குஷி' ஆகிக் கையைத்
தட்டோ தட்டென்று தட்டிப் பாராட்டி விட்டனர். கொஞ்சம் கடுப்பான
தலைமை ஆசிரியர், வெறுப்புடனே முதல் பரிசைக் கொடுத்து விட்டார்.
மக்கள் தீர்ப்பை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. (இதை
வைத்து ஒரு 'பன்ச்' பின்னூட்டம் இடுங்கள் மைனர்வாள்))
இப்போ சொன்ன செய்தியெல்லாம் முக்கியமில்லை. அந்த முதல் பரிசு ஒரு ஆங்கிலப் புத்தகம்.அதன் தலைப்பு
BELIEVE IT OR NOT....! ஆம்! 'நம்பினால் நம்புங்கள்!.இல்லாவிட்டால் விடுங்கள்.'அதில் பல உலக அதிசய நிகழ்வுகள் தொகுக்கப் பெற்று இருக்கும்.அது போல ஒரு நிகழ்வு ஒன்று சொல்கிறேன். என்
வாழ்வில் நடந்தது.....
1984ல் எனக்கு மூன்று பெண் குழந்தைகள். மூத்த பெண் அடுத்த வருடம்
6 வது வகுப்புச் சேர வேண்டிய தருணம். மறைந்த அண்ணன்
குழந்தைகளும் அதே போல மேல் வகுப்புக்கள் செல்ல வேண்டும்.
நாங்கள் வசித்த பகுதியில் ஐந்தாம் வகுப்புவரை இருக்கும் அரசு
அங்கீகாரம் பெறாத நர்சரி பள்ளிகள் இரண்டு இருந்தனவே அன்றி
அங்கீகாரம் பெற்ற உயர்நிலைப் பள்ளிகள் எதுவும் கிடையாது.
5 கி.மீ தொலைவில் உள்ள தஞ்சை நகரத்துக்கு, கூட்டமான பேருந்தில் நெருக்கியடித்துப் பயணம் செய்து பள்ளியில் படிக்க வேண்டும். இது
எங்கள் இல்லத்துக் குழந்தைகளுக்கு சாத்தியமா என்ற கவலை
என்னைப் பிடித்துக் கொண்டது. ஏதாவது ஒரு செய்தியை மனதில்
வாங்கிக் கொண்டால் அவ்வளவுதான்; பசி தூக்கம் போய்விடும்.
அதே சிந்தனையாகப் பைத்தியம் போல அலைய ஆரம்பித்து விடுவேன்.பக்கத்தில் பள்ளியில்லையெனில், ஒரு 'பள்ளியை உருவாக்கு!பள்ளியை உருவாக்கு! பள்ளியை உருவாக்கு!'என்று
மனதில் மந்திரம் ஜபமாக ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.
சாதாரணமாக காலை 5 மணிக்கு நடைப்பயிற்சிக்குச் செல்லும் நான்,
அந்த இரவு, நேரத்தைப் பார்க்காமல் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.மனம் முழுவதும் "பள்ளி பள்ளி பள்ளி" என்ற ஜபம்தான்.
20 நிமிடங்கள் நடந்த பின்னர் தான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்.
என் வலப்புறம் செந்நிற ஒளி ஒன்று கூடவே மிதந்து வந்து கொண்டிருப்
பதைக் கண்டேன்.
கொஞ்சம் பயம் ஏற்பட்டது வேகமாக நடக்க ஆரம்பித்தேன்.அந்த ஒளிப்
பந்தும் அதே வேகத்தில் தொடர்ந்தது. நான் ஓடினால் அதுவும் ஓடிவந்தது. நின்றால் தானும் நின்றது.தொட்டுப்பார்ப்போம் என்று கையை நீட்டினேன்.
நகர்ந்து கொண்டது.பயம் கலந்த ஒரு வியப்புடன் அதனைப் ர்த்தேன்.
அப்போது அந்த பந்து பேசியது,
"பள்ளிக்கூடம் தானே வேண்டும் என்கிறாய்? நாம் சொல்வதைக் கேட்டால் பள்ளி அமையும். கேட்பாயா?"
"சரி.கேட்கிறேன்!"
"அப்படியானால் நாளை விடிந்ததும் காலை 8 மணிக்கு பெரியவர் ஸ்ரீநிவாசராகவனைப் போய் சந்திக்கவும்"
"அந்தப் பெரியவரிடம் என்ன சொல்ல வேண்டும்!?"
"அங்கே சென்றால் உன் மூலமாக நாம் அவரிடம் சொல்லுவோம்"
"சரி! தேவரீர் நீங்கள் யார்?"
"தென்கரை மஹாராஜா!"
எனக்கு அஸ்தியில் சுரம் கண்டது. பயத்தில் குலை நடுங்கக் கண்ணை மூடினேன்.மீண்டும் கண்ணைத் திறந்தபோது அந்த ஒளிப் பந்து மறைந்து விட்டு இருந்தது.
எங்களுக்கு இரண்டு குலதெய்வம் என்பார்கள். தந்தை வழியில் 'தென்கரை மஹாராஜா' என்பார்கள். சாஸ்தாதான்!
அதுவரை நான் அந்தக் கோவிலுக்குப்போனவன் இல்லை.இந்தக் கோவில் நெல்லை நாகர் கோவில் மார்கத்தில் வள்ளியூரில் இறங்கி 8 கி.மி உள்ளே ஒரு கிராமத்திற்குச் செல்லவேண்டும்.
தாய் வழிக்காணி என்று அம்பாசமுத்திரத்திற்கு அருகில் பாப்பாங்குளம் என்ற கிராமத்தில் சடைவுடையார் என்ற மற்றொரு சாஸ்தா!
வந்தவர் தென்கரை மஹாராஜாவா? நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என்னை நானே கிள்ளிப் பார்த்தேன்.வலித்தது. ஓட்டமும் நடையுமாக வீட்டுக்குத் திரும்பினேன்.ஒரே ஆயாசமாக இருந்தது.
விடிந்து இருக்க வேண்டுமே என்று மணியைப் பார்த்தால் மணி காலை 3!அப்படியானால் நான் வீட்டை விட்டு வெளியேறும் போது 2.30
மணியாக இருந்திருக்குமோ? ஐயோ! அகாலத்தில் வெளியில் போய்
இப்படி எதையோ பார்த்துவிட்டோமே!அது தெய்வமா? வேறு
ஏதாவதோ? "தர்ம சாஸ்தாவே காப்பாற்று"என்று அலறிக் கொண்டு மூர்ச்சையாகி விழுந்தேன்.
+++++++++++++++++++++++++++++++++++++
மீண்டும் கண்விழித்தபோது காலை மணி 7 ! அருகில் மனைவி குழந்தைகள் தாயார் எல்லோரும் கவலையுடன் பார்த்த வண்ணம் சுற்றி நின்றனர். சுரம் விட்டிருந்தது. உடலில் ஒரு தெம்பு, உத்வேகம் இருப்பதை உணர முடிந்தது.
விறு விறுப்பாக குளியல் அறையில் நுழைந்து குளித்து முடித்து ஆடை மாற்றி திருநீரு அணிந்து பூஜை அலமாரிக்கு முன் கைகூப்பிவிட்டு பெரியவர் வீட்டை நோக்கிச் சென்றேன்."என்ன!என்ன?!"என்று மனைவியின் குரல் கேட்பதிற்குப் பதில் சொல்லாமல் மெளனமாக பெரியவர் வீட்டிற்குச் சென்றேன்.
