31.1.20

Astrology: Quiz: புதிர்: மனைவி மக்களைப் பிரிந்து வாடும் அன்பரின் ஜாதகம்!!!!


Astrology: Quiz: புதிர்: மனைவி மக்களைப் பிரிந்து வாடும் அன்பரின் ஜாதகம்!!!!

ஒரு அன்பரின் ஜாதகம். மிருகசீரிஷ நட்சத்திரக்காரர். அவருடைய 42வது வயதில் அவருடைய மனைவி குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிவிட்டார். அதிலிருந்து இவர் தனியாக அவதிப்படுகின்றார். குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் நிலைமையில் இல்லை. ஜாதகப்படி இந்தப் பிரிவினைக்கு என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 2-2-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.1.20

சினிமா: வெற்றிப்பட இயக்குனர்!


சினிமா: வெற்றிப்பட இயக்குனர்!

சுறுசுறுப்பான இயக்குனர் ஸ்ரீதரை  திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது
பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்.

அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத்த படுக்கையாக வீட்டோடு முடங்கிப் போனார்.

கல்யாணப் பரிசு
தேன் நிலவு
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சம் மறப்பதில்லைஉ
காதலிக்க நேரமில்லை
சுமை தாங்கி
வெண்ணிற ஆடை
சிவந்த மண்
உரிமைக்குரல்
இளமை ஊஞ்சலாடுகிறது

எத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்கள் !

ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே திரைப்படங்கள் ஓடியது ஒரு காலம்.

ஆனால் அந்த ஸ்ரீதரின் கடைசிக் காலம் அந்த அஸ்தமன காலத்தில் அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்கு  கண்ணாக  கவனித்துக் கொண்டவர்  தேவசேனா.மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி.

மருத்துவமனையில்  சீரியசான நிலையில் சிகிச்சையில் இருக்கும்போது சிலவேளைகளில் திடீரென யாரையாவது பார்க்க  வேண்டும் என்று விரும்புவாராம் ஸ்ரீதர்.

உடனே  தேவசேனா ஸ்ரீதர் பார்க்க விரும்புகிறவர்களை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார் பார்க்கணும்னு ஆசைப்படறார், கொஞ்சம் வர முடியுமா?” என்று பணிவோடு பரிதாபமாக கேட்பாராம்.

இவர் கேட்கும் இரக்க தொனியில் எவராக இருந்தாலும்  அடுத்த நிமிடமே  ஸ்ரீதரைப் பார்க்க ஓடோடி வந்து  விடுவார்களாம்.

கணவரின் அன்புக்குரிய அந்த நண்பர்களை வரவழைத்து, அவர்களை கணவரோடு பேச வைத்து, கணவரின் கடைசி  நிமிட எதிர்பார்ப்புகளையும்  சிறப்பாகவே பூர்த்தி செய்த புண்ணியவதி ஸ்ரீதரின் மனைவி தேவசேனா.

சில வேளைகளில் ஸ்ரீதர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரைப்  பார்க்க வரும் முக்கியப் பிரமுகர்களிடம் , சிறிது நேரமாவது  பழைய கதைகளை ஸ்ரீதரிடம் பேசச் சொல்வார்களாம்.

ஆனால் ஸ்ரீதர் பேசுவதே என்னவென்று. வந்தவர்களுக்கு புரியாத நிலையிலும் கூட , தேவசேனா கணவர் சொல்வதைப்  புரிந்து கொண்டு அதை  மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வாராம்.

இப்படியாக பதினான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்தபோதும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத தேவசேனா,

கட்டுக்கு அடங்காமல் கண்ணீர் வழிய நின்றது ஒரே ஒரு நாள்தான்.

அது ஸ்ரீதர் இறந்த 2008 , அக்டோபர் 20 இல் மட்டும்தான்.

ஸ்ரீதர் செய்த பூர்வஜென்ம புண்ணிய மெல்லாம் ஒரு பெண்ணாக வடிவெடுத்து , தேவசேனா என்ற பெயரில் அவருக்கு  மனைவியாக வந்து  வாய்த்தது.

ஸ்ரீதரின் "சுமைதாங்கி" பாடலை கொஞ்சம் மாற்றி பாடிக் கொள்கிறேனே !

"மனைவி  என்பவள் தெய்வமாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனைவி  என்பவள் தெய்வமாகலாம்"

ஆக்கம்: John Durai Asir Chelliah
----------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

29.1.20

எதையும் ஒத்திப் போடாதீர்கள்!


எதையும் ஒத்திப் போடாதீர்கள்!

"எதையும் ஒத்திப் போடுதல் சரியா..? "

இன்றைய வேலைகளிருந்து தப்பிக்கும் ஒரே வழி ஒத்திப் போடுவது என்பது
ஒரு செயலை எப்படிச் செய்வது என்பது தெரியாது என்பதால் ஒத்திப் போடுகிறோம்..

நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லாததனால் ஒத்திப் போடுகிறோம்..

நம்மிடையே உள்ள தாழ்வு மனப்பான்மை , காரணமாக ஒத்திப் போடுகிறோம்.. வெற்றி பெற முடியாது என்று எண்ணி ஒத்திப் போடுகிறோம்..

சோம்பேறித்தனத்தின் காரணமாக ஒத்திப் போடுகிறோம். உடலுமும் உள்ளமும் களைப்பாக இருக்கிறது என்பதற்காக ஓத்திப் போடுகிறோம்..

துக்கத்தின் காரணமாக ஓத்திப் போடுகிறோம்.

இப்படிப் பல காரணங்களைத் தேடி ஓத்திப் போடுகிறோம்..

ஒத்திப் போடுவதற்குக் காரணம் தேடும் நாம் நமது வீடு தீப்பற்றிக் கொண்டது என்றால் தீயை அணைப்பதை ஒத்திப் போடுவோமா..?

எந்த முடிவையும் எடுப்பதில்லை என்று முடிவு எடுப்பதை விட எதாவது ஒரு முடிவை எடுக்கலாம்.

அது தோல்வியில் முடிந்தால் கூட முயற்சி எடுத்தோம் என்ற அளவிளலாவது மகிழ்ச்சி அடையலாம்.

சில நேரங்களில் முடிவு எடுக்க முடியாததிற்கு இதுவா அதுவா இப்படிச் செய்யலாமா அல்லது அப்படிச் செய்யலாமா என்ற குழப்பமே காரணம்..

ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதில் ஒரு தயக்கம். முடிவெடுக்கும் தருணத்தில் யோசிப்பது நாம் செயல் படுவதைத் தள்ளிப் போட வைக்கிறது...

எடுத்துக்காட்டாக உங்கள் வாகனம் சுத்தம் செய்தல், குளியல் அறை சுத்தம் செய்தல், கடிதத்திற்கு பதில் போடுதல் என்று நாளும் எதையாவது தள்ளிப் போட்டுக் கிட்டே தான் இருக்கிறோம்.

நாம் செயல்படுவதில் முன்னுரிமை காரணமாக தள்ளிப் போடுவதாகக் கூறிக் கொண்டாலும்,அதற்குப் பிறகு அப்பணியை செய்வதே இல்லை அப்பணியை நிறுத்தியே விடுகிறோம்..

ஆம்.,நண்பர்களே..,

இன்றைய வேலையை இன்றே செய்யுங்கள்.. நாளைய வேலையைக் கூட முடிந்தால் இன்றே செய்யுங்கள்;

ஆனால், இன்று செய்ய வேண்டிய வேலையை, நாளைக்கு என்று ஒருபோதும் ஒத்திப் போடாதீர்கள்.

நாளை என்பது நமதில்லை. நேரம் கிடைப்பது இல்லை  என்பதல்ல..நம் சோம்பேறித்தனம் தான் காரணம்!
ஆக்கம். உடுமலை சு.தண்டபாணி- நன்றி!
------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.1.20

ஹரிஹராசனம் பாடல் உருவான வரலாறு


ஹரிஹராசனம் பாடல் உருவான வரலாறு

சபரிமலையில் ஐயப்ப சாமியை உறங்க வைக்கும் ஹரிவராசனம் விஸ்வமோகனம் எனும் உறக்கப்பாட்டு அத்தாழப்பூஜை முடிந்த பின் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கும்.

இந்த பாடலை இயற்றியவர் தமிழகத்தை சார்ந்த #கம்பங்குடி_ஸ்ரீகுளத்து_ஐயர், இவர் 1920 ஆம் வருடம் இந்த பாடலை இயற்றினார்

இவர் திருநெல்வேலி மாவட்டம் #கல்லிடைகுறிச்சி எனும் ஊரில் பிறந்தவர் ஆவார். கம்பங்குடி சுந்தரம் குளத்து அய்யர் பிரசுரித்த சாஸ்தா ஸ்துதி கதம்பம் என்ற புத்தகத்தில் உள்ளது இந்த ஹரிவராசனம் கீர்த்தனம்

இவர் ஹரிவராசனம் பாடலை ஐயப்பசாமியை தரிசிக்கும்போது எழுதினார்.. ஒவ்வொரு வரிகளும் அய்யப்ப சாமியே அருளியதுபோல இருந்ததாக அவர் கூறியுள்ளார்

இவரது முன்னோர்கள் மிகவும் கஷ்டபட்டாலும் இவர்களது வீட்டின் வழியாக போவோர் வருவோர்க்கும் இல்லாதவர்களுக்கு உணவளித்து வரும் பழக்கத்தை கடைபிடித்து வந்தனர்.

அப்போது  புலிபாலை தேடி வந்த ஐயப்பன் மிகவும் கலைப்புடன் இருந்த அய்யப்பன் அந்த குடும்பத்தைபற்றி கேள்விபட்டு வந்து உணவு கேட்டுள்ளார்.

உனவு ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்த கம்பு தானியத்தை கூழாக செய்து உணவளித்தனர். அதனாலதான் அவர்களது குடும்பம் கம்பங்குடி  என அழைக்கப்பட்டது.

அந்த பூர்விகமான குடும்பத்தில் பிறந்தவர்தான் ஹரிவராசனம் பாடலை இயற்றிய கம்பங்குடி ஐயர்.

இந்தப் பாடல் வழக்கத்திற்கு வருவதற்கு முன், சபரிமலையில் மேல் சாந்தியாக இருந்த செங்ஙன்னூர் கிட்டுமணி திருமேனி (நம்பூதிரி) புல்லாங்குழல் வாசித்து நடை சார்த்துவது நடப்பில் இருந்தது.

1950 களில் சபரிமலை ஐயப்பன் கோவில் தீக்கு இரையாகி பின் தேவபிரசன்னம் பார்க்கப்பட்டு சபரிமலை கோவிலை மீண்டும் 1951புணரமைத்தனர்.

அப்போது கோவில் மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி ஹரிவரசனம் கீர்த்தனம் இரவு அத்தாழப்பூஜையில் அய்யப்பசாமி முன் நின்று ஸ்லோகம் போன்று சொல்வதை மாற்றினார். இது அய்யப்ப சாமியை உறங்கவைக்கும் பாடல்போல உள்ளதாக கருதி

அத்தாழபூஜை (இரவு பூஜை) முடிந்து நடை சாத்தும் பாடலாக மற்றினார்.

நானும் (மேல்சாந்தியாக இருந்த ஈஸ்வரன் நம்பூதிரி) கோவில் ஊழியர்களும் ஹரிவராஸனம் பாட ஆரம்பித்த வழக்கம், ஏசுதாஸின் இனிய குரலில் இந்தப் பாடல் வெளிவந்த பிறகு அந்த இசைத்தட்டை இசைப்பதாக மாறியது. அப்புறம் ஒலிப்பேழை. இந்தப் பாடலை மூன்று விதமான இசையமைப்பில் பாட அறிந்தவன் நான்.”

கே ஜே யேசுதாஸ் 1975 ஆம் ஆண்டு தமிழ் மலையாளம் மொழிகளில் வெளிவந்த சுவாமி அய்யப்பன்"திரைப்படத்தில் முதன் முறையாக இந்தபாடலை பாடினார் அதற்கு தேவராஜன் என்பவர் இசையமைத்தார்.. அந்த மெட்டில் அமைந்த ஹரிவரசனம்  பாடல்தான் இன்று வரை சுமார் 35 வருடங்களாகசபரிமலையில் நடைசாத்தும் பாடலாக ஒலிக்கிறது.
----------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!!!
அன்புடன்
வாத்தியார்
==========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.1.20

புராணக் கதை: எல்லாமே கனவுதான்!!!!


