மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

8.11.08

ஜோ.பா.எண் 131:பன்னிரெண்டாம் வீடு - பகுதி 2

முதல் பகுதி இங்கே உள்ளது. படித்திராதவர்கள் படித்துவிட்டு வரவும்
பன்னிரெண்டாம் வீடு - பகுதி 2

பாடத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிகள் பொதுவானவை. தனிப்பட்ட ஜாதகங்களுக்குப்
பலன்கள் மாறுபடும். அந்தந்த ஜாதகங்களில் உள்ள கிரகங்கள், வீடுகள் ஆகிய
வற்றின் வலிமையை வைத்து மாறுபடும். வலிமையைத் தெரிந்து கொள்ள அஷ்ட
வர்க்கம் உதவியாக இருக்கும். ஆகவே பொது விதிகளைப் படித்துவிட்டு யாரும்
குழம்ப வேண்டாம். அல்லது பின்னூட்டமிட்டு மற்றவர்களைக் குழப்ப வேண்டாம்.

எனக்கு அப்படி இருக்கிறதே, இப்படி இருக்கிறதே என்று நினைத்துக் கலங்க
வேண்டாம். முழுப்பாடத்தையும் படித்த பிறகு ஒரு முடிவிற்கு வாருங்கள்.

உதாரணத்திற்கு, 12ஆம் வீட்டில் மாந்தி இருந்தால் அதன் பலன் திடீர் விரையம்
(Sudden Loss).
1
பத்து லட்ச ரூபாய் பணத்துடன் இருந்த தன்னுடைய பையை வங்கிக் கவுண்டரில்
வைத்து விட்டு, அருகில் இருக்கும் நண்பருடன் ஐந்து நிமிடம் பேசிக் கொண்டி
ருந்தார் ஒருவர். ஐந்து நிமிடம் கழித்துத் பார்த்தால் பை மாயமாக மறைந்து
விட்டிருந்தது. ஆமாம் அதை ஒருவன் தேட்டை போட்டுக் கொண்டு போயிருந்தான்.
கடைசிவரை திருடிச் சென்றவனைப் பிடிக்க முடியவில்லை. பணம் போனது
போனதுதான். தீடீர் விரையத்திற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
2
என் சகோதரனுடன் வேலை பார்த்த வங்கி ஊழியர் ஒருவர், அவனாசியில் பஸ்
ஏறினார். பஸ் கோவையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தூரம் 42 கிலோ
மீட்டர்கள் மட்டுமே. பஸ்சில் கூட்டமில்லை. ஏறியவர் ஜன்னலில் கையை
அணைவாக வைத்து, தலையை அதன் மீது வைத்து உறங்க ஆரம்பித்திருக்கிறார்.
குளிர்ந்த காற்றில் அயர்ந்து தூங்கியிருக்க்றார். பஸ் ஒரு திருப்பத்தில் திரும்பு
கையில் ஏற்பட்ட அதிர்வில் படார் என்று ஜன்னலில் வைத்திருந்த கை வெளியே
நீட்டிக் கொண்டுவிட்டது. அந்தநேரத்தில் பஸ்ஸை உரசுவது போல் எதிரில்
வந்த லாரியில் கை அடிபட்டுச் சின்னாபின்னமாகிவிட்டது. எல்லாம் ஒரு
நொடியில் நடந்து விட்டது. கடைசியில் (மருத்துவமனையில்) அவருடைய
கையை வெட்டிச் சரி செய்தார்கள். கை போனது போனதுதான். இதுவும் தீடீர்
விரையத்திற்கு எடுத்துக்காட்டு.
3.
ஒருவர் தன் மனைவி, நான்கு குழந்தைகளுடன் தீர்த்தயாத்திரையாகக் காரில்
சென்றார். தொடர்ந்து நான்கு நாட்கள் பயணம். நான்காம் நாள் அதிகாலை.
தேசிய நெடுஞ்சாலையில் வண்டி சென்று கொண்டிருந்தது. தூக்கக் கலக்கத்தில்
எதிரில் பாதை வளைந்து திரும்புவதை ஓட்டுனர் கவனிக்கவில்லை. விளைவு.
சென்ற அதே வேகத்தில் வண்டி எதிரில் இருந்த பெரிய ஏரியல் பாய்ந்து மூழ்கி
விட்டது. அதிரடியாகக் கதவைத் திறந்து கொண்டு நீரில் இருந்து நீசலடித்துத்
தப்பித்தவர் குடும்பத் தலைவர் மட்டுமே! மற்றவர்கள் ஒருவர் கூட உயிர்
பிழைக்கவில்லை. இதுவும் தீடீர் விரையத்திற்கு எடுத்துக்காட்டு.

12ல் மாந்தி இருந்தால் இப்படி திடீர் விரையம் உண்டு. ஆனால் அத்தனை பேருக்கும்
உண்டா என்றால் இல்லை. ஒரே மாதிரியான விரையமா என்றால் அதுவும் இல்லை!
விதம் விதமான விரையங்கள். விரையங்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம்.

எப்படி இல்லாமல் போகும்? பன்னிரெண்டாம் விட்டில் சுபக் கிரகம் இருந்தாலும்,
அல்லது சுபக்கிரகத்தின் பார்வை விழுந்தாலும் இல்லாமல் போகும்!

இவற்றை எதற்காக எழுதுகிறேன்? உங்களுக்குப் பிடிபடத்தான்.

அகவே ஒரே ஒரு விதியை (Rule) வைத்து எந்த முடிவிற்கும் வராதீர்கள்! பல
விஷயங்களையும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்த்து ஒரு முடிவிற்கு
வாருங்கள்!
-------------------------------------------------------------------------------------------------
12ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால்:

ஜாதகன் மெலிந்த தேகத்துடன் இருப்பான். மனதில் துணிவின்றி இருப்பான்.
ஆனாலும் அழகான தோற்றமுடையவனாக இருப்பான்.

