ஜோதிடம்பற்றி வந்த தீர்ப்பு!
ஜோதிடத்தைப் பற்றி நான்
என்ன நினைககிறேன் என்பதைவிட
என் வகுப்புக் கண்மணிகளும்,
பதிவுலக நண்பர்களும் என்ன
நினைக்கிறார்கள் என்பதைத்
தெரிந்து கொள்ள ஒரு சர்வே
படிவத்தைக் கொடுத்திருந்தேன்.
Hit Counter 200 ஐத் தாண்டியுள்ளது
முடிவு தெரிந்துவிட்டது.
42% பேர்கள் ஜோதிடம் பொய் - நம்பிக்கை
யில்லை என்று வாக்களிதிருக்கிறார்கள்.
31% பேர்கள் ஜோதிடம் உண்மை - நம்பிக்கை
யுள்ளது என்று வாக்களிதிருக்கிறார்கள்.
27% கருத்து எதுவுமில்லை - நடு நிலைமை
என்று சொல்லியிருக்கிறார்கள்.
வாக்களித்தவர்கள் அனைவருக்கும் நன்றி!
எனது கருத்தை நான் கூறிவிடுகிறேன்.
முதலில் நானும் (இளைஞனாக இருந்த
காலத்தில்) ஜோதிடத்தைக் கேலியாகப்
பார்த்தவன்தான்.
"திருவரங்க நாதனையும்,
தில்லை நடராஜனையும்
பீரங்கி வைத்துப்
பிளக்கும் நாள் என்னாளோ" என்று பலர்
முழக்கமிட்ட மேடைகளில்
தானும் ஏறி நாத்திகம் பேசிய கவியரசர்
கண்ணதாசன், தன்னை
உணர்ந்து, இறைவனை உணர்ந்து
34 வயதிற்குமேல் தொடர்ந்து
20 ஆண்டுகள் பல அற்புதமான
பக்திப் பாடல்களை எழுதியதோடு
அர்த்தமுள்ள இந்து மதம் என்ற 10 பாகங்கள்
கொண்ட நூலையும், இயேசு காவியம்
என்ற அற்புதமான புத்த்கத்தையும்
எழுதினாரோ-
அந்த மன மாற்றத்திற்கு
என்ன காரணமோ அதே காராணம்தான்
என் பார்வையையும்,
கண்ணோட்டத்தையும் மாற்றியது.
ஆம், பட்டறிவுதான் அதற்குக் காரணம்.
என் தந்தைக்குப் பழக்கமான ஒரு ஜோதிடரும்,
கேரள ஜோதிடர் ஒருவரும் சில ஜாதகங்களைப்
பார்த்துவிட்டுக் கொடுத்த பலன்கள்
(predictions) 100% மிகவும் சரியாக இருந்ததால்
அவை என் மன நிலையை, என்னுடைய
நிலைப் பாட்டைப் புரட்டிப்போட்டன.
இதில் - அதாவது ஜோதிடத்தில் - ஏதோ
இருக்கிறது (Something is there) என்ற எண்ணம்
முதலில் ஏற்பட்டது. அதை ஏன் நாமும் கற்றுத்
தெரிந்து கொள்ளக்கூடாது என்ற எண்ணம்
பிறகு ஏற்பட்டது.
இப்போதாவது சில பல்கலைக் கழகங்களில்
ஜோதிடப் பாடத்தில் பட்டப் படிப்பெல்லாம் உள்ளது.
நான் தேடலில் ஈடுபட்ட காலத்தில்
அந்த வசதியெல்லாம் இல்லை.
-------------------------------------------------------------------------------------
அந்த வசதி இப்போது உள்ள இடங்கள்
List of Institutions in India where Astrology
is Being Taught
ஜோதிடத்தைப் பாடமாகக் கற்றுத் தரும்
இந்தியப் பல்கலைக் கழகங்களின் விவரம்
ஜோதிடப் பாடம் தமிழில் கற்றுத்தரப்படுகிறது,
பிறகு ஓரளவு 'அறிவியல்' ஜோதிடத்தில்
தெளிவு பெற்றேன்.
பிறகு ஜோதிடம் தெரிந்த அல்லது ஜோதிடத்தில்
ஞானம் உள்ள நண்பர்கள் பரீட்சயமானார்கள்.
மணிக் கணக்கில் கலந்துரையாடினேன்.
