மீண்டும் வாத்தியார்
வலைப் பதிவில் இரண்டு ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.
கதை, கட்டுரை, கவிதை, நகைசுவைத் துணுக்குகள், புதிர்கள்
என்று விதம் விதமாக எழுதினாலும் ஜோதிடப் பாட வகுப்பிற்
குத்தான் அதிகமான வரவேற்பு.
எதுவும் ஓவர் டோஸ் ஆகிவிடக்கூடாது.அதனால் 51 பதிவுகள்
வரை ஜோதிடப் பாடங்களை எழுதியவன், அதை சற்று நிறுத்தி
வைத்தேன்.
என் வகுப்புக் கண்மணிகளின் தொடர் வேண்டுகோளைப்
புறக்கணிக்க முடியாமல், அதை மீண்டும் (1,2.2008 அன்று)
துவக்க உள்ளேன். ஆனால் வேறு ஒரு கோணத்தில் பாடங்கள்
நடத்தப்படும்.
ஒரு புத்தகத் தயாரிப்பாலும், வழக்கமாக பத்திரிக்கைகளுக்கு
எழுதிக் கொடுக்கும் பணிகளாலும், மற்றும் எனது
வியாபார அலுவல்களாலும், இரண்டு மாத காலமாக பதிவுகள்
எழுத முடியாமல் போய் விட்டது.
இருப்பதை இழப்பது என்பது மிகவும் சோகமானது. என்னுடைய
வகுப்புக் கண்மணிகளையும், மற்றும் பதிவிற்கு வந்து செல்லும்
சக பதிவுலக நண்பர்களையும் இழக்க நான் விரும்பவில்லை
ஆகவே வாரம் தோறும் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளில்
பதிவுகள் எழுதலாம் என்று உள்ளேன். வகுப்பறையிலும் ஒரு
பதிவு பல்சுவை'யிலும் ஒரு பதிவு.
அனைவரையும் வழக்கம்போல வந்து படித்து மகிழ வேண்டுகிறேன்
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
வந்ததிற்குச் சும்மா போக வேண்டாம். கீழே ஒரு சரித்திர
நிகழ்வுடன் செய்தி ஒன்றைக் கொடுத்துள்ளேன். படித்துவிட்டுச்
செல்லுங்கள்.
இந்திய தேசம் காலம் காலமாக தன் நினைவில் செதுக்கி
வைத்திருக்கும் மூன்று மாமன்னர்களின் பெயர்கள் அகரத்தில்தான்
துவங்கும். அதுதான் அதிசயம்
அசோகர், அலெக்ஸாண்டர், அக்பர் ஆகிய மன்னர்கள்தான்
அவர்கள்.ஒவ்வொரு வருக்கும் ஒரு அற்புதச்சிறப்பு உண்டு.
அவர்களில் இப்போது அக்பரைப் பற்றிப்
பார்ப்போம்.
அக்பர் பிறந்தது 15.10.1542ல். தனது பதின்மூன்றாவது
வயதிலேயே அரியணையில் ஏறியவர் அவர். அவருடைய
தந்தை ஹுமாயூன் திடீரென்று காலமாகிவிட ஆட்சியைக்
கட்டிக்காக்கும் பொறுப்பு இவர்மேல் சுமத்தப்பட்டது.
இறக்கும்வரை அவர் பேரரசராக ஆட்சி செய்த காலம்
சுமார் 50 ஆண்டுகள் (1556 முதல் 1605ஆம் ஆண்டு வரை)
மிகவும் துணிச்சலானவர்.நகைச்சுவை உணர்வு மேலோங்கியவர்.
மத நல்லிணக்கம் கொண்டவர். அவருடைய அமைச்சரவையில்
9 பேர்களில் நான்கு பேர்கள் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்
என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
ஆக்ராவிற்கு அருகில் உள்ள அடர்ந்த காடுகளுக்குச் சென்று
வேட்டையாடுவதில் அக்பருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு.
ஒரு சமயம் அவ்வாறு வேட்டைக்குச் சென்றுவிட்டுத்
திரும்பும் வழியில் வழி தவறி காட்டுக்குள்ளே சற்று
நேரம் சுற்றும்படி ஆகிவிட்டது.