12ஆம் அதிபதியுடன் ஆறாம் வீட்டு அதிபதியும் சேர்ந்து லக்கினத்தில்
இருந்தால் ஜாதகன் நீண்ட ஆயுளைப் பெற்றவனாக இருப்பான்.
(உதாரணத்திற்கு சிம்ம லக்கின ஜாதகத்திற்குப் பன்னிரெண்டாம் அதிபதி
சந்திரன். ஆறாம் வீட்டு அதிபதி சனி. சந்திரனும் சனியும் கூட்டாக சிம்ம
லக்கினத்திலேயே வந்து அமர்ந்திருந்தால் என்பது போல இதற்குப் பொருள்
கொள்ளவும்)

இதே அமைப்பில் எட்டாம் வீடு பாதிப்படைந்திருந்தால், ஜாதகன் அல்ப
ஆயுளில் போய்விடுவான்.

பன்னிரெண்டாம் அதிபதியும், லக்கினாதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்
ஜாதகன் புத்திசாலித்தனமில்லாதவனாக இருப்பான். கருமியாக இருப்பான்.
பலராலும் வெறுக்கப் படுபவனாக இருப்பான்,
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் பலமுறை பல இடங்களில் பண விரையம் ஏற்பட்டு அல்லல்
படுவான். கடன் தொல்லைகள் ஏற்பட்டு அவதிப்படுவான். தேவையில்லாத
சிக்கல்களில் மாட்டிக் கொள்வான். வேளா வேளைக்குச் சரியாகச் சாப்பிட
முடியாது. கண் பார்வை மங்கிவிடும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்காது.

பன்னிரெண்டாம் அதிபதி சுபக் கிரகமாக இருந்து வலுவாகவும் இருந்து இதே
இடத்தில் வந்து அமர்ந்திருந்தால் மேற்கூறிய குறைகள் குறைந்து, பணம்
கையில் தங்கும் அமைப்புடன் இருப்பான். அதோடு எதையும் சமாளிக்கும்
பேச்சுத் திறமை உள்ளவனாக இருப்பான்.

பன்னிரெண்டாம் அதிபதி இங்கே தீய பார்வைகளுடன் அமர்ந்திருந்தால்
ஜாதகன் வாயைத் திறந்ததலே அது சண்டை, சச்சரவுகளில் போய் முடிவதாக
இருக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி மூன்றாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் கோழையாகவும், அதிகம் பயப்படுபவனாகவும் இருப்பான். அவன்
தன்னுடைய சகோதரனை இழக்க நேரிடலாம். எப்பவும் அழுக்கான தோற்றத்துடன்
திரிபவனாக இருப்பான்.தீயகிரகங்களின் பார்வை இங்கே வந்து அமரும்
கிரகத்தின் மீது விழுந்தால் ஜாதகனுக்குக் காது சமபந்தப்பட்ட நோய்கள்
உண்டாகும் (பார்க்கும் தீய கிரகத்தின் தசா புத்திகளில் உண்டாகும்)
ஜாதகன் தன் உடன்பிறப்புக்களுக்காக பணத்தை அதிகமாக செலவிட நேரிடும்
ஜாதகன் எழுத்தாளனனால், வெற்றி பெற்ற எழுத்தாளனாக முடியாது.
கூட்டத்தோடு கூட்டமாக வேலை செய்ய நேரிடும். அதிக வருமானமும்
இருக்காது.

பன்னிரெண்டாம் அதிபதியும், இரண்டாம அதிபதியும் கூட்டாக மூன்றாம்
இடத்தில் இருந்தால், ஜாதகனுக்கு இரண்டு தாரங்கள் அமையும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் இருந்தால்:
சிறுவயதிலெயே தாயை இழக்க நேரிடும். மனப் போராட்டங்கள் நிறைந்திருக்கும்
தேவையில்லாத கவலைகள் வாட்டும். உறவினர்களில் சிலர் விரோதமாக
இருப்பார்கள்.குடியிருக்கும் இடங்களில் வீட்டுக்காரனின் தொல்லை இருக்கும்.
நிம்மதி இருக்காது.சாதாரண பேட்டைகளில் குடியிருக்க நேரிடும்.
பன்னிரெண்டாம் இடத்து அதிபதி இங்கே வலுவாக இருந்தால், ஜாதகனுக்கு
மேலே குறிப்பிட்டுள்ள பலன்கள் அதிகமாகி அனுதினமும் தொல்லை
கொடுப்பதாக இருக்கும்.
ஜாதகனுக்கு ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், சொந்த வண்டி
வாகனங்கள் இருக்கும் ஆனாலும் இந்த அமைப்பால் அதுவும் பிரச்சினை
தருவதாகவே இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும் அல்லது குழந்தைகளால்
பிரச்சினை இருக்கும். மகிழ்ச்சி இருக்காது.மிகுந்த இறைபக்தி உடையவனாக
இருப்பான். நினைத்தால் கோவில், குளம் என்று கிளம்பிவிடுவான். துணிவில்லாத
வனாக இருப்பான்.மனப்போராட்டங்கள் உடையவனாக இருப்பான்.
தான்தான் உலகத்திலேயே அதிகமாகத் துன்பப்படுபவனாக நினைத்துக் கொண்டு
சதா சர்வ காலமும் வருத்தத்திலேயே மூழ்கி விடுவான்.
இந்த அமைப்புள்ளவன் விவசாயம் செய்தால், அவன் தோட்டத்துப் பயிர்களுக்கு
அடிக்கடி, பூச்சிகளாலும், செடி நோய்களாலும் அழிவு வந்து, அதனால் அவதிப்
படுவான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் எப்போதும் மிகுந்த மகிழ்ச்சி உடையவனாக இருப்பான்.செழிப்புள்ள
வனாக இருப்பான். எல்லா வசதிகளும் நிறைந்தவனாக இருப்பான்.ஆரோக்கி
யமாகவும், அழகான தோற்றமுடையவனனகவும் இருப்பான்,
எதிரிகள் இருக்காது. இருந்தாலும் அவர்களை எதிர்கொண்டு ஒன்றும் இல்லாத
வர்களாக ஆக்கிவிடுவான்.
சிலசமயம் சட்டச் சிக்கல்களில் மாட்டிக் கொள்ள நேரிடும்.ஆனாலும் முடிவு
அவனுக்குச் சாதகமாகவே அமையும்.

