என்று படத்திற்குப் படம் அன்பொழுக அழைக்கும் இயக்குனர் சொன்னாராம்:
"படத்தில் நமீதா மட்டுமே பிரம்மாண்டமாக இருக்கிறார்"
அப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொன்று பிரம்மாண்டமாகத்
தோன்றும்.
ஆனால் இறைவனின் படைப்பில் பிரபஞ்சம் மட்டுமே என்றைக்கும் பிரமாண்டமானது
அதன் ஒவ்வொரு பகுதியும் பிரம்மாண்டமானது!
இங்கே கோவையிலிருந்து யானைக்கட்டி செல்லும் சாலையில் 18 கிலோமீட்டர் தூரம்
சென்று, தடாகம் முருகன் கோவிலுக்கு அந்த சாலை பிரியும் இடத்தில் நின்று
கொண்டு சுற்றிலும் உள்ள மலைகளையும், அதற்குப் பின்புறம் சில்லவுட்டில் தெரியும்
மேற்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்த்தால்தான், இறைவனின் படைப்பு எவ்வளவு
பிரம்மாண்டம் என்று தெரியும்.
அதுபோல ஜோதிடத்தின் அடிப்படை விதிகளைப் படித்துவிட்டு, அதன் அடுத்த
பகுதிக்குச் செல்பவனுக்கு அதன் பிரம்மாண்டம் தெரியும்.
கட்டுரையின் நீளம் கருதி, சுருக்கமாக ஜோதிடத்தின் இரண்டு நிலைகளை இன்று
உங்களுக்குச் சொல்கிறேன். அப்போதாவது உணருங்கள் அது எத்தனை பிரம்மாண்ட
மானது என்று!
முடியாதவர்களும், விரும்பாதவர்களும் நமீதாவின் படத்தோடு கழன்று கொள்வது
நல்லது!:-)))
----------------------------------------------------------------------------------------------
ஒருவரிடம் கேட்டுப் பாருங்கள். உங்கள் ஜாதகம் போலவே இன்னொருவருக்கு
அமைய வேண்டும் என்றால் எத்தனை நாட்களாகும்?
ஒவ்வொருவரும் ஒரு பதிலைச் சொல்வார்கள்.
என் நண்பர் ஒருவரிடம் கேட்டபோது சொன்னார்:"அறுபது வருடங்களில் அதே
போன்ற ஜாதகம் கிடைக்கும். அதனால் அறுபதாவது பிறந்த நாளைக் கொண்டாடு
கிறோம்!
எவ்வளவு அறியாமை ?
அப்போ அறுபது வயதில் அவரைப்போலவே இன்னொருவர் பிறப்பாரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு இந்திரா காந்தி பிறப்பரா?
அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு கலைஞர் மு.க. பிறப்பரா?
இல்லை! அது அறிவின்மை!
----------------------------------------------------------------------------------------
இப்பொது சொல்லுங்கள் உங்கள்:
ஜாதகம் போலவே 100% ஜாதகம் அமைந்த இன்னொருவர் பிறக்க எத்தனை
ஆண்டுகள் ஆகும்?
யோசித்து விட்டு ஸ்க்ரோல் டவுன் செய்து பாருங்கள்
V
V
V
V
V
V
V
V
V
V
குரு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 12 ஆண்டுகள்V
V
V
V
V
V
V
V
V
சனி ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 30 ஆண்டுகள்
ராகு ஒரு சுற்றை முடிக்க எடுத்துக்கொள்ளும் காலம் 18 ஆண்டுகள்
இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.
அதோடு, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் சுழற்சியையும்
அவைகளும் அதே நிலைக்குத் துல்லியமாக வந்து சேர அவற்றையும்
பெருக்கி அத்துடன் கூட்டிக் கொண்டு பாருங்கள் தலை சுற்றும்
இது நீங்கள் பிறந்த நாள் கணக்கு மட்டும்தான். இன்னும் லக்கினமும்
வேண்டுமென்றால், மறுபடியும் to be multiplied by 12
விடை ஒரு யுகம் ஆகும். ஒரு யுகத்திற்கு ஒரு உங்களுடையதைப் போன்ற
ஜாதகம் ஒரு ஜாதகம்தான்.
நமக்கு யுவனைத் தெரியும் (இளையராஜாவின் மகன்) யுகத்தைத் தெரியாது!
தெரியாதவர்கள் சொல்லுங்கள் அறியத் தருகிறேன்!
