20.1.20

மலரும் நினைவுகள்: எங்க வீட்டு ரேடியோ !


மலரும் நினைவுகள்: எங்க வீட்டு ரேடியோ ...! 

எங்கள் வீட்டில் ஒரு பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. அப்போதெல்லாம் ஊரெங்கும் ரெண்டே ரேடியோ பிராண்ட்தான். ஒன்று, குழந்தை
வாயில் கைவைத்தபடியிருக்கும் விளம்பரத்திற்கு சொந்தமான
மர்ஃபி, மற்றொன்று பிலிப்ஸ். நம் வீட்டு குழந்தைக்கு
சட்டை தைப்பது போல, ரேடியோவுக்கு அழகாக உறை தைத்து போட்டிருப்போம்.

அதையும் மீறி பாச்சை, பல்லி ஏதாவது உள்ளே போய், ரேடியோவை
மக்கர் பண்ண வைத்துவிடும். அதை எடுத்துக்கொண்டு ரிப்பேர் பண்ண அப்பாவுடன் செல்வேன்.

ரிப்பேருக்கு கொடுத்துவிட்டு, என்னை அங்கேயே உட்கார்ந்து கையோடு வேலையை முடித்து வாங்கி வர சொல்லிவிடுவார் அப்பா. பிறகு வந்து வாங்கிக்கலாம் என்றால்,

“இல்லைடா, நம்ம ரேடியோவோட ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ கழட்டிடுவாங்க, பக்கத்துல இருந்து பார்த்துக்க”, என்பார். நானும்
மெக்கானிக் அண்ணனையே முறைத்துக் கொண்டிருப்பேன்.

லேந்தர், பெட்ரமாக்ஸ், டார்ச் லைட் என எல்லாமே அவரிடம்
ரிப்பேருக்கு வரும்.

மாலைவரை காத்திருந்து, அவர் சரி செய்து கொடுத்ததும் வீட்டுக்கு எடுத்துக்கொண்டு  வருவேன்.

எங்க ரேடியோவுக்கு மூன்று பேட்டரி போடவேண்டும். ஐந்து பேட்டரி
ரேடியோ வைத்திருப்பது பெருமையாக பார்க்கப்பட்ட காலம் அது.
பேட்டரி தீர்ந்து போகப்போகிறது என்றாலே, ரேடியோ இழுக்க ஆரம்பித்துவிடும். தினமும் பேட்டரியை கழற்றி வெயிலில் காய
வைத்து சார்ஜ் ஏற்றுவோம்.

கடைசியாக வெயிலில் அல்ல, சூரியனுக்கு எடுத்துப்போய் காயவைத்தாலும் சார்ஜ் ஏறாது என உறுதியான பிறகுதான் புது பேட்டரி வாங்கவே கிளம்புவார் அப்பா.

பேட்டரி தீர்ந்துபோய் ரேடியோ கேட்காமல் இருக்கும்போதெல்லாம்,
கை உடைந்தது  போலிருக்கும்.

இதோடு மழை வந்துவிட்டால், இடி விழுந்துவிடுமென பயமுறுத்தி
ரேடியோ போடவே விடமாட்டார்கள். ஒவ்வொரு ஆயுதபூஜைக்கும்
சந்தனம், குங்குமம் வைத்ததன் சுவடில்லாத ரேடியோவை ஊர்ப்பக்கம் பார்ப்பதே கடினம். ஒரு ரேடியோ இருந்தால் அந்த வீட்டுக்கு கடிகாரமே தேவைப்படாது. ரேடியோவில் ஓடும் நிகழ்ச்சிகளை வைத்தே
நேரத்தை கணக்கிட்டுவிடுவோம்.

ஆமாம். அதெல்லாம் மலரும் நினைவுகள்!
இது போல ஒவ்வொருவருக்கும் நினைவுகள் இருக்கும்.
உங்களுக்கும் இருக்கும்!!!
-------------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

4 comments:

  1. அந்த நாள் ஞாபகம்......

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா மலரும் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. ////Blogger kmr.krishnan said...
    அந்த நாள் ஞாபகம்......////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!!!!

    ReplyDelete
  4. /////Blogger Shanmugasundaram said...
    வணக்கம் ஐயா மலரும் நினைவுகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.வாழ்க வளமுடன்/////

    நல்லது. உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com