இதே அமைப்பில், இந்த இடம் தீய கிரகத்தின் பார்வை பெற்றால் (அதாவது
வந்து அமரும் பன்னிரெண்டாம் அதிபதி, தீய கிரகத்தின் பார்வை பெற்றால்)
பாவச் செயல்களைச் செய்வான்.சட்டென்று கோபப்படுபவனாகவும், சட்டென்று
உணர்ச்சி வசப்படுபவனாகவும் இருப்பான். சிலருக்குத் தன் தாயையே வெறுக்கும்
சூழ்நிலை உண்டாகும். பெண் பித்தனாக இருப்பான். அதனால் பல பிரச்சினை
களைச் சந்திக்க நேரிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி ஏழாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகனுக்கு மிகவும் வறுமையில் வளர்ந்தவள் மனைவியாகக் கிடைப்பாள்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிவிடும்.சிலருக்கு பிரிவில் முடிந்துவிடும்
அப்படி மனைவியைப் பிரிந்த ஜாதகன் சன்நியாசியாக மாறிவிடுவான். சிலர்
சிலர் உடல் உபாதைகளாலும், உணர்வுப் போராட்டங்களாளும்ச் சீக்காளியாகி
பிரச்சினைக்குரியவர்கள் ஆகிவிடுவார்கள்.
எதையும் கற்கும் ஆர்வம் இல்லாமல் போய்விடும்.அதே போல சொத்து
சுகங்களும் இல்லாமல் போய்விடும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி எட்டாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் செல்வந்தனாக இருப்பான்.மக்களால் அறியப் பட்டவனாக இருப்பான்.
சொகுசான் வாழ்க்கை அமையும். பல வேலையாட்கள் வேலை செய்ய
செள்கரியமான வாழ்க்கை வாழ்வான். பிறர் மரணத்தால், இவனுக்கு சொத்துக்கள்
கிடைக்கும் அமைப்பு உண்டு. சித்தாந்தங்கள் வேதாந்தங்களில் ஆர்வமுடைய
வனாக இருப்பான்.தர்ம சிந்தனைகள் உடையவன்.புகழுடையவன். அன்புடையவனாக
நட்புடையவனாக இருப்பான்.நல்ல பண்புகளை உடையவனாக இருப்பான்.
அதன் மூலம் பலரையும் கவரக்கூடியவனாக இருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான
ஜாத்கன் இருப்பான். அதிகமான சொத்துக்கள் சேரும். நேர்மையானவனாக
இருப்பான்,பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.

தந்தையை இளம் வயதிலே பறிகொடுக்க நேரிடும்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால்:
கடின உழைப்பாளி. வேலையின் பொருட்டு கடினமான பயணங்கள்
மேற்கொள்ள நேரிடும். சிலருக்குச் சிறைக் காவலர் வேலை கிடைக்கும்.
சிலருக்கு மருத்துவத் துறையில் வேலை கிடைக்கும். சிலர் மாயானங்களில்
பணி செய்ய நேரிடும்.

ஜாதகனுக்கு தன் குழந்தைகளால் எந்த செளகரியமும், மகிழ்ச்சியும்
கிடைக்காது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்:
ஜாதகன் வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபடுவான்.
அதன் மூலம் அவனுக்குப் பெருத்த வருமானமும் இருக்காது.
குறைந்த நண்பர்களே இருப்பார்கள். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்
சகோதரர்களால் தொல்லைகள் உண்டாகும். அதன் காரணமாகக்
கைப் பொருளை இழக்க நேரிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
12ஆம் வீட்டு அதிபதி பன்னிரெண்டாம் வீட்டில் இருந்தால்:
பன்னிரெண்டாம் அதிபதி தன் சொந்த வீட்டிலேயே இருந்தால் ஜாதகன்
தர்மச் செலவுகளை அதிகமாகச் செய்பவனாக இருப்பான். நல்ல
கண் பார்வை இருக்கும். அதீதமான படுக்கை சுகம் கிடைக்கும்.
சிலர் விவசாயடததில் ஈடுபடுவார்கள்

இந்த அமைப்பை ஒரு தீய கிரகம் பார்த்தால், ஜாதகன் ஓய்வு ஒழிச்சல்
இல்லாதவனாகவும், எப்போதும் எங்கேயாவது சுற்றித் திரிந்து கொண்டி
ருப்பவனாகவும் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இங்கே கூறப்பட்டுள்ளவை எல்லாம் பொதுவிதிகள். இந்தத் தலைப்பில்
இன்னும் இரண்டு பகுதிகள் உள்ளன. அவற்றையும் படித்துவிட்டுக்
காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள நினைப்பவர்கள் தூக்கிவிட்டுக் கொள்ளலாம்
கைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக் கொள்ள நினைப்பவர்கள் துடைத்துக்
கொள்ளலாம் அதுவரை பொறுமையாக இருக்கவும்

(இந்தத் தலைப்பில் பாடம் தொடரும்)

பாடத்தைப் படிப்பவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஜோதிடத்தை
அறிந்து கொள்ளும் நோக்குடன் அக்கறையோடு படிப்பவர்கள் முதல்வகை.
பாடத்தில் தங்கள் ஜாதகத்துடன் தொடர்புள்ள வரிகளை அல்லது செய்திகளை
மட்டும் படிப்பவர்கள் இரண்டாவது வகை.

அந்த இரண்டாவது வகையினர்தான் அதிகமாகக் குழம்பிப்போகிறவர்கள்.

பாடத்தைப் படித்தால் முழுமையாகப் படிக்க வேண்டும். மனதில் உள்
வாங்கிக் கொள்ள வேண்டும். "செய்வன திருந்தச் செய்!" என்ற முதுமொழிக்
கேற்பப் படிக்க வேண்டும்.

இல்லை என்றால் சிரமம்தான். அதை மனதில் கொள்க!

நான் மிகுந்த பிரயாசையுடன், போனால் திரும்பக் கிடைக்காத நேரத்தைச்
செழவழித்துப் பதிவு எழுதுவது பலரும் பயன் பெறத்தான். ஆகவே
அதையும் மனதில் கொள்க!
==================================================
வாழ்க வளமுடன்!

71 comments:

  1. //பாடத்தைப் படிப்பவர்களில் இரண்டு வகையினர் உள்ளனர். ஜோதிடத்தை
    அறிந்து கொள்ளும் நோக்குடன் அக்கறையோடு படிப்பவர்கள் முதல்வகை.
    பாடத்தில் தங்கள் ஜாதகத்துடன் தொடர்புள்ள வரிகளை அல்லது செய்திகளை
    மட்டும் படிப்பவர்கள் இரண்டாவது வகை.