புராணக் கதை: எல்லாமே கனவுதான்!!!!

எல்லாமே_கனவுதான்

ஜனக மகராஜா ஒரு நாள் இரவு தூங்கிக் கொண்டிருந்தார்.

அவருக்கு அப்போது ஒரு கனவு வந்தது.

அதில் அவர் ஒரு பிச்சைகாரனாக மிகவும் சிரமப்படுவது போல் கனவு. கனவில் அவர் மிகவும் துன்பப்பட்டார்.

அப்போது அது கனவு போலவே அவருக்குத் தெரியவில்லை. நிஜம் போலவே இருந்தது.

திடுக்கிட்டு "நாராயணா" என்று அலறினார். கண் விழித்தார்.

கண் விழித்துப் பார்த்தால் எல்லாம் மாறியிருந்தது. சில வினாடி முன்பு பிச்சைக்காரராக இருந்தவர் இப்போது மன்னராக இருந்தார்.

இது தொடர்ந்து பல நாட்களாக நடந்து கொண்டே இருந்தது.

அவர் தினசரி இரவு தூங்கும் போது கனவில் பிச்சைக்காரனாகி படாத பாடுபடுவார்.

பகலில் எழுந்தால் மன்னனாக சகல சம்போகங்களுடன் இருப்பார்.

ஜனகருக்கு ஒரு பெரும் சந்தேகம் உதித்தது.

"நான் மன்னனாக இருந்து பிச்சைக்காரனாக இருப்பது போல் கனவு கண்டேனா?

அல்லது பிச்சைகாரனாக இருந்து இப்போது மன்னராக இருப்பது போல் கனவு காண்கிறேனா?" என சந்தேகம் வந்து விட்டது.

மந்திரி, ராஜகுரு எனப் பலரிடம் கேட்டுப் பார்த்தார். யாருக்கும் பதில் தெரியவில்லை. அந்த சந்தேகம் அவர் மனதை அரித்துக் கொண்டே இருந்தது.

"நான் பிச்சைக்காரனா, மன்னனா" என்று அவர் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்.

பிறகு ஒரு அறிவிப்பை வெளியிட்டார். தமது சந்தேகத்தைத் தீர்த்து வைப்பவர்களுக்கு பெரும் பரிசை அளிப்பதாகச் சொன்னார்.

நாட்டிலிருந்த வித்வான்கள் எல்லாரும் வந்தனர். தூர தேசத்திலிருந்து பண்டிதர்கள், முனிவர்கள், வேத விற்பன்னர்கள் எல்லாரும் வந்தனர். யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

வெளியூரிலிருந்து விதேக நாட்டுக்கு ஒரு முனிவர் வந்தார். அவர் பெயர் அஷ்டாவக்கிர மகரிஷி. அவர் உடல் 8 கோணலாக வளைந்திருக்கும். அது ஏனென்றால் அவர் தம் அன்னையின் வயிற்றிலிருந்த போது கத்துக்குட்டியான அவர் தகப்பனார் வேதத்தை தப்புத் தப்பாக படிப்பாராம்.
அப்போது வயிற்றிலிருந்த மகா ஞானியான குழந்தை அதைக் கேட்கச் சகிக்காமல் உடம்பை திருப்புமாம். அப்படி 8 தடவை திருப்பி உடல் அஷ்ட கோணலாக வளைந்து அஷ்டா வக்கிரன் என்ற பெயரும் ஏற்பட்டது.

ஜனகரின் கேள்வியை அறிந்த அஷ்டாவக்கிர மகரிஷி ஜனகரின் அவைக்குச் சென்றார். பண்டிதர்களின் பெருங்கூட்டம் அவையில் இருந்தது. யாருக்கும் பதில் தெரியவில்லை.

" என் கேள்விக்கு பதில் சொல்ல ஆளே இல்லையா?" என ஜனகர் வேதனையுடன் கேட்டார்.

"நான் சொல்கிறேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அரசவை முழுக்க அவரைத் திரும்பிப் பார்த்தது.

அவரைப் பார்த்த மறு வினாடியே பண்டிதர்கள் சிரிக்கத் துவங்கி விட்டனர்.

குள்ளமாக, கறுப்பாக, எண் கோணலாக வளைந்த உடலை வைத்துக் கொண்டு ஒருவர் சபைக்கு வந்தால் எப்படி இருக்கும்?அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

சிரிப்பொலி அடங்கும் வரை அஷ்டாவக்கிரர் மவுனமாக நின்றார்.

"என் கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ஜனகர் ஆவலுடன் கேட்டார்.

"சொல்கிறேன். அதற்கு முன் சபையில் இருக்கும் தோல் வியாபாரிகளையும், கசாப்புக் கடைகாரர்களையும் வெளியே அனுப்புங்கள்" என்றார் அஷ்டா வக்கிரர்.

"என்ன சொல்கிறீர்கள்? இது பண்டிதர்களின் சபை. இங்கு எந்த கசாப்பு கடைக்காரனும் தோல் வியாபாரியும் இல்லை" என்றார் ஜனகர்.

"இங்கு பண்டிதன் என யாரும் இல்லை. இங்கிருப்போர் அனைவரும் கசாப்புக் கடைக்காரர்களும் தோல் வியபாரிகளும் தான்" என்றார் அஷ்டாவக்கிரர்.

சபை முழுக்க கொதித்தெழுந்தது. "என்ன திமிர் இந்த குரங்கனுக்கு?" என்று சப்தமிட்டார் ராஜகுரு.

"வேதம் கற்ற பண்டிதர்களை இழிவுபடுத்திய இவனை கழுவிலேற்றுங்கள்" என்று அனைவரும் கூச்சலிட்டனர்.

"ஏன் அப்படி சொன்னீர்கள்?" என்று பரிவுடன் கேட்டார் ஜனகர்.

"கற்றறிந்த பண்டிதர்களை கசாப்புக் கடைக்காரன் என்று சொல்லலாமா?" என்று கேட்டார்.

உரத்த குரலில் அஷ்டாவக்கிரர் பதில் சொன்னார்.

"ஓ மன்னா! உன் கேள்விக்கு பதில் நான் சொல்கிறேன் என்று சொன்னேன். சபை முழுக்க என்னைப் பார்த்துச் சிரித்தது. ஏன் சிரித்தார்கள்? என் குறைவான ஞானத்தைக் கண்டு சிரித்தார்களா?நான் தவறாகச் சொன்ன விளக்கத்தைக் கண்டு சிரித்தார்களா? இல்லை. இது எதைக் கண்டும் அவர்கள் சிரிக்கவில்லை. என் உருவத்தைப் பார்த்து சிரித்தார்கள். என் தோலின் நிறத்தை வைத்து, என் உடலின் உருவத்தை வைத்து இவர்கள் என்னை, என் அறிவை மதிப்பிட்டார்கள். என் தோலை வைத்து என் மதிப்பை நிர்ணயிக்கும் இவர்கள் தோல் வியாபாரிகள் தானே?

தோல் வியாபாரி தான் தோலின் நிறத்தை வைத்து ஆட்டுத் தோலுக்கு விலை போடுவான். கசாப்புக் கடைக்காரன் தான் ஆட்டின் உருவத்தை வைத்து ஆட்டுக்கு மதிப்பு போடுவான். இவர்களும் என்னை அப்படித் தான் மதிப்பிட்டார்கள். அதனால் தான் இவர்களை தோல் வியாபாரி என்றேன்.

பண்டிதர்கள் இருக்க வேண்டிய சபையில் தோல் வியாபாரிகளுக்கு என்ன வேலை?அதனால் தான் இவர்களை வெளியே போகச் சொன்னேன்" என்றார் அஷ்டாவக்கிரர்.

அவமானமடைந்த பண்டிதர்கள் தலை குனிந்து சபையை விட்டு வெளியேறினார்கள்.

வந்தவர் மகா ஞானி என ஜனகரும் அறிந்தார். மகா பணிவுடன் அவர் காலடியில் அமர்ந்து தன் சந்தேகத்துக்கு விடை கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஜனகருக்கு அஷ்டாவக்கிரர் சொன்ன அந்த உபதேசம் அஷ்டாவக்கிர கீதை என்ற பெயருடன் விளங்குகிறது.

அந்த உபதேசத்தை பெற்ற ஜனகர் அன்று முதல் மகா ஞானியாகி விட்டார். ஜனகரின் சந்தேகம் தீர்த்த மகரிஷியின் விளக்கம் என்ன?

தூங்கினப்போ கண்டதும் கனவு தான். இப்போ நீ வாழும் வாழ்வும் கனவுதான். 
உன்னோட ராஜ வாழ்வும், பிச்சைக்கார வாழ்வும் ரெண்டும் உண்மையில்லை. 

ராஜாவா இருக்கறப்ப சந்தோஷப்படாதே. தூங்கறப்ப அந்த சந்தோஷம் போயிடும்.    பிச்சைக்காரனா இருக்கறப்ப வருத்தப்படாதே. முழிச்சா அந்த வருத்தம் மறைஞ்சுடும். ரெண்டு நிலையிலும் ஒரே மாதிரி இருக்கக் கற்றுக்கொள்” என்றார்.
--------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.1.20

Astrology: Quiz: புதிர்: 24-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 24-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு இளைஞனின் ஜாதகத்தைக் கொடுத்து, ”சித்திரை நட்சத்திரக்காரர் (அதாவது  செவ்வாயின் நட்சத்திரக்காரர்) அந்த இளைஞன் அவனுடைய 20வது வயதில் ஒரு விபத்தில் சிக்கி முகத்தில் பலமான அடிபட்டுவிட்டது. ஜாதகப்படி அந்த விபத்திற்கான காரணம் என்ன? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: விருச்சிக லக்கின ஜாதகம். 12ம் வீட்டில் ராகு. நடப்பு ராகு மகா திசை.
6ம் வீட்டுக்காரனான செவ்வாயின் அந்தரத்தில் விபத்து நடந்துள்ளது.
சுக்கிர புத்தி அப்போது (sub period). துலா ராசியில் ராகு. அதுவும் அவர் செவ்வாயின் நட்சத்திர சாரத்தில் உள்ளார். அதனால் கடுகையான
விபத்தும் காயங்களும் ஏற்பட்டுள்ளது.