இங்கே பெரியவர் பற்றி ஒரு சிறிய அறிமுகம். எனக்கு அப்போது
35 வயது என்றால் அவருக்கு 60 வயது இருக்கலாம். ஸ்ரீவைஷ்ணவர்.
அதாவது ஐயங்கார் வகுப்பினர்.நாங்கள் சேலத்தில் இருந்தபோது
சேலம் அரசுக்கல்லூரியில் அலுவலக மேலாளராக வேலை பார்த்தார்.
நாங்கள் சேலத்தை விட்ட சமயம் அவரும் சொந்த மாவட்டமான தஞ்சைக்கு மாற்றலில் வந்து தஞ்சை அரசு மகளிர் கல்லூரியில் கணக்குத் தணிக்கை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றார். அந்தப் பதவிக்கு "பர்சார்"என்று பெயர்.எல்லோரும் அவரை 'பர்சார்' என்றே அழைப்பார்கள்.அதில் உள்ள 'சார்'அவருக்கு அளிக்கும் உரிய மரியாதையாக அமைந்தது.அமைச்சகப் பணியாளர்களுக்கு முதன் முதலாக சங்கம் அமைத்துப் பல ஆக்கங்களைப் பெற்றுத் தந்தார்.அதன் பின்னரே சிவஇளங்கோ மிகப்பெரிய தலைவராக உருவெடுத்தார்.அரசுப் பணியாளர்களின் தொழிற்சங்க இயக்கத்தின் முன்னோடி நம் பெரியவர் ஸ்ரீநிவாசராகவன்!
சிதிலமாகக் கிடந்த தஞ்சை மேலவீதி நவனீத கிருஷ்ணன் கோவிலைப் புதுப்பித்து நடை முறைப் படுத்தினார். இன்று அது ஒரு கலாசார மையமாக விளங்குகின்றது.
அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லை.பகவான் கண்ணனையே தன் குழந்தையாகப் பாவித்து வந்தார். நாள்தோறும் ஸ்ரீபாலகிருஷ்ணருக்குத் திருமஞ்சனம் செய்வார்.சரியாகக் காலை 8 மணிக்கு ஆராதனை
முடியும்.அன்று ஆராதனை முடிந்து கையில் வெள்ளி பஞ்சபாத்திரம், நெய்வேத்தியம் செய்த வாழைப்பழம், திருத்துழாய் சகிதம் யாரையோ எதிர்பார்பதைப் போல கிழக்கு நோக்கி துவாதச நாமம் பளிர் என மின்ன
தகத்தகயமாக ஒளிவிட்டுக்கொண்டு நின்று கொண்டு இருந்தார்.
அவரைக் கண்ணுற்றவுடனே அவருடைய தெய்வீகத் தோற்றத்தால் ஈர்க்கப்பட்டு நெடுஞ்சாண் கிடையாகக் காலில் விழுந்து நமஸ்கரித்தேன்.
பிரசாதம் தீர்த்தம் அளித்தபடியே நான் எதுவும் சொல்வதற்கு முன்பாகவே "இங்கேயும் கண்ணன் உத்தரவு போட்டாயிற்று. நீர் வருகிறீரென்று பூஜைக்கு முன்பாகவே சொல்லி விட்டன் கண்ணன்."
"அப்படியா!இந்தப்பகுதியில் வாழும் எல்லா குழந்தகளும் உங்கள் பேரப் பிள்ளைகளே!அவர்கள் நகரத்திற்குச் சென்று சிரமப்படாமல் அருகில் படிக்க ஓர் உயர் நிலைப்பள்ளியைத் துவங்க வேண்டும்."
"செய்துவிடலாமே!"
அவ்வளவுதான்!இருவரும் சுறுசுறுப்பாக வேலையைத் துவங்கினோம். பலரையும் சந்தித்தோம்.வாராது வந்த மாமழை போல தெய்வத்திரு
ராங்கியம் ஏ. சுப்பிரமணியம் செட்டியார் அவர்களுடன் தொடர்பு
கிடைத்தது. பணமாகவும்பொருட்களாகவும் தந்து உதவினார். கீற்றுக்கொட்டகையில் ஒரு வகுப்புடன் 6 ஜூன் 1985ல் துவங்கப்பட்ட
பள்ளி இன்று வெள்ளிவிழா கண்டு விட்டது. பள்ளிக்கு இன்று
27 வகுப்பு அறைகளும் பல தளவாடங்களும் உள்ளன.ஏழை, கீழ்நிலை
மத்திய தர குடும்பத்தினருக்கான பள்ளியாகத் திகழ்கிறது.குறைந்த
மதிப்பெண் பெற்று பிற பள்ளிகளில் சேர முட்யாதவர்களே இப்
பள்ளிக்கு என எழுததாத சட்டமாகி விட்டது.இருப்பினும் 10ம்
வகுப்பில் 100%தேர்ச்சி பல்லாண்டுகள் பெற்று நற்பெயருடன்
விளங்கி வருகிறது. மேல் நிலைப் பள்ளியாகவும் விளங்குகிறது.
எங்கள் வீட்டுப் பிள்ளைகள் 5 பேர் இப்பள்ளி மாணவிகள். இப்பள்ளியில்
பெற்ற அனுபவத்தை வைத்து "கமலா சுப்பிரமணியம் மேல் நிலைப்
பள்ளி"யை செட்டியார் துவங்கினார்.இன்று அது ஒரு உலகத்தரம்
வாய்ந்த பள்ளியாகத் திகழ்கிறது.
இன்று பர்சார், செட்டியார் இருவருமே இல்லை.
நினத்துப் பார்த்தால் மலைப்பாக உள்ளது.தெய்வ அனுக்கிரஹம்
முழுதுமாகக் கிடைத்த ஆண்டுகள் 1984 முதல் 1993 வரை..அப்போது
சாப்பாடு தூக்கம் குறைவு என்றாலும் உற்சாகம் குறையாமல்
இருந்தது.
"என்ன மாமூ! கொஞ்சம் லூசுல விட்டா காதுல பூ சுத்தராரே!"என்று குறுந்தகவல் ஜப்பானை விட்டுக் கிளம்பி விட்டிருக்கும் இந்நேரம்.
அதான் ஆரம்பத்திலேயே சொன்னேனே!
நம்பினால் நம்புங்கள்.! BELIEVE IT OR NOT!
அன்புடன்
கே.முத்துராமகிருஷ்ணன்,
தஞ்சாவூர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
திருவாளர் K.R ஸ்ரீநிவாசராகவன் தமபதியருடன் கட்டுரையாளர், தன் மனைவி, மக்களுடன் இருக்கும் காட்சி (பழைய படம்)
-----------------------------------------------------------------------------------------
வள்ளல் ராங்கியம் தெய்வத்திரு. ஏ. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள்
........................................................................................................................................................வாழ்க வளமுடன்!
நான் நம்புகிறேன்.
ReplyDeleteஇத்தகைய அனுபவங்கள் தான் கடவூள் நம்பிக்கையின் ஆணிவேர்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா!
ReplyDeleteஅந்தப் புத்தகத்தின் முகப்பைத் தேடிப்பிடித்து வெளியிட்டீர்கள் பாருங்கள்!அது அது,அதுதான் வாத்தியார் 'டச்!'
நான் எழுதிய ஆக்கங்களிலேயே மிகுந்த மன நிறைவை அளித்தது இந்தக் கட்டுரைதான்.
'பெரியாரைத்துணை கோடல்' என்பது என்ன என்பதை அந்த இரண்டு பெரியவர்களின் தொடர்பு எனக்கு உணர்த்தியது.வெளியிட்டதன் மூலம் நீங்கள் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டீர்கள். மீண்டும் நன்றி ஐயா!
