மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

11.1.09

அழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன் - பகுதி 2

ஆசைதான் துன்பத்திற்குக் காரணம் என்கிறது வேதாந்தம்.

ஆசைப் படுவதை நிறுத்தாதே, நிறுத்தினால் உன் வளர்ச்சி நின்றுவிடும்.
ஆசையும் தேடலும்தான் உன்னை உயரத்திவிடும் என்கிறது இன்றைய
வாழ்வியல்.

மனிதன் குழம்பி நிற்கிறான். எதைக் கடைப்பிடிப்பது?

இரண்டாவதைக் கடைப்பிடி. அதுதான் இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு
உகந்தது. அதே நேரத்தில் முதலில் சொன்னதையும் மனதில் வை! இரண்டும்
இரண்டு கண்களைப் போன்றவை. ஒப்பிட்டுப்பார்க்காதே!

செயல் உன் கையில் இருக்கிறது; விளைவு உன் கையில் இல்லை!

Actions are in your hand; Not the results! - Bhagavad Geetha

கல்லை எறி மாங்காய் விழுந்தாலும் விழுகலாம். விழுகாமல் போனாலும்
போகலாம். கல்லை எறிந்து கொண்டே இரு. பத்துக் கற்களுக்கு ஒரு
மாங்காயாவது விழுகாதா?

பலவிதமான பறவைகள் இருக்கின்றன. குருவி, கிளி, மைனா, புறா, மயில்
அன்னம், காகம், கழுகு என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

ஒவ்வொன்றும் ஒற்று விதத்திலும் அழகு. ஒவ்வொன்றிற்கும் சில உணவுப்
பழக்கங்கள். ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு வலிமை. ஒவ்வொன்றிற்கும்
ஒவ்வொரு உயரத்தில் பறக்கும் தன்மை.

கழுகைப் போல, குருவியால் பறக்க முடியுமா?

காகம் தெருவில் இறந்து கிடைக்கும் நாயின் எஞ்சிய மிச்சங்களைத் தின்னும்.
கிளியும், குருவியும் அதைத் தின்னுமா? திங்காது. அல்லது என்ன பசியாக
இருந்தாலும் அதை, அந்த அசிங்கத்தைத் தொடாது.

தனக்கென உரிய தானியங்களை, மற்றும் கனிகளை மட்டுமே தேடிப்
பிடித்து அவைகள் உண்ணும்.

அதிசயம் என்ன வென்றால், எண்ணற்ற பறவைகளைப் படைத்த இறைவன்
அவற்றிற்கு உரிய உணவையும் தந்திருக்கிறான்.

எந்தப் பறவையாவது பட்டினியால் செத்து விழுந்திருக்கிறதா?

எந்தப் பறவைக்காவது மனிதனுக்கு இருப்பதைப் போல ரேசன் கார்டும், மிஞ்சிய
உணவை எடுத்து ஃபிரிஜ்ஜில் வைத்து அடுத்த வேளையில் உண்ணும் அவலமும்
இருக்கிறதா?

இல்லை!

உலகில் மனிதனுக்கு உள்ள தேவைகளும், கவலைகளும் பறவைகளுக்கு இல்லை!

அதனால் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் ஒரு பாடலில் இப்படி எழுதினார்.

"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்!"
--------------------------------------------------------------------------------------------------------
காலதேவன் மனிதனைப் படைக்கும்போதே நான்கு விதமாகப் படைக்கின்றான்

பல்லக்கில் போகிறவன், பல்லக்கைச் சுமக்கிறவன், பல்லக்கைச் செய்கிறவன்.
பல்லக்கையும், பல்லக்கில் செல்கிறவனையும் வேடிக்கை பார்க்கிறவன் என்று
மனிதர்கள் வகைப்படுவார்கள்.

பல்லக்கைத் தூக்கும் பணிதான் உனக்குக் கிடைத்திருக்கிறதா? கவலைப் படாதே!
சந்தோஷமாக அதைச் செய்!. பயணிக்கிறவனைவிட தூக்கிகிறவனுக்கு உடல்
வலிமை அதிகம். எங்கே போனாலும் உனக்கு வேலை கிடைக்கும்.சாப்பிட்ட
உணவு ஜீரணமாகும். படுத்தால் உடனே தூக்கம் வரும்

போகிறவன் நிலைமை அப்படியல்ல!