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 8 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும்  எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 31-1-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger Unknown said...
கேதுவே விபத்துக்கு காரணம் ராகு திசை கேது புத்தியில் விபத்து நடந்து இருக்க வேணடும்.
M.Santhi
Friday, January 24, 2020 9:30:00 AM
--------------------------------------------------
1 A
Blogger M Santhi said...
கேதுவே விபத்துக்கு காரணம் ராகு திசை கேது புத்தியில் விபத்து நடந்து இருக்க வேணடும்.
M.Santhi
Friday, January 24, 2020 9:31:00 AM
-------------------------------------------
2
Blogger Unknown said...
6 மற்றும் 8 ஆம் இடத்து அதிபதிகள் சனியின் பார்வையில்.ராகு 1,6க்குடைய செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில்.
Friday, January 24, 2020 12:27:00 PM
----------------------------------------------
3
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 9 பிப்ரவரி 1977 அன்று பிறந்தவர்.
லக்கினாதிபதி செவ்வாய் சூரியனுடன் , எட்டம் அதிபதி புதனுடன் கூட்டணி.சனி நேராக நின்று செவ்வாயுக்குப் பார்வை.பகையாளிகளான, செவ்வாய் சனி , சூரியன் சனி எதிருக்கு எதிர் நின்றது, ராகுதசாவில் இந்த கண்டம் 20 வயதில் ஏற்பட்டது.
Friday, January 24, 2020 7:32:00 PM
-------------------------------------------
4
Blogger Ram Venkat said...
வணக்கம்.
விருச்சிக லக்கினம், கன்னி ராசி ஜாதகர்.
அவரின் 20வது வயதில் ஒரு விபத்தில் சிக்கி முகத்தில் பலமான அடிபட்டுவிட்டது. ஜாதகப்படி அந்த விபத்திற்கான காரணம் என்ன?
1) லக்கினாதிபதியும், ஆறாமிட அதிபதியுமான‌ செவ்வாய், மூன்றாமிடமான மகரத்தில் உச்சமடைந்து அமர்ந்துள்ளார்.
2) செவ்வாயுடன் அட்டமாதிபதி புதன் மற்றும் சூரியன் சேர்ந்து அமர்ந்துள்ளனர்.அவரின் மேல் கடக ராசியில் உள்ள
சனியின் நேர் பார்வை உள்ளது.
3) பொதுவாகவே சனி, செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தாலும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும், 8ம் வீட்டதிபதியுடன் சேர்ந்திருந்தாலும் எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு உடல் உறுப்புகளில் பாதிப்பு உண்டாகிறது.
4)ஜாதகரின் 20ம் வயதில் கோச்சார சனி+கேது மீன ராசியிலும், ராகு+செவ்வாய் கன்னி ராசியிலும் வந்த போது, (சந்திரன்
முகத்திற்கு காரகன்) விபத்து நேர்ந்து முகத்தில் அடிபட்டது.ஜாதகத்தில் சனியின் விஷேச பார்வை சந்திரன் மேலுள்ளதை கவனிக்கவும்.
Friday, January 24, 2020 9:18:00 PM
--------------------------------------------------------
5
Blogger அடியேன் யுவராஜ் said...
ஐயா வணக்கம் !
*லக்னாதிபதியான செவ்வாய் உச்சம் பெற்றுள்ளார் சிறப்பு மேலும் அவர் 10ஆம் அதிசயமான சூரியனுடன் சாரப்பரிவர்த்தனை பெற்றுள்ளார்.
*10ஆம் அதிபதியான சூரியன் பகையில் சேர்க்கை பெற்றுள்ளார்.
*8ஆம் அதிபதியான புதன் லக்னாதிபதியுடன் சேர்க்கை.
*லக்னத்திற்கு 12 அமர்ந்த ராகு திசை நடத்தியுள்ளார் அவருக்கு சாரம் கொடுத்த சார நாதன் உச்சம் பெற்றுள்ளார்
மேலும் அவருக்கு ஸ்தானம் கொடுத்த ஸ்தானநாதன் உச்சம் பெற்றுள்ளார்.
*எனவே 12ல் அமர்ந்த ராகு வலுவான நிலையில் திசை நடத்தியுள்ளார்.
*செவ்வாய்,புதன்,சூரியன் ஆகியோர்களுக்கு ஸ்தானம் கொடுத்த ஸ்தானநாதன் சனி தன்வீட்டிற்கு 7ல் பகை பெற்று அமர்ந்து 7ஆம்
பார்வையாக லக்னாதிபதியை பார்க்கிறார்.
*மேலும் லக்னத்திற்கு முன்னும் பின்னும் அசுப கிரகம் அமர்ந்து லக்னம் பாபகர்த்தாரி தோஷத்தில் சிக்கியுள்ளது.
இப்படிக்கு அடியேன் யுவராஜ்
Saturday, January 25, 2020 8:29:00 AM
------------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி செவ்வாய் மூன்றில் உச்சம் பெற்றுள்ளார் ,அவருடன்
எட்டாம் அதிபதி புதனும் உள்ளார்
2 .விரயத்தில் அமர்ந்த ராகு திசை கேது புத்தியில் (இருபதாவது வயதில் )
கேது லக்கினத்தை தன பார்வையில் வைத்துள்ளார் விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது
நன்றி தங்களின் பதிலை ஆவலுடன்
Saturday, January 25, 2020 8:40:00 AM
----------------------------------------------
7
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கங்கள்!
ஜாதகர் பிப்ரவரி 9ம் தேதி 1977 ல் பிறந்தவர்.விருச்சிக லக்கினமாகி லக்கினாதிபதி செவ்வாய் 8மாதி புதனுடன் சேர்ந்து
3ல் அமர்வு.லக்கினாதி உச்சம்.சூரியனும் கூட்டாக அம்ர்ந்து 3ம்பதி
சனியின் பார்வை வாங்கியுள்ளது குற்றம்.12ல் அமர்ந்த
ராகு விரையாதிபதி சுக்கிரனின் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி
செவ்வாய் நட்சத்திரத்தில் அமர்ந்து தசை நடத்தியதால்
சுக்கிரன் புத்தி புதன் அந்தரத்தில் விபத்தை அரங்கேற்றம் நடத்தியுள்ளார்.
அன்புடன்
-பொன்னுசாமி
Saturday, January 25, 2020 9:01:00 AM
--------------------------------------------------
8
Blogger Sridhar said...
லக்னாதிபதி சனியின் வீட்டில், அவரது நேரடி பார்வையில்
அஷ்டமாதிபதி சனியின் நேரடி பார்வையில்
லக்னாதிபதி செவ்வாய், ராகு மற்றும் மாந்தியுடன் தொடர்பு
இந்த அமைப்புகளால் விபத்து
Sunday, January 26, 2020 1:23:00 AM
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.1.20

Astrology: Quiz: புதிர்: இளம் வயதில் விபத்தில் சிக்கிய இளைஞனின் ஜாதகம்!!!!


Astrology: Quiz: புதிர்: இளம் வயதில் விபத்தில் சிக்கிய இளைஞனின் ஜாதகம்!!!!

ஒரு இளைஞனின் ஜாதகம் கீழே உள்ளது. சித்திரை நட்சத்திரக்காரர் (அதாவது செவ்வாயின் நட்சத்திரக்காரர்) அந்த இளைஞன் அவனுடைய 20வது வயதில் ஒரு விபத்தில் சிக்கி முகத்தில் பலமான அடிபட்டுவிட்டது. ஜாதகப்படி அந்த விபத்திற்கான காரணம் என்ன?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 26-1-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


=================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.1.20

சினிமா: வஞ்சத்தில் வீழ்ந்த கர்ணன்!!


சினிமா: வஞ்சத்தில் வீழ்ந்த கர்ணன்!!

செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தாயாடா கர்ணா; "

பாடல் முழுக்க மரண அவஸ்தையில் கிடக்கும் கர்ணன். உண்மையிலே நடிகர் திலகமும் அதை அனுபவித்தார். பாடல் படமாக்கப்பட்ட இடம் ராஜஸ்தான் பாலைவனம்

கொதிக்கும் சூட்டிலே அனைத்து ஆடை, ஆபரணங்கள், போர் கவசங்கள் அணிந்துக் கொண்டு கிழே கிடப்பார்

கர்ணன் மரண தருவாயில் தண்ணீர் தாகத்திற்கு தவிப்பதை போல் நடிகர் திலகம் அந்த பாலைவன வெயிலில் உண்மையில் தாகத்தினால் தவித்தார்√

அது மட்டுமல்ல அம்பு துளைத்து வரும் ரத்தத்திற்காக சாஸ்-ஐ அவர் மேல் ஊற்றி விட்டார்களாம். அந்த இனிப்பான சாஸ்-ற்காக ஈக்கள் அவர் உடலை மொய்க்க ஆரம்பித்து விட்டனவாம்.

சுட்டெரிக்கும் வெயில், உடலை மொய்க்கும் ஈக்கள் இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அந்த பாடல் படமாக்கப்பட்டு முடிக்கும் வரை அப்படியே இருந்தாராம்.

என்ன ஒரு மனிதன்! என்ன ஒரு தொழில் அர்ப்பணிப்பு! அதனால்தான் கிட்டத் தட்ட 55 வருடங்கள் ஆன பிறகும் இன்றும் அந்த காட்சி நம் கண்ணில் நீரை வரவழைக்கின்றது.✍🏼🌹
---------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.1.20

வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பது எப்படி?


வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிப்பது எப்படி?

இது தான் வாழ்க்கை ✅
👉🏾 தனது குடும்பம் என்ற ஒரு பத்து பேர்,
👉🏾 தனது நண்பனும், பகைவனும் என்ற பத்து பேர்,
👉🏾 தனது தொழிலில் ஒரு பத்து பேர்,         
👉🏾 தனது வீதியில் ஒரு பத்து பேர், 
👉🏾 தனது ஜாதியில் ஒரு அறுபது பேர்..!!
👉🏾இந்த நூறு பேரின் நடுவில்
😇 தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதும்,.      👩❤💋👩 பாசமாக,        🐕 நட்பாக,            💘அன்பாக,         😠 வீரனாக,         😎 நல்லவனாக  காட்டிக் கொள்வதுமே மனித வாழ்வின் குறிக்கோள் என்று இந்த  சமுதாயம் மனிதர்களுக்கு போதிக்கிறது.

எல்லாவற்றையும் அவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்து  👉🏾 அதை விட ஒரு படியேனும் அதிகமாக இருக்க வேண்டும் அப்போது தான் மதிப்பு என்று போலியான வாழ்க்கை வாழ கட்டாயப்படுத்துகிறது.

👉🏾 அவன் அப்படி, 👉🏾 இவன் இப்படி என்று பிறரை விமர்சனம் செய்யச் சொல்கிறது. 🎟🎫பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்ததும் 🤓 பிறரை ஏளனமாக, கேவலமாக நினைக்கச் சொல்கிறது.1⃣0⃣0⃣
இந்த நூறு பேரின் நடுவில் ஏற்படும் அவமானமும், கோபமும், கௌரவமும் மட்டுமே ஒருவனைப் பாதிக்கின்றன. 👉🏾 இதற்காக தன்னுடைய அத்தனை ஆசாபாசங்களையும் அடக்கி வைத்து, மனித ஜடமாக  வாழும் பலருக்கு இந்த பூமிப் பந்து எழுநூறு கோடி மக்களால் ஆனது என்பது தெரிவதில்லை.

👉🏾 என்னுடைய தாத்தாவின் தாத்தா எப்படி இருந்தார் என்பது எனக்குத் தெரியாது!
👉🏾 எப்படி வாழ்ந்தார் என்பது எனக்குத் தெரியாது!!
👉🏾 அவர் நல்லவரா கெட்டவரா எனக்குத் தெரியாது!!
👉🏾 அவர் பெயர் கூட எங்கள் தெருவில் பலருக்குத் தெரியாது,
👉🏾 எங்கள் ஊரில் யாருக்கும்  தெரியாது!!
👉🏾 இதே நிலை எனக்கும் ஒரு நாள் வரும்!
👉🏾 நான் இந்த பூமியில் வாழ்ந்ததற்கான அடையாளம் அத்தனையும் கால ஓட்டத்தில் மறையும்!!
ஆக எதற்காக இந்த நூறு பேரின் அங்கீகாரக்தை நான் கண்டு கொள்ள வேண்டும் ????
👉🏾 யார் இவர்கள் ????
என்னுடைய வாழ்க்கையில் யாரெல்லாம் வர வேண்டும், வரக்கூடாது என்பதை தீர்மானிக்க இவர்கள் யார் ????
✍ நான் இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போவதில்லை!
✅அதிகபட்சம் இன்னும் சில ஆண்டுகள்!
👉🏾 அதுவும் வெகு தொலைவில் இல்லை!

❌சர்வமும் ஒருநாள் அழியும்❌ 
👉🏾 👌🏽✅😇🙏🏽💘மனித வாழ்க்கை அற்புதமானது. அழகானது! 🙏🏽🙏🏽🙏🏽
தத்தமது வாழ்க்கையை யாரும் போலியாக வீணடித்து விடாதீர்கள்🙏🏽
✅ வாழ்க்கை ஒரே ஒரு முறைதான்!
தோற்றால் பரவாயில்லை, ஆனால் பங்கெடுக்காமலேயே அழிந்து விடாதீர்கள்.
நம் தாத்தாவின் தாத்தாவை நாம் பார்த்ததில்லை. அதே போல் நம் பேரனின் பேரனை நாம் பார்க்க இருக்கப் போவதில்லை. இது தான் வாழ்க்கை.
👉🏾 பிறரை வஞ்சிக்காமல் தொந்தரவு செய்யாமல் எவ்வளவு இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாய் வாழ்ந்து விட்டுச் செல்லுங்கள் .
--------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!
அன்புடன்
வாத்தியார்
============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.1.20

இறைவனைக் காண என்ன வேண்டும்?


இறைவனைக் காண என்ன வேண்டும்?

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது.....!!

பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.....!!

கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..

எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ......

அதேபோல..

ராணியாருக்கும்..
மந்திரி மற்றும்
அரச குடும்பத்தினருக்கும்...
நாட்டின் மக்கள்
அனைவருக்கும்
நீங்கள் காட்சி தரவேண்டும்..
என்று ஆவலான வரத்தை கேட்டான்.

இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும்,  மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்.....!!

"அதோ  தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை ,
அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..காட்சி தருகின்றேன்" என்று சொல்லி மறைந்தார்.....!

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு
அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. மலையை நோக்கி புறப்பட்டான்....!

அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்....!

சிறிது உயரம் சென்றவுடன்..

அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன....!