////////// தலைமைஆசிரியரைப் பார்த்து "ரத்தம் கக்கி சாவாய்"என்றெல்லாம்
ReplyDelete'பீலா' விiட்டதில் சக மாணவர்கள் எல்லோரும் 'குஷி' ஆகிக் கையைத்
தட்டோ தட்டென்று தட்டிப் பாராட்டி விட்டனர். கொஞ்சம் கடுப்பான
தலைமை ஆசிரியர், வெறுப்புடனே முதல் பரிசைக் கொடுத்து விட்டார்.
மக்கள் தீர்ப்பை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை.\\\\\\\\\\\
'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பார்கள்..
அதுபோலே அன்றே உங்களிடம் இந்த 'பீலா' விடும் வித்தை தூக்கலாக இருந்திருக்கிறது..
பெரும்பாலும் சுவாரஸ்யமான பீலாக்களுக்கு மக்கள் சாதகமான தீர்ப்பு வழங்கிவிட்டு அடுத்த ஐந்து வருடம் வரை அவஸ்திப்படுவது வழக்கம்தானே..
/////////////"என்ன மாமூ! கொஞ்சம் லூசுல விட்டா காதுல பூ சுத்தராரே!"என்று குறுந்தகவல் ஜப்பானை விட்டுக் கிளம்பி விட்டிருக்கும் இந்நேரம். \\\\\\\\\\\
ReplyDeleteம்ஹூம்.எங்களைப்பத்தி நீங்க தப்பாக் கணக்கு பண்ணிட்டீங்கோ..
குறுந்தகவல் அனுப்புற பழக்கமெல்லாம் இல்லை..
இப்போலாம் ஸ்கைப்தான்.. லைவ் கேமரா ச்சாட்டிங்தான்..
நம்பிக்கைதானேங்க வாழ்க்கை.
ReplyDeleteநான் நம்பறேன்.
நியாயமான ஆசைகளை 'அவன்' நிறைவேத்தி வைப்பான்.
It is thrilling to read. But it happens. I believe.
ReplyDeleteஎன் வாழ்க்கையிலும் கடவுளின் வழிநடத்தலை உணர்ந்திருக்கிறேன்..
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஅய்யா,
அன்ன சத்திரம் ஆயிரம் கட்டுவதை விடவும்,ஆலயம் பதினாயிரம் நாட்டுவதை விடவும், ஓர் ஏழைக்கு எழுத்தறிவித்தவன் இறைவனாம் என்று
மகாகவி பாடியது நினைவுக்கு வருகிறது. திரு.KMRK . அவர்களின் செயலும்,
திரு,சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் வள்ளண்மையும் மிகவும்
பாராட்டத்தக்கது.
அன்புடன், அரசு.
தெய்வ அருள் கைவரப் பெற்றவர்களுக்கே இப்படிப்பட்ட அனுபவங்கள் ஏற்படும். அந்தவகையில் KMRK அவர்கள் கொடுத்துவைத்தவர் . இது என் ஞான திருஷ்டியில் தெரிந்துதானோ என்னவோ நான் அவரை ஆரம்பத்திலிருந்தே 'அருட் தந்தை' என்று அழைத்து வந்தேன். தன்னடக்கம் கருதி அதை அவர் தவிர்த்து வந்தார். நல்ல ஆக்கம் . முதலில் பிரபல ரவுடிகளின் அறிமுகம் இப்போது ஒளிப்பந்து என்று நீங்கள் இந்த வாரத்தை மிரட்டல் வாரமாக கொண்டாடுகிறீர் போலும். . நீங்கள் இதையெல்லாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எனக்கு தாங்கள் என்றால் சற்று பயமே. இல்லாவிட்டால் நான் எதற்கு 'குண்டு விழுந்த நாட்டுக்காரரின் ஆதரவை நாடுகிறேனாம்.
ReplyDeleteவடக்கே டெல்லி அம்மா தர்பார். தெற்கே அருட் தந்தை அவர்களின் அட்டகாசம். இதற்கிடையில் அவ்வப்போது ஜப்பான் மைனர் மற்றும் சிங்கை மிட்டாதாரரின் சித்து விளையாடல்கள் வேறு. இதில் எம்மைப்போன்ற சிறுபான்மியர்களின் நிலை சற்று கவலைக்கிடமாகத்தான் உள்ளது. நாமும் எதையாவது சொல்லலாமென்று வாயைத் திறக்கும்முன்பே 'நீங்கெல்லாம் ஜுஜுபி மாமு' என்கின்ற ரேஞ்சுக்கு ஆக்கங்களை அள்ளித் தெளித்துவிடுகிறார்கள். 'எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமுலு' என்று சொல்லிவிட்டு ஜூட் விட்டுடவேண்டியதுதான் போலிருக்கிறதே.
ReplyDeleteஅருமையான அனுபவங்கள்! அரிய படங்கள்! நம்புகிறேன்!
ReplyDelete-ஜாவா
தெய்வம் என்றால் அது தெய்வம்...
ReplyDeleteஅது சிலை என்றால் வெறும் சிலைதான்...
உண்டு என்றால் அது உண்டு.. இல்லையென்றால் அது இல்லை..
நம்பிக்கைதான் எல்லா விஷயங்களிலும் தெய்வத்தை பார்க்கச் செய்கிறது..
சமீபத்தில் ஒரு மிகப் பெரும் உலக அதிசய சம்பவம் இறை நம்பிக்கையால் சாதிக்கப்பட்ட சம்பவம் என் குடும்பத்திலும் நடந்தேறியது..
தீவிர நம்பிக்கைக்கு ஈடு இணை ஏதுமில்லை..
மந்த்ரோஜெபம் ரீதியில் 'பள்ளியை உருவாக்கு' என்று பசி தூக்கம் மறந்து தீவிரமாய் நோக்கத்தை உருவேற்றி சுற்றத்தார் உதவியுடன்
KMRK அவர்கள் செயல் முடித்தாற்ப்போன்று
நம்பிக்கையால் சாத்தியமாகும் சம்பவங்களை நான் நம்புகிறேன்..
அன்புடன் வணக்கம் .
ReplyDeleteஉண்மை பதிவு மிக நன்றாக இருந்தது !!! வருடத்திற்கு ஒரு முறை குலதெய்வ வழிபாடு கண்டிப்பாக இருக்க வேண்டும்
எனது நண்பரின் தங்கை தற்போது டில்லி அவளின் குலதெய்வம் கருப்பசாமி ..கொஞ்சம் அதிகமான பக்தி உடையவள்
டில்லி மாநகரத்தில் ஒரு சமயம் இரவு நேரம் தனியாக தன வீட்டிற்கு செல்ல நேர்ந்த பொது தன குல தெய்வத்தை வணங்கி துணைக்கு வா !!!
என்று வேண்டினாளாம் தனது ஒருவயது குழந்தையுடன் சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் தனியாக இரவு நேரம் 11 மணி வீட்டிற்க்கு தனக்கு முன்னால் சல்லடம் போட்டு கருப்பன் நடந்து முன்னே வழி காட்ட தன நினைவு இல்லாமலேதான் வந்தாளாம் !! இங்கே கோவிலுக்கு முன் வந்து வீழ்ந்து வணங்கி நிற்கும்போது பூசாரி அருள் வந்து """""என்ன குழந்தை ஊருல உனக்கு முன்னால வந்தது நானா வேற யாரு என்று கேட்கிறியா??? நான்தான் """"" என்று சொன்னாராம் நடந்த சம்பவத்தை அவள அதற்க்கு முன் யாரிடமும் சொல்லவில்லை ...