காலதேவன் ஒரு நாள் அவனைக் கீழே தள்ளி பொடி நடையாக நடக்கும்படி
செய்து விடுவான்.

தூக்குகிறவனுக்கும் ஒரு நாள் பல்லக்கில் செல்கின்ற பாக்கியத்தை அவன்
ஏற்படுத்திக் கொடுப்பான்.

ஆகவே காலம் கனியட்டும் என்று பொறுமையாக இரு!
.............................................................................................................................
அதிரடியான ஏற்றத் தாழ்வுகளை உண்டாக்குபவன் ராகு!

Boys Company என்னும் நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்த நடிகனை
நாடே புகழும் நடிகனாக்கியவன் ராகு!

ஆமாம், விழுப்புரம் சின்னையாபிள்ளை கணேசன் என்னும் இளைஞனை,
நாடே திரும்பிப் பார்க்கும் நடிகர் திலகம் சிவாஜியாக ஆக்கியவன் ராகு!

1952ஆம் ஆண்டு பராசக்தி படம், வெளிவந்தது முதல் 1970ஆம் ஆண்டு வீயட்நாம்
படம் வெளியானது வரை அவர் நடித்த படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றன.
அவருக்குப் பெரும் செல்வத்தையும், புகழையும், பெருமைகளையும் ஈட்டித்தந்தவன்
ராகு.

1.10.1927ல் சிவாஜி கணேசன் பிறந்தார். அவர் நடித்த முதல் படம் பராசக்தி
1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. அப்பொது அவருடைய
வயது 25

அதற்குப் பிறகு தொடர்ந்து பதினெட்டு ஆண்டுகள் அவரைத் தூக்கிப் பிடித்துக்
கொண்டுபோய் சிகரத்தில் நிறுத்தியவன் ராகு
.............................................................................................................................
அது போல சிகரத்தில் இருப்பவர்களைத் தெருவில் கொண்டுவந்து நிறுத்துபவனும்
ராகுதான்.

சமீபத்திய உதாரணம். தகவல் தொழில் நுட்பத்துறையில் இந்திய அளவில் நான்காம்
இடத்தில் இருந்த பிரபல தொழில் அதிபரைச் சிக்க வைத்ததும் ராகுதான்.

அவருடைய பெயர் ராமலிங்க ராஜு! அவர் யாரென்று சொல்லத் தேவையில்லை!
இன்று நாடே அவரை அறியும்!
............................................................................................................................
ராகு நான்காம் வீட்டில் இருந்தால் என்ன நடக்கும் என்று சென்ற இதழில் பார்த்தோம்

இப்போது லக்கினத்தில் ராகு இருந்தால் என்ன ஆகும்?

ராகு ஒருவரின் ஜாதகத்தில் எங்கே இருந்தாலும், அவனுடைய திசையோ அல்லது
வேறு கிரகத்தின் திசையில் அவனுடைய புக்தியோ வரும்வரை பேசாமல் இருப்பார்
தனக்கு நேரம் வந்தவுடன் ஆட்டத்தை ஆரம்பித்து ஜாதகனின் நேரத்தைக் கெடுக்க
ஆரம்பிப்பார்.

அவர் அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபன் நன்றாக இருந்தால் அவருடைய ஆட்டம்
செல்லாது அல்லது எடுபடாது. அவன் வலிமையாக இல்லை என்றால் இவர் ஆடி
ஜாதகனை ஒரு கை பார்த்து விடுவார். அதை மனதில் கொள்க!

லக்கினத்தில் இருக்கும் ராகு, அவருடைய நேரம் வந்தவுடன், ஜாதகனுக்கு உடல்
உபாதைகளை உண்டாக்குவார்.

அது அவருடைய சுயபுக்திக் காலமாக இருந்தால், ஜாதகன் விஷக்கடிகளுக்கு
ஆளாக நேரிடும். பாம்பு, தேள், பூரான் என்று எது வேண்டுமென்றாலும் ஜாதகனைக்
கடித்து வைக்கும். குறைந்த பட்சம் தெரு நாயிடமாவது ஜாதகன் கடிபட நேரிடும்.