------------------------------------------------------
12 ராசிக் கட்டங்களை வைத்து ஜாதகங்களை எழுதுகிறோம், அதில் லக்கினமும்
ஒன்பது கோள்களும் இருக்கும் இடங்கள் (டிகிரியுடன்) குறிப்பிடப்பட்டிருக்கும்
அதை மாதிரியாக வைத்துக் கொண்டு விதம் விதமான ஜாதகங்களை உருவாக்கிக்
கொடுங்கள் என்று உங்களிடம் சொன்னால், உங்களால் எத்தனை ஜாதகங்களை
உருவாக்கிக் கொடுக்க முடியும்?
சட்டென்று உங்களால் விடை சொல்ல முடியாது!
இப்போது சொல்லித் தருகிறென். நினைவில் வைத்துக் கொண்டு யாரும் கேட்டால்
பொட்டென்று அடியுங்கள் (வாயால்)
ஒரு லக்கினம் + ஒன்பது கோள்கள் = 10 X 12 ராசிகள் = Ten to the power
of Twelve = One followed by Twelve zeros = 100,000,00,00,000
permutation combination
பாதிப்பேர்கள் பொறியாளர்கள்தானே? கணக்கிட்டுப் பாருங்கள்
ஒரு லட்சம் கோடி ஜாதகங்களை எழுதலாம்!
இன்றைய உலக ஜனத்தொகை வெறும் 700 கோடிகள்தான்!-)))
எல்லாம் கணக்கு அய்யா, கணக்கு!
கிளியைவைத்து அறுபது அட்டைகள் என்ற கணக்கில்லை
முழுவதும் தெரிந்தால் உங்களைப் பிரம்மிக்க வைக்கும் கணக்கு!
(தொடரும்)
வாழ்க வளமுடன்!
வணக்கம் அய்யா.
ReplyDeleteஅருமையான பதிவு .(நமிதா அல்ல)
அன்பு மாணவன்.
GK, BLR.
உண்மையிலேயே ஜோதிடம் பிரம்மாண்டம் தான் ஐயா.நம்மைப் போல் நாம் ஒருவர் மட்டுமே என்பது தெளிவாக விளங்குகிறது.
ReplyDeleteThanks SIR,
ReplyDeleteVery true.
God Bless you.
anbudan,
srinivasan.
அருமை... அருமை.... அருமை...
ReplyDeleteஇதுக்குதான் வாத்தியார் ஐயா போன்று ஒருவர் வேண்டும் என்று சொல்றது.
( அப்போ, அந்த பூர்வ புண்ணிய ஸ்தனம் எப்போ?)
இதுவரை உலகில் ஒருவருடைய கைரேகையை போல் வேறு ஒருவர் கைரேகை கிடையாது எனவும் அதனால் வரும் காலங்களில், பெருவிரல் கைரேகைதான் "pass word' (கடவுச் சொல்) எல்லா வேலைகளுக்கும் என்ற தகவலை தங்களின் ஜாதகத்தின் தனித் தன்மையின் பிரமாண்டம் விஞ்சி நிற்கிறது ஐயா!
ReplyDeleteஐயா ஒரு சந்தேகம்.
( இது ஒரு கற்பனை)
ஒரு செல்வந்தர் வீட்டு பெண் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசிவிகிறாள்.
பிரசவம் சிக்கல் என்பதால் பெண் மகளிர் மகப்பேறு நல சிறப்பு மருத்துவர் குழு ( ஆறு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் )அறுவை சிகிச்சை செய்து ஒரே சமயத்தில்(மிகக் குறுகிய கால நேரத்தில் (less than 10 mts)) மிகச் சாமர்த்தியமாக( நல்ல நேரம்,நல்ல யோகம் பார்த்து ) மிக நுட்பமான கருவிகளை உபயோகித்து குழந்தைகளை நல்ல அழுகை சத்தத்துடன் வெளியே எடுக்கிறார்கள் .
அப்போது ஜாதகம் ஒன்றா இல்லை லக்ணம் மாறுமா?
அவர்கள் ஒரே வசதியான குடும்ப சூழ்நிலையில் வளரும் போது எதிர்காலப் பலன்கள் மாறுமா?
தங்களின் பதில் ,பதிவில் சொல்லிய பிரமாண்டத்தின் உச்சத்தை நம் மாணவர்களுக்கு காட்டும்.
////////Geekay said...
ReplyDeleteவணக்கம் அய்யா.
அருமையான பதிவு .(நமிதா அல்ல)
அன்பு மாணவன்.
GK, BLR.//////
நமீதாவும் பிரம்மாண்டம்தான் (அவருடைய ரசிகர்களுக்கு!):-))))
///////தியாகராஜன் said...
ReplyDeleteஉண்மையிலேயே ஜோதிடம் பிரம்மாண்டம் தான் ஐயா.
நம்மைப் போல் நாம் ஒருவர் மட்டுமே என்பது தெளிவாக
விளங்குகிறது.//////
இன்னும் பல ஜோதிட பிரம்மாண்டங்கள் உள்ளன!