என்றுமே எல்லா மக்களுக்கும் அவரவர் குல தெய்வம் காப்பாற்றும் மனம உருகி வழிபட்டால்....
////////// G.Nandagopal said...
ReplyDelete'எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமுலு' \\\\\\\\\\\\\\\\\\
ஹே..ஹே...
ஏதோ காமெடி பண்றீங்கோன்னு தெரியுது..ஆனா ஒண்ணுமே புரியலே..
வணக்கம் kmrk சார்,
ReplyDeleteதங்களது ஆக்கம் நம்பதகுந்ததுதான்.இதில் சந்தேகம் எனக்கில்லை.
வாழ்க்கை என்பது 50சதவீதம் அறிவும்,50சதவீதம் மானசீகத்தை சார்ந்தது.
இதில் எது கூடினலும்,குறைந்தாலும் வாழ்க்கையில் ஆத்ம திருப்தி இருக்காது.
தாங்கள் கூரியது மானசீக உலகத்தை சேர்ந்தது.மனதுக்கு முக்குண(சாத்வீகம்,
ரஜோ,தாமச)அவஸ்த்தைகலில் சாத்வீகம் மேலோங்கி மற்ற இரண்டு குணங்கலும்
அடங்கி இருக்கும் பட்சத்தில் தாங்கள் கூறிய ஆத்ம தரிசனம் நம்மக்கு கைவரபெரும் சாத்தியம் உண்டு.
ஏதோ காமெடி பண்றீங்கோன்னு தெரியுது..ஆனா ஒண்ணுமே புரியலே..///////minorwall said..
ReplyDeleteஏன் மாப்பு எப்ப பாத்தாலும் குண்டக்க மண்டக்கவே யோசிக்கறீங்க...நான் உண்மையைத்தான் சொன்னேன்...
////////
ReplyDelete'எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமுலு' \\\\\
இல்லே..உண்மையாவே எனக்கு தெலுங்கு faculty சுத்தமா அவுட்..
அதான் என்ன மீனிங்க்னு கேட்டேன்..
//////
ReplyDeletehamaragana said...
என்றுமே எல்லா மக்களுக்கும் அவரவர் குல தெய்வம் காப்பாற்றும் மனம உருகி வழிபட்டால்....\\\\\\\
இதுவரை நான் பார்த்த நல்ல சோதிடர்கள் அனைவரும் கூறிய வார்த்தையும் இதுதான்..
இந்த செய்தியை அனைவருக்கும் இந்தத் தருணத்தில் பெரியவர் நீங்கள் கொண்டு சேர்த்ததுதான் தகுதியானது..
அனுபவத்தில் உணர்ந்த,உணர்த்திய மாம்ஸ் இங்கே ஆஜராகலாம்..
நன்றி திருவாளர்கள் HVL & அர்தநாரி!
ReplyDelete'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பார்கள்..
ReplyDeleteஅதுபோலே அன்றே உங்களிடம் இந்த 'பீலா' விடும் வித்தை தூக்கலாக இருந்திருக்கிறது..////
ஆமாம்!மைனர்வாள்! 3 வயதில் 'காந்திமகான் கதை' என்று கொத்தமங்கலம் சுப்பு அவர்களின்
வில்லுப்பாட்டை பாடியிருக்கிறேன்.
அனுபவத்தில் உணர்ந்த,உணர்த்திய மாம்ஸ் இங்கே ஆஜராகலாம்..//////////
ReplyDeleteமைனர் வாள் கூறியது நூற்றுக்கு நூறு உண்மையே ..இதை நான் நேரில் அனுபவித்திருக்கிறேன். நமக்கு ஒரு பிரச்சினை அல்லது சிக்கல் என்று வரும்போது முதலில் நாம் நம் குலதெய்வத்தைத்தான் வணங்க வேண்டும். அதைவிட்டுவிட்டு நான் அந்த சாமியைத்தான் வழக்கமா கும்பிடுவேன் இந்த சாமியைத்தான் கும்பிடுவேன் என்று சொன்னால்.. ஒன்றும் எடுபடாது.. ஏனென்றால் குலதெய்வத்திடமிருந்து பரிந்துரை வராமல் மற்ற எந்த கடவுளாலும் ஒன்றும் செய்ய முடியாதபடி அவர்கள் கைகள் கட்டப்பட்டிருக்குமாம். இதை காஞ்சிப் பெரியவர் சொல்லி நான் கேட்டதுண்டு. ஆனால் அதை சொந்த அனுபவத்திலே நான் பார்த்தபிறகுதான் குலதெய்வத்தின் முக்கியத்துவத்தை நான் உணர்ந்தேன். ஆகவே நமது வகுப்பறை சகோதர சகோதரிகள் இனிமேலாவது முதலில் அவரவர் குலதெய்வத்தை வழிபட்டு அவர்களுடைய அருளை பெற்று இன்புற்றிக்க அந்த எல்லாம்வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.
சிலசமயம் நாம் பேராபத்திலே சிக்கியிருக்கும்போது நாம் குலதெய்வத்தை வழிபட மறந்து மற்ற கடவுள்களை மிகுந்த பக்தியோடு பிரார்த்தித்துக்கொண்டு இருந்தால்...நாம் வழிபடும் கடவுளே நம்மை குலதெய்வத்திடம் போகும்படியாக தகவல் அனுப்புவார்கள்..அது அவரவர் செய்யும் பிரார்த்தனைகளின் தீவிரத்தைப் பொறுத்து அமையும்
இதையும் நான் நேரில் அனுபவித்திருக்கிறேன்.
நன்றி திருவாளர்கள் துளசிகோபால்,& ரத்தினவேல்!
ReplyDeleteநன்றி மிடில் கிளாஸ்மாதவி & அரசு!
ReplyDeleteஇதையெல்லாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எனக்கு தாங்கள் என்றால் சற்று பயமே.///
ReplyDelete1985க்குப்பின்னர் மீசையைக்கூட எடுத்துவிட்டேன்.என்னைப் பார்த்து சுண்டெலிகூட பயப்படாது.
///நாமும் எதையாவது சொல்லலாமென்று வாயைத் திறக்கும்முன்பே 'நீங்கெல்லாம் ஜுஜுபி மாமு' என்கின்ற ரேஞ்சுக்கு ஆக்கங்களை அள்ளித் தெளித்துவிடுகிறார்கள்.///
ReplyDeleteஇன்னும் எத்தனை காலம் குளத்தங்கரயில் நின்று கொண்டு புலம்பிக்கொண்டு இருக்கப் போகிறீர்கள்? குதியுங்கள். வந்ததெல்லாம் கொள்ளும் மஹராஜன் கப்பலாக வகுப்பறையும், வாத்தியாரும் இருக்கத் தயக்கம் ஏன்?
நன்றி!ஜாவா அவர்களே!
ReplyDeleteதிரு.KMRK அவர்களின் ஆக்கங்களை
ReplyDeleteபடித்து வருகிறோம் ,,
அவருடைய இன்றைய கட்டுரையை படித்தபோது வள்ளுவப் பெருந்தகை சொன்ன இந்த திருக்குறள் தான் நினைவுக்கு வந்தது,
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன் கண் விடல்.
நிச்சயமாக நம்புகிறோம் ஐயா !
/////"சமீபத்தில் ஒரு மிகப் பெரும் உலக அதிசய சம்பவம் இறை நம்பிக்கையால் சாதிக்கப்பட்ட சம்பவம் என் குடும்பத்திலும் நடந்தேறியது.."///
ReplyDeleteஅது என்னான்னு சொல்லலாமுல்லே?!