    அந்த இரண்டாவது வகையினர்தான் அதிகமாகக் குழம்பிப்போகிறவர்கள்.

    பாடத்தைப் படித்தால் முழுமையாகப் படிக்க வேண்டும். மனதில் உள்
    வாங்கிக் கொள்ள வேண்டும். "செய்வன திருந்தச் செய்!" என்ற முதுமொழிக்
    கேற்பப் படிக்க வேண்டும்.

    இல்லை என்றால் சிரமம்தான். அதை மனதில் கொள்க!

    நான் மிகுந்த பிரயாசையுடன், போனால் திரும்பக் கிடைக்காத நேரத்தைச்
    செழவழித்துப் பதிவு எழுதுவது பலரும் பயன் பெறத்தான். ஆகவே
    அதையும் மனதில் கொள்க!//


    மாணவக் கண்மணிகளுக்கு ஆசிரியரின் அன்பு அறிவுரை.
    அதன்படி நடக்க உறுதிகொள்வோம்.

    ReplyDelete
  2. //ஜோ.பா.எண் 131:பன்னிரெண்டாம் வீடு - பகுதி 2 //

    ஜோ.பா.1 = ஜோதி பாரதி
    ஜோ.பா.2 = ஜோசப் பால்ராஜ்

    ஜோ.பா.131 யாரது ? எனக்கு தெரியாதே !

    :)

    ReplyDelete
  3. பல நேரங்களில் பொது விதிகளே ஜாதகத்தில் ஒத்து போகிறது வாத்தியரே,

    ReplyDelete
  4. ///12ஆம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால்:
    ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும்///

    ஐயா வணக்கம்.
    12ம் இடத்து அதிபனான குரு 5 ம் இடமாகிய புத்திரஸ்தானத்திலிருப்பதால் மேற்கண்ட விதிக்கு அடியேனே சான்று.

    ReplyDelete
  5. //////ஸ்ரீதர்கண்ணன் said...
    me the first////

    வருகைப் பதிவு மட்டும்தானா?

    ReplyDelete
  6. /////பொதிகைத் தென்றல் said...
    நான் மிகுந்த பிரயாசையுடன், போனால் திரும்பக் கிடைக்காத நேரத்தைச்
    செழவழித்துப் பதிவு எழுதுவது பலரும் பயன் பெறத்தான். ஆகவே
    அதையும் மனதில் கொள்க!//
    மாணவக் கண்மணிகளுக்கு ஆசிரியரின் அன்பு அறிவுரை.
    அதன்படி நடக்க உறுதிகொள்வோம்./////

    உறுதிமொழி எதற்கு? நடந்தால் சரிதான்!

    ReplyDelete
  7. /////கோவி.கண்ணன் said...
    //ஜோ.பா.எண் 131:பன்னிரெண்டாம் வீடு - பகுதி 2 //
    ஜோ.பா.1 = ஜோதி பாரதி ஜோ.பா.2 = ஜோசப் பால்ராஜ்
    ஜோ.பா.131 யாரது ? எனக்கு தெரியாதே ! :)//////

    தெரிந்து என்ன ஆகப்போகிறது?:-)))

    ReplyDelete
  8. //////கோவை விமல்(vimal) said...
    பல நேரங்களில் பொது விதிகளே ஜாதகத்தில் ஒத்து போகிறது வாத்தியரே/////,

    ஒத்துவந்தால் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  9. /////தியாகராஜன் said...
    ///12ஆம் வீட்டு அதிபதி ஐந்தாம் வீட்டில் இருந்தால்:
    ஜாதகனுக்குக் குழந்தை பிறப்பதில் பிரச்சினை இருக்கும்///
    ஐயா வணக்கம்.
    12ம் இடத்து அதிபனான குரு 5 ம் இடமாகிய புத்திரஸ்தானத்திலிருப்பதால்
    மேற்கண்ட விதிக்கு அடியேனே சான்று./////

    உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி தியாகராஜன்

    ReplyDelete
  10. me the first////

    வருகைப் பதிவு மட்டும்தானா?

    அய்யா

    எனது லக்கினம் - துலாம்

    எனக்கு 12ஆம் வீட்டு அதிபதி புதன் லக்கினத்தில், லக்கின அதிபதி சுக்கிரன் 12ஆம் இடத்தில்.

    12ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால்:

    ஜாதகன் மெலிந்த தேகத்துடன் இருப்பான். மனதில் துணிவின்றி இருப்பான்.
    ஆனாலும் அழகான தோற்றமுடையவனாக இருப்பான்.

    12ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் - ஆனால் நான் 80 கிலோ உள்ளேன்,துணிவு இல்லாமல் இல்லை,அழகான தோற்றம் கிடையாது

    பன்னிரெண்டாம் அதிபதியும், லக்கினாதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்
    ஜாதகன் புத்திசாலித்தனமில்லாதவனாக இருப்பான். (இருக்கலாம் சில சமயங்களில் எனக்கு அப்படி தோன்றுகிறது) கருமியாக இருப்பான் (உறுதியாக அப்படி இல்லை).
    பலராலும் வெறுக்கப் படுபவனாக இருப்பான்,(இதுவும் எனக்கு பொருந்தவில்லை)

    அகவே ஒரே ஒரு விதியை (Rule) வைத்து எந்த முடிவிற்கும் வராதீர்கள்! பல விஷயங்களையும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்த்து ஒரு முடிவிற்கு வாருங்கள்!

    என்ற உங்கள் கருத்தை எடுத்து கொள்ளலாமா?

    ReplyDelete
  11. வருகைப் பதிவு மட்டும்தான்! பாடம் உள்வாங்கிக் கொள்ளப் பட்டது!

    ReplyDelete
  12. ///12ஆம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
    வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான
    ஜாத்கன் இருப்பான்

    //////////

    எனக்கு 12ஆம் வீட்டு அதிபதி புதன் ஒன்பதாம் வீட்டில் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் சனி தசையில் புதன் புத்தி நடந்த பொது வெளிநாட்டில் சென்று MBA படித்தேன் .. கல்வி என்பதும் சொத்து தானே . எனவே மிக சரியாக பொருந்துகிறது .

