ஏழரைச் சனி என்ன செய்யும்? என்ன வேண்டுமென்றாலும் செய்யும்!
ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.
பல காரியங்கள் கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடும்.
இதற்கு உதாரணமாக பல விபத்துக்களைச் சொல்லலாம். எத்தனை விபத்துக்களில்
எத்தனை பேர் உருவம் தெரியாமல் போயிருக்கிறார்கள்?
நீங்கள் அற்புதமாகக் கார் ஓட்டக்கூடியவர்தான், உங்கள் காரும் புதிதாக
அவ்வளவு சேஃப்டி வசதிகளையும் கொண்ட கார்தான் என்றாலும் எதிரில்
வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் என்ன செய்ய முடியும்? அல்லது
பின்னால் வருகிறவன் தவறு செய்தால் நீங்கள் எப்படித் தப்பிக்க முடியும்?
மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த
முடியாது. அதே போல எவ்வளவு பெரிய ஆள் என்றாலும் அதற்குரிய நேரம்
வந்து விட்டால் என்ன நடந்தது என்று நினைக்கு முன்பே எல்லாம் நடந்து
முடிந்திருக்கும்.
எல்லைக் காவல் படைகளை ஏ.கே47 உடன் வாசலில் வைத்துத் தடுக்கவும்
முடியாது. நேரம் வந்தால் யார் யாரை எப்படிப் போட வேண்டுமோ அப்படிப்
போட்டு விடுவார்.
விபத்து என்றில்லை. வாழ்க்கையில் பலவித இன்பங்களையும், துன்பங்களையும்
நமது ஜாதகப்படி அளந்து கொடுத்துவிட்டுப்போகிறவர் அவர்தான்.
ஏழரைச் சனி என்றால் என்ன?
ஒருவரின் சந்திர ராசிக்கு, முன் ராசியிலும், சந்திர ராசியிலும், அதற்கு அடுத்த
ராசியிலும் சனீஷ்வரன் சஞ்சாரம் செய்யும் காலமே ஏழரைச் சனியாகும்!
உங்களுக்குப் புரியும்படி உங்கள் மொழியில் சொன்னால், அந்த மூன்று வீடுகளில்
தலா இரண்டரை வருடங்கள் வீதம் மொத்தம் ஏழரை ஆண்டுகள் அவர் வந்து
(அழைக்காத) விருந்தாளியாகத் தங்கிவிட்டுப் போகும் கால கட்டமே ஏழரைச்
சனியாகும்.
அதென்ன இரண்டரை வருடக் கணக்கு?
அவர் வானவெளியில் எல்லா ராசிகளிலும் ஒரு ரவுண்டு அடித்துக் ஹாயாக
சுற்றிவரும் மொத்த காலம் 30 ஆண்டுகள் ஆகும். அதை ராசிக் கணக்கிற்குக்
கொண்டு வர 30 வருடங்கள் வகுத்தல் 12 ராசிகள் = இரண்டரை ஆண்டுகள்.
அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்கும் யோகம் உண்டா?
உண்டு!
அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். ஜாதகன் தப்பித்துவிடுவான்.
அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால்
கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக
இருக்கலாம்.
அப்படி எத்தனை முறை அவர் வலம் வருவார்?
80 அல்லது 90 வயதுவரை ஒருவருக்கு ஆயுள் என்றால், மூன்று முறை அவர்
விருந்தினராகத் தங்கிவிட்டுப்போவார்.
தொல்லைகள் ஒரே மாதிரியாகவா இருக்கும்?
இல்லை! வேறுபடும்!
முதல் சுற்று: மங்கு சனி.மங்கு என்பதற்கு மங்கிப் போகுதல் என்று பொருள்
அடுத்த சுற்று: பொங்கு(ம்) சனி
மூன்றாவது சுற்று: அந்திம காலச் சனி!
அந்திம காலம் என்றால் என்ன வென்று தெரியாதவர்கள் பின்னூட்டத்தில்
கேளுங்கள் சொல்கிறேன்.
இவற்றுள் முதல் சுற்றுதான் மிகவும் மோசமானது!
சிலர் பிறக்கும்போதே ஏழரைச் சனியுடன் பிறப்பார்கள். உதாரணத்திற்கு பூசம்,
ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை முதல் 2 பாதங்களில்
இன்றைக்குப் பிறக்கும் குழந்தைகள் ஏழரைச் சனியுடன் பிறந்துள்ளன என்று
வைத்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.
ஒரு குழந்தை அந்த வயதிற்குள் ஏழரைச் சனியின் பிடியில் அகப்பட்டால்,
அந்தக் குழந்தைக்கு எதுவும் தெரியாது. அதனுடைய அவதிகளைப் பெற்றோர்கள்
தான் அனுபவிக்க நேரிடும்.
அதற்கு அடிக்கடி உடல் நலம் குன்றி பெற்றோர்களை அவதிப்பட வைக்கும்.
பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும்.
சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from School கேசாகிவிடும்.
பத்து, ப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு
ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.
அதென்ன சார், பெரும்பாலோர்கள் என்று சொல்லித் தப்பிக்கின்றீர்கள்
என்று கேட்கதீர்கள். சிலருக்கு படிப்பு, மற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன்
ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம்.
அவை விதிவிலக்கு.
ஏழரைச் சனியின் முதல் பகுதியை (முதல் இரண்டரை வருடங்களை) விரையச்
சனி என்பார்கள் கோச்சாரப்படி சந்திர ராசிக்கு அது 12ஆம் இடம். ஆகவே
அது விரையச் சனி காலம். பண நஷ்டம், காரிய நஷ்டம், உடல் உபாதைகளால்
நாள் கணக்குகள் நஷ்டம் என்று நஷ்டமாகவே அக்காலம் கழியும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) ஜென்மச் சனி என்பார்கள்.
அதாவது ராசியைக் கடந்து செல்லும் காலம். அந்தக் கால கட்டங்களில் ஏகத்துக்கும்
மனப் போராட்டமாக இருக்கும். மன உளைச்சல்களாக இருக்கும்.
அடுத்த பகுதியை (அடுத்த இரண்டரை வருடங்களை) கழிவுச் சனி என்பார்கள்.
அந்தக் காலகட்டம், கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள்
குறைந்ததாக இருக்கும்.
அப்பாடா சாமி என்று நிம்மதிப் பெரு மூச்சை ஏழரை வருடங்கள் கழிந்த பிறகுதான்
விட முடியும்.
அந்த முதல் பகுதியான விரையச் சனி நடக்கும் காலத்தில் நடக்கும் திருமணங்கள்
சோபிப்பதில்லை. தம்பதிகளுக்குள், பிரிவு, பிரச்சினை என்று போராட்டமாக
இருக்கும். விவரம் தெரிந்தவர்கள் தங்கள் குழந்தையின் திருமணத்தை விரையச்
சனியின் காலத்தில் நடத்தி வைக்க மாட்டார்கள்.
இரண்டாவது சுற்றில் (அதாவது பொங்கு சனியில்) ஜாதகனைச் சனீஷ்வரன்
கைதூக்கிவிடுவான். The native of the horoscope will be elevated to a good
position. It level will be according to the strength of the horoscope.
அதுவும் மேளம் அடித்துத் தூக்கிவிட மாட்டான். பல கஷ்டமான அனுபவங்களைக்
கொடுத்த பிறகுதான் தூக்கி உட்காரவைப்பான்.
மூன்றாவது சுற்று அந்திம காலம். ஜாதகனின் ஆயுள் முடியும் நேரம் என்றால் சனி
ஜாதகனுக்குப் போர்டிங் பாஸ் கொடுத்து மேலே அனுப்பி வைத்து விடுவார்.
மேலே என்றால் எங்கே என்று தெரியுமல்லவா?
அதனால் கடைசி சுற்றுச் சனி என்றால் எல்லோரும் பயம் கொள்வார்கள். ஆனால்
அது எல்லோருக்கும் பொதுவானதல்ல! ஒருவனின் ஆயுள் எப்போது முடியும்,
எந்த தசா புத்தியில் அது வரும் என்பது எட்டாம் பாவப் பாடத்தில் வரும்.
அப்போது அதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்படிதான் மூன்றாவது சுற்றில் வரும்
சனி அனுப்பிவைப்பார். இல்லையென்றால இல்லை! மூன்று சுற்றுக்களையும்
கடந்து வாழ்ந்தவர்கள், வாழ்கின்றவர்கள் நிறைய உண்டு!
இன்றைக்குத் தேதியில் சனி எங்கே இருக்கிறார்?
சைடுபரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளை திறந்தீர்கள் என்றால்
அது அன்றைய தேதியில் உள்ள கிரக நிலைகளைக் காட்டும். அதில் சனி,
இன்றையத் தேதியில் சனி சிம்மத்தின் 16.06 வது பாகையில் உள்ளதை அது
காட்டும். அதுபோல எந்தத் தேதிக்கு வேண்டுமென்றாலும் காட்டும்.
ஒரு ராசியில் சனீஷ்வரன் 30 மாதங்கள் தங்கிச் செல்வதால் 30 பாகைகள்
வகுத்தல் 30 மாதங்கள் ஒரு மாதத்திற்கு ஒரு பாகை. சனி பதினாறு பாகையில்
இருக்கிறார் என்றால் சிம்மத்திற்கு அவர் வந்து பதினாறு மாதங்கள் ஆகிவிட்டன
என்பது பொருள். இன்னும் மீதமுள்ள 14 மதங்கள் அங்கே இருந்துவிட்டுப்
பிறகு பெட்டி படுக்கையுடன் அவர் அதற்கு அடுத்த வீடான கன்னி ராசிக்கு
நடையைக் கட்டிவிடுவார்.
இன்றையத் தேதிக்குக் கன்னிராசிக்காரனுக்கு அவர் விரையச் சனி. மாறியவுடன்
ஜென்மச்சனி. சிம்ம ராசிக்காரனுக்கு அவர் இன்றையத் தேதிக்கு ஜென்மச் சனி.
மாறியவுடன் அவர் கழிவுச் சனி. கடக ராசிக்காரனுக்கு அவர் இப்போது கழிவுச்
சனி, மாறியவுடன் அவர்கள்(அதாவது கடக ராசிக்காரர்கள்) ஏழரைச் சனியின்
பிடியில் இருந்து முற்றிலும் விடுபடுவார்கள்.
ஏழரைச் சனியைப் பற்றிய தகவல்களை உங்களுக்கு விவரமாகக் கொடுத்துள்ளேன்
அனைவருக்கும் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். புரியாதவர்கள், புரியவில்லை
என்று சொல்லுங்கள், தனியாகக் கச்சேரி வைக்கிறேன் (பாடம் எடுக்கிறேன்)
============================================================
எனது இனிய நண்பரும், சக பதிவருமான வடுவூர் குமார் அவர்கள் நமது வகுப்புக்
கண்மணிகளுக்காக ஒரு வீடியோ க்ளிப்பிங்கைத் தனிப் பதிவாக வலையேற்றி
யிருக்கிறார். அனைவரையும் சென்று பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
அதன் சுட்டி இங்கே உள்ளது!
=============================================================
நன்றி,
அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!
Me the first:-), I'm Kataka rasi...so I'm in last phase of my sadesani...
ReplyDeleteI was born during last phase of sadesani(sani is next to the moon house in my horsocpes), so the phase which I undergoing is pongu or mangu sani...I am undergoing lot of stress, but its kinda getting OK now.
-Shankar
This comment has been removed by the author.
ReplyDeleteவெள்ளி பதக்கம் எனக்கு தான். :))
ReplyDeleteமிக எளிமையாக எழுதியுள்ளீர்கள் குருவே! கோச்சார பலன்கள் அவரவர் ஜாதக அமைப்புப்படி மாற வாய்ப்புள்ளது தானே?
பதிவில் கோவை குசும்பு புகுந்து விளையாடி இருக்கிறதே! :))
ReplyDelete/////hotcat said...
ReplyDeleteMe the first:-), I'm Kataka rasi...so I'm in last phase of my sadesani...
I was born during last phase of sadesani(sani is next to the moon house
in my horsocpes), so the phase which I undergoing is pongu or mangu sani...
I am undergoing lot of stress, but.
-Shankar///
உங்கள் வயது 30 முதல் 33ற்குள் என்று வைத்து கொள்கிறேன்.
அது சரியென்றால் நீங்கள் இரண்டாவது சுற்றில் இருக்கிறீர்கள்
இது பொங்கு சனி (Period of elevation)
//// its kinda getting OK now////
அடுத்துவரும் 14 மாதங்களுக்குப் பிறகு நிலைமை இன்னும் சீராகிவிடும்!
///////Blogger ambi said...
ReplyDeleteவெள்ளி பதக்கம் எனக்கு தான். :))
மிக எளிமையாக எழுதியுள்ளீர்கள் குருவே!
கோச்சார பலன்கள் அவரவர் ஜாதக அமைப்புப்படி
மாற வாய்ப்புள்ளது தானே?/////
ஆமாம்.ஆமாம்.ஆமாம்!.
அதுவும் நான் பதிவில் சொல்லியுள்ளபடி பரல்கள்
அதிகமாக உள்ள இடங்களில் பலன்கள் முற்றிலும் மாறுபடும்!
முன்னால் வந்தவர் தங்கப் பதக்கத்தைக் கேட்டுப்பெறவில்லை
அதுவும் உங்களுக்குத்தான்.சேர்த்து இரண்டையும் எடுத்துக்
கொள்ளுங்கள்!
//////Blogger ambi said...
ReplyDeleteபதிவில் கோவை குசும்பு புகுந்து விளையாடி இருக்கிறதே! :))/////
பதிவிற்கு வரும் வாசகர்கள் எல்லாம் இளைஞர்கள். அப்படி
எழுதினால்தான் படிப்பார்கள்!:-))))
//Me the first:-), //
ReplyDelete//முன்னால் வந்தவர் தங்கப் பதக்கத்தைக் கேட்டுப்பெறவில்லை//
இல்லை குருவே! சூடான பூனை இப்படி தானே ஆரம்பித்து இருக்கிறார்? :))
வெள்ளியே போதும் எனக்கு. :p
அட்டமத்து சனியும் மோசமான காலபகுதியாக சொல்லப்படுகின்றதே. இதற்கும் ஏதாவது சுற்று இருக்கின்றதா அல்லது அட்டமத்து சனி வரும் காலம் எல்லாம் கெட்டதுதானா?.
ReplyDelete////இல்லை குருவே! சூடான பூனை இப்படி தானே ஆரம்பித்து இருக்கிறார்? :))
ReplyDeleteவெள்ளியே போதும் எனக்கு. :p///
Ambi thanga kambi thaan:-))
-Shankar
//கோச்சார பலன்கள் அவரவர் ஜாதக அமைப்புப்படி மாற வாய்ப்புள்ளது தானே?//
ReplyDeleteகண்டிப்பாக.
முதலில் பார்க்க வேண்டியது தசா புத்தி. பிறகு தான் கோச்சாரம் பார்க்க வேண்டும்.
///////ambi said...
ReplyDelete//Me the first:-), //
//முன்னால் வந்தவர் தங்கப் பதக்கத்தைக் கேட்டுப்பெறவில்லை//
இல்லை குருவே! சூடான பூனை இப்படி தானே ஆரம்பித்து இருக்கிறார்? :))
வெள்ளியே போதும் எனக்கு. :p/////
ஆகா இந்த எண்ணம் இருந்தால் போதுமே! போதும் என்ற மனது ஒன்று போதுமே!
வாழ்க்கையில் உங்களுக்கு எல்லாம் கிடைத்துவிட்டது!
///////கல்கிதாசன் said...
ReplyDeleteஅட்டமத்து சனியும் மோசமான காலபகுதியாக சொல்லப்படுகின்றதே.
இதற்கும் ஏதாவது சுற்று இருக்கின்றதா அல்லது அட்டமத்து சனி வரும்
காலம் எல்லாம் கெட்டதுதானா?.//////
அதே சுழற்சிதான் கல்கியாரே! ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி வருவதுதான்
அட்டமத்துச் சனி.. அதற்கும் வயதைப் பொறுத்து மூன்று சுற்றுக்கள் உண்டு.
ஏழரைச் சனியில் என்னென்ன கெடுதல்கள் உண்டோ, அதற்குச் சற்றும்
குறையாத தீய பலன்கள் இதிலும் உண்டு. ஆனால் நல்ல தசாபுத்தி அல்லது
எட்டாம் வீட்டில் உள்ள அதிகமான பரல்கள் ஆகியவற்றால் அவைகள்
குறையும் வாய்ப்பு உண்டு!
/////hotcat said...
ReplyDelete////இல்லை குருவே! சூடான பூனை இப்படி தானே ஆரம்பித்து இருக்கிறார்? :))
வெள்ளியே போதும் எனக்கு. :p///
Ambi thanga kambi thaan:-))
-Shankar//////
அம்பி என்று இல்லை வகுப்பறை மாணவர்கள் எல்லோரும் தங்கம்தான்!