உடனே,  மக்களில் நிறைய பேர்.. செம்பை மடியில் கட்டிக்கொண்டு.. சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும்ஆரம்பித்தனர்.

மன்னன் "அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது.....!!  இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்" என்று உரக்க சப்தமிட்டான்.....!

அதற்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை....!!  கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.....!!

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் ,

அங்கே வெள்ளியிலான பாறைகளும்.....வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன....!!

அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று வெள்ளி துண்டுகளை மூட்டை கட்ட ஆரம்பித்தனர்....!!

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்....!!

"விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது....!!  அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன" என்று உரைத்தான்.

மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட,  வெள்ளிக் கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே ,
மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்....!!

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.

இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.....!!

ராஜகுடும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்றுவிட......மீதி இருந்தவர்கள் ராணியும்..மந்திரியும், தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே.....!

சரி வாருங்கள்.. செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு , முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்.. ....!

அங்கே தென்பட்டது வைரமலை....!!  அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட....

மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.....!!!

கடவுள் மன்னன் முன் தோன்றி  "எங்கே உன் மக்கள் ?" என்றார்.....!!

மன்னன் தலை குனிந்தவனாக. "அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே......!! என்னை மன்னியுங்கள்" என்றான் மன்னன்.....!!

அதற்கு கடவுள் , "நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன்
என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்.

அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்.....!! உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு,  உடல்..செல்வம்..சொத்து... என்ற, செம்பு.. வெள்ளி..தங்கம்..வைரம்..போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்....!  இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே ....எம்மை அடைவர்" ....!! என்று சொல்லி விண்ணில் மறைந்தார் ....கடவுள்....!!🙏

இறைவனைக் காண இச்சைகளில்லாத மனம் வேண்டும்!!!!
========================================================
படித்ததில் உணர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்
=======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.1.20

மலரும் நினைவுகள்: எங்க வீட்டு ரேடியோ !


மலரும் நினைவுகள்: எங்க வீட்டு ரேடியோ ...! 

எங்கள் வீட்டில் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. அப்போதெல்லாம் ஊரெங்கும் ரெண்டே ரேடியோ பிராண்ட்தான். ஒன்று, குழந்தை
வாயில் கைவைத்தபடியிருக்கும் விளம்பரத்திற்கு சொந்தமான
மர்ஃபி, மற்றொன்று பிலிப்ஸ். நம் வீட்டு குழந்தைக்கு
சட்டை தைப்பது போல, ரேடியோவுக்கு அழகாக உறை தைத்து போட்டிருப்போம்.

அதையும் மீறி பாச்சை, பல்லி ஏதாவது உள்ளே போய், ரேடியோவை
மக்கர் பண்ண வைத்துவிடும். அதை எடுத்துக்கொண்டு ரிப்பேர் பண்ண அப்பாவுடன் செல்வேன்.

ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு, என்னை அங்கேயே உட்கார்ந்து கையோடு வேலையை முடித்து வாங்கி வர சொல்லிவிடுவார் அப்பா. பிறகு வந்து வாங்கிக்கலாம் என்றால்,

“இல்லைடா, நம்ம ரேடியோவோட ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ கழட்டிடுவாங்க, பக்கத்துல இருந்து பார்த்துக்க”, என்பார். நானும்
மெக்கானிக் அண்ணனையே முறைத்துக் கொண்டிருப்பேன்.

லேந்தர், பெட்ரமாக்ஸ், டார்ச் லைட் என எல்லாமே அவரிடம்
ரிப்பேருக்கு வரும்.

மாலைவரை காத்திருந்து, அவர் சரி செய்து கொடுத்ததும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு  வருவேன்.

எங்க ரேடியோவுக்கு மூன்று பேட்டரி போடவேண்டும். ஐந்து பேட்டரி
ரேடியோ வைத்திருப்பது பெருமையாக பார்க்கப்பட்ட காலம் அது.
பேட்டரி தீர்ந்து போகப்போகிறது என்றாலே, ரேடியோ இழுக்க ஆரம்பித்துவிடும். தினமும் பேட்டரியை கழற்றி வெயிலில் காய
வைத்து சார்ஜ் ஏற்றுவோம்.

கடைசியாக வெயிலில் அல்ல, சூரியனுக்கு எடுத்துப்போய் காயவைத்தாலும் சார்ஜ் ஏறாது என உறுதியான பிறகுதான் புது பேட்டரி வாங்கவே கிளம்புவார் அப்பா.

பேட்டரி தீர்ந்துபோய் ரேடியோ கேட்காமல் இருக்கும்போதெல்லாம்,
கை உடைந்தது  போலிருக்கும்.

இதோடு மழை வந்துவிட்டால், இடி விழுந்துவிடுமென பயமுறுத்தி
ரேடியோ போடவே விடமாட்டார்கள். ஒவ்வொரு ஆயுதபூஜைக்கும்
சந்தனம், குங்குமம் வைத்ததன் சுவடில்லாத ரேடியோவை ஊர்ப்பக்கம் பார்ப்பதே கடினம். ஒரு ரேடியோ இருந்தால் அந்த வீட்டுக்கு கடிகாரமே தேவைப்படாது. ரேடியோவில் ஓடும் நிகழ்ச்சிகளை வைத்தே
நேரத்தை கணக்கிட்டுவிடுவோம்.

ஆமாம். அதெல்லாம் மலரும் நினைவுகள்!
இது போல ஒவ்வொருவருக்கும் நினைவுகள் இருக்கும்.
உங்களுக்கும் இருக்கும்!!!
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.1.20

Astrology: Quiz: புதிர்: 17-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 17-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தை கொடுத்து, "அன்பரின் தாய் மொழி தமிழ்தான், ஆனால் அவர் தெலுங்கு மொழியை நன்றாகப் படித்துக் கற்றுத் தேர்ந்து. தெலுங்கைக் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி பெரும் பெயரும் பெற்றார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு
மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: கடக லக்கின ஜாதகம். 10ம் வீட்டில் வர்கோத்தம ராகு. 10ம்
வீட்டுக்காரன் செவ்வாய் உச்சம் பெற்று 7ல்  அமர்ந்ததோடு 10ம் வீடான மேஷத்தையும் தன்னுடைய விஷேச பார்வையில் வைத்திருக்கிறான். மேலும் 10ம் வீட்டுக்காரன் செவ்வாய் லக்கினகாரகன் சந்திரனுடன் சேர்ந்திருப்பது பிற மொழி ஆளுமையை வழங்கியுள்ளான். அத்துடன்
குரு பகவானின் பார்வையும் 10ம் வீட்டின் மேல். இந்த அமைப்புக்கள்
எல்லாம் சேர்ந்து ஜாதகனுக்கு பிற மொழி ஆளுமையைக்
கொடுத்தன. வாத்தியார் வேலையையும் கொடுத்தன!!!!

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 7 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை
வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 24-12-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger அடியேன் யுவராஜ் said...
ஐயா வணக்கம்!
1.லக்னாதிபதி சந்திரன் 7ல் செவ்வாய்யுடன் சேர்க்கை,செவ்வாய் 4ஆம் பார்வையாக தன் வீடான 10ஆம் இடத்தை பார்க்கிறார்.
2.உயர் கல்விக்கு 4ஆம் இடம் ஆகும், அதில் ஆட்சி பெற்ற சுக்கிரனுடன் கேது சேர்க்கை,கேது வர்க்கோத்தமம்.உயர் கல்வி உண்டு.
3.வித்தைக்காரகன் கல்விக்காரகன் புதன் நவாம்சத்தில் உச்சம்.
4.ராகு/கேது வேற்று மொழி ஆகும்
5.ராகு/கேது வர்க்கோத்தமம்
6.வாக்கு ஸ்தானமான 2ஆம் இடத்தில் 6&9ஆம் அதிபதி குரு கேது சாரம் பெற்றுள்ளார். குரு நவாம்சத்தில் உச்சம் பெற்றுள்ளார். அவர் 9ஆம் பார்வையாக 10ஆம் இடத்தை பார்ப்பதால் ஆசிரியர் பணி.குரு ஆசிரியர் .வேற்று மொழிக்கு இதுவும் காரணம்
7.தொழில் காரகர் ஆன சனி நவாம்சத்தில் உச்சம் சுய சாரம் பெற்றுள்ளார்.
8.ராகு திசையில் இவை சாத்தியம் ஆனது. ராகு 10இடத்தில் அவர் வர்க்கோத்தமம். அந்த ராகு கேது சாரம் பெற்றுள்ளார். எனவே கேது 4ஆம் இடத்தில் உயர் கல்வி கேது வர்க்கோத்தமம் .
இப்படிக்கு
அடியேன் யுவராஜ்
Friday, January 17, 2020 2:00:00 PM
-------------------------------------------------------
2
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்கினாதிபதி சந்திரன் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியடன் அமர்ந்து லக்கினத்தை தன பார்வையில் வைத்துள்ளார்
2 .கல்வி விதைக்கு அதிபதியான புதன் சூரியனுடன் பூர்வபுண்ணியம்.நுண்ணரவிக்கான ஐந்தாம் இடத்தில
3 .எட்டு ஒன்பதிற்கு அதிபதியான சனி ஒன்பதில் அமர்ந்ததால் தன் தாய்மொழியை விட்டு வேறு மொழியில் புலமை பெற்றுள்ளார்
தாள்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Friday, January 17, 2020 6:03:00 PM
--------------------------------------------
3
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
கடக இலக்கினம், மகரம் இராசி ஜாதகம்.
இரண்டாமிடத்தில் உள்ள குரு பகவானும், ஐந்தாமிடத்தில் சூரியனுடன் சேர்ந்த புதனும் தெலுங்கு மொழியில் புலமை பெற வைத்தனர். மேலும் குருவும் புதனும் அம்சத்தில் உச்சம் பெற்று பலம் பெற்றுள்ளனர்.
தொழில் ஸ்தானாதிபதி செவ்வாய் உச்சமும் சந்திரன் சேர்ந்து
சந்திரமங்கள யோகம் பெற்று, தெலுங்கைக் கற்பிக்கும் ஆசிரியர்
பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி பெரும் பெயரும் பெற்றார். ஜாதகப்படி இதுவே காரணம் ஆகும்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, January 18, 2020 10:09:00 AM
------------------------------------------------------
4
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கங்கள்!
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகர் 5 டிசம்பர் 1967ம் ஆண்டு இரவு 10-30 மணியளவில் கடக லக்கினத்தில் பிறந்தவர்.லக்கினாதிபதி வளர்பிறை அதிலும் யோகசந்திரன் 7மிடத்தில் அமர்ந்து லக்கினத்தை பார்ப்பது மிக
சிறப்பு.அதிலும் யோக காரகன் செவ்வாயுடன் இணைந்து 7மிடத்தில்
சந்திர மங்கள யோகம் ஏற்ப்பட்டுள்ளது.சந்திரன் தன்
சொந்த வீட்டையும் செவ்வாய் தன் சொந்தவீடான 10மிட மேஷத்தையும் பார்த்தது சிறப்பு.1,4,7,10 கேந்திரங்கள் பலம் பெற்றுள்ளன.
குடும்பம் வாக்கு கல்வி ஸ்தானமான 2ம் வீட்டில் பாக்கியாதிபதி குரு சிம்மவீட்டில் அமர்ந்து விசேஷ பலம் பெற்று கல்வி
ஞானம் அருளியுள்ளார். உயர்கல்வி ஸ்தானமான 4ல் அதிபதி சுக்கிரன் ஞானகாரகன் கேதுவுடன் இணைந்து அந்நிய மொழி, அந்நிய தேசம் வாசம் குறிக்கும் ஆகுவின் பார்வை பெற்றுள்ளதால் அந்நிய மொழியில் புலமை. ராகுவிற்க்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பெற்று ராகு அமர்ந்த தன் வீட்டை தானே பார்ப்பதால் அந்நியத்தில் திறமை.
அன்புடன்
-பொன்னுசாமி.
Saturday, January 18, 2020 10:39:00 AM
------------------------------------------------------------
5
Blogger Ram Venkat said...
வணக்கம்.
கடக லக்கினம், மகர ராசி ஜாதகர்.
அவரின் தாய் மொழி தமிழானாலும், தெலுங்கு மொழியில் தேர்ச்சி பெற்று ஆசிரியராக சிறப்புறப் பணியாற்றி பேரும் புகழுமடைய ஜாதகப்படி என்ன காரணம்?
1) இரண்டாமிடமான வாக்கு ஸ்தானத்தில் குரு பகவான் வலிமையுடன் (சுய பரல்7) அமர்ந்துள்ளார். அவரின் 9ம் தனிப்பார்வை 10மிடத்திலும், அதில் அமர்ந்துள்ள ராகுவின் மேலும் உள்ளது.
2) கர்ம ஸ்தானாதிபதியும், யோகாதிபதியுமான செவ்வாய் உச்சமடைந்து, லக்கினாதிபதி சந்திரனுடன் சேர்ந்து 7மிடமான மகர ராசியில் அமர்ந்துள்ளார். அவர் தன் 4ம் தனிப்பார்வையினால் 10மிடத்தையும், 8ம் தனிப்பார்வையினால்
2மிடத்தையும், அதில் அமர்ந்துள்ள குரு பகவானையும் பார்க்கிறார்.
3) கர்ம காரகன் சனி நவாம்சத்தில் உச்ச பலத்துடன் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்.
4) பல்மொழி நிபுண காரகன் புதன் நவாம்சத்தில் உச்ச பலத்துடன், வாக்கு ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்ந்து,5மிடத்தில் அமர்ந்து நிபுணத்துவ யோகத்தை ஜாதகருக்கு வழங்கினர்.
மேற்கண்ட கிரக நிலைமைகள் ஜாதகருக்கு தாய் மொழி தமிழானாலும், சுந்தரத் தெலுங்கினில் தேர்ச்சி பெற்று ஆசிரியாராக சிறப்புடன் பணியாற்றி நற்பெயரைப் பெற உதவின..
Saturday, January 18, 2020 9:49:00 PM
----------------------------------------------------
6
Blogger Sridhar said...
குரு 2ஆம் இடத்தில் (வாக்கு ஸ்தானம்) - நல்ல பேச்சு திறன்
புதன் 5 ஆம் இடத்தில் கேந்திரத்தில் - நல்ல அறிவு
மற்றும் 12 ஆம் அதிபதி - பிற மொழி பயிலும் அமைப்பு
ராகு 10 இல் குரு பார்வையில் - ஆசிரியர் தொழில்
Sunday, January 19, 2020 1:00:00 AM
--------------------------------------------------------
7
Blogger seethalrajan said...
வணக்கம், இந்த ஜாதகத்தில் லக்கின அதிபதி உச்சம் பெற்ற ராஜ யோகதிபதி செவ்வாய் உடன், மேலும் அந்நிய மொழிக்கு காரணமான ராகு செய்வாய் வீட்டில், அவரே 10ல் அமர்ந்து அந்நிய மொழி தொழிலை அமைத்து கொடுத்தார்.
நன்றி.
Sunday, January 19, 2020 2:39:00 AM
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.1.20