ஒரே நாளில் கொடுத்தால் திகட்டிவிடும்.
நேரம் வரும்போது ஒவ்வொன்றாகத் தருகிறேன்
//////Srinivasan said...
ReplyDeleteThanks SIR,
Very true.
God Bless you.
anbudan,
srinivasan./////
கடவுள் கருணை மிக்கவர். அவருடைய ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு!
இல்லையென்றால் வாழ்க்கை ஏது நண்பரே?
//////கல்கிதாசன் said...
ReplyDeleteஅருமை... அருமை.... அருமை...
இதுக்குதான் வாத்தியார் ஐயா போன்று ஒருவர் வேண்டும் என்று சொல்றது.
( அப்போ, அந்த பூர்வ புண்ணிய ஸ்தானம் எப்போ?)/////
பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் அடுத்த கட்டுரை புறப்படுவதற்குத் தயாராக
இரண்டாவது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருக்கிறது.
இடையில் இது போன்ற சில சூப்பர் ஃபாஸ்ட் வண்டிகள் காரணமாக
அதற்கு இன்னும் சிக்னல் கிடைக்கவில்லை. டிராக் கிளியர் ஆனவுடன்
அது புறப்படும்!:-))))
//இன்றைய உலக ஜனத்தொகை வெறும் 700 கோடிகள்தான்//
ReplyDeleteஇந்த 700 கோடிக்கே மனிதனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை...
மரத்தில் மறைந்தது மாமதயானை என்று சொல்வது போல் நமீதா என்னும் குலோப் ஜாமூனில்
ReplyDeleteஜோதிடமருந்தை வைத்து கொடுக்க உங்களால் மட்டுமே முடியும் குருவே (ஜா... ஜா.. பின்னாடி குரல் கேட்கிறது :-)))
ஒரு மனிதனின் பெருவிரல் ரேகை போல, ஜாதகமும் unique for a person என்று கணித விதிகள்படி சிறப்பாக விளக்கியிருக்கின்றீர்(கள்)
ஐயா!!! (கா.... கா... இல்லை:))
பெர்முடேஷன் காம்பினேஷனுக்கு, ஒரு உதாரணம் செஸ் போர்டில் ஒரு கட்டத்துக்கு ஒன்று,இரண்டு, இரண்டுxஇரண்டு, இரண்டின் மூன்று மடங்கு என்று வைத்தால் முடிவில் 64வது கட்டத்துக்கு 2ன் 64ம் மடங்கு=1.84,பத்தொம்போது சைபர்கள்!!!!!!!!!!
பொறியாளர்களோ இல்லையோ அவர்களை நெறியாளர்களாக மாற்றும் உங்கள் இலவச முயற்சிக்கு, என் இலவச நன்றிகள்,அன்பு வாத்தியாரே!!
ஐயா, சூப்பர் விளக்கம்
ReplyDeleteஇந்த ஜோதிடநாத்திகர்களின் கேள்விகளுக்கு ஒரே பதிவில் பதில் அளித்துவிட்டீர்கள்...
அவர்களின் மிகமுக்கிய கேள்வி ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஒரே போல் இருப்பார்களா? என்பதே?
சரி... ஐயா பாடம் please
///////திருநெல்வேலி கார்த்திக் said...
ReplyDeleteஇதுவரை உலகில் ஒருவருடைய கைரேகையை போல் வேறு ஒருவர் கைரேகை கிடையாது எனவும் அதனால் வரும் காலங்களில், பெருவிரல் கைரேகைதான் "pass word' (கடவுச் சொல்) எல்லா வேலைகளுக்கும் என்ற தகவலை தங்களின் ஜாதகத்தின் தனித் தன்மையின் பிரமாண்டம் விஞ்சி நிற்கிறது ஐயா!
ஐயா ஒரு சந்தேகம்.
( இது ஒரு கற்பனை)
ஒரு செல்வந்தர் வீட்டு பெண் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசிவிகிறாள்.
பிரசவம் சிக்கல் என்பதால் பெண் மகளிர் மகப்பேறு நல சிறப்பு மருத்துவர் குழு
( ஆறு அறுவை சிகிச்சை மருத்துவர்கள் )அறுவை சிகிச்சை செய்து ஒரே சமயத்தில்
(மிகக் குறுகிய கால நேரத்தில் (less than 10 mts)) மிகச் சாமர்த்தியமாக( நல்ல நேரம்,நல்ல யோகம் பார்த்து ) மிக நுட்பமான கருவிகளை உபயோகித்து குழந்தைகளை நல்ல அழுகை சத்தத்துடன் வெளியே எடுக்கிறார்கள் .