அல்லது நோய்கள் ஏற்பட்டு ஜாதகன் அவதியுற நேரிடும்.

ஊர்விட்டு ஊர் மாறிச் செல்ல நேரிடும். அலுவலகத்தில் உள்ளவர்கள் தண்ணியில்லாக்
காட்டுக்கு மாறிச் செல்ல நேரிடும்.

சிலருக்கு நெருங்கிய உறவினர்களுடன் விரோதம் ஏற்படும். நெருங்கிய நண்பர்களுடன்
கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.

பிற பெண்கள் மீது மோகம் ஏற்பட்டு, நேரத்தையும், பணத்தையும், பெயரையும்
இழக்க நேரிடும்.

லக்கினாதிபதி வலிமையாக இருந்தால், இது எதுவும் ஏற்படாது. அவர் ஜாதகனைக்
காப்பாற்றிவிடுவார்.

(தொடரும்)
...................................................................................................................................
அடுத்த பகுதி நாளை இரவு! ராகுவைப் பற்றிய பாடம் மிகவும் பெரியது. அதனால்
ஒரே பதிவாக வெளியிட இயலவில்லை. யோசித்து சிறப்பாக எழுதிப் பதிவிட முடிவு
செய்துள்ளேன். ஆகவே பொறுத்திருந்து ஒவ்வொரு பகுதியையும் கவனத்துடன்
படிக்கும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்

நன்றி வணக்கத்துடன்,
வகுப்பறை
வாத்தியார்.

வாழ்க வளமுடன்!

46 comments:

  1. "கல்லை எறி மாங்காய் விழுந்தாலும் விழுகலாம். விழுகாமல் போனாலும் போகலாம்.
    கல்லை எறிந்து கொண்டே இரு.
    பத்துக் கற்களுக்கு ஒரு மாங்காயாவது விழுகாதா?"


    ஆசானே ஏதோ இலக்கணம் இடிக்கின்றதே!

    விழுகலாம் என்பதை விழலாம் எனவும்,
    விழுகாமல் என்பதை விழாமல் எனவும்,
    விழுகாதா என்ப‌தை விழாதா என‌வும் எழுதுவ‌துதான் ச‌ரி என‌ நினைக்கின்றேன்.
    வ‌ட்டார‌ப் பேச்சு வ‌ழ‌க்கு எப்ப‌டியோ அடியேனுக்குத் தெரியாது.

    ஆசானின் க‌ருத்த‌றிய‌ ஆவ‌ல்.

    புள்ளிராஜா

    ReplyDelete
  2. அருமையான பதிவு அய்யா..
    அடுத்த பாகத்திற்கு ஆவலாக..
    அன்புடன்,
    GK, BLR

    ReplyDelete
  3. Ayya, Lagnathil ulla ragu vi naal thalayil valukai viluguma ?? Sirika vendam, silar jadakathai partha piragu thondriya kelvi..

    ReplyDelete
  4. Lagnathil ula Raagu thalayil padhipai undakuvar endru padithirukiraen... Adhan vilaivaga vae mela elupiyae kelvi... opitu partha silaruku sariyaga irundadhu..

    ReplyDelete
  5. Dear Sir

    Excellent Sir.
    you are like Hemoglobin.

    Thank u

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  6. Dear Sir

    Excellent Sir.
    you are like a Hemoglobin.

    Thank u

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  7. ////Blogger Geekay said...
    Super Sir,
    GK, BLR./////