Astrology: Quiz: புதிர்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்!!!!


Astrology: Quiz: புதிர்: வேற்று மொழியில் பாண்டித்யம் பெற்ற அன்பரின் ஜாதகம்!!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அன்பரின் தாய் மொழி தமிழ்தான், ஆனால் அவர் தெலுங்கு மொழியை நன்றாக படித்து கற்றுத் தேர்ந்து. தெலுங்கைக் கற்பிக்கும் ஆசிரியர் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பணியாற்றி பெரும் பெயரும் பெற்றார். ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 19-1-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

16.1.20

Humour: நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா அகலத்தைச் சொன்னீங்களா?


நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா 
அகலத்தைச் சொன்னீங்களா?

1.
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க!
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.
----------------------------------------
2.
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குன்னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
------------------------------------------
3.
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து

கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
-----------------------------------------
4.
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
------------------------------------------
5.
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
---------------------------------------------
6.
கணவன் ; சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க... நீங்க என்னங்க

வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்...
-----------------------------------------------
7.
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
-------------------------------------------------
8.
டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்...
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
-------------------------------------------------
9.
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
--------------------------------------------
10.
என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...
-------------------------------------------
11.
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
--------------------------------------------------
12
நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...
---------------------------------------------------
17.
பல்லு எப்படி விழுந்திச்சு?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
-----------------------------------------------------
18. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
------------------------------------------------------------------
19
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
-----------------------------------------------------------
20
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
------------------------------------------------------
21.
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
-----------------------------------------------------
22.
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
-------------------------------------------------------------------
23.
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ????
--------------------------------------
இதில் எது மிகவும் நன்றாக உள்ளது?
எழுதுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.1.20

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!

வகுப்பறையின் மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து போகும் நண்பர்களுக்கும், சக வலைப் பதிவர்களுக்கும் வாத்தியாரின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.1.20

எது வழிபாடு?


எது வழிபாடு?

சிந்தியுங்கள்!!!!

வழிபாடு!  ஒரு  எச்சரிக்கை!

இன்றைக்கெல்லாம் செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் சிவாலயங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அடடே! இத்தனை கூட்டமா என்று, நம் மனதுக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால்.......

என்னடா இது? நமக்கு முன்னே இங்கே நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள்? அங்கே இறைவன் திருமுன்னில் (சன்னதி) யாரையுமே காணோமே!

வந்த கூட்டம் தான் எங்கே? மாயமாய் மறைந்துபோனார்களா? கண்கள் அங்குமிங்கும் சுழலும்போதுதான் தென்படுகிறது. அட....

இராகுகால துர்க்கை,, தெற்கு கோட்டத்து தட்சிணாமூர்த்தி, நவக்கிரக திருமுன்களில் எள்விழ இடமில்லை!

ஆகா…..நவக்கிரக திருமுன்னில் தான் எத்தனை கூட்டம்! கடலைமாலைகளா! எள்ளெண்ணெய் தீபமா! ஒன்பது தடவை பிரதட்சணமா!

நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக்கொரு அர்ச்சனை! குரு பகவான், சனி பகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள்!

ஆனால், இங்கே , இறைவன் திருமுன்னோ….? சுத்தம்! ஒரு ஈ, காக்கா கூட இல்லை! என்னதான்யா நடக்கிறது இங்கெல்லாம்?

நீங்கள் வழிபடும் சிவனை விட சக்தி வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள்? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள்?

"நாமார்க்கும் குடியல்லோம்" என்று முழங்கிய நாவுக்கரசர் பரம்பரையில் தோன்றிவிட்டு…

“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே” என்று உரத்துச்சொன்ன சம்பந்தர் மரபில் தோன்றிவிட்டு, சில்லாண்டிற் சிதையும் சிலதேவர்களை நாடிப் போய் வீழ்ந்து கிடக்கிறீர்களே!

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை!

நவக்கிரகங்களை ஏதோ அஞ்சத்தக்க தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, தோசபரிகாரம் செய்யணும், அது செய்யணும் இது செய்யணும் என்று வற்புறுத்தி, உங்களையெல்லாம் தவறாக வழிநடத்தும் சில பிரபல ஆன்மீக வியாபர பத்திரிகைகள், ஆன்மீக வியாபார பேச்சாளர்களைச் சொல்லவேண்டும்!

சோதிடம் ஒரு அருங்கலை! மறுக்கவில்லை!

நல்லதோ, கெட்டதோ, நடக்கப்போவதை அறிந்துகொள்ளும் ஆவலில், சோதிடர்களை நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல நாள் பார்க்க, அவர்களைத் துணைக்கழைப்பதையோ, தவறென்று கூறவில்லை. ஆனால், திருக்கோயில் வழிபாடுகளிலேயே சோதிட நம்பிக்கை மூக்கை நுழைப்பதை எந்த வகையிலும்  ஏற்றுக் கொள்ளவே முடியாது!

ஆயிரத்துமுன்னூறு வருடங்களுக்கு முன்பே சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா!

இறைநம்பிக்கை கொண்ட எவரையுமே, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று……….. பின்னே? எதற்காக இத்தனை அச்சம்?

ஆழ்ந்துபார்த்தால் ஒன்று மட்டும் தெளிவாகிறது. இப்படி தோச பரிகாரம், கிரகப்பெயர்ச்சி, என்று ஆயுளைக் கழிக்கும் எல்லோருமே தன்னம்பிக்கை அற்றவர்கள்! எடுத்ததற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்கள்!

உங்களைக் ஏளனம் செய்வதற்காக இதைக்கூறவில்லை!

தயவு செய்து உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்.

இறைவழிபாட்டைப் பொறுத்தவரை, நம் சமயத்தில் முழு எழுவரல் (சுதந்திரம்) இருப்பது உண்மை தான். அதைத் தவறாகப்
பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்!

மிகப்பழைய ஆலயங்களுக்குச் சென்றீர்களானால், அங்கே நவக்கிரக திருமுன்களே இருக்காது! அப்படியும் இருக்கின்றதென்றால் அது மிக அண்மையில் கட்டப்பட்டதாகவே இருக்கும்! 500 வருடங்களிட்கு முன்பு
எந்த சிவாலயங்களிலுமே நவக்கிரக சன்னிதானங்கள் இருந்ததில்லை.

அந்தந்த சிவாலயங்கள் யாரால் வழிபடப்பட்டதோ அந்த மூர்த்தி மட்டும் தனியாக பிரதிஸ்டை செய்யப்படிருந்தது.

உதாரணமாக சனி, திருநள்ளாறில் சிவபெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால் அந்த மூர்த்தியை மட்டும் விசேடமாக
பிரதிஷ்டை பண்ணி இருந்தனர் . இது நம் நாயன்மார்கள் தோன்றிய தலங்களில் அவர்களின் விசேட சந்நிதிகள் அமைவது
போல..

திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை!
அது சனி பகவான் கோயில்,
திங்களூர் சிவன்கோயில் இல்லை, அது சந்திரன் கோயில்!
வைத்தீசுவரன் கோவில் சிவன்கோயில் இல்லை, அது செவ்வாய் கோயில்!
இப்படித்தான் இன்று அவை பிரபலம் பெற்று விளங்குகின்றன.

நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை! இறைவனின் பரிவாரம் என்ற வகையில், அவையும் நம் வணக்கத்திற்குரியவை! அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை!
உண்மைதான்!

ஆனால், ஆணை செலுத்துபவனிடமே அடைக்கலம் புகுந்தால், அவை நம்மை என்னதான் செய்யமுடியும்? அதை விடுத்து, கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது, நமக்கு அருள்வதற்குக் காத்திருக்கும் இறைவனை அவமதிப்பதே ஆகும் அல்லவா??

கோளறு பதிகம், திருநீலகண்டப் பதிகம், திருத்தாண்டகம் போன்ற திருப்பதிகங்கள், நம் எத்தகைய ஆபத்துக்களையும்,
துன்பங்களையும் நீக்கக் கூடியவை. அவற்றை சிக்கெனப் பிடித்துக்கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

மேற்படி பதிகங்களையும், அந்தந்த நவகிரகங்கள் வழிபட்ட பரிகார தலங்களில் நாயன்மார்களால் பாடப்பட்ட தேவார
திருபதிகங்களையும் பாடி மூலவரான சிவபெருமானை வழிபடுவதை விட
நம் இடர் களைவதற்கான உபாயமே வேறு இல்லை என்பதை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்.

மூலமூர்த்தியை வழிபட்ட பின் நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது.

மூலமூர்த்தியாகிய சிவபெருமானை வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் யாதொரு பலனும் இல்லை.

தோச நிவர்த்தி பரிகாரம், அது, இது என்று கொட்டும் பணத்தை,வசதிகுறைந்த சிவாலயங்களில் தொண்டு செய்வதற்கும்,
சிறிய சிதிலமடைந்த சிவாலயங்களை புனரமைப் பதிலும், சிவனடியார்களிட்கு உதவுவதிலும் செலவழித்தால்
சிவபுண்ணியமாய் பல்கி பெருகிவந்து இம்மையிலும், மறுமையிலும் நம்மை காத்து இன்பம் தரும்.

ஏதாவது ஏழை எளியவர்களுக்கு உதவுவதிலும், முதியோர் இல்லம், குழந்தைகள் காப்பகம் என்று எங்காவது போய்
அன்னதானம், ஆடைதானம் செய்வதிலும் செலவழியுங்கள். வயிறும் மனமும் நிறைந்து, நாத்தழுதழுக்க, “நீங்க நல்லாயிருக்கணும் ஐயா, அம்மா” என்று அவர்களில் ஒரே ஒருவர் மனதார நினைத்தாலும் போதும். அந்த
வாழ்த்தே சிவனாணையாய், உங்களைப் பற்றவரும் சனிபகவானை ஓட ஓட விரட்டிவிடுமே!