    ReplyDelete
  13. // கல்வி என்பதும் சொத்து தானே//

    Education is An Asset which never has a depreciation. It only has Appreciation always.

    ReplyDelete
  14. Dear sir,

    good morning...

    what will be the prediction for thula lagna if combination of moon and mandi in 12th house with sarvaastavarga paral of 17.... whereas 12th lord is placed in the 11th house with the vision of vakra jupiter from 3rd house?

    Regards
    Vinodh.K
    Coimbatore

    ReplyDelete
  15. ஸ்ரீதர்கண்ணன் said..
    me the first////
    வருகைப் பதிவு மட்டும்தானா?
    அய்யா
    எனது லக்கினம் - துலாம்
    எனக்கு 12ஆம் வீட்டு அதிபதி புதன் லக்கினத்தில், லக்கின அதிபதி சுக்கிரன் 12ஆம் இடத்தில்.
    12ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் இருந்தால்:
    ஜாதகன் மெலிந்த தேகத்துடன் இருப்பான். மனதில் துணிவின்றி இருப்பான்.
    ஆனாலும் அழகான தோற்றமுடையவனாக இருப்பான்.
    12ஆம் வீட்டு அதிபதி லக்கினத்தில் - ஆனால் நான் 80 கிலோ உள்ளேன்,துணிவு இல்லாமல் இல்லை,அழகான தோற்றம் கிடையாது
    பன்னிரெண்டாம் அதிபதியும், லக்கினாதிபதியும் பரிவர்த்தனையாகியிருந்தால்
    ஜாதகன் புத்திசாலித்தனமில்லாதவனாக இருப்பான். (இருக்கலாம் சில சமயங்களில் எனக்கு அப்படி தோன்றுகிறது) கருமியாக இருப்பான் (உறுதியாக அப்படி இல்லை).
    பலராலும் வெறுக்கப் படுபவனாக இருப்பான்,(இதுவும் எனக்கு பொருந்தவில்லை)
    அகவே ஒரே ஒரு விதியை (Rule) வைத்து எந்த முடிவிற்கும் வராதீர்கள்! பல விஷயங்களையும், ஜாதகத்தின் மற்ற அம்சங்களையும் பார்த்து ஒரு முடிவிற்கு வாருங்கள்!
    என்ற உங்கள் கருத்தை எடுத்து கொள்ளலாமா?////

    இன்னும் இரண்டு பகுதிகள் உள்ளன. பொறுத்திருங்கள்

    ReplyDelete
  16. நாமக்கல் சிபி said...
    வருகைப் பதிவு மட்டும்தான்! பாடம் உள்வாங்கிக் கொள்ளப் பட்டது!//////

    நன்றி சிபியாரே! (இத்துடன் விட்டமைக்கு:-)))

    ReplyDelete
  17. /////Ragu Sivanmalai said...
    ///12ஆம் வீட்டு அதிபதி ஒன்பதாம் வீட்டில் இருந்தால்:
    வெளிநாட்டில் வாழ்கின்ற, அங்கே சொத்துக்கள் வாங்குகின்ற அமைப்புடையவான
    ஜாத்கன் இருப்பான் //////////
    எனக்கு 12ஆம் வீட்டு அதிபதி புதன் ஒன்பதாம் வீட்டில் உள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன்னால் சனி தசையில் புதன் புத்தி நடந்த பொது வெளிநாட்டில் சென்று MBA படித்தேன் .. கல்வி என்பதும் சொத்து தானே . எனவே மிக சரியாக பொருந்துகிறது .////

    நன்றி சிவன்மலையாரே!

    ReplyDelete
  18. ////நாமக்கல் சிபி said...
    // கல்வி என்பதும் சொத்து தானே//
    Education is An Asset which never has a depreciation. It only has Appreciation always./////

    அதோடு பறிபோகாத / திருட்டுப்போகாத சொத்து!

    ReplyDelete
  19. cooljosh said...
    Dear sir,
    good morning...
    what will be the prediction for thula lagna if combination of moon and mandi in 12th house with sarvaastavarga paral of 17.... whereas 12th lord is placed in the 11th house with the vision of vakra jupiter from 3rd house?
    Regards
    Vinodh.K
    Coimbatore////

    இன்னும் இரண்டு பகுதிகள் உள்ளன. பொறுத்திருங்கள்

    ReplyDelete
  20. இதில் பரல் எண்ணிக்கையை வைத்து பார்ப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.

    ReplyDelete
  21. Na chora haaryam na cha raaja haaryam

    Na bhraatru bhaajyam na cha bhaarakaari

    Vyaye krite vardhata eva nityam

    Vidyaa dhanam sarva dhana pradhaanam

    It cannot be stolen by thieves, nor can it be taken away by kings.
    It cannot be divided among brothers, it does not cause a load on your shoulders.
    If spent it indeed always keeps growing.
    The wealth of knowledge is the most superior wealth of all!

    ReplyDelete
  22. /*/12ஆம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்:
    ஜாதகன் வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபடுவான்.
    அதன் மூலம் அவனுக்குப் பெருத்த வருமானமும் இருக்காது.
    குறைந்த நண்பர்களே இருப்பார்கள். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்
    சகோதரர்களால் தொல்லைகள் உண்டாகும். அதன் காரணமாகக்
    கைப் பொருளை இழக்க நேரிடும்./*/

    what you have mention above is really true to me? amazing...:-)

    Regards
    Vinodh.K
    Coimbatore

    ReplyDelete
  23. /(இத்துடன் விட்டமைக்கு:-)))
    //

    நினைவூட்டியமைக்கு நன்றி ஐயா!

    எங்கே என் சம்மந்தி(கூடுதுறை)யை சில நாட்களாகக் காணவில்லை?

    ReplyDelete
  24. //இதில் பரல் எண்ணிக்கையை வைத்து பார்ப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.//

    அதனால்தான் தொடரும் என்று போட்டிருக்கிறார்!

    ReplyDelete
  25. 12ம் வீட்டில் பரல்கள் எண்ணிக்கை பொதுவாகக் குறைவாக இருப்பது நல்லது!

    12ம் வீடு விரயஸ்தானம் என்று கூறப்படுகிறது!

    10 வீட்டின் பரல்கள் மற்றும் 12ம் வீட்டின் பரல்களைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும் என்று முந்தைய பாடங்களில் (10, 11) படித்திருக்கிறோம்!

