எத்தனை மாமாக்களைப் பார்த்தவர் அவர்? பகுதி 2
இதற்கு முன் உள்ள பதிவைப் படித்திராதவர்கள், அதைப் படித்து விட்டு
வரவும். அப்போதுதான் இந்தப் பதிவு பிடிபடும். அதாவது விளங்கும்!
முத்தப்பன் தன் வழியில் செல்ல, முத்தப்பனின் ஆத்மார்த்தமான நண்பன்
வடிவில் வந்து நின்றார் சனீஷ்வரன் என்று சொன்னேன் இல்லையா?
வந்து நின்றவர் புன்னகைத்தார். நண்பன் ஏகப்பன் வடிவில் புன்னகைத்தார்.
அதாவது ஏகப்பன் மூலம் அவர் செயல்பட ஆரம்பித்தார்.
ஏகப்பன் என்பது ஈஷ்வரனின் பெயர்களில் ஒன்று. அகில உலகிற்கும் அப்பன்,
அதாவது உலகிற்குத் தந்தையைப் போன்றவன் என்று பொருள்படும்.
"டேய், திருவாடானைக்குப் பக்கத்தில் உள்ள இடத்தை விற்க வேண்டும் என்று
சொல்லிக் கொண்டிருந்தாய் அல்லவா? ஒரு ஆசாமியைப் பிடித்திருக்கிறேன்.
முழுப் பணத்தையும் தந்து கிரயம் பண்ணிக் கொள்கிறேன் என்கிறான். என்ன
சொல்கிறாய், முடித்து விடுவோமா?"
"இப்போது வேண்டாம். இரண்டரை ஆண்டுகள் செல்லட்டும்"
"ஏன்டா?"
"என் மாமா, எனக்கு இப்போது நேரம் சரியில்லை. ஒன்றும் செய்ய வேண்டாம்
என்கிறார்"
"சரி, ஒன்றும் செய்ய வேண்டாம். இடத்தை விற்று வரும் பணத்தை வங்கியில்
போட்டுவை. ஆள் கிடைக்கும்போது விற்றால்தான் உண்டு. உன்னுடைய இடத்தில்
கருவேல மரங்கள் மண்டிக் காடாகக் கிடக்கிறது. இடத்தை வெட்டிச் செம்மை
பண்ணவே ஆறுமாதங்கள் ஆகும். அப்படியே செம்மை பண்ணினாலும். அங்கே
விவசாயம் பண்ணமுடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இப்போது அந்த
இடத்தைக் கேட்கிறவன் எதோ ஃபாக்டரி கட்டுவதற்காகக் கேட்கிறான். இடம்
நெடுஞ்சாலையில் இருக்கிறது என்பதை வைத்துத்தான் அவனும் பிரியப் படுகிறான்.
ஆகவே அவனை விட்டால், அவனைப்போல வேறு ஒரு இளிச்சவாயன் கிடைப்பது
சிரமம். ஆகவே யோசித்துவை. நாளைக்கு வருகிறேன். இதற்கும் போய் மாமாவைக்
கேட்டுக் கொண்டிருக்காதே! பணத்தை வங்கியில் போட்டுவைக்க யாருடைய
யோசனையும் தேவையில்லை" என்று சொல்லி ஏகப்பன் இவன் மனதை ஒரு
கலக்குக் கலக்கி விட்டுப் போய் விட்டான்
நம்ம ஆளும் யோசித்தான். ஏகப்பன் சொல்வது உண்மை. இப்பொதுவிட்டால்,
மறுபடியும் விற்க நினைக்கும் சமயத்தில் வாங்குவதற்குத் தோதாக ஆள் கிடைக்க
வேண்டுமே? மாமா, புதிதாக வியாபாரம் எதுவும் செய்ய வேண்டாம் என்றுதானே
சொன்னார். இடத்தை விற்றுப் பணத்தை வங்கியில் போட்டு வைப்பதில் என்ன தவறு?
அப்படியும் இப்படியுமாக யோசித்தவன் ஒரு முடிவிற்கு வந்தான்.