அப்போது ஜாதகம் ஒன்றா இல்லை லக்னம் மாறுமா?
அவர்கள் ஒரே வசதியான குடும்ப சூழ்நிலையில் வளரும் போது எதிர்காலப் பலன்கள் மாறுமா?
தங்களின் பதில் ,பதிவில் சொல்லிய பிரமாண்டத்தின் உச்சத்தை நம் மாணவர்களுக்கு காட்டும்.
அது புறப்படும்!:-))))//////
இரட்டைப் பிறவிகள் (Twin Births)
இணைப் பிறவிகள்(Parallel Births)
என்று ஏற்படும் பிறவிகளுக்கான ஜோதிட விதிகள், பாடங்கள் உண்டு.அவைகள் எல்லாம்
முது நிலைப் பாடங்களில் வரும். அப்போது விரிவாக அவற்றைப் பற்றிச் சொல்கிறேன்.
என்னிடம் விளக்கங்கள். உதாரணங்கள் எல்லாம் உண்டு.பொறுமையாக இருங்கள்
நாம் இப்போது எட்டம் வகுப்பு பாடத்தில் இருக்கிறோம். அவை எல்லாம் எம்.ஏ லெவல் பாடங்கள்!
நீங்கள் சொல்கிறபடி (less than 10 minutes) அறிவை சிகிச்சை செய்து 4 குழந்தைகளை
ஒரு தாயின் வயிற்றில் இருந்து வெளிக்கொண்டுவரும் சாத்தியம் பற்றி எனக்குத் தெரியவில்லை!
அது பற்றி நம் மதிப்பிற்குரிய டாக்டர் ப்ரூனோ அவர்கள் சொல்வார் என எதிர்பர்க்கிறேன்.
4 இல்லை ஆறு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தது என்று செய்திகளில் படித்திருக்கிறேன்
கால அவகாசம் குறித்துத்தான் எனது சந்தேகம்!
//////VIKNESHWARAN said...
ReplyDelete//இன்றைய உலக ஜனத்தொகை வெறும் 700 கோடிகள்தான்//
இந்த 700 கோடிக்கே மனிதனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை.../////
அவர்கள் எல்லாம் ராகு காலம் எமகண்டம் - இவற்றில் பிறந்தவர்களாக இருப்பார்கள்!:-)))
ஜாதகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட கிரகங்கள் வக்கிரகதியில் சுழலும் போது
பிறந்தவர்கள் அப்படியிருப்பார்கள். பின் லேடனின் ஜாதகத்தில் மூன்று கிரகங்கள் வக்கிரகதி!
/////தமாம் பாலா (dammam bala) said...
ReplyDeleteமரத்தில் மறைந்தது மாமதயானை என்று சொல்வது போல் நமீதா என்னும் குலோப் ஜாமூனில்
ஜோதிடமருந்தை வைத்து கொடுக்க உங்களால் மட்டுமே முடியும் குருவே (ஜா... ஜா.. பின்னாடி குரல் கேட்கிறது :-)))
ஒரு மனிதனின் பெருவிரல் ரேகை போல, ஜாதகமும் unique for a person என்று கணித விதிகள்படி சிறப்பாக விளக்கியிருக்கின்றீர்(கள்)
ஐயா!!! (கா.... கா... இல்லை:))
பெர்முடேஷன் காம்பினேஷனுக்கு, ஒரு உதாரணம் செஸ் போர்டில் ஒரு கட்டத்துக்கு ஒன்று,இரண்டு, இரண்டுxஇரண்டு, இரண்டின் மூன்று மடங்கு என்று வைத்தால் முடிவில் 64வது கட்டத்துக்கு 2ன் 64ம் மடங்கு=1.84,பத்தொம்போது சைபர்கள்!!!!!!!!!!
பொறியாளர்களோ இல்லையோ அவர்களை நெறியாளர்களாக மாற்றும் உங்கள் இலவச முயற்சிக்கு, என் இலவச நன்றிகள்,அன்பு வாத்தியாரே!!
பெர்முடேசன் காம்பினேசனை சாய்சில் விட்டுவிட்டுப் படித்தவர்களுக்கு,
செஸ் கேமின் பிரம்மாண்டத்தைப் பற்றி எப்படி விளக்குவீர்கள் பாலா?:-)))
/////கூடுதுறை said...
ReplyDeleteஐயா, சூப்பர் விளக்கம்
இந்த ஜோதிட நாத்திகர்களின் கேள்விகளுக்கு ஒரே பதிவில் பதில் அளித்துவிட்டீர்கள்...