/////புருனோ Bruno said...
ReplyDelete//கோச்சார பலன்கள் அவரவர் ஜாதக அமைப்புப்படி மாற வாய்ப்புள்ளது தானே?//
கண்டிப்பாக.
முதலில் பார்க்க வேண்டியது தசா புத்தி. பிறகு தான் கோச்சாரம் பார்க்க வேண்டும்.//////
சரியாகச் சொன்னீர்கள். தசாபுத்தி நன்றாக இருந்தால் கோச்சாரம் பற்றிய கவலை
வேண்டாம். தங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி டாக்டர்!
ராசிநாதனாகவோ,லக்கினநாதனாகவோ சனி இருந்தால் பாதிப்பு குறையுமா?
ReplyDelete/////தங்ஸ் said...
ReplyDeleteராசிநாதனாகவோ,லக்கினநாதனாகவோ சனி இருந்தால் பாதிப்பு குறையுமா?///
ஒரளவிற்குக் குறையும்!
//குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
ReplyDeleteஅவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.//
அட! இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா தெரியவே தெரியாது.
@அம்பி, அடடா, அடடா! என்ன ஒரு அடக்கம்! தங்கம் வாங்காமலே தங்க கம்பி பட்டம் வாங்கியாச்சு!
பி.கு: வாத்தியாரே கண்டுக்காதீங்க, அம்பி நம்ம பிரெண்டுதான்!
குருவே,
ReplyDeleteஒரு குழந்தை பிறக்கும் பொழுது ஜென்ம ராசியிலோ / 2-ல் ஆயுல்காராகன் இருந்தால் அது முதல் சுற்றாக எடுத்து கொள்ள வேண்டுமா ?
அன்புடன்
இராசகோபால்
ஏழரைச் சனி பற்றி விவரமாகப் போட்டதற்கு நன்றி, நன்றி, நன்றி!!!!!
ReplyDeleteபோன பதிவையே படித்து முடிக்கலை, நோட்ஸ் எடுத்துட்டிருக்கேன், முடித்ததும் கேள்வி கேட்கலாம்னு இருந்தேன். வாத்தியார் பாடம் நல்ல வேகம். ஆனால், இந்த பதிவு நல்லாவே புரிந்தது (என் தந்தை இறந்தது அவரது மங்குசனியில். இன்னொரு விஷயம், நண்பர் ஜாதகத்தில் எட்டாமிடத்தில் பரல்கள் (20) குறைவு; அவர் அட்டம சனியின் போது மூன்று முறை வேலை திடீரெனப் போய்விடும், வேறு கிடைக்கும், திரும்பப் போய்விடும்..; மிகக் கஷ்டப்பட்டார்கள். இப்போ உங்கள் பதிவைப் பார்த்த பிறகு ஃபோன் போட்டு கேட்டேன், 30 வருடம் முன்னால் அட்டமச் சனி போது பெரிய விபத்தில் மாட்டித் தப்பித்ததைச் சொன்னார்.)
//////திவா said...
ReplyDelete//குழந்தைகளின் ஜாதகம் 12 வயதுவரை வேலை செய்யாது. அவர்களுக்கு
அவர்களுடைய பெற்றோர்களின் ஜாதகப்படிதான் பலன்கள்.//
அட! இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா தெரியவே தெரியாது.//////
இப்போது தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? நினைவில் வையுங்கள் நண்பரே!
//////Rajagopal said..
ReplyDeleteகுருவே,
ஒரு குழந்தை பிறக்கும் பொழுது ஜென்ம ராசியிலோ / 2-ல் ஆயுள்காராகன் (சனி)
இருந்தால் அது முதல் சுற்றாக எடுத்து கொள்ள வேண்டுமா?
அன்புடன்
இராசகோபால்///
ஆமாம், ஆமாம், ஆமாம்!
கெக்கேபிக்குணி (05430279483680105313!) said..
ReplyDeleteஏழரைச் சனி பற்றி விவரமாகப் போட்டதற்கு நன்றி, நன்றி, நன்றி!!!!!
போன பதிவையே படித்து முடிக்கலை, நோட்ஸ் எடுத்துட்டிருக்கேன்,
முடித்ததும் கேள்வி கேட்கலாம்னு இருந்தேன். வாத்தியார் பாடம் நல்ல வேகம்.
ஆனால், இந்த பதிவு நல்லாவே புரிந்தது (என் தந்தை இறந்தது அவரது
மங்குசனியில். இன்னொரு விஷயம், நண்பர் ஜாதகத்தில் எட்டாமிடத்தில்
பரல்கள் (20) குறைவு; அவர் அட்டம சனியின் போது மூன்று முறை வேலை
திடீரெனப் போய்விடும், வேறு கிடைக்கும், திரும்பப் போய்விடும்..;
மிகக் கஷ்டப்பட்டார்கள். இப்போ உங்கள் பதிவைப் பார்த்த பிறகு
ஃபோன் போட்டு கேட்டேன், 30 வருடம் முன்னால் அட்டமச் சனி போது
பெரிய விபத்தில் மாட்டித் தப்பித்ததைச் சொன்னார்.)/////
இப்படி ஒவ்வொருத்தரும் ஒரு நிகழ்வைச் சொல்வார்கள்.என்னிடம்
பல கதைகள் (நிகழ்வுகள்) உள்ளன சகோதரி! உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!
Jus curious, how come lesson turned to 71/2 saturn transit...I thought we are going through 9th house(!!!)...
ReplyDelete-Shankar
எனக்கு இப்போது கழிவுச்சனி என்று நினைக்கிறேன் :-)
ReplyDeleteகடகராசி. நான் பிறக்கும்போதே சனியோடு பிறந்ததாக சொல்வார்கள்.
கலைஞருக்கு இப்போது நடப்பது அந்திம சனி!!
உங்கள் பதிவுகளின் மேட்டரை நம்புகிறேனா நம்பவில்லையா என்பது அப்பாற்பட்டது. ஆனால் உங்களின் எழுத்து எவரையும் சுவாரஸ்யப்படுத்தக் கூடியது!
பதிவுக்கு நன்றி!!!
நாற்பது வயதுக்குள் இதையெல்லாம் நம்ப வைத்துவிடுவான் ஆண்டவன் என்று வாத்தியார் சொன்னதாக ஞாபகம். லக்கி லுக்கார் அதற்குள் நம்ப ஆரம்பித்துவிட்டார். நல்லது . நல்லது.
ReplyDeleteகூட்டுப்புழு தன்னையே பிழிந்து கொண்டு, கூட்டையும் கிழித்து
ReplyDeleteபட்டாம் பூச்சியாய் வெளிவந்து
பறப்பதுபோல ஊழில் நுழைந்து
பாடம் பலபல அனுபவங்களால்
புகட்டி,புடம்போட்ட தங்கத்தில்
புதைத்த வைரமாய் நெஞ்சத்தில்
புது உரம் சேர்ப்பான் 71/2யில்!
ஏழரை சனியை பாரபட்சமின்றி
எழுதி விளக்கிய வாத்தியாருக்கு
எல்லா மாணவர் சார்பாய் நன்றி!
/////hotcat said...
ReplyDeleteJust curious, how come lesson turned to 71/2 saturn transit...
I thought we are going through 9th house(!!!)...
-Shankar/////
ஒன்பதாம் வீட்டைப் பற்றிய பாடத்தின் 2 வது பகுதியை எழுதித் தட்டச்ச வேண்டும்!
அடுத்தவாரம் அது வரும்.
நடுவில் ஒரு மாறுதலுக்காக சென்ற மற்றும் இன்றையப் பாடங்கள்!
/////லக்கிலுக் said...
ReplyDeleteஎனக்கு இப்போது கழிவுச்சனி என்று நினைக்கிறேன் :-)
கடகராசி. நான் பிறக்கும்போதே சனியோடு பிறந்ததாக சொல்வார்கள்.
கலைஞருக்கு இப்போது நடப்பது அந்திம சனி!!
உங்கள் பதிவுகளின் மேட்டரை நம்புகிறேனா நம்பவில்லையா என்பது
அப்பாற்பட்டது. ஆனால் உங்களின் எழுத்து எவரையும் சுவாரஸ்யப்படுத்தக் கூடியது!
