31.1.20

Astrology: Quiz: புதிர்: மனைவி மக்களைப் பிரிந்து வாடும் அன்பரின் ஜாதகம்!!!!


Astrology: Quiz: புதிர்: மனைவி மக்களைப் பிரிந்து வாடும் அன்பரின் ஜாதகம்!!!!

ஒரு அன்பரின் ஜாதகம். மிருகசீரிஷ நட்சத்திரக்காரர். அவருடைய 42வது வயதில் அவருடைய மனைவி குழந்தைகளுடன் அவரை விட்டுப் பிரிந்து சென்றுவிவிட்டார். அதிலிருந்து இவர் தனியாக அவதிப்படுகின்றார். குடும்பம் மீண்டும் ஒன்று சேரும் நிலைமையில் இல்லை. ஜாதகப்படி இந்தப் பிரிவினைக்கு என்ன காரணம்?

ஜாதகத்தை அலசி அதற்கு மட்டும் பதிலைச் சொல்லுங்கள்!!!

சரியான விடை 2-2-2020 ஞாயிற்றுக்கிழமையன்று வெளியாகும்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
கேள்விக்கு உரிய ஜாதகம்:

====================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6 comments:

  1. சனி தசை சனி புக்தியில் பிரிவு.சனி 8ஆம் அதிபதி சந்திரனின் ஹஸ்த நட்சத்திரத்தில். சந்திரன் 6ஆம் இடத்தில் உச்சம் விரயாதிபதி செவ்வாயின் பார்வையில்.7ஆம் இடம் சனியின் பார்வையில். 7ஆம் அதிபதி நீச்ச பங்கம். சுக்கிரன் உச்ச வர்கோத்தமம். புதன் சுக்கிரன் சனியின் பார்வையில்.

    ReplyDelete
  2. ஐயா கேள்விக்கான பதில்
    1 .லக்கினாதிபதி குருவும் ஐந்தில் அமர்ந்துள்ளனர்
    2 .இவர்களை விரயாதிபதி செவ்வாய் தன நேரடி பார்வையில் வைத்துள்ளார் மேலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டையும்
    பார்வையில் வைத்துள்ளார்,இரண்டாம் வீட்டதிபதி சனியும் கேதுவுக்கும் செவ்வாய்க்கும் இடையில் அமர்ந்து கேட்டுவுள்ளார்
    3 .ஜாதகரின் நாற்பத்து இரணடாவது வயதில் சனி திசை சனி புத்தியில் பிரிவு ஏற்பட்டு உள்ளது
    தங்களின் பதிலை ஆவலுடன்

    ReplyDelete
  3. களத்திரகாரகன் சுக்கிரன், களத்திரஸ்தானதிபதி புதன் இருவரும் சனி பகவானின் நேர் பார்வையில் இருக்கிறாரகள். சுக்கிரன் ஆறாமிட அதபதி. லக்கினாதிபதிக்கு எதிரி. குரு அஸ்தமனம் மேலும் விரயாதிபதி செவ்வாய் பார்வையில். சனி திசை சுக்கிர புக்தியில் பிரிவு ஆகும் என அனுமானிக்கிறேன்.

    ReplyDelete
  4. ஜாதகர் 27 ஏப்ரில் 1952 இரவு 10 58 மணிக்குப் பிறந்தவ்ர். பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

    லக்கினத்திற்கு 7ம் இடத்திற்கு அதிபதி புதன் 4ல் அமர்ந்து நேசம் அடைந்தார். அந்த 4ம் இட அதிபதி 5ல் அமர்ந்து சூரியனால் எரிக்கப்பட்டு அஸ்தஙதம் அடைந்தார்.லக்கினத்திலேயே மாந்தி.
    6ம் இடத்துக்காரன் சுக்கிரன் 7ம் இட அதிபதி புதனுடம் இணக்கம் எனவே மனைவியுடன் பகை.7ம் இடத்திற்கு சனியின் பார்வை.
    பாவாதிபலன் அட்டவணைப்படி 7ம் இடம் 9வது ரேங்க் பெறுகிறது. அஷ்ட வர்கத்தில் 7ம் இடத்திற்கு 21 பரல் மட்டுமே.
    42 வது வயதில் சனிதசா சனி புக்தி.