அன்றைய விலை நிலவரம் ஏக்கர் பத்தாயிரம் ரூபாய் அளவில் இருந்தது. ஐந்து
ஏக்கர்களின் மதிப்பு ஐம்பதாயிரம் ரூபாய். நாம் இரண்டு மடங்கு விலையைச்
சொல்வோம். போனால் போகிறது. இரண்டு மடங்கு பணம் கிடைக்கும். இல்லை
யென்றால் கிடந்து விட்டுப் போகிறது.
அடுத்த நாள் காலை, தன்னைப் பார்க்க வந்த ஏகப்பனிடம் அதையே சொன்னான்.
என்ன ஆச்சர்யம்?
அன்று மாலையே, இடத்தை வாங்க விரும்பிய ஆசாமியை கூட்டிக் கொண்டு வந்து
விட்டான் ஏகப்பன். இடத்தை வாங்க வந்தவன், நம்ம ஆளை யோசிக்கவே
விடவில்லை!
"அப்பச்சி, செட்டி மக்களை நம்பி எத்தனை பணத்தை வேண்டுமென்றாலும்
கொடுக்கலாம். ஆகவே பிடியுங்கள்" என்று சொல்லி ஒரு லட்ச ரூபாயைக் கையில்
கொடுத்துவிட்டான். இன்றைய மதிப்பில் அது சுமார் 25 லட்ச ரூபாய்க்குச் சமம்
வந்தவன் மேலும் சொன்னான்,"அப்பச்சி, இடத்திற்கு விலை அதிகம்தான். இருந்தாலும்
அதை ஏன் வாங்குகிறேன் என்றால் எனக்குக் குறி பார்த்துச் சொன்னவன் இந்த
இடத்தை வாங்கித் தொழிற்சாலையைக் கட்டு என்று சொல்லியிருக்கிறான். அதனால்
தான் விலையைப் பற்றிக் கவலைப்படாமல் இடத்தை வாங்குகிறேன். கிரயத்தை
நாளைக்கே வைத்துக் கொள்வோம்."
அதன்படியே அரங்கேறியது. முத்தப்பனின் தந்தைக்கும் அந்த டீலிங்'கில்
மகிழ்ச்சிதான். இருக்காதா பின்னே? இரண்டு மடங்கு பணம் என்றால்
சாதாரணமா என்ன?
பணம் வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு வைக்கப்பெற்றது.
அதே போன்று உள்ளூர் சிவன் கோவில் காரியக்காரர் கொடுத்த பிரஷரில், அவருக்கு
வேண்டிய நபருக்கு, முத்தப்பன் பெயரில் இருந்த வீட்டையும் விற்க வேண்டியதாயிற்று
அதிலும் ஆச்சரியம் என்ன வென்றால் அதற்கும் இரண்டு பங்கு விலையாக ஒரு
லட்ச ரூபாய் கிடைத்தது. அந்தப் பணமும் வங்கியில் வைப்பு நிதியாகப் போட்டு
வைக்கப் பெற்றது.
இதெல்லாம் ஏழரைச் சனி துவங்கி ஒருவார காலத்திலேயே நடந்து முடிந்தது.
முத்தப்பனுக்கு எல்லாம் வியப்பாக இருந்தது. மாமா, நேரம் சரியில்லை என்று
சொன்னாரே தவறாகச் சொல்லியிருப்பாரோ? சரியில்லை என்றால் இரண்டு மடங்கு
விலை சொன்னதற்கு இரு டீலிங்குகளுமே ஊற்றிக் கொள்ளாமல் கனகச்சிதமாக
முடிந்து கைக்குப் பணம் வந்தது எப்படி?
உண்மையில் மாமா சொன்னது தவறா? அல்லது தனது ஜாதகமே தவறா?
அவனுக்குக் குழப்பமாக இருந்தது.
குழப்பத்தைத் தெளிவு படுத்திக் கொள்ளும் முகமாக, அடுத்த நாள் காலையில்,
தன்னுடைய மாமாவைச் சென்று பார்த்தான். விஷயத்தை முழுமையாகச் சொல்லித்
தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான்.