வணக்கம் கேஎம்ஆர் சார்.
ReplyDeleteசிலிர்க்க வைக்கும் அனுபவம்.
ஒரு சின்ன வட்டத்துடன்
நின்றுவிடாமல் வட்டத்தை
பெரிதாக்கும் திறன் எல்லோருக்கும்
அமைந்து விடாது.
தேவைப் படும் நேரத்தில்
தெய்வம் துணை நிற்கும்
என்பதில் எனக்கும் உடன்பாடே.
மிகப் பெரிய காரியத்தை
மிகச் சுலபமாகச் செய்ய வைத்தது
உங்கள் உழைப்பும்,கடவுளின்
பிரியமுமே.
படிக்கும் போதே
கண்கள் இளகுகின்றன.
பெரியோரைத் துணை கொடல்
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
///"சமீபத்தில் ஒரு மிகப் பெரும் உலக அதிசய சம்பவம் இறை நம்பிக்கையால் சாதிக்கப்பட்ட சம்பவம் என் குடும்பத்திலும் நடந்தேறியது."///
ReplyDeleteஅது என்னன்னு சொல்லலாமுல்ல, மைனர்வாள்!
/// """""என்ன குழந்தை ஊருல உனக்கு முன்னால வந்தது நானா வேற யாரு என்று கேட்கிறியா??? நான்தான் """"" ///
ReplyDeleteஎன் இரண்டாவது பெண் பிரசவ சமயம்;அமெரிக்காவில் வைத்துதான் பெற்றுக் கொள்வோம் என்று பெண்ணும் மாப்பிள்ளையும் சொல்லி விட்டார்கள்.என் மனைவியை அனுப்ப விசா மனுச்செய்து முதல் முறை
அனுமதி மறுப்பு. பிரசவ நாள் நெருங்கி விட்டது. மீண்டும் விசா விண்ணப்பித்து விட்டு நேர்காணலுக்குக் காத்து இருக்கும் சமயம், தாய் வழிக்காணி சடைவுடையாரை வேண்டிக்கொண்டு அம்பை சென்றேன். எப்படி விசா கிடைத்தாலும் இனி பிரசவ சமயம் அருகில் துணை இருக்க ஏலாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.அப்போது கோவிலில் "கோமுறத்தார்" அருள் வந்து "நான் பக்கத்தில் இருந்து பிரசவம் பார்ப்பேன்... ஆமாம்.. நாந்தான்
பக்கத்திதிலேயே இருக்கிறேனே... கவலை ஏண்டா படுகிறாய்?"என்று கத்தினார்.மறுநாள் விசா கிடைத்து என் மனைவி விமானம் ஏறி விட்டார்.
அவர்கள் விமானத்தில் இருந்த சமயம் அங்கே பாஸ்டனில் சுகப்பிரசவம் ஆகி விட்டது.வைத்தியசாலையில் இருந்து பெண்தானே என்னுடன் பேசி "வலியே உணராமல் பிரசவம் ஆயிற்று, நான் ஒரு பிரயாசையும் படவில்லை முழு நினைவுடன் வலியில்லாமல் பேரனைப் பெற்றுவிட்டேன்"என்று தெம்பாகப் பேசினாள்.மனைவி போய்ச் சேர்ந்து மருத்துவமனையில் இருந்து பெண்ணையும் பேரனையும் அழைத்து வந்து பத்தியம் போட்டார்கள்.
பொன்னுசடைச்சி அல்லது பொற்சடைச்சி என்கிற சடைவுடையார்தான் துணை நின்றார்.பின்னூட்டத்திற்கு நன்றி கணபதிசார்!
///"ஆகவே நமது வகுப்பறை சகோதர சகோதரிகள் இனிமேலாவது முதலில் அவரவர் குலதெய்வத்தை வழிபட்டு அவர்களுடைய அருளை பெற்று இன்புற்றிக்க அந்த எல்லாம்வல்ல பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்."///
ReplyDeleteததாஸ்து!அப்படியே ஆகட்டும்!
Amen! Let it be so!
நிச்சயமாக நம்புகிறோம் ஐயா !"///
ReplyDeleteநன்றி எடப்பாடியாரே! நான் சேலத்தில் பிறந்து வளர்ந்ததால் எடப்பாடி என்ற பெயர் மகிழ்ச்சி அளிக்கிறது.இடையர்களின் பாடி எடப்பாடி.அதாவது கண்ணனின் உறவினர்கள் வாழும் ஊர்!ஜீவான்மாக்களாகிய பசுக்களை வேலி தாண்டாமல் வழிநடத்தும் பொறுப்பைப் ஆண்டவனிடம் பெற்று வந்தவர்கள் இடையர்கள்!அதாவது கோபாலர்கள்!நந்த கோபாலர்கள்!
பெரியோரைத் துணை கோடல்
ReplyDeleteஎல்லோருக்கும் வாய்ப்பதில்லை."///
நன்றி மதுமிதா சார்! சிறு வயது முதலே என் வயதுக்கு மிகவும் மூத்தவர்களுடனேயே நட்புக் கொள்வேன்.அதற்காக என் இளைய நண்பர்கள் என்னை 'கிழவா'என்று கிண்டல் அடிப்பார்கள்.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா உந்தன்
ReplyDeleteகரியநிறம் தோன்றுதடா நந்தலாலா....
தீக்குள் விரலைவிட்டால் நந்தலாலா நின்னை
தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா....
அக்னி எரிய பிராணவாயுவும், பற்றி எரிய திடப் பொருளும், தீப் பொறியும் வேண்டுவது போல...
புத்தி சிரத்தை தவம் (கடுமையான பக்தி) இவைகள் கை கூடினால் வேண்டுபவர் புலன்களுக்கு அவர் வேண்டும் விதமாக தோன்றுவார் என்பது நிரூபணம்....
அற்புதமானப் அனுபவம்..... அனுபவபதிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்....
///"அற்புதமானப் அனுபவம்..... அனுபவபதிவிற்கு நன்றி கிருஷ்ணன் சார்...."////
ReplyDeleteநன்றி ஹாலாஸ்யம்ஜி.ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் பின்னூட்டங்களில் உஙளுடையதும் முக்கியமான ஒன்று.இன்னும் டெல்லிக்கார அம்மாவும்,கோபால்ஜியும் வந்துவிட்டால் ஒரு சுற்று முடிவடைந்துவிடும்.
அன்புடன் வணக்கம்
ReplyDelete"""பொன்னுசடைச்சி அல்லது பொற்சடைச்சி என்கிற சடைவுடையார்தான் துணை நின்றார்.பின்னூட்டத்திற்கு நன்றி கணபதிசார்!"""
அன்புடன் வணக்கம்
பின்னூட்டதிற்கு நன்றி என்று கூறி என்னை பிரித்து விட்டீர்கள் பெரியவர்கள் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ..நீங்கள் கூறிய உங்கள் அனுபவம் திருச்சி தாயுமானவ சாமீ ..நடத்திய விளையாடல்....போல் இருக்கிறது..... ம ம்ம்.. ம்ம்..ம் ....கொடுத்து வச்சிருக்கணும்..
இன்னும் டெல்லிக்கார அம்மாவும்,கோபால்ஜியும் வந்துவிட்டால் ஒரு சுற்று முடிவடைந்துவிடும்.//
ReplyDeleteவந்துட்டோம்ல
உங்கள் அனுபவத்தை நானும் நம்புகிறேன். எத்தனையோ கஷ்டங்களில் கடவுள் என்னை வழிநடத்தியத்தை உணர்ந்திருக்கிறேன்.