களைப்பு, பசி, தாகம் எல்லாம் கூட்டணி அமைத்துப் படுத்தி
எடுக்க அவருடன் உடன் வந்த வீரர்கள் ஒன்றும் சொல்ல
முடியாமல், பேசாமல் தொடர்ந்து வந்தார்கள்.
இளைஞரான அக்பர் அவற்றைப் பொறுத்துக் கொண்டு
வந்தார். நான்கு பாதைகள் ஒன்று சேரும் இடத்திற்கு
அவர்கள் வந்தார்கள். தாங்கள் வந்த வழியை விடுத்து
மற்ற மூன்றில் எதில் சென்றால் ஆக்ரா நகருக்குப் போய்ச்
சேரலாம் என்பது பிடிபடவில்லை.
அப்போது அங்கே இளைஞன் ஒருவன் வந்து கொண்டிருந்தான்.
அக்பர் தன்னுடைய படைத்தலைவனைக் கூப்பிட்டு, அந்த
இளைஞனிடம் வழி கேட்கச் சொன்னார்.
அவனும் கேட்டான்," ஏம்ப்பா, இந்தப் பாதை ஆக்ராவிற்குப்
போகுமா?"
இளைஞன் சட்டென்று சொன்னான்,"பாதை எப்படிப் போகும்?
நாம்தான் போக வேண்டும்!"
அக்பர் உட்பட மற்ற அனைவரும் சிரித்து விட்டனர்.
படைத்தலைவனுக்குக் கோபம் வந்து விட்டது."யாருக்காகக்
கேட்கிறேன் என்பதைத் தெரிந்து பேசு.குதிரையில்
அமர்ந்திருப்பவர் இந்த தேசத்தின் மன்னர்"
அந்த இளைஞன் அதிராமல் மீண்டும் சொன்னன்,"மன்ன
ரென்றாலும் பாதை போகாது. அவர்தான் போக வேண்டும்"
அவனுடைய துணிச்சலையும், நகைச்சுவை உணர்வையும்
கண்டு அசந்து போன அக்பர்,அவனை அருகில் அழைத்து
அன்புடன் விசாரித்தார்.
"நீ சொல்வதுதான் சரி, பாதை எப்படி பயணிக்கும்?
நாம்தான் பயணிக்க வேண்டும்! நன்றாகச் சொன்னாய்.
உன் பெயரென்ன?"
"மகேஷ் தாஸ்" என்றான் அந்த இளைஞன்
"உன் போன்று துணிச்சலையும், புத்திசாலித்தனத்தையும்,
நகைச்சுவை உணர்வையும் உள்ளடக்கிய இளைஞனைத்தான்
நான் தேடிக்கொண்டிருக்கிறேன். நாளை என்னுடைய
அரண்மனைக்கு வா - நல்ல வேலை போட்டுத் தருகிறேன்"
என்று சொன்னதோடு தன்னுடைய முத்திரை மோதிரத்தையும்
கழற்றி அவனிடம் கொடுத்தார்.
அந்த இளைஞனும் அவ்வாறே செய்தான். அக்பர் என்ன
வேலை கொடுத்தார் தெரியுமா? அமைச்சர் பதவி.
அவன் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் அக்பரின் மனதில்
நீங்காத இடத்தைப் பிடித்ததோடு முதல் அமைச்சராகவும்
ஆகிவிட்டான்.
அந்த 'மகேஷ் தாஸ்' என்னும் இளைஞன்தான் பின்நாளில்
பீர்பால் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட மதியூகியாவார்.
தன்னுடைய புத்திசாலித்தனத்தாலும், நகைச்சுவை உணர்வாலும்
நூற்றுக்கணக்கான நிகழ்வுகளை ஏற்படுத்தியவர் அவர்.
தன்னைப் பற்றிய பல கதைகளால் இன்றளவும் பல இந்தியக்
குழந்தைகள், பெரியவர்கள் என்று வயது வித்தியாசமின்றி
அனைவராலும் போற்றப்படுபவர் அவர். அவருடைய
கதைகள் புத்தக வடிவில் ஏராளமாக - தாராளமாகக்
கிடைக்கிறது.