மாமா புன்னகைத்துவிட்டுச் சொன்னார்.
"மாப்ளே, ஜாதகம் தவறுவதற்குச் சான்சே இல்லை. உன் ஆத்தா, உன்னைப் பெற்றது
எங்கள் வீட்டில். மருத்துவப் பெண்மணியைக் கூட்டிக்கொண்டு வந்து பிரசவம்
பார்க்க உதவியது எல்லாம் நான்தான். அதோடு நீ பிறந்த அந்தக் கணமே
ஜாதகத்தைக் கணித்து எழுதிக்கொடுத்ததும் நான்தான். அதிலெல்லாம் சந்தேகப்
படாதே. நான் சொல்லியதிலும் தவறில்லை. விரையச் சனியைப் பற்றி உனக்குத்
தெரியாது. ஆகவே எச்சரிக்கையாக இரு. அவ்வளவுதான் சொல்ல முடியும்!"
"சரி, மாமா, இரண்டு சொத்துக்களுமே சுமாரான சொத்துக்கள்தான். இரண்டு மடங்கு
விலைக்குப் போனது எப்படி?"
"சனி, உன்னைப் பிடித்த ஒரு வாரத்திற்குள்ளாகவே, உன் பெயரில் இருந்த இரண்டு
சொத்துக்களையும் காலி செய்தான் பார்த்தாயா? அதை ஏன் நீ யோசிக்கவில்லை?
உன் பெயரில் இப்போது என்ன இருக்கிறது?"
"இரண்டு லட்ச ரூபாய் பணம் வங்கி டெபாசிட்டாக இருக்கிறதே மாமா?"
"ஆங், அதையாவது பத்திரமாக வைத்துக் கொள். போய் வா!"
--------------------------------------------------------------------------------------
அது நடந்து பத்து நாட்கள் இருக்கும். ஏகப்பன் மறுபடியும் வந்தான்
"டேய், கம்பம், தேனி, உப்பார்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் வட்டிக்கடை
நடத்தினால் நன்கு சம்பாதிக்கலாமாம். என் மாமனார் சொல்கிறார். நான்
வைக்கலாம் என்று இருக்கிறேன். நீயும் வா. பார்ட்னர்ஷிப் போட்டுக்கொண்டு
இருவரும் சேர்ந்து கடை வைக்கலாம். முன் அனுபவத்திற்கு என் மாமனார்
இருக்கிறார். அவர் வந்திருந்து நமக்கு ஒரு மாதம் பயிற்சி கொடுப்பார்."
"நான் வரவில்லை!" இது முத்தப்பன்
"ஏன்டா?"
"எனக்கு நேரம் சரியில்லை என்று என் மாமா சொல்லியிருக்கிறார். ஆகவே
இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு நான் எந்த வியாபாரமும் செய்வதாக
இல்லை!"
"அட, மடையா, வியாபாரத்திற்கும், வட்டிக்கடைக்கும் உனக்கு வித்தியாசம்
தெரியவில்லையே உனக்கு? மிளகாய் வாங்கி விற்றால் வியாபாரம். பஞ்சை வாங்கி
விற்றால் வியாபாரம். வியாபரத்தில் ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு. லாபமும்
உண்டு. நஷ்டமும் உண்டு. ஆனால் வட்டிக்கடை என்பது வங்கியைப் போன்றது.
வங்கியில் பெரிய அளவில் நகைக் கடன் கொடுக்கிறார்கள் இல்லையா? அதையே
சிறிய அளவில் ஒருவன் செய்வதுதான் வட்டிக்கடை. ஒருவனுக்கு, அவனுடைய
நகையை வாங்கிக் கொண்டு, அதன் மதிப்பில் பாதியைக் கடனாகக் கொடுக்கிறோம்
அவன் பணத்தைத் திருப்பித் தராவிட்டால், கொடுத்த பணத்தைவிட இரண்டு
மடங்கு மதிப்புள்ள தங்கம் நம்மிடம் ஈடாக இருக்குமே. அதாவது அடமானமாக
இருக்குமே. அது எப்படி வியாபாரம் ஆகும். அது தொழில். அதில் நஷ்டம்
வருவதற்குச் சான்சே இல்லை" என்று இவ்வாறாகவும், இதற்கு மேலாகவும் இரண்டு
நாட்கள் அற்புதமாகப் பேசி, முத்தப்பனின் மனதை கரைத்தான் ஏகப்பன்.