அவர்களின் மிகமுக்கிய கேள்வி ஒரே நேரத்தில் பிறக்கும் குழந்தைக்கு ஒரே போல்
இருப்பார்களா? என்பதே?/////
அதற்கும் பதில் இருக்கிறது. அது பின் பதிவுகளில்!
////////பெர்முடேசன் காம்பினேசனை சாய்சில் விட்டுவிட்டுப் படித்தவர்களுக்கு,
ReplyDeleteசெஸ் கேமின் பிரம்மாண்டத்தைப் பற்றி எப்படி விளக்குவீர்கள் பாலா?:-))) /////
ஹா.. ஹா.. ஹா.. அருமையான கடி.
இன்று ஜோதிடத்தின் பிரம்மாண்டத்தைச் சொல்வதுபோல
ReplyDeleteஇரண்டு ஜோதிட விதிகளை உங்களுக்கு சொல்லிக்
கொடுத்திருக்கிறேன்.
அது பாடமில்லையா?
என்னுடைய ஒவ்வொரு பதிவிலுமே நிச்சயம் ஒரு தகவல் இருக்கும்
பாடமாக!
ஆகவே அடுத்த பாடம் எப்போது என்று கவலை கொள்பவர்கள்
இதை நினைத்து மகிழ்வும் கொள்ள வேண்டுகிறேன்!
//இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
ReplyDeleteஇடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.//
180 ஆண்டுகள் போதாதா.
one of the census says, In 2050 World population is likely to be increase to 10 billion.
ReplyDeleteநாளை (செவ்வாய்) காமராஜர் பிறந்தநாள் (ஜூலை 15), அவரது ஜாதகம் பற்றி எழுதவும்.
நமது மதிப்புக்குரிய ஆசிரியர் அருமையான 300 வது பதிவை "பல்சுவையில் " பதிந்துள்ளார்கள்.
ReplyDeleteஅவரது புகழ் பாரட்டி மகிழ்வோமே
-வகுப்பறை மாணவர்கள்
முக்கனி என்பது மா பலா வாழை
முத்தமிழ் என்பது இயல் இசை நாடகம்
தமிழ் வலையுலகில் பிரவேசமோ
டிசம்பர் 2006
தரணி போற்றும் படைப்புகளின் எண்ணிக்கையோ 300
அனுபவம் ஆன்மீகம் இசை பதிவுகளோ 13
அடுத்தவ்ர் நெஞ்சை அள்ளும் அற்புதங்கள் அனைத்தும்
கடவுள் கண்ணதாசன் கவிதை பற்றியவை 99
கரும்புச் சாற்றின் இனிமையன்றோ அதுவெல்லாம் எந்நாளும்
சினிமா சின்ன அண்ணாமலை சிறுகதை இவைகளோ 19
சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து படைப்பன்றோ
சுப்பையாயெனும் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையோ 67
சுந்தரத் தமிழில் சுவை தந்த பதிவுகளல்லவா
சோகம் சோதிடம் தத்துவம் இவற்றிற்கு 17
சோலையில் வீசும் காற்றின் இனிமைபோல் அன்றோ
பதிவர்வட்டம் பத்திரிக்கை பல்சுவை பற்றி 38
பண்பாளரின் பதிவெல்லாம் படிப்போருக்கு பனைவெல்லச் சுவையன்றோ
தமிழ்நாட்டு பிரபலங்கள் விளையாட்டுக்கள் தத்துவங்களுக்கோ 17
தரணி போற்றி மகிழ்ந்து மலர்ந்த மலர்களன்றோ
புதிர் புகைப்படம் ஓவியம் சார்ந்தவை 46
புதிய செய்திகள் முந்தி தந்தது பாங்கன்றோ
மகிழ்வினைத் தந்து சிறக்கும் முத்தானவை 300
மணம் பரப்பிய பல்சுவைப் பதிவுகளின் விழாக்கோலம்
ஆசிரியரின் சுவைமிகு அடுத்த இலக்கு 1000
ஆண்டவனும் துணையிருந்து ஆசிர்வாதித்து வாழ்த்தி மகிழ்வாரே
//////புருனோ Bruno said...
ReplyDelete//இந்த மூன்று கிரகங்களும் நீங்கள் பிறந்த தினத்தில் வானத்தில் இருந்த
இடத்தில் இருந்து மீண்டும் அதே இடத்திற்கு வந்து சேர ஆகும்
ஆண்டுகள் = 12 x 30 x 18 = 6,480 ஆண்டுகள் ஆகும்.//
180 ஆண்டுகள் போதாதா.////
இல்லை டாக்டர்! ஸைடுபாரில் planetarypositions.com மென்பொருள் உள்ளது
ஒரு சிறு சோதனை செய்து பார்க்க வேண்டுகிறேன்.