    10 - தொழில்
    11 - லாபம்
    12 - விரயம்

    10 < 11 > 12 என்று இருக்க வேண்டும்.

    கூடவே 10 > 12 மற்றும் 11 > 12 ஆகவும் இருத்தல் வேண்டும்!

    ReplyDelete
  26. 40. கல்வி
    குறள் 398

    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப்பு உடைத்து.

    பொருள்
    ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.

    http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/kural40.asp#

    ReplyDelete
  27. ///*/12ஆம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்:
    ஜாதகன் வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபடுவான்.
    அதன் மூலம் அவனுக்குப் பெருத்த வருமானமும் இருக்காது.
    குறைந்த நண்பர்களே இருப்பார்கள். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்
    சகோதரர்களால் தொல்லைகள் உண்டாகும். அதன் காரணமாகக்
    கைப் பொருளை இழக்க நேரிடும்./*/

    what you have mention above is really true to me? amazing...:-)

    Regards
    Vinodh.K
    Coimbatore

    //

    ரிப்பீட்டேய்!

    ReplyDelete
  28. கேட்லாக் பார்த்து டாக்டர் ஆவது
    மருந்து தருவது போல அரைகுறை
    ஞானம் ஆபத்து/குழப்பம் என்று
    அழகாக சொன்ன ஆசானுக்கு ஜே!

    பாலிருக்கும் பழமிருக்கும் பசி
    இருக்காது, பஞ்சணையில் காற்று
    வரும் தூக்கம் வராது என்பது
    போல விரைய ஸ்தானத்தின்

    விளையாட்டால் எவ்வளவோ
    இருக்கும் இல்லாமலும் போகும்
    என விவரமாய் உரைத்திட்ட வாத்தியாருக்கு என் நன்றிகள்!

    ReplyDelete
  29. ////ஜே கே | J K said...
    நானும் ஆஜர்.////

    நீங்கள் வகுப்பிற்கு லேட். உங்கள் கூட்டாளி முன்பே வந்துவிட்டார்!

    ReplyDelete
  30. /////ஜே கே | J K said...
    இதில் பரல் எண்ணிக்கையை வைத்து பார்ப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.////

    இன்னும் இரண்டு பகுதிகள் உள்ளன என்று சொல்லியிருக்கிறேனே சுவாமி! கவனிக்கவில்லையா?

    ReplyDelete
  31. ////krish said...
    Na chora haaryam na cha raaja haaryam
    Na bhraatru bhaajyam na cha bhaarakaari
    Vyaye krite vardhata eva nityam
    Vidyaa dhanam sarva dhana pradhaanam

    It cannot be stolen by thieves, nor can it be taken away by kings.
    It cannot be divided among brothers, it does not cause a load on your shoulders.
    If spent it indeed always keeps growing.
    The wealth of knowledge is the most superior wealth of all!////

    Thank you my dear friend for your good and worthy comment!

    ReplyDelete
  32. ////cooljosh said...
    /*/12ஆம் வீட்டு அதிபதி பதினொன்றாம் வீட்டில் இருந்தால்:
    ஜாதகன் வேலைக்குச் செல்ல மனமில்லாமல், வணிகத்தில் ஈடுபடுவான்.
    அதன் மூலம் அவனுக்குப் பெருத்த வருமானமும் இருக்காது.
    குறைந்த நண்பர்களே இருப்பார்கள். எதிரிகள் அதிகமாக இருப்பார்கள்
    சகோதரர்களால் தொல்லைகள் உண்டாகும். அதன் காரணமாகக்
    கைப் பொருளை இழக்க நேரிடும்./*/
    what you have mention above is really true to me? amazing...:-)
    Regards
    Vinodh.K
    Coimbatore//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  33. நாமக்கல் சிபி said...
    /(இத்துடன் விட்டமைக்கு:-)))
    // நினைவூட்டியமைக்கு நன்றி ஐயா!
    எங்கே என் சம்மந்தி(கூடுதுறை)யை சில நாட்களாகக் காணவில்லை?////

    அடடா நானே வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா? (வடிவேல் குரலில் படிக்கவும்)
    கூடுதுறையாரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்படும்!

    ReplyDelete
  34. நாமக்கல் சிபி said...
    //இதில் பரல் எண்ணிக்கையை வைத்து பார்ப்பது பற்றி ஒன்றும் சொல்லவில்லை.//
    அதனால்தான் தொடரும் என்று போட்டிருக்கிறார்!////

    அதானே! கேட்பது உங்கள் கூட்டாளிதான்!

    ReplyDelete
  35. //////நாமக்கல் சிபி said...
    12ம் வீட்டில் பரல்கள் எண்ணிக்கை பொதுவாகக் குறைவாக இருப்பது நல்லது!
    12ம் வீடு விரயஸ்தானம் என்று கூறப்படுகிறது!////

    இது மட்டும் சரி!
    --------------------------
    //////10 வீட்டின் பரல்கள் மற்றும் 12ம் வீட்டின் பரல்களைக் காட்டிலும் குறைவாக இருக்க வேண்டும் என்று முந்தைய பாடங்களில் (10, 11) படித்திருக்கிறோம்!///

    இது தவறு. 12ஆம் வீட்டை விட பத்து & பதினொன்றில் பரல்கள் அதிகமாக இருக்க வேண்டும்

    ReplyDelete
  36. நாமக்கல் சிபி said...
    40. கல்வி
    குறள் 398
    ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப்பு உடைத்து.
    பொருள்
    ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும் தன்மையுடையதாகும்.
    http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/kural40.asp#/////

    ஒகோ! இப்போழுது வள்ளூவரின் வாக்கிக்கிற்கே cut & paste வசதி வந்து விட்டது பாருங்கள்

    ReplyDelete
  37. ////தமாம் பாலா (dammam bala) said...
    கேட்லாக் பார்த்து டாக்டர் ஆவது
    மருந்து தருவது போல அரைகுறை
    ஞானம் ஆபத்து/குழப்பம் என்று
    அழகாக சொன்ன ஆசானுக்கு ஜே!