பதிவுக்கு நன்றி!!!/////
வாருங்கள் எனது இனிய நண்பர் லக்கியாரே! எல்லோரும் படிக்க வேண்டும் என்பது
மட்டுமே எனது நோக்கம். நம்பிக்கை என்பது அவரவர் சொந்த விருப்பத்திற்கு உரியதாகும்.
சுவாரஸ்யமான எழுத்து என்று பாராட்டியதற்கு மிக்க நன்றி!
சிறுகதைகள், நகைச்சுவைக் கட்டுரைகள் ஆகியவற்றை எழுதுவதே எனக்குப் பிடித்ததாகும்.
ஆனால் இந்த வகுப்பறைப் பதிவுகள், அவற்றை எழுதவிடாமல் செய்து கொண்டிருக்கின்றன.
இந்த வலைப்பூவில் எழுதுவதற்கும், வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதற்கும்
மட்டுமே நேரத்தைச் செலவிடும்படி ஆகிவிடுகிறது. அதில் எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான்.
கூடிய விரைவில் இந்த ஜோதிடக் கட்டுரைகளுக்கு ஒரு மங்களம் பாடிவிட்டு, எனக்குப்
பிடித்தவற்றை செய்யலாம் என்று இருக்கிறேன்! என் ராசிநாதன் சனீஷ்வரன் என்ன
ரோடு போட்டுவைத்திருக்கிறாரோ தெரியவில்லை - பார்ப்போம்:-))))))
//இந்த வலைப்பூவில் எழுதுவதற்கும், வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதற்கும்
ReplyDeleteமட்டுமே நேரத்தைச் செலவிடும்படி ஆகிவிடுகிறது. அதில் எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான். //
பழைய விஷயங்களை இப்போதைய தலைமுறைக்கு நினைவுபடுத்த கலைஞர் மட்டுமே அரசியலில் இருக்கிறார். வலையுலகில் நீங்கள் மட்டுமே அந்தப் பணிகளை செய்து வருகிறீர்கள்.
அவ்வப்போதாவது நேரம் ஒதுக்கி இந்தப் பணிகளை நீங்கள் தொடர்ந்து செய்துவர வேண்டும்!!!
////கல்கிதாசன் said...
ReplyDeleteநாற்பது வயதுக்குள் இதையெல்லாம் நம்ப வைத்துவிடுவான் ஆண்டவன்
என்று வாத்தியார் சொன்னதாக ஞாபகம். லக்கிலுக்கார் அதற்குள் நம்ப
ஆரம்பித்துவிட்டார். நல்லது . நல்லது.////
அதாவது, எல்லா மனிதர்களுமே 40 வயதிற்குப் பிறகு, தங்கள் ஜாதகத்தை
தூசி தட்டிக் கையில் எடுத்துவிடுவார்கள் என்பது என் அனுபவம்.
லக்கியாருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஆனால், அவர் தன்னுடைய
ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அவர் வாழ்க்கை
வளமுடையதாகவும், இனியதாகவும் இருக்கட்டும் எனபதே எனது விருப்பமும்,
பிரார்த்தனையும் ஆகும்!!!
//////Blogger தமாம் பாலா (dammam bala) said...
ReplyDeleteகூட்டுப்புழு தன்னையே பிழிந்து கொண்டு,
கூட்டையும் கிழித்து
பட்டாம் பூச்சியாய் வெளிவந்து
பறப்பதுபோல ஊழில் நுழைந்து
பாடம் பலபல அனுபவங்களால்
புகட்டி,புடம்போட்ட தங்கத்தில்
புதைத்த வைரமாய் நெஞ்சத்தில்
புது உரம் சேர்ப்பான் 71/2யில்!
ஏழரை சனியை பாரபட்சமின்றி
எழுதி விளக்கிய வாத்தியாருக்கு
எல்லா மாணவர் சார்பாய் நன்றி!/////
மாணவர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்த தமாம் பாலாவிற்கு
எந்த உபத்திரவத்தையும் எக்காலத்திலும் கொடுக்க வேண்டாம்
என்று சனி பகவானைப் பிரார்த்திக்கிறேன்!
This comment has been removed by the author.
ReplyDelete////கூடிய விரைவில் இந்த ஜோதிடக் கட்டுரைகளுக்கு ஒரு மங்களம் பாடிவிட்டு////
ReplyDeleteஅதுக்கு என்ன இப்ப அவசரம். இடைஇடையே உங்களுடைய விருப்பத்தை தீர்த்துவைக்க பதிவு போடுவதுதானே? நாங்க என்ன வாசிக்க மாட்டோம் என்ற சொல்லுறம்.
//////லக்கியாருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஆனால், அவர் தன்னுடைய
ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அவர் வாழ்க்கை
வளமுடையதாகவும், இனியதாகவும் இருக்கட்டும் எனபதே எனது விருப்பமும்,
பிரார்த்தனையும் ஆகும்!!!//////
என்னே உங்கள் பெருந்தன்மை. எனது விருப்பமும் அதே.
/////லக்கிலுக் said...
ReplyDelete//இந்த வலைப்பூவில் எழுதுவதற்கும், வரும் பின்னூட்டங்களுக்குப் பதில் சொல்வதற்கும்
மட்டுமே நேரத்தைச் செலவிடும்படி ஆகிவிடுகிறது. அதில் எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான். //
பழைய விஷயங்களை இப்போதைய தலைமுறைக்கு நினைவுபடுத்த கலைஞர் மட்டுமே
அரசியலில் இருக்கிறார். வலையுலகில் நீங்கள் மட்டுமே அந்தப் பணிகளை செய்து வருகிறீர்கள்.
அவ்வப்போதாவது நேரம் ஒதுக்கி இந்தப் பணிகளை நீங்கள் தொடர்ந்து செய்துவர வேண்டும்!!!////
ஆகா! உங்கள் யோசனைக்கு மிக்க நன்றி! ஜோதிடத்தைத் தவிர்த்துவிட்டு, மற்ற அசத்தலான
அனுபவங்களை பல்சுவை வலைப்பூவில் இதைவிடச் சிறப்பாகச் சொல்லலாம் லக்கியாரே!
முற்றிலுமாக வகுப்பறையை விட்டுவிட்டு வரமுடியதபடி, இந்த வகுப்பறைப் பதிவுகளால் ஏராளமான
அன்பர்களின் இதயத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். நான்விட்டாலும், அவர்கள் விடமாட்டார்கள்
போலிருக்கிறது.
அவர்களிடமிருந்து நல்லவிதமாகத் தப்பித்துவரச் சிறந்த யோசனை ஒன்றைச் சொல்லுங்கள்
லக்கியாரே!:-))))))
எனக்கு அடுத்த வருடம் அட்டமத்து சனி ஆரம்பமாகிறது. வேலை வெட்டி இல்லாமல் அலையை போகின்றேன் என்று நினைக்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தோசம். நிறைய பதிவுகளுக்கு காமெண்டுகள் போட நேரம் கிடைக்கும்.
ReplyDelete/////Blogger கல்கிதாசன் said...
ReplyDelete////கூடிய விரைவில் இந்த ஜோதிடக் கட்டுரைகளுக்கு ஒரு மங்களம் பாடிவிட்டு////
அதுக்கு என்ன இப்ப அவசரம். இடைஇடையே உங்களுடைய விருப்பத்தை தீர்த்து
வைக்க பதிவு போடுவதுதானே? நாங்க என்ன வாசிக்க மாட்டோம் என்றா சொல்கிறோம்?.////
நேரமின்மைதான் பிரச்சினை. வேறொன்றுமில்லை!
//////லக்கியாருக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. ஆனால், அவர் தன்னுடைய
ஜாதகத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் அவர் வாழ்க்கை
வளமுடையதாகவும், இனியதாகவும் இருக்கட்டும் எனபதே எனது விருப்பமும்,
பிரார்த்தனையும் ஆகும்!!!//////
என்னே உங்கள் பெருந்தன்மை. எனது விருப்பமும் அதே.////
லக்கியாரை அறிந்தவர்கள் அனைவரும் அதைத்தான் விரும்புவார்கள்!
//////கல்கிதாசன் said...
ReplyDeleteஎனக்கு அடுத்த வருடம் அட்டமத்து சனி ஆரம்பமாகிறது. வேலை வெட்டி
இல்லாமல் அலையை போகின்றேன் என்று நினைக்கின்றேன். இருந்தாலும்
ஒரு சந்தோசம். நிறைய பதிவுகளுக்கு காமெண்டுகள் போட நேரம் கிடைக்கும்./////
அதை நீங்களாகவே முடிவு செய்யாதீர்கள்! தசா, புத்தி நன்றாக இருந்தாலோ அல்லது அஷ்டமச் சனி
குடியேறும் கன்னிராசியில் (உங்கள் ஜாதகத்தில்) 30 அல்லது 30ற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தாலோ
சனி வெறும் விசிட்டராக மட்டும் வந்து விட்டுப்போய் விடுவார். உங்களுக்குத் தொல்லைகள் எதுவும் இருக்காது!