15.08.1947 Delhi (28.40N, 77.13 E) Birth Time:00.01 Hours
Plus 180 years
15.08.2127 Delhi (28.40N, 77.13 E) Birth Time:00.01 Hours
ஆமாம், நம் நாட்டின் ஜாதகம்தான். கணித்துப் பாருங்கள். கிரக நிலைமைகளைப்
பாருங்கள்
உங்களுக்காக நான் எடுத்துக் கொடுத்துள்ளேன்:
15.08.1947ல்
குரு. 206.4 டிகிரி
சனி. 110.0 டிகிரி
ராகு. 35.44 டிகிரி
15.08.2127ல்
குரு. 273.13 டிகிரி
சனி. 149.54 டிகிரி
ராகு. 150.01 டிகிரி
...........................
பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டுகிறேன் டாக்டர்
எல்லாம் கணிதத்தின் அடிப்படையில்தான். 6480 ஆண்டுகளில்தான்
அந்த மூன்று கிரகங்களும் அதே இடத்திற்கு வரும்!
/////பொதிகைத் தென்றல் said...
ReplyDeleteமுக்கனி என்பது மா பலா வாழை
முத்தமிழ் என்பது இயல் இசை நாடகம்
தமிழ் வலையுலகில் பிரவேசமோ
டிசம்பர் 2006
தரணி போற்றும் படைப்புகளின் எண்ணிக்கையோ 300
அனுபவம் ஆன்மீகம் இசை பதிவுகளோ 13
அடுத்தவ்ர் நெஞ்சை அள்ளும் அற்புதங்கள் அனைத்தும்
கடவுள் கண்ணதாசன் கவிதை பற்றியவை 99
கரும்புச் சாற்றின் இனிமையன்றோ அதுவெல்லாம் எந்நாளும்
சினிமா சின்ன அண்ணாமலை சிறுகதை இவைகளோ 19
சிரிக்க வைத்து சிந்திக்க வைத்து படைப்பன்றோ
சுப்பையாயெனும் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையோ 67
சுந்தரத் தமிழில் சுவை தந்த பதிவுகளல்லவா
சோகம் சோதிடம் தத்துவம் இவற்றிற்கு 17
சோலையில் வீசும் காற்றின் இனிமைபோல் அன்றோ
பதிவர்வட்டம் பத்திரிக்கை பல்சுவை பற்றி 38
பண்பாளரின் பதிவெல்லாம் படிப்போருக்கு பனைவெல்லச் சுவையன்றோ
தமிழ்நாட்டு பிரபலங்கள் விளையாட்டுக்கள் தத்துவங்களுக்கோ 17
தரணி போற்றி மகிழ்ந்து மலர்ந்த மலர்களன்றோ
புதிர் புகைப்படம் ஓவியம் சார்ந்தவை 46
புதிய செய்திகள் முந்தி தந்தது பாங்கன்றோ
மகிழ்வினைத் தந்து சிறக்கும் முத்தானவை 300
மணம் பரப்பிய பல்சுவைப் பதிவுகளின் விழாக்கோலம்
ஆசிரியரின் சுவைமிகு அடுத்த இலக்கு 1000
ஆண்டவனும் துணையிருந்து ஆசிர்வாதித்து வாழ்த்தி மகிழ்வாரே/////
நன்றி பொதிகையாரே!
கை வலிக்கவில்லையா?
//////நவநீத்(அ)கிருஷ்ணன் said...
ReplyDeleteone of the census says, In 2050 World population is likely to be increase to 10 billion.
நாளை (செவ்வாய்) காமராஜர் பிறந்தநாள் (ஜூலை 15), அவரது ஜாதகம் பற்றி எழுதவும்.////
நினைவூட்டியமைக்கு நன்றி. கோப்பில் தேடிப்பார்க்க வேண்டும். இருக்கிறது. ஆனால்
தேட வேண்டும். முயற்சி செய்கிறேன் நண்பரே!
உள்ளேன் ஐயா
ReplyDeleteGreat Information...This lesson/class is awesome!
ReplyDelete-Shankar
//இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகியவற்றைப்பற்றிய
ReplyDeleteசெய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால் உங்கள்
தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம்.
ஆகவே அது இரண்டையும் பற்றிய அக்கறையுள்ளவர்கள் வெளியேறி விடுங்கள்!
//
what is the difference between "smoking injurious to health" in tiny font and the above line at the bottom of your page?
/////நாமக்கல் சிபி said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா///
சரீங்க தம்பி!
/////hotcat said...
ReplyDeleteGreat Information...This lesson/class is awesome!
-Shankar/////
நன்றி சங்கர்!
//////Udhayakumar said...