    வாருங்கள் ஜீக்கே.இன்று புள்ளிராஜாவை நீங்கள் முந்திக் கொண்டு முதல் மாணவனாக வகுப்பிற்குள் நுழைந்து விட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
  8. ////Blogger pulliraaja said...
    "கல்லை எறி மாங்காய் விழுந்தாலும் விழுகலாம். விழுகாமல் போனாலும் போகலாம்.
    கல்லை எறிந்து கொண்டே இரு.
    பத்துக் கற்களுக்கு ஒரு மாங்காயாவது விழுகாதா?"
    ஆசானே ஏதோ இலக்கணம் இடிக்கின்றதே!
    விழுகலாம் என்பதை விழலாம் எனவும்,
    விழுகாமல் என்பதை விழாமல் எனவும்,
    விழுகாதா என்ப‌தை விழாதா என‌வும் எழுதுவ‌துதான் ச‌ரி என‌ நினைக்கின்றேன்.
    வ‌ட்டார‌ப் பேச்சு வ‌ழ‌க்கு எப்ப‌டியோ அடியேனுக்குத் தெரியாது.
    ஆசானின் க‌ருத்த‌றிய‌ ஆவ‌ல்.
    புள்ளிராஜா/////

    நேரில் நின்று பாடம் நடத்துவதைப்போன்ற உணர்வில் எழுதிக்கொண்டிருக்கிறேன். பேச்சுத்தமிழ் என்று வைத்துக்கொள்ளுங்களேன். இதற்கு இலக்கணம் பார்த்தால் பெஞ்சின் மேல் நிற்கவேண்டியதிருக்கும்:-)))

    ReplyDelete
  9. //////Blogger Geekay said...
    அருமையான பதிவு அய்யா..
    அடுத்த பாகத்திற்கு ஆவலாக..
    அன்புடன்,
    GK, BLR/////

    உடனே அடுத்த பாடமா? கரும்பலகையில் உள்ள இந்தப் பாடத்தை மற்ற மாணவக் கண்மணிகளும் படிக்கட்டும். உடனே அடுத்தபாடம். எத்தனை பேர்கள் படித்தார்கள் என்ற கணக்கு எனக்குத் தெரியும் உபாயம் வகுப்பறையில் உள்ளது

    ReplyDelete
  10. /////Blogger Prabhu said...
    Ayya, Lagnathil ulla ragu vi naal thalayil valukai viluguma ?? Sirika vendam, silar jadakathai partha piragu thondriya kelvi..//////

    லக்கினத்தில் மட்டும் அல்ல 7ல் உள்ள ராகுவாலும் தலையில் வழுக்கை விழுகும். அதற்குரிய காரணத்தைப் பதிவில் எழுத முடியாது. பெண்கள் அதற்கு விதி விலக்கு. சில பெண்களுக்கு கை, கால்களில் அங்கங்கே ரோமங்கள் இருக்கும். அதற்காக ஆராய்ச்சியில் இறங்க வேண்டாம்:-))))

    ReplyDelete
  11. /////Blogger Prabhu said...
    Lagnathil ula Raagu thalayil padhipai undakuvar endru padithirukiraen... Adhan vilaivaga vae mela elupiyae kelvi... opitu partha silaruku sariyaga irundadhu../////

    சரியாக இருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  12. /////Blogger vinoth said...
    nanri ayya.
    lesson is interesting

    நன்றி வினோத்!

    ReplyDelete
  13. /////Blogger Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Excellent Sir.
    you are like Hemoglobin.
    Thank u
    Loving Student
    Arulkumar Rajaraman//////

    சும்மா மருந்தல்ல. தேன் கலந்த மருந்து. கசக்காது. அதற்காகத்தான் கதைகள், உதாரணங்கள் என்று கலந்து தருகிறேன் ராஜாராமன்!

    ReplyDelete
  14. மீண்டும் ஒரு நல்ல பதிவு.

    ""தனக்கு நேரம் வந்தவுடன் ஆட்டத்தை ஆரம்பித்து....""

    எப்போழுதும் அடக்கமாக இருந்தல் பெரிய பாதிப்புக்கலை தவிர்க்கலாம்.

    ReplyDelete
  15. ஐயா,

    கேரளத்தில் ஒரு பேச்சு வழக்கு உண்டு.கேட்க விரும்பியதை தயங்காமல்கேள். போனால் ஒரு சொல் - வந்தால் யானை. அதுபொல் கடமையை செய் .பலனை எதிர்பார்-ரஜினியின் புதிய கீதை.
    ராகு திசையோ - புத்தியோ நடப்பவர்கள் ராகு காலத்தில் விளக்கேற்றினால் சலுகை தரமாட்டாரா
    என்ன?