நம்ம ஆளுக்கு யோசிக்க யோசிக்க பிரம்மிப்பாக இருந்தது. ஏகப்பன் சொல்வதில்
உள்ள உண்மை புலப்படவும் செய்தது.
ஆகவே வட்டிக்கடை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தான். குடியிருக்கும்
வீட்டின் முன் பகுதியையே கடைக்கு உபயோகித்துக் கொள்வது என்றும் முடிவு
செய்தான். திண்டுக்கல் பெட்டகம் (Sefe Vault) ஒன்றும், தங்கத்தை எடைபோடும்
தராசு ஒன்றும் வாங்கினால் போதும். வீட்டோடு கடை என்பது மிகவும்
பாதுகாப்பானது
அவன் மனைவிக்கு அவனை விட மகிழ்ச்சியாக இருந்தது.
எல்லாம் மளமளவென்று ராக்கெட் வேகத்தில் நடந்தது.
இருவரும் தேனிக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
கூடவே சனீஷ்வரனும் சென்றார்!
இதில் ஒரு வேடிக்கை என்ன வென்றால், முத்தப்பனுக்கு விரையச்சனி.
ஏகப்பனுக்கு அவன் ஜாதகப்படி கோள்சாரத்தில் பதினொன்றில் சனி.
ஒருவனைத் தட்டி எடுக்க வேண்டும். ஒருவனுக்குக் கொட்டிக் கொடுக்க
வேண்டும். இரண்டையும் சனி அங்கே செய்ய வேண்டும்.
அதை அற்புதமாகச் செய்தார் சனீஷ்வரன். அவரால் முடியாதது எதுவும்
இல்லை. ஆகவே துவக்கத்திலேயே அதைச் செய்தார். அதற்கு உரிய
பாதையை முன்பே போட்டு வைத்தார்.
அப்படி என்ன செய்தார் சனீஷ்வரன்?
(தொடரும்)
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன்!
மற்றவை அடுத்த பதிவில்!
வாழ்க வளமுடன்!

Excellent...and very intersting. Eager to know about Sani Bhaghavan and his actions.
ReplyDeleteவணக்கம் அய்யா
ReplyDeleteசனி கிரகம் பற்றிய துவக்கம் அருமை ஆர்வத்தை தூண்டுகிறது...
today im first..
//ஒருவனைத் தட்டி எடுக்க வேண்டும். ஒருவனுக்குக் கொட்டிக் கொடுக்க
ReplyDeleteவேண்டும். இரண்டையும் சனி அங்கே செய்ய வேண்டும்.
//
மேட்டர் ஓவர்!
அய்யா கதை அருமை. எனக்கு மாமாக்கள் என்றதும் உத்தம புத்திரனில் சிவாஜி அவர்களின் மாமா நம்பியார் அவர்களும், கர்ணனில் துரியோதனனின் மாமா சகுனியின் ஞாபகம்(இதிலும் நம்பியார் அவர்கள் தான் மாமா) வருகிறது. கதை சீரியல் மாதிரி தொடரும் போட்டு செல்கின்றது.கதை முடிவை ஆவலோடு எதிர்பார்த்து...
ReplyDeleteவாழ்க வளமுடன்:,
வேலன்.
Reads like a thriller.
ReplyDeleteஹலோ சார்,
ReplyDeleteஆஹா, கதை அருமையாக உள்ளதே.
//ஒருவனைத் தட்டி எடுக்க வேண்டும். ஒருவனுக்குக் கொட்டிக் கொடுக்க
வேண்டும். இரண்டையும் சனி அங்கே செய்ய வேண்டும்.// அற்புதம் சார்.