அதை மனதில் வையுங்கள்!
Ji,
ReplyDeleteI am having a doubt, may be it is very premilinary..
Whether spritual practices can able to suppress the effect of Sani Baghavan.. Pl. clarify Ji..
/////Prabakaran said...
ReplyDeleteJi,
I am having a doubt, may be it is very premilinary..
Whether spritual practices can able to suppress the effect of Sani Baghavan.. Pl. clarify Ji..////
No practice by humans can control Saneeshwaran! The practices what you said can control only the mind against suppression!
இந்த பாடம் நன்கு புரிந்தது !
ReplyDelete//கூடிய விரைவில் இந்த ஜோதிடக் கட்டுரைகளுக்கு ஒரு மங்களம் பாடிவிட்டு, //
ReplyDeleteI object your honour....
//////ARUVAI BASKAR said...
ReplyDeleteஇந்த பாடம் நன்கு புரிந்தது !//////
அருப்புக்கோட்டையாருக்குப் புரியும் விதமாக ஆக்கம் இருப்பதில் எனக்கும் மகிழ்ச்சிதான்!
//////கூடுதுறை said...
ReplyDelete//கூடிய விரைவில் இந்த ஜோதிடக் கட்டுரைகளுக்கு ஒரு மங்களம் பாடிவிட்டு, //
I object your honour..../////
என்றைக்காவது ஒரு நாள் முற்றும் போட வேண்டுமல்லவா ராஜா? அடுத்த பாடமாக வாழ்க்கைத் தத்துவத்தை நடத்த வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. இப்போது அல்ல!
பிறகு பார்க்கலாம்!
//நேரத்தைச் செலவிடும்படி ஆகிவிடுகிறது. அதில் எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான். கூடிய விரைவில் இந்த ஜோதிடக் கட்டுரைகளுக்கு ஒரு மங்களம் பாடிவிட்டு//
ReplyDeleteவாத்தியார் அப்படிச் சொல்லலாமா? நான் பாவ, புண்ணியங்களை நம்புகிறேன் (எண்ண, செயல்களின் மீதான நிழல்கள் என்ற வடிவத்தில்). எங்களுக்குச் சொல்லித் தருவதில் அத்தனை புண்ணியம் உங்களுக்கு!!!! இதில் வருத்தம் என்ன? :-(((((
மங்களம் பாட விட்டுவிடுவோமா? பாடம் நடத்துங்க என்ற எங்கள் கோரஸில் அது காணாமல் போய்விடாதா?
அய்யா, ஒரு யோசனை: வாரம் ஒரு சோதிடப் பாடம் நடத்துங்கள். பாடத்தில் சந்தேகங்களாய் வரும் பின்னூட்டங்களை வெளியிட்டு, அதற்கு பதில் சொல்லலாம். அந்த பாடத்துக்கான பயிற்சியை இன்னொரு பதிவாக அன்றே வெளியிடுங்கள். வார இறுதியில் பயிற்சி விடைகளைச் சொல்லலாம். உங்கள் மற்ற பதிவுகளுக்கும் நேரம் இருக்கும்... எங்களுக்கும் பொழுது போகும்:-)
வாத்தியாரே.. தாமதத்திற்கு மன்னிக்கவும். பொறுத்தருளுக..
ReplyDeleteஇப்போது எனக்குத் தெரிந்துவிட்டது நான் பொறக்கும்போதே ஏழரைச் சனியோட பிறந்தவன்னு..
இப்பவும் விரையச் சனியாம்..
நடக்குறது நடக்கட்டும்..
என்னதான் செய்றான்னு பார்ப்போம்..
பதிவுக்குப் பதிவு சுவாரஸ்யத்தைக் கூட்டிக் கொண்டே செல்கிறீர்கள் வாத்தியாரே..
உங்களுடைய பதிவுகள் வாசிக்க, வாசிக்க ஆர்வமாக உள்ளது. அதனால்தான் பாடங்களும் எளிதாகப் புரிகின்றது..
மங்களம் பாடும் வேலையெல்லாம் வேண்டாம் வாத்தியாரே..
பாடங்கள் முடிந்ததும் செய்முறைப் பயிற்சியைத் துவக்கிவிடுங்கள்..
இப்போது என்னை ஆட்கொண்டுள்ள விரையச் சனியால் அவ்வப்போதுதான் வர முடிகிறது.. முடியும்.. கோபித்துக் கொள்ளாதீர்கள்..
தொடர்ந்து படிச்சிக்கிட்டு தான் இருக்கிறேன் வாத்தியார் ஐயா!
ReplyDeleteமிக அருமையாக நகர்த்திச் செல்கிறீர்கள்!
உடனே படிக்க முடியலைன்னா, அச்சும் எடுத்து வைத்துக் கொள்கிறேன், பின்னூட்டக் கடை உட்பட!
பேருந்தில் படிக்க பேருந்துதலாய் இருக்கு! :)
//மங்களம் பாடும் வேலையெல்லாம் வேண்டாம் வாத்தியாரே..
ReplyDeleteபாடங்கள் முடிந்ததும் செய்முறைப் பயிற்சியைத் துவக்கிவிடுங்கள்..//
யெஸ்ஸூ, யெஸ்ஸூ, யெஸ்ஸூ!
ரிப்பீட்டே! ரிப்பீட்டே! ரிப்பீட்டே!
மாந்தியின் தசை பற்றிய இக்காலக் குறிப்புகள் உண்டா ஐயா?
ReplyDeleteசனீஸ்வரனின் புதல்வர், அவரைப் போலவே தான் வர்க்கம், தசை, மற்றும் கோசார பலன்களில் எல்லாம்?
மாந்தியின் கதையையும் எழுதறீங்களா?
இல்லை அடியேன் எழுதட்டுமா? :)
//ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
ReplyDeleteஇல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.//
Its true..I have experienced in my life..
////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDelete//நேரத்தைச் செலவிடும்படி ஆகிவிடுகிறது. அதில் எனக்கும் கொஞ்சம் வருத்தம்தான். கூடிய விரைவில் இந்த ஜோதிடக் கட்டுரைகளுக்கு ஒரு மங்களம் பாடிவிட்டு//
வாத்தியார் அப்படிச் சொல்லலாமா? நான் பாவ, புண்ணியங்களை நம்புகிறேன் (எண்ண, செயல்களின் மீதான நிழல்கள் என்ற வடிவத்தில்). எங்களுக்குச் சொல்லித் தருவதில் அத்தனை புண்ணியம் உங்களுக்கு!!!! இதில் வருத்தம் என்ன? :-(((((
மங்களம் பாட விட்டுவிடுவோமா? பாடம் நடத்துங்க என்ற எங்கள் கோரஸில் அது காணாமல் போய்விடாதா?
அய்யா, ஒரு யோசனை: வாரம் ஒரு சோதிடப் பாடம் நடத்துங்கள். பாடத்தில் சந்தேகங்களாய் வரும் பின்னூட்டங்களை வெளியிட்டு, அதற்கு பதில் சொல்லலாம். அந்த பாடத்துக்கான பயிற்சியை இன்னொரு பதிவாக அன்றே வெளியிடுங்கள். வார இறுதியில் பயிற்சி விடைகளைச் சொல்லலாம். உங்கள் மற்ற பதிவுகளுக்கும் நேரம் இருக்கும்... எங்களுக்கும் பொழுது போகும்:-)////
தாய்க்குலம் சொன்னால் மறுக்க முடியுமா? "உள்ளதைச் சொல்வேன். நல்லதைச் செய்வேன்; வேறொன்றும் தெரியாது" - கவியரசர் எனக்காக எழுதிவைத்துவிட்டுப் போனது!:-))))
////உண்மைத் தமிழன்(15270788164745573644) said..
ReplyDeleteவாத்தியாரே.. தாமதத்திற்கு மன்னிக்கவும். பொறுத்தருளுக..////
மன்னிப்பெல்லாம் எதற்கு ராஜா? அடுத்தவர்களின் கஷ்டங்கள் தெரியாதவனா நான்?
//////இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது நான் பொறக்கும்போதே ஏழரைச் சனியோட பிறந்தவன்னு..
இப்பவும் விரையச் சனியாம்..