வாங்கிப் படித்து மகிழுங்கள்.
மாணவர் பதிவேடு (Enrolment Register)
என்னைப் பற்றி
Contact vaaththiyar
திருமணப் பொருத்தம்
My Phone Number and whatsApp number
94430 56624
My email ID
எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624
வந்தவர்களின் எண்ணிக்கை
வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாத்தியாரின் அடுத்த புத்தகம்
23.1.08
மீண்டும் வாத்தியார்
Subscribe to:
Post Comments (Atom)
வாங்க ஐயா வாத்தியரய்யா! வரவேற்க வந்தோம் ஐயா!
ReplyDeleteபுள்ளிராஜா
உள்ளேன் ஐயா (நான்தான் முதல் மாணவியா? நம்ம வலைப்பதிவுலக அகராதியில், "மீ த பர்ஸ்ட்டூ"?)
ReplyDeleteசென்ற முறை பாடங்களை எல்லாம் தொடர்ந்து படிக்கவில்லை. லேட்டாவும் வந்தேன். இந்த தடவை ஒழுங்கா படிக்கப் பார்க்கிறேன்.
ReplyDeleteபீர்பாலின் அறிமுகம் தந்ததற்கு நன்றி வாத்தியார் ஐயா.
புள்ளிராஜா என்றால் ஒரு அறுதப் பழசான விளம்பரம்தான் ஞாபகத்திற்கு வருகிறது சாமி! புனைப் பெயரைப் பள்ளிராஜா என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்
ReplyDelete////சேதுக்கரசி said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா (நான்தான் முதல் மாணவியா? நம்ம வலைப்பதிவுலக அகராதியில், "மீ த பர்ஸ்ட்டூ"?///
பர்ஸ்ட்டில் என்ன இருக்கிறது அரசியாரே?
வகுப்பில் நீங்கள் முதல் பெஞ்ச் மாணவி - அதுதான் பெஸ்ட் (சிறப்பு)
உள்ளேன் ஐயா..
ReplyDelete///குமரன் (Kumaran) said...
ReplyDeleteசென்ற முறை பாடங்களை எல்லாம் தொடர்ந்து படிக்கவில்லை. லேட்டாவும் வந்தேன். இந்த தடவை ஒழுங்கா படிக்கப் பார்க்கிறேன்.
பீர்பாலின் அறிமுகம் தந்ததற்கு நன்றி வாத்தியார் ஐயா.///
நன்றியெல்லாம் எதற்கு குமரன்? நீங்கள் இரசித்துப் படித்தாலே போதும்.
உள்ளேன் ஐயா!!!
ReplyDelete"புள்ளிராஜா என்றால் ஒரு அறுதப் பழசான விளம்பரம்தான் ஞாபகத்திற்கு வருகிறது சாமி! புனைப் பெயரைப் பள்ளிராஜா என்று பெயரை மாற்றிக் கொள்ளுங்கள்"
ReplyDeleteஎன்னை வம்பில மாட்டாத சாமி!
பள்ளி ராஜா? இதுக்கு இரட்டை அர்த்தம் இருந்து தொலைக்குதே சாமி!
புள்ளிராஜா
////வெட்டிப்பயல் said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!!///
வெறும் வறுகைப் பதிவேடு மட்டும்தானா? பீர்பால் கதையைப் படிக்கவில்லையா - பாலாஜி?
///பள்ளி ராஜா? இதுக்கு இரட்டை அர்த்தம் இருந்து தொலைக்குதே சாமி!
ReplyDeleteபுள்ளிராஜா///
இரண்டு பெயர்களில் பின்னூட்டம் போடும் போது - இரட்டை அர்த்தத்தில் உங்களை யாருக்கு அடையாளம் தெரியப்போகிறது?
ஆசிரியருக்கு
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
தினமும் ஒருமுறையாவது உங்கள் வகுப்பறையையும் பல்சுவையையும் எட்டிப் பார்ப்பது என் வழக்கம்.