ஆக சனி இரண்டயும் விடாமல் க்ரெக்ட்டாக முடித்து விட்டார் னு சொல்லுங்க. waiting for the balance matter.
This comment has been removed by the author.
ReplyDelete//////Blogger தினேஷ் said...
ReplyDeleteExcellent...and very intersting. Eager to know about Sani Bhaghavan and his actions.//////
அடுத்தடுத்து வரும் நண்பரே!
/////Blogger sundar said...
ReplyDeleteவணக்கம் அய்யா
சனி கிரகம் பற்றிய துவக்கம் அருமை ஆர்வத்தை தூண்டுகிறது...
today im first..///////
கடைசிவரை ஆர்வம் குறையாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்கிறேன்!
/////Blogger Namakkal Shibi said...
ReplyDelete//ஒருவனைத் தட்டி எடுக்க வேண்டும். ஒருவனுக்குக் கொட்டிக் கொடுக்க
வேண்டும். இரண்டையும் சனி அங்கே செய்ய வேண்டும்.
// மேட்டர் ஓவர்!/////
எந்த மேட்டரைச் சொல்கிறீர்கள் சாமி?
//////Blogger வேலன். said...
ReplyDeleteஅய்யா கதை அருமை. எனக்கு மாமாக்கள் என்றதும் உத்தம புத்திரனில் சிவாஜி அவர்களின் மாமா நம்பியார் அவர்களும், கர்ணனில் துரியோதனனின் மாமா சகுனியின் ஞாபகம்(இதிலும் நம்பியார் அவர்கள் தான் மாமா) வருகிறது. கதை சீரியல் மாதிரி தொடரும் போட்டு செல்கின்றது.கதை முடிவை ஆவலோடு எதிர்பார்த்து...
வாழ்க வளமுடன்:,
வேலன்.//////
இந்தக் கதையில் வரும் மாமா மிகவும் நல்லவர். கடைசியில் தெரிந்து கொள்வீர்கள்!
/////Blogger krish said...
ReplyDeleteReads like a thriller.//////
த்ரில் இருந்தால்தானே சுவை கூடும்!
//////Blogger Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
ஆஹா, கதை அருமையாக உள்ளதே.
//ஒருவனைத் தட்டி எடுக்க வேண்டும். ஒருவனுக்குக் கொட்டிக் கொடுக்க
வேண்டும். இரண்டையும் சனி அங்கே செய்ய வேண்டும்.// அற்புதம் சார்.
ஆக சனி இரண்டயும் விடாமல் க்ரெக்ட்டாக முடித்து விட்டார் னு சொல்லுங்க. waiting for the balance matter.//////
உங்கள் பாராட்டிற்கு நன்றி சகோதரி! கதையின் மற்ற பகுதிகள் அடுத்தடுத்து வரும்!
சனி மாமா மிக்க நல்லவர். மலை உச்சிலிருந்து தள்ளி விடுவார். ஆனால் புன்னகை மன்னன் கமல் மரத்தில் சிக்கி தப்பிப்பது போலவும் செய்து விடுவார்.
ReplyDeleteவாத்தியாரையா,
ReplyDeleteபாடம் ஸூப்பர். மிகவும் கண்டிப்பான சனி வாத்யாரின் பிராபல்யத்தை கூடுதல் கவனத்துடன் படிக்கிறேன்.
அய்யா,
ReplyDeleteஎன் மஹாநதி தியரியை வாபஸ் வாங்கி கொள்கிறேன். என்ன தான் இருந்தாலும், அய்யாவின் கதை சொல்லும் பாங்கு போல் வருமா?
சனி தசை (அல்லது புக்தி), ஒரு சிலருக்கு நன்மை செய்தாலும், ஏழரை நாட்டு சனியானது தன் தன்மையை திறமையுடன் காண்பித்து விடுவார். மங்கு சனி, பொங்கு சனி மற்றும் கண்டக சனி பற்றி பாட பகுதியில் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி!