நடக்குறது நடக்கட்டும்..
என்னதான் செய்றான்னு பார்ப்போம்..//////
அதை எல்லாம் நமது பழநி அப்பன் பார்த்துக் கொள்வான். கவலை எதற்கு?
உலகம் பிறந்தது நமக்காக; ஓடும் நதிகளும் நமக்காக' என்று எப்போதும் போல மகிழ்ச்சியாக இருப்போம் உனாதானா!
/////பதிவுக்குப் பதிவு சுவாரஸ்யத்தைக் கூட்டிக் கொண்டே செல்கிறீர்கள் வாத்தியாரே..
உங்களுடைய பதிவுகள் வாசிக்க, வாசிக்க ஆர்வமாக உள்ளது. அதனால்தான் பாடங்களும் எளிதாகப் புரிகின்றது..
மங்களம் பாடும் வேலையெல்லாம் வேண்டாம் வாத்தியாரே..
பாடங்கள் முடிந்ததும் செய்முறைப் பயிற்சியைத் துவக்கிவிடுங்கள்..//////
ஆகட்டும் ராஜா! மானிட்டர் சொன்னால் மகேசன் சொன்னதுபோல!:-))))
//////இப்போது என்னை ஆட்கொண்டுள்ள விரையச் சனியால் அவ்வப்போதுதான் வர முடிகிறது.. முடியும்.. கோபித்துக் கொள்ளாதீர்கள்./////
கோபம் என்ற சொல்லே என் அகராதியில் கிடையாது சுவாமி!
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteதொடர்ந்து படிச்சிக்கிட்டு தான் இருக்கிறேன் வாத்தியார் ஐயா!
மிக அருமையாக நகர்த்திச் செல்கிறீர்கள்!
உடனே படிக்க முடியலைன்னா, அச்சும் எடுத்து வைத்துக் கொள்கிறேன், பின்னூட்டக்கள் உட்பட!
பேருந்தில் படிக்க பேருந்துதலாய் இருக்கு! :)/////
மாதவிப்பந்தல் போட்டு மக்களை மயக்கும் உங்களை அந்தக் கண்ணன் பேருந்திலா செல்லவைக்கிறான்?
ஆச்சரியமாக உள்ளது செல்வரே! (செல்வரே என்பது கண்ணன், ரவி, சங்கரன் மூன்றின் சுருக்கம்!)
//////kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDelete//மங்களம் பாடும் வேலையெல்லாம் வேண்டாம் வாத்தியாரே..
பாடங்கள் முடிந்ததும் செய்முறைப் பயிற்சியைத் துவக்கிவிடுங்கள்..//
யெஸ்ஸூ, யெஸ்ஸூ, யெஸ்ஸூ!
ரிப்பீட்டே! ரிப்பீட்டே! ரிப்பீட்டே!//////
செல்வர்கள் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான். மறுப்பேது?
/////kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ReplyDeleteமாந்தியின் தசை பற்றிய இக்காலக் குறிப்புகள் உண்டா ஐயா?
சனீஸ்வரனின் புதல்வர், அவரைப் போலவே தான் வர்க்கம், தசை, மற்றும் கோசார பலன்களில் எல்லாம்?////
அதை, ஒரு வரிசைப்படி, பின்னால் எழுத உள்ளேன்!
/////மாந்தியின் கதையையும் எழுதறீங்களா?
இல்லை அடியேன் எழுதட்டுமா? :)////
ஆகா எழுதுங்கள் உங்களுக்குத் தெரிந்தது version 2வாக இருக்கலாம்.
ஜாமாயுங்கள் நானும் படிக்க ஆர்வமாக உள்ளேன்!
எங்கே நமது நண்பர் பதிவுலகப் பரந்தாமனைக் காணவில்லை?
விசாரித்ததாகச் chatல் அவரிடம் சொல்லுங்கள்!
////Geekay said...
ReplyDelete//ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவியில்
இல்லாதவன், புத்திசாலி, முட்டாள் என்ற வித்தியாசம் எதுவும் சனிக்குக் கிடையாது!
துவைக்க வேண்டிய ஆளைத் துவைத்துக் காயப்போட்டு, அயர்ன் பண்ணி மடித்து
அலமாரியில் வைத்து விட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன்.//
Its true..I have experienced in my life..////
உங்கள் பகிர்விற்கு நன்றி ஜீக்கே!
எங்கள் நாட்டில் அந்திம சனியை மரணச் சனி என்பார்கள். அப்படியே ஐயா அட்டமத்துச் சனி பற்றியும் கொஞ்சம் எடுத்துவிடுங்கள். எனக்கு இப்போது அதுதான் நடக்கின்றது என நினைக்கின்றேன்.
ReplyDelete/////வந்தியத்தேவன் said...
ReplyDeleteஎங்கள் நாட்டில் அந்திம சனியை மரணச் சனி என்பார்கள். அப்படியே ஐயா அட்டமத்துச் சனி பற்றியும் கொஞ்சம் எடுத்துவிடுங்கள். எனக்கு இப்போது அதுதான் நடக்கின்றது என நினைக்கின்றேன்/////
நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் Birth Chartல் சந்திரன் மகரத்தில் இருந்தால்,இப்போது உங்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெறுகிறது.
அவ்விதம் இல்லையென்றால் இல்லை!
75 லிட்டர் பாலை 25 லிட்டராகச் சுண்டக் காய்ச்சினால் எப்படி இருக்கும்?
அப்படித்தான் இருக்கும் அஷ்டமத்துசனியின் விளையாட்டு!
ஏழைச் சனியில் ஏழரை ஆண்டுகள் செய்வதை இங்கே இரண்டரை ஆண்டுகளில் செய்வார் அவர்!
எல்லோருக்குமா?
இல்லை! விதிவிலக்கு உண்டு.
அஷ்டமஸ்தானத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட ஜாதகர்களுக்கு
அஷ்டமச்சனியின் தாக்கம் அதிகமாக இருக்காது. அதுபோல நல்ல தசா புத்தி நடந்து கொண்டிருந்தாலும் தப்பித்து விடலாம்.
\\\அஷ்டமஸ்தானத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட ஜாதகர்களுக்கு
ReplyDeleteஅஷ்டமச்சனியின் தாக்கம் அதிகமாக இருக்காது. அதுபோல நல்ல தசா புத்தி நடந்து கொண்டிருந்தாலும் தப்பித்து விடலாம்.\\\\\\
அது ரெண்டுமே இல்லையே... ராசி நாதன் என்றால் சும்மா விடுவாரா?
நல்ல விளக்கமாக சொல்லிருக்கீங்க வாத்தியாரையா.
ReplyDeleteகொஞ்சம் பரிகாரங்கள் பற்றியும் சொல்லுங்கள்.
எனக்கு கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம் (lunar).
எனக்கு நல்லதை பலவற்றை கடந்த ஆறேழு ஆண்டுகளாக செய்து வருகிறார் சனீஸ்வரர். கடந்த ஏழரை ஆண்டுகளில் எனக்கு பல அனுபவம் தந்தார் சனி பகவான். வீட்டை விட்டு வெளியே போனேன் (சொல்லிட்டு தான்), வேலை தேடி அலைந்தேன், கிடைத்தது, கொஞ்சம் கொஞ்சம் உயர்ந்தது, படிக்க தான் முடியவில்லை. அதனால் தான் பரிகாரங்களை கேட்கிறேன்.
ஒவ்வொரு இரண்டரை மாறும் சமயத்தில், நான் சனீஸ்வரரை வணங்கி வந்தேன். நல்லதே செய்தார். நினைத்த காரியாத்தை எல்லாம் நடத்தி கொடுத்தார், படிப்பை தவிர.
இன்னும் சிலவற்றை நினைக்கிறேன் ஐயன் மனது வைக்கட்டும். தரவேண்டியதை மறுக்காதவர் இவர். பட்ஜட் இது தான் தரவேண்டும் என்றால் தரகூடியவர். என்ன கொஞ்ச சோதிப்பார் அவ்வளவே. (பள்ளியில் கூட பரிட்சை தேரினால் தான் அடுத்த வகுப்பிற்க்கு செல்ல முடியும். ஆக பரிட்சையும் ஒரு விதத்தில் சனீஸ்வரர் தான் :-).)
/////கல்கிதாசன் said...