ReplyDelete//இறைவன், இறையுணர்வு, இறைவழிபாடு, ஜோதிடம், விதி ஆகியவற்றைப்பற்றிய
செய்திகள், கட்டுரைகள் கொண்ட பதிவு இது. இதைப் படிப்பதால் உங்கள்
தன்னம்பிக்கை பாதிக்கப்படலாம், வாழ்க்கை திசைமாறிப் போகலாம்.
ஆகவே அது இரண்டையும் பற்றிய அக்கறையுள்ளவர்கள் வெளியேறி விடுங்கள்!
//
what is the difference between "smoking injurious to health" in tiny font and the
above line at the bottom of your page?/////
---------------=---------------------------
"smoking injurious to health"
"Reading this blog is injurious to your self-confidence
and your thoughts about the nonexistence of god"
One warns about your body whereas the other
one warns about your mind which is the difference my dear friend!
//"Reading this blog is injurious to your self-confidence
ReplyDeleteand your thoughts about the nonexistence of god" //
அதாகப்பட்டது, உங்கள் பதிவு படிப்பவர்களுக்கெல்லாம் தன்னம்பிக்கை போய் விடும். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் ஜோதிடத்தின் மேல் ஆர்வமுள்ளவர்களாகக் கொள்ளலாமா?
(எனது முந்தைய ஆங்கில பின்னுட்டத்துக்கு மன்னிக்கவும், இன்னொரு மடிக்கணிணியிலிருந்து அனுப்பியது)
/////Udhayakumar said...
ReplyDelete//"Reading this blog is injurious to your self-confidence
and your thoughts about the nonexistence of god" //
அதாகப்பட்டது, உங்கள் பதிவு படிப்பவர்களுக்கெல்லாம் தன்னம்பிக்கை
போய் விடும். தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் ஜோதிடத்தின் மேல்
ஆர்வமுள்ளவர்களாகக் கொள்ளலாமா?////
ஆகா, நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் பொருள் கொள்ளலாம்! உங்களைக் கேட்க யார் இருக்கிறார்கள்?
அதேபோல என்னைக் கேட்க யார் இருக்கிறார்கள்? நானும் எனக்குத் தெரிந்ததை
எழுதுவேன். போட்டுக்கொள்வேன்!
அர்த்தம் தெரிந்தவனுக்குத் தெரியட்டும்
தெரியாதவனுக்குக் கடைசிவரை தெரியாமலேயே போகட்டும்!
நான் வந்து சேர் அதுக்குள்ள வகுப்பு முடிஞ்சி போச்சு...:-((....அதுவும் நமிதாவின் வகுப்பு...:-(((
ReplyDeleteவாத்தியார் மேஜையைப் பலமாகத்தட்டி சத்தம் எழுப்பி
ReplyDeleteஏழரைக் கட்டைக் குரலில் சொல்வது:
Silence Please! SILENCE PLEASE!
ஆசிரியர் திரு. சுப்பையா அவர்களுக்கு, இந்த ராகு கிரகம் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா. சந்திரனை விழுங்க வரும் பாம்பு என்ற கதைக்கும் சோதிடத்தில் குறிப்பிடப்படும் இக்கிரகத்திற்கும் ஏதேனும் தொடர்புண்டா?
ReplyDelete// SP.VR. SUBBIAH said...
ReplyDeleteவாத்தியார் மேஜையைப் பலமாகத்தட்டி சத்தம் எழுப்பி
ஏழரைக் கட்டைக் குரலில் சொல்வது:
Silence Please! SILENCE PLEASE!//
யாருப்பா அது வாத்தியார் வகுப்பில் சவுண்ட் விடுரது, எல்லோரும் வாய் பொத்தி விரல் வைக்கவும்... சோ ...! என்ன மாதிரி ஒரு நல்ல மாணவன் யாரும் இல்லயா?
ஏதோ நமிதாவின் பதிவு என்பதால் இப்படியா சவுண்ட் விடுவது வகுப்பரயில்...,
டிஸ்கீ : அகில உலக நமிததா ரசிகர் மன்ற தலைவர் மன்னிக்கவும்
ஆசானே,
ReplyDeleteரொம்ப நாளாக மனதை குழப்பிக் கொண்டிருக்கும் கேள்வி
1. ஒரே நேரத்தில் (அல்லது சில நிமிடங்கள் அல்லது நொடிகள்), ஒரே இடத்தில் (உ.ம். சென்னை, same latitude, longitude, timezoநெ ) பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் பெரும்பாலும் ஒன்றாக அமையும் அல்லவா? (அதே formula தானே). அவர்களது வாழ்க்கை எப்படி மாறுபடும்?
