30.1.20

சினிமா: வெற்றிப்பட இயக்குனர்!


சினிமா: வெற்றிப்பட இயக்குனர்!

சுறுசுறுப்பான இயக்குனர் ஸ்ரீதரை  திடீரென்று ஒரு நாள் சுருட்டிப் போட்டது
பக்கவாதம் என்ற பயங்கரமான நோய்.

அன்றோடு இயக்குனர் ஸ்ரீதர் படுத்த படுக்கையாக வீட்டோடு முடங்கிப் போனார்.

கல்யாணப் பரிசு
தேன் நிலவு
நெஞ்சில் ஓர் ஆலயம்
நெஞ்சம் மறப்பதில்லைஉ
காதலிக்க நேரமில்லை
சுமை தாங்கி
வெண்ணிற ஆடை
சிவந்த மண்
உரிமைக்குரல்
இளமை ஊஞ்சலாடுகிறது

எத்தனை சூப்பர் ஹிட் திரைப்படங்கள் !

ஸ்ரீதர் என்ற பெயருக்காகவே திரைப்படங்கள் ஓடியது ஒரு காலம்.

ஆனால் அந்த ஸ்ரீதரின் கடைசிக் காலம் அந்த அஸ்தமன காலத்தில் அவருக்கு அருகிலேயே இருந்து கண்ணுக்கு  கண்ணாக  கவனித்துக் கொண்டவர்  தேவசேனா.மறைந்த இயக்குனர் ஸ்ரீதரின் மனைவி.

மருத்துவமனையில்  சீரியசான நிலையில் சிகிச்சையில் இருக்கும்போது சிலவேளைகளில் திடீரென யாரையாவது பார்க்க  வேண்டும் என்று விரும்புவாராம் ஸ்ரீதர்.

உடனே  தேவசேனா ஸ்ரீதர் பார்க்க விரும்புகிறவர்களை  தொலைபேசியில் தொடர்பு கொண்டு “சார் பார்க்கணும்னு ஆசைப்படறார், கொஞ்சம் வர முடியுமா?” என்று பணிவோடு பரிதாபமாக கேட்பாராம்.

இவர் கேட்கும் இரக்க தொனியில் எவராக இருந்தாலும்  அடுத்த நிமிடமே  ஸ்ரீதரைப் பார்க்க ஓடோடி வந்து  விடுவார்களாம்.

கணவரின் அன்புக்குரிய அந்த நண்பர்களை வரவழைத்து, அவர்களை கணவரோடு பேச வைத்து, கணவரின் கடைசி  நிமிட எதிர்பார்ப்புகளையும்  சிறப்பாகவே பூர்த்தி செய்த புண்ணியவதி ஸ்ரீதரின் மனைவி தேவசேனா.

சில வேளைகளில் ஸ்ரீதர் நினைவிழக்கும் அபாயத்தை எதிர்கொள்கிறார் என்பதை உணர்ந்த மருத்துவர்கள், அவரைப்  பார்க்க வரும் முக்கியப் பிரமுகர்களிடம் , சிறிது நேரமாவது  பழைய கதைகளை ஸ்ரீதரிடம் பேசச் சொல்வார்களாம்.

ஆனால் ஸ்ரீதர் பேசுவதே என்னவென்று. வந்தவர்களுக்கு புரியாத நிலையிலும் கூட , தேவசேனா கணவர் சொல்வதைப்  புரிந்து கொண்டு அதை  மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வாராம்.

இப்படியாக பதினான்கு ஆண்டுகள் படுக்கையிலேயே ஸ்ரீதர் இருந்தபோதும் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாத தேவசேனா,

கட்டுக்கு அடங்காமல் கண்ணீர் வழிய நின்றது ஒரே ஒரு நாள்தான்.

அது ஸ்ரீதர் இறந்த 2008 , அக்டோபர் 20 இல் மட்டும்தான்.

ஸ்ரீதர் செய்த பூர்வஜென்ம புண்ணிய மெல்லாம் ஒரு பெண்ணாக வடிவெடுத்து , தேவசேனா என்ற பெயரில் அவருக்கு  மனைவியாக வந்து  வாய்த்தது.

ஸ்ரீதரின் "சுமைதாங்கி" பாடலை கொஞ்சம் மாற்றி பாடிக் கொள்கிறேனே !