ReplyDelete\\\அஷ்டமஸ்தானத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களையும் கொண்ட ஜாதகர்களுக்கு
அஷ்டமச்சனியின் தாக்கம் அதிகமாக இருக்காது. அதுபோல நல்ல தசா புத்தி நடந்து கொண்டிருந்தாலும் தப்பித்து விடலாம்.\\\\\\
அது ரெண்டுமே இல்லையே... ராசி நாதன் என்றால் சும்மா விடுவாரா?/////
மேஷம், மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் தோஷம் கிடையாது! ஏனென்றால் செவ்வாய் ராசிநாதன்.
அதுபோல மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ராசிநாதன். அதனால் அடிக்கவும் செய்வார். அனைக்கவும் செய்வார்.
அது அவரவர் ஜாதகத்தில் சனியின் அமைப்பைப் பொறுத்தது. பெரிய விலக்கையெல்லாம் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.
தனது கர்ம தர்மப்படி உள்ளதைச் செய்யாமல் விடமாட்டார்!
////சிவமுருகன் said...
ReplyDeleteநல்ல விளக்கமாக சொல்லிருக்கீங்க வாத்தியாரையா.
கொஞ்சம் பரிகாரங்கள் பற்றியும் சொல்லுங்கள்./////
பரிகாரம் பிரார்த்தனைதான். சனீஷ்வரனைச் சனிக்கிழமைகளில் தவறாமல் வழிபடுங்கள்.
நீங்கள் வெளி நாட்டில் உள்ளவராக இருந்தால், கோளறு திருப்பதிகம் பாடல்களில்
சனிக்கென்றுள்ள பாடலை வீட்டில் இருந்தே மனமுருகப் படித்துப் பிரார்த்தனை செய்யுங்கள்
போதும்!
/////எனக்கு கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம் (lunar).
எனக்கு நல்லதை பலவற்றை கடந்த ஆறேழு ஆண்டுகளாக செய்து வருகிறார் சனீஸ்வரர்.
கடந்த ஏழரை ஆண்டுகளில் எனக்கு பல அனுபவம் தந்தார் சனி பகவான். வீட்டை விட்டு
வெளியே போனேன் (சொல்லிட்டு தான்), வேலை தேடி அலைந்தேன், கிடைத்தது,
கொஞ்சம் கொஞ்சம் உயர்ந்தது, படிக்க தான் முடியவில்லை. அதனால் தான்
பரிகாரங்களை கேட்கிறேன். ஒவ்வொரு இரண்டரை மாறும் சமயத்தில், நான் சனீஸ்வரரை
வணங்கி வந்தேன். நல்லதே செய்தார். நினைத்த காரியாத்தை எல்லாம் நடத்தி கொடுத்தார்,
படிப்பை தவிர.இன்னும் சிலவற்றை நினைக்கிறேன் ஐயன் மனது வைக்கட்டும்.
தரவேண்டியதை மறுக்காதவர் இவர். பட்ஜட் இது தான் தரவேண்டும் என்றால் தரகூடியவர்.
என்ன கொஞ்ச சோதிப்பார் அவ்வளவே. (பள்ளியில் கூட பரிட்சை தேரினால் தான்
அடுத்த வகுப்பிற்க்கு செல்ல முடியும். ஆக பரிட்சையும் ஒரு விதத்தில் சனீஸ்வரர் தான் :-).)////
படிப்பிற்கு உரியவர் புதன். படிக்காதவனையும், அவன் உழைப்பை வைத்து மேலே
தூக்கிவிடுபவர் சனி!
எதற்கும் கவலைப் படாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலே ஒருவன் இருக்கிறான்
அவன் நம்மைப் பார்த்துக் கொள்வான்!
ஹலோ சார்,
ReplyDeleteஇன்றைய பாடம் மிக எளிதாக புரிந்தது.
//மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த முடியாது.//
இது சூப்பர். சரி இப்போ என்னோட சில டவுட்ஸ்.அதாவது, என்னோட ஜாதகத்தில்(பிறந்தபோது)லக்னம் துலாமிலும், மகரத்தில் சந்திரனும் கூட சனி வக்கிரமாயும் கேதுவுடன் சேர்ந்துருக்கார்,அப்போ எனக்கு பிறக்கும் போது ஏழரை சனியா?
அப்படின்னா இப்போ எனக்கு அஷ்டம சனி நடக்கிறதா? இரண்டுக்கும் கால வித்தியாசமமென்ன? அஷ்டம சனியின் காலம் எவ்வளவு?
//உங்கள் Birth Chartல் சந்திரன் மகரத்தில் இருந்தால்,இப்போது உங்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெறுகிறது. // இது எப்போ முடியும்/
/Sumathi. said...
ReplyDeleteஹலோ சார்,
இன்றைய பாடம் மிக எளிதாக புரிந்தது.
//மெக்காஃபி, ஏ.வி.ஜி என்று ஸ்கேனர் வைத்தெல்லாம் சனியைத் தடுத்து நிறுத்த முடியாது.//
இது சூப்பர். சரி இப்போ என்னோட சில டவுட்ஸ்.அதாவது, என்னோட ஜாதகத்தில்(பிறந்தபோது)
லக்னம் துலாமிலும், மகரத்தில் சந்திரனும் கூட சனி வக்கிரமாயும் கேதுவுடன் சேர்ந்துருக்கார்,
அப்போ எனக்கு பிறக்கும் போது ஏழரை சனியா?////
ஆமாம் சகோதரி!
///////அப்படின்னா இப்போ எனக்கு அஷ்டம சனி நடக்கிறதா? இரண்டுக்கும் கால வித்தியாசமென்ன?
அஷ்டம சனியின் காலம் எவ்வளவு?///////உங்கள் Birth Chartல் சந்திரன் மகரத்தில் இருந்தால்,இப்போது
உங்களுக்கு அஷ்டமத்துச் சனி நடைபெறுகிறது. // இது எப்போ முடியும்/////////
ஸிம்பிள். அந்த ராசியில் (அதாவது இன்றையத்தேதியில் அவர் சிம்ம ராசியில் இருக்கிறார்) அவர் தங்கியிருக்கும் காலம்
இரண்டரை ஆண்டுகள். அந்த ராசிக்கு அவர் குடிவந்து 16 மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும் பதினான்கு மாதங்கள்
பாக்கியுள்ளது சகோதரி.
அதற்குப் பிறகு வீட்டுக்காரனிடம் சொல்லாமல் இரவோடு இரவாகக் கிளம்பி அடுத்தவீட்டிற்குப் போய்விடுவார்
அடுத்தவீடு கன்னி ராசி!
என்ன, வாடகை கொடுக்காமல் போய்விடுவார். அவரிடம் யார் வாடகை கேட்பது?:-))))))
போனால் சரி என்று வீட்டுக்காரனும் சந்தோஷமாகிவிடுவான்:-)))))
ஆசானுக்கு வணக்கம்.நாட்கள் பலவாக வெளியூர் பயணம் என்றிருந்ததால் வகுப்புக்கு வர இயலவில்லை.
ReplyDeleteஅம்சத்திற்கு பிறகு இப்போதுதான் உள்நுழைகிறேன்.
அடியேன் மகர லக்னம்,துலா இராசி ஜாதகக்காரன்.
ஸ்வாதி நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு சனி பகவான் எந்தஒரு தீய பலனும் அளிக்கமாட்டார் என கேள்விப்பட்டேன்.
உண்மையா ஐயா?
அடியேனுக்கு சனி பகவான் மூன்று சுற்றுகளிலும் என்ன செய்வார்?.
This comment has been removed by the author.
ReplyDelete7 1/2 சந்தேகம்)போய்விட்டது,மீண்டும் (சந்தேகம்) வராது. மிக அருமையான பதிவு. அஷ்டவர்கத்தின் முக்கியத்தினை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளீர். அஷ்டவர்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மிகவும் குறைவு.
ReplyDelete//////தியாகராஜன் said...
ReplyDeleteஆசானுக்கு வணக்கம்.நாட்கள் பலவாக வெளியூர் பயணம் என்றிருந்ததால் வகுப்புக்கு வர இயலவில்லை.
அம்சத்திற்கு பிறகு இப்போதுதான் உள்நுழைகிறேன்.
அடியேன் மகர லக்னம்,துலா இராசி ஜாதகக்காரன்.