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. In your lesson we can get an nanoscopic perceptional details about rahu. Excellent sir. we are expecting more about kethu also sir,

    by
    sridhar

    ReplyDelete
  17. Dear Sir,
    Thanks for the lesson. Ragu's power to do both good and bad is an enigma. If Ragu does good intially it gives bad results in the second half as in the case of Raju.

    ReplyDelete
  18. ராகு பகவான் அருமை பெருமை அற்புதமாக வடித்துள்ளிர்
    ராகு பகவான் எப்பொதுமே தொங்க விட்டுதான் அடிப்பாரா?

    ReplyDelete
  19. அய்யா,
    நல்லதும் கெட்டதும் வாழ்கையில் மாறி மாறி வரும், அது தான் வாழ்க்கை என்ற உலக தத்துவத்தை உணர்த்தும் கிரகங்கள் மற்றும் அதன் திசைகள்.

    முப்பது வருஷங்கள் வாழ்ந்தவர்களும் இல்லை, முப்பது வருஷங்கள் தாழ்த்தவர்களும் இல்லை, (முப்பது வருஷங்கள் என்பது சனி கிரகத்தின் ஒரு சுழர்ச்சியை குறிப்பது தானே? )

    ஒன்றும் இல்லாதவரை அரசன் ஆக்குவதும், அரசனையே ஒன்றும் இல்லாதவன் ஆக்கும் வல்லமை கிரகங்களை தவிர யாருக்கு உண்டு?

    பாடம் அருமை, அதிலும், நான்கு விதமான மனித படைப்பை பற்றியது - பல்லக்கை துக்குபவன் பல்லக்கில் ஏறும் காலமும் உண்டு அல்லவா?

    நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  20. அருமையான பதிவு அய்யா..

    ReplyDelete
  21. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்...............:)
    அன்புடன்

    ReplyDelete
  22. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.

    பாடங்கள் எளிதாக புரிந்தது. அடுத்த பாடத்திற்காக காத்திருக்கிறேன்.

    நன்றி
    (வகுப்பறைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஆசிரியருக்கும் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். )

    ReplyDelete
  23. வணக்கம் ஆசானே! பாடம் நன்றாக இருந்தது. அடுத்தடுத்த பாடங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக்ககொண்டு இருக்கிறோம்....

    ReplyDelete
  24. நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு நான் தான் மயங்குகிறேன்(2,00,000 visitors ஆச்சே) வாத்தியாருக்கு இலட்சம் + இலட்சம்
    நன்றி.

    ReplyDelete
  25. ராகு குறித்த பதிவிற்கு நேரடியாக செல்லாமல் மாணவர்களை அதற்குத் தயார் படுத்தும் விதம் மிக மிக அருமையாக உள்ளது.

    இதுவரை நான் அறிந்து கொண்டது, பணிக்கும் பலனுக்கும் உள்ள வித்தியாசம் ராகுவின் பலத்தைப் பொறுத்தது. இது சரியா?

    எனக்கும் லக்கினத்தில் ராகு. குருவுடன் தனுர் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார்.

    ReplyDelete
  26. http://jayasreesaranathan.blogspot.com/2009/01/ramalinga-raju-what-his-horoscope-says.html

    link for Ramalinga Rajus Horoscope and prediction of current issue.

    ReplyDelete
  27. ////Blogger மதி said...
    மீண்டும் ஒரு நல்ல பதிவு.
    ""தனக்கு நேரம் வந்தவுடன் ஆட்டத்தை ஆரம்பித்து....""
    எப்போழுதும் அடக்கமாக இருந்தல் பெரிய பாதிப்புக்கலை தவிர்க்கலாம்./////

    தனக்கு நேரம் வந்தவுடன் - ராகுவிற்கு, அவருடைய தசா அல்லது புக்தி வந்தவுடன் என்று பொருள் கொள்ளவும்!