ReplyDeleteஎனக்குமே கடவுள் விஷயத்தில் இரண்டு நேரடி அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் சில சமயம் நினைத்துப் பார்த்தால் நிஜமாவே நடந்ததா இல்ல வெறும் கனவுதானான்னு ஒரு குழப்பம் வந்திடும். அதனாலதான் அதப்பத்தி எழுதல. ஏற்கனவே நான் ரொம்ப பீலா விடறேன்னு மக்கள்ஸ் எல்லாரும் ரொம்ப கொந்தளிச்சுப்போயிருப்பாங்க. எதுக்கு அவங்களுக்கு சோதனை மேல சோதனை குடுத்துகிட்டு?
தஞ்சை மேலவீதி நவனீத கிருஷ்ணன் கோவிலைப் //
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிச்ச கோயில். நான் அங்கு படித்தபோது தினமும் கதாகலாட்சேபம், பரத நாட்டியம், பாட்டு நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு தடவை magic ப்ரோக்ராம் கூட ஒண்ணு நடந்தது. தினமும் நான் ராத்திரி தூங்கறது அங்கதான். எப்படின்னா சித்தி, மாமி எல்லாரும் தினம் அங்க போவார்கள். அவங்க எல்லாரும் கதாகலாட்சேபம் கேட்பாங்க. அந்த கோயில்ல மட்டும் காத்து சூப்பெரா அடிக்கும். நான் சித்தி மடில ஹாயா படுத்துத் தூங்கிடுவேன். அதன்பின் காமாட்சி அம்மன் கோயிலில் அர்த்தஜாம பூஜை பார்த்துட்டு வீட்டுக்குப்போவார்கள். நான் அரைகுறைத்தூக்கத்தில் இருக்க, என்னை வீட்டுக்கு அழைத்துப்போவதற்குள் அவர்கள் பாடு பெரும்பாடுதான். சில சமயம் தூக்கிக்கொண்டு போவார்கள்.
கிருஷ்ணன் சார், என்னோட மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டு விட்டீர்கள்.
'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பார்கள்..
ReplyDeleteஅதுபோலே அன்றே உங்களிடம் இந்த 'பீலா' விடும் வித்தை தூக்கலாக இருந்திருக்கிறது..
பெரும்பாலும் சுவாரஸ்யமான பீலாக்களுக்கு மக்கள் சாதகமான தீர்ப்பு வழங்கிவிட்டு அடுத்த ஐந்து வருடம் வரை அவஸ்திப்படுவது வழக்கம்தானே..//
செம பஞ்ச்
இது என் ஞான திருஷ்டியில் தெரிந்துதானோ என்னவோ //
ReplyDeleteஅப்படின்னா உங்களுக்கும் தெய்வ அருள் கைவரப்பெற்றுவிட்டதா? சொல்லவேயில்ல? வருங்கால முதலமைச்சர் வேற, ம்ம் என்னவோ போங்க.
வடக்கே டெல்லி அம்மா தர்பார்//
ReplyDeleteதர்பார் ராகமா பாடறீங்க?
சிறுபான்மியர்களின் நிலை சற்று கவலைக்கிடமாகத்தான் உள்ளது//
த்சோ த்சோ
ஜூட் விட்டுடவேண்டியதுதான் // அந்த பயத்தை அப்படியே maintain பண்ணுங்க.
அதான் என்ன மீனிங்க்னு கேட்டேன்..//
ReplyDeleteஎத்தனை மகான்கள் இருக்கிறார்களோ அத்தனை பேருக்கும் என்னோட வணக்கம்னு அர்த்தம். என்னை மாதிரி பன்மொழி வித்தகர்கள் கிட்ட கட்டிருந்தா உடனே பதில் கிடைச்சுருக்குமில்ல.
சாரி கேட்டிருந்தா
ReplyDeleteநந்தகோபால் said ////
ReplyDelete////வடக்கே டெல்லி அம்மா தர்பார். தெற்கே அருட் தந்தை அவர்களின் அட்டகாசம். இதற்கிடையில் அவ்வப்போது ஜப்பான் மைனர் மற்றும் சிங்கை மிட்டாதாரரின் சித்து விளையாடல்கள் வேறு. இதில் எம்மைப்போன்ற சிறுபான்மியர்களின் நிலை சற்று கவலைக்கிடமாகத்தான் உள்ளது. /////
இல்லை நீங்கள் இப்படி சொல்லி தப்பிக்க முடியாது நந்தகோபால் அவசியம் எழுதி அனுப்புங்கள்.... அதுவும் அந்த கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றியதாக இருந்தால் இன்னும் சிறப்பு.... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....
திரு ஆலாசியம் சார் அவர்களுக்கு நன்றிகள் பல. ஆம் .. தாங்கள் எதிர்பார்ப்பது போல் அது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா பற்றியதுதான். அவர் எனக்கு, நான் தரிசிக்க விரும்பிய குழந்தை ரூபத்தில் எனக்கு தரிசனம் தந்து எம்மை தடுத்தாட்கொண்ட அந்த அனுபவம் என் மூச்சிருக்கும் வரையிலும் மறக்கமுடியாதது. ஆனால் நண்பரே நான் எழுத விரும்புவது குலதெய்வத்தின் மகிமையை. ஏனென்றால் ஒரு முக்கியமான கட்டத்தில் எம்மை எம் குலதெய்வத்திடம் போகச்சொன்னதும் அவரே. அவசியம் எழுதுகிறேன். சார். நீங்கள் என்மேல் வைதுல் நம்பிக்கைக்கு நன்றிகள் பல.
ReplyDeleteவணக்கம் ஐயா!
ReplyDeleteஎம்முடைய பெயரை உடைய பெரியவரே வணக்கம்
உங்களுக்கு ஒன்று தெரியுமா ?
காயிட்சலும் , தலை வலியும் வந்தால் தான் தெரியும் என்று ஒரு சொல்லடை உண்டு என்பது தங்களுக்கும் தெரியும் அல்லவா
அந்த சொல்லடை போல முன் அனுபவம் இல்லாதவகளிடம் போகி அதுவும்
"21 நூற்றாண்டு மாடன் யூத்திடம்!" போகி நடந்த சம்பவத்தை உண்மை கூறினால் நம்பவ போகின்றார்கள் ஐயா.
அப்படியே அவர்களுக்கும் ஒரு சம்பவம் நடந்து இருப்பின் அவர்கள் கூறுவார்கள் மருத்துவ ரீதியாக வேறு ஒரு காரணம்
கிருஷ்ணன் சார், என்னோட மலரும் நினைவுகளைக் கிளப்பி விட்டு விட்டீர்கள்..."///
ReplyDeleteஏதோ அந்த அளவுக்காவது என் கட்டுரை பயன்பட்டதே!
///"எனக்குமே கடவுள் விஷயத்தில் இரண்டு நேரடி அனுபவங்கள் இருக்கின்றன. ஆனால் சில சமயம் நினைத்துப் பார்த்தால் நிஜமாவே நடந்ததா இல்ல வெறும் கனவுதானான்னு ஒரு குழப்பம் வந்திடும். அதனாலதான் அதப்பத்தி எழுதல. ஏற்கனவே நான் ரொம்ப பீலா விடறேன்னு மக்கள்ஸ் எல்லாரும் ரொம்ப கொந்தளிச்சுப்போயிருப்பாங்க. எதுக்கு அவங்களுக்கு சோதனை மேல சோதனை குடுத்துகிட்டு?"///
ReplyDeleteஎனக்கும் ஒரு சமயத்தில் நாம் மற்றவர்களை அதிகம் சலிக்க வைக்கிறோமோ என்று சந்தேகம் வந்தது.வாத்தியாரிடம் கேட்டேன். "எழுதுவது நமது ஆத்ம திருப்திக்காகத்தான்.மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் எழுதுங்கள். தரமான, பயனுள்ள எல்லா ஆக்கங்களும் வெளியிடப்படும்" என்று கூறி ஆதரவு அளித்தார். அதனால்தான் தொடர்ந்து எழுதுகிறேன்.