ஆலயங்களில் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள், சிவாச்சாரியார்கள் தயவு செய்து இதில் கூடிய கவனமெடுங்கள்! ஏதோ
ஆலயத்துக்கு வருமானம் வருகிறதே என்பதற்காக, ஈசன் முன்னிலையிலேயே சிவத்துரோகம் நிகழ்வதற்கு, தயவு செய்து
அனுமதிக்காதீர்கள்!

"நமது சமய ஒழுக்கத்தை பேணாமையே புறசமய மதமாற்றங்களிட்கான காரணம்.

நாமும் நலமாக வாழ்ந்து எம் சமயத்தையும் வாழ வைப்போம்"

"மேன்மைகொள் சைவசமய நீதி விளங்குக உலகமெல்லாம்."
சிவசிவ!. சிவாயநம அருணாச்சலம்
(படித்ததில் பின்பற்ற வேண்டியது)
----------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

Astrology: Quiz: புதிர்: 10-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 10-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு அன்பரின் ஜாதகத்தை கொடுத்து, “ அன்பர் நீண்ட ஆயுளுடன் செளக்கியமாக வாழ்ந்தார். அன்பரின் நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்? ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச்
சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: ரிஷப லக்கின ஜாதகம்.லக்கினகாரகன் சுக்கிரன் 11ம் வீட்டில். அத்துடன் ஆயுள்காரகன் சனீஷ்வரன் சச யோகத்தில். இந்த இரண்டு அமைப்புக்களும் சேர்ந்து ஜாதகருக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்தன!!!!

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 9 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும்  எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 17-12-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 30 ஏப்ரல் மாதம் 1934ல் காலை 7 மணி 47 நிமிடம் போலப்பிறந்தவர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.
லக்கினாதிபதி சுக்கிரன் உச்சம் அடைந்து எட்டாம் அதிபதியான குருவின் பார்வை பெற்றார்.எட்டம் அதிபதி குரு திரிகோணம் ஏறி 5ல் அமர்ந்து லக்கினம் லக்கினாதிப்தி இருவரையும் தன் பார்வையில் வைத்தார். 10ம் அதிபதி மற்றும்
கர்மகாரகன் ஆயுள் காரகன் சனைச்சரன் தன் வீட்டிலேயே அமர்ந்டு 12ம் இடத்தினை தன் பார்வையில் வைத்தார். இவையெல்லாம் ஆயுள் கெட்டிக்குக் காரணம்.
Friday, January 10, 2020 5:04:00 AM
---------------------------------------------------------
2
Blogger அடியேன் யுவராஜ் said...
என் குருநாதர் அவர்களுக்கு வணக்கம் !
என் குருநாதரே தாங்கள் இப்பொழுது பதிவு செய்து இருக்கும் ஜாதகம் 27/12/2019 அன்று பதிவு செய்து உள்ளீர்கள்.
இப்படிக்கு அடியேன்
யுவராஜ்
Friday, January 10, 2020 7:36:00 AM

உண்மைதான். கவனக்குறைவு. மன்னிக்கவும். பொறுத்துக்கொள்ளவும்!!!!
----------------------------------------------------------------
3
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கம்!
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகர் ஏப்ரல் 30ம் தேதி 1934ம் ஆண்டு காலை 8-45 மணியளவில் பிறந்தவர்.நீண்ட ஆயுளுக்கு காரணம் ரிஷப லக்கினம். லக்கினாதிபதி சுக்கிரன் 11ம் வீட்டில் முழு சுபரான குரு வீட்டில் உச்சமாக அமர்ந்துள்ளார்.8ம் வீட்டுக்கும் அதிபதியான குரு 5ம் வீடான கன்னியில் சுபர் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதி சுக்கிரனையும் லக்கினத்தையும் பார்த்து வலுப்படுத்தியுள்ளார்.ஆயுள் காரகன் சனி பகவான் லக்கினத்திற்க்கு பாக்கியாதிபதியாகி 10ம் வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்து தர்மகர்மாதிபதி யோகத்தை பலப்படுத்தியுள்ளார்.
நன்றியுடன்
-பொன்னுசாமி.
Friday, January 10, 2020 10:12:00 AM
-----------------------------------------------------
4
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தாங்கள் கேட்டு இருந்த நீண்ட ஆயுள் ஜாதகரின் காரணங்கள்
ரிஷப லக்கின துலா ராசி ஜாதகரின் நீண்ட ஆயுள் அமைந்தது பின்வரும் காரணங்களினால் உண்டானது .
பொதுவாக நீண்ட ஆயுள் பற்றிய விவரம் அறிய ஜாதகரின் லக்கினம் அதிபதி நிலை , லக்கினத்தில் அமர்ந்த கிரகங்கள் மற்றும் எட்டாம் இடத்து அதிபதி நிலை மற்றும் எட்டாம் இடத்தில் அமர்ந்த கிரகங்களின் நிலை, ஆயுள் காரகன்
சனியின் நிலையை அறிய வேண்டும்.
இவரின் லக்கின அதிபதி ராசி அதிபதி சுக்கிரன் ஆவர் . இவரின் சுக்கிரன் பதினொன்றாம் இடத்தில் உச்சமாக குருவின் நேரடி பார்வையில் உள்ளது. குருவானவர் இவரின் எட்டாம் இடத்து அதிபதி ஆவர்.
மேலும் எட்டாம் இடத்து அதிபதி குரு ஐந்தில் லக்கின அதிபதி சுக்கிரனின் உச்ச நேரடி பார்வையில் உள்ளார். இதுவே இவரின் நீண்ட ஆயுளிற்கான முக்கிய காரணமாகும்
மேலும் ஆயுள் காரகன் சனி தனது சொந்த வீட்டில் உள்ளார் . மேலும் சனி நவாம்ச கட்டத்தில் எட்டாம் இடத்தில் அதாவது ஆயுள் ஸ்தானத்தில் உள்ளார்.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி: 8879885399
Friday, January 10, 2020 11:47:00 AM Delete
-------------------------------------------------------------------
5
Blogger Hari Krishna said...
The 8th lord Guru is at Kendra and the ayul kaarakan Sani is at trikonam - 10th - own house.
Saturday, January 11, 2020 11:39:00 AM
---------------------------------------------------
6
Blogger csubramoniam said...
ஐயா கேள்விக்கான பதில்
1 .லக்னதிபதி உச்சம் ஆகி உள்ளார் குருவின் பார்வையுடன்
2 .கர்மகாரகன் சனி பத்தில் ஆட்சி பலத்துடன்
3 .இரண்டு ஏழாம் வீட்டதிபதிகள் விரய வீட்டில் அமர்ந்து வலுவிழந்து உள்ளனர்
4 .3 ,6 ,8,12 மறைவிட அதிபதிகள் வலுவிழத்துள்ளனர்
ஆகவே ஜாதகருக்கு நீண்ட ஆயுள் கிட்டிற்று
தங்களின் பதிலை ஆவலுடன்
நன்றி
Saturday, January 11, 2020 1:15:00 PM
------------------------------------------------
7
Blogger இராம. சீனிவாசு, திருச்செங்கோடு. said...
பெருமதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
பொதுவாக ஒரு ஜாதகரின் ஆயுளை நிர்ணயம் செய்ய மூன்று காரணிகளை ஆய்வு செய்யவேண்டும். (1) லக்கினாதிபதியின் நிலை, (2) ஆயுள் பாவகமான 8ம் பாவகாதிபதியின் நிலை, (3) ஆயுள் காரகரான சனீஸ்வர பகவானின் நிலை.
கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் (1) ஸ்திர ராசியான ரிஷபம் லக்கினமாக அமைந்து, லக்கினம் குரு பகவானால் 9ம் பார்வையாக பார்க்கப்படுவதுடன், லக்கினாதிபதி சுக்கிரன் மீன ராசியில் உச்சமடைந்து குரு பகவானால் 7ம் பார்வையாக பார்க்கப்படுகிறார். ஆக லக்கினம் வலுப் பெற்றுள்ளது. (2) தனுசு ராசி 8ம் பாவகமாக அமைந்து, 8ம் பாவகாதிபதியான குரு பகவான் 5ம் திரிகோண ஸ்தானத்தில் அமர்ந்துள்ள நிலையில், உச்சம் பெற்ற சுக்கிரனால் பார்க்கப்படுகிறார். எனவே 8ம் பாவகம் வலுப் பெற்றுள்ளது. (3) ஆயுள் காரகரான சனீஸ்வர பகவான் தனது மூலத்திரிகோண வீடான கும்பத்தில்
ஆட்சி பெற்ற நிலையில் வலுவாக உள்ளார். எனவே இந்த ஜாதகர் தீர்க்காயுள் உடையவராகிறார்.
இராம. சீனிவாசு / 9843520977
Saturday, January 11, 2020 4:22:00 PM
------------------------------------------------------
8
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
இரிசப இலக்கினம், துலாம் இராசி ஜாதகம்.
இரிசப லக்கின அதிபதியான சுக்கிரன் பதினொன்றாம் இடத்தில் உச்சம் பெற்றுள்ளார். லாபஸ்தானத்தில் உள்ள லக்னாதிபதி சுக்கிரனை, குரு தனது ஏழாம் பார்வையால் பார்க்கிறார். மேலும் லக்னத்தையும் குரு தனது 9-ம் பார்வையால் பார்க்கிறார்.
ஆயுள் ஸ்தானாதிபதியான குரு ஐந்தாம் திரிகோணத்தில் அமர்ந்துள்ளார். ஆயுள் காரகனான சனீஸ்வரனும் பத்தாம் இடத்தில் ஆட்சி பலத்துடன் கேந்திர பலத்துடன் அமர்ந்துள்ளார்.
இதுவே அன்பரின் நீண்ட ஆயுளுக்கு காரணமாகும்.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, January 11, 2020 9:19:00 PM
------------------------------------------------
9
Blogger Sridhar said...
1) அஷ்டமாதிபதி குரு 5வது இடத்தில், லக்னத்தை தனது நேரடி பார்வையில் வைத்துள்ளார்
2) ஆயுள் காரகன் சனி தனது சொந்த வீட்டில்
3) மாரகாதிபதி புதன் 12இல் மறைவு
4) மாரகாதிபதி சுக்ரன் குருவின் நேரடி பார்வையில்
எனவே தீர்க்க ஆயுள்
Saturday, January 11, 2020 11:23:00 PM
------------------------------------------------------
10
Blogger Sridhar said...
Correction
மாரகதிபதி செவ்வாய் 12இல் மறைவு
சுக்ரன் என்று தவறாக கணக்கிட்டு விட்டேன்
Saturday, January 11, 2020 11:29:00 PM
-----------------------------------------------------------
11
Blogger Ram Venkat said...
பதிமூன்றாம் ஆண்டு நிறைவடைந்து 14ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் வகுப்பறைக்கும், வாத்தியாருக்கும் வாழ்த்துக்கள்.
ரிசப லக்கினம், துலா ராசி ஜாதகர்.
அன்பரின் நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்?
லக்கினாதிபதியும், ருண, ரோக,சத்துரு ஸ்தானாதிபதியுமான‌ சுக்கிர பகவான், 11மிடமான தன் உச்ச ராசியில் அமர்ந்துள்ளார். சுக்கிரனும், கன்னி ராசியில் அமர்ந்துள்ள அட்டமாதிபதி வக்கிர குரு பகவானும் பரஸ்பர நேர்
பார்வையிலுள்ளனர். லக்கினத்தை நவாம்சத்தில் உச்சமடைந்துள்ள குரு பகவான் தன் 9ம் தனிப் பார்வை கொண்டு பார்க்கிறார்.
ஆயுள்காரகனும், யோகாதிபதியுமான‌ சனி பகவான் தன் சொந்த வீடு மற்றும் மூலத்திரிகோண ஸ்தானமான கும்ப ராசியில் அமர்ந்து வலுவாக உள்ளார்.(சுய பரல் 6).ராசி மற்றும் நவாம்சத்தை சேர்த்து 5 கிரகங்கள் உச்ச நிலையிலுள்ளன.
மேற்கண்ட கிரகங்களின் ஆசிர்வாதமுடன் ஜாதகர் நோய் நொடி இல்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்.
Sunday, January 12, 2020 2:23:00 PM
===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.1.20

Astrology: Quiz: புதிர்: நீண்ட ஆயுள் கொண்ட அன்பரின் ஜாதகம்!!!!

Astrology: Quiz: புதிர்: நீண்ட ஆயுள் கொண்ட அன்பரின் ஜாதகம்!!!!