    ReplyDelete
  28. //////Blogger வேலன். said...
    ஐயா,
    கேரளத்தில் ஒரு பேச்சு வழக்கு உண்டு.கேட்க விரும்பியதை தயங்காமல்கேள். போனால் ஒரு சொல் - வந்தால் யானை. அதுபொல் கடமையை செய் .பலனை எதிர்பார்-ரஜினியின் புதிய கீதை.
    ராகு திசையோ - புத்தியோ நடப்பவர்கள் ராகு காலத்தில் விளக்கேற்றினால் சலுகை தரமாட்டாரா
    என்ன?
    வாழ்க வளமுடன்.
    வேலன்./////

    வெள்ளிக் கிழமை ராகு காலத்தில் காலை 10:30 மணி முதல் 12:00மணிக்குள் விளக்கேற்றி பிரார்த்தனை செய்வது நல்ல பயன் அளிக்கும்.

    ReplyDelete
  29. /////Blogger sridhar said...
    In your lesson we can get an nanoscopic perceptional details about rahu. Excellent sir. we are expecting more about kethu also sir,
    by
    sridhar/////

    கேதுவிற்கும் இதைப்போல விவரமான பதிவு உண்டு. எல்லாவற்றையும் விட சனிக்கு ஒரு படி அதிகமாக எழுத உள்ளேன். எனக்கு மிகவும் பிடித்த கிரகம் அவர்தான். அவர்தான் கர்மகாரகன். ஆயுள்காரகன்

    ReplyDelete
  30. /////Blogger krish said...
    Dear Sir,
    Thanks for the lesson. Ragu's power to do both good and bad is an enigma. If Ragu does good intially it gives bad results in the second half as in the case of Raju.//////

    It is only in some cases!

    ReplyDelete
  31. //////Blogger ஆர்.கார்த்திகேயன் said...
    ராகு பகவான் அருமை பெருமை அற்புதமாக வடித்துள்ளிர்
    ராகு பகவான் எப்பொதுமே தொங்க விட்டுதான் அடிப்பாரா?//////

    நன்றி நண்பரே! எல்லோரையும் அப்படி அடிக்க மாட்டார். அடிக்க வேண்டியவர்களை மட்டும் அடிப்பார். அதுவும் இரக்கம் இல்லாமல் அடிப்பார். Rahu is a merciless planet!

    ReplyDelete
  32. //////Blogger Sridhar said...
    அய்யா,
    நல்லதும் கெட்டதும் வாழ்கையில் மாறி மாறி வரும், அது தான் வாழ்க்கை என்ற உலக தத்துவத்தை உணர்த்தும் கிரகங்கள் மற்றும் அதன் திசைகள்.
    முப்பது வருஷங்கள் வாழ்ந்தவர்களும் இல்லை, முப்பது வருஷங்கள் தாழ்த்தவர்களும் இல்லை, (முப்பது வருஷங்கள் என்பது சனி கிரகத்தின் ஒரு சுழர்ச்சியை குறிப்பது தானே? )
    ஒன்றும் இல்லாதவரை அரசன் ஆக்குவதும், அரசனையே ஒன்றும் இல்லாதவன் ஆக்கும் வல்லமை கிரகங்களை தவிர யாருக்கு உண்டு?
    பாடம் அருமை, அதிலும், நான்கு விதமான மனித படைப்பை பற்றியது - பல்லக்கை துக்குபவன் பல்லக்கில் ஏறும் காலமும் உண்டு அல்லவா?
    நன்றி,
    ஸ்ரீதர் S//////

    ஆமாம் Sridhar! நீங்களும் ஒரு நாள் பல்லக்கில் போகும் காலம் வரட்டும்!

    ReplyDelete
  33. /////Blogger dubai saravanan said...
    அருமையான பதிவு அய்யா..//////

    நன்றி சரவணன்!

    ReplyDelete
  34. ///////Blogger dubai saravanan said...
    அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம்...............:)
    அன்புடன்/////

    ஆகா, அடுத்த பதிவு நாளை காலையில்!

    ReplyDelete
  35. /////Blogger புதுகைத் தென்றல் said...
    தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
    பாடங்கள் எளிதாக புரிந்தது. அடுத்த பாடத்திற்காக காத்திருக்கிறேன்.
    நன்றி
    (வகுப்பறைக்கு வந்திருக்கும் அனைவருக்கும் ஆசிரியருக்கும் மனமார்ந்த பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள். )//////

    உங்கள் பொங்கல் வாழ்த்திற்கு நன்றி தென்றலாரே!