இது உங்களுக்கும், எல்லோருக்கும் பொதுவாக நான் வாத்தியாரிடம் பெற்று வைத்துள்ள வரம். உங்கள் இறை அனுபவம் வேறுபட்டு இருக்கும். எல்லோருடைய அனுபவமும் ஒன்று போல இருக்காது.எனவே எழுத வருகின்ற நீங்கள் கையை மூடிக் கொள்ளாக் கூடாது.
///"அன்புடன் வணக்கம்
ReplyDeleteபின்னூட்டதிற்கு நன்றி என்று கூறி என்னை பிரித்து விட்டீர்கள் பெரியவர்கள் நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ..நீங்கள் கூறிய உங்கள் அனுபவம் திருச்சி தாயுமானவ சாமீ ..நடத்திய விளையாடல்....போல் இருக்கிறது..... ம ம்ம்.. ம்ம்..ம் ....கொடுத்து வச்சிருக்கணும்.."///
பின்னூட்டம் சொன்ன அனைவருக்கும் நன்றி சொல்லி வருவதுபோல உங்களுக்கும் சொல்லிவிட்டேன். நாம் அனைவரும் இது போலவே ஒற்றுமை
மாறாமல் பல்லாண்டுகள் அளவளாவி வருவோம்.
பொற்சடைச்சி கதையும் தாயுமானவர் கதையும் ஒன்று போலவே உள்ளது.
தாயில்லாத கர்ப்பிணிப் பெண்ணை அந்தணத் தந்தை மட்டும் தனியாக பிறந்தகத்திற்கு அழைத்து வரும் போது பெண் பிரசவ வலி கண்டு காட்டு வழியில் அமர்ந்து விடுகிறாள். தந்தை ஊருக்குள் சென்று பொன்னு என்ற தாழ்த்தப்பட்ட குலப் பெண்ணை அழைத்து வருகிறார்.பொன்னுவுக்கு தலை முடி சடை விழுந்து உள்ளது.அவர்கள் இருவரும் வருவதற்குள் இங்கே பிரசவமாகி தாயும் சேயும் நலம்."யார் பிரசவம் பார்த்தது?" என்று தந்தை கேட்க, "இதோ உங்களுடன் நிற்கும் இந்த அம்மாள்தான்" என்று சொல்லி விட்டாள்.தன்னுடன் வந்தவள் எப்படி இங்கேயும் வந்திருக்க முடியும் என்று தந்தை திகைக்க, ஒளி வடிவத்தில் சாஸ்தா தோன்றி,"நாம் தான் இந்த ஸ்த்ரீயின் ரூபத்தில் வந்தோம்" என்றார்.மேலும், " இந்த பிராமணப் பெண்ணுக்கு 8 ஆண்மகவு பிறக்கும். அவர்கள் எனக்கு பூஜை செய்ய வேண்டும். என் கோவிலுக்கு அவர்கள் பாத்தியப்பட்டவர்கள்.
அவர்கள் இல்லத்துப் பெண்கள் திருமணம் செய்து போகும் குடும்பத்தினருக்கும் நான் குல தெய்வமாவேன். எல்லோரையும் காப்பேன்.எந்தப் பொன்னுவின் உருவில் நான் வந்தேனோ அவள் பெயராலேயே நான் அழைக்கப் படவேண்டும்" என்றார்.
"21 நூற்றாண்டு மாடன் யூத்திடம்!" போகி நடந்த சம்பவத்தை உண்மை கூறினால் நம்பவ போகின்றார்கள் ஐயா."///
ReplyDeleteஇல்லை கண்ணன்ஜி! பலரும் நம்பவே செய்கிறார்கள்.
பின்னூட்டத்திற்கு நன்றி!
கமெண்ட்டை ரசித்துப்படித்து கேள்விக்கும் பதில் சொல்லி அசத்தியவர்களுக்கு நன்றி..
ReplyDeletekmr.krishnan said...
ReplyDelete///"சமீபத்தில் ஒரு மிகப் பெரும் உலக அதிசய சம்பவம் இறை நம்பிக்கையால் சாதிக்கப்பட்ட சம்பவம் என் குடும்பத்திலும் நடந்தேறியது."///
அது என்னன்னு சொல்லலாமுல்ல, மைனர்வாள்! /////////
கொஞ்சம் பொறுத்துக்கோங்க சார்....மெதுவா சொல்றேன்..
KMR சார், ஆக்டிங்கா?! உங்களுக்கா??!!
ReplyDelete////தலைமைஆசிரியரைப் பார்த்து "ரத்தம் கக்கி சாவாய்"என்றெல்லாம் 'பீலா' விட்டதில் // அச்சோ பராசக்தி, சரி அந்த தலைமைஆசிரியருக்கு என்ன வயசாகின்றது. 78i தாண்டினால் 86 தான.
//சக மாணவர்கள் எல்லோரும் 'குஷி' ஆகிக் கையைத்தட்டோ தட்டென்று தட்டிப் பாராட்டி விட்டனர்.// கண்டுபுடிச்சிட்டேன் சார், அப்போ அன்னிக்கு உங்களை எல்லோரும் ஜெ ஜெ னு பாராடினாங்கனு சொல்லுங்க. ஜெமோ சார் சொன்ன குரு சுஜாதா, பற்றிய ஐயங்கள் ரோம்பனாலாவே இருந்தது.
//வெறுப்புடனே முதல் பரிசைக் கொடுத்து விட்டார்// ஓஹ் முதல் பரிசா? சூபரு... கொடுத்த பொருள திருப்பி வாங்குற பழக்கம் இல்லதான அவருக்கு.
//'பன்ச்' பின்னூட்டம் இடுங்கள் மைனர்வாள்// பஞ்சா??? அப்போ மைனர்வாளா வந்தவர் தான் சைனாவாளா?
//முக்கியமில்லை. அந்த முதல் பரிசு ஒரு ஆங்கிலப் புத்தகம்// ஓஹ் இங்கிலீஷ் புக்கா? அதுதான் முக்கியமா? ஓகே.
ஆங்கிலப் புத்தகம்- உள்குத்து இல்லையிங்கலே :-)
//தஞ்சை நகரத்துக்கு// அவர் பெயர் சொல்லிட்டாரே.. :)
//இது எங்கள் இல்லத்துக் குழந்தைகளுக்கு சாத்தியமா என்ற கவலை என்னைப் பிடித்துக் கொண்டது.// தவறாக நினைக்க வேண்டாம், வாரணம் ஆயிரம் படத்து சூர்யா அப்பா ஞாபகம் வந்தது. 1984il நிலவரம் சரிதான்.
//"பள்ளி பள்ளி பள்ளி" என்ற ஜபம்தான். 20 நிமிடங்கள் நடந்த பின்னர் தான் அந்த அதிசயத்தைக் கவனித்தேன்// இத்தகைய ஆழ்ந்த சிந்தனை நிச்சயம் அதை சாதியமாக்குமிங்கரத .. உங்களின் மூலமாகவும் தெரிஞ்சிகிட்டேன் சார்.
