-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜோதிடப் பாடம் - பகுதி 47 பாபகர்த்தாரி யோகம்
முதல் வீடு எனப்படும் லக்கினத்தைப் பற்றி ஒரு அடிப்படை
விதியை நீங்கள் அறிதல் அவசியம். மேலே கொடுத்துள்ள
அட்டவணையை பார்த்தீர்கள் என்றால் ஒன்று தெள்ளத்
தெளிவாக விளங்கும். சூரியனுக்கும், சந்திரனுக்கும் மட்டும்
தலா ஒரு வீடுதான்.
மற்ற ஐந்து கிரகங்களுக்கும், அதாவது புதன், சுக்கிரன்,
செவ்வாய், குரு, சனி ஆகிய ஐந்து கிரகங்களுக்கும்
இரண்டு வீடுகள் இருக்கும். பலன்கள் பெரும்பாலும்
அந்த கிரகங்களின் குணங்களையும் உள்ளடக்கியிருக்கும்.
உதாரணமாக மிதுனம், கன்னி ஆகிய லக்கினக்காரர்களுக்குப்
புதன்தான் அதிபதி என்பதால் அவர்கள் இயற்கையாகவே
புத்திசாலிகளாக இருப்பார்கள்.அதேபோல சனி அதிபதியாக
இருக்கும் மகரம், கும்பம் ஆகிய லக்கினத்தைச் சேர்ந்தவர்கள்
கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள்.சுக்கிரன் அதிபதியாக
இருப்பவர்கள்.கலைகளில் ஆர்வமுடையவர்களாகவும், குரு
அதிபதியாக இருப்பவர்கள், மனிதநேயம், தர்மசிந்தனை
மிக்கவர்களாகவும் இருப்பார்கள். இதெல்லாம் பொது விதி!.
1. லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் - அதாவது முன்னும்,
பின்னும் உள்ள வீடுகளில் - சுபக் கிரகங்கள் இருந்தால் ஜாதகன்
ராஜயோகம் உடையவனாக இருப்பான். if Lagna
is hemmed between benefic planets,the native will be fortunate.
2. அதேபோல் லக்கினத்திற்கு இரண்டு பக்கமும் பாவக்
கிரகங்கள் நின்றால் அல்லது இருந்தால் - ஜாதகன்
அதிர்ஷ்டமில்லாதவன். தரித்திரயோகம். வாழ்க்கை
போராட்டங்கள் நிறைந்ததாக இருக்கும் அவன் அல்லது
அவள் எதையும் போராடித்தான் பெற வேண்டும்.
இரண்டு VIP வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால்
எப்படி இருக்கும் என்றும் அல்லது இரண்டு பேட்டை
தாதாக்களின் வீடுகளுக்கு நடுவில் உங்கள் வீடு இருந்தால்
எப்படி இருக்கும் என்றும் கற்பனை செய்து பாருங்கள்,
அப்போது உண்மை உங்களுக்குப் புலப்படும்.
இந்த விதி தலையான விதியாகும்.
இது லக்கினம் என்று மட்டுமில்லை, மற்ற எல்லா பாவங்களுக்
குமே இது பொருந்தும்.
இதே பலன்தான் ஏழாம் வீடு எனப்படும் திருமண வீடாக
இருந்தாலும் சரி, பத்தாம் வீடு எனப்படும் தொழில்/வேலை
வீடாக இருந்தாலும் சரி, நான்காம் வீடு எனப்படும் தாய்,
கல்வி, சுகம் ஆகியவற்றிற்கான வீடாக இருந்தாலும் சரி
அல்லது ஒன்பதாம் வீடு எனப்படும் தந்தை, முன்னோர் சொத்து,
பாக்கியம் ஆகியவை சம்பந்தப்பட்ட வீடாக இருந்தாலும் சரி
பலன் அதற்கு ஏற்றார் போலத்தான் இருக்கும்.
If the said house is surrounded by good planets, the results
of the said house will be good and on the contrary,
if it is surrounded by bad or melefic planets, the results of
the said houses will be bad.
ஜாதகத்தை அலசிப் பார்க்கும் போது இந்த விதியை நினைவில்
கொண்டு அலச வேண்டும்.
அந்த விதியின் பெயர் பாபகர்த்தாரி யோகம்
1.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
பதினொன்றாம் வீட்டிற்கு உரியவன் (11th Lord) ஆகிய மூவரும்
நல்ல நிலைமியில் இருந்தால் ஜாதகன் வியாபாரம் செய்து அல்லது
தொழில் செய்து அல்லது பெரிய நிறுவனத்தில் உயர் வேலையில்
இருந்து நிறையப் பொருள் ஈட்டுவான்.
2.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord)
இருவர் மட்டும் நன்றாக இருந்தால் உத்தியோகம் பார்த்து வசதியாக
வாழ்வான்.
