9.1.20

சினிமா: மனதை நெகிழவைக்கும் வரலாறு!!!


சினிமா: மனதை நெகிழவைக்கும் வரலாறு!!!

அடியவன் சின்ன வயதில் சேலத்தில் படித்து வளர்ந்தவன். சேலத்துக்காரர்கள் எல்லாம் அதீத சினிமா ரசிகர்கள். நான் படித்த காலத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில்தான் அதிகமான திரையரங்குகள்.

அத்துடன் சேலத்தில் அப்போது கோலோச்சிக் கொண்டிருந்த மாடர்ன் தியேட்டர்ஸ் என்னும் படப்பிடிப்பு நிறுவனமும் (ஸ்டுடியோ) மிகவும் பிரபலம். சேலத்தை அறிந்தவர்கள் அனைவருக்கும் அது தெரியும்.

சுமார் 47 ஆண்டுகள் இயங்கிவந்த அந்த நிறுவனம் எண்ணற்ற கவிஞர்களையும் எழுத்தாளர்களையும், நடிகர்களையும் உருவாக்கியது என்றால் அது மிகையல்ல!

ஆனால் அந்த நிறுவனம் 1982ம் ஆண்டுடன் மூடு விழாக் கண்டது என்னும் செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன்,

10 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருந்த அந்த நிறுவனத்தின் இடத்தில் இப்போது பல குடியிருப்புக்களும், வணிகக் கடைகளும்தான் உள்ளன.

சென்ற வாரம் சேலம் சென்றிருந்தபோது அதைக் கண்ணால் கண்டேன். அதன் மேன்மையான வரலாற்றை உங்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாக இந்தப் பதிவு!

கீழே உள்ள காணொளியை முழுமையாகப் பார்க்க வேண்டுகிறேன்:



அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2 comments:

  1. நானும் சேலத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் மாடர்ன் தியேட்டரின் முடிவு வருத்தமளிக்கிறது

    ReplyDelete
  2. Blogger kmr.krishnan said...
    நானும் சேலத்தில் பிறந்து வளர்ந்தவன் என்ற வகையில் மாடர்ன் தியேட்டரின் முடிவு வருத்தமளிக்கிறது/////

    உண்மைதான். சேலத்துக்காரர்களுக்கு, அதுவும் அந்த கால கட்டத்தில் வாழ்ந்தவர்களுக்குத்தான் அதன் அருமை பெருமை எல்லாம் தெரியும். நன்றி கிருஷ்ணன் சார்!!!!!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com