ஸ்ரீதர்
ஐயா
ReplyDeleteசனியின் திருவிளையாடல்களை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன். பதிவின் எழுத்து நடை மிக அருமை.
சனியைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
ReplyDeleteஇங்கும், என்னதான் மாமா மதியாகச் சொன்னாலும், விதி வலிது என்றே காட்டிவிடுகின்றது.
////////Blogger Ragu Sivanmalai said...
ReplyDeleteசனி மாமா மிக்க நல்லவர். மலை உச்சிலிருந்து தள்ளி விடுவார். ஆனால் புன்னகை மன்னன் கமல் மரத்தில் சிக்கி தப்பிப்பது போலவும் செய்து விடுவார்.//////////
சரியாகச் சொன்னீர்கள் சிவன்மலை. அவர் அப்படிச் செய்யக்கூடியவர்தான். தள்ளியும் விடுவார். சமயத்தில் கைகொடுத்துத் தூக்கியும் விடுவார்
///////Blogger அமர பாரதி said...
ReplyDeleteவாத்தியாரையா,
பாடம் சூப்பர். மிகவும் கண்டிப்பான சனி வாத்யாரின் பிராபல்யத்தை கூடுதல் கவனத்துடன் படிக்கிறேன்.///////
ஆமாம். அப்படியே படியுங்கள்
/////////////Blogger Sridhar said...
ReplyDeleteஅய்யா,
என் மஹாநதி தியரியை வாபஸ் வாங்கி கொள்கிறேன். என்ன தான் இருந்தாலும், அய்யாவின் கதை சொல்லும் பாங்கு போல் வருமா?
சனி தசை (அல்லது புக்தி), ஒரு சிலருக்கு நன்மை செய்தாலும், ஏழரை நாட்டு சனியானது தன் தன்மையை திறமையுடன் காண்பித்து விடுவார். மங்கு சனி, பொங்கு சனி மற்றும் கண்டக சனி பற்றி பாட பகுதியில் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி!
ஸ்ரீதர்///////
உங்கள் நம்பிக்கை வீண் போகாது. பாடங்கள் தொடர்ந்து வரும்!
/////////////Blogger bhaskar said...
ReplyDeleteஐயா
சனியின் திருவிளையாடல்களை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். அடுத்த பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன். பதிவின் எழுத்து நடை மிக அருமை./////////
உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி பாஸ்கர்!
/////////////Blogger இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteசனியைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றேன்.
இங்கும், என்னதான் மாமா மதியாகச் சொன்னாலும், விதி வலிது என்றே காட்டிவிடுகின்றது.//////
உண்மை. விதி வலியது!
Dear Sir
ReplyDeleteNeengal Oru Kadhasiriyar... Naan Adikadi Solluvadhu Neegal oru Story Writer"
In Programming Language -Java
for (int i=0;i<1000000000000 i++)
{
System.out.println("Mr.Sp.V.Subbiah Sir is Great");
}
Sir.. Neenga Oru Kadhaariyar.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Eagerly waiting to see what is the morale of the story and in my opinion whether sani do good or bad, it's all depend on our past karma. Theethum nandrum pirar thara vaara.
ReplyDeleteGood Suspense so far
ReplyDeleteExcellent...
ReplyDeleteGK,BLR
மிக சுவாரஸ்யமாகச் செல்லுகிறது கதை. :)
ReplyDeleteதட்டி கவிழ்ப்பதிலும் கொட்டி கொடுப்பதிலும் சனிஷ்வரனுக்கு நிகர் எவர் உளர்.
ReplyDeleteகதை அருமையோ அருமை.
/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Neengal Oru Kadhasiriyar... Naan Adikadi Solluvadhu Neegal oru Story Writer"
In Programming Language -Java
for (int i=0;i<1000000000000 i++){System.out.println("Mr.Sp.V.Subbiah Sir is Great");}
Sir.. Neenga Oru Kadhaariyar.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman//////
எனக்கு கதை சொல்வதும், எழுதுவதும் பிடித்தமான வேலை. ஜோதிடம் இரண்டாம் இடத்தில்தான்!
//////Blogger ananth said...