    ReplyDelete
  36. /////Blogger அணுயோகி said...
    வணக்கம் ஆசானே! பாடம் நன்றாக இருந்தது. அடுத்தடுத்த பாடங்களை ஆவலுடன் எதிர்பார்த்துக்ககொண்டு இருக்கிறோம்....//////

    நாளைக் காலையில் அடுத்த பாடம் பதிவிடப்பெறும்!

    ReplyDelete
  37. /////Blogger N.K.S.Anandhan. said...
    நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு நான் தான் மயங்குகிறேன்(2,00,000 visitors ஆச்சே) வாத்தியாருக்கு இலட்சம் + இலட்சம்
    நன்றி./////

    இப்படிச் சொன்னாலே எனக்குப் போதும். பெரிய வார்த்தைகள் எதற்கு?

    ReplyDelete
  38. //////Blogger இளைய பல்லவன் said...
    ராகு குறித்த பதிவிற்கு நேரடியாக செல்லாமல் மாணவர்களை அதற்குத் தயார் படுத்தும் விதம் மிக மிக அருமையாக உள்ளது.
    இதுவரை நான் அறிந்து கொண்டது, பணிக்கும் பலனுக்கும் உள்ள வித்தியாசம் ராகுவின் பலத்தைப் பொறுத்தது. இது சரியா?
    எனக்கும் லக்கினத்தில் ராகு. குருவுடன் தனுர் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார்.//////

    தனுசு லக்கினம் ராகுவிற்கு உகந்த இடம்!

    ReplyDelete
  39. //////Blogger Geekay said...
    http://jayasreesaranathan.blogspot.com/2009/01/ramalinga-raju-what-his-horoscope-says.html
    link for Ramalinga Rajus Horoscope and prediction of current issue.//////

    பார்த்தேன். நமது வகுப்பறைக் கண்மணி ஒருவர் நேற்று சுட்டி கொடுத்திருந்தார்!

    ReplyDelete
  40. Ayya ennudaya ugam sariyaga irundadhik makilchi... thangalin arivurai padi Enaku therindhavargalin jadagathai sekarithu adhai ungal paadankaludan opitu paarthu padipadhu elidhaga ulladhu...

    Pongal nal vazthukal ayya...

    May GOD bless you & your family..

    ReplyDelete
  41. ayya enakku 12th place il rahu guruvudan ullaar. idhil guru palanaik koduppaaraa alladu rahu keduppaaraa? kooravum. pathuvugal arumai. nandri.

    ReplyDelete
  42. அன்புள்ள அய்யா இன்றுதான் தங்கள் தளத்தை பார்த்தேன் இந்த கண்மணிகள் பட்டியலில் இணைந்து கொள்ள விருப்பம் தயை செய்து சேர்த்து கொள்ளவும்

    ReplyDelete
  43. //////Blogger srivignesh said...
    அன்புள்ள அய்யா இன்றுதான் தங்கள் தளத்தை பார்த்தேன் இந்த கண்மணிகள் பட்டியலில் இணைந்து கொள்ள விருப்பம் தயை செய்து சேர்த்து கொள்ளவும்/////

    Regular Visitors of my Blog' என்று சைடு பாரில் 110 பெயர்கள் இருக்கிறது பாருங்கள் அதுதான் வருகைப் பதிவேடு. அதில் உங்கள் பெயரை நான் நுழைக்க முடியாது. நீங்கள்தான் உங்கள் ப்ளாக்கர் கணக்கில் உள்ள gadget மூலம் வகுப்பறையின் சுட்டியை URL:// classroom2007.blogspot.com உள்ளிட்டுப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் அப்படித்தான் செய்துள்ளார்கள். நீங்களும் செய்து கொள்ளுங்கள்! அதுதான் வருகைப் பதிவேடு. நீங்கள் சுட்டியை அங்கே உள்ளிட்ட மறுநிமிடம் இங்கே உங்கள் பெயர் கண்ணில் படும்!

    ReplyDelete
  44. Ayya,

    You said that those who have Raghu in 2nd position from Lagna can save their wealth by preserving it through mother or wife. What if wife too have Raghu in 2nd position from Lagna in her horoscope?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com