ஸ்வாதி நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு சனி பகவான் எந்தஒரு தீய பலனும் அளிக்கமாட்டார் என கேள்விப்பட்டேன்.உண்மையா ஐயா?///////
மகர லக்கினம் என்று சொல்லிவிட்டீர்கள்,ஸ்வாதி என்றால் நீங்கள் துலாம் ராசி. துலாம் லக்கினகாரர்களுக்கு மட்டும் சனி யோககாரகன். அதாவது 4காம் வீடு மற்றும் 5ஆம் வீடுகளுக்கு அதிபதி. அது லக்கினத்தை வைத்து மட்டுமே கணக்கில் வரும். அதுபோல உங்களுக்கு மகர லக்கினம் என்றால் கணக்கு மகர லக்கினத்தை வைத்து மட்டுமே. இரண்டையும் (அதாவது லக்கினத்தையும், ராசியையும்) ஒன்று படுத்திக் குழப்பிக் கொள்ளவேண்டாம்.
கதாநாயகன் வேறு குணசித்திர நடிகர் பாத்திரம் வேறு. ராசிகளைப் பொறுத்தவரை சனிக்கு அந்த இரண்டாவது ரோல் மட்டுமே!
//////அடியேனுக்கு சனி பகவான் மூன்று சுற்றுகளிலும் என்ன செய்வார்?.//////
பதிவில் உள்ளதுதான் உங்களுக்கும், எனக்கும்! பதிவை ஒருமுறைக்கு மூன்று முறைகள் மீண்டும் படிக்க வேண்டுகிறேன்
///////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
ReplyDelete7 1/2 சந்தேகம்)போய்விட்டது,மீண்டும் (சந்தேகம்) வராது. மிக அருமையான பதிவு. அஷ்டவர்கத்தின் முக்கியத்தினை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளீர். அஷ்டவர்கம் பார்த்து பலன் சொல்லும் ஜோதிடர்கள் மிகவும் குறைவு./////
எனக்குத்தெரிந்து தமிழகத்தில் அஷ்டகவர்கத்தைப் பயன்படுத்தும் ஜோதிடர்கள் இல்லை. மற்ற மாநிலங்களில் உண்டு! அஷ்டகவர்க்கததை வைத்து வரப்போகும் ஆபத்தைக் கூட எடுத்துச் சொல்லலாம். காதைக் கொண்டு வாருங்கள் உங்களுக்கு மட்டும் ஒரு ரகசியம் சொல்கிறேன். ஒரு ஜாதகனின் சனிக்கான சுய வர்கத்தில் எந்த இடத்தில் ஜீரோ பரல்கள் இருக்கின்றனவோ அந்த இடத்திற்கு கோச்சாரா சனி வரும் காலம் ஆபத்தான
காலம். அந்த இடத்தில் அவர் வந்து தங்கும் இரண்டரை வருட காலத்தில் தசாபுத்தி சரியாக இல்லையென்றால்,
சலனமின்றி ஆபத்தை வழங்கிவிட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன். என்ன விதமான ஆபத்து என்று மட்டும் இப்போது கேட்காதீர்கள். பிறகு ஒரு நாள் சொல்கிறேன்
//ஒரு ஜாதகனின் சனிக்கான சுய வர்கத்தில் எந்த இடத்தில் ஜீரோ பரல்கள் இருக்கின்றனவோ அந்த இடத்திற்கு கோச்சாரா சனி வரும் காலம் ஆபத்தான
ReplyDeleteகாலம். அந்த இடத்தில் அவர் வந்து தங்கும் இரண்டரை வருட காலத்தில் தசாபுத்தி சரியாக இல்லையென்றால்,
சலனமின்றி ஆபத்தை வழங்கிவிட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன். என்ன விதமான ஆபத்து என்று மட்டும் இப்போது கேட்காதீர்கள். பிறகு ஒரு நாள் சொல்கிறேன்//
ஆஹா.... ஐயா.. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே...
புரியவேண்டியவர்க்கெல்லாம் எளிதில் புரிந்துவிடுமே....
///////கூடுதுறை said...
ReplyDelete//ஒரு ஜாதகனின் சனிக்கான சுய வர்கத்தில் எந்த இடத்தில் ஜீரோ பரல்கள் இருக்கின்றனவோ அந்த இடத்திற்கு கோச்சாரா சனி வரும் காலம் ஆபத்தான
காலம். அந்த இடத்தில் அவர் வந்து தங்கும் இரண்டரை வருட காலத்தில் தசாபுத்தி சரியாக இல்லையென்றால்,
சலனமின்றி ஆபத்தை வழங்கிவிட்டுப் போய்விடுவார் சனீஸ்வரன். என்ன விதமான ஆபத்து என்று மட்டும் இப்போது கேட்காதீர்கள். பிறகு ஒரு நாள் சொல்கிறேன்//
ஆஹா.... ஐயா.. பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதே...
புரியவேண்டியவர்க்கெல்லாம் எளிதில் புரிந்துவிடுமே....////
செல்லமாக ஒருவரைக் கடிந்து கொள்ள எங்கள் பகுதியில் ஒருவரை இப்படித்தான் சொல்வார்கள்:"எமகாதகன்டா நீ" சும்மா சொல்லக்கூடது எமகாதகர் நீர்!
புரிந்து கொள்பவர்களுக்கு மட்டும் அது புரியட்டும். எல்லோருக்கும் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டாம். எனக்கும் அதைவைத்து ஒரு பாடம் நடத்தும் வேலை இல்லை. சிலவிஷயங்களை இப்படிப் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டுபோவது சுலபமானது. பயன்பட வேண்டியவர்களுக்கு அது பயன்படும்!
Hi Sir - thanks for all ur valuble info regarding saturn transit. Can u pls clarify my below query?
ReplyDeletei was born on jan 2 1983 and i guess i am under the influence of saturn (may b my last phase). Can u clariy wen wil hings get settle in my lif and wen can i gt back confidence and happiness in my personal and professional life - Thanks
அய்யன்மீர் வணக்கம் ! நேற்று காலை (23/08/08) தவறுதலாக google இல் ஒரு சுட்டியை சொடுக்கியத்தின் மூலம் தங்களின் வகுப்பறைக்குள் நுழைய நேரிட்டது..... எப்படி சொல்வேன் நான் கொண்ட மகிழ்வை!!!!! எனக்கும் சோதிடத்தில் அவ்வளவாக நம்பிக்கை இருந்தது இல்லை இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை ஆனால் eப்போது சோதிடம் கற்று கொண்டே இருக்கிறேன் நூல்களின் வாயிலாக........
ReplyDeleteஇந்த திடீர் ஆர்வம வர காரணம் கூற முற்பட்டால் அது ஒரு நீண்ட கதையாகி விடும். விஷயத்துக்கு வருகிறேன் நேற்று காலை உங்கள் பதிவுகளை பார்த்தும் நான் தேடியது எல்லாம் ஓரிடத்தில் இருக்ககண்டேன் உடனடியாக நீங்கள் பதிப்பித்த அனைத்தையும் பதிவிறக்கம் செய்தேன். நேற்று காலை 10 மணிக்கு படிக்க அமர்ந்தேன் இதோ இப்போது தான் அனைத்தையும் படித்து முடித்தேன். கடந்த இரு மாதங்களாய் ஜோதிடம் கற்பதால் எளிதாய் இருந்தது... அஷ்டவர்க்க கணக்கிடலும் அதை கொண்டு பலன் காணும் முறையும் பிரமிக்க வைத்தது..... சுருங்க சொல்ல வேண்டும் எனில் தங்களின் பதிவு ஒவ்வொன்றும் நமது அறிய ஜோதிட கலையை தாங்கி நிற்கும் தூண்கள்......
வாத்தியார் ! அவர்களே தங்களின் புகட்டுதல் முறை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது... என்னையும் தங்களின் மாணவனாக ஏற்று கொள்வீரா?
கண்டேன் வாத்தியாரை, என்னுடைய அண்ணன் திருமண அழைப்பிற்கு வந்து மணமக்களை மனமார வாழ்த்தியதற்கு எனது மனமார நன்றிகள்.
ReplyDeleteதிரும்பவும் விடுப்பு முடிந்து வகுப்பறைக்கு வந்து விட்டேன் வாத்தியரே... உங்கள் அன்பிற்கு நன்றி
உங்கள் பாடம் எளிமையாக சுலபமாக இருக்கிறது.
ReplyDeleteவாழ்த்துக்கள் மகிழ்ச்சி
அஷ்டம சனி பற்றி சொன்ன தாங்கள் அர்த்தாஷ்டம சனி பற்றியும் சொல்ல விரும்புகிறோம்.
மேலும் இப்போ குருதிசையில் ராகு புத்தி நடக்கிறது. இதன் பலன் எப்படி என சொல்லுங்களேன் ப்ளீஸ் . .
I obtained some valuable information, dear Sir :)
ReplyDeleteThanks :)
Arumai
ReplyDelete