ஒரு அன்பரின் ஜாதகம் கீழே உள்ளது. அன்பர் நீண்ட ஆயுளுடன் செளக்கியமாக வாழ்ந்தார். அன்பரின் நீண்ட ஆயுளுக்கு ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 12-1-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.1.20

சினிமா: மனதை நெகிழவைக்கும் வரலாறு!!!


சினிமா: மனதை நெகிழவைக்கும் வரலாறு!!!

அடியவன் சின்ன வயதில் சேலத்தில் படித்து வளர்ந்தவன். சேலத்துக்காரர்கள் எல்லாம் அதீத சினிமா ரசிகர்கள். நான் படித்த காலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில்தான் அதிகமான திரையரங்குகள்.

அத்துடன் சேலத்தில் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் என்னும் படப்பிடிப்பு நிறுவனமும் (ஸ்டுடியோ) மிகவும் பிரபலம். சேலத்தை அறிந்தவர்கள் அனைவருக்கும் அது தெரியும்.

சுமார் 47 ஆண்டுகள் இயங்கிவந்த அந்த நிறுவனம் எண்ணற்ற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும், நடிகர்களையும் உருவாக்கியது என்றால் அது மிகையல்ல!

ஆனால் அந்த நிறுவனம் 1982ம் ஆண்டுடன் மூடு விழாக் கண்டது என்னும் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்,

10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த அந்த நிறுவனத்தின் இடத்தில் இப்போது பல குடியிருப்புக்களும், வணிகக் கடைகளும்தான் உள்ளன.

சென்ற வாரம் சேலம் சென்றிருந்தபோது அதைக் கண்ணால் கண்டேன். அதன் மேன்மையான வரலாற்றை உங்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக இந்தப் பதிவு!

கீழே உள்ள காணொளியை முழுமையாகப் பார்க்க வேண்டுகிறேன்:



அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.1.20

அறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?


அறிவிற்கும் ஞானத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன?

அறிவு என்றால் என்ன?
ஞானம் என்றால் என்ன?

இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

பகவான் ராமகிருஷ்ணரிடம் பாடம் படிப்பதில் நிறையப் பயன்கள் உண்டு. அவர் எந்த ஒரு விஷயத்தையும் மிக மிக எளிமையாக விளக்குவார்.

புரியாததைப் புரிய வைப்பார். அன்றாட வாழ்க்கையில் உள்ள எளிய உதாரணங்களைக் கூறி தெளிவடையச் செய்வார். அவற்றுள் ஒன்றுதான் இது:

பகவான் ராமகிருஷ்ணரிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு அறிவு, ஞானம் பற்றிய ஐயம் இருந்தது.

" #அறிவு என்றால் என்ன?
#ஞானம் என்பது எது? " என்று குருவிடம் கேட்டனர்.

அவர் அறிவு, ஞானம் பற்றி பல நாள்கள்பாடம் எடுத்தும் அவர்கள் மூவருக்கும் அது முழுவதுமாக விளங்க வில்லை. இரண்டிற்குமுள்ள வேறுபாட்டை உணர முடியவில்லை.

பகவான் ராமகிருஷ்ணர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு #ஞானம்_என்பது_எது? என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்'' என்று சொல்லிவிட்டு மூவரையும் ஒரு அறையில் உட்கார வைத்தார்.

அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார்.

முதல் மாணவனைப் பார்த்து, "நான்போய் வந்த அறையினுள் #மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா''# என்றார்.

அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களில் பால் இருந்தது.

#தங்கத்தம்ளரில் இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான்.,

அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில் பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால் தனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆதங்கமுற்றான்.

ஆயினும் அதற்கடுத்த மதிப்பினைக் கொண்ட #வெள்ளி தம்ளரில் இருந்த பாலை எடுத்துக் குடித்துவிட்டு# ஓரளவு நிறைவோடு வெளியே வந்தான்.

மூன்றாவது மாணவன் உள்ளே சென்றதும் காலியாகக் கிடந்த தங்க, வெள்ளி தம்ளர்களைப் பார்த்ததும் கோபம் தலைக்கேறியது.

எனக்கு வெண்கல தம்ளர் பாலா? யாருக்கு வேண்டும் இது? நான் என்ன அவ்வளவு இளப்பமானவனா? எந்தவிதத்தில் நான் தாழ்ந்தவனாகி விட்டேன்?' என்று அவன் மனதில் எண்ணங்கள் ஓடின.

ஆயினும் குரு பாலைக் குடித்து வா என்றதை நினைவில் கொண்டு வருத்தத்தோடு குடித்துவிட்டு வெளியே வந்தான். அவன் முகத்தில் சுரத்தே இல்லை!

பகவான் ராமகிருஷ்ணர் மூவரையும் பார்த்து, "பாலைக் குடித்தீர்களா" என்றார். #முதல் மாணவன் மகிழ்ச்சிப் பூரிப்புடன், "தங்கத் தம்ளரில் பால் குடித்தேன்.

நான் மிகவும் கொடுத்து வைத்தவன், குருவே!'' என்றான். இரண்டாவது மாணவன், "எனக்கு தங்கத் தம்ளரில் பால் கிடைக்க வில்லை என்கிற வருத்தம் இருந்தாலும் #வெள்ளி# தம்ளரிலாவது கிடைத்ததே என்கிற மகிழ்ச்சி ஓரளவு இருக்கிறது, குருஜி'' என்றான்.

மூன்றாவது மாணவன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்பே அழுகை வந்துவிட்டது. அதனூடேயே அவன், #மூன்று பேர்களில் மிகவும் துரதிர்ஷ்டக்காரன் நானே குருஜி. எனக்கு வெண்கலத் தம்ளரில்தான் பால் கிடைத்தது'' என்றான்.

பகவான் ராமகிருஷ்ணர் அமைதியாக எல்லாவற்றையும் கேட்டபின் பேச ஆரம்பித்தார். "மாணவர்களே! தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய மூன்று தம்ளர்களிலும் ஏலக்காய், குங்குமப்பூ சேர்த்து சுண்டக் காய்ச்சிய சுவையான பசும்பால்தான் ஒரே அளவில் இருந்தது. அதில் எந்த வேறுபாடும் இல்லை.

பாலை பருகப் போகிற மூவருக்குமே அதிலிருந்து ஒரே மாதிரியான சுவையும், சத்துவ குணமும்தான் கிடைக்கப் போகிறது. அதிலும் வேறுபாடில்லை. ஆனால் நீங்கள் மூவருமே நினைத்தது வேறு.

பால் ஊற்றி வைத்திருக்கும் தம்ளர்களின் மதிப்பைப் பற்றியே உங்கள் மனம் யோசித்தது. பாலின் குணம், சுவை, ருசி ஆகிய அனைத்தும் ஒரேமாதிரிதான் இருக்கும் என்பதை யோசிக்கவே இல்லை.

ஆகவே நீங்கள் பண்டத்தை விட்டு விட்டு பாத்திரத்தையே பார்த்துள்ளீர்கள்! பாத்திரத்தைப் பார்த்து சந்தோஷப்படுவது அறிவு. அதில் உள்ள பண்டத்தைப் பார்த்து இன்புறுவது ஞானம். ஞானிகள் பண்டத்தைப் பற்றியும் அதன் பயன் பற்றியுமே பார்ப்பார்கள்.

பாத்திரங்களுக்கு மதிப்பு தர மாட்டார்கள். மண்சட்டியில் ஊற்றிக்கொடுத்தால் கூட ஆனந்தமாக பருகிச் செல்வார்கள்''

"நீங்கள் அறிவு கொண்டு பார்க்காமல் ஞானம் கொண்டு பார்த்திருந்தால் மூவருமே ஒரேமாதிரியான மனோநிலையை எட்டியிருப்பீர்கள்!''

பகவான் ராமகிருஷ்ணர் சொல்லி முடித்ததும் மூன்று பேர்களுக்கும் அறிவிற்கும், ஞானத்திற்கும் உள்ள வேறுபாடு தெளிவாக விளங்கியது...
-----------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.1.20

மன்னார்குடியும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும்!!!!


மன்னார்குடியும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவும்!!!!

மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி திருக்கோவில் ஏகாதசி விழா ஆரம்பம்

ஸ்ரீ வித்யா இராஜகோபால ஸ்வாமி திருக்கோயிலில் மிகசிறப்பாக நடைபெறும் வைகுண்ட ஏகாதசி (அத்யன) உற்சவம்

27.12.2019 முதல் 05.01.2020 வரை *பகல் பத்து உற்சவம்* நடைபெறுகிறது.

06.01.2020 அதிகாலை பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

06.01.2020 முதல் 15.01.2020 வரை *இராப்பத்து உற்சவம்* நடைபெறுகிறது.

விழா நாட்களில் ஸ்ரீ கோபாலன் பல்வேறு திருக்கோலங்களில் புறப்பாடு கண்டருளி ஆழ்வார்களுக்கு மங்களாசாசனம்

நடைபெறும்..

*முக்கிய குறிப்பு*

20 நாட்களில் சில திருக்கோலங்கள் வருடத்தில் ஒரு முறை மட்டுமே காணும் அற்புதமான சேவைகளாகும்..

*பகல் பத்து உற்சவம்*

1,7 மற்றும் 10 திருநாள் உபயநாச்சியார்களுடன் சிறப்பு திருக்கோலம் *10 திருநாள் திருமங்கை ஆழ்வார் திருவடி

தொழள்* நடைபெறுகிறது.

8 ஆம் திருநாள் திருவடி வரை ஆபரணம் சாற்றி திருவேங்கடமுடையான் *இராஜ அலங்காரம்*

9 ஆம் திருநாள் மாடு கன்றுகளுடன் மாடு மேய்க்கும் இடையனாக *மாடு மேய்க்கும் திருக்கோலம்*

*இராப்பத்து*

முதல் திருநாள்  *வைரமூடி சேவை வைகுண்ட ஏகாதசி*

1,7 மற்றும் 10 திருநாள் உபநாச்சியார்களுடன் புறப்பாடு 

6 ஆம் திருநாள் சிக்குதாடை உடன் *இராஜ அலங்காரம்*

8 ஆம் நாள் *குதிரை வாகனம்* வேடுபறி

9 ஆம் நாள் *மோகிணி அலங்காரம்* (மிக சிறப்புடையது)

மேற்கூறிய அனைத்தும் வருடத்தில் ஒருமுறை மட்டுமே காண கிடைக்கும் அற்புத சேவைகள் காண தவறாதீர்கள்...

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்...🙏🏻☺
---------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.1.20

கண்ணனின் மனதில் யார் இருக்கிறார்?


கண்ணனின் மனதில் யார் இருக்கிறார்?

அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார்.

உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள். திருமணமானதில் இருந்து, அவளது அன்புக்கணவன் அபிமன்யுவைத்தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில் தெரிந்தான்.

அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள். அந்த சமயத்தில் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.

அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச்சொல்ல, போடா! அவன் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப்போக, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய்ச்சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி.

எல்லாரும் ஆர்வமாயினர். கண்ணனைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன் கொண்டு வந்து நிறுத்தினர். என்ன ஆச்சரியம்! யாருக்கு கண்ணனை அறவே பிடிக்காதோ, யாரொருவன் கண்ணனைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான்.

□கண்ணா! மாயம் செய்கிறாயா? என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.

இல்லை..இல்லை... என்னைக்கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி.

○என்னை எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல!, கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்றான் கருணையுள்ள கண்ணன்.○
------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது!!!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

5.1.20

Astrology: Quiz: புதிர்: 3-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!


Astrology: Quiz: புதிர்: 3-1-2020 தேதியிட்ட புதிருக்கான விடை!

கேட்டிருந்த கேள்வி இதுதான். ஒரு குழந்தையின் ஜாதகத்தைக்
கொடுத்து, அக்குழந்தை, திருவோண நட்சத்திரம். பிறந்து 8 மாதங்கள்வரைதான் உயிரோடு இருந்தது. 8வது மாத முடிவில்
தன் பெற்றோர்களை  துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு,
குழந்தை இறைவனடி சேர்ந்த்துவிட்டது. எட்டு மாதத்தில்
குழந்தையின் மறைவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்” என்று கேட்டிருந்தேன்.