    பாலிருக்கும் பழமிருக்கும் பசி
    இருக்காது, பஞ்சணையில் காற்று
    வரும் தூக்கம் வராது என்பது
    போல விரைய ஸ்தானத்தின்

    விளையாட்டால் எவ்வளவோ
    இருக்கும் இல்லாமலும் போகும்
    என விவரமாய் உரைத்திட்ட வாத்தியாருக்கு என் நன்றிகள்!/////

    நன்றியெல்லாம் எதற்கு பாலா? நீங்கள் பதிவைப் படித்தால், படித்துவிட்டு நிறைகுறைகளைப் பற்றிப் பின்னூட்டம் இட்டால் போதும்

    ReplyDelete
  38. Ayya, waiting for the other two posts..

    ReplyDelete
  39. ஆரம்பத்தில் சொல்லப்பட்ட உதாரணங்கள் சிறிது பயமுறுத்தினாலும் இறுதியில் சொன்ன விளக்கங்கள் தெளிவைக் கொடுத்து.

    அன்புடன்
    இராசகோபால்

    ReplyDelete
  40. Looking forward to the rest of the sessions in 12th house.

    Can you please let me know how to judge with this general rules. If you mean be experience, where to begin?

    Regards

    Sridhar

    ReplyDelete
  41. ஐயா,
    வணக்கம்.பாடம் அருமை.


    சிம்ம லக்கினத்தைத் தவிர, 12 ஆம் இடம் என்பது,மற்ற லக்கினத்திற்கு இரண்டு ஆதிபத்தியம் உள்ளன. ஆகவே, இரண்டு ஆதிபத்திய பலன்களை கொடுக்கும் என எண்ணணுகிறேன்.

    அது குறித்து விள‌க்க‌ம் அளிக்க வேண்டுகிறேன்.

    அன்புள்ள,

    செந்தில் முருக‌ன்.வே

    ReplyDelete
  42. //////Prabhu said...
    Ayya, waiting for the other two posts..////

    நன்றி பிரபு!

    ReplyDelete
  43. /////Rajagopal said...
    ஆரம்பத்தில் சொல்லப்பட்ட உதாரணங்கள் சிறிது பயமுறுத்தினாலும் இறுதியில் சொன்ன விளக்கங்கள் தெளிவைக் கொடுத்தது.
    அன்புடன்
    இராசகோபால்/////

    அதெல்லாம் பயப்படாதீர்கள். எல்லோருடைய ஜாதகமும் ஒன்றுதான். நிறை, குறை உள்ளவைதான். அனைவரும் சமம். யாராயிருந்தாலும் மொத்தப் பரல்கள் 337 தானே?

    ReplyDelete
  44. /////Geekay said...
    Present Sir.
    GK/////

    நன்றி ஜீக்கே

    ReplyDelete
  45. /////Sridhar said...
    Looking forward to the rest of the sessions in 12th house.
    Can you please let me know how to judge with this general rules. If you mean be experience, where to begin?
    Regards
    Sridhar////

    ஒரு வீட்டை, அதன் அதிபதி, காரகன், வந்து அமர்ந்தவன், பார்ப்பவன், லக்கினாதிபதியின் நிலைமை, இவர்கள், அல்லது அந்த இடங்களுக்குரிய பரல்கள் ஆகியவற்றை வைத்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டியதுதான். பலன்கள் அவர்களில் யார் வலுவாக உள்ளார்களோ அந்த தசா புக்தியில் நடைபெறும் அல்ல்து கிடைக்கும்! சரிதானா?

    ReplyDelete
  46. /////senthil said...
    ஐயா,
    வணக்கம்.பாடம் அருமை.
    சிம்ம லக்கினத்தைத் தவிர, 12 ஆம் இடம் என்பது,மற்ற லக்கினத்திற்கு இரண்டு ஆதிபத்தியம் உள்ளன. ஆகவே, இரண்டு ஆதிபத்திய பலன்களை கொடுக்கும் என எண்ணணுகிறேன்.
    அது குறித்து விள‌க்க‌ம் அளிக்க வேண்டுகிறேன்.
    அன்புள்ள
    செந்தில் முருக‌ன்.வே////

    சூரியன், சந்திரன் ஆகிய இரு கிரகங்களைத்தவிர மற்ற 5 கிரகங்களுக்கும் (புதன், சுக்கிரன்,செவ்வாய்,குரு, சனி)
    இரண்டு ஆதிபத்தியங்கள். அவற்றிற்குரிய பலன்களை அவர்கள் வழங்குவார்கள்

    ReplyDelete
  47. //ஒகோ! இப்போழுது வள்ளூவரின் வாக்கிக்கிற்கே cut & paste வசதி வந்து விட்டது பாருங்கள்//

    ஐயா
    இதைப்படித்து 5 நிமிடம் சிரித்தேன்

    அருமை

    உங்கள் ஜோக்கும் குறள் போல் பல அர்த்தம் பொதிந்துள்ளது

    ReplyDelete
  48. ////தமிழன் said...
    //ஒகோ! இப்போழுது வள்ளூவரின் வாக்கிக்கிற்கே cut & paste வசதி வந்து விட்டது பாருங்கள்//
    ஐயா, இதைப்படித்து 5 நிமிடம் சிரித்தேன்
    அருமை
    உங்கள் ஜோக்கும் குறள் போல் பல அர்த்தம் பொதிந்துள்ளது/////

    நன்றி தமிழரே!

    ReplyDelete
  49. அய்யா, படித்து விட்டேன். குழந்தைகள் இருவருக்கும் ஐந்தில் பன்னிரண்டாம் அதிபதி. எனவே, மற்ற பாடங்களுக்கு வெயிட்டிங்.

    //பாடத்தைப் படித்தால் முழுமையாகப் படிக்க வேண்டும். மனதில் உள்
    வாங்கிக் கொள்ள வேண்டும். "செய்வன திருந்தச் செய்!" என்ற முதுமொழிக்
    கேற்பப் படிக்க வேண்டும்.// முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  50. /////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
    அய்யா, படித்து விட்டேன். குழந்தைகள் இருவருக்கும் ஐந்தில் பன்னிரண்டாம் அதிபதி. எனவே, மற்ற பாடங்களுக்கு வெயிட்டிங்.
    //பாடத்தைப் படித்தால் முழுமையாகப் படிக்க வேண்டும். மனதில் உள்
    வாங்கிக் கொள்ள வேண்டும். "செய்வன திருந்தச் செய்!" என்ற முதுமொழிக்
    கேற்பப் படிக்க வேண்டும்.// முயற்சி செய்கிறேன்.////

    ஆகா, நன்றாகப் படியுங்கள் சகோதரி!
    படித்துத் தெளிவுபெற வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  51. /////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    ஆஜர்.. ஆஜர்.. ஆஜர்..////

    நீதிமன்றத்தில் அல்லவா இப்படி மூன்று முறைகள் சொல்வார்கள்!
    வகுப்பறையிலும் சொல்லலாமா தமிழரே?