ஜோதிடம் சம்பந்தமாக கிடைக்த புத்தகங்களை
யெல்லாம் வாங்கிக் குவித்தேன். செய்தித்
தாள்களிலும், சஞ்சிகைகளிலும்
வந்த தகவல்களையெல்லாம் கத்தரித்துச்
சேகரிக்க ஆரம்பித்தேன்.
எதற்காக?
ஜோதிடனாகி பணம் சம்பாதிக்க வேண்டு
மென்ற ஆர்வத்திலா?
(அல்ல! பணம் எனக்கு ஒரு பொருட்டல்ல!)
கசடற கற்க வேண்டும் என்ற ஆதங்கத்தில்.
எனக்கு இறையருளால் வேறு நல்ல தொழில் உள்ளது!
நான் படித்த புத்தகம் ஒன்றில் குறிப்பிட்டிருந்த
முக்கியமான செய்தி இதுதான்.
கல்வி, மருத்துவம், ஜோதிடம் - இம் மூன்றும்
பண்டைய காலத்தில் தர்மத் தொழில்கள்.
இந்தத் தொழிலைச் செய்பவன் மக்களிடம்
காசு வாங்கக்கூடாது. அரசு மான்யத்தில்
வாழ்க்கையை நடத்த வேண்டும். இப்போது
அப்படியில்லை என்பதுதான் வருந்த வேண்டிய
விஷ்யம்.
கிளி ஜோதிடம், குறி பார்த்துச் சொல்லுதல்,
அறை குறைப் பண்டிதர்களின் காசாசை -
இது போன்றவற்றால்தான் - ஜோதிடம்
சிலரிடம் பொய்யாகப் போய்விட்டது.
சரவளி, காலப் பிரகாசிகா, கேரள மணிகண்ட
ஜோதிடம், புலிப்பாணி ஜோதிடம் போன்ற
நூல்களிலெல்லாம் சேர்த்தால் இரண்டு லெட்சம்
பாடல்களுக்குமேல் உள்ளது. அதையெல்லாம்
படித்து முடிப்பதற்குள் (நம்க்கு) தாவு தீர்ந்து
விடும். ஆயுள் முடிந்துவிடும்
அந்தக் காலத்தில் ஒரு dedication உடன் கற்றார்கள்.
வான சாஸ்திரம், ஜோதிடம், கணிதம் ஆகிய
மூன்றையும் இந்த உலகிற்குப்பரிசாக
அளித்தவர்கள் நாம்தான்.
இங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வ்ணிகம்
செய்ய வந்த சீனர்கள், மற்றும் கிரேக்கர்கள்
மூலமாகத்தான் அவை உலகெங்கும் பரவின
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன்,
சனி ஆகிய கோள்களில் ஒவ்வொரு கிரகத்திற்கும்
ஆதிக்கம் அதிகமாக இருக்கும் நாட்களைத்தான்
நாம் கிழமைகளாக வடிவமைத்தோம்
சூரியனுக்கு - ஞாயிறு (ஞாயிறு என்றாலும்
சூரியன் என்றுதான் பொருள்படும்) என்றும்,
சந்திரனுக்குத் திங்கள் என்றும் அப்படியே
ஏழு நாட்களையும் பெயரிட்டு அழைத்தார்கள்.
மீதம் உள்ள இரண்டு கோள்களுக்கு (ராகு, கேது)
தினமும் 90 நிமிடங்கள் ஒவ்வொரு நாளிலும்
ஆட்சி பலம் உண்டு. அதை ராகு காலம்
என்றும், எம கண்டம் என்றும் கணித்தார்கள்.
கணீத்தவ்ர்கள் எல்லாம் பராசுரர், ஜெய்மானி,
அகத்தியர் போன்ற முனிவர்கள்
அவைதான் இன்று உலக அளவில் அத்தனை
நாடுகளாலும் பின்ப்ற்ற்ப் படுகின்றது.
Sunday is for SUN, Monday is for Moon,Tuesday is for
Mars, Wednesday is for Mercury, Thursday is for Jupiter,
Friday is for Venus and Saturday is for Saturn.
Orbit ல் - அதாவது வானவெளியில் ஒவ்வொரு
கோளும் சுற்றிவரும் நாட்களைக் கணித்து
எழுதியவர்களும் நாம்தான்.