பதில்: மீன லக்கின ஜாதகம்.லக்கினகாரகன் குரு எட்டாம் இடத்தில் மாந்தியோடு கூட்டாக அமர்ந்து கடுமையான பாலரிஷ்ட தோஷத்தை உண்டாக்கியுள்ளான். அத்துடன் குரு பகவான் ராகுவின் நட்சத்திர
சாரத்தில் இருப்பதோடு 6ம் அதிபதி சூரியன் மற்றும் 12ம் அதிபதி
சனியின் பார்வைகளையும் பெற்று வலுவிழந்து உள்ளான்.
இவைதான் குழந்தையின் இறப்பிற்கு முக்கியமான காரணம்.

அவற்றை மட்டும் இங்கே குறிப்பிட்டுள்ளேன்,

இந்தப் புதிரில் 10 அன்பர்கள் கலந்து கொண்டு தங்கள் கணிப்பை வெளியிட்டு உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

அடுத்த வாரம் 10-12-2019 வெள்ளிக்கிழமை  அன்று வேறு ஒரு புதிருடன் மீண்டும் நாம் சந்திப்போம்!!!!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
1
Blogger kumaran said...
வணக்கம் வாத்தியாரே ,மீன லக்கனம் குழந்தை ,லக்னினத்தை முன் பின் பாபகிரகம் ,லக்கனம் பபாகத்திரி யோகம் பெற்று உள்ளது லகினத்தின்
அதிபதி 8-இல் மறைவு கூடவே மாந்தி வேறு லக்கனம் முழமையாக
பாதிப்பு உள்ளது அதுவே குழந்தையின் மரணத்திற்கு காரணமாக
அமைத்து விட்டது .அதேபோல் சந்திரனின் மீதி எந்த ஒரு சுப பார்வையும்
இல்லை .
நன்றி ஸ்ரீ குமரன்
9655819898
Friday, January 03, 2020 8:39:00 AM
----------------------------------------------------------
2
Blogger அடியேன் யுவராஜ் said...
ஐயா வணக்கம்!
1.லக்னா அதிபதி 8ல் மறைவு
2.லக்னாதிபதி ராகு சாரம் ராகு 12ல்
3.லக்ன அசுபர் சூரியன் புதன் சனி 2ல் அமர்ந்து 7ஆம் பார்வை லக்னாதிபதி குருவின் மேல் பார்வை
4.6ஆம் அதிபதி,பாதகாதிபதி பார்வை குருவின் மேல்
5.லக்னாதிபதி குரு பகை வீட்டில்.வீடு கொடுத்த சுக்கிரன் ஆட்சி பெற்று தன் வீட்டிற்கு 8ல்
6.அதிக கிரகங்கள் லக்ன அசுபர் சாரத்தில்
Friday, January 03, 2020 9:27:00 AM
--------------------------------------------------
3
Blogger Gowda Ponnusamy said...
அய்யா வணக்கம்!
குழந்தை ஏப்ரல் 29, 1970 ல் காலை 5-00 மணியளவில் பிறந்துள்ளது.மீனம் லக்கினம்.மகர ராசி. 2,11 அதிபதிகள் மாரகாதிபதிகள். 7ம் அதிபதி பாதகாதிபதி. லக்கினாதிபதி 8ல் அமர்ந்துள்ளார். 6ம்பதி சூரியன், 11ம்பதி சனியும்
பாதகாதிபதி புதனுடன் சேர்ந்து 2ல் அமர்ந்து லக்கினாதிபதி குருவை பார்த்து கெடுத்து விட்டனர். லக்கினம் சுபர் பார்வையின்றி பாப கர்த்தாரி யோகத்தில் உள்ளது. ராசி 8ல் கேது.ராச்சிக்கு 2, லக்கினத்திற்கு 12ல் ராகு. சந்திர
தசையில் புதன் புத்தியில் (பாதகாதிபதி) ராகு அந்திரத்தில் குழந்தை இறந்திருக்கும்.
அன்புடன்
- பொன்னுசாமி.
Friday, January 03, 2020 7:00:00 PM
----------------------------------------------------
4
Blogger வகுப்பறை said...
வணக்கம் ஐயா🙏
மீன இலக்கினம், மகர இராசி ஜாதகம்.
லக்கினம் ஒருபுறம் சூரியன் சனி மறுபுறம் ராகு என பாபகர்த்தாரி யோகத்தால் சூழப்பட்டு பாதிப்படைந்துள்ளது.
லக்னாதிபதி குரு எட்டில் மறைந்து உள்ளார் மேலும் லக்னாதிபதி குருவின் மேல் ஆறாம் அதிபதி பார்வையும் பாதகாதிபதியின் பார்வையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்தில் ஆறாம் அதிபதியின் பார்வை பாதகாதிபதியின் பார்வை ஆகியவையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எட்டாம் அதிபதி சுக்கிரனும் மூன்றில் மறைந்து மற்றும் ஆயுள் காரகனான சனீஸ்வரனும் நீச்சம் அடைந்துள்ளார்.
இந்த காரணங்களால் ஆயுள்பலம் அதிகம் பெற முடியாமல் போனது.
பிழைகள் இருப்பின் பொருத் தருளுக...
பணிவுடன்,
முருகன் ஜெயராமன்,
புதுச்சேரி.
Saturday, January 04, 2020 1:27:00 AM
--------------------------------------------------------
5
Blogger Thanga Mouly said...
பிறந்த குழந்தையின் லக்னாதிபதி (குரு) 8 ல் மறைந்திருக்க,மாரகாதிபதிகள் (செவ்வாய், சனி) வலிமை குறைந்து மற்றும் ஆயுள் காரகன் சனி நீசமடைந்து, சந்திர தசையில் புத்தி, கோட்சாரம் (குரு, செவ்வாய் சனி) என்பவற்றால் எட்டப்பட்ட தாக்கம் அற்பாயுள் முடிவை கொடுத்துள்ளது.
Saturday, January 04, 2020 8:37:00 AM
----------------------------------------------------
6
Blogger kmr.krishnan said...
ஜாதகர் 29 ஏப்ரல் 1970 அன்று காலை 4 மணி 50 நிமிடங்களுக்குப் பிறந்தவ்ர். பிறந்த இடம் சென்னை என்று  எடுத்துக்கொண்டேன்.
லக்கினாதிபதி குரு எட்டில் மறைந்து மாந்தியுடன் கூட்டணி.லக்கினம் ராகு, சனி, சூரியனால் சூழப்பட்டுள்ளது.ஆயுள் காரகன் சனி நீசம் அடைந்து சூரியனால் அஸ்தங்கதம். நோய்க்கான 6ம் அதிபதி சூரியன் இரண்டில் அமர்ந்தது.உச்சம் பெற்றது. வியாதியைக்குறிக்கிறது.எட்டாம் இடத்திற்கு
22 பரல் மட்டுமே.எட்டாம் அதிபதி சுக்கிரன் 3ல் அமர்ந்து மறைந்தது.செவ்வயுடன் கூட்டணி
சந்திரனுக்கு சனியின் பார்வை.
இவையெல்லாம் அற்ப ஆயுளைக்குறிக்கிறது.
Saturday, January 04, 2020 11:41:00 AM
---------------------------------------------------
7
Blogger adithan said...
வணக்கம் ஐயா,1) லக்னாதிபதியும் ,கர்ம ஸ்தானாதிபதியுமான குரு 8ல் மறைவு.2)நீசமடைந்த ஆயுள் காரகன் சனி,உச்சம்
பெற்ற 6ம் அதிபதி சூரியன்,4,7க்குடைய புதன் 2ல் அமர்ந்து,8ம் இடத்தை வலுவிலக்க செய்தன.3)இங்கு சனி 12ம்
அதிபதியாகவும்,உபய லக்ன மாரக ஸ்தானமான 11 ம் இடத்தின் அதிபதியாகவும் வருகிறது.சரி,8ம்அதிபதியின் நிலையை
பார்ப்போம்.அவர் 8க்கு எட்டாமான 3ல் ஆட்சி பெற்றிருக்கிறார்.நல்லதுதானே என்றால்,கூடவே 2ம் அதிபதி வர்கோத்தமம் பெற்ற செவ்வாய்.4)எனவே மாரக ஸ்தானத்தில் அமர்ந்த சந்திரன் தசாவில்,உபய லக்ன மற்றோரு மாரக
ஸ்தானமான 7ம் அதிபன் புதன் புத்தியில்,கொடுத்தவனே,பறித்துக் கொண்டான்.நன்றி.
Saturday, January 04, 2020 2:40:00 PM
----------------------------------------------------
8
Blogger P. CHANDRASEKARA AZAD said...
வணக்கம்
தங்கள் கேட்டு இருந்த எட்டே மாதத்தில் இறைவனடி சேர்ந்த குழந்தையின் இறப்பிற்கான காரணங்கள்
திருவோண நக்ஷத்திரம், மகர ராசி , மீன லக்கின ஜாதக குழந்தை லக்கின அதிபதி குரு எட்டாம் இடத்தில் மறைந்தது மட்டுமல்லாமல் மாந்தி உடன் கூட்டணி சேர்ந்து ஆயுள் ஸ்தான பலனை குறைத்தது
மேலும் ஆயுள் காரகன் சனி உச்ச சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கதம் ஆனது மட்டுமல்லாமல் , நீசமாகவும் உள்ளது.
இந்த அமைப்பு அற்ப ஆயுளை உறுதி செய்கிறது.
அதனால் இந்த குழந்தை சந்திரா தசையில் சந்திரன் அமர்ந்த மகர ராசியின் அதிபதி நீச சனியின் புக்தியில் இறைவன் அடி சேர்ந்தது.
நன்றி
இப்படிக்கு
ப. சந்திரசேகர ஆசாத்
கைபேசி : 8879885399
Saturday, January 04, 2020 9:02:00 PM
---------------------------------------------------
9
Blogger Ram Venkat said...
மிதுன லக்கினம், மகர ராசி.
எட்டு மாதத்தில் குழந்தையின் மறைவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?
பாலாரிஷ்ட தோசமுள்ள ஜாதகம்.
லக்கினாதிபதி குரு எட்டில் மறைவு. அவர் மேல் 6ம் அதிபதி உச்ச சூரியனின் பார்வை. 6மிடத்தில் கேது அமர்வு.ல‌க்கினமும் பாப கர்த்தாரியில் சிக்கியுள்ளது. சந்திரனுக்கு 2ல் ராகு அமர்வு மற்றும் ஆயுள்காரகன் 2ல் நீசம்
மற்றும் 6ம் அதிபதி சூரியனுடன் கூட்டு.
மேறகண்ட காரணங்களால் குழந்தையின் ஆயுள் 8ம் மாதத்தில் முடிந்து விட்டது.
Saturday, January 04, 2020 9:45:00 PM
-------------------------------------------------
10
Blogger seethalrajan said...
இந்த ஜாதகத்தில் அற்ப ஆயுள் காரணம்,
1. லக்கினாதிபதி பகை வீட்டில் மேலும் 8ல் மறைந்து லக்கின தொடர்பு இல்லை.
2. 8ம் அதிபதி லக்னத்துக்கு 3ல் மறைந்து 8ம் வீட்டுக்கும் மறைந்து செய்வாய்யோடு சேர்ந்து கெட்டு போய் உள்ளார்.
3. ராசி அதிபதி மற்றும் ஆயுள் காரகன் சனி நீச்சம்.
4. குருவின் லக்கினம் ஆகி
சுப கிரகம் அனைத்தும் பாப கிரக பிடியில், லக்கின சுபர் அனைவரும் லக்கின பாபர் உடன் சேர்க்கை. ஒரு கிரகம் கூட
சரியில்லை. ஆகையால் ஜாதகம் வலுவிழந்து இருக்கிறது.
Sunday, January 05, 2020 2:48:00 AM
=============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.1.20

Astrology: Quiz: புதிர்: எட்டே மாதங்களில் இறைவனடி சேர்ந்த குழந்தையின் ஜாதகம்!!!


Astrology: Quiz: புதிர்: எட்டே மாதங்களில் இறைவனடி சேர்ந்த 
குழந்தையின் ஜாதகம்!!!

ஒரு குழந்தையின் ஜாதகம் கீழே உள்ளது. திருவோண நட்சத்திரம்.
பிறந்து 8 மாதங்கள்வரைதான் உயிரோடு இருந்தது. 8வது மாத
முடிவில் தன் பெற்றோர்களை  துன்பக்கடலில் ஆழ்த்திவிட்டு,
குழந்தை இறைவனடி சேர்ந்த்துவிட்டது.

எட்டு மாதத்தில் குழந்தையின் மறைவிற்கு ஜாதகப்படி என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 5-1-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!