ReplyDeleteEagerly waiting to see what is the morale of the story and in my opinion whether sani do good or bad, it's all depend on our past karma. Theethum nandrum pirar thara vaara./////
உண்மை நம்க்கு எழுதிவைக்கப்பட்டுள்ள பலனையே அவர் தருவதால். அவர் மீது குற்றம் சொல்ல ஒன்றும் இல்லை!
/////Blogger Raj kumar said...
ReplyDeleteGood Suspense so far/////
நன்றி ராஜ்குமார்!
//////Blogger Geekay said...
ReplyDeleteExcellent...
GK,BLR/////
நன்றி ஜீக்கே!
/////Blogger மதுரையம்பதி said...
ReplyDeleteமிக சுவாரஸ்யமாகச் செல்லுகிறது கதை. :)/////
எங்கே மதுரையம்பதி, நீண்ட நாட்களாக உங்களை வகுப்பறைப் பக்கமே காண முடிவதில்லை?
///////Blogger N.K.S.Anandhan. said...
ReplyDeleteதட்டி கவிழ்ப்பதிலும் கொட்டி கொடுப்பதிலும் சனிஷ்வரனுக்கு நிகர் எவர் உளர்.
கதை அருமையோ அருமை.//////
நன்றி நண்பரே!
Dear Sir
ReplyDeleteIndru 4:25 p.m(IST -India) Enakku - AAnkulandhai pirandhadhu.Happy Sir.Iam in USA(California)
Rishabha lagna, Kumbha Rasi- 4il Saturn - 9il Sevvai(uchham),guru(neechambangam), bhudhan,Rahu, 10 il Suriyan and Moon(combination), 11il Sukkiran (Uccham)
Guru Mahadhasi yum, Shani Mahadhasiyum Eppadi Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
Dear Sir
ReplyDeleteIndru 4:25 p.m(IST -India) Enakku - AAnkulandhai pirandhadhu.Happy Sir.Iam in USA(California)
Rishabha lagna, Kumbha Rasi- 4il Saturn - 9il Sevvai(uchham),guru(neechambangam), bhudhan,Rahu, 10 il Suriyan and Moon(combination), 11il Sukkiran (Uccham)
Guru Mahadhasi yum, Shani Mahadhasiyum Eppadi Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
//எங்கே மதுரையம்பதி, நீண்ட நாட்களாக உங்களை வகுப்பறைப் பக்கமே காண முடிவதில்லை?//
ReplyDeleteஅவ்வப்போது வந்து படித்துக் கொண்டிருக்கிறேனய்யா...என்ன லேட்டா வருகிறேன், ஆதலால் பின்னூட்டுவதில்லை. :-)
/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Indru 4:25 p.m(IST -India) Enakku - AAnkulandhai pirandhadhu.Happy Sir.Iam in USA(California)
Rishabha lagna, Kumbha Rasi- 4il Saturn - 9il Sevvai(uchham),guru(neechambangam), bhudhan,Rahu, 10 il Suriyan and Moon(combination), 11il Sukkiran (Uccham)
Guru Mahadhasi yum, Shani Mahadhasiyum Eppadi Sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
வாழ்த்துக்கள். அச் செல்வன் எல்லா நலன்களையும் பெற்று வாழ ஈஷ்வரனைப் பிரார்த்திக்கின்றேன்.
பிறப்பு விவரங்கள் + ஒரு கேள்வி, தனி மின்னஞ்சலில் எழுதுங்கள்!
//////Blogger மதுரையம்பதி said...
ReplyDelete//எங்கே மதுரையம்பதி, நீண்ட நாட்களாக உங்களை வகுப்பறைப் பக்கமே காண முடிவதில்லை?//
அவ்வப்போது வந்து படித்துக் கொண்டிருக்கிறேனய்யா...என்ன லேட்டா வருகிறேன், ஆதலால் பின்னூட்டுவதில்லை. :-)//////
பின்னூட்டம் முக்கியமில்லை. நீங்கள் வந்து படித்தால் போதும். நன்றி மதுரைக்காரரே!