இன்று Kolkatta & Chennai யில் உள்ள planatorium ங்கள்
கொடுக்கும் புள்ளி விவரஙகளோடு ந்மது நூற்களில்
உள்ள் தகவல்களோடு ஒப்பிட்டால் மிகவும் சரியாக
உள்ளது.
இது பராசுரர், ஜெய்மானி போன்ற முனிவர் களுக்கெல்லாம் (அவர்கள் எல்லாம் உஜ்ஜயினியில்
விக்கிரமாத்திதான் ஆட்சி செய்த காலத்திற்கு முன்பு
வாழ்ந்தவர்கள்) எப்படி சாத்தியமாயிற்று?
அவர்கள் காலத்தில் Computer, telescope, satelites,
planatorium போன்றவைகள் ஒன்றுகூட இல்லையே?
பெளர்ணமியன்றும், அமாவாசையன்றும், பெரிய
ஆறுகளில் நீரோட்டம் அதி வேகமாகவும், கடல்களில்
அலைகள் கடுமையானதாகவும் இருக்கும்.
மன நோயாளிகளுக்கு அன்று மன உளைச்சல்
அதிகமாகவும் இருக்கும்.
ஏன்?
சந்திரனில் இருந்து வரும் கதிர்வீச்சு அன்று
அதிகமாக இருக்கும்.
(Magnetic Rays from the moon will be more
on that day and it will affect all the
waterly bodies in the earth)
அன்று மட்டும் ஏன் அதிகம்?
விஞ்ஞானம் இன்றுவரை பதில் சொல்லாமல்
மெளனமாக இருக்கிறது!
அந்த தினங்களில் மனித உடம்பில் இரத்த ஓட்டம்
அதிகமாக இருக்குமாம் ஆக்வே அறுவை
சிகிச்சைகளைத் தள்ளிப் போடப் பரிந்துரைக்கப்
பெற்றுள்ளது. (Please see the scanned news paper
cutting on the top of the post)
மருத்துவர்களில் பலருக்கு ஜோதிடத்தில் மிகுந்த
நம்பிக்கையுண்டு. எனக்கு பல மருத்து நண்பர்கள்
உண்டு. அதனால் தெரியும்
கவியரசர் கண்ணதாசன் சொல்வார்.
கடவுள் இரண்டு இடங்களில் சிரிப்பாரம்.
இந்த சாதனையை நான் செய்தேன் என்று
ஒருவன் சொல்லும்போதும்,
உன்னை நான் காப்பாற்றுகிறேன் என்று
தன்னிடம் சிகிச்சைக்கு வந்தவனிடம் மருத்துவர்
சொல்லும் கடவுள் சிரிப்பாராம்.
ஜோதிடமும், வான சாஸ்திரமும் கடல் போன்றது.
அதில் மூழ்கிக்கிடைத்த பல முத்துக்களில் இன்று
ஒன்றைத் தந்துள்ளேன்.
நாளைக்கும் ஒன்றைத் தருகிறேன்.
மற்ற முத்துக்கள் எல்லாம் என்னிடமே
இருந்துவிட்டுப் போகட்டும் என்ற எண்ணம்
சர்வே முடிவுகளைப் படித்தவுடன் ஏற்பட்டுள்ளது.
கஷ்டப்பட்டு எழுதி, தட்டச்சு செய்து, பதிட்டுவிட்டு,
உங்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள
நான் தயாரில்லை........!
ஜோதிடத்தில் உள்ள சுவையான தகவல்ளை
வைத்து ஒரு ஐம்பது பதிவுகளாவது போட
வேண்டுமென்றிருந்தேன்.
சர்வேயின் முடிவு என் எண்ணத்தை மாற்றியுள்ளது.
ஆகவே தொடர்ந்து ஜோதிடத்தைப் பற்றி எழுதும்
ஆசை இல்லை.
என் நிலைப்பாட்டை சுட்டிக் காட்ட இந்தப் பதிவில்
சொல்லவந்த விஷயங்களை மட்டும் நாளையும்
தொடர்ந்து சொல்வதாக உள்ளேன்.
பதிவின் நீளம் கருதி இன்று இத்துடன் முடித்துக்
கொள்கிறேன்.
நன்றி, வணக்கத்துடன்
SP.VR.சுப்பையா.
(மற்றவை நாளை)
----------------------------------------------