மீண்டும் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
விஜய்
அநியாயத்துக்கு விடுமுறை விட்டுடீங்களே ஐயா?:-)
ReplyDeleteவணக்கம் நண்பரே
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிற்ரொம். மகிழ்ச்சி - வருக வருக என வாழ்த்துகிறேன்.
//ஒரு புத்தகத் தயாரிப்பாலும், வழக்கமாக பத்திரிக்கைகளுக்கு
ReplyDeleteஎழுதிக் கொடுக்கும் பணிகளாலும், மற்றும் எனது
வியாபார அலுவல்களாலும், இரண்டு மாத காலமாக பதிவுகள்
எழுத முடியாமல் போய் விட்டது.//
வருக...வருக...நல்ல வேளை வாத்தியார் மாற்றாலாகி சென்றால் சில மாணவர்கள் கூட பள்ளியை மாற்றிவிடுவார்கள்.
:))
திரும்பவும் வந்ததற்கு மகிழ்ச்சி !
அந்த சரித்திர நிகழ்வு கேள்விபடாதது ..
ReplyDeleteநன்றி, ஐயா! :)
//cheena (சீனா) said...
ReplyDeleteவணக்கம் நண்பரே
நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிற்ரொம். மகிழ்ச்சி - வருக வருக என வாழ்த்துகிறேன்.
//
சீனா சார்,
மதுரையிலிருந்து கோவைக்கு ஒரு ரூபாயில் தொலைபேசலாம்.
:)
///Vijai said...
ReplyDeleteஆசிரியருக்கு
புத்தாண்டு வாழ்த்துக்கள்
தினமும் ஒருமுறையாவது உங்கள் வகுப்பறையையும் பல்சுவையையும் எட்டிப் பார்ப்பது என் வழக்கம்.
மீண்டும் தொடங்கியதற்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள்.
விஜய்////
தொடர்ந்து வாருங்கள் மிஸ்டர் விஜய்
///வடுவூர் குமார் said..
ReplyDeleteஅநியாயத்துக்கு விடுமுறை விட்டுடீங்களே ஐயா?:-)////
எனக்கும் வருத்தம்தான் வடுவூராரே! சூழ்நிலை அப்படி!
////cheena (சீனா) said...
ReplyDeleteவணக்கம் நண்பரே
நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கின்றோம். மகிழ்ச்சி - வருக வருக என வாழ்த்துகிறேன்/////
உங்கள் அன்பிற்கு நன்றி மிஸ்டர் சீனா
/////கோவி.கண்ணன் said...
ReplyDelete//ஒரு புத்தகத் தயாரிப்பாலும், வழக்கமாக பத்திரிக்கைகளுக்கு
எழுதிக் கொடுக்கும் பணிகளாலும், மற்றும் எனது
வியாபார அலுவல்களாலும், இரண்டு மாத காலமாக பதிவுகள்
எழுத முடியாமல் போய் விட்டது.//
வருக...வருக...நல்ல வேளை வாத்தியார் மாற்றாலாகி சென்றால் சில மாணவர்கள் கூட பள்ளியை மாற்றிவிடுவார்கள்.
:))
திரும்பவும் வந்ததற்கு மகிழ்ச்சி !/////
யார் மாறினாலும் கோவியார் மாறமாட்டார்! எனக்கு நம்பிக்கை இருக்கிறது
என்னை மீண்டும் மீண்டும் வலைப்பதிவிற்குள் இழுக்கும் சக்திகளில் அவரும் ஒருவர்
//////தென்றல் said...
ReplyDeleteஅந்த சரித்திர நிகழ்வு கேள்விபடாதது .
நன்றி, ஐயா! :)/////
ஆமாம் பலருக்கும் அது புதிய செய்தியாகத்தான் இருக்கும்!
அக்பரும், பீர்பாலும் முதன் முதலில் சந்தித்தது அப்படித்தான்!
aakaa - என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு கோவியாரே
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறோம் எனத் தான் கூறினேன். வலைப்பூவில் சந்திப்பது பற்றித்தான் குறிப்பே தவிர, மதுரை - கோவை தொலைபேசியில் ஒரு ரூபாய்க்கு பேசமுடியுமா என்பது பற்றி அல்ல. ஒரு ரூபாயில் சந்திக்க முடியுமா என்ன ?