சார் முதலில் செந்நிற ஒளினு சொன்னீங்க அப்புறம், ஒளிப்பந்துனு சொன்னீங்க, அப்புறம் அப்புறம் வெறும் பந்துன்னு மட்டும் சொல்லிருக்கீங்க. எனக்கு ஒரே கான்டரஷ்டீயா (இது ofcourse மாதிரி) இருக்கு.
//இரண்டு குலதெய்வம் // ரண்டு தெய்வமா? குடுப்பனைதான் போங்க சார்.
சித்தியும், சித்திதரும் தெய்வம் ஆகித் திகழும் பரா
சக்தியும் சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முக்தியும், முக்திக்கு வித்தும் வித்து ஆகி முளைத்து எழுந்த
புத்தியும், புத்தியினுள்ளே புரக்கும் புரத்தை அன்றே.
//தாய் வழிக்காணி - சடைவுடையார்// இப்ப புரிஞ்சது சார், பிரை/பொன்முடிச்செல்வன் தான மறுபெயர். அருமையான பெயர் சார்.
//3!அப்படியானால் நான் வீட்டை விட்டு வெளியேறும் போது 2.30 மணியாக இருந்திருக்குமோ?// சார் நீங்க 10 மணிக்கில்லாம் கிளம்பிட்டிங்கனு நினைக்கின்றேன். ஏன்னா, தேவரீர் டைம் படி 1 நிமிடம் = ஒரு 5 மணிநேரமாவது இருக்கும். inceptionla அப்படியே உல்டா. வகுப்பில் படித்தது, படம் பார்த்தது.
//"தர்ம சாஸ்தாவே காப்பாற்று"// - இம்ம்ம் பாவம் கடவுள், உங்களோட படிக்கற பிள்ளைகளையும் பார்க்கனும்.
//அப்போது 35 வயது என்றால் அவருக்கு 60 வயது// இப்பொழுது 63 மற்றும் 87 னு சொல்லுங்க.
//"பர்சார்"//புது வார்த்தை எனக்கு. A new vocabulary to me :))))
//சிவஇளங்கோ மிகப்பெரி ... முன்னோடி நம் பெரியவர் ஸ்ரீநிவாசராகவன்// சூபரு சார், நல்ல ப்லோ(Flow).
//கண்ணனையே தன் குழந்தையாகப் பாவித்து வந்தார்// சார் இதே மாதிரி கதைய ஜெமோ சார் கிட்டயும் படிச்சேன். அதையும் recall செயுறேன்.
//நவனீத கிருஷ்ணன்// - சரி.. சரி...//கலாசார மையமாக //-- ஆவவ்வ்வ்வ் //ஏழை, கீழ்நிலை, மத்திய தர குடும்பத்தினருக்கான பள்ளியாகத் திகழ்கிறது// அருமை சார். உங்க கைல கொடுத்தா பயனுள்ளபடி நல்லாதான இருக்கும்.
=========================
தவறாக கருத வேண்டாம், இப்படி உங்களின் கதைக்கு வரிக்கு வரி கமெண்ட் எழுதனும்னு இருப்பேன், ஆனா விட்ருவேன். இன்னைக்கு கொஞ்சம் ஜாஸ்தி ஆயுடுச்சி.
மொத்தத்தில் உங்களின் நல்ல அனுபவங்களுடன் சுகமாக பயணிக்க முடிந்தது, பகிர்விற்கு நன்றிகள்.
//உமா மேடம் - நீங்க தான் அந்த பன்மொழி வித்தகரா. னானா - னு எனக்கு ஏதாவது புரியாத பாஷைல சொல்லாதிங்க.
//கிருஷ்ண பரமாத்மாவைப் பற்றியதாக இருந்தால் இன்னும் சிறப்பு.... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்....// பார்க்கபோனால் வகுப்பறையில் கண்ணபிரானுக்கு அதிக ஆர்வலர்கள் இருப்பார்கள் போலும்.
"இயற்கையில் உறைந்திடும் இணையற்ற இறைவா
ReplyDeleteஎன் இதயத்தில் எழுந்திடவா
எங்கும் என்னை அன்போடு என்றும் - என்னை
பண்போடு காத்திடும் என்தலைவா"
வேறொன்றும் இல்லை.....
புதிதாய் வந்த புதியன் அவர்
புதிதாய் பதிந்த பதிவில் அவரெண்ணம்
பதிந்தக் கருத்தகள் தாம் இவை...
ஈரடி வெண்பாவிற்கான முயற்சி...
இப்படியும் அடிவைத்தால் ஈர்க்கலாம்
என்றதொரு அருமையாய முயற்சி....
வாழ்த்துக்கள் புதியன்....
ஆமாம், கண்ணபிரான் மட்டும் அல்ல...
அவன் காட்டிய அத்தனைக்குமான
ஆர்வலர்கள் அதிகம் உள்ள வகுப்பறை தான் இது....
வில் அங்கமாக சொல் கொண்டு வருகிறீர்கள்..
உமது வரவு நல்வரவாகுக...
எனவே எழுத வருகின்ற நீங்கள் கையை மூடிக் கொள்ளாக் கூடாது.//
ReplyDeleteஎழுத முயற்சிக்கிறேன். ஆனால் இப்போது இல்லை.
உமா மேடம் - நீங்க தான் அந்த பன்மொழி வித்தகரா. னானா - னு எனக்கு ஏதாவது புரியாத பாஷைல சொல்லாதிங்க. //
ReplyDeleteஉங்களுக்கு இப்போதான் தெரிஞ்சுதா?
புதியன், முதல்ல நீங்க எழுதிருக்கறதுல பாதி எனக்குப்புரியல. கொஞ்சம் தெளிவா எழுதுங்களேன்.
புதியவன் அவர்களே!தங்கள் ஆர்வம் கொப்பளிக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி.
ReplyDeleteஒளியைப் பற்றி நான் முரண்பாடாகச் சொல்லியிருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள்.
இந்தச் சம்பவம் நடந்த போது நான் இருந்த மனோ நிலையையும் சரியாகவே சொல்லியுள்ளதாக எண்ணிக் கொண்டு இருக்கிறேன்.அப்படிப்பட்ட மனோநிலையில் பயமும், பதட்டமும்,குழப்பமும்,நம்பிக்கையின்மையும்
எல்லாமும் கலந்த ஒரு சூழலில் எனக்கு என்ன கண்டதோ/வெளிப்படுத்தப் பட்டதோ அதை 26 வருடங்கள் கழித்து நினைவு கூர்ந்து எழுதியுள்ளேன்.சரியாகச் சொல்லவில்லை என்று தோன்றினால் அடுத்த ஆக்கத்தில் இந்த முரண்பாடு இல்லாமல் எழுதப் பார்க்கிறேன். உங்களைப் போன்றோர் படிக்கிறீர்கள் என்பதே மகிழ்ச்சி அளிக்கிறது.நன்றாக விமர்சனம் செய்யுங்கள்.ஆக்க பூர்வமாக இருந்தால் அவசியம் பதில் சொல்வேன்.
ஆம் எனக்கு வயது இப்போது 62 நடைபெறுகிறது.பர்சார் தன் 70 வயதில் மறைந்துவிட்டார்.
கல்வி நிறுவனங்களுக்குக் கணக்குப் பதியும் அதிகாரிக்கு 'பர்சர்'
(bursar) என்று பெயர்.பேச்சு வழக்கில் அது பர்சார் ஆகிவிட்டது. அவருக்கு அதுவே மரியாதைச் சொல்லாகவும் போய் விட்டது.