வகுப்பறையில் உள்ள சுட்டி காட்டும் தளத்தில், எனது ஜாதகத்தை வெவ்வேறு பிறந்த நேரம் (same day, place, but different time with 2 hour time spaந்) இட்டு பரிசோதித்த போது, லக்னம் உட்பட எல்லா கிரகங்களும் மாற்றம் இல்லாமல் (ஒவ்வொரு முறையும்) வருகிறது. ஒரே மாற்றம் கிரகங்களுக்கு இடையே ஆன பாகை (degrees) மட்டுமே. அதுவும் கிரக அஸ்தமனம் போன்ற விதிகளை பெரும்பாலும் மாற்றவில்லை. நவாம்சமும் ஏறக்குறைய ஒன்றாகவே வருகிறது.
நேரம் இருந்தால், தயவு செய்து தெளிவு படுத்தவும்.
வெற்றி
/////கையேடு said...
ReplyDeleteஆசிரியர் திரு. சுப்பையா அவர்களுக்கு, இந்த ராகு
கிரகம் பற்றி கொஞ்சம் விளக்க முடியுமா. சந்திரனை விழுங்க
வரும் பாம்பு என்ற கதைக்கும் சோதிடத்தில் குறிப்பிடப்படும்
இக்கிரகத்திற்கும் ஏதேனும் தொடர்புண்டா?//////
விழுங்கவரும் கதையெல்லாம் எனக்குத் தெரியாது!
ஆனால் ராகுவைப்பற்றி நிறைய எழுத வேண்டும் எழுதுகிறேன் நண்பரே!
///////கோவை விமல்(vimal) said...
ReplyDelete// SP.VR. SUBBIAH said...
வாத்தியார் மேஜையைப் பலமாகத்தட்டி சத்தம் எழுப்பி
ஏழரைக் கட்டைக் குரலில் சொல்வது:
Silence Please! SILENCE PLEASE!//
யாருப்பா அது வாத்தியார் வகுப்பில் சவுண்ட் விடுரது,
எல்லோரும் வாய் பொத்தி விரல் வைக்கவும்... சோ ...!
என்ன மாதிரி ஒரு நல்ல மாணவன் யாரும் இல்லயா?////
உங்களைத்தவிர எல்லாருமே நன்றாகத்தான் படிக்கிறார்கள். ஆகவே
படிப்பில் கவனத்தை செலுத்தவும்!
//////vetri said...
ReplyDeleteஆசானே,
ரொம்ப நாளாக மனதை குழப்பிக் கொண்டிருக்கும் கேள்வி
1. ஒரே நேரத்தில் (அல்லது சில நிமிடங்கள் அல்லது நொடிகள்),
ஒரே இடத்தில் (உ.ம். சென்னை, same latitude, longitude, timezoநெ )
பிறக்கும் குழந்தைகளின் ஜாதகம் பெரும்பாலும் ஒன்றாக அமையும்
அல்லவா? (அதே formula தானே). அவர்களது வாழ்க்கை எப்படி
மாறுபடும்?
வகுப்பறையில் உள்ள சுட்டி காட்டும் தளத்தில், எனது ஜாதகத்தை
வெவ்வேறு பிறந்த நேரம் (same day, place, but different time with 2
hour time spaந்) இட்டு பரிசோதித்த போது, லக்னம் உட்பட எல்லா
கிரகங்களும் மாற்றம் இல்லாமல் (ஒவ்வொரு முறையும்) வருகிறது.
ஒரே மாற்றம் கிரகங்களுக்கு இடையே ஆன பாகை (degrees)
மட்டுமே. அதுவும் கிரக அஸ்தமனம் போன்ற விதிகளை பெரும்பாலும்
மாற்றவில்லை. நவாம்சமும் ஏறக்குறைய ஒன்றாகவே வருகிறது.
நேரம் இருந்தால், தயவு செய்து தெளிவு படுத்தவும்.
வெற்றி///
அதெல்லாம் இணைப் பிறவிகள் Parallel Births என்பார்கள்
அதுபற்றி பின்னால் தனியாக பல விவரங்களைத் தருகிறேன்!
I too thought, 180 years is enough for the mentioned 3 planets align again. You seem to take the product, rather you should take the LCM (Least Common Multiple) of the years. Of course, for all the planets to align to have the similar horoscope, it takes definitely thousands of years, but I'm not sure if it really takes trillions of years.
ReplyDeleteThanks
Muthu
/////Muthukumar said...
ReplyDeleteI too thought, 180 years is enough for the mentioned 3 planets
align again. You seem to take the product, rather you should take
the LCM (Least Common Multiple) of the years. Of course,
for all the planets to align to have the similar horoscope,
it takes definitely thousands of years, but I'm not sure
if it really takes trillions of years.
Thanks
Muthu//////
Yes my dear friend; in astrology it is mentioned as one Yuga!