    ReplyDelete
  52. ///நாமக்கல் சிபி said...
    /(இத்துடன் விட்டமைக்கு:-)))
    // நினைவூட்டியமைக்கு நன்றி ஐயா!
    எங்கே என் சம்மந்தி(கூடுதுறை)யை சில நாட்களாகக் காணவில்லை?////

    அடடா நானே வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா? (வடிவேல் குரலில் படிக்கவும்)
    கூடுதுறையாரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்படும்!///

    கூடுதுறையாரோடு நேற்று (08-11-2008) இரவு அலைபேசியில் பேசினேன்.
    அடியேன் கூடுதுறையி்லிருந்து அவரை அழைத்தால் அவர் கரூரிலிருந்து பதில் பேசுகிறார்.
    நாங்களிருவரும் பரிவர்த்தனை ஆகிவிட்டோம்.

    ReplyDelete
  53. /////தியாகராஜன் said...
    ///நாமக்கல் சிபி said...
    /(இத்துடன் விட்டமைக்கு:-)))
    // நினைவூட்டியமைக்கு நன்றி ஐயா!
    எங்கே என் சம்மந்தி(கூடுதுறை)யை சில நாட்களாகக் காணவில்லை?////
    அடடா நானே வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டேனா? (வடிவேல் குரலில் படிக்கவும்)
    கூடுதுறையாரைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் கொடுக்கப்படும்!///
    கூடுதுறையாரோடு நேற்று (08-11-2008) இரவு அலைபேசியில் பேசினேன்.
    அடியேன் கூடுதுறையி்லிருந்து அவரை அழைத்தால் அவர் கரூரிலிருந்து பதில் பேசுகிறார்.
    நாங்களிருவரும் பரிவர்த்தனை ஆகிவிட்டோம்./////

    பரிவர்த்தனையால் பலன் கிட்டியதா?:-))))

    ReplyDelete
  54. This comment has been removed by the author.

    ReplyDelete
  55. My 12th house is Gemini.12th lord Mercury sits in 9th house with Sun and Mars.
    Nine house is seen by Guru who sits in 5th house
    My lagna is Kataga

    Can someone tell me the prospects?

    ReplyDelete
  56. Yes, Present Sir...Read the lesson throughly and understood...
    so waiting for next lesson.

    ReplyDelete
  57. why some lines were given in blue?

    -Shankar

    ReplyDelete
  58. அய்யா,

    பாடம் நன்றாக இருந்தது. எனக்கு 12 அதிபதி + 6 அதிபதி + 9 அதிபதி + 11ம் அதிபதி எல்லோரும் லக்னத்தில் சனியின் நேர் பார்வையுடன் உள்ளார்கள். 12ம் அதிபதியும் 9ம் அதிபதியும் புதன் தான். 12ல் இருப்பவன் செவ்வாய். அனேகமாக அடுத்த பாடத்தில் வீட்டில் உள்ளவர்களைப் பற்றியும் பாப சுபர்களின் பார்வையைப் பற்றியும் சொல்லுவீர்கள் தானே?

    ReplyDelete
  59. /////Srinath said...
    My 12th house is Gemini.12th lord Mercury sits in 9th house with Sun and Mars.
    Nine house is seen by Guru who sits in 5th house
    My lagna is Kataga
    Can someone tell me the prospects?////

    Data incomplete for giving predictions. What about lagna lord and his strength?
    Better consult an astrologer with your horoscope for right prediction
    I do not have time to see individual horoscopes!

    ReplyDelete
  60. /////hotcat said...
    Yes, Present Sir...Read the lesson throughly and understood...
    so waiting for next lesson./////

    Thanks Shankar!

    ReplyDelete
  61. ///hotcat said...
    why some lines were given in blue?
    -Shankar///

    Due to its importance!

    ReplyDelete
  62. அமர பாரதி said...
    அய்யா,
    பாடம் நன்றாக இருந்தது. எனக்கு 12 அதிபதி + 6 அதிபதி + 9 அதிபதி + 11ம் அதிபதி எல்லோரும் லக்னத்தில் சனியின் நேர் பார்வையுடன் உள்ளார்கள். 12ம் அதிபதியும் 9ம் அதிபதியும் புதன் தான். 12ல் இருப்பவன் செவ்வாய். அனேகமாக அடுத்த பாடத்தில் வீட்டில் உள்ளவர்களைப் பற்றியும் பாப சுபர்களின் பார்வையைப் பற்றியும் சொல்லுவீர்கள் தானே?////

    ஆமாம்!

    ReplyDelete
  63. /////Blogger chandrika said..
    what is meant by paralgal??//////

    ஜாதகத்தில் அஷ்டகவர்க்கம் என்னும் பகுதியுள்ளது,
    அதில் கிரகம், மட்டும் வீடுகளின் பலம் எண்ணில் சொல்லப்பட்டிருக்கும். அதுதான் பரல்
    பாடங்களைத் துவக்கத்தில் இருந்து படியுங்கள். அப்போதுதான் இப்போது உள்ள பாடங்கள் புரியும் சகோதரி!

    ReplyDelete
  64. as i am kada lagna having pudha in lagna your openion of 12th bava placing in lagna was untally to me sir pl advice me how to type in tamil

    ReplyDelete
  65. Dear Sir,

    I am student of your Classroom. I regularly reading all your articles.You are doing wonderful job.
    Sir, I am giving birth details below. I would like to know whether Do I have a Kaja kesari ?My horoscope business oriented? Will I be successful in business?
    When will I have my own house & settlement.

    My Birth Details:
    DOB: 07/08/1979
    Place: TENKASI
    Time :06.30 AM.
    Do I have a Kaja kesari ?My horoscope business oriented? Will I be successful in business?

    Anticipating your reply

    Thanking you
    Maharajan.M

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com