3.லக்கின அதிபதி (1st Lord) பலவீனமாக இருந்தால் - அதாவது
ஆறு எட்டு, பன்னிரெண்டு ஆகிய இடங்களில் மறைந்து விட்டால்
அல்லது பத்தாம் வீட்டிற்கு உரியவன்(10th Lord) அப்படியிருந்தாலும்
ஜாதகனுக்குக் கஷ்ட ஜீவனம்தான். மற்ற கிரகங்கள் வலுவாக இருந்தால்
விதிவிலக்காக சுக ஜீவனமாக இருப்பான்.
4.லக்கின அதிபதி (1st Lord) பத்தாம் வீட்டிற்கு உரியவன்
(10th Lord) இருவரும் பலம் பொருந்தி கேந்திர திரிகோணங்களில்
இருந்தால் ஜாதகன் தான் பிறந்த ஊரில் அல்லது இருக்கும் ஏரியாவில்
பிரபலமாக இருப்பான்.பலருக்கும் உதவி செய்பவனாக இருப்பான்.
ஜோதிடம் என்பது மருந்து. Over dose ஆகிவிடக்கூடாது.
ஆகவே இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். நாளை சந்திப்போம்!
(தொடரும்)

அடடே சிபி அண்ணே!
ReplyDeleteஉங்களை சித்தர் தேடிக்கிட்டிருந்தரே சாமி!
பார்த்தீங்களா?
உள்ளேன் ஐயா :)
ReplyDeleteSwetha
Present Sir! (மன்னிக்கவும், நான் பாடசாலையில் படித்த காலத்தில் இலங்கையில் ஆங்கிலத்தில் சொல்லுவதுதான் வழக்கம்)
ReplyDeleteஐயா,
ReplyDeleteஉள்ளேன். நான் //இயற்கையாகவே
புத்திசாலி// என்று ஆசிரியர் (டைப்) அடித்துச் சொன்னதற்கு நன்றி!!! (நான் கன்யா லக்னம்).
எனக்குத் தெரிந்த ஜாதகருக்கு மகர லக்னம்; மிதுன, சிம்ம லக்னங்களில் ராகுவும் செவ்வாயும் உள்ளார்கள். அவரின் ஏழாவது வீடான கடக லக்னத்தில் யாரும் இல்லை. இதன் பலன் என்ன? அதாவது, லக்னத்தில் யாரும் இல்லை; சுற்றியுள்ள வீடுகளில் வாடகைக்கு அமர்ந்திருக்கிறார்கள் (என்று சொல்லலாமா?) என்றால் ஜாதகருக்கு என்ன பலன்?
கெ.பி.
//ஜோதிடம் என்பது மருந்து. Over dose ஆகிவிடக்கூடாது.// superu
ReplyDeleteவணக்கம் வாத்தியாரே...
ReplyDeleteலக்னாதிபதி மறைதல், விருட்சிகம், மேஷம்,ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திற்கு எப்படி இருக்கும்?நன்றி.
Aiyya,
ReplyDeleteFor Kumba Lagnam it is great success or great failure endru sonneergal. Awaiting your posting on that eargerly.
Sara,
Colombo
உள்ளேன் ஐயா..மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை/புத்தி நல்லது செய்யாது என்பது உண்மையா??
ReplyDeleteகும்ப லக்னத்தார்க்கு மேன்மை அல்லது கஷ்டம் ஒன்றுதான் சாத்தியம் என்பது பற்றிய விளக்கம் அறிய ஆவலாக உள்ளேன்..
ReplyDelete///Sellakrishna- London said...
ReplyDeletePresent Sir! (மன்னிக்கவும், நான் பாடசாலையில் படித்த காலத்தில் இலங்கையில் ஆங்கிலத்தில் சொல்லுவதுதான் வழக்கம்)///
எந்த மொழியில் சொன்னால் என்ன? வகுப்பிற்கு வந்தால் போதும்!
//////கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
ReplyDeleteஉள்ளேன். நான் //இயற்கையாகவே
புத்திசாலி// என்று ஆசிரியர் (டைப்) அடித்துச் சொன்னதற்கு நன்றி!!! (நான் கன்யா லக்னம்).
எனக்குத் தெரிந்த ஜாதகருக்கு மகர லக்னம்; மிதுன, சிம்ம லக்னங்களில் ராகுவும் செவ்வாயும் உள்ளார்கள். அவரின் ஏழாவது வீடான கடக லக்னத்தில் யாரும் இல்லை. இதன் பலன் என்ன? அதாவது, லக்னத்தில் யாரும் இல்லை; சுற்றியுள்ள வீடுகளில் வாடகைக்கு அமர்ந்திருக்கிறார்கள் (என்று சொல்லலாமா?) என்றால் ஜாதகருக்கு என்ன பலன்?
கெ.பி.////
ஒரு வீட்டில் யாரும் இல்லாவிட்டால் என்ன பலன் என்பது அடுத்தடுத்த பாடங்களில் வரும்.தொடர்ந்து படியுங்கள் நண்பரே!
////மதி said...
ReplyDeleteவணக்கம் வாத்தியாரே...
லக்னாதிபதி மறைதல், விருட்சிகம், மேஷம்,ரிஷபம் மற்றும் துலாம் லக்னத்திற்கு எப்படி இருக்கும்?////
லக்கினதிபதி மறைந்தால் அவரால் ஏற்படக்கூடிய பலன்கள் குறைந்து விடும்!