"மனைவி  என்பவள் தெய்வமாகலாம்
வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம்
உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
மனைவி  என்பவள் தெய்வமாகலாம்"

ஆக்கம்: John Durai Asir Chelliah
----------------------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. Good morning sir sweet memories thanks sir vazhga valamudan

    ReplyDelete
  2. "திருச்சிற்றம்பலம்"
    உயர்ந்த நிலையை அடைந்த பிறகும்
    மீண்டும் உன் நிலை தாழ்ந்திட்டால்
    நயந்த முன் வினை பாவம் அன்றோ
    இந் நிலைக்குக் காரணம்
    உயர்ந்த மனமும் புத்தி சித்தம்
    தெளியும் வரையில் என்றுமே
    முயன்று நிலைத்து உயர்வை அடைய
    சிவத்தில் அன்பு மிகுந்திடே!

    சேர்ந்து வாழ்ந்து இன்பம் கொண்ட
    இனிதுடைய மனைவியும்
    ஆர்ந்து வளர்த்த பிள்ளையோ
    மற்றும் உன் தன் உறவினர்
    சேர்ந்து உழைத்து சேர்த்த செல்வம்
    மற்றும் உள்ள யாவையும்
    தீர்ந்து உயிர் தான் போகும் போது
    எது உனக்கு உதவுமே!

    கூடு விட்டு ஆவி போனால்
    கூட வந்தது ஒன்றில்லை
    பாடுபட்டு சேர்த்த செல்வம்
    முடிவு காலத்தில் உதவுமா?
    வீடும் மனைவி மக்கள் சுற்றம்
    மற்றும் உள்ள யாவரும் (சுடு)
    காட்டில் உன்னை தூக்கிச் சென்று
    எரித்து சாம்பலைக் கரைப்பரே!
    -"அப்பர் எழுதிய சிவஞான வித்து நூலில் இருந்து"
    நன்றி.

    -

    ReplyDelete
  3. Nice information and pointed out "ஸ்ரீதர் செய்த பூர்வஜென்ம புண்ணிய மெல்லாம் ஒரு பெண்ணாக வடிவெடுத்து , தேவசேனா என்ற பெயரில் அவருக்கு மனைவியாக வந்து வாய்த்தது."
    super

    ReplyDelete
  4. /////Blogger Shanmugasundaram said...
    Good morning sir sweet memories thanks sir vazhga valamudan////

    நல்லது. நன்றி சண்முகசுந்தரம்!!!!!

    ReplyDelete
  5. //////Blogger Ram Venkat said...
    "திருச்சிற்றம்பலம்"
    உயர்ந்த நிலையை அடைந்த பிறகும்
    மீண்டும் உன் நிலை தாழ்ந்திட்டால்
    நயந்த முன் வினை பாவம் அன்றோ
    இந் நிலைக்குக் காரணம்
    உயர்ந்த மனமும் புத்தி சித்தம்
    தெளியும் வரையில் என்றுமே
    முயன்று நிலைத்து உயர்வை அடைய
    சிவத்தில் அன்பு மிகுந்திடே!
    சேர்ந்து வாழ்ந்து இன்பம் கொண்ட
    இனிதுடைய மனைவியும்
    ஆர்ந்து வளர்த்த பிள்ளையோ
    மற்றும் உன் தன் உறவினர்
    சேர்ந்து உழைத்து சேர்த்த செல்வம்
    மற்றும் உள்ள யாவையும்
    தீர்ந்து உயிர் தான் போகும் போது
    எது உனக்கு உதவுமே!
    கூடு விட்டு ஆவி போனால்
    கூட வந்தது ஒன்றில்லை
    பாடுபட்டு சேர்த்த செல்வம்
    முடிவு காலத்தில் உதவுமா?
    வீடும் மனைவி மக்கள் சுற்றம்
    மற்றும் உள்ள யாவரும் (சுடு)
    காட்டில் உன்னை தூக்கிச் சென்று
    எரித்து சாம்பலைக் கரைப்பரே!
    -"அப்பர் எழுதிய சிவஞான வித்து நூலில் இருந்து"
    நன்றி.//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!

    ReplyDelete
  6. /////Blogger SENTHIL said...
    Nice information and pointed out "ஸ்ரீதர் செய்த பூர்வஜென்ம புண்ணிய மெல்லாம் ஒரு பெண்ணாக வடிவெடுத்து , தேவசேனா என்ற பெயரில் அவருக்கு மனைவியாக வந்து வாய்த்தது."
    super//////

    நல்லது. நன்றி நண்பரே!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com