    நவாம் சத்தில் 7ம் இடத்தில் எட்டாம் அதிபதி.செவ்வாயால் சுக்கிரன் கெட்டது. 7ம் அதிபன் குருவிற்கு சனியின் சம்பந்தம்.மேலும் கேதுவின் சம்பந்தம்.சனி நவம்ச 6ம் நாயகன் ஆதலால் 7ம் அதிபன் குருவுடன் பகையாக இருப்பது.

    இவையெல்லாம் மனைவி பிரிவுக்குக்காரணம்.

    ReplyDelete
  5. வணக்கம்

    தாங்கள் கேட்ட கேள்விக்கான பதில் :

    மனைவி மக்களை பிரிந்து வாழ ஜாதகப்படி உள்ள காரணங்கள்

    1. தனுசு லக்கினம் , ரிஷப ராசி மிருகசீரிட நக்ஷத்திர ஜாதகரின் பிரிவிற்கு லக்கினம், இரண்டாம் இடம், ஏழாம் இடம், ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாம் இடத்தை பார்க்க வேண்டும்.

    இவரின் லக்கினத்திலேயே மாந்தி உள்ளது, இது நீண்ட இன்பத்தை தர இயலவில்லை, மேலும் லக்கின அதிபதி குருவும் உச்ச சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் ஆகி குடும்ப பிரிவை அதிகமாக்கினார் , ஏனென்றால் செவ்வாயின் நேரடி பார்வை இதை செய்தது.

    இரண்டாம் இடத்து அதிபதி பத்தாம் இடத்தில் இருந்தாலும் ஆறாம் அதிபதி சுக்கிரனின் உச்ச பார்வையால் பாதிக்க பட்டது. மேலும் ஏழாம் அதிபதி புதனும் நீச பங்கம் பெற்று சுக்கிரனோடுடன் அமர்ந்து திருமண வாழ்வை இனிக்க செய்யவில்லை.

    ஒன்பதாம் இடத்தில் அமர்ந்த கேதுவும் சுப பலன்களை தர இயலவில்லை. ஆதலால் இவரின் இரண்டாம் இடத்து அதிபதி சனியின் தசையில் சனி புக்தியில் குடும்ப பிரிவு ஏற்பட்டது.

    நன்றி

    இப்படிக்கு
    ப. சந்திரசேகர ஆசாத்
    கைபேசி: 8879885399

    ReplyDelete
  6. வணக்கம்.
    தனசு லக்கினம், ரிஷப ராசி ஜாதகர்.
    ஜாதகப்படி அவரின் 42 வயதில் மனைவி, குழந்தைகளின் பிரிவினைக்கு என்ன காரணம்?
    1) லக்கினாதிபதி குரு 5மிடத்தில் வலுவுடன் அமர்ந்துள்ளார்.
    2) குடும்பாதிபதி சனி 10மிடத்தில் வக்கிர கதியுடன், ராகு மற்றும் செவ்வாய் இருபுறமும் சூழ்ந்து பாபகர்த்தாரி தோசத்துடன் உள்ளார்.
    3) களத்திராதிபதி புதன் நாலாமிடத்தில் நீசமடைந்து அமர்ந்தாலும், நீசபங்கமடைந்துள்ளார். கத்திரியின் பிடியிலுள்ள அவரின் மேல் வக்கிர சனியின் நேர் பார்வையும், 10ம்பார்வை 7மிடமான களத்திர பாவத்திலும் விழுகிறது.
    4) ஜாதகரின் 42ம் வயதில் சனி தசை, சனி புத்தி நடப்பில் இருந்த போது அவரின் குடும்பத்தில் நடந்த குழப்பம் காரணமாக அவரின் மனைவி மற்றும் குழந்தைகளின் பிரிவு ஏற்பட்டது.
    5) சனி தசை முடிந்து, புதன் தசை நடப்பு உள்ளதால், பிரிந்தவர் சேருவதற்கான வாய்ப்பு தற்சமயத்திற்கு இல்லை.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com