////sara said...
ReplyDeleteAiyya,
For Kumba Lagnam it is great success or great failure endru sonneergal. Awaiting your posting on that eargerly.
Sara,
Colombo/////
கும்ப லக்கின அதிபதியான் சனி ஜாதகத்தில் அதாவது அந்த கும்பலக்கின ஜாதகருக்கு மறைந்தால் தோல்விகள் அதிகமாகும். நல்ல நிலமையில் இருந்தால் அதாவது உச்ச வீட்டில் அல்லது கேந்திர திரிகோண வீடுகளில் இருந்தால் வெற்றிகள் அதிகமாக இருக்கும்
////Thangs said..
ReplyDeleteஉள்ளேன் ஐயா..மேஷ லக்னத்திற்கு சுக்கிர தசை/புத்தி நல்லது செய்யாது என்பது உண்மையா??////
மேஷ லக்கினத்திற்கு சுக்கிரன் 2 & 7ம் வீட்டின் அதிபதி - ஆகவே அவர் ஜாதகத்தில் நல்ல இடத்தில் (placement) இருந்தால் நற்பலன்களைக் கொடுப்பார்
////Thangs said...
ReplyDeleteகும்ப லக்னத்தார்க்கு மேன்மை அல்லது கஷ்டம் ஒன்றுதான் சாத்தியம் என்பது பற்றிய விளக்கம் அறிய ஆவலாக உள்ளேன்..////
கும்ப லக்கின அதிபதியான் சனி ஜாதகத்தில் அதாவது அந்த கும்பலக்கின ஜாதகருக்கு மறைந்தால் தோல்விகள் அதிகமாகும். நல்ல நிலமையில் இருந்தால் அதாவது உச்ச வீட்டில் அல்லது கேந்திர திரிகோண வீடுகளில் இருந்தால் வெற்றிகள் அதிகமாக இருக்கும்
Present Sir. Thank you for the reply. Awaiting your posting today.
ReplyDeleteSara
Colombo
Aiya
ReplyDeleteLagnaathi pathi neecham aaghi, ucha graghathudan sernthaalum problem irukkuma? For example, mithuna lagnam, budhan is at Meenam with Sukkiran
///Lagnaathi pathi neecham aaghi, ucha graghathudan sernthaalum problem irukkuma? For example, mithuna lagnam, budhan is at Meenam with Sukkiran///
ReplyDeleteNo! it is called as Neechabanga Rajayogam. It is good yogam and it will confer good results as per its position in the horoscope
//மேஷ லக்கினத்திற்கு சுக்கிரன் 2 & 7ம் வீட்டின் அதிபதி - ஆகவே அவர் ஜாதகத்தில் நல்ல இடத்தில் (placement) இருந்தால் நற்பலன்களைக் கொடுப்பார்//
ReplyDeleteநன்றி ஐயா..சுக்கிரன் சொந்த வீடான ஏழில் இருந்தாலும் கேந்திராதிபத்ய தோஷத்தால், மேஷ லக்னத்தார்க்கு பாவியாகிறான். அதனால் அவன் தசாபுத்திக் காலங்களில் கெடுதல்களே விளையும் என்று சொன்னார்கள்..இதுவே எனது தலையாய குழப்பம்:-)
This comment has been removed by the author.
ReplyDeleteDear Ayya,
ReplyDeleteam Mesha Laknam, Sukran placed at 9 th position with Moon & Kethu.
Is it good position?
thanks
///SR_Nk said...
ReplyDeleteDear Ayya,
am Mesha Laknam, Sukran placed at 9 th position with Moon & Kethu.
Is it good position?
thanks////
ஒரு வீட்டில் இரண்டிற்கு மேற்பட்ட கிரகம் இருப்பது நல்லதல்ல. அதுவும் தீய கிரகத்துடன் சேர்ந்து இருப்பது நல்லதல்ல!
லக்னாதிபதி நீசமாகி அவன் கோண,திரிகோணங்களில் இருந்தால் பலன் என்ன?
ReplyDeleteSir,
ReplyDeleteIs there any time duration upto which papa kartari yogam will give effect?
Or will this yogam give effect till lifetime?
Just want to know like kal sarp yog gives effect till 33 years.
//////Blogger Sathyanarayanan said...
ReplyDeleteSir,
Is there any time duration upto which papa kartari yogam will give effect?
Or will this yogam give effect till lifetime?
Just want to know like kal sarp yog gives effect till 33 years./////
பாபகர்த்தாரி யோகம் ஜாதகத்தில் உள்ள மற்ற யோகங்களைப் போல ஜாதகனின் ஆயுள் முழுக்க இருக்கும்!
Vanakkam aiyya,
ReplyDeleteEN manivikku delivery time, naan 14th and 17th date choose pani irrukan, but time thaan confusion.
14th - 9 - 10 AM
14th - 9 - 10 PM
17th 9 - 10 AM
Note : till adi 4 graham in same kattam, ithu yadachum affect pannuma.
yethu best timenu parthu sollunga.. mikka udhaviya irrukum.