கோவியார் எப்போதும் மாறுபட்ட சிந்தனை உடையவர்
அருமை நண்பரே
ReplyDeleteநகரத்தார் மலர் தைத்திங்கள் இதழில் " "இருளும் ஒளியும்" என்ற தங்களின் கவிதை கண்டேன். ரசித்தேன். அருமை அருமை. எளிதான சொற்கள். எவை எவை எது வரை நிலைக்கும் எனக் கூறியது பாராட்டுதலுக்குறியது. நல் வாழ்த்துகள்.
வாங்க வாத்தியாரைய்யா....
ReplyDeleteபுதிய செய்தியுடன் வந்து கலக்கியிருக்கீங்க....
////cheena (சீனா) said..
ReplyDeleteaakaa - என்ன ஒரு அரிய கண்டுபிடிப்பு கோவியாரே
நீண்ட நாட்களுக்குப் பின் சந்திக்கிறோம் எனத் தான் கூறினேன். வலைப்பூவில் சந்திப்பது பற்றித்தான் குறிப்பே தவிர, மதுரை - கோவை தொலைபேசியில் ஒரு ரூபாய்க்கு பேசமுடியுமா என்பது பற்றி அல்ல. ஒரு ரூபாயில் சந்திக்க முடியுமா என்ன ?
கோவியார் எப்போதும் மாறுபட்ட சிந்தனை உடையவர்////
ஆமாம், அதெலென்ன சந்தேகம்! நீங்கள் சொல்வது சரிதான் நண்பரே!
/////cheena (சீனா) said...
ReplyDeleteஅருமை நண்பரே
நகரத்தார் மலர் தைத்திங்கள் இதழில் " "இருளும் ஒளியும்" என்ற தங்களின் கவிதை கண்டேன். ரசித்தேன். அருமை அருமை. எளிதான சொற்கள். எவை எவை எது வரை நிலைக்கும் எனக் கூறியது பாராட்டுதலுக்குறியது. நல் வாழ்த்துகள்.////
நன்றி மிஸ்டர் சீனா!
////மதுரையம்பதி said...
ReplyDeleteவாங்க வாத்தியாரைய்யா....
புதிய செய்தியுடன் வந்து கலக்கியிருக்கீங்க....////
அடடே, வாங்க மதுரையம்பதி - உங்களைத்தான் தேடிக்கிட்டிருந்தேன்.
மதுரைக்காரர்கள் வந்தாலே ஒரு உற்சாகம்தான். நண்பர்
சீனாவைத் தொடர்ந்து நீங்களும் வந்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி
எங்கே காணோமே என்று பார்த்தேன்.
ReplyDeleteநல்ல சேதி சொன்னீர்கள்.
தாங்கள் இல்லாமல் வகுப்பே வெறிச்சோடிப் போச்சு!
////ஜீவி said...
ReplyDeleteஎங்கே காணோமே என்று பார்த்தேன்.
நல்ல சேதி சொன்னீர்கள்.
தாங்கள் இல்லாமல் வகுப்பே வெறிச்சோடிப் போச்சு!///
வாங்க ஜீவி! வெறிச்சோடிப்போனது உங்களுக்கு மட்டுமா? எனக்கும்தான்!
ஐயா
ReplyDeleteவணக்கம்,
மீண்டும் ஆரம்பிப்பதற்கு நன்றி.
ஆவலுடன் காத்துஇருக்கிறேன்.
கண்ணதாசன் பதிவுகள் பிரமாதம் ஐயா.உங்கள் புத்தகம் குறித்து தகவல்கள் தரவும். நீங்கள் எழுதும் தெளிவுக்கும் உமது நகைச்சுவைக்கும் நான் அடிமை.
வாழ்க வளமுடன்.
நன்றி.
அன்புடன்
ஸ்ரீனிவாசன்.
பெர்த், ஆஸ்திரேலியா.
Dear Aiyya,
ReplyDeleteThat sounds great. Thank you so much and your announcement of restarting the class is a great news. Welcome back
Sara
Colombo
nandri ayya. meendum santhippathil mikka